UMUV23A

Banner-457dbd8a

23 (A)

கைகளைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டுக்கொண்டு எதிரே இருந்த கும்மிருட்டை வெறித்தபடி நின்றிருந்தான் ரிஷி.

வேகமாக அவனை நெருங்கிய வர்ஷா அவன் முன்னே சென்று நின்றாள். 

“ப்ச் எதுக்கு இப்போ வந்த? போய் படுத்துக்கோ ரொம்ப சில்லுன்னு இருக்கு ஜுரம் வரப்போகுது” அவன் கடுகடுக்க,

“எதுக்கு இப்போ அப்படி என்னை தள்ளிவிட்டு இங்க வந்து நிக்குற?”

“போயி தூங்கு மா”

“முடியாது! எனக்கு தெரியணும், என்னாச்சு? என்னை கிஸ் பண்ணதுக்கு வறுத்தபடறியா?”

அவளின் குற்றச்சாட்டில் பற்களைக் கடித்தவன், “பைத்தியமா நீ? இப்படிலாம் ஏன் யோசிக்கிற?”

“பின்ன? எவ்ளோ பாதுகாப்பா ஃபீல் பண்ணேன் தெரியுமா? தள்ளிவிட்ட?” அவள் வருந்த,

பெருமூச்சு விட்டவன், “புரிஞ்சுக்கோமா! ப்ளீஸ் நான் அங்க இருக்குறது தான் உனக்கு பாதுகாப்பில்ல”

“தத்துபித்துன்னு உளறாத ரிஷி” அவள் முறைப்படி கண்டுகொள்ளாதவன், 

“புரிஞ்சுக்கோடி! எல்லாத்தையும் விளாவரையா சொல்ல முடியாது. நீ போயி தூங்கு. நான் ஒரு வாக் போறேன்” என்றவன் நில்லாது அவளைக் கடந்து செல்ல,

“நில்லுடா ! டேய்!” கத்தியபடி அவன் பின்னே சென்றவள், அவன் கையைப் பிடித்து இழுத்தாள். 

“சுறுசுறுப்பா இந்த இருட்டுல என்ன வாக்?”

“விடு வர்ஷா!”

“முடியாது! எனக்கு கரணம் தெரிஞ்சே ஆகணும்!” அவள் பிடிவாதமாக நிற்க,

ரிஷியோ “சொல்ல முடியாது” என்றான் தீர்க்கமாக.

“நீ டென்ட் க்ளோஸ் பண்ணிக்கிட்டு படு. நானே வரேன்னு சொன்னாலும் என்னை உள்ள அனுமதிக்காத. ஜஸ்ட் கோ அண்ட் ஸ்லீப்!”

“டேய் பயமா இருக்குடா! எதுக்குடா இப்படிலாம் பேசற?” அவள் முகம் வாட,

பெருமூச்சு விட்டவன் வலிதோய்ந்த முகத்துடன், “புரிஞ்சுக்க ட்ரை பண்ணேன். மக்காடி நீ? இதெல்லாம் என்னன்னு…எனக்கு மூட் மாறிப்போச்சு…ச்ச் புரிஞ்சுக்கோயேன்” தலையைக் கோதிக்கொண்டவன், தன்னுள் எழுந்த உணர்வை எப்படிச் சொல்வதெனத் திந்தாடினான்.

“ஹே! ஹே! புரிஞ்சுடுச்சு! மூட் வருதா?” வர்ஷா கைதட்டிச் சிரிக்க, அவளைக் கொலைவெறியோடு பார்த்தவன்,

“உனக்கு சிரிப்பு வருதோ?” முறைக்க, 

சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் வாயைப் பொத்திக்கொண்டவள், “இதுக்கா இவ்ளோ சீன போட்ட?” என்றாள் அசட்டையாக.

“வாட் ?”

