பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 19

அலைக்கடலில் ஆதவனும்  மெதுவாகத் தன்னொலியைச் சுருட்டிக்கொண்டு  மறைய மாலை வேளைத் தொடங்கியது..

காமத்திபுராவில் அந்நியர்களாய், நுழைந்தவர்கள் தான் அப்துலும் மயூரனும், நிச்சயம் இந்த விசயம் நிசாப் காதில் விழாமல் இருந்திருக்காது… சீமா, உயிரோடு இருப்பது தெரிய வந்தால், அவளையும் அவளைப் காத்து வந்தவர்களையும் கொல்லாமல் விட்டிருக்க மாட்டான்.. அவனுக்கு இன்னும் சீமா உயிரோடு இருப்பது தெரிந்திருக்காது என யூகித்தவன், அவளை அங்கு வைத்திருப்பது சிங்கக் குகையில் மானைப் பத்திர படுத்திவைப்பது போலத்தான்..

அதனால் அவளைக் பத்திரமான இடத்தில் மறைத்து வைக்க வேண்டும் என எண்ணியவனுக்கு திட்டம் உதித்தது… 

சீமாவைப் பாதுகாத்து வந்த திருநங்கையிடம், நிசாப் பத்தியும் சீமாவின் பாதுகாப்பைப் பத்தியும் கூற அவரும் ஒத்துக்கொண்டார்..

வெளிப்பாடையாக அவளை அழைத்து வந்தால் நிச்சயம் நிசாப்பின் ஆட்கள் அவளை அடையாளம் கண்டுக் கொள்வார்கள்..  அதனால் இருவரையும் பர்தா அணிந்து வர்றச் சொல்லிருந்தான்.. காமத்திபுராவில் சொற பஜார் அருகே உள்ள  ஹசரத் மசூதியில்  காத்திருக்குமாறு சொன்னான்.. அவர்கள் அதே போல் பர்தா அணிந்து அப்துலுக்காக காத்திருந்தனர்..

அதே நேரம் அப்துலை அழைத்தவன், அவனிடம் தனது திட்டத்தைக் கூறினான்..   ஹசரத் மசூதியில் ஐந்து மணி தொழுகை நடைபெறும்… தொழுகைக்குச் செல்வது போல சென்று அவளை அழைத்து வர்றச் சொன்னான் மயூரன்… 

அவனும் தொழுகை உடையை அணிந்தவன் தொப்பியையும்ம் அணிந்து மூக்கில் கர்ச்சீப்பையும் கட்டிக்கொண்டான்… ஐந்து மணித் தொழுக்கைக்கு உள்ளே சென்றான். உள்ளே பெண்களோடு பெண்களாக இருவரும் இருந்துக்கொண்டனர்.. 

தொழுகை முடிய, கூட்டத்தில் அவர்களைக் கவனிக்காத வகையில் அவளை அழைத்துக்கொண்டு வந்தான் அப்துல்… 
தனது காரில் அவளை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு விரைந்தான் மயூரன்..

தன்வீட்டின் சுரங்கப் பாதையை அறியாதவனா?  யாரும் அறியாது அவளைத் தனது விருந்தில்லத்தில் மறைத்து வைத்தான்…

” சீமா, இங்க யாரும் இல்ல, நீ பயப்பிடாம இருக்கலாம்.. உனக்காக எல்லா வசதியும் செய்திருக்கேன் மா.. சாவி என் கிட்ட தான் இருக்கும். அதுனால யாரும் இங்க வரமாட்டாங்க. அவசரத்துல சாப்பாடு வெளிய வாங்க மறந்துடேன்மா… எல்லாரும் தூங்கினதும் நான் உனக்கு சாப்பாடு எடுத்து வரேன்., நீ டி.வி பாரு, புக்ஸ் இருக்கு படிமா! ” என்றான்.

” பரவாயில்லை அண்ணா நான் இருந்துகிறேன். நான் தனிமைக்குப் பழக்கப்பட்டவ தான். அதுனால எனக்கு  ஒண்ணும் தெரியாது அண்ணா!  ”   என மென்னகை சிந்த,

 ” இந்தப் பிரச்சனை எல்லாம் முடியட்டும், உன் ஆசை என்னானு சொல்லு நான் நிறைவேத்தி வைக்கிறேன்,. ஒரு அண்ணனா ” என்றவன் அவளை மட்டும் அங்கு விட்டுத் தன் வீட்டுக்கு வந்தான்.

