பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 21

 

 

கமிஷ்னர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிசானின் மேஜை முன் மும்பை தாதாக்களின் விவரங்கள் அடங்கிய கோப்பைகள் அடக்கிவைக்கப்பட்டிருந்தது…. 

நிசாப்பையும் அவனது ஆட்களையும் பற்றி அறிய வேண்டும்.. அதை மட்டுமே தனித்து கேட்டால் நிச்சயம் சந்தேகம் எழும் என்பதால் அனைத்து தாதாக்களின் விவரங்களையும் கேட்க, அங்கே அவன் முன்னே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது,. 

ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டே வந்தவன். காமத்திபுரா எழுத்தைக் கண்டதும் அந்தக் கோப்பையை எடுத்தான்… அதில் நிசாப்பை பற்றியும் அவனது அடியாட்களைப் பற்றியும் விவரம் இருந்தது..

” இந்த நிசாப், மேல இவ்வளவு கம்பளைண்ட் இருந்தும் ஏன் அண்ணா இன்னும் அக்ஷ்ன் எடுக்கல ? ” என வினவ, பக்கத்தில் இருந்த கான்ஷ்டபில் வெளியே எட்டிப் பார்த்தவர், ” சார்… காமத்திபுரா ஒரு ரெட் லைட் ஏரியா சார்… இங்க பணம் புழக்கம் அதிகம், போதை விக்கிறது இருந்து விபசாரம் வரைக்கும் நடக்கும் சார்.. நிசாப் ஆட்களைக் கைது பண்றேன் போற போலீஸ்ஸைப்  பணத்தைக் காட்டி, இல்ல பெண்களைக் கூட்டிக் கொடுத்து தன் பக்கம் இழுத்திடுறான்… அதையும் மீறி அவனை அரெஸ்ட் பண்ற போலீஸ்ஸைக் கொன்னுப் போட்டுறான். உயிருக்குப் பயந்து அவனை யாரும் அரேஸ்ட்  பண்றது இல்ல சார்… ” என்றார்..

“ஏன் காமத்திபுரா ரெட் லைட் ஏரியாவா ஆச்சு? ஒரு ஏரியவே எப்படி அண்ணா? ” 

” சார்,  காமத்தின்னா வேலைக்காரி அர்த்தம் சார்.. ஆங்கிலேயர் காலத்தில முன்னாடி வாழ்ந்த மன்னர் பல ஊர்கள் இருக்க மக்களை கட்டத்தொழில் செய்ய  அழைச்சுட்டு வந்தாங்க, அதுக்குப்புறம் ஆங்கிலேயர் ஆட்சி வந்தது, அங்க வேலைப் பார்க்கிற பெண்களை தன் சுகத்துக்காக கற்பழிச்சாங்க. ஆங்கிலேயர் ஆட்சி போனதும். மும்பை மன்னர்கள் கையில வந்ததும் அந்தப் பெண்களை விட்டு வைக்கல அவங்களும் அனுப்பவிக்க ஆரம்பிச்சாங்க, அதுனால அங்க இருக்க பெண்கள் அதே தொழியைச் செய்ய ஆரம்பிச்சிட்டாங்க…, இதுல கொடுமையான விசயம், அங்க குடும்பமா மக்களும் வசிக்கிறாங்க, அந்த ஏரியாவைத் தாண்டி பள்ளிக்கு வரணும் குழந்தைகள்..  அந்த இடம் சாக்கடையானது ஆனது தான் சார்.. மாத்த முடியாது.. வெளியூர்ல இருந்து  பெண்களைக்  கடத்தி இங்க வித்து காசு பார்க்குறாங்க, போதை மருந்து விக்கிறது, இன்னும் நிறைய சார்… அந்தப் பக்கம் போகவே பயமா இருக்கு.. ” என்றவர் புலம்பவே…

“அந்த எரியாவுக்கு போலாமா?” எனவும்.
 ” சார்.. ” என தயங்க, ” வாங்க சுவாமிநாதன் போலாம் ” என்று அவரையும் அழைத்துச் சென்றான்.

