நேச தொற்று- 9b
நேச தொற்று- 9b
லேட்டாப்பில் ஆரு மும்முரமாய் வேலை செய்து கொண்டு இருக்க ஆதியோ உள் அறையில் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தான்.
கதவு கீறிச்சுடும் சப்தத்தைக் கேட்டு திரும்பி பார்த்தாள்.
அங்கே ஆதவ் தயங்கி தயங்கி கதவருகே நின்று கொண்டு இருந்தான்.
“என்ன ஆதவ் ஏன் இப்படி தயங்கி தயங்கி நிக்குறீங்க?”
“அது ஆரு. உங்க கிட்டே கொஞ்சம் தனியா பேசணும். “
“நான் இப்போ தனியா தானே இருக்கேன். நீங்க பேசலாம் ஆதவ். “
“அது அது வந்து… “
“ஏன் இப்படி தயங்குறீங்க. நேரடியா விஷயம் என்னனு சொல்லுங்க ஆதவ். “
“அது நான் சொல்றதைக் கேட்டு நீங்க கோபப்படக்கூடாது ஆரு”
“அது நீங்க சொல்றதைப் பொறுத்து. ” என்று அவள் சொல்ல தன் மனதை ஒரு போருக்கு செல்வதைப் போல தயார்படுத்திக் கொண்டு நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
“ஆரு உனக்கு என்னைப் பிடிக்குமா?”
“எனக்கு எல்லாரையும் பிடிக்கும் ஆதவ். இதுலாம் ஒரு கேள்வினு கேட்டுட்டு தயங்கிட்டு வேற நின்னுட்டு இருக்கீங்க… “
“ஆரு அப்போ என்னையும் உனக்கு பிடிக்கும்ல? “
“உங்களையும் பிடிக்கும் ஆதவ். ” என்று அவள் முறுவலித்துக் கொண்டே சொல்ல அப்பாடி என்று பெருமூச்சுவிட்டவன்,
“தேங்க்ஸ் ஆரு. எனக்கும் உங்களைப் பிடிக்கும். ” என்று சொல்லிவிட்டு சந்தோஷத்துடன் திரும்பியவன் அங்கே கதவில் சாய்ந்தபடி இவர்களைப் பார்துக் கொண்டு நின்றிருந்த தர்ஷியைக் கண்டு திகைத்து நின்றான்.
“என்ன மிஸ்டர் ஆதவ். சொல்ல வந்ததை முழுசா சொல்லாம பாதி முழுங்கிட்டு போறீங்க.ஒழுங்கா எல்லாத்தையும் சொல்லு டா”
“தர்ஷி ஒழுங்கா அமைதியா இருடி “
“நான் ஏன் அமைதியா இருக்கணும். நீ என் கிட்டே என்ன சேலன்ஞ் பண்ண? இப்போ என்னடா பண்ணிட்டு இருக்க?”
“தர்ஷி நான் உன் கிட்டே என்ன சேலன்ஞ் பண்ணேன்? ஆரு கிட்டே பிடிச்சு இருக்குனு சொல்றேனு தானே சேலன்ஞ் பண்ணேன். நான் சொல்லிட்டேன். நான் சேலன்ஞ்ல வின். நீ எதுவும் பேசாம வாடி. ” என்று அவன் சொல்ல அவர்களின் சம்பாஷனைகளை புரியாமல் பார்த்தாள் ஆரு.
“இங்கே என்ன நடக்குதுனு தெரிஞ்சுக்கலாமா?”
“அதுவா ஆரு.. நான் சொல்றேன். ஆதவ் உங்களை காதலிக்கிறாங்களாம்”என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே ஆதவ் அவள் வாயை முழுவதாய் மூட முயற்சித்துக் கொண்டு இருந்தான்.
ஆனால் அவள் தனக்கு கிடைத்த இடைவெளியில் சொல்ல வந்ததை சொல்லி விட்டாள்.
“டேய் கையை வாயிலே இருந்து எடுடா கரப்பான் பூச்சி வாயா. அதான் உண்மையை நான் எப்பவோ கத்தி சொல்லிட்டனே. இப்பவும் ஏன் என் வாயை கையை வைச்சு மூடிட்டு கிடக்குற. ” என தர்ஷி சொல்ல அவளை முறைத்தபடி ஆருவின் பக்கம் திரும்பினான்.
அங்கே ஆருவோ அவளை பல மடங்கு கோபமாய் முறைத்துக் கொண்டு இருந்தாள்.
“ஆரு ப்ளீஸ் கோபப்படாதே”
“அடிங்க எப்படி டா கோபப்படாம இருக்க முடியும்? எவ்வளவு திமிர் இருந்தா என் கிட்டே காதலை சொல்ல வந்து இருப்பே” என்று சொல்லி அருகில் இருந்த தட்டை தூக்கி அவன் மீது எறிந்தாள்.
அந்த தட்டு அவன் நெற்றியை பதம் பார்த்து இருந்தது. நெற்றியில் சிறியதாய் ரத்தம் வரத் தொடங்க தர்ஷி அதைப் பார்த்து பதறி அவன் அருகில் மண்டியிட்டு அமர்ந்தாள்.