அங்கு அனைவரும் திருமண வரவேற்பு விழாவிற்காக மேடை அலங்காரத்தைத் தேர்வு செய்துக்கொண்டிருந்தனர்.

அவர்கள் முன் மேடை அலங்காரங்களின் புகைப்படம் இருக்க, அதனைக் குடும்பமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்..

” அண்ணா! சீக்கிரமா வா. உன் ரிசப்சன்னுக்காக ஸ்டேஜ் டெக்ரசனை  வந்து சூஸ் பண்ணு! ” என வாணி கத்த, அவன் பார்வை விஷ்ணுவைத் தொக்கி, நிற்க, அவளது பார்வையும் அவனைக் குத்தி நின்றது.

”  இதோ ரெப்பிரஸ் ஆகிட்டு வரேன் வாணி! ” என்றவன் பத்தி நிமிடங்களில் கீழே இறங்கி வந்தான்.

 ” அண்ணா! விஷ்ணு அண்ணி, நீ வந்தா தான் செலக்ட் பண்ணுவேன், இருக்காங்க. நீயாவது வந்து சீக்கிரமா எடு அண்ணா! ” என்றாள்.. அவள் முன்னே அந்தப் புகைப்படத்தைத் தள்ளி வைத்தாள். அவனோ விஷ்ணுவின் அருகில் வந்து அமர்ந்து, அவளைத் தோளோடு அணைத்தவன், 

” அப்படியா பேபி! மாமாக்காக தான் வெய்டிங்கா! ” என்றதும், தோளை அணைத்திருந்த கையையும் அவனையும் பார்த்தவள், சுற்றியும் பார்க்க, பெரியவர்கள் நமட்டுச் சிரிப்புடன் அமர்ந்திருந்தனர்..

” நடிக்கலாம், ஆனா, ஓவர் ஆக்டிங் வேணாமே!. நீ இப்படி வந்து உட்கார்ந்து, தோள் மேல கைப்போட்டு, பேபின்னு கூப்பிட்டு தான் உன் ஆட்டிங்கை காட்டணும் என்ன அவசியம் மயூரன்? ” என பல்லிடுக்கில் வார்த்தைகளை இட்டு கேட்க, 

” என்ன பண்ண பேபி?! நாம ஆரேன்ஜ் மேரேஜ் ஜோடியில்ல, லவ் மேரேஜ் ஜோடி. சோ ஓவர் ஆக்டிங் வேணுமே பேபி! ” என்றான் அவளைப்போலவே..

” பேபின்னு கூப்பிடுறதை நிறுத்து! நான் ஒண்ணும் பேபி இல்ல! ” என்றாள்.

” ம்ம்.. ஓ,கே அப்ப பொண்டாட்டின்னு கூப்பிடவா? ” எனவும் விழிகளில் கத்தியொன்று இருந்தால் இந்நேரம் அவனது குரவலையைக் கிழித்திருக்கும்…

” வாட் ஆ ஐயஸ் பேபி! ரொம்ப ஷார்ப் இருக்கே! ” என முகத்தை திருப்பிக் கொண்டான்..  அவன் தொடையை நறுக்கென கிள்ளினாள்.. ” அம்மா…. !!!!” என அலற., அனைவரும் பதறி ஒரு சேர “என்னாச்சு ? ”  என  கேட்க, தனது தொடையைத் தேய்துக்கொண்டே அவளை முறைத்தவன்,  ” ஒண்ணில்லை கொசு கடிச்சிருச்சு… ” என்றான்.

” ஆமா, இங்க ஒரே கொசு தொல்லை ” என கேலியாக அவனைப் பார்த்தே கூறினாள்.

” கொஞ்ச பெரிய கொசு போல விஷ்ணு? ” எனவும், ” ஆமா ஆதி மாமா, பெரிசா வளர்ந்திருக்கு ஆனா, பாருங்க மூளையே இல்லை.. ” என்றாள்.

” விஷ்ணு , உன் கண்ணு ஷார்ப் தான் போ! கொசுக்குக் கண்ணு இல்லை, மூளை இல்லைன்னு க்ளையாரா பார்த்து சொல்லுறீயே! ” எனவும் அவனை முறைத்தாள்..

