பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 39

 

மதுரை மீனாட்சி அம்மன் திருமணத்திற்காக வந்த குண்டோதரன் என்னும் அசுரனுக்கு  தாகமெடுத்தால்,  அந்த அசுரனிடம், சிவபெருமான், வை… கை.. என்று உத்தரவிட, அந்த மல்லிநகரில் வைகைப் பிறந்தது என்ற புராணமும் உண்டு…

அந்த வைகையைக் கடக்க, பிரிட்டீஷ் காரன் கட்டியது தான் இந்த ஏ வி பாலம் . கிட்ட தட்ட 134 ஆண்டுகள் பழமையானப் பாலம். பல மழை, வெள்ளப்பெருக்கு எல்லாம் பார்த்தப் பாலம்..

மதுரையின் நினைவுச் சின்னமாக்கக் கோரிக்கையில் இருக்கிறது.. மேம்பாலத்தில் இருந்து, ஓடும் வைகைக் காண்பது, கண் கொள்ளாக் காட்சி..

சித்திரையில் சித்ரா பௌர்ணமி அன்று, கள்ளழகர் ஆற்றில் இருக்கும் போது, வைகை ஆறு முழுதும் மக்கள் வெள்ளப்பெருக்கு தான். அந்தப் பாலம் முழுவதுமே மக்கள் நிறைந்து முங்கி இருக்கும்.

மதுரையில், சிறப்பு மிக்க இடங்களில் அதுவும் ஒன்று…

மயூரனும் விஷ்ணுவும் வண்டியை ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு  அங்கு நின்று ஓடும் வைகைக் கண்டுக் களித்தனர்..

சத்தமிட்டுக் கொண்டு, எதையும் தேக்கி  வைத்துக் கொள்ளாது, போற போக்கில் “என்னோடு வா…” என்று  எல்லாத்தையும் அடித்துச் செல்கிறது  இந்த வைகை.. 

இதே போல் மக்கள் மனதிலும் கோபம், கவலை, வஞ்சகம், அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் தேக்கி வைத்து கொள்ளாமல் எல்லாத்தையும் மறந்து ஓடும் நீராய்,  மனம் என்றும் இருத்தல் வேண்டும் என்று உணர்த்துகிறது.

வளியின் அணைப்பில் இருவரும் இருக்க, பேசவந்தவர்களின் வாயை அடைத்தது அந்த எழில்கொண்ட  இயற்கையைக் கண்டதும். வாகன இரைச்சலிலும் ஓடும் நீரின் சப்தம், மனதைக் கட்டிப் போடும் இன்னிசை தான்.. மதுரை மக்களுக்குத் தெரியும் அந்த இடம் எவ்வளவு பெரிய வரம் என்பது..

” வாவ், இங்க இவ்வளவு சத்தம்  இருந்தும் மனசுக்கு இதமா தான் இருக்குல விஷ்ணு? ”  மூச்சை இழுத்து விட்டு, அந்தச் சூழலை அனுபவித்தே கூறினான்..

“ஆமா, மயூ, தாத்தா பேச்சுப் பிடிக்காம, இங்க இருந்து குதுச்சு செத்துப் போயிடலாமா? நினச்ச நாட்களும் உண்டு. அப்படி நினைச்சு நானும்  இங்க வருவேன் .. ஆனா, இந்தக் காற்றும், ஆறும் ஏதோ செய்து மனசை மாத்திரும், எனக்கு ரொம்ப பிடிச்ச இடம்…” என்றாள் , இடம் உணர்த்திய நினைவுகளை எண்ணியே!…

அவள் கையைப் பற்றியவன், ” போதும் போதும் நோ மோர் பிளாஷ் பேக்.. இனி இந்த இடம், நம் காதல்  மலர்களைப் பூக்கவைக்கும் தோட்டமா மாற்றலாம் விஷ்ணு ” என்றவன் அவளோடு கோர்த்த விரல்களை  இறுக்கினான்.