அந்த உதிரத்தைப் பார்த்து உள்ளம் துடிக்க தன் துப்பட்டாவை எடுத்து அதைத் துடித்தவள் கோபமாக ஆருவின் பக்கம் திரும்பினாள்.
“ஆரு அவன் என்ன தப்பா கேட்டுட்டான், எதுக்கு இப்படி அவனைப் போட்டு அடிச்ச? yes or no இதுல ரெண்டு பதிலை சொல்ல வேண்டியது தானே. ஏன் இப்படி கோபப்பட்டு தட்டை தூக்கி எறிஞ்சே?”
“பின்னே நான் ஆதியை காதலிக்கும் போது இவன் என்னை காதலிக்கிறியானு கேட்டா எனக்கு கோபம் தானே வரும். “
“என்னது நீ ஆதியை காதலிக்கிறியா? இது எப்போத்துல இருந்து” என்று ஆதவ்வும் தர்ஷியும் ஒரே குரலில் ஒரே மாதிரி கேட்டனர்.
“ஆமாம் அவனை தான் காதலிக்கிறேன். அதான் ஆதவ் அப்படி கேட்ட உடனே கோபத்துல அடிச்சுட்டேன். சாரி ஆதவ் ” என்று சொல்லி உள்ளே சென்று பஞ்சையும் மருந்தையும் கொண்டு வந்தாள்.
தர்ஷி அதை வாங்கி அவன் நெற்றியில் மருந்திட தொடங்கினாள். அவன் வலியில் சிறிதாய் கத்த ஆருவுக்கு சங்கடமானது.
“சாரி ஆதவ். நான் intentional ஆ பண்ணல. டக்குனு கோபத்துல அப்படி தூக்கி அடிச்சுட்டேன்”
“அட its okay ஆரு. ஏன் நீங்க ஆதியை காதலிக்கிறீங்கன்ற உண்மையை நாங்க தெரிஞ்சுக்கலாமா?” என கேட்க
“நான் எவ்வளவு அடிச்சாலும் அவன் தாங்குவான் அதனாலே தான்.” என மென் நகை புரிந்தவள் மேலும் தொடர்ந்தாள்.
“அவன் முதல் முறை பேசும் போது எனக்கு சரியான கோபம் அவன் மேலே. அதனாலே அவன் கிட்டே கோபமா நடந்துக்கிட்டேன். அவனை ரொம்ப டார்ச்சர் பண்ணேன். ஆனால் அவன் எதுக்குமே கோபப்படல. ரொம்ப பொறுமையா நடந்துக்கிட்டான். அவன் அவனோட காதலை என் கிட்டே சொன்னானே தவிர, என்னை அவன் காதலிக்கனும்னு சொல்லி compel பண்ணல. என்னை காதலிக்க வைக்கிறதுக்காக அவன் பெருசா எதுவும் சாகசம்லாம் பண்ணல. அவன் அவனோட இயல்புல இருந்தான். அவன் காதலை உணர்த்த ட்ரை பண்ணல. நானே உணரட்டும்னு வெயிட் பண்ணான். அவன் தொடு உணர்ச்சி மூலமா என் உணர்வுகளை, என் ஹார்மோனை தூண்டிவிட்டு காதலை உணர வைக்க ட்ரை பண்ணல. எங்கே நான் சங்கடப் போறனோனு என்னை விட்டு விலகி நின்னான். அவன் காதல் என் மெய்யை தீண்டல. அதுக்கு மாறா என் உயிரை தீண்டிடுச்சு. என் கண்ணு பார்த்தே என்னை புரிஞ்சுப்பான். he is really cute. அவனை நான் இவ்வளவு காதலிப்பேனு நானே நினைச்சு பார்க்கல. அந்த அளவுக்கு என்னை காதலிக்க வெச்சுட்டான் அவன். சினிமாவுல கதைகளிலே வரா மாதிரி அவன் ஆக்ஷன் ஹீரோவும் இல்லை ரொமான்டிக் ஹீரோவும் இல்லை. attitude பிடிச்ச ஹீரோவும் இல்லை. அவன் என்னோட ஹீரோ. எனக்கான ஹீரோ. இந்த குறுகிய காலத்திலயே attraction கான Dopamin. love கான Testosterone kick, Attachment க்கான Oxytocin னு எல்லா ஹார்மோனையும் நான் உணர்ந்துட்டேன். அவன் மேலான காதல் எப்பவோ எனக்குள்ளே tent போட்டு உட்கார்ந்துடுச்சு. ஆனால் நான் உணர்ந்ததை இன்னும் என் குஞ்சப்பா கிட்டே சொல்லல. இப்படி சொல்லாம லவ் பண்றது ஒரு ஃபீலா இருக்கு. அவனை தவிக்கவிடுறது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு. கொஞ்ச நாள் தவிக்கவிட்டுட்டு அப்புறம் அவன் கிட்டே பொறுமையா சொல்லலாம். ” என்று சொல்லி முடித்த அவளையே விழியகலாது பார்த்துக் கொண்டு இருந்தனர் தர்ஷியும் ஆதவ்வும்.
