பூவை வண்டு கொள்ளையடித்தால்
பூவை வண்டு கொள்ளையடித்தால்
கொள்ளை 14
அன்பு, அது கிடைக்காதவர்களோ ஏங்கி நிற்க, கிடைத்தவர்களோ இழந்திடாது பற்றிக் கொள்ள எண்ண, அன்பைப் பெற எண்ணுவோர்க்கு அது என்றும் போராட்டமே!…
தனது சட்டையைப் பற்றி நிற்பவளின் முகத்தில் அத்தனைப் பதற்றம், வருண் மேல் அவள் வைத்திருந்த காதலின் ஆழம் அவள் விழிகளிலும், அவள் கொண்ட பதற்றித்திலும் தெரிந்தது…
” சொல்லு மயூரன். ஏன் வருண் கிடைக்க மாட்டான்? உண்மையைச் சொல்லு மயூரன் ஏன் வருண் கிடைக்க மாட்டான்? வருணை உனக்குத் தெரியுமா? ” என்றவள் அவன் சட்டையைப் பிடித்துக் கொண்டு கேட்க.
அவள் முன் தலைகுனிந்து அமைதியாக நின்றான்… ” அமைதியா இருந்தா, என்ன அர்த்தம் மயூரன். ப்ளீஸ்! உண்மையைச் சொல்லு, வருண் ஏன் கிடைக்க மாட்டான்? உனக்கு அவனைத் தெரியுமா? ” எனவும்.
தனது சட்டையிலிருந்து அவளது கைகளைப் பிரித்தவன், உண்மையைக் கூற ஆரம்பித்தான்..
” வருண் நிர்மல் என் பிரண்டு தான். என் கூட ஜூனியரா எங்க என்.சி சேனல்ல தான் வேலைப் பார்த்தான். நீ இங்க வருவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் அவனைக் கொன்னாங்க.. அவன் ஒரு ரிப்போடர், எங்க டேரக்டர் அவன்கிட்ட சீக்ரெட்டா ஒரு நியூஸ்பத்தி விசாரிக்க, உண்மை என்னன்னு தெரிஞ்சுக்க, அவனிடம் அந்தப் பொறுப்பை கொடுத்திருந்தார்.. அவன் அந்தக் கேஸைப் பத்தி விசாரிக்கிறதை தெரிஞ்சு, அந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டவங்க, அவனைக் கொன்னுட்டாங்க.. ஆனா, போலீஸ் ஆக்ஸிடேட்ன்ட்ன்னு க்ளோஸ் பண்ணிட்டாங்க… அவன் சாகும்போது உன்னைப் பத்தி சொல்லிட்டு தான் செத்தான்… அதான் உன்னை நான் என் கூட கூட்டிட்டு வந்தேன்… அவனோடு சாவுக்கு உண்மையான காரணமும் ஆதாரத்தையும் அவனைக் கொன்னவர்களையும் கண்டு பிடித்துக் கொண்டிருக்கேன்.. நிச்சயம் அவங்களுக்கு நான் தண்டனை வாங்கிக் கொடுப்பேன்.. ” என்றவளைப் பார்க்க, உடலற்ற சிலையாய் நின்றாள்…..