அவனிடம் இருந்து தன் கையைப் பிரிந்தவள்.”  அதேல்லாம் இருக்கட்டும், இப்ப சொல்லு எப்படி அவங்கள சேர்த்து வச்ச, அதுவும் ஒரே நாள்ல? ” தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

“பச்… விஷ்ணு, எவ்வளவு ரொமான்டிக்கா  இருக்க வேண்டிய நேரம் … இந்த மாதிரி கேள்விக் கேட்டு, அந்த பீல்லைக் கெடுத்துறாத  டி.. ஜஸ்ட் பீல் த லவ் பேபி ” என்று அவளை ஒரு கரம் கொண்டு அணைக்க, அதனைத் தட்டிவிட்டவள், ” நீ ரொமான்ஸ் பண்ண தான் அங்க இருந்து இங்கக் கூட்டிட்டு வந்தேனா? ஒழுங்கா சொல்லு, இல்ல பிடிச்சு தள்ளி விற்றுவேன்…” என்றவள் மிரட்ட, 

 “நீ, செஞ்சாலும் செய்வ… ஓ. கே ஓ.கே  நானே சொல்லுறேன்…” 

அர்ஜுன் சென்ற பின், அவனது எண்ணம் முழுதும், மகாவின் வாழ்க்கையைச் சீராக்க வேண்டும் என்பதிலே இருந்தது.. தனது மூளையில்  யோசனையை வலைவீசி தேட,  சிக்கவே காத்திருந்தவனுக்கு. வெகு நேரம் கழித்தே சிக்கியது அந்த யோசனை ..

மறுநாள் காலையில் சீக்கிரமாக எழுந்தவன், யாரிடமும் சொல்லாமல் வாடிப்பெட்டிக்குச் சென்றான். அவனோடு வாட்டசாட்டமான இரு ஆண்களையும் ஒரு பெண் அதிகாரியையும் அழைத்துச் சென்றான்.

அர்ஜுனிடம் விலாசத்தைக் கேட்டு  சுந்தரன் இல்லத்துக்குச் சென்றான்..

வாசலில் நால்வரும் நிற்க, சரோஜா தான் அவர்களை எதிர் நோக்கினார்

” யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும்? ” என்றவரிடம், ” உள்ள போய் பேசலாமா? இங்க பேசுனா, நல்லாருக்காது…” என்றான் மயூரன்.

அவரும் குழப்பத்தோடு வரவேற்றார்..  ஹாலில் அந்த நால்வரும் அமர்ந்தனர். சரோஜா, வந்த நால்வரையும் நோட்டம் விட,  காக்கி பெண்ட்டை பார்த்ததும் காவல் அதிகாரி என்று யூகித்தவருக்கு, கொஞ்சம் கலக்கம் இருந்தது .

” உங்க பைன கூப்பிடுறீங்களா? ” என்றான் அதிகாரிமாய்..

” யாரு நீங்க எதுக்கு என் பையன கூப்படனும்? “

” முதல்ல கூப்பிடுங்க, அப்றம் சொல்லுறேன்”

அவரும், ” சுந்தரா… சந்திரா இங்க

வாங்கடா….” என கத்தி அழைக்க, அவரது இரு மகன்களும் வந்து சேர்ந்தனர்.

” மிஸ்டர்  சுந்தரன். நீங்க தானே? ” “என்றதும்., ” ஆமா, நான் தான் நீங்க யாரு? “

” நான் அஸ்ஸிடன்ட் கமிஷனர் இவங்க மூணு பேரும் இன்ஸ்பெக்டர்ஸ்… உங்கள விசாரிக்க வந்துருக்கோம் .. அந்த விசாரணை உறுதி ஆச்சுனா உங்களை அரெஸ்ட் பண்ண வேண்டியது இருக்கும்…” என்றான் விறைப்பாக..

” எங்க அண்ணாவ எதுக்கு விசாரிக்கணும்? அவர் எந்த தப்பும் பண்ணல? நீங்க சரியான அட்ரஸ்க்கு தான் வந்துருக்கீங்களா?” எனக் கேட்டான் ஒரு விதக் கேலிப் புன்னகையில்..

