பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 24

தன் தங்கையின் மகனைத் தான் கட்டிவைப்பேன் என வாசுதேவரும். மயூரன் தான் மாப்பிள்ளை  என்று பலராமனும் ஒரு முடிவில் இருக்க, விஷ்ணுவோ தான் காதலித்து வரும் வருண் தான் தன் கணவர் என்று அவள் ஒரு முடிவில் இருக்க, மூவரும் அறியாமல் அவரவர் முடிவில் இருக்கின்றனர்.

 இதற்கிடையே வருண், விஷ்ணுவிடம் சொல்லிக் கொண்டு மும்பைக்குச் சென்றான். அங்கே  ஒரு வருட  கோர்ஸ் ஒன்றை  முடித்தவன் என்.சி  ஒளிவரிசையில்  தற்காலிகமாக வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். மும்பையில் உள்ள இடங்களையும்  சுற்றுள்ளா இடங்களையும் காட்டி அதைப் பற்றிய செய்திகளைத் திரட்டும் நிருபராக இருந்தான். மக்கள் அறிந்திடாத வியப்பான விசயங்களையும்  அறிந்துக் கொண்டு அதனை எடுத்து உரைப்பான். சின்ன வேலையையும் ஆர்வத்தோடு செய்வதைக் கண்ட மேத்தா, அவனைப் பாராட்டினார். அப்துல், மயூரன், வருண் மூவரும் தான் நண்பர்கள் வயது வித்தியாசமின்றி பழகினார்கள்.
மயூரன் அவனுக்குத் தெரியாததைக் கற்றுக் கொடுப்பான்.

சரியாக அதே நேரம் ஷ்பனாவை  பிராதல் வழக்கில் கைது செய்தனர் காவல் அதிகாரிகள். நீதிமன்றத்தில் அவளுக்கு எதிராக சாட்சிகள் இருக்க, அபராதத்தைக் கட்டச் சொல்லிவிட்டு  விடுதலைச் செய்தனர். அவளோ  அவமானமாய் எண்ணி தற்கொலைச் செய்துகொண்டாள்.  இதனால் மனஉளைச்சலுக்கு ஆளானார் கல்யாணசுந்திரம்.

நிசாப்பையும் அவனுக்கு உதவியாக இருந்த காவல் அதிகாரிகளின் கூட்டுச் சதியை அனைவருக்கும் தெரியப் படுத்த வேண்டும் என்று எண்ணியவர். இந்தப் பொறுப்பை வருணிடம் கொடுத்தார். அவனோ அகமகிழ்ந்தான்,  இதைச் சரியாக செய்தால் தனது வேலை நிரந்தரமாகும் என்றெண்ணியவன்  கொடுத்த  வேலையில் ஆர்வம் காட்டினான். . மேத்தா, அவனிடம் யாரிடமும்  இதைப் பற்றிச் சொல்ல வேண்டாம் என்று கூறியதால் மறைத்து வைத்திருந்தான்..

காமத்திபுராவிற்குச் சென்று விடயங்களை சேகரிக்கும் போது தான் சீமா நடத்தும் நாடகத்தைப் பார்த்தான்.பெண்களுக்கு, விழிப்புணர்வு  கொடுக்க, பெண்களுக்காகவே நாடகம் போட்டாள். அவளே நடித்து காட்டியும் இருந்தாள். அதனைக் கண்டு வியந்தவன் அவளைப் பாராட்டினான்.

முதலில் பயந்தவள் பின் அவனது பேச்சால் சரியானாள். தனது வேலையை எதார்த்தமாக அவளிடம் சொன்னவன், அவளிடமே அவன் தேடலுக்கான பதில் கிடைத்தது. தானே சாட்சி சொல்வதாகக் கூறினாள். 

மகிழ்ச்சியோடு தன் வீடு திரும்ப, விஷ்ணுவிடம் அழைப்பு வந்தது, அதனை எடுத்து பேச விஷ்ணுவின் விசும்பல் சத்தமே  கேட்டது வீட்டில் கல்யாணத்தைப் பற்றி பேச்செடுப்பதாகக் கூறினாள்.

