பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 30

இருவரும் மகிழ்ந்தது இருப்பதைக் கண்டதும் நிஷானுக்கு மனம் நிறைவானது. அவர்கள் இருவரையும் வீட்டில் இறக்கி விட்டான்..

நிஷானிடம் நன்றி உணர்ச்சியோடு கைக்குலுக்கினான் மயூ,  அவர்களிடம் இருந்து விடைப்பெற்றான் நிஷான். மயூ, ஏற்கெனவே தகவல் சொல்லி இருந்ததால், அனைவரும் அவளுக்காகக் காத்திருந்தனர். உள்ளே வந்ததும் ” சகு “என சகுவை நோக்கி வர, அவரும் அவளை அணைத்து உச்சி முகர்ந்தார்.

” விஷ்ணு பேட்டி, உன்னைக் காணானதும் நாங்க துடிச்சப் போயிட்டோம். உன்னைப் பார்த்ததும் தான்  எங்களுக்கு உயரே வந்தது… இனி நாங்க எங்க உயிர தொலைக்க மாட்டோம்.. ” என்று மீண்டும் முத்தமிட்டார்.. 

முத்து, அவளை இறுக்கி அணைத்தவர், கண்ணீர் வடிக்க, ” முத்து” என்றவள் நாக்கைக் கடித்து விட்டு, “அத்தை, எனக்கு ஒண்ணுமே இல்லை… நான் நல்லா இருக்கேன். வாசுதேவ் கிருஷ்ணனோட பேத்தியைக் கடத்தினவனுங்கல சும்மா விடுவேனா,” அவருக்கு மட்டும் கேட்கும் படி பேச, சிரித்தவர் அழுதும் விட்டார்.

” என்ன விஷ்ணுமா,  உன்னைக் கடத்தினவங்க கதி என்னாச்சு? ” ஆதி கிண்டலாக கேட்க, ” அதை ஏன் கேக்கிறீங்க  மாமா, அடிச்சு அடிச்சு டையர்டு ஆயிட்டேன்.. போதும் போதும் போதும்  என்னைய போலீஸ் ல ஒப்படைச்சுடுங்க கெஞ்சினானுங்க. அதான் போலீஸ்க்கு போனைப் போட்டு, அவங்க வேலைய நான் பாதியாக்கிட்டேன்…” செய்யாத சாகசங்களை அவள் அள்ளி விட, ” மக்கும் மக்கும்….” மயூரனின் இறுமலில் தனது அழும்புகளைக் குறைத்தாள். 

” வாய் வாய், எந்த நிலைமையிலும் வாய் மட்டும் அமைதி ஆகுதா பாறேன்” அவள் கன்னத்தைப் பிடித்து  கிள்ளினார் தனா.

” விஷ்ணு மா…” பலராமன் அழைக்க, அவரைக்  வந்து கட்டிக் கொண்டாள்.  “அப்பா…. அழாதிங்க, அதான் நான் வந்துட்டேனே.. எனக்கு ஒண்ணிலப்பா. எப்படி போனேனோ அப்டியே வந்துருக்கேன்..  ” என்றாள்.

” எனக்கு உயிரே இல்லமா, மறுபடியும் எனக்கு கிடைச்ச வைரத்த தொலைச்சுட்டேனோ நெனச்சுட்டேன். உன்னைப் பார்த்தும் தான், இனி தொலைச்சுடாத, சொல்லிக் கடவுளே கைல கொடுத்து போல இருந்தது… இனி என் வைரத்தை நான் தொலைக்க மாட்டேன் ” அவளை இறுக்கி அணைத்துக் கொண்டார்.. 

” என்ன பலராமா, உன் பொண்ணு கோஹினூர் வைரமா என்ன? கவர்மென்ட் காரன  விட நீ ரொம்ப பத்திரமா பார்த்துகிற போல” நக்கலடித்தார் ராமன். 

” இந்த வைரத்துக்கு சொந்த காரன் நான் பா, நான் தானே பார்த்துக்கணும்… ” என்றார். 