இருவரும் மப்டியில் அங்குச் சென்றனர்..
” சார், இங்க நாம வந்த விசயம் நிச்சயம் நிசாப் காதுக்குப் போயிருக்கும் சார்.. ” என்றார் சுவாமி…

” ஏன் சுவாமி, அப்படி சொல்லுறீங்க? ” எனவும்.

” சார், இங்க ஒரு துரும்பு வெளிய போனால் கூட நிசாப் காதுக்குப் போயிரும். அந்த அளவுக்கு ஆட்களை வச்சிருக்கான்… ” என்றார்., இதையே தான்  மயூரனும் அவனிடம் சொல்லிருந்தான்.. 

மயூரனுக்கு  விபத்தானதைக் கேட்டதும் அவனைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்திருந்தான் நிசான்…

“எப்படி ஆச்சு மயூரன்?  இது ஆக்சிடென்ட் தானா ? ” என வினவ, ” எனக்கு இது ஆக்ஸிடேன்ட் மாதிரி தெரியல சார்.. இது கொலை முயற்சி போல தான்  தெரியுது.. அந்த லாரி எங்க காரை இடிக்கிற நோக்கத்தோடு தான் சார் வந்தது.. இது நிசாப்போட வேலையாகத் தான் இருக்கும்.. ” என்றான்.

” எப்படி சொல்லுறீங்க மயூரன்? உங்களை  அவனுக்குத் தெரியுமா? இந்தக் வழக்குல நீங்க சம்பந்தப்பட்டிருக்கீங்க எப்படி அவனுக்குத் தெரியும்? ” என வினவ,

 ” இல்லசார்.. அந்த ஏரியா முழுதும் அவன் கண்பார்வையில  தான் இருக்கு… நாங்க சீமாவைப் பத்தி விசாரிச்சது நிச்சயம் அவன் காதுக்குப் போயிருக்கும்.. அவன் எங்களையும் பத்தி விசாரிச்சு இருப்பான். எங்க நல்ல நேரம் சீமாவைப் பத்தி அவனுக்குத் தெரியாது. அவனுக்குத் தெரியாமல் நாங்க அவளைக் காப்பாத்தினது அதிசயம் தான் சார்.. வருண் வேலை செய்த என்.சி நியூஸ் சேனல் நானும் வேலை செய்வது அவனுக்குத் தெரிய வந்திருக்கும். இதெல்லாம் முடிச்சுப் போட்டவன், கண்டிப்பா என்னால அவனுக்கு ஆபத்து நினைச்சு எங்களை கொல்ல முயற்சி செய்திருக்கலாம். எங்களை பலோவ் பண்றவன் நாங்க உங்களைப் பார்த்து வந்ததையும் சொல்லாம இருப்பானா? இது கொலை முயற்சி தான் சார்.. ” என்றான் தீர்க்கமாக

“நீங்க சொல்வதைப் பார்த்தால், நேரடியாக அவனைச் சென்று பிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஆம் எ ரைட் மயூரன் ? ” எனவும் 

” எஸ் சார்.., ப்ளான் பண்ணி தான்  மூவ் பண்ணணும்..  நீங்க அரேஸ்ட் பண்ணனும் நினைத்தாலே அவனுக்கு அது இன்பர்மெசனா போயிடும். அவன் தலைமறைவாக வாய்ப்பு இருக்கு சார்.. ” என்றான்..

” ஒ.கே மயூரன். நீங்க உங்க ஹேல்த் பார்த்துக்கோங்க, நான் என் கடமையைப் பார்க்கிறேன்.. ” என்றவன் அங்கிருந்து சென்றான்..

காமத்திபுரா அருகே சொற பசார் வழியே உள்ளே நுழைந்தவன். காமத்திபுரா முழுக்கச் சுற்றினான். ஆங்காங்கே, நிசாப்பின் ஆட்கள் இருப்பதையும் அறிந்தான்…  

” சார்.. இன்னும் கொஞ்சம் நேரம் நாம இங்கிருந்தால் நம்மலையும் கொன்றுவாங்க சார் வாங்க போலாம்..” தன் முகத்தில் வழிந்த வியர்வை துளிகளைத் துடைத்தவாறு.

