நேச தொற்று- 9a

நேச தொற்று- 9a

“ஆதி “

“சொல்லு ஆரு”

“இல்லை ஒன்னும் இல்லை ஆதி. நீ உன் வேலையைப் பாரு.”

“அட என்ன ஆச்சு ஆரு? நீ பாட்டுக்கு கூப்பிட்டே. அப்புறம் ஒன்னும் இல்லைனு சொல்லிட்டு திரும்பிக்கிட்டே. என்ன தான் ஆச்சு உனக்கு?”

“என்ன தான் ஆச்சு எனக்குனா என்ன அர்த்தம்? எனக்கு பைத்தியம் பிடிச்சுடுச்சானு கேட்க வரீயா. என்னைப் பார்த்தா பைத்தியம் மாதிரி தெரியுதா?”

“பார்த்தா தெரியல.. ஆனால் பேசுனா தெரிஞ்சுடுது ஆரு நீ பைத்தியம்னு. ஏன் இப்படி காரணமே இல்லாம கோபப்படுற.”

“நான் அப்படி தான் கோபப்படுவேன். உனக்கு நான் கோபப்படுறது பிடிக்கலையா ஆதி. ஆனால் நான் சந்தோஷமா பேசுனா மட்டும் என்னை பிடிக்குது இல்லை. என் சந்தோஷமும் கோபமும் கலந்தது தானே நான். நிறையும் குறையும் சேர்ந்தது தானே முழுமையான நான். அப்போ என் முழுமையை உனக்கு பிடிக்கல… என் நிறையை மட்டும் தான் உனக்கு பிடிச்சு இருக்கு அப்படி தானே”

“ஆரு நான் என்ன ஆச்சுனு ஒரு வார்த்தை கேட்டதுக்கா இப்படி சம்பந்தமே இல்லாம இவ்வளவு பேசுற. “

“சம்பந்தம் இல்லைனா என்ன சம்பந்தப்படுத்திக்கோ ஆதி “

“அப்போ தட்டு,பழம், சொந்தம் பந்தம் எல்லாம் கூட்டிட்டு வந்து சம்பந்தம் பண்ணிக்கவா?”

“என்ன காமெடியா?”

“இல்லை காமெடினு சொல்ல மாட்டேன். அப்படி சொன்னா ரீடர்ஸ் எல்லாம் கல்லைத் தூக்கிட்டு அடிக்க வருவாங்க, இதெல்லாம் ஒரு காமெடியானு கேட்டு”

“தெரிஞ்சா சரி தான். “

“சரி நீ சொல்லு ஆரு. ஏன் காலையிலே இருந்து இப்படி கடுகடுனு இருக்கே. என்ன தான் ஆச்சு உனக்கு?”

“என்னது கடுகடுனு இருக்கேனா? அப்போ மிளகு மிளகா நான் இல்லையோ?”

“ஆரு சத்தியமா நீ கோபமா பேசுறீயா இல்லை. இல்லை காமெடியா பேசுறீயானு எனக்கு விளங்கல.  ஏன் ஆரு இன்னைக்கு என்னைய இப்படி confuse பண்ற. “

“அப்போ உனக்கும் நான் confusion ஆ தான் தெரியுறேன்ல சரி விடு” என கோபமாக எழுந்து சென்றாள் அவள்.

“என்னடா இது… அவளா கூப்பிட்டா. அவளா சண்டைப் போட்டா. இப்போ அவளா கோச்சுக்கிட்டும் போறா. என்ன ஆச்சு இவளுக்கு?” என  நினைத்தபடியே செல்லும் அவளை திரும்பி பார்க்க அவனுக்கு எல்லாம் பட்டென்று விளங்கியது.

“ஓய் ஆரு ஒரு நிமிஷம்” என சொல்லியபடியே ஓடிப் போய் அவளின் முன்பு நின்றான்.

“ரொம்ப வலிக்குதுடா. ” என அவள் கன்னங்களை தன் கைகளில் ஏந்தி கேட்டான்.

அவனுடைய கண்கள் இவள் வலியை பிரதிபலித்தது.

அவனையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தாள் அவள்.

