பெண்ணியம் பேசாதடி – 18
“என்னடி இது படுத்துற சத்தியமா முடியல ராட்சசி இப்போ பேச போறியா இல்லையா” தனது நிலையை மறந்து ஒரு மாதமாகத் தன்னிடம் சண்டையிட்டுப் பேசாமல் இருக்கும் காதல் மனைவிடம் கெஞ்சி கொண்டு இருந்தார் வாமணன்.
தொழிற்சாலை வேலைகளை வளவனிடம் முழுதாகக் கொடுத்து விட்டு மேற்பார்வை மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தார்.அதுவும் மனமே இல்லாமல் இன்னும் சிறிது காலம் வளவன் சற்று கற்றுக் கொண்டு முழுமையான பின் வர வேண்டும் என்பது அவர் எண்ணம்.
ஆனால் பணிச்சுமை அவரைத் தாக்க எங்கே குடும்பத்தைக் கவனியாமல் விட்டுவிடுவமோ என்ற எண்ணத்தில் இருந்தவரை, மேலும் அவரது எண்ணத்துக்கு வலு சேர்ப்பது போல் பேரிளம் பெண் பேசாமல் இருக்க.ஒரு முடிவே செய்து விட்டார் வாமணன் இனி குடும்பம் மட்டுமே முதன்மை என்று.
மகனிடம் தொழிலை கொடுத்துவிட்டு அவனையும் நன்கு கவனித்துக் கொண்டார்.ரமேஷின் உதவியுடன் அவனும் இறுக பிடித்துக் கொண்டான்.இனி அவன் முன்னேறி விடுவான் என்ற நம்பிக்கையில் முழுக் காதல் மன்னன் ஆகிவிட்டார் எழுத்தாளர்.
அன்று கஞ்சனையைச் சமாதானம் செய்ய அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய சோர்ந்து தான் போனார் மனிதர்.அவருக்குக் கஞ்சனையின் மனநிலை நன்கு புரிந்தது,அவளது கோபம் நியாயமே என்று அவர் எண்ண, கோபம் சற்று மட்டுப்பட அமைதி காத்தார்.
ஆனால் அது ஒரு மாதம் வரை தொடருமென்று பாவம் அவர் கனவிலும் எண்ணவில்லை.என்னடா இது எழுத்தாளருக்கு வந்த சோதனை.
“இப்போ எதுக்கு என் பின்னாடியே வரீங்க”
“என்னடி இது கேள்வி உன் பின்னாடி வராம” எதிர் கேள்வி கேட்டவரை முறைத்து
“ஓணக்கம் பேச சொல்லிய தரணும் உங்களுக்கு.எனக்கு வேல இருக்கு உங்க பொண்ணு தூங்கும் போதே நான் வேல பார்த்தான் உண்டு இல்லாட்டி சுத்தம் நகருங்க”
“நீ ஏன் பார்க்கணும் என்ன வேல சொல்லு மாமா பார்க்குறேன்” என்றவரை மார்கமாகப் பார்த்து வைத்தால் பேரிளம் பெண்.
“ஏன் உங்களுக்கு ஆபீஸ்ல வேல இல்லையா”
“அதெல்லாம் என் மகன் பார்த்துப்பான் இனி நான் வீட்டுல தான்
மகன், மகள், எழுத்து, கவிதை, காதல் ,காமம் என்று கண்ணடித்தவர் கூடுதல் தகவலாக ரொம்ப நாள் ஆயிடுச்சு எழுதி அதான் கவிதை எழுத போறேன்”.
ஐ!……. சண்டை எல்லாம் காற்றில் கரைந்து போகத் துள்ளி குதித்துக் கைகளைப் பற்றிக் கொண்டாள் பேரிளம் பெண்.அவளது குதூகலமும் சிரிப்பும் வாமணனை புரட்டி போட.
“என்னடி கோபம் இல்லையா” கண்கள் சொருக பேரிளம் பெண்ணிடம் கிறக்கமாகக் கேட்க வேகமாகப் பதில் தந்தாள்.
“இல்ல.. இல்ல.. போய்டுச்சு அதவிடுங்க எப்போ எழுத போறீங்க முழுசும் முடிக்கும் வரை என்னால காத்திருக்க முடியாது.நீங்க ஒவ்வொரு கவிதை எழுதி முடிக்கும் போதும் எனக்குக் காட்டுங்க” சிறு பிள்ளையின் ஆர்ப்பரிப்பு அவளிடம்.