 ” நாம ஏதோ பேய் வீட்டுக்கு வந்தது போல பயப்பிடுறீங்க! மும்பைக்கு வந்த  நான் சுத்திப் பார்க்க கூடாதா? நாம இங்க போலீஸ்ஸா வரல சுவாமி நாதன்.. சொற பசாரைச் சுத்தி பார்த்து எதாவது வாங்க தான் வந்திருக்கேன்..   நீங்களும் உங்க வீட்டுக்கு எதாவது வாங்கிட்டு போங்க! ”  என்றான் அமர்த்தலாக,
அவரோ புரியாமல் நிசானைப் பார்த்தார்., ” என்னைப் பார்க்காம , பொருளைப் பார்த்து வாங்குங்க அண்ணா. ” என்றான்..

அதன் பின் சில பல பொருட்களோடு இல்லம் திரும்பியிருந்தான்.. அந்த ஏரியாவின் வரைபடம் போலவே வரைந்தவன், நிசாப்பின் ஆட்கள் நின்ற இடத்தை எல்லாம் குறித்து வைத்தான்… நிசாப்பைக் கைது செய்ய திட்டம் தீட்டினான்..
 
இன்றோடு  மயூரன் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் ஆனது… புருசனைப் பொண்டாட்டி தான் கவனிக்க வேண்டும் என்றதும் மயூரனை விஷ்ணுவே கவனித்துக்கொண்டாள்.. அவனிடம் தனக்குள் எழுந்த கேள்விகளைக் கேட்க எண்ணும் பொழுதெல்லாம் அவனோடு யாராவது இருப்பார்கள்.. அவளும் தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தவளுக்கு அந்த நேரமும் வந்தது.. இரவு உணவை அவனுக்காக எடுத்து வந்தவள், அவனருகே அமர்ந்தவள் அவனுக்கு ஊட்டவும் செய்தாள்.. 

” மயூ, நான் உன்கிட்ட ஒண்ணு கேட்கவா? உண்மையை மட்டும் தான் சொல்லணும்… ” என்று பீடிகைப் போட்டாள். அவளது பீடிகை உள்ளுக்குள் உதறல்கள் ஏற்பட்டாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்  ” கேளு விஷ்ணு, எனக்கு அதைப் பத்தி தெரிந்தால் உண்மையை மட்டுமே சொல்லுறேன் ” என்றான்.

” வருண், உன் ப்ரண்டா மயூரன்? ” என்றதும் தொண்டைக் குழாய் அடைத்துக்கொண்டு உணவை உள்ளே விடாமல் சதி செய்யவே வெளியே துப்பினான். அவனது தலையை தட்டியவள். ” மெதுவா மயூரன்!  நீ பயப்படுற அளவுக்குப் பெரிய கேள்வியெல்லாம் கேட்கல, வருண் உன் ப்ரண்டா? ஏன் என் கிட்ட இருந்து மறைச்ச? இறந்த போன உன் ப்ரண்ட் தான் வருணா? ” எனும் போதே அவள் கண்களில் கண்ணீர் வடிய, அவனோ பேச்சற்று இருந்தான்… 

” அமைதியா இருக்காத மயூ, உண்மையைச் சொல்லு, அது வருண் இல்லைன்னு சொல்லு… ஏன் என்கிட்ட உண்மையை மறைச்ச? வருண் எங்க இருக்கான் சொல்லு. எனக்கு பயமா இருக்கு.. ப்ளீஸ் சொல்லு! “என அவளது விசும்பல்கள் அழுகையாக மாற, அவளை தனது இடதுகையால் அணைத்தவன்..