“ஆரு ரொம்ப வயிறு வலிக்குதா? அதிகமா ப்ளீட் ஆகி இருக்கு ட்ரெஸ்ல. நீ போய் ரும்ல ரெஸ்ட் எடு. நான் இன்னைக்கு எல்லா வேலையும் பார்த்துக்கிறேன்” என அவன் சொல்ல தன் ஆடையில் கறைப்பட்டு இருப்பதை அறிந்து அவள் தன்னையோ தன் உடலையோ குறுக்கிக் கொள்ளவோ நெளியவோ முற்படவில்லை.

இது இயற்கையாக நிகழும் நிகழ்வு இதற்கு தான் ஏன் குற்றவுணர்வினாலோ இல்லை வெட்கியோ நிற்க வேண்டும் என்று ஒரு நிமிர்வுடனேயே நின்று கொண்டு இருந்தாள்.

ஆனால் அவள் மனது மட்டும் ஆதியின் பின்னாலேயே சென்றுக் கொண்டு இருந்தது. அவனுடைய வார்த்தைகள் அவளை வருடியது. எவ்வளவு ஆறுதலாய் பேசுகிறான்!

நெகிழ்ந்தபடியே அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளை கலைத்துப் போட்டது ஆதியின் குரல்.

“அந்த லேப்டாப். போன் எல்லாத்தையும் ஸ்விட்ச் ஆப் பண்ணிட்டு கொஞ்ச நேரம் நிம்மதியா போய் படு. ” என்று சொல்லி  அவளை அறைக்குள் அழைத்து சென்றவன் கதவை சாத்திவிட்டு தூங்க சொல்லிவிட்டு வந்தான்.

காலையில் இருந்து ஏன் அவள் இப்படி கத்தி கொண்டு இருந்தாள் என்று இப்போது அவனுக்கு தெளிவாய் புரிந்தது.

periods mood swing இனாலும் வலியைத் தாங்க முடியாததினாலும் தான் கத்திக் கொண்டு இருந்து இருக்கிறாள் போல.

நல்லவேளை இது தெரியாமல் நான் பதிலுக்கு அவள் மீது கோபப்பட்டு கத்திவிடல்லை.

ம்ம்ம் பரவாயில்லையே எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எந்தவித attitude ம் காட்டாமல் சிரித்தபடியே கடந்தால் பிரச்சனை வராமல் இலகுவாக தடுக்க முடிகிறதே என்று எண்ணியபடி எல்லா வேலையையும் முடித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.

“ஆதி அங்கிள்”என்ற குரலோடு நிவியும் அபியும் உள்ளே வந்து அவன் பக்கத்தில் அமர்ந்தனர்.

சிரித்தபடி அவர்களை பார்த்தான்.

“அங்கிள் எங்க கையிலே ஒரு ஐட்டம் மாட்டி இருக்கே” என்றாள் நிவி கண்ணை சிமிட்டியபடி.

“என்ன ஐட்டம் நிவிமா?”

“ரொம்ப போர் அடிச்சதுனு அலமாரி எல்லாம் நோண்டிக்கிட்டு இருக்கும் போது இந்த ஐட்டம் கிடைச்சது ” என்று சொல்லி அவள் கைகளில் ஒளித்து வைத்து இருந்த auto bomb ஐ காண்பித்தாள்.

“பாரா! சூப்பரு நிவிமா. இதை வெடிக்க வெச்சு அப்பார்ட்மென்டையே அதிர வைப்போம் வா.” என்றான் ஆதி குதூகலத்துடன்.

“அது ஆதி அங்கிள். இந்த auto bomb வெடிக்கிறதுல தான் ஒரு சின்ன பிரச்சனை”

“என்ன ப்ரச்சனை நிவி?”

“அது நான் auto bomb சந்தோஷமா நான் எடுத்து திரும்பவும் அபி கையிலே வெச்சு இருந்த தண்ணி glass ஓட திரும்பிட்டான். அபி ஊத்துன தண்ணியில இந்த auto bomb நனைஞ்சு போயிடுச்சு. இதை வெடிக்கவே வைக்க முடியாத அங்கிள்?” என்று சோகமாக கேட்ட ஏக்க குரலில் கேட்டாள் நிவி.