” விஷ்ணு, விஷ்ணு….. ” அவளை உலுப்பவே நினைவிற்கு வந்தாள்.. “நீ பொய் சொல்லுற மயூரன். வருண் சாகல. அவன் உயிரோட தான் இருக்கான். நீ பொய் சொல்லுற. நீ என்னை ஏமாத்திற. வருண் உயிரோட தான் இருக்கான்.. ” என்றவள் சொன்னதையே திரும்பவும் சொல்ல, அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது…
” விஷ்ணு, நான் பொய் சொல்லல, வருண் இப்ப உயிரோட இல்ல.. அவன் இறந்து இரண்டு வாரங்கள் ஆகப் போதுமா… என்னை நம்பு, அவன் இப்போ இல்ல… ” என்றதும் வெடித்து அழுதாள். மனம் இன்னும் அதை ஏற்க மறத்தது…
” என் வருண் உயிரோட தானே இருக்கான். ப்ளீஸ் மயூரன்,அவன் உயிரோட தான் இருக்கான் சொல்லு… ” என மீண்டும் அவன் சட்டையைப் பிடித்துக் கசக்கினாள்.. அவன் வாயில் அந்த வார்த்தைகள் வராதோ என்றவளின் எண்ணம் பொய்த்தது… அவன் இறப்பு உண்மை என்று மூளை பதிய வைக்க, மனம் ஏற்க முயற்சிக்க பெரும் வலியதைக் கொண்டாள்… நெஞ்சம் அடைக்க, இதயம் வலிக்க ஆரம்பித்தது…
” விஷ்ணு, உண்மை இதான்.. வருண் இப்போ உயிரோட இல்லை.. நீ ஏத்துக்கிட்டு தான் ஆகணும்மா! “என்றவன் அவளது கையைப்பற்றிக் கூற அதனைத் தட்டியவள் வேகமாக வெளியேறினாள்,.. அவனும் பின்னே செல்ல, அவள் வீட்டின் மாடிக்குச் சென்றாள்.. அவன் அவளைத் தொடர்ந்தாலும் நொடிப்பொழுதில் அவளது தற்கொலை அரங்கேறியது..
” விஷ்ணு…… ” என அவன் அலற,” மயூரன்…. ” என்ற அவள் அழைப்பில் நடப்பிற்கு வந்தான். ” என்னாச்சு மயூரன், நான் கேட்டுட்டே இருக்கேன்… நீ அமைதியா இருக்க, ஏன் வருண் கிடைக்க மாட்டான்? ” எனவும்,’ தான் இதுவரைக் கண்டது எல்லாம் கற்பனையா? உண்மையல்ல என்றதும் மனதில் ஓர் நிம்மதி பரவினாலும், அடுத்த நொடி அந்நிம்மதி காத்தோடு கறைந்தது. வருண் இறந்தது அவளுக்குத் தெரிய வந்தால். அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள். இது போல் ஏதெனும் நிகழுமா? விஷ்ணு தற்கொலைச் செய்துக்கொள்வாளா? ‘ என எண்ணங்களின் கலவையில் அவனிருந்தான்..
” மயூரன்…. ” மீண்டும் அவள் அழைக்க, ” இல்ல விஷ்ணு, நீ தனியா தேடினா, அவன் கிடைக்கமாட்டான். நாம சேர்ந்து தேடலாம் கண்டிப்பா கிடைப்பான்.. ப்ளீஸ், கொஞ்சம் பொறுமையா இரு விஷ்ணு… இப்போதைக்கு எதையும் யோசிச்சு குழப்பிக்காத! எல்லாம் நல்லதாகவே நடக்கும் நம்பு விஷ்ணு! ” என்றான்….
அவள் அமைதியாக அதை ஏற்றுக் கொண்டவள் வெறும் தலையை மட்டும் அசைத்தாள்… ” வருண், எனக்குக் கிடைப்பான் தானே மயூரன்? ” என சிறுக்குழந்தையாய் அவன் கைப்பற்றிக் கொண்டு கேட்க, அவள் பற்றிய கைமேல் தன் கையை வைத்தவன், ” கிடைப்பான் விஷ்ணு, நீ ரெஸ்ட் எடு! ” என்றவன் அவன் கைகளிலிருந்து தன் கைகளைப் பிரித்தவன், அவளைப் படுக்கையில் படுக்க வைத்து
போர்வையைப் போர்த்தி விட்டு கீழே இறங்கினான்..
அனைவரிடமும் அவளுக்குச் சிறு தலைவலி என்று சொல்லி சமாளித்தான்…
மறுநாள் விடியவே வழமைப் போலவே இருந்தது.