இருவரும்ஒருவருக்கொருவர்  கலாய்த்துக்கொள்ள  பெரியவர்கள் அவர்கள் சந்தோசமாக இருப்பதைப் பார்த்து பூரித்துப் போனார்கள்..

இருவரும் சேர்ந்தே மேடை அலங்காரத்தைத் தேர்வு செய்தனர்.. அது மற்றவர்களுக்குப் பிடித்துப்போக ஒத்துக்கொண்டனர். திருமண வரவேற்புவிழாவைப் பற்றி பேச, அவளுக்குள் இன்னும் தயக்கம் இருந்தது மயூரனைப் பார்த்தே அமர்ந்திருந்தாள். 

அவளது பார்வையை உணர்ந்தாலும் அதற்கு பதில் அளிக்கப் போவதில்லை என்பது போல இருந்துக்கொண்டான்.. இரவு உணவு உண்ட பின்னே அவரவர் அறைக்குச் சென்றனர்..

” மயூ, எப்படி நீ இவ்வளவு கேஸ்வலா இருக்க? நமக்குள்ள எந்த உறவும் இல்லை. இதெல்லாம் தேவை தானா ? ப்ளீஸ் டூ சம்திங்… இந்த ரிசப்சனை நிறுத்து எனக்குப் பிடிக்கல! ”  

“ரிசப்சனை நிறுத்த ரீசன் சொல்லணும் விஷ்ணு! என்ன ரீசனை சொல்ல போற? மயூரன் என் புருசனே இல்ல! நான் வேறொருத்தரைக் காதலிக்கிறேன். இங்க நடிக்க  தான் வந்தேன்னு சொல்லப் போறீயா? ” எனவும் பதிலளிக்காது அமைதியாக நின்றாள்.

” பேசு விஷ்ணு! என்ன சொல்லி இந்த ரிசப்சனை நிறுத்த சொல்லலாம்? எனக்கு அப்போ வேற வழித்தெரியல, நான் போட்ட  திட்டம் சரின்னு பட்டுச்சு . ஆனா இப்ப,.. வேற வழியே இல்லை! எனக்காக நீ அட்ஜஸ்ட் பண்ணிக்கோ விஷ்ணு! ரொம்ப நாள் கழிச்சு என் அப்பாவும் தாத்தாவும் பேசிக்கிறாங்க, எங்க அம்மாவை மதிக்கிறாங்க.  இந்த உண்மை வீட்டுல தெரிந்தால் தாத்தா எங்களை என்ன நினைப்பார்?  மறுபடியும் எங்க வாழ்க்கைப் பழைய நிலைப்போல மாறிடும் விஷ்ணு! வருண் தான் இன்னும் கிடைக்கலயே! ஒரு ப்ரண்டா நினைச்சு இந்த ரிசப்சனை அட்டென்ட் பண்ணு விஷ்ணு  ” என கெஞ்சி கேட்க, அவளிடத்தில் பதிலே இல்லை.. 

பாதி தூரம் வந்த பின் திரும்பி செல்லவும் முடியாது, போகும் பாதையும் தொடர முடியாத நெருக்கடியில் அவளிருக்கிறாள். 

” சரி! இந்த ரிசப்சன் நடக்கட்டும்… இந்தக் குடும்பத்துக்காக, என் முத்துக்காக ஒத்துக்கிறேன்.. ஆனா, ஒரு கண்டிசன். ” என்றாள்.

” என்ன? ” என கேட்க, ” என்னை எல்லாரும் முன்னாடியும் பேபின்னு கூப்பிடுறது!  பொண்டாட்டின்னு சொல்லுறது தோள் மேல கைப்போடுற வேலை எல்லாம் வேணா! எனக்குப் பிடிக்கல” முகத்தைச் சுருக்கி அழகாய் இயம்பினாள்..