” அப்ப, மயூரன் இல்லையா? இந்த வைரத்தோட சொந்தக்காரன்? ” தனா கேட்க, 

” அத்தை, அந்த வைரத்தை உருவாக்கியது அவருன்றனால கொஞ்சம் உரிமை கொடுத்துருக்கேன். பட் ஆபீஸியில் ஓனர் நான் தான். அதுல மாற்றம் இல்லை.. ” கேலியாகச் சொன்னாலும் அதில் அனைவருக்கும் உறுதியாகச் சொல்லிவிட்டான். அவள் தன்னவள் என்றும், அவள் என்றுமே தன்னவள் தான், யாருக்கும் அல்ல, என்பதில் உறுதியாக இருந்தான்.

” மக்கும்… என்னை வைரமா பார்த்தது போதும், மனுசிய பாருங்க.” அனைவரையும் முறைத்து விட்டு கூறினாள்.

” விஷ்ணு, என்ன இது? புதுசா உன்னை மனுஷியா பார்க்க சொல்லுற?  நாங்க என்னைக்கி உன்னை மனுஷியா பார்த்தோம்..” ஷாலுவும் நேரம் பார்த்து வார, 

” யூ டு புரூட்டஸ்… அப்பா..” அவள் சிணுங்க, ” இல்லடா, உன்னை இங்க எல்லாரும்  தேவதையா பார்க்கிறாங்கடா, அதை தான் அப்டி சொல்லுறாங்க.. ” அவர் அவளது தடையைப் பிடுத்து சமாதானம் செய்ய, “ஆங்…. தேவதையா?” ஆதி, நிவி, வாணி,கோரஸாக கேட்டனர்.

“மாமா, இதெல்லாம் இதோ நிக்கிறானே இவன் சொல்லுவான்.. தேவதை, அழகான ராட்ஷசி.. நாங்க இல்ல..” வாணி கூற, ” அடிங்கு… ” அவளை மயூ அடிக்க வர, தன் தந்தையின் பின் ஒளிந்துக் கொண்டாள்.. 

” போதும் போதும் போய் தூங்குங்க நேரமாச்சு… காலையில் பேசிக்கலாம்..” எல்லாரையும் அனுப்பிவைத்தார் சகு… 

அங்கு அந்தக்  கூட்டம் கலைந்தது, விஷ்ணுவிற்குத் தான் கஷ்டமாக இருந்தது. தாத்தா, தன் மேல் கோபமாக இருக்கறாரோ என்றே.’ ஒருவேள நான் யாருன்னு தெரிஞ்சு, என் மேல கோபமா இருப்பாரோ..’ அவளது சிந்தனை  முழுவதும் தாத்தாவின் மேல் இருந்தது.. அறைக்கு வந்து அதே யோசிக்க, அவளது யோசனையை முற்று புள்ளி வைத்தான் மயூரன்.

காதோரம் அவனது மூச்சு காத்துப் பட்டு உறைந்த பனியாய் நின்றாள். அவனது அணைப்பு, பெண்ணவளைக் கட்டுண்டு இருக்கச் செய்தது..

“உன் அப்பா சொன்னது போல, நான் தொலைச்சுது எனக்கே  திரும்ப கிடைச்சிருச்சு விஷ்ணு.. ஆனா, அவருக்கு
நீ வைரம்ன்னா, எனக்கு நீ என் உயர். என் உயிர் நீ இல்லைன்னு, என்னோடு செல்களால  கூட ஏத்துக்க முடியல,  இட் நீட்ஸ் யூ.. இதயமும் போராட்டம் பண்ணிருச்சு. மூளையும் கூட, எல்லாமே என்கிட்ட இருந்தாலும், தே நீட் யூ.
எனக்கும் நீ தேவை,  எதற்கும், எங்கயும், எப்போதும் நீ.. நீ.. நீ… மட்டுமே போதும் லவ் யூ விஷ்ணு.” காதல் வசனம் பேசி, கன்னத்தில் இதழ் பதித்தான். அவளுக்கோ குற்ற உணர்வாக இருந்தது.. அவளது நடுக்கம் அவனது பிடியைத் தளர்த்தியது..  

” என்னாச்சு விஷ்ணு..” அவளைத் திருப்பி தன் முகம் காண வைத்தான். அவள் முகத்தை கையில் ஏந்தி, அவள் பதிலை எதிர்பார்த்து இருக்க, அவள் கண்ணீர் உள்ளங்கையைத் தீண்டியது..

