பூர்வ – ஜென்மம்

விடியற்காலை

 

ரித்திகா அந்த கூரை வேய்ந்த வீட்டினின்றும் வெளியே வந்தாள்.

 

மாஞ்சோலை, முக்கால்வாசி பழமையையும் இந்த தலைமுறையினர் முயன்று உருவாக்கிய புதுமையும் சேர்ந்து விளங்கும் ஒரு கிராமம்.

 

முக்கால் ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் சுற்றிலும் தோட்டம். ரித்திகா தோட்டத்துக்குள் சென்றாள். தோட்டத்தை சுற்றிலும் மரங்கள் மற்றும் ஒரு சாதாரண வேலி. பூக்களின் நறுமணமும், கொஞ்சம் தொலைவில் உள்ள ஏரியிலிருந்து கலங்கள் வழியாக தண்ணீர் ஓடும் ஒலியும், ஏரி கரையில் உள்ள கோயிலில் போடப்பட்ட கண்ணன் பாட்டும் சேர்ந்து ரித்திகாவுக்கு ஒரு புதுவகையான அனுபவத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

 

அந்த சமயம் குட் மார்னிங் என்று சொல்லி கொண்டு Gopi வந்து நின்றான் ரித்திகா ஹாய் குட் morning கோபி சொல்லி வரவேற்றாள்.

 

இங்க என்ன பண்ற ரித்திகா – கோபி

 

ஹ்ம்ம் பூ கிள்ளிக்கிட்ருக்கேன் விளையாட்டாக பதில் சொன்னாள்.

 

பிறகு இருவரும் கொஞ்ச நேரம் தோட்டத்தில் சுற்றி கொண்டும் செடி கொடிகளை ஆராய்ந்து கொண்டும் அதற்கான அறிவியல் பெயர்களை நினைவில் கொண்டு வந்தும் பேசி கொண்டிருந்தார்கள்.

 

ரித்திகா கோபி இருவருமே நல்ல நண்பர்கள். அதுவும் ஒரு நினைவு அலைவரிசையில் பயணிக்கும் நண்பர்கள். சென்னையில் கடலோரத்தில் அமைந்துள்ள கட்டிடத்தின் 12 வது மாடியில் உள்ள ஒரு டிடெக்ட்டிவ் ஏஜென்சியில் பணியாற்றுபவர்கள்.  அதனால் இப்படியொரு சூழ்நிலை, அமைதி, உற்சாகம் இதுவரை அவர்கள் கண்டதில்லை. இதற்கான பாராட்டு நிச்சயம் இவர்களுடைய chief  Mr . ரகுராமனுக்கே.

 

தோட்டத்திற்கு வெளியே ஒரு குரல் ஒலித்தது இவர்களை அழைத்து. இருவரும் வெளியில் வந்து தங்களுக்கு தரப்பட்ட காபி டம்பளர்களை பெற்று கொண்டனர் . காபி அருந்திவிட்டு சிற்றுண்டிக்கு தயாராகுமாறு சொல்லிவிட்டு சென்றாள் அந்த பெண்மணி. கொஞ்ச நேரம் இருவரும் தங்கள் ப்ராஜெக்ட் வேலையை பற்றி பேசிவிட்டு தத்தம் அறைக்கு தயாராக சென்றனர்.

 

இருவரும் இளங்கலை ஜௌர்னலிசம் படித்தவர்கள். பெரிய பத்திரிகையிலும் மீடியாவிலும் இடம் பெற வேண்டும் என்று ஆர்வம் உள்ளவர்கள். ஆனால் மற்ற துறைகளை காட்டிலும் இதில் போட்டியும் தன்னுடைய தனித்தன்மையை இழந்து செயல் படவேண்டிய சுழலும் அதிகம். ஆகையால் இவர்கள் சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக்கொண்டு கோபியின் மாமாவிற்கு நண்பரான Mr . ரகுராமனிடம் வேலைக்கு சேர்ந்தனர்.

 

Mr ரகுராமன் கிட்டத்தட்ட 10 வருடங்களாக தாரா டிடெக்ட்டிவ் ஏஜென்சியை நடத்தி வருகிறார். இவர் சிறைதுறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். நேர்மையானவர். ரித்திகா மற்றும் கோபியை தவிர இன்னும் 3 பேர் இவரிடம் வேலை பார்த்து வருகின்றனர். அவருடையது ஒரு அலுவலகம் என்று சொல்லமுடியாது. அனுபவங்களை பரிமாறி கொள்ளும்  இடம் என்று சொல்லலாம். ஆனால் எந்த கேஸை எடுப்பது, விசாரிப்பது என்பதை முடிவு செய்வது Mr .ரகுராமன் & Mr .ஜோசப் . Mr . ஜோசப் என்பவர் அரசு இலாகாவில் ஒரு பொறுப்புள்ள பதவி மற்றும் அதிகாரத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அது மட்டுமல்லாமல் Mr .ரகுராமின் நெடுநாளைய நண்பர். Mr . ரகுராமன் வாழ்வில் ஏற்பட்ட கசப்பான தருணங்களில் பக்க பலமாக நின்றவர்.

 

Thodarum…1