” எனக்கு கொஞ்ச நாள் டைம் கொடு விஷ்ணு! நான் எல்லாத்தையும் சொல்லுறேன்.. இப்ப எல்லாத்தையும் சொல்லுற நிலமையில நான் இல்லமா ப்ளீஸ்  ” எனவும் அவன் அணைப்பிலிருந்தவாறே! ” அது வருண் இல்லை தானே மயூரன்.. அதை மட்டும் சொல்லு… “என்றதும் அமைதியாக அவன் கண்ணீர் அவன் நெஞ்சில் சாய்ந்திருக்கும் அவளது கன்னத்தில் பட, படக்கென எழுந்தவள், ”  என் அழுகிற என்னாச்சு? உண்மையை சொல்லு மயூரன்.. ” என அவனிடம் வார்த்தைகளே வரவழைக்க எண்ண, அங்கே வந்தார் லட்சுமணன்..

” மயூரன்.. ” என அழைக்க. இருவரும் தள்ளி அமர்ந்தனர்.. மயூரனும் விஷ்ணு இருவரும் தங்கள் கண்களைத் துடைத்தும் கொண்டனர்.. 

 ” இப்ப எப்படி இருக்கு மயூரன்? ரூம்லே அடைஞ்சு கிடைக்காம வெளிய வாப்பா! ” என்றார்.

” விஷ்ணு,அவனை நீ  தான் வெளிய கூட்டிட்டு வரணும்.. இனி அவனை கீழ இறங்கி வந்து சாப்பிட சொல்லு, நீயே அலையாதமா… ” என்றார்..
இருவரும் தயங்கி இருக்க, மயூரனை கையோடு அழைத்துச் செல்ல, அவள் கேள்விக்குப் பதில் கிடைக்காமலே போனது… 

அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்திற்கு சென்றார் லட்சுமனன்… ” உன் கிட்ட பேசணும் மயூரன்… ” 

” சொல்லுங்கப்பா… என்ன பேசணும்? ” 

” உன் மாமா,மும்பைக்கு வந்திட்டு இருக்காராம்.., இப்ப என்ன பண்ண? உங்க அம்மா, உங்க திருமண வரவேற்பு விழாக்கு அவரை அழைச்சிருக்கா! அவரும் ரயில்ல வந்திட்டு இருக்கார். உனக்கு வேற கையில அடிப்பட்டிருக்கு. இன்னும் அப்பா இந்த ரிசப்சனை பத்தி எதுவும் சொல்லல… அவரை வர வேண்டாம் சொல்லவும் முடியாது.. வந்தா, விஷ்ணுக்கு நாம யாருன்னும் நம்ம திட்டமும் தெரிந்து விடும்.. அவளுக்கு மட்டுமில்ல அப்பாவுக்கும் உண்மை தெரிந்து விடும்.. நாம கழுத்துபிடியில் இருக்கோம்.. என்ன செய்ய மயூரன்? ” தன் தந்தை எங்கே மீண்டும் கோபித்துக்கொள்வாரோ என்ற அச்சத்தில் அவர் கேட்க.

” இனி எதையும் மறைக்க வேணாம்ப்பா!  தெரியணும் இருந்தால் தெரியட்டும்… என்ன நடக்கணும் இருக்கோ நடக்கட்டும்ப்பா! நான் எல்லாத்தையும் சந்திக்கலாம் முடிவு பண்ணிட்டேன்., எத்தனை நாள் தான் மறைக்கிறது.. என்னால முடியலப்பா.. மூச்சு முட்டுது.. வருண் என் ப்ரண்ட் தானா என் கிட்ட கேட்கிறா அப்பா? அவளுக்கு வருண் என் ப்ரண்ட் தெரிஞ்சிருக்கு!  எப்படியும் இரண்டு மூன்று நாள்ல விசயம் டீ.வி முழுமாக தெரிய வரும். தெரிஞ்சுகட்டும் பா… ” என்றான்.