முதலில் அவளைச்  சமாதானம் செய்து, பேசி போனை வைத்தவனுக்கு என்ன செய்வதென்று யோசனை இருந்தது.

வருணின் முகம் மாற்றத்தைக் கண்டு, மயூரனே அவனிடம் விசாரிக்க உண்மையை எடுத்துக் கூறினான். 

அவனைச் சமாதானம் செய்தவன் அவள் யாரென்று அறியாமலே ” அவளை வரச் சொல்லு. நான் உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்  ” என்றான் அவனுக்கு நம்பிக்கையும் அளித்தான் மயூரன்.

வருணும் விஷ்ணுவிடம் இங்கு வருமாறு சொல்லிவிட்டான். அவன்  பார்த்த வேலைக் கிட்ட தட்ட முடியும் தருவாயில் இருந்தது. சீமாவோடு சில பல சாட்சிகளையும் சேகரித்தான்.சீமாவை அழைத்து வர முடிவு செய்திருந்தவன்
தயாராக, மயூரனிடம் காரைக் கேட்டு வாங்கினான். அவனோ கார் சாவியை எடுக்க, அவனது பர்ஸைஸூம் சேர்ந்து விழுந்தது அதில் விஷ்ணுவின் தற்போதைய போட்டோ இருப்பதைப் பார்த்த வருண் அதிர்ந்து ” பையா இது….? ” என போட்டோவைக் காட்டிக் கேட்டான். புன்முறுவலித்தவன் தனது காதல்  கதையைக் கூற அதிர்ந்து போனான் வருண்.

வேலை இருப்பதாகக் கூறி வெளியெறி விட்டான். 

காமத்திபுராவை நோக்கி சென்றவனின் மனமுழுக்க மயூரன் கூறியதிலே சுழன்றது.  சீமாவை அழைத்துக்கொண்டு விரைய எண்ண, அவனது வருகையை ஏற்கனவே கண்காணித்திருந்த நிசாப் ஆட்கள்., அவனது வருகையின்  உண்மைக் காரணத்தை அறிந்துக்கொண்டனர்.

முதலில் சீமாவைக் கொல்ல நினைத்தவர்கள் அவள் வீட்டிற்குச் சென்றனர். அவளது தந்தை தாய், அவளைக் காப்பத்த அங்கிருந்து ஓடிப்போகச் சொன்னார்கள். அவளும் தப்பித்து ஓடினாள். நிசாப் ஆட்கள் அவர்களைக் கொன்றுவிட்டு சீமாவைத் தேடிச் சென்றனர்.

வரும் வழியில் வருண் சீமாவைக் கண்டவன் அவளைக் காப்பாற்றி அழைத்துக்கொண்டு புறப்பட. நிசாப் ஆட்கள் அவர்களைத் தொடர்ந்தனர்.

மயூரனை அழைத்து ஆபத்து என்று மட்டும் சொல்ல மயூரனும் விரைந்தான் அங்கு. அதற்குள் அவர்களது காரை இடித்தனர் நிசாப் ஆட்கள்.

இடித்த வேகத்தில் கார் கவிழ்ந்தது. இருவரும்  உள்ளே மாட்டிக்கொண்டிருக்க, மகிழுந்தின் மேல் பெட்ரோலை ஊற்றித் தீயைப் பற்ற வைத்து விட்டுச் சென்றனர். அதற்குள் காரை விட்டு இருவரும்  அவர்கள் அறியாது வெளிய வர சீமாவைக் காப்பாற்றியவன் இங்கிருந்து ஓடிப்போகச் சொன்னான். அவளும் சென்றுவிட, இவனது கால்கள் மாட்டிக்கொண்டிருந்தால் முழுதாய் வெளிவரத் தவித்தான்.. உடலில் தீப்பற்ற ஆரம்பித்தது. 

மயூரன், அங்கு வந்து அவனைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கே அவனுக்குச் சிகிச்சை அளித்தனர்..
உடல் முழுதும் வெந்துப் போயிருந்தது.. கடைசியாக மயூரனிடம் பேச எண்ணினான். அவனிடம் முதலில் சொன்னது விஷ்ணுவைப் பற்றித்தான் . அதைக் கேட்டவனோ அதிர்ந்தான்.