“மகாலட்சுமி, உங்க மனைவி தானே மிஸ்டர் சுந்தரன்..” என்றதும் அவன் அமைதியாக இருக்க,மேலும், மயூரனே தொடர்ந்தவன், “அவங்க சார்பா உங்க மேல எங்களுக்கு கம்பளைண்ட் வந்துருக்கு… நாங்க விசாரிக்கத் தான் வந்திருக்கோம்… இது குடும்ப பிரச்சனைனால  பேச வந்திருக்கோம். ஒத்துழைச்சா, நல்ல முறையில்  பேசி முடிச்சிடலாம்.. இல்லேன்னா, சேதாரத்துக்கு நான் பொறுப்பிள்ளை…” என்றான்.

” அந்தச் சிறுக்கிக்கு எவ்வளவு  தைரியம்? என் புள்ள மேலயே கம்பளைண்ட்  கொடுப்பா? அவ, நல்லவே இருக்க மாட்டா, நாசமா தான் போவா! ” மகாவைப் பரிகாசம் செய்ய, ” இப்ப நீங்க வாய மூடல, உங்களையும் சேர்த்து அரெஸ்ட் பண்ண வேண்டுயது வரும்… ” என்று மிரட்டியவன்,

சுந்தரனைப் பார்த்து, ” உங்க முன்னாடிதானே டாக்டர், அவங்க குழந்த பெத்துக்கிட்டால் உயிருக்கு ஆபத்துன்னு சொன்னாங்க ? ” எனக் கேட்டதும் பதில் அளிக்காது இருக்க,

” அதெல்லாம் அவளே கூட சொல்ல சொல்லிருப்பா, யாரு கண்டால். அவ என்ன கொடுத்து சொல்லச் சொன்னாளோ, எதைக் கொடுத்துச் சொல்லச் சொன்னாளோ? ” நரம்பில்லாத நாக்கு என்னவெல்லாம் பேசலாம் என்பது போல பேசினார்…

 பொறுமையை இழுத்துப் பிடித்தவன்,” உங்க கிட்ட தான் கேக்கிறேன் மிஸ்டர் சுந்தரன்…” என்றதும், “ஆமாம்.. ” என்றான்.

” நீங்க அவங்க ரிப்போர்ட் எடுத்துட்டு வேற ஹாஸ்பிடல் போனீங்களா? ” 

“ம்ம்ம்… போனோம்” என்றான் வாய்க்கு வலிக்காமல்..

” என்ன சொன்னாங்க? ” 

” அதே தான் சொன்னாங்க… ” என்றான் எங்கோ பார்த்து..” அப்ப கான்போர்ம், அவங்களால கருவைச் சுமக்க முடியாதுன்னும் அவங்க உயிருக்கு ஆபத்துன்னும் சொல்லியும், நீங்க அவங்க கிட்ட, ஆண் குழந்தைப் பெத்துகிறது பத்தி பேசிருக்கீங்க..

அவங்கள, ஒதுக்க சொல்லிக் கொடுமைப்  பண்ணிருக்கீங்க. அதுவும் மொத்தக் குடும்பமும் சேர்ந்து… இதுல அவங்க பிரெண்ட்ஸ் கிட்ட போலீஸ் எங்க கையில் இருக்காங்கன்னு வேற சொல்லிருக்கீங்க…” அவன் பேச பேச,

சரோஜா விகிர்த்துப் போக, சுந்தரனும் சந்திரனும் அசட்டையாக நின்றிருந்தனர்.. 

” இதுக்கெல்லாம் தனி தனி கேஸ் போட்டு உங்கக் குடும்பத்தை என்னால உள்ள வைக்க முடியும் பண்ணட்டுமா?” என மிரட்டினான்..

” என்ன சார் மிரட்டிறீங்களா? இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுற ஆளு நாங்க இல்ல… எங்க அண்ணே, அண்ணிக் கூட வாழணும்ன்னா, அவங்க  ஆண் வரிச பெத்துக் கொடுக்கிறேன் சொல்லச் சொல்லுங்க… முடியாதுன்னா, போயிட்டே இருக்கச் சொல்லுங்க.. நாங்க வேற பொண்ண பார்த்துக்க கல்யாணம்  பண்ணி வைக்கிறோம்…” என்று சந்திரன் சவுடாலாகப் பேச,

ங்கி ஒரு அறை விட்டான் மயூரன் , காதுக்குள் “ங்கோய்” என்று கேட்டது.. 