“நான் காட்டுறேன் அதுக்கு நீ என்ன தருவ” வில்லங்கமான கேள்வி என்பதை அறியாது பேரிளம் பெண்ணும்.
“என்ன வேணும்”
“சொல்றேன் என் கவிதையின் தலைப்புப் ‘பெண்ணியம் பேசாதடி’ ரொம்ப நாள் என்ன படுத்தின,படுத்திகிட்டு இருக்க,படுத்த போற ஒரு ராட்சிய வச்சு எழுதுற கவிதை அதனால் புத்தகம் போட முடியாது.ஏன்னா என் கற்பனை என் கண்ணனுக்கு மட்டுமே சொந்தம்” என்றவர் பார்த்து.
ஆர்வம் மிகுதியில் அவரைத் தன்னைப் பற்றித் தான் பேசுகிறார் என்பதை அறியாது “ப்ளஸ்.. ப்ளஸ்.. எழுத்தாளரே”
“அப்போ ஒன்னு செய் ஒவ்வொரு கவிதை முடியும் போதும்…. என்று நிறுத்தியவர் பேரிளம் பெணின் கண்களைப் பார்த்தவாறே நெருங்கி வந்து மெல்லிய மிக மெல்லிய குரலில் சொல்ல பேரிளம் பெண் உணர்ச்சி தாங்காமல் உதடு கடித்து கண்ணில் நீர் வடிய அவரைத் தள்ளி விட்டு ஓடிவந்தார்.
அவள் ஓடுவதைப் பார்த்தவாறே “ஏய்! ஓகேவான்னு சொல்லிட்டு போடி” என்று அவரும் ஒரு துள்ளலுடன் அவளை துரத்தி வர சரியாக ரமேஷின் மேல் மோதிவிட்டார்.
அவனது நேரமோ இல்லை அவரது நேரமோ ரமேஷுக்குப் பக்கத்தில் தான் வளவன் நின்று கொண்டு இருக்கிறான்.அந்தக் குடும்பமே அவனது வயித்தெறிச்சலை கொட்டி கொண்டால் அவனும் என்னதான் செய்வான்.
வாமணனை கோபமாகப் பார்த்தவன் பல்லை கடித்துக் கொண்டு “என்ன விளையாட்டு இல்ல என்ன விளையாட்டுனு கேக்குறேன். வயசுக்கு தகுந்த மாதிரி என்னைக்காவது இந்த வீட்டுல நடந்து இருக்கீங்களா.எல்லாம் தலை கிழ” கோபமாக வாமணனிடம் பேச.
காதை குடைந்த வாறே “என்னடா ரொம்பச் சத்தமா இருக்கு” கையில் குழந்தையை ஏந்தி வந்தால் காஞ்சனை.
அவளது பேச்சை கேளாதவன் போல் குழந்தையை வாங்கிக் கொண்டு ஓடியே விட்டான் ரமேஷ். இவள் பேசினால் இன்று ஒரு போர்க்களம் உறுதி என்பதால் பூ செண்டை கையில் ஏந்தி ஓடிவிட்டான்.அவனது பாவனையில் அனைவருக்கும் சிரிப்பை தர வாய் விட்டு சிரித்தனர் அனைவரும்.
பிறகு அனைவரும் ஒன்றாக நேரத்தை செலவிட வளவன் மட்டும் தனியாகக் கழண்டு கொண்டான்.அரிவை பெண்ணிடம் பேச வேண்டுமே ஐந்தாண்டு திட்டம் பற்றி.
அரிவை பெண் பணி முடிந்து வர சரியாக அங்கே பிரசன்னம் ஆனான் காதல் மன்னனின் தவப் புதலவன்.தனது முன் நின்றவனை மருண்ட பார்வை பார்த்தவள் எச்சில் கூட்டி விழுங்க.அவனோ அவளை விழுங்கி கொண்டு இருந்தான்.
“என்… என்ன வேணும்” என்றவளை பார்த்து.
“முதல என்ன பார்த்து பயப்புடுறத நிறுத்து நான் என்ன சிங்கமா? உங்கிட்ட கொஞ்சம் பேசணும் வரியா”
அவள் தலையை வேகமாக ஆட்டி மறுக்கச் சிறுதும் யோசனையின்றி அவளது கை பற்றி இழுத்துச் சென்றான்.மறுக்கக் கூட முடியாத அதிர்ச்சியில் அரிவை பெண்.