“ஆரு மா, நீ handsome ஆ இந்த அளவுக்கு லவ் பண்றீயா?ஆதி ரொம்ப கொடுத்து வெச்சவன் “
“இல்லை தர்ஷி நான் தான் அவன் கிடைக்க கொடுத்து வெச்சவள்” என்று இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது கதவைத் திறந்து கொண்டு ஆதி வெளியே வந்து நின்றான்.
“ஐயையோ இவன் எல்லாத்தையும் கேட்டுட்டானா? அப்போ நான் காதலிக்கிறது தெரிஞ்சுடுச்சா? இவ்வளவு நேரம் காதலை வெச்சுக்கிட்டே அவன் கிட்டே கண்ணாம்மூச்சி விளையாடுனதை நினைச்சு கோபப்படுவானோ. ” என்று ஆரு படபடப்புடன் பார்க்க ஆதியோ கூர்மையான பார்வையில் அவளைப் பார்த்தான்.
“என்ன ஏமாத்திட்ட இல்லை ஆரு?”
“நான் நான் என்ன ஏமாத்துனான் ஆதி. ” என்று திக்கி திணறினாள்.
“நீ பேச்சு மாறிட்ட ஆரு”
“நான் என்ன பேச்சு மாறுனேன்”
“5 மணிக்கு உப்பு உண்டை செஞ்சு தரேனு சொன்னியே. நான் தூங்கி எழுந்த உடனே டைம் பார்த்தா மணி ஆறரை. எனக்கு உப்பு உண்டை வாசனையே வரல. நீ செய்யுறனு சொல்லி செய்யாம என்னை ஏமாத்திட்டல ஆரு. நீ பேச்சு மாறிட்ட. ” என சொல்ல மூன்று பேரும் வெடித்து சிரித்தனர்.
“இப்போ எதுக்கு எல்லோரும் என்னை பார்த்து சிரிக்கிறீங்க”
“சும்மா தான்… நான் உப்பு உண்டை லாம் எப்பவோ செஞ்சு வைச்சுட்டேன். நீ எழுந்துக்கிறதுக்குள்ளே ஆறிடப் போகுதுனு தான் இட்லி குண்டாவை நான் திறக்கல. அதான் வாசனை வரல. இரு நான் போய் உப்பு உண்டையை எடுத்துட்டு வரேன் ” என்று சொல்லி சமையலறைக்குள் நுழைய இவனோ சோஃபாவில் அமர்ந்தான்.
ஆதவ்வின் நெற்றியில் இருந்த காயத்தைப் பார்த்து, “என்ன ஆச்சு ஆதவ்? ஏன் நெத்தியிலே காயம் பட்டு இருக்கு ” என்று பதற்றமாக ஆதி கேட்டான்.
“அதுவா, என்ன ஆச்சுனா…” என்று தர்ஷி சொல்ல வர
“ஹே வாய மூடிட்டு பேசாம உட்காரு தர்ஷி” என்று ஆதவ் அவளை அடக்கினான்.
“என்ன ஆச்சு ஆதவ் ஏன் தர்ஷியை சொல்லவிடாம தடுக்கிறீங்க. நீ சொல்லு தர்ஷி எப்படி அடிப்பட்டுச்சு?”
“அது அவனுக்கு அடிவிழுந்தது handsome. அதான் இப்படி நெத்தியிலே காயத்தோட உட்கார்ந்துட்டு இருக்கான்”
“யார் அடிச்சா பியூட்டி… எதுக்காக அடி வாங்குனான்?”
“காதலை சொல்லி அடிவாங்குனான் handsome “
“பார்ரா என்னை மாதிரியே அடி வாங்கி இருக்கான். யாரு கிட்டே அடி வாங்குனான்?”
“அது அது ஆரு… ” என்று சொல்லி ஆதவ்வைப் பார்க்க அவன் வேண்டாம் சொல்லாதே என்பதைப் போல தலையசைத்தான்.
“என்னது ஆரு கிட்டே சொல்லி அடி வாங்குனானா?” என ஆதி யோசனையோடு கேட்க
“அட handsome நான் ஆரு உப்பு உண்டை கொண்டு வரானு சொல்ல வந்தேன்… நீ மாத்தி புரிஞ்சுக்கிட்டே. அவன் ஆரு கிட்டே சொல்லி அடி வாங்கல. என் கிட்டே லவ் சொல்லி தான் அடி வாங்குனான்” என்று சொல்ல ஆதவ் பெருமூச்சுவிட்டான்.
“ஓஹோ இங்கே தனியா இப்படி ஒரு ரூட்டு போகுதா… போகட்டும் போகட்டும். ஆனாலும் ஆதவ் அடியைப் பார்த்தா ஆருவோட கைவண்ணத்தை அப்படியே பார்த்தா மாதிரி இருக்கு. ஆரு அடிக்கிற அதே ஸ்டைல். அதே மாதிரி காயம். தர்ஷி நீ வர வர ஆரு மாதிரியே அடிக்க ஆரம்பிச்சுட்டே… ” என்று ஆதி சொல்ல மூவருக்கும் ஒரே சமயம் புரை ஏறியது.