அவளைக் காப்பாற்றுமாறு, கூறிவிட்டு இறந்துப் போனான். அவனுக்குச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்துவிட்டு வீடு திரும்பியவன் தாயிடம் சொல்லி அழுக ஆரம்பித்தான்.

அவனைத் தேற்ற வழி தெரியாது போனார் முத்துலட்சுமி.. 
 தனது தமயனிடம் இதைச் சொல்ல, அவரோ மகளின் திருமணத்தைப் பற்றிக் கூறி காப்பாற்றச் சொன்னார்.. மேலும் பேசி, பலராமனின் ஆசைப்படி மயூரனுக்கு விஷ்ணுவைக் கட்டிவைக்க எண்ணியவர், தன் மகளை வந்து அழைத்து போகுமாறு சொல்ல, முத்து, லட்சுணனுக்கும் அது சரியென பட, மயூரனிடம் பேசி சமாதானம் செய்து  அங்கு அனுப்பி வைத்தனர்.

அவளுக்காக இரயில் நிலையத்தில் காத்திருந்தான். இரயிலும் செல்லத் தொடங்க வாசலில் அவளது வருகைக்காக காத்திருந்தான். அவளும் ஏமாற்றாது வந்து சேர அவளுக்கு உதவினான். விஷ்ணு அவனை அணைத்திருக்க, அவனுக்கு அவள் வருணின் பிரியாவாகத் தெரியவில்லை, தன் விஷ்ணுவாகத் தெரிந்தது. அவளை அணைக்க விரைந்த கைகளைக் கட்டுபடுத்தியவன் ” விஷ்ணு  ” என்றழைத்தான்.

அவன் முழுவதுமாக கூற அப்படியே சிலைப்போல அமர்ந்துவிட்டாள்.  ” நீ தான்  பிரியான்னு எனக்குத் தெரியாது. நான் என் விஷ்ணுவைத் தான் காதலிச்சேன். காதலிக்கிறேன். அவன் என் கிட்ட கடைசியா சொன்ன வார்த்தைகள் இதான்
” …. பையா… என்ன… மன்னிச்சிடுங்க,… நீங்க.. காதலிக்கிற… விஷ்ணு… தான்,.. என் பிரியா…. என் காதலை நான்…. என்னோடு… எடுத்துட்டுப் போறேன். அவளைப் பார்த்துக்கோங்க பையா….

அவ…. அங்க இருந்தா…. பிடிக்காத கல்யாணத்தைச் செய்து வைத்து கஷ்டபடுத்துவாங்க. இங்க  அவளால தனியா வாழமுடியாது  அவ வாழ்க்கை சீரழிஞ்சுடும்…. அவளை நீங்க தான் காப்பத்தணும், என் மேல இருக்கக் காதலை மறைக்கச் செய்து உங்க விஷ்ணுவா மாத்துங்க… அவ என்னை மறக்கிறது கஷ்டம். ஆனாலும்…. அவளை விட்றாதீங்க பையா! நான் உங்கள் நம்புறேன்… எங்க காதலை நினைச்சு அவளைக் கைவிடமாட்டீங்க தானே..” என அவனது கையைப்பற்றிக் கேட்க அவனோ எதுவும் பேசாமல் கண்ணீர் வடித்தான். அவனைப் பார்த்து சிரித்த வண்ணமே வருணின் உயிர் பிரிந்தது.. ” வருண்  ” என அவன் கைப்பற்றி அழுதுக் கரைந்தான்…

” வருண் இறந்ததை, உன் கிட்ட இருத்து மறைக்கணும் எண்ணம் எனக்கில்ல, அவனுக்குத் ஒரு நியாயம் கிடைத்தற்கு அப்புறமா உன் கிட்ட உண்மைய சொல்லலாம் இருந்தேன். இருந்தும் நீ, எதாவது தப்பான முடிவ எடுத்திடுவீயோன்னு பயம் எனக்கு.