” அங்க, அந்த அக்கா இல்லேன்னா, என்ன ஆயிருப்பேன் தெரிலே மயூ, இந்நேரம் நான்…” என்னும் போதே அவள் அதரங்களில் கைவைத்து தடுத்தான்..

” விஷ்ணு, அதைப் பத்தி எதையும் நினைக்காத, அது ஒரு  கெட்ட கனவு. மைண்ட்ல போட்டு  குழப்பிக்காத, “என்றான். 
“மயூ, உன்னைப் பார்த்தும் தான் உயரே வந்தது. 

“ஆனா, ஆனா…” தயக்கம் தொண்டை வரை அடைத்திருந்து. அவனோ, அவள் பதிலுக்காகக் காத்திருக்க, ” மயூ, எனக்கு  பசிக்குது… ” என்றதும் பெரிதாய் ஊதபட்ட பலூன் டப்பென வெடித்தது  போல் ஆனது அவனுக்கு. அவன் முகம் வாடிப் போனது.

“என்னடா என்னையே பார்க்கிற, எனக்கு பசிக்குது… ஈவினிங்ல இருந்து நான் சாப்பிடவே இல்லை.. ” தன்  வயிறைத் தடவி  கூறியவளைக் கொலவெறியோடு பார்த்தான்.. ‘ சண்டாளி! ரொமான்டிக்கா பேசி, என் காதலைச் சொன்னா, பசிக்குது சொல்லிப் பல்ப் கொடுத்துட்டாளே..  இதுல,இவ தோரத்தி தோரத்தி லவ் பண்ணலாம்…’ தலையில் அடித்துக் கொண்டவன்
கீழே செல்ல, 

பெருமூச்சொன்றை வெளியே விட்டவள்,  “உப்… ரொமான்டிக்  பேசுறானாம் அதுவும் என் கிட்ட போடா, போ..” என்றவளுக்கு அப்போது தான் புரிந்தது, அவனது செய்கையில் தன்னை மறந்து நின்றோம் என்பதை.

‘ என்ன பட்டுனு முத்தம் கொடுத்துட்டான், நீயும் அப்படியே நிக்கிற, என்னடி அச்சு  விஷ்ணு உனக்கு… இதெல்லாம் தப்பு அவனை எப்படி நீ நெருங்க விட்ட ?

சட்டுனு என்னை மயக்கி கைக்குள் வச்சுட்டானே.. நோ நோ  அவனை  நெருங்க விடவே கூடாது…  ‘ தன் ஆடையை எடுத்துக் கொண்டு குளியலறைகுள் புகுந்தாள்.

அவளைக் காணாதும், அனைவரும் இரவு உணவை மறந்து இருந்தனர்.. எதுவும் சமைத்திட வில்லை, சமையலறைக்குச் சென்றவன்.. மதியம் வைத்தது கூட இல்லாமல் போக.. அவனே   கொஞ்சமாக கோதுமையைக் கொட்டி பிசைந்து தேய்த்து ஆறு  உருண்டை உருட்டியவன்…  பக்கத்திலே தக்காளித் தொக்கையும் செய்தான்… 

குளித்து விட்டு வெளியே வர, சுட சுட சப்பாத்தியும், தக்காளித் தொக்கும் அவளது நாசியைத் துளைக்க, அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.. 

” மயூ, இன்னக்கு டின்னர் இதானா? சூடா இருக்கு, சூடு பண்ணி எடுத்துட்டு வரியா? “எண்ணமும் பார்வையும் சப்பாத்தி மேல் இருந்ததே தவிர, அவன்  மேல் இல்லை..  அவனிடம் பதில் வாராமல் போக,நிமிர்ந்து பார்க்க, சப்பாத்தியை விட அவனே சூடாக  இருந்தான்..