” ஏன்டா பொம்பளைங்க என்ன உங்களுக்கு புள்ள பெத்து போடுற மிஷினா? இந்தக் கொழந்தை தான் பெத்துக்குக் கொடுக்கணும் கேக்குற நீ ஒண்ணும் கடவுள் இல்ல, உன் வாரிசைப் பெக்க உனக்குப் பொண்ணும் வேணும், ஆனா, உன் வாரிசா வந்த பொண்ணு மட்டும் வேணாம்…

உன் அம்மாவும் ஒரு பொண்ணு தான் டா. உங்க தாத்தா, உங்க அம்மாவ வேணாம்ன்னு சொல்லி கொன்னுருந்தால், நீங்க இப்படி ஆட்டிட்டு இருக்க மாட்டீங்கடா…

இப்பையும் சொல்லுறேன், குடும்பத்தோடு கம்பி எண்ணுறீங்களா?  இல்ல அந்தப் பொண்ணு  கூட்டி வந்து வாழ வைக்கிறீங்களா? ” சுந்தரனைப் பார்த்துக் கேட்க, இன்னும் முரண்டு பிடித்தவன்..

” சார், அதெல்லாம் வாழ முடியாது… என்னைக்கு என் மேல அவ போலீஸ் கம்பளைண்ட் கொடுத்தாளோ, அப்பவே ஒட்டும் உறவும் இல்லனேன்னு ஆயிருச்சு.. நீங்க என்ன பண்ணுமோ பண்ணிக்கோங்க… எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல ” என்றவனைக் கண்டு முறுவலித்தவன்,

” காய்ஸ்,என்ன வேணாம் பண்ணீக்கலாம்மா?  மூணு பேரும்  ரெடியா?

” என்றதும்…

” ரெடி சார்…” என்றனர் மூவரும்.. “ஓகே ஆரம்பிங்க ” என்றதும் அந்த மூவரும் சந்திரனை வெழுத்தெடுத்தனர்.

சுந்தரனும் சரோஜாவும் எவ்வளவு தடுத்தும், அவர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.. அவனோ வலியில் துடித்தான்… 

” சார்.   என் தம்பியா விடுங்க சார். அவனை அடிக்க உங்களுக்கு என்ன சார்  ரைட்ஸ் இருக்கு? எதுக்கு அவனை அடிக்கிறீங்க? ” 

” அவனா,ஒரு பொண்ணோட கையைப்பிடிச்சு இழுத்தான்… பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கு முயற்சி பண்ணினான்…  ஒரு பொண்ணை பலவந்தம் படுத்திருக்கான்… போதுமா” என்றான்.. 

” என் தம்பி அப்டி பண்றவன் கிடையாது அவன் மேல் பழிப் போடுறீங்க. என்னைப் பழிவாங்க, நீங்க இப்படி பண்றீங்க…” என்றான்.

” உன் தம்பியா விடணும்னா, நீ, உன் பொண்டாட்டியக் கூட்டிட்டு ஒழுங்க வாழணும்… இல்லேன்னு வை உன் தம்பி மேல பொய் கேஸைப் போட்டு உள்ள தள்ளிடுவேன் எப்படி வசதி?” என்றதும்.. 

” இதெல்லாம் அந்நியாயம் சார்… பண்ணாத தப்புக்கு, அவனை எதுக்கு சார் பழியைப் போட்டு உள்ள தள்ளுறீங்க? ” 

” நீங்க பண்றது மட்டும் நியாயமா சார்.. அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணுச்சு? பொம்பல புள்ளய பெத்துக் கொடுத்தது தப்பா, இல்ல ஆண் வாரிசு பெத்துக் கொடுக்காதது தான் தப்பா?  உன் மொத்த சுகத்தையும் பாராம தாங்கிப் பத்து மாதம் சுமந்து  உன்னை ஆம்பளன்னு நிருப்பிக்கிறவ தான்டா பொண்டாட்டிங்கறவ…