“வாட்டாவது வேட்டவது ? வந்து அங்கயே படு. வா! பயப்படாதே. நீ என்னை எதுவும் செய்ய மாட்ட, நானும் உன்னை எதுவும் செய்யமாட்டேன்!”

“எனக்கு சேர்த்து நீ உத்திரவாதம் தரியா?”

“நான் கராத்தேல ப்ளூ பெல்ட்!”

“ஆஹா?” என்றவன் அவள் இடையை வளைத்து இறுக்கமாக அணைத்துக்கொள்ள, அவள் முகம் பயத்தில் வெளிறியது.

மெல்ல அவளை விளங்கியவன், “புரியுதா? போ! தூங்கு” பொறுமையாகவே சொன்னான்.

“ஒன்னும் ஆகாதுடா. ஓவரா யோசிக்காத. ராத்திரி நேரத்துல இங்க கரடிங்க வரும்னு சொல்றாங்க. ஏன் ரிஸ்க் எடுக்குற?”

“சொல்றேன்ல? நான் உன்கூட வரல!”

“நீ வராம நான் எங்கயும் போகர்தா இல்ல!”

“வர்ஷா! டோன்ட் பிளே!”

“ரிஷி! நீயும் விளையாடாத! மரியாதையா வந்து உள்ள தூங்கு இல்ல உங்கம்மாக்கு ஃபோன் பண்ணி சொல்லிடுவேன். உங்க பையன் மூட் வரும்னு பயந்து கரடி இருக்க காட்டுக்குள்ள தனியா போறான்னு!” அவள் மிரட்டியபடி, மொபைலை எடுக்க, அதை வேகமாகப் பிடிங்கியவன்,

“முண்டம்! இதெல்லாம் அம்மாகிட்ட…என்னதாண்டி செய்யணும்?”

“கிலோசிக்கிட்டு வந்து தூங்கு! நீயே நினைச்சாலும் ஒன்னும் நடக்காது” மிடுக்காகச் சொன்னவள் டெண்டை நோக்கி நடக்க,

“ஏன்? ஏனாம்?” கோவமாக அவளைப் பின்தொடர்ந்தான் ரிஷி.

“ஏன்னா எனக்கு சம்ஸ்!” என்று தோளைக் குலுக்கிவிட்டு தன் ஸ்லீப்பிங் பேகிற்குள் நுழைந்து கொண்டாள்.

“அப்டினா?” அவன் டென்ட் வாசலிலேயே நிற்க,

“பீரியட்ஸ்!” கண்களை உருட்டி சொன்னவள், சுருண்டு படுத்துக்கொண்டாள்.

தலையில் அடித்துக்கொண்டவன், தலையைக் கலைத்துக்கொள்ள,

“அங்கேயே நிக்காத, உள்ள வந்து டென்ட் க்ளோஸ் பண்ணு” வர்ஷாவின் குரலில், அதையே செய்தவன், தனக்கான ஸ்லீப்பிங் பேகினுள் புகுந்துகொண்டான்.

“ரிஷி…”

“ம்ம்”

“உங்க கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்…”

“சொல்லுமா”

“இப்போ நீங்க நார்மல் ஆயிட்டிங்களா?”

“ம்ம், யாஹ். சரி சொல்லுடா என்ன சொல்லணும்”

“அது…”மெல்ல அவன் புறம் திரும்பிப் படுத்துக்கொண்டவள் “எனக்கு…”

“உனக்கு? பீடிகை போடாம சொல்லேன்!” அவன் அவசரப்படுத்த,

“இன்னிக்கி பீரியட்ஸ் இல்ல! சும்மா புழுகினேன்” கண்சிமிட்டி சொன்னவள் கண்களை மூடிக்கொண்டாள்.

உரக்கச் சிரித்துவிட்டவன், “பைத்தியம்” அவள் தலையை வருடி, “தூங்கு. குட்நைட் !” என்று புன்னகையுடன் கண்களை மூடிக்கொண்டான்.