‘ அம்மோ ரொம்ப தான் சூடா இருக்கான் போல… இப்ப என்னாச்சுன்னு துறைக்கு, இவ்வளவு சூடா இருக்கிறார்.. சொல்ல போனா முத்தம் கொடுத்ததுக்கு, நான் தான் காளியா மாறி இருக்கணும்.  பாவம் பையனை விட்டா, ரொம்ப பண்றான்.. ‘ அவனை உள்ளுக்குள் வறுத்து விட்டு, வெளியே,

” ஈ… நீ சாப்டியா மயூ? ” சப்பாத்தியைப் பிய்த்து தின்ன போனாள்.. ” நீ காணாமல் போனதும் யாரும் இங்க சாப்பிடல.. நான் உனக்காக, இப்ப செஞ்சுக் கொண்டு வந்தேன்…” இன்னும் குறையாத சூட்டோடு…

சாப்பிடாமல்  அமைதியாக இருக்க, தட்டை எடுத்து அவனே ஊட்டிவிட்டான்…

“சாரி, விஷ்ணு ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்கிட்டேன்.. நான் ஒரு இடியட்.. உனக்கு கொஞ்சம் கூட டைம் கொடுக்காம,  என் காதலைச் சொல்லி உன்னை கஷ்ட படுத்துட்டேன்… என் பீலிங்ஸ் உன்னை தவிர யார்கிட்டயும் ஷார் பண்ண  முடியாது..  நீ காணாம போனதும் என்னோட துடிப்பையும் நீ இல்லாம போனதும் என் தவிப்பையும்,  நீ கெடைச்சதும் வந்த சந்தோசத்தையும் என்னால எனக்குள் மறைச்சு வைக்க முடியல.. அதான் கொட்டிட்டேன் சாரி” என்றான் மேலும் ஊட்டியவாறு.. அமைதியாக  சாப்பிட்டவள், தட்டை வாங்கி அவனுக்கும் ஊட்டிவிட்டாள். 

பின் இருவரும் மெத்தையில் படுத்துக் கொள்ள, அவன்  நெஞ்சில் தலைவைத்தாள். மெல்லமாய் அணைத்தபடி படுத்திருந்தான். 

” மயூ, தாத்தாக்கு எல்லா உண்மையும் தெரிஞ்சுருச்சா? என் மேல கோபமா இருக்காரா?  என் கிட்ட பேசவே இல்லை..” 

” இல்ல,  நீ வாசுதேவ் கிருஷ்ணன் பேத்தின்னு தெரியும். ஆனா,  நமக்குள்ள இருக்க டீல் தெரியாது…  நாம, கணவன் மனைவின்னு தான் நெனச்சுட்டு இருக்கார்..  நாளைக்கு தான் தெரியும்.. அவர் என்ன நினைச்சுட்டு இருக்கார். நீ அதையே நினைக்காம இப்ப  நிம்மதியா தூங்கு.” என்றான்.. நாளை நடக்க இருப்பதை அறியாது  இருவரும் உறங்கினார்கள்… 

மறுநாள் விடிய, பொழுது அழகாய் புலர்ந்தது.. காலைக் கடன்களை முடித்து விட்டு கீழே இறங்கினாள்.. 
வைகுண்டமோ அவளிடம் பாராமுகம் காட்டிச் சென்றார்… அவளுக்கு ஏதோ போல் இருந்தது.. 

பலராம் ஊருக்கு கிளம்ப, எல்லாரிடம் சொல்லிவிட்டுச் செல்ல, எண்ணியவர், வைகுண்டத்தின் அருகே வந்தார்.. 

” நான் போய்ட்டு வரேன் மாமா… என் தங்கச்சியையும் மகளையும் இந்தக் குடும்பத்துல கொடுத்தது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு மாமா.. சந்தோசத்தோடு தான் ஊருக்குப் போறேன்..  நான் வரேன் மாமா? ” என்றார் அங்கிருந்து நகர,

” பலராமா, நீ போகும் போது உன் தங்கச்சியையும் உன் தங்கச்சி வீட்டுக்காரையும் உன் மக , மருமகளையும் அழைச்சுட்டு போ. இந்த வைகுண்டத்தை ஏமாத்தினவங்க யாரும் இங்க இருக்கணும் அவசியம் இல்லை” என்றார் குறையாத கோபத்தோடு.

அதைக் கேட்டதும் அனைவரின் முகமும் அதிர்ச்சியில் இருந்தது..

கொள்ளை தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!