“அட அதெல்லாம் நல்லா வெடிக்க வைக்கலாம் நிவி. நீ வருத்தப்படாதே. ” என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே தர்ஷி கதவை திறந்து உள்ளே வர முற்பட்டாள்.

அவள் பின்னாலேயே வந்து  ஆதவ்வும் நின்றான்.

இருவரும் கதவின் அருகே ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றுக் கொண்டு இருந்தனர்.

“நீ ஏன் டி ,கரெக்டா நான் ஆரு வீட்டுக்கு வரும் போதுலாம் என் பின்னாடியே வரே? ஆரு கிட்டே நான் பேசக்கூடாதுனு ப்ளான் பண்ணி தடுக்க வரீயா?”

“வேணாம் மெட்டல் மண்டையா. வர கோபத்துக்கு ஏதாவது எடுத்து அடிச்சுட போறேன். நான் ஒன்னும் நீ வர நேரத்துக்கு எல்லாம் வரல. நீ தான்டா நான் வர நேரத்துக்கு வர. நான் எதையும் தடுக்க வரலபா.  நீ ஆரு கிட்டே அடி வாங்கிறதை பார்த்து ரசிக்க தான்டா வந்து இருக்கேன்”

“வெயிட் அன்ட் வாட்ச் தர்ஷி. இந்த ஆதவ் யாருனு நான் உனக்கு காட்டுறேன்.”

“நீ தனியாலாம் காட்டணும்னு அவசியமே இல்லை. எனக்கு முன்னாடியே தெரியும். நீ ஒரு எருமை, பன்னி, உராங்உடான் ஒட்டகச்சிவங்கி அப்புறம் என அவள் மேலே சொல்ல வர,

“போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது. இதோட நிறுத்திக்கிட்டு வா உள்ளே போலாம். ” என சொல்லி அவள் கையைப் பிடிக்க வர தன் தாடையை தோள் வரை கொண்டு சென்று இடித்தாள்.

“எனக்கே நடக்க தெரியும். நான் ஒன்னும் குழந்தை இல்லை. கைப்பிடிச்சு கூட்டிப் போக. நானே நடந்து வருவேன். “

“ஆமாம் நல்லா நடக்கவும் தெரியும் தடுமாறி விழவும் தெரியும்.”

“நான் தானேடா விழறேன்.. உனக்கு என்ன கவலை?”

“நீ விழும் போதுலாம் தாங்கி பிடிக்க வேண்டியதா இருக்கே. அதான் கவலைப்பட்டுட்டு இருக்கேன்.”

“ஒரு கவலையும் வேணாம். என் எலும்பு உடைஞ்சா கூட பரவாயில்லை, நான் விழுந்தாலும் நீ என்னைத் தூக்க வர வேண்டாம் சரியா.  “

“ஹா ஹா எத்தனை தடவை இனி எலும்பு உடையப் போகுதுனு count பண்ண ஆரம்பிச்சுடலாம். ” என்று சொல்லிவிட்டு அவன் கதவைத் திறந்து உள்ளே வந்தான்.

அங்கே மூவரும் கூட்டாக அமர்ந்து கொண்டு ஏதோ மும்முரமாக செய்து கொண்டு இருக்க அவர்களுடன் இவர்களும் இணைந்து கொண்டனர்.

“என்ன நடக்கிறது இங்கே.”

“ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கிறதுக்கு ப்ளான் போட்டுட்டு இருக்கோம் ஆதவ்”

“ஏது இந்த auto bomb உனக்கு அணுகுண்டா?”

“ரெண்டும் வெடிக்க தானே செய்யுது.. அப்போ ரெண்டும் ஒன்னு தானே ஆதவ்.. “

“ரைட்டு டா.”

“சரி ஏன் வெடி மருந்தை இப்படி கர்சீப்ல கொட்டி வெச்சு இருக்கீங்க?”

“அது நனைஞ்சிடுச்சு ஆதவ் அங்கிள். “

“அடப்பாவிங்களா நனைஞ்ச வெடிமருந்து எப்படி டா வெடிக்கும்?”