அவளை ரசிப்பவனுக்கு ஒரு நிமிட விருந்தென ஆனாது…

” இல்ல நடிக்கிறதான் நடிக்கிறோம்.. பெர்ஃபெக்ட்  நடிக்கலாம் தான், அப்படி அழைத்தேன்…. ” எனவும்

 ” இதென்ன சினிமாவா, உங்க பெர்ஃபெக்சன்னால ஆஸ்கர் அவார்ட் தர போறாங்க பாரு! போதும் போதும் ஓவர் ஆக்டிங் உடம்புக்கு ஆகாது. குட் நைட்.. ” என்றவள் படுத்துக்கொள்ள, 

‘ இருடி, இதே வாயால, என்னை பேபின்னு சொல்லு பொண்டாட்டின்னு சொல்லு சொல்ல வைக்கல. நான் வைக்குண்டத்தோட வாரிசு இல்லைடி..’ என சபதம் கொண்டவன்  உறங்கச் சென்றான்… 

அவள் உறங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டவன், எழுந்து சாவியை  எடுத்துக்கொண்டு  தன்னறைக் கதவை திறந்தான். தண்ணீர் குடிக்க எழுந்தவள் அவன் வெளியே செல்வதைப் பார்த்து தொடர்ந்தாள்.. 

அவனும் கையில் தட்டை எடுத்துக்கொண்டு செல்வதை தொடர்ந்தவள், அவன் விருந்தில்லத்தை திறந்து உள்ளே செல்வதைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவன் வெளியே வெறுங்கையோடு வந்து விருந்தில்லத்தைப் பூட்டினான்.. 

அவன் வருவதைக் கண்டவள் தன்னறைக்குச் சென்று படுத்துக்கொண்டாள்..

அவனும் அவள் உறங்கிறாள் என்று எண்ணிக்கொண்டு உறங்கச் சென்றான்.. ‘யாரா இருக்கும்? ஏன் கெஸ்ட் அவுஸ் மறைச்சு வைக்கணும்? குழப்பமாவே இருக்கே! நாளைக்கு அவன் ஆஃபிஸ் போனதும் தெரிஞ்சுக்கலாம் ‘ என எண்ணிக்கொண்டவள் உறங்கிப்போனாள்.

பகலவன் படை சூழ  அன்றைய நாளுக்கான போர் தொடங்கியது.. அவன் செல்லும் வரை தனக்கு எதுவும் தெரியாதது போலவே காட்டிக்கொண்டாள். அவளுக்கும் தெரியாது என்று எண்ணியவன் தன் அன்னையிடம் கூறி சாவியையும்  சீமாவிற்கு காலை உணவையும் கொடுத்திடுமாறு கூறிவிட்டு விரைந்தான்.. 

அவரோ மறந்து சாவியை ஹாலில் வைத்தவர், சீமாவிற்கு சாப்பாடு எடுக்கச் செல்ல, அந்தச் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தாள்.. 

கதவைத் திறந்து உள்ளே நுழைய, சீமாவோ மயூரன் என ‘  அண்ணா ‘ என்று  எதிர்க்கொள்ள  வந்ததோ விஷ்ணு.. 

” நீங்க யாரு? ” என அவள் கேட்க. ” அதை நான் கேட்கணும்? உன்னை ஏன் மயூரன் இங்க தங்க வைக்கணும்? நீ எங்க இருந்து வர்ற? ” என கேட்க,

” அக்கா… நான்..” எனவும் அதற்குள் பதறியடித்துக்கொண்டு வந்தார் முத்து.. 

” விஷ்ணு! நீ இங்க என்ன பண்ற? எதுக்குமா நீ இங்க வந்த? ” என்றார் சாப்பாட்டை சீமாவின் கையில் கொடுத்தவாறு.. ” அத்தை உங்களுக்கு தெரிந்த பொண்ணா?  ஏன் இங்க இருக்கணும்? நம்ம வீட்டுக்குக் கூட்டிட்டு வராமா இங்க ஏன் தங்க வைக்கணும்? “

” நான் உனக்கு எல்லாத்தையும் சொல்லுறேன் மா. நீ இங்க இருக்க வேணாம்.. ” என்று அவளை அழைத்துக்கொண்டு கதவைப் பூட்டிவிட்டு வந்தார்.. 
அவர் முழுவதுமாக கூறமால் மேலோட்டமாக கூறினார்.அவளும் அமைதியாக வந்தாள்.. 

இங்கோ மேத்தாவும் மயூரனும் கமிஷ்னர் ஆபிஸ்ஸில் காத்துக்கொண்டிருந்தனர்… 

” சார், உங்களை உள்ள கூப்பிடுறார்.. உள்ள போங்க! ” என்றார் கான்ஸ்டபில்.. 