காரில் அவளை ஏற்றியவன் மருத்துவமனையில் இருந்து சிறுது தூரம் ஒதுக்குப் புறமாகக் காரை நிறுத்தி, அவள் புரம் திரும்பி அமர்ந்தவன் “என்ன பார்த்தா எப்புடிடீ தெரியுது உனக்கு. ஆசையா பேச வந்தா பயந்து சாகுற ஆள பாரு.நீ எப்புடி நர்சிங் படுச்ச” அவன் கேட்கவே தலையைக் கவிழ்ந்து கொண்டாள்.
அவளது மௌனம் சோதிக்க “எதாவது பேசு மஹா”
அரிவை பெண்ணிடம் மௌனம் மட்டுமே. அவன் எதிர் பார்த்தது தான் என்றாலும் அவனால முடியவில்லை.காதலில் அத்துமீறும் ஆசையும் அவனுக்கில்லை எனவே பொறுமையாக அவளைக் கையாள எண்ணி.
“மஹா நான் சொல்லுறத நல்ல கேட்டுக்கோ இனி நான் உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.என்னால வேலைய விட்டுட்டு உன் பின்னாடி சுத்த நேரமில்லை அதுக்காக உன்ன விடவும் முடியாது.அஞ்சு வருஷம் டைம் தரேன் ஒழுங்கா நல்ல பிள்ளையா என்ன கல்யாணம் பண்ணிக்கணும் சரியா”.
அவனது பேச்சில் வெடுக்கெனத் திரும்பி அவனது கண்களை ஒரு நொடி பார்த்தவள் மீண்டும் தலையைக் குனிந்து கொண்டு சம்மதமாகத் தலை ஆட்டினாள்.அதுவே போதும் என்று எண்ணியவன் அவளைச் சிறுது நேரம் கண்களில் நிரப்பிச் “சரி கிளம்பு பார்த்து போ கவனம் “என்றவன் அவள் இறங்கியவுடன் காரை கிளப்பிச் சென்றான்.
அவன் சென்ற திசையை நம்பாமல் பார்த்து கொண்டு இருந்தால் அரிவை பெண் இக்காலத்தில் அவன் சொல்வது சாத்தியமா.இல்லை இளமை பிதற்றலா என்ற குழப்பத்தில் அவள்.அவளுக்கு யார் சொல்வது வாமணன் மகன் வளவன் என்று காதல் பித்தனின் மகன் அல்லவா வாக்கு பொய்க்கும்மா என்ன.
—————————————————————————————————
வாமணன் தனது முதல் கவிதையை எழுதி விட்டார் அதற்கு அவர் எடுத்து கொண்ட நேரம் தான் அபாரம் அரை மணி நேரத்தில் வடித்த கவிதை.அன்றிரவு மகனிடம் சிறுது நேரம் தொழில் பேசி,மகளை தூங்க செய்து,நடு சாமம் காத்திருந்து தனது பேரிளம் பெண்ணை அள்ளி கொண்டு அந்தபுரத்திற்கு சென்றார் (என்னது அந்தபுரமா?………. அதாங்க புத்தக அறை)
பாதி தூக்கத்தில் முழித்த காஞ்சனை “என்ன எழுத்தாளரே” கண்கள் சொருகி சொக்கும் விழிகளில் கேட்க “கவிதை எழுதிட்டேன் படி” என்றவர் அவளை மடியில் ஏந்தியவாறே தனது ஊஞ்சலில் அமர்ந்து கையில் ஒரு காகிதம் கொடுக்க.
தூக்கம் மறந்து ஐ!… என்று கூவியவரே படிக்க ஏதுவாக வாமணன் மடியில் நன்கு அமர்ந்து அந்த காகிதத்தை பிரிக்க.அதனை தடுத்தவர் நான் சொன்னது நியாபகம் இருக்குல்ல படுச்சு என் எழுத்துக்கு உயிர் கொடுக்கணும் விஷமம் வழிந்த விழிகளில் பேரிளம் பெண்ணை பார்த்தவாறே சொல்ல.