ஆனா அவளைப் புள்ளைப் பெத்துக் கொடுக்க மட்டும் யூஸ் பண்ண நினைக்கிற நீயெல்லாம்  ஆம்பளையா? தன்னை நம்பி வந்தவளை

சுயநலத்துக்காக பயன் படுத்தறவன்  எவனும் ஆம்பள இல்ல…

எந்தச் சூழ்நிலையும் அவளுக்கு துணையா இருக்குறவன் தான் ஆம்பளை. அவங்கஉன் மேல கம்பளைண்ட் கொடுக்கல, கேட்டதுக்குக் கொடுக்க மாட்டேன் சொல்லிட்டாங்க… ஏன்னா இன்னும் நீ அவங்களுக்குப் புருஷன் தான். அப்படித்தான் அவங்களும் நினைக்கிறாங்க… 

ஆனா, நீ கட்டிய மனைவியையும், பெத்த

புள்ளையும் கூட நினைக்காம,ஆண் வாரிசுக்காக இன்னொரு பொண்ண கட்டிக்க நினைக்கிற! உன்னை எல்லாம்…” ,என்றவன் தன் நாவை அடக்கி,  மேலும்  அவனே பேசினான்,

” சரி இன்னொரு பொண்ண கட்டுறீயே அவளும் பொம்பல புள்ளையைப் பெத்து கொடுத்தா, என்னடா பண்ணுவா? இன்னொரு பொண்ணைக் கட்டிப்பியா? இங்கப் பாரு… உன் தம்பி உனக்கு வேணும்ன்னா, இந்த பேப்பர்ல கையெழுத்துப் போடு.. இல்ல உன் தம்பியா போலீஸ் ஸ்டேஷன்ல வந்து பாரு… ” என்றான்.

“இல்ல சார் நான் கையெழுத்து போடுறேன்… ” என்றான் பயந்து.. 

” இனி நான் என் மனைவியை எந்தக் காரணத்திற்காகவும்  வீட்டை விட்டு அனுப்ப மாட்டேன்.. ஆண் வாரிசைக் கேட்டு அவளைக் கொடுமை செய்ய மாட்டேன்… அவளுக்கு சிறு கீறல் ஏற்பட்டாலும் அதற்கு நானும் என் அம்மாவும் தான்பொறுப்புன்னு எழுதி கையெழுத்து போடுங்க ரெண்டு பேரும்…  உடனே நீ போய் அவங்கள வீட்டுக்குக் கூட்டு வர்ற, இல்லேன்னா உன் தம்பியை அரெஸ்ட் பண்ணி, பேப்பர்ல நியூஸ் வருவது போலச் செய்வேன்… ” என்றதும்.

” இல்லசார், இனி அவளுக்கு இங்க எந்தப் பிரச்சினையும் வர்றாது . நாங்க நல்ல படியாக, அவளைப் பார்த்துப்போம் சார்..” என்று பணிந்தான்…

” ஒகே வாங்க போலாம்…” என்றவன் முன்னே சென்று நின்றவன் பின் திரும்பி சுந்தரனிடம் வந்தவன்,

” மிஸ்டர் சுந்தரன், உங்க மனைவிய நேசிங்க, அதுல இருக்க சந்தோஷமே வேற… கடைசி வரைக்கும் உடன் வர்ற போறது அவங்க தான்..  நீங்க அவங்களை உள்ளங்கையில தாங்க வேணாம்.. 

அவங்களை மதிச்சாலே போதும்…

கணவனா, புள்ளை பெத்துக்க மட்டும் நீங்க போதுமா? அவங்க துவளும் போதும் கூட இருக்கவேணாமா? அப்டி கூட,  இருக்கிறவன் தான் புருசன்.. வெளிய காட்டுற கர்வத்தை வீட்டில மனைவிக் கிட்ட காட்டாதீங்க… அவங்கள மனுஷியா பாருங்க.

அப்பறம் அவங்களுக்கும்

எனக்கும் என்ன சம்மந்தம் கேட்டு அதுக்கும் அவங்களைக் கஷ்ட படுத்தாதீங்க.. உடன் பிறந்தவன்  மட்டும் தான் அண்ணன்னு இல்ல” என்றவன் , அவனிடம் கையெழுத்து  வாங்கிக் கொண்டு வெளியே சென்று விட்டான்.