அது தான் என்னை  உண்மைய சொல்ல விடாம தடுத்துச்சு… இப்ப கூட என் காதலை ஏத்துக்கோ நான் சொல்லல. ஆனால், இந்தத் தற்கொலை முடிவ மட்டும் மீண்டும் எடுத்திடாத ப்ளீஸ்! உனக்காக நாங்க இருக்கோம். நான் இருக்கேன். நீ என் விஷ்ணுவா இருன்னு சொல்லல, அதுக்காக பிரியாவா இருன்னும் சொல்லல, என்னுடைய தோழி விஷ்ணுப்பிரியாவா, என் பேட்இமாஜினரா இரு! நீ  வருண் இறப்பிலிருந்து வெளியே வரணும் அது போதும். என் காதல்ல நீ ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் உன் இஷ்டம்.நான் எப்பையும் உனக்கு துணையா இருப்பேன் விஷ்ணு. இது வருணுடைய டைரி…” என்று அருகில் வைத்து விட்டு வெளியே வந்தவன் மெத்தையில் அமர்ந்துவிட்டான்,…

அவள் கையில் வருண் டைரியிருக்க, அவளைச் சுற்றியுள்ள புகைப்படத்தில் மயூரனின் காதல் இருந்தது..  வருண் மேல் கொண்ட காதலை மறப்பதும் மயூரனின் காதலை ஏற்பதும் எளிதல்ல அவளுக்கு…. தேவைக்கென்று காதலிப்பவர்களுக்கு மறந்துபோவது எளிது தான். ஆனால் தேவையே காதல் மட்டும் தான் என்பவர்களின் காதலை மறப்பது இயலாதது… 

சக்கரையை உண்டு பழகி  மகிழ்ந்தவர்களுக்குத் இனி தேனைத் தான் சுவைக்கணும் என்றால் என்ன சொல்லவது தேன் ருசியானாலும் பழகப்படாதவர்களுக்கு அதன் சுவையைப் பழகிக்கொள்ள காலமெடுக்கும் அது போலவே மயூரனைப் புரிந்துக்கொண்டு அவன் காதலை ஏற்க, காலம் அவசியமானது விஷ்ணுவிற்கு.. 

அதை அவனது மூளை ஏற்றாலும் மனமென்னவோ போராட்டம் தான் செய்தது.. காலத்தைக் காட்டிச் சமாதானம் செய்ய முயன்றான் மனதை… 

அவ்வறையை விட்டு வெளியே வர, அவளுக்காக மெத்தையில் இடமளித்தவன், பால்கனியிலிருக்கும்  ஊஞ்சிலில்  சென்று அமர்ந்துவிட்டான்… 

தனிமையை உணர்ந்தவளுக்குத் அரவணைப்பாக தாய்மடித் தேட, அங்கே மயூரனைத் தவிர ஆறுதல் அளிக்க யாருமில்லை.. அவளும் அங்குச் சென்று அவனருகே அமர்ந்து மடியில் படுத்துக் கொண்டாள்.. 

” மயூரன், இனி நான் சாகணும் எப்பையும் நினைக்க மாட்டேன். உன்னை நான் ரொம்ப கஷ்டபடுத்திட்டேன் ஐ யம் ரியலி சாரி.. வருண் இல்லைன்னு தெரிந்ததும்,  என் உலகமே நின்றிருச்சு… அவன் தான் எல்லாம் நினைச்சு, அவனோடு எப்படியெல்லாம்  வாழணும் கற்பனை பண்ணி, நிறைய எதிர்பார்த்து. இப்ப அதெல்லாம் வெறும்  கனவு தான் சொல்லும் போது, என்னால ஏத்துக்க முடியல மயூரன். அப்படி ஒரு சிஸ்சவேசன்ல அந்த முடிவைத் தான் என் மூளை எடுக்கச் சொல்லுச்சு.. நீ உள்ளுக்குள்ள எவ்வளவு கஷ்டபடுற எனக்குப் புரியுது மயூரன்..  ஆனால் என்னால இப்ப எதுக்கும் பதில் சொல்ல முடியாது… என் எண்ணம் முழுக்க வருணைத் தவிற வேற யாரும் இல்லை… ஐ யம் சாரி மயூரன்.. ” என்றவளின் கண்ணீர் அவனது கால் சட்டையை நனைக்க, 