ஏதோ ஒரு வித பாரம் அவளை அழுத்திக்கொண்டே இருந்தது… மயூரனுக்கும் அதே நிலைமை தான்… நேராமாக தனது அலுவலகத்திற்குச் சென்றவன்.. அன்றைய நாளுக்கான வேலை ஒரு முறை சரிப்பார்த்தான்…
அன்றைய நாட்களில் சேகரித்த செய்திகளை எல்லாம் ஒரு முறை சரிப்பார்த்து ஒளிபரப்ப அனுமதி அளித்தவன், தனது அறையில் அமைதியாக அமர்ந்தான்.
அவனது எண்ணம் முழுதும் விஷ்ணுவை சுற்றியே இருந்தது. வருண் நிர்மலின் டைரியை எடுத்தான். அதில் விஷ்ணுவின் புகைப்படத்தைப் பார்க்க, அவனது நினைவுகள் பின்னோக்கி சென்றது..
அன்று அலுவலகத்தில், தனது டைரியில் எதையோ எழுதிக்கொண்டிருந்தான் வருண்.
நீரகம்(பூமி) நானடி
என்
நீருபம்(வானம்) நீயடி….
உன் காதலால்
எனைக் ஆட்கொண்டு
எண்ணில் கலந்து
இன்றேனோ
நீயின்றி
பிரிவைக்
கருவுற்று
வலியதை
பிரசவிக்கிறேன்னடி
என்ற கவிதையை விஷ்ணுக்காக எழுதிக்கொண்டிருந்தவனின் கையிலிருந்து பறித்தான் மயூரன்.
” பையா!…. ” என்றவன் அதிர்ச்சியோடு பார்க்க, ” நான் தான் நிர்மல் பயப்பிடாதா? நானும் கேட்கணும் நினைச்சேன். ப்ரி டைம்ல என் கூட பேச வருவேன் பார்த்தா, சும்மா சும்மா இந்த டைரியைத் தூக்கி வைத்து கொண்டு தனியா உட்கார்ந்துகிற,, அப்படி என்ன தான் இந்த டைரியில இருக்குன்னு நானும் பார்க்கிறேன்? ” என்றவன் அவன் எழுதிய கவிதையை வாசித்தான்..
பார்ரா! உனக்குக் கவிதையெல்லாம் எழுத தெரியுமா? வாவ்! எவ்வளவு கவிதை! ” என்று பக்கங்களை திருப்பித் திருப்பி பார்த்து படித்தான்…
” ஹேய் வருண் லவ் பண்றீயா நீ? பையா பையான்னு பழகிட்டு… ஒரு வார்த்தைக் கூட சொல்லல, யாரு அந்தப் பொண்ணு? நீ தமிழ்ல கவிதை எழுதிருக்கிறதை பார்த்தா! தமிழ் பொண்ணு தான் போல, அந்தப் பொண்ணு எங்க இருக்கா? பெயர் என்ன? ” என அவனைப் பேச விடாது கேள்விகளைக் குமிக்க… ”
” பையா! வெய்ட் வெய்ட் செமஸ்டர் க்யூஸ்ட்டீன் மாதிரி கேள்விய அடிக்கிட்டே போறீங்க… ஒண்ணு ஒண்ணா கேளுங்க, பதில் சொல்லுறேன்.. ” அவனிடமிருந்து டைரியைப் பிடுங்க முயல, அவனது கழுத்தை வளைத்தவன், ” மவனே! எங்க நழுவ பார்க்கிற? பதில் சொன்னா தான் தருவேன்.. இல்லைன்னு வை இன்னைக்கு நீ பே பே தான்… ” என்றான் அவர் குரவலையை இறுக்கியவாறு
” பையா! பையா! என் பிரியாவுக்கு நான் ஒரே ஒரு வருண்… அப்படியேல்லாம் பண்ணிட்டாதீங்க. எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுறேன்… ” என்றான்.
” அப்படி வா வழிக்குச் சொல்லுடா… ” என்றான் அவனை இன்னும் கை வளைவில் வைத்தவாறு..