“காய வெச்சா வெடிக்கும் டா மெட்டல் மண்டையா. முதலிலே உன் மண்டையை கொஞ்சம் பின்னாடி தள்ளி வை. உன் முடி எல்லாம் வெடி மருந்துல விழுந்தா சுத்தமா வெடிக்காது போல. “

“சீ போடி”

“நீ போடா” என இவர்கள் இங்கே சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் அவர்கள் வெடி மருந்தை ஒரு துணியில் கட்டி நூல் சுற்றி ஆட்டோபாம் போல மறுபடியும் செய்து முடித்துவிட்டனர்.

ஐ சூப்பர் auto bomb ready ஆகிடுச்சு. நான் போய் வெடிச்சுட்டு வரேன். ” என்று ஆதி வெடிமருந்தோடு வெடிக்க கிளம்பிவிட்டான்.

“அட ஆதி அங்கிள், எங்க கிட்டே கொடுங்க நானும் என் தம்பியும் வெடிக்கிறோம். நாங்க தானே சின்னப்பசங்க.”

“இல்லை நிவி மா நீங்க குட்டிப் பசங்கலே அதனாலே ஆட்டோ பாம்ல லாம் விளையாடக்கூடாது.  அதனாலே அங்கிள் போய் இதை வெடிப்பனாம். நீங்க எல்லோரும் வேடிக்கை பார்ப்பீங்களாம். “

“ஆதி அங்கிள் இதெல்லாம் ரொம்ப தவறான செயல். நாங்க தான் auto bomb கொண்டு வந்தோம். நாங்க தான் வெடிப்போம். “

“நிவி நீ சின்னப்பிள்ளைடா இதெல்லாம் வெடிக்கக்கூடாது. அதனாலே அங்கிள் வெடிப்பனாம். ” என மீண்டும் அதே பல்லவியைப் போட ஆதவ் இடையில் புகுந்தான்.

“நிவி, அபி தானே சின்னப்புள்ளைங்க அவங்க தானே வெடிக்கக்கூடாது. அப்போ என் கிட்டேயும் தர்ஷி கிட்டேயும் கொடு. நாங்க வெடிக்கிறோம்.”

“அட அதெல்லாம் தர மாட்டேன். நான் தானே சரி பண்ணேன். அப்போ நான் தான் வெடிப்பேன். ” என ஆதி சொல்ல நால்வரும் அவன் கையில் இருந்த auto bomb ஐ பிடிங்க முற்பட்டனர்.

“சரி சரி சமாதானம்… ஒரு auto bomb ல அஞ்சு திரி வெச்சுடுவோம்.. ஆளுக்கு போய் ஊதுபர்த்தி எடுத்துட்டு வாங்க.  problem solved ” என ஆதி சொல்ல அவர்களும் இது நல்ல யோசனை என நினைத்து அமைதியாகினர்.

ஆனால் இந்த ஆதிப்பிள்ளையோ அவர்கள் யாரும் எதிர்பார்க்காத நேரம் auto bomb ஐ தூக்கிக் கொண்டு தனியாக வெடிக்க கதவை நோக்கி ஓடினான்.

அவன் ஓடுவதைக் கவனித்த நால்வரும் அவன் பின்னாலேயே ஓடி துரத்திப் பிடித்து auto bomb ஐ பிடுங்க முற்பட்டனர்.

அதே நேரம் ஆரு தன் அறைக் கதவைத் திறந்து வெளியே வந்த பொழுது  அவளை டமார் என்ற வெடி சத்தம் வெகு சிறப்பாக வரவேற்றது.

திகைத்துப் போய் நிமிர்ந்து பார்த்தவள் அடுத்த நொடியே  வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் துவங்கிவிட்டாள்.

அந்த வெடி மருந்து சட்டென்று வெடித்துவிட அந்த துகள்கள்  ஐவரின் முகத்திலும் கரியை அப்பி இருந்தது.

பரிதாபமாக நின்றுக் கொண்டிருந்த அந்த ஐவரையும் பார்த்து பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஆருஷா.

எது எப்படியோ அஞ்சு பேரும் சேர்ந்து ஒரு auto bomb ஐ சிறப்பா வெடித்து முடித்தாயிற்று.

Leave a Reply

error: Content is protected !!