” மே ஐ கமீன் சார்… ” எனவும் ” எஸ் கமின்  ” குரலைக் கேட்டதும் இருவரும் நுழைந்தனர்.. 

” டேக் யூர் சீட்  ” என்றான் இருப்பிடத்தைக் காட்டி.. ” அவர்களும் அமர மயூரனோ பெயர் பலகையில் அவனது பெயரைக் காண அதில் நிசாந்தன் ” என்றிருந்தது.
” எஸ் சொல்லுங்க… ” எனவும்

மேத்தா, ” சார், ஐ யம் கிருஷ்ணன் மேத்தா என். சி நியூஸ் சேனல் இருந்து வந்திருக்கேன். நான்  சேனலோட ப்ரோடியூசர் . ஹிஸ் இஸ் மயூரன் டேரக்டர்..  ” என்றார்

 ” யா… உங்க சேனலைப் பத்திக் கேள்வி பட்டிருக்கேன்.. டி. ஆர்.பிக்காக சேனலை நடந்தாம சமூகப்பிரச்சனையும்  சமூகத்தில நடுக்கிற பிரச்சனையும் உடன்குடன்  உண்மை மட்டும் ஒளிப்பரப்புற சேனல்.. சில அரசியல் பிரமுகரின் முகத்திரையை கிழிச்சிறீக்கிங்க, தொழிலதிபரோடு நிலழுலக வாழ்க்கை திரையில் காட்டிருக்கீங்க….  இந்தக் காலத்தில்  அப்படி யாரும் இருப்பத்தில்ல சித்தரித்து தான் போடுறாங்க பொய்யையும் உண்மைன்னு. யூ டன் குட் ஜாப்… ” என்று பாராட்டினான்.

 ” எஸ் சார், எங்க ஊழியர்களோட நேர்மையான உழைப்பு தான் காரணம்.. தன்னுடைய வேலை நேர்மையாகவும் ஒரு சமூக சேவையாகத் தான் பார்க்கிறாங்க சார். இதான் காரணம் நாங்க இவ்வளவு தூரம் வளர,  பெயரும் கிடைச்சிருக்கு மக்கள் மத்தியில்..  ”   என்றார்,

” குட் ஜாப்.. ” என்றான்.. 

மயூரன், ” சார்  நாங்க ஒரு வழக்குப்  பத்திதான் பேச  வந்திருக்கோம் சார்…” என்றவன் முழுவதுமாக கூற ஆரம்பித்தான்.

இங்கோ கபியுடன் டாப்பில் விளையாடிக்கொண்டிருந்தாள் விஷ்ணு, ” கபி, நான் ஒரு பெயர் சொல்லுறேன். அவங்களைப் பத்தின முழு விவரம் கிடைக்குமா? ” என கேட்க, 

” நேம் சொல்லு விஷ்ணு! கூகுள் சேர்ச் பண்ணா கிடைக்கும். அவங்க யாரு சிலபிரெட்டியா? கிரிக்கெட்டரா? ஸ்போர்ட்ஸ் மேனா? யாரு விஷ்ணு அவங்க? ” 

” அவங்க ஒரு ரிப்போட்டர் பெயர் வருண்… ” எனவும்.. அவனும் கூகுல் ஆண்டவரிடம் பெயரை இட்டு கேட்க.

வருண் என்ற பெயரைக் கொண்டு நிறைய நபர்கள் வர, அதில்  ரிப்போட்டராக வருண் பேசிய யூடூப் வீடியோவும் வந்தது. அதை க்ளிக் செய்ய, மும்பையில் ஹாஜி அலி புகழ் பெற்ற மசூதியைப் பற்றி பேசும் வீடியோ இருந்தது.
அதனைப் பார்த்தவள் கண்கலங்கிப் போனான்.. 

” விஷ்ணு, இவர் மயூ சித்தப்பாவோட ப்ரண்ட் வருண். இங்க நம்ம வீட்டுக்கு வந்திருக்கார். என் கூட விளையாடுவார் இந்த அங்கிள் ” என அவன் கூற அதிர்ச்சியில் உரைந்து போய் அமர்ந்திருந்தாள்..

இங்கே கம்பளைண்ட் கொடுத்துவிட்டு மயூரனும்  மேத்தாவும்   காரில் வர, எதிரே  வந்த லாரி அவர்களின் காரை அடித்து தூக்கியது…

கொள்ளைத் தொடரும்