அவனது தோளை அழுத்தியவர். ” பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளையை சேரும் சொல்லுவாங்க. நாங்க செஞ்ச பாவம் உன்னைக் கஷ்டபடுத்தே மயூ!” என்றவர் கலங்கிப் போக  ” என்னப்பா இப்படி பேசுறீங்க? நீங்க யாருக்கும் எந்த துரோகமும் செய்யல, இது எனக்குன்னு எழுதி வச்சது அதன்படிதான் நடக்கும்..  ” என்றான்

 ” மயூ! எனக்கும் உன் அம்மாக்கும், உன் சந்தோசம் தான் முக்கியம். அதுக்காக நாங்க என்ன கஷ்டத்தையும் சந்திக்க தயார்.,விஷ்ணு கிட்ட கெஞ்சணுமா? கால்ல விழுகணுமா? அவ உன்னை ஏத்துக்க நாங்க என்ன பண்ணணுமோ பண்றோம் மயூ! நீ எங்களுக்கு முக்கியம் டா.. ” என்றவர் அழுக, 

” அப்பா! அழாதீங்க! ப்ளீஸ்! விஷ்ணுக்கு நான் புரிய வைப்பேன் அவ என்னை ஏத்துப்பா! ஆனா அது உடனே நடக்காது பா… கொஞ்ச நாள் ஆகும் பா.. அவளுக்கு டைம் கொடுக்கணும்…. பொறுமைப்பா! ” எனவும்… அவரும் ஆமோதித்தார்.. 

இருவரும் சேர்ந்தே வந்தனர்… அதன் பின் அனைவரும் சிரித்து பேசி மகிழ்ந்திருந்தனர்.. ரிசப்சனை தள்ளி வைக்குமாறு மயூரன் தாத்தாவிடம் கோரிக்கை வைக்க அதுவும் சரியென பட, ஒத்துக்கொண்டார்.. சினேகப் பார்வையை உணர்ந்தான் விஷ்ணுவிடம் மயூரன்…
 
அவள் அதன் பின் அந்தக் கேள்வியை கேட்டுக்கொள்வில்லை.. அவனும் அதைப் பற்றி பேசிக்கொள்ளவும் இல்லை… 

நிசான் தனது விசாரனையும் மறைமுகமாகவே தொடங்கினான்.. சீமாவிடமும் விசாரித்தான்.. காமத்திபுராவில் தனது ஆட்களை அனுப்பிவைத்தவன்.. நிசாப்பையும் அவனது ஆட்களையும் வளைத்து கூண்டோடுப் பிடித்தான் நிசான்… 

அவனைக் கைது செய்ய, நிசானைப் பேட்டி எடுத்தனர்…. அதில் ஷ்பனா வழக்கிலும் மேலும் ரிப்போட்டார் வருண்நிர்மலையும் கொலை செய்தற்காக கைது செய்தோம்  என்று பேட்டிக் கொடுக்க, அன்றைய நாளின் ப்ரேக்கிங் நியூஸ்ஸாக இருந்தது…

அன்றைய நாளும் பலராமனும் மும்பை வந்து சேர, அவரை சந்திக்க முத்துவும் கோவிலுக்குச் செல்வதாக கூறினார். தானும் உடன் வருவதாகக் விஷ்ணு கூற முத்துவோ கலக்கம் கொள்ள மயூரனோ அவளை அழைத்து போகச் சொன்னான்.

கடவுளை வணங்கிவிட்டு முத்து வர,விஷ்ணுவோ சாதாரணமாகவே வந்தாள்.. கோயிலுக்குச் சென்று வணங்கி விட்டு இருவரும் வெளியே வர எதிரே தன் மகளைப் பார்த்து கண்கலங்கி நின்றார் பலராமன்… 

முத்து தயங்கி நிற்க, “முத்து, ஏன் அங்க நிக்கிற? வா போலாம்.. ” 

” விஷ்ணு, என் அண்ணன் வந்திருக்கார்… ” என்றதும் அவள் காண, முத்துவின் அண்ணனாக தன் தந்தையை கண்டதும் அதிர்ந்தாள்.. 
அவள் அந்த அதிர்ச்சியை ஏற்பதற்குள் அடுத்த அதிர்ச்சி அவளுக்கு கிடைத்தது..

அருகே இருந்த சோனி கடையிலிருக்கும் தொலைக்காட்சி பெட்டிகளில் வருணின் இறப்பையும் நிசாப் கைது விவகாரத்தையும் ஒளிப்பரப்ப அதைக் கண்டவள் அங்கே மயங்கி சரிந்தாள்,..

கொள்ளை தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!