படிக்கும் ஆர்வத்தில் “சரி எழுத்தாளரே” என்றவள் பிரித்து படிக்க செய்தால்.உயிர் கொடு என்றதின் அர்த்தம் விளங்க உள்ளே போன குரலில் “இதெல்லாம் ஏமாத்து வேல எழுத்தாளரே”
“பேச்சு மாறாதடி”
“ஹ்ம்ம்.. முடியாது ரொம்பப் பண்ணுறீங்க வாமணன்”
“ஆமா என்னங்குற இப்போ”
போடா!… என்றவள் ஓட பார்க்க ஒரே எட்டில் பிடித்தவர் பேரிளம் பெண்ணைத் தோளில் தூக்கி சென்றார்.எங்கும் கவிதை, புதினம், தமிழ் இலக்கியம் ,வரலாறு என்று புத்தகக் குவியல்கள் இருக்க.நடுவில் எழுத்தாளரின் அகநானூறு படைப்பு அரங்கேறியது.
கனவில் ஒரு தேவதையாம் அதற்கு,
எழுத்தாளரின் மீது காதலாம்,
காதலால் காமமாம்,
காமத்தால் ஒரு கலவியாம்.
இதோ எழுத்தாளரின் கவிதை
அடர்ந்த புத்தகக் காட்டில் நீயும் நானும்,
தமிழ் சுவை கலந்து காதல் கலவி.
உடைகள் பாவத்தின் சாயல் இங்கே,
அதனால் விடுதலை கொடுத்துவிடு.
நாணம் என்பது அர்த்தமற்றது,
அதனால் தூக்கி எறிந்துவிடு.
நான் தான் நீ என்பதால்,
மறைக்க எதுவுமில்லை.
பெண்ணியம் பேசாதடி பித்தாகி,
போனேன் நான்.
அங்கம் தங்கமாகத் தகிக்க,
உன் உடல் துடிக்க,
இதழ் கொண்டு ஓர் ஊர்வலம்.
கால்களும் கைகளையும் என்னிடம்,
வம்பு செய்ய இதோ அதனை,
கண்டிக்க என்னது இறுக்கம்.
வெட்கம் கொண்டு என்னை,
தடுக்கும் வேளையில் பல்,
தடம் கொண்டு வரலாறு,
எழுதுவேன்.
உச்சம் தொட்டு இறங்கும்,
போதெல்லாம் நெற்றியில்,
பிள்ளை முத்தம் வைப்பேன்.
எனது காதல் ஆராய்ச்சியில்,
தோல்வி உற்று மீண்டும் ஓர்,
முயற்சி வெற்றியை நோக்கி.
கிட்டியதா வெற்றி ஓர் நொடி,
என்னிடம் உன் பார்வை இல்லையென்றதோ.
கள்ளி கண்டு கொண்டேனடி,
உன் போலி தனத்தை.
வா என் கரம் பற்றிக் கரை சேர,
வெற்றி இருவருக்குமே.
சொன்னது போல் உயிர் பெற்றது எழுத்தாளரின் எழுத்து.இனி ஒவ்வொரு முறை கவிதை எழுதும் போதும்.தன் உயிர் உருக்கி உயிர் கொடுப்பாள் எழுத்தாளரின் பேரிளம் பெண்.
இனி எழுத்தாளரின் வாழ்க்கை பயணம் பேரிளம் பெண்ணுடன் உயிர்ப்புடன் செல்லும் என்பதில் அய்யமில்லை.ஆண்டுகள் சென்று கிட்டிய காதல் என்றாலும் சான்றோர் ஆசி வழங்க முடிவில்லா காதல் பயணமாக அமையும் என்பது திண்ணம்.
அவரது காதல் பித்துப் பேரிளம் பெண்ணைப் புரட்டி தான் போட்டது.என்ன விந்தை முப்பது ஆண்டுகள் ஒன்றாக வளர்ந்தும் ஏற்படாத ஈர்ப்பு.இந்த எழுத்தின் மூலம் வந்தது தான் வியப்பு.
இத்தனை சக்தியா எழுத்துக்கு? ஆம் சக்திதான் இதுவும் ஒரு வகைப் போதை படிக்க படிக்கச் சலிக்காத ஒன்று.தன்னை மறந்து சொற்கள் விளையாட்டில் அமிழும் பொதுக் கிடைக்கும் போதையே வேறு மது,மாது சூது அனைத்தும் தோற்று போகும் இங்கு.
கற்பனைக்கு உயிர் கொடுக்கும் சக்தி எழுத்துக்கு மட்டுமே உள்ளது அதற்கு நம் எழுத்தாளரும் பேரிளம் பெண்ணும் சாட்சி.
இனி ஐந்து ஆண்டுக் கடந்து வருவோம் இவர்களது காதலின் நிலை அறிய……………