மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

மழைத்துளி 9

 

மகா, லட்சுமி, கார்த்திகா மூவரும் அந்த வீட்டின் வீரமகளுக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைக்க… நிலவனும், அருளும் மறுபடியும் தியாவை  தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் வந்தனர். தாத்தாவுக்கு பேத்தியை நினைத்து உள்ளுக்குள் பெருமை குமிட்டி அடுப்புபோல் புகைந்து எரிந்தாலும், மனுஷன் வெளியில் தன் கெத்தை விடாது முகத்தை கோவமாக வைத்துக் கொள்ள… (தாத்தா போதும்… ஃபோன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு) என்று மனதில் நினைத்த தியாவின் பார்வை முழுவதும் காதலோடு அவளை வருடிக்கொண்டிருந்த, அவள் அகரன் மேல் தான் இருந்தது. 

 

“ம்ம்ம்ம்ம் பரவாயில்ல பயபுள்ளைக்கு காலையில நம்ம சொன்னதோட அர்த்தம் புரிஞ்சிடுச்சு போல., செம்ம, ரொமான்டிக்க பாக்குது… எப்டியே இப்பவாச்சும் இவனுக்கு மண்டயில பல்ப் எரிஞ்சுதே! சந்தோஷம்டாயப்பா. இனி தாத்தாவையும், அந்த வெளங்காத விஷ்வாவையும் சமாளிச்ச போதும். நம்ம வந்த காரியம் சுபமா முடிஞ்சிடும்” என்று அவள் ஒரு கணக்கு போட, விதி வேறு மாதிரி தன் விளையாட்டை ஆரம்பித்தது. (விதி வலியது. வாட் டூ டூ.)

 

வீட்டில் அனைவரும் தியாவை கொண்டாடி தீர்க்க, அகரன் அவளை தனியாக சந்தித்து தன் மனதின் காதல் ராகத்தை அவளிடம் பாட காத்திருக்க, ம்ம்ம்… மொத்த குடும்பமும் அவளைவிட்டு இன்ச் கூட நகரவில்லை. அகரன் பொறுத்து பொறுத்து பார்த்தவன். “ச்சைய்… குடும்பமாடா இது? கொரானா வார்டு மாதிரி எப்ப