***

“ரிஷி! நேரமாச்சு எவ்ளோ நேரம் குளிப்பீங்க? விஷ்ணு ஏற்கனவே மூணு தடவ கால் பண்ணிட்டான்” படபடப்புடன் குளியலறை கதவைத் தட்டிய வர்ஷா, “லேட் ஆகுது ரிஷி”

“வரேன் வரேன்” உள்ளிருந்து குரல் கொடுத்தான் ரிஷி.

அவன் சூட்கேஸை பேக் செய்தவள், “ரிஷி, விஷ்ணுக்கு வாங்கின கிஃப்ட் மறக்காம கொடுங்க”

கதவை திறந்தவன், “எத்தனை வாட்டி சொல்லுவ?” தலையைத் துவட்டியபடி வந்தான்.

“ஆல்பர்ட்டா போனதும் மெசேஜ் பண்ணு”

“பண்றேன் மா” என்றவன், “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை. எப்போ இந்தியா வர வாய்ப்பிருக்குன்னு கேட்டு சொல்ல சொன்னேன்ல?”

“கேட்டேன். இன்னும் ஒரு மாசம் அப்புறம் எப்போ வேணுமோ ரெண்டு வாரம் லீவ் தரேன்னு சொல்லிருக்காங்க. இன்னிக்கி டேட் கேட்டு சொல்லிடறேன்”

“சீக்ரம் சொல்லிடு அந்த டைம்ல முகூர்த்தம் இருக்கணும்” என்றபடி சட்டையை மாட்ட

“இன்னிக்கி கேட்டுட்டுவரேன். சாப்பிட டேபிள்ள எடுத்து வைக்கிறேன்”

“ம்ம்”

இருவரும் வேகமாகவே அன்றைய காலை உணவைச் சாப்பிட்டு முடித்தனர்,

“வர்ஷா” ஷூவை மாட்டியபடி அழைத்தான்.

“வந்துட்டேன்” அவன் சூட்கேஸை உருட்டிக்கொண்டு வந்தாள் அவள்.

“கிளம்பலாமா?” என்றபடி கதவைத் திறக்கப் போனவளை, வழிமறித்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.

“ரொம்ப மிஸ் பண்ணுவேண்டி உன்ன. சீக்கிரமா வந்துடு” அவன் குரல் உடைய, கண்களை மூடி அவன் மார்பில் சாய்ந்திருந்தவள்,

“நானும் ரொம்ப மிஸ் பண்ணுவேன்! ரிஷிமா…”

“ம்ம்?”

“கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் இங்க வந்தா, கிட்டத்தட்ட ஆறேழு மாசம் தனியா இருக்கணுமே…அதுக்கு நான் பேசாம என் காண்ட்ரேக்ட் முடிச்சுட்டு வரவரை கல்யாணத்தை தள்ளி போடலாமா?”

அவளை விளக்கி நிறுத்தியவன், “வேண்டாம்!” என்றான் தீர்மானமாக.

“டேய்! பிரிஞ்சி சேர்ந்து பிரிஞ்சி சேர்ந்து…உனக்கு புரியல” அவள் தரையைப் பார்க்க,

“நேரமாச்சு கிளம்பு!” என்றவன் கதவைத் திறக்க, முணுமுணுத்தபடி அவனைப் பின்தொடர்ந்தாள்.

விமானநிலையம் செல்லும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை, அவன் மட்டுமே பேசினான்!

“ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிடு, கல்யாணத்துக்கு வெய்ட் குறைக்கிறேன்னு பட்டினி கிடக்காத. எங்க போனாலும் லூகாஸை துணைக்கு கூப்பிட்டுக்கோ ஆனா ரொம்ப ஈஷிக்காத. தினமும் எனக்கு ஃபோன் பண்ணு…” அவன் பேசிக்கொண்டே போக,

டேக்சியின் கண்ணாடி வழியே சாலையை வெறித்தவள், கண்கள் மெல்லக் கலங்கியிருந்தது.