” விஷ்ணு! நான் உடனே என் காதலை ஏத்துக்கோன்னு  சொல்லல, உன் உணர்வுகளையும் வலியையும் என்னால புருஞ்சுக்க முடியுதுமா… இப்போ நீ என் மடியில வந்து படுக்கிறது காரணம், உனக்கு ஒரு  ஆறுதல் வேணும், ஒரு மடி வேணும்.. அது என்னுடையதா இருக்கணும் நான் நினைக்கிறேன். உன் மனசுல இருக்க காதலைச் அழிச்சிட்டு என்னை ஏற்கணும் அவசியம் இல்லை.. என்னை ஒரு நண்பனா பாரு! இது போல உனக்கு எப்போ ஆறுதல் தேவைப்பட்டாலும் தயக்கமில்லாம  வந்து சாஞ்சுகோ படுத்துக்கோ என் மடியும் தோளும் உனக்காக இருக்கும்.. காதலனா தானே ஏற்க முடியாது நண்பனா ஏத்துக்க முடியுமே! அந்த உறவை வைத்தாவது உன் கூட இருந்துகிறேனே விஷ்ணு! உன் கூட இருந்தாலே எனக்கு சந்தோசம் தான்… ப்ளீஸ் என் கூட இரு! என்னை விட்டுப் போகணும் நினைக்காத!”  என்றவனின் கண்ணீரும் அவள் கன்னத்தைச் சேர, பட்டென எழுந்தவள் அவனது விழியைக் கண்டாள். அதில், ஏக்கம், காதல், எதிர்பார்ப்பு எல்லாமிருக்க, அவன் விழிநீரைத் துடைத்தவள், நெஞ்சில் புதைந்தாள். அவளது அணைப்பிலும் அவனது அணைப்பிலும் காதலில்லை, அன்னையின் அணைப்பும் நண்பனின் ஆறுதல் மட்டுமே இருந்தது.. இருவரையும் தழுவியத் தென்றல், மனதில் உள்ள பாரத்தைக் குறைத்தது.. 

இரண்டு நாள் அவளைக் கண்ணைப் போல பார்த்துக்கொண்டனர். அவ்வபோது வரும் அழுகையை அவர்கள் அறியாது மறைத்துக்கொள்வாள்., அவளுடன் யாரவது இருந்துக் கொண்டு அவளைத் தனிமையில் விடாமல் பார்த்துக்கொண்டனர். 

இரண்டு நாள் காவலில் இருந்த நிசாப்பையும் நிசாப் ஆட்களையும் நீதிமன்றத்தில் நிசான் ஆஜர் படுத்தினான். ஷ்பனாவின் வழக்கு மீண்டும் பேசப்பட்டது.. ஷ்பனாவின் தற்கொலைக்குச் செய்துக் கொண்டாலும் அதற்கு காரணம் நிசாப்பும் அவனது ஆட்களும் தான்…  அவர்கள் சீமாவின் பெற்றோர்களையும் மேலும் என்.சி நிருபர் வருணையும் கொன்றதுக்கான ஆதாரம், சாட்சி அனைத்தையும் நிசான் ஒப்படைத்தான்.. நிசாப்க்கு எதிரான சாட்சி அனைத்தும் சரியாக இருக்க, அவனுக்கும் அவனது ஆட்களுக்கும் ஆயுள் தண்டனைக் கிடைத்தது… 

” ரொம்ப நன்றி சார்… நீங்க மட்டும் இல்லேன்னா இவனுங்களுக்கு தண்டனைக் கிடைச்சிருக்காது… ஷ்பனா,  வருண்  இறப்புக்கு உங்களால தான் நியாயம் கிடைச்சிருக்கு சார்… ” என மேத்தா நிசானின் கைப்பற்றிக் கூறினார்.