 இதெல்லாம் கேட்டு அவள் ஆவென வாயைப்பிளந்தாள்.. 

“அடப்பாவி போலீஸ்ன்னு பொய் சொல்லித்தான் இதெல்லாம் பண்ணியா? ஆமா,  உன் கூட வந்தவங்க போலீஸா, இல்லை அவங்களும் பொய்யா?” என கேட்டகவும்

” அவங்க சாரதியோட பிரண்டஸ், அப்றம் லேடீஸ் போலீஸா வந்தது, நம்ம ஆஃபீஸ்ல வேலைப் பார்க்கிற ஜெனி அக்கா, அவங்க, பெண்களுக்கு நடக்கிற அநியாயத்தைப் பத்தி கட்டுரைகள் நிறையே எழுதிருக்காங்க, தைரியம் சொல்லி, விழிப்புணர்வுக் கொடுப்பாங்க, ஆள் வேற பல்கா இருந்தாங்க, உதவின்னு கேட்டேன் வந்தாங்க… அந்தக் அக்கா என்னா ஆடி, அந்தச் சந்திரன வெளுத்து எடுத்துட்டாங்க…” என்றான் மூரலோடு.

” ஆமா, பண்ண தப்பெல்லாம் என் மாமாவும் அந்தச் சூனிக்காரித்தான், அவங்கள

விட்டுட்டு ஏன் அந்த கெடா மீசையை அடிச்ச? ” விஷ்ணு தன் சந்தேகத்தைக் கேட்டு வைத்தாள்.

“அதுவா, அவன் ஓவரா பேசுனான் அடிச்சேன்.. அப்றம் அவனைத் தானே உனக்கு கட்டிவைக்க முடிவு பண்ணாங்க, அவன் தானே உன்னைக் கட்டிக்கணும் நினைச்சான்… அதுக்கும் சேர்த்து தான் அடிக்கச் சொன்னேன்…  உங்க மாமாவை அடிக்கணும் தான் இருந்தேன். ஆனா, சகலையா  போயிட்டார், நாளா பின்ன முகம் கொடுத்து பேசணுமே

அதான் அடிக்கல…

இந்நேரம் உன் அக்காவ, உன் மாமா கூப்பிட போயிருப்பார் பேபி…” என்றவனைக் கண்டு வியப்பில் ஆழ்ந்து விட்டாள்.

அவளை உலுக்கியவன் நடப்பிற்குக் கொண்டு வந்தான்… 

” ஆமா ஏன் என்னைக் கூட்டிட்டு போகல? நானும் வந்து நல்லா நாக்கைப் பிடிங்கிற மாதிரி  நாலு வார்த்தைக் கேட்ருப்பேன்… ” என்றாள் கோபத்தில்,

” கூல் பேபி, நீ சம்பந்தம்  பட்டுருக்கேன்னு அவங்களுக்குத் தெரிய வேணாம்..  அப்றம் நீ அந்த ஊருக்குச் சகல மரியாதையோட தான்  போகணும் விஷ்ணு… தாத்தாவா வந்து கூப்பிடற வரைக்கும் நீ அங்க வரக் கூடாது … இதான் என் ஆசை… அதை நிறைவேத்தாம விடமாட்டேன் விஷ்ணு…” என்றவனை  நனைந்த விழிகளால் நோக்கினாள்.

கன்னம் தோடாமல் கைகளை ஏந்தியவன், ” என் குடும்பத்துல யாரும் அழுகக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான் … என் உயிர் நீ, கண்ணீர் சிந்தலாமா?”  விரல் கொண்டு  ஒற்றி எடுத்தான் அவள் கண்ணீரை.. 

அவன் புஜங்களைப் பற்றித் அவன் தோளில் சாய்ந்துக்  கொண்டாள்..

அந்தி வானில்  வைகை ஆற்றங்கரையில்,  அவனிடம் உணர்ந்தக் காதலை மௌனமாய் உணர்த்தினாள் அவனுக்கு.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!