‘லூசு! நீ இங்க வராமலேஇருந்திருக்கலாம்! இல்லைனே இருந்துருப்பேன். இப்படி இவ்ளோ அழகாக மெமரீஸ் கொடுத்துட்டு கிளம்புறது நியாயமா? இந்த ப்ரபோசலை அடுத்த வருஷம் செஞ்சுருக்க கூடாதா?’

மனம் என்னென்னவோ யோசித்திருக்க, ரிஷி அவளுக்குச் சொல்லிக்கொண்டிருந்த அறிவுரைகள் காதில் விழுந்தாலும் கருத்தில் பதியவில்லை.

விமானநிலையத்தில் செக்கின் முடித்தவன், அவளிடம் மீண்டுமொரு முறை விடைபெற வந்தான்.

“ஏண்டி இப்படி முகத்தை தூக்கிவச்சுக்கிட்டு இருக்க? இதே முகத்தை மனசுல வச்சுக்கிட்டே நான் டிராவல் பண்ணனுமா?” அவள் நாடியைப் பிடித்து நிமிர்த்த,

“உனக்கு கொஞ்சமும் வருத்தமாவே இல்லையாடா? நான் எவ்ளோ பீல் பண்றேன் தெரியுமா?” அவள் முறைக்க,

“இல்லன்னு உனக்கு தெரியுமா? எல்லாம் உள்ளுக்குள்ள இருக்கும் வெளில காட்டிக்க மாட்டோம்” என்றவன் அவள் முகம் வாடியே இருப்பதைக் காணமுடியாமல், “ஹே கொஞ்சமான சிரிச்சா உனக்கு ஒரு ரகசியம் சொல்லுவேன். இல்லை இப்படியே கிளம்பிடுவேன்” என்று மிரட்ட,

“தேவையே இல்ல நீயும் உன் இத்துப்போன ரகசியமும்!” அவனை முறைத்தவள், “கிளம்பு நேரமாச்சு, நானும் ஆபீஸ் போகணும்” என்று கடுகடுத்தாள்.

அவளை மீண்டும் அணைத்துக்கொண்டு அவள் நெற்றியில் முத்தம் தந்தவன், “டேக் கேர் டியர். மிஸ் யு. எப்போடா நீ வருவேன்னு காத்துக்கிட்டே இருப்பேன்” என்றவன், “ப்ளீஸ் வர்ஷா சிறி” என்று அணைத்தபடியே கேட்க,

அவன் நெஞ்சில் முத்தம் தந்தவள், “எனக்கும்…லவ் யு ரிஷி” என்று மெல்ல விலக, மென்மையாக அவளை மீண்டுமொருமுறை அனைத்துக்கொண்டவன், மனமேயின்றி விடைபெற்றான்.

டேக்சியில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தவள் மனம் மிகவும் பாரமாய், தேக்கி வைத்த கண்ணீரினால் முகம் வலிக்கத் துவங்க, தன்னையும் மீறிச் சில துளிகள் வெளியேறத்தான் செய்தது.

விஷ்ணுவின் ஃபோன் வர அதை எடுத்தவள் மௌனமாகவே இருக்க,

“வர்ஷா அவன் கிளம்பிட்டானா?”

“…”

“ஏன் ஃபோன் பண்ணா எடுக்கவே மாட்டேங்குறான்?” அவன் பதட்டமாகக் கேட்க,

“செக்யூரிட்டி செக்ல இருப்பார்” என்றவள் குரல் உடைய,

“ஹே என்னாச்சு?” என்றவன் உணர்ந்துகொண்டான். “வர்ஷா என்ன இது? எதுக்கு இப்போ பீல் பண்றே? நேரம் ஃபாஸ்ட்டா ஓடிடும்…ப்ளீஸ் ஹே” அவன் சிரித்தபடி அவளைத் தேற்றத் துவங்க அவளோ மௌனமாகவே இருந்தாள்.