” கொஞ்சம் ப்ளீஸ்…” என்று அவனது கையைக் காட்ட, அவனும் அவனை விடுவித்தான்.. பிரியா, அவ பெயர். இரண்டு பேரும் எம். ஏ வரைக்கும் ஒண்ணா தான் படிச்சோம்., அவ காதல் ஐந்து வருசம், என் காதல் மூணு வருசம். எங்க காதல்ல சீனியர் அவ தான். என்னையும் நேசிக்க ஒரு உறவு இருக்குன்னு ஒரு வருசமா எனக்கே தெரியாம இருந்திருக்கேன்.. அவ கூட நட்பா பழுகும் போது தான் எனக்கே அது தெரிந்தது.. நட்போடு தான் முடியும் இந்த உறவு நினைச்சிட்டு இருந்தேன்.
அந்த நட்புக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்து அந்த நட்பையே காதலோடு தொடர வைத்தவள் என் பிரியா!.
என்னை சேயாய் மாற்றி தாயா அவ ஊட்டிவிடுவா! மடி கொடுப்பா! சில நேரம் என்னைத் தந்தையாய் மாற்றி,எனக்கு குழந்தையா தெரிவா! முத்தம் கேட்டு காதலியா இருப்பா! தட்டிக்கொடுக்கும் தோழியா இருப்பா! மனைவியாய் மாறி சண்டையும் போடுவா! என்னுடைய தசாவதாரி அவ! ஆண்கள் தான் பெண்கள் பின்னாடி சுத்துவதை தான் பார்த்திருக்கேன்.. ஆனால் பெண்களும் பசங்க பின்னாடி சுத்துவாங்கன்னு என் பிரியாவைப் பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன்.. எனக்கே தெரியாம காதலிக்கப் படுவது ஒரு சுகம் தான்…
என் பிரியா, என்னைத் துரத்தித் துரத்தி காதலிச்சிருக்கான்னு, அவ சொல்லுவதைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள்ள இருக்க வெட்கம் ஆட்டோமெட்டிக்கா வந்திடும்.. வாயாடி வாயாடி எனக்கும் சேர்த்து பேசுவா!
எங்க காதல்ல ஆண் அவ, பெண் நான்.. ” என்றான் சிரித்துக் கொண்டே!
வருண் விஷ்ணுவைப் பற்றிப் பேசும் பொழுதெல்லாம் அவன் கொண்ட மொத்த காதலும் விழிகளில் தென்பட, அவனுதடுகளில் சந்தோசம் குடிக்கொண்டிருப்பதைக் கவனிக்காது இல்லை மயூரன்.
அவன் தன் காதலையும் காதலியையும் பற்றி பேசும் போதெல்லாம் அறியாது போனான் மயூரன், தன் காதலியான விஷ்ணுப்பிரியாவை தான் கூறியிருக்கிறான் என்று..
“மயூ…” என்ற அப்துலின் அழைப்பில் நினைவு பெற்றவன். டைரியை உள்ளே வைத்து விட்டு அவனை உள்ளே அழைத்தான்..
” எதுக்கு கூப்பிட்டிருந்த மயூ? ” என்றவன் எதிரே வந்து அமர்ந்தான். ” உன் வொர்க்கை முடிச்சிட்டீயா அப்துல்?” எனவும்.
” ம்ம்… ஆல்மொஸ்ட் எல்லாம் முடிஞ்சது… சில எடிட்டீங் வொர்க் தான் இருக்கு.. அது அவ்வளவு அவசரம் இல்ல… ” என்றான்.
” அப்ப கிளம்பு, நாம போய் அந்தப்பொண்ண பத்தி விசாரிக்கலாம்
” என்று அவனை அழைக்க, கண்ணத்தில் கைவைத்தப்படி ” நான் வர மாட்டேன் பா.. இன்னா அடி… ஆள விடு சாமி… ” என்று நழுவப் பார்க்க, ” அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் பா… ” மயூவும் நக்கலடித்தான்.
” ஏன் பேசமாட்டா! நீ வாங்கிருக்கணும் அப்ப தெரியும் அந்த அடி சாதாரணமான அடியான்னு? ”
” சரி சரி பீல் பண்ணாதா மச்சி! வா போலாம்…” என்றழைக்க, ” சரி வரேன். ஆனா ஒரு கண்டிசன் இருக்கு. அதுக்கு ஓ.கே சொன்னா தான். நான் வருவேன் ” என்றான்.