” இது என்னுடைய கடமை தான். நன்றி அவசியம் இல்லை.., உங்க ஒத்துழைப்பாலும் தான் அந்தக் கும்பலை  அரேஸ்ட் பண்ண முடிஞ்சது, யூ டன் குட்  ஜாப் தாங்கியூ..  நான் வரேன்  டேக் கேர்,. ” என்று சென்றுவிட்டான் நிசான்.

கல்யாணசுந்தரம் மயூரனின் கைப்பற்றி அழுதே விட்டார். ” நான் உனக்கு நன்றிக் கடன் பட்டுருகேன் மயூரன்.. என் பொண்ணு மேல உள்ள கலங்கத்தைப் போக்கிட்டீங்க. அவ உயிரோட இருந்திருந்தால் சந்தோசப்பட்டுருப்பா, கண்டிப்பா அவ ஆன்மா சந்தோசப்பட்டுருக்கும்… ரொம்ப நன்றிப்பா! ” என்றார்.

” ஷ்பனாக்கு ஒரு அண்ணன் இருந்து என்ன பண்ணிருப்பானோ அதை தான் நான் செய்திருக்கேன். எனக்கு நன்றி சொல்லாதீங்கப்பா.. உங்க உடல் நிலையைப் பார்த்துக்கோங்க டேக் கேர்  ” என்றான்.. 

விஷ்ணுவின் கைப்பற்றிய சீமா, ” மயூ அண்ணா, எல்லாத்தையும் சொன்னாங்க… வருண் அண்ணா ரொம்ப நல்லவர்.. இந்த இழப்பின் வலி அதிகம் தான் உங்களுக்கு.  நீங்க நேசிச்ச ஒருத்தருக்காக உங்க உயிரையும்   விட துணிந்தது, நீங்க அவங்க மேல அவ்வளவு  அன்பு வைச்சிருக்கிறனால தான்.  ஆனால், அதை அவங்க ஏற்பாங்களா?  நமக்கு சின்னதா அடிப்பட்டாலே துடிச்சுப் போற அவங்க, நாம செத்தா சந்தோசப்படுவாங்களா? 

 என் வாழ்க்கையில அப்பா அம்மாவ இழந்து, என் கற்பையும் இழந்து இன்னும்  நான் உயிரோட இருக்க காரணம்.. என்னைப் போல  பெண்களை எல்லாத்தையும் இழந்து இயலாமை, அறியாமையோடு வாழ்ந்துட்டு இருக்க பெண்களுக்காக தான். எனக்குத் தான்  வழிகாட்ட யாரும் இல்லை. ஆனால் என்னால முடியும் ஒரு நம்பிக்கை எனக்கு இருக்கு.

  கஷ்டபடுற பெண்களுக்கு  வழி கட்டாணும், அவங்க அறியாமையைப் போக்கணும் அதான் என் லட்சியமே!  இன்னும் என் லட்சியத்தை நான் இழக்கல, என் கிட்ட தான்  இருக்கு, என்னுடைய   நம்பிக்கையோடு.. 

நம்ம உடல இருந்து உயிர் போகுற வரைக்கும்.. நாம செய்ய வேண்டியத செய்துட்டே இருக்கணும் எது போனாலும் எது வந்தாலும். கடவுள் கொடுத்த உயிரை யாருக்காகவும் கொடுக்கவோ எடுக்கவோ அனுமதியில்லை.. உங்க வருண் தான் உங்க லட்சியம் சொல்லாதீங்க விஷ்ணு… அவர் தான் உங்க வாழ்க்கைன்னு நினைக்காதீங்க, அவருடைய அத்தியாயம் முடிஞ்சு போச்சு.. இனி வாழப் போற உங்க வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது நீங்க தான்.. நம்ம எல்லாருக்கும் சாவு நிச்சயம், சாகும் போது அதுல ஒரு திருப்தி இருக்கணும்…  நான் வரேன் விஷ்ணு. ” என்று சீமா கூறிச் செல்ல, அவள் கூற்றை அப்படியே உள்வாங்கிக் கொண்டாள் விஷ்ணு..

Leave a Reply

error: Content is protected !!