“நீ இப்படி வருத்தப்படுவேன்னா சொல்லியிருக்கலாம்ல? நான் அவனை இங்க வரவேண்டாம்ன்னு சொல்றேன். அங்கேயே இருக்கட்டும். நேரா சென்னைல மீட் பண்ணிக்கிறோம்” விஷ்ணுவின் குரல் மாறியது.

“அதெல்லாம் ஒண்ணு வேணாம்! எப்படியும் ஊருக்கு கிளம்பத்தானே போறார் ஒரு வாரத்துல.விடு” அவள் மறுக்க,

“இல்ல…இப்படித்தான் எனக்கே தெரியாம அவன் எக்ஸ் அவனை விட்டு…”

“உன் திருவாயை மூடு!” குறுக்கிட்டவள் மிரட்ட,

“இல்லை வர்ஷா அவன் என்னால நிறையவே…”

“மூடுன்னு சொன்னேன் விஷ்ணு!” அவள் கத்த,

“முடியாது போ டி!” விஷ்ணு சிரித்துவிட்டு, “சாரி” என்றான்.

“அய்ய எதுக்கு இந்த ஒப்புக்கு சாரி? ஒரு நிமிஷம் டேக்சிக்கு பே பண்ணிட்றேன்” என்றவள், அலுவலகத்தில் நுழைந்தபடி மீண்டும் பேசத் துவங்கினாள்.

“ஏன் டேக்சி? அவன் தான் ரெண்ட் கார் எடுத்திருந்தானே?”

“எனக்கு இன்டெர்னஷனல் டிரைவிங் லைசென்ஸ் இல்ல விஷ்ணு. விடு அதான் பஸ் இருக்கே”

“ம்ம் சரி என்னாச்சு ஏன் இப்படி உர்ர்ன்னு இருக்க?”

“மிஸ் பண்றேன்…சரி நீயேன் இங்க வரல? வந்துருக்கலாம்ல?”

“வரணும்னு தான் நினைச்சேன், ஆனா அப்பா இருன்னு வற்புறுத்தினார் அதான்…சாரி மா!”

“ம்ம் விடு. அவர் எப்படி இருக்கார்?”

“யாஹ் ஹி ஐஸ் ஃபைன். சரி உன் குரல் ஏன் இன்னும் இவ்ளோ டல்லா இருக்கு. அவன் தான் உன்கூடவே வந்துடுவான்ல?”

“எங்க வருவான்?” அவள் புருவம் சுருக்க,

“அவன் உன்கிட்ட எதுவுமே சொல்லலையா?”

“என்ன சொல்லணும்? தன் இருக்கைக்கு வந்தவள், கண்களை மூடிக்கொள்ள,

“அப்போ சொல்லல. நான் சொல்ல உதைப்பானோ?” விஷ்ணு சிரிக்க,

“சொல்லாட்டி நான் உதைப்பேன்” வர்ஷா மிரட்ட,

“மிரட்டினா சொல்ல மாட்டேன்” விஷ்ணு வீம்பாக, “ஆசையா கேளு சொல்றேன்” என்றான்.

“டேய்! பொறுமைய சோதிக்காத! சொல்லு”

“நீ கொஞ்சு”

“கூமுட்ட!”

“இப்படித்தான் கொஞ்சுவாங்களா?”

“ஐயோ! சரி என் செல்லம்ல சொல்லு. என்ன சொல்லியிருக்கணும்ம் உங்க அண்ணன்?”

“பத்தலை” என்றான் அவன்

பெருமூச்சு விட்டவள், “பட்டுக்குட்டில! என் செல்லம்ல! சமத்தா சொல்லுவியாம்”

“அவன் கல்யாணத்துக்கு அப்புறம் உன்கூடவே கேனடா வந்துருவான். நீ அங்க இருக்க வரை இருந்துட்டு உன் கூடவே இந்தியா ரிட்டர்ன் ஆவான்”

நெற்றியை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள் நேராக அமர்ந்தவள்,
“புரியல விஷ்ணு” என்றாள் குழப்பமாக.