” என்ன கண்டிசன் சீக்கிரம் சொல்லு? ” எனவும், ” நான் வண்டியை ஓட்டுறேன். நீ அந்தப் பொண்ணோட போட்டோவைக் காட்டி விசாரி ” என்றான்.
” ஓ.. இந்த முறை என்னை அடிவாங்க வைக்க ப்ளான் பண்றீயா? ” எனவும்
” பின்ன, ஹீரோ எல்லாம் அடிவாங்க கூடாதுன்னு எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன? வா போலாம்… ” என்றான்.
இருவரும் மீண்டும் காமத்திபுராவிற்கு சென்றனர்.. திருநங்கையிடம் கேட்ட இடத்திற்கே சென்றவர்கள், அந்தப் பெண்ணின் புகைப்படத்தை வைத்தே கேட்டு அந்தத் தெருவையே சுற்றினார்கள். மயூரனின் எண்ணம் முழுவதும் அந்தப்பெண்ணை பற்றிக் கேட்பதில் இருக்க. அப்துலின் என்னமோ அந்தத் திருநங்கை மீண்டும் வந்திடுவாரோ என்றிருந்தது..
கடைசியா அங்கே சில திருநங்கைகள் தங்கிருக்க, அங்கே செல்ல, அப்துல் தடுத்தும் சென்றான்..
” அம்மா! இந்தப் பொண்ணு எங்க இருக்கான்னு தெரியுமா? ” என மயூரன் வினவ. அந்த திருநங்கையோ அவர்களை ஆராய அப்துலோ கன்னத்தில் கை வைத்திருந்தான்.” யாருப்பா நீங்க, ஏன் இந்தப் பொண்ண தேடுறீங்க? ” என்று கேட்க அவர்கள் பதில் சொல்லும் போதே, அன்று அப்துலை அடித்தவள், அங்க கோபமா வந்தாள். ” டேய் அன்னைக்கு உங்களை அடித்தும் திரும்ப, இவளைத் தேடி வந்திருக்கீங்களா? ” என்றவள் செருப்பைக் கழற்றி கையிலேடுக்க அப்துலோ பயந்து மயூரனின் பின்னால் நின்றுக்கொண்டான்..
” கொஞ்சம் நிறுத்துறீங்களா? இங்க வர்ற ஆண்கள் எல்லாரும் தப்பானவங்க இல்லை.. எப்படி இந்தக் காமத்திபுரால இருக்க சில பெண்கள் தப்பான தொழில் செய்யாம வாழ்ந்திட்டு இருக்காங்களோ! அதே போல இங்க வர ஆண்களும் சிலர் நல்ல எண்ணங்கள் கொண்டவங்களா தான் இருப்பாங்க.., நாங்க இங்க வந்தது தப்பான எண்ணத்தில் இல்லை ” என்றவன் வந்த நோக்கத்தை கூற, அமைதியானார்.
” தம்பி, மன்னிச்சிடு பா. எங்க அந்தப் பொண்ணோட வாழ்க்கை மறுபடியும் சீரழிந்திடுமோன்னு பயந்துட்டா… நீ உள்ள வா பா.. ” என்றவர் உள்ளே அழைக்க, தயங்கியே உள்ளே சென்றனர்..
” சீமா…” என்றவர் அழைக்க, ” இதோ வர்றேன்மா…. ” என்று சத்தம் வந்தத் திசையை நோக்கி இருவரும் பார்க்க, அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணே வந்தாள் அவர்கள் முன்.
” என்ன மா? ”
” உன்னைத் தேடித்தான் வந்திருக்காங்க சீமா ” என்றதும் அவர்களைப் பார்த்தாள்… ” இவன் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ” என்று வருணின்புகைப்படத்தைக் காட்டி கேட்க, அதைக் கண்டதும் அவள் முகத்தில் சோகமும் கண்களும் கலங்கி இருந்தது.
கொள்ளை தொடரும்.