“அவனுக்கு தான் அங்க ரெசிடென்ஸ் இருக்கே? இவ்ளோ நாள் அப்போ அப்போ இங்க தங்கணும்னு இருக்கு. இல்லைனா அவன் ரெசிடென்ஸ் விசா எக்ஸ்பயர் ஆகிடும்”

“ஓஹ் அப்போ ஏன் தங்கல இவ்ளோ நாளா?

“அவன் குழப்பத்துல இருந்தான். இப்போ கல்யாணத்துக்கு அப்புறம் உன்கூடவே இருக்கலாம்னு நினைச்ச…தாயே உன்கிட்ட நான் சொன்னதை அவன் கிட்ட காட்டிக்காத. ஒருவேளை அவன் சர்ப்ரைஸ் பண்ண நினைச்சுருக்கலாம்”

“உங்கண்ணனும் அவன் வெட்டி சர்ப்ரைசும்!” என்றவள் முகம் புன்னகையில் மலர்ந்தது.

“அவன் அவ்ளோவா வெளில அன்பை காட்டிக்க மாட்டான். நாம தான் அவனை வெளிப்படுத்த வைக்கணும். அதை விடு. உங்களுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆச்சு சந்தோஷம். எனக்கு எப்போ என் ஆளை செட் பண்ணிவைக்க போற?” விஷ்ணு விஷமமாகக் கேட்க,

“உன் ஆளா? யாரடா அது?” வர்ஷா சிரிக்க,

“உன் தங்கச்சி தான்!” என்றான் விஷ்ணு கொட்டாவி விட்டபடி.

“என்னது? மதுவா?” வர்ஷா கண்களை விரிய,

“ஹே சீ அவ எனக்கு தங்கை மாதிரி. நான் சொன்னது உன் கசின் சிஸ்டர் ஹிமையி”

“அவள நீ எப்போ பாத்த?”

“உங்க நிச்சயதார்த்துல வீடியோ கால்ல? ம்ம் அப்போ நீயும் ரிஷியும் கால்ல ஜாயின் பண்ணலை. நாங்க எல்லாரும் பேசிகிட்டு இருந்தோம். அப்போதான் அவளை பார்த்தேன். என்ன அழகு!” அவளை வர்ணித்த விஷ்ணு கனவில் மிதக்க,

உரக்க சிரித்தவள், “இவ்ளோ உருகுற, நீயே அவ கிட்ட கேட்ருக்கலாமே?” என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு கேட்க,

“எங்க? கூட தான் எல்லா பெருசுங்களும் இருந்தங்களே” அவன் அலுத்துக்கொண்டான்.

“நல்ல வேளை கேட்கல! அவ பிரசவத்துக்காக அவங்கம்மா வீட்டுக்கு வந்துருக்கா”

“ஐயோ! டெலிவரியா?” அதிர்ந்தவன், “பாத்தா தெரியலையே” யோசிக்க

“இன்னும் வயறு பெருசாகலை. சீக்கிரமே வந்துட்டா” வர்ஷா மீண்டும் சிரிக்க.

“போச்சா! என் மூணு நாள் காதல் இப்படி பிரேக்கப் ஆகிப்போச்சா?” புலம்பியவன், “சரி விடு அண்ணியா நீ தான் வந்துட்டியே. மரியாதையா நல்ல பொண்ணா பார்த்து எனக்கு நீயே அரேஞ்ட் மேரேஜ் பண்ணி வச்சுடு. எனக்கு லவ் மேரேஜ் செட் ஆகாது போல” அலுத்துக்கொண்டான்.

வர்ஷா மனம் லேசாக மேலும் சில நிமிடங்கள் பேசி அவளை விடாமல் சிரிக்க வைத்தான் விஷ்ணு.

அடுத்த பகுதியை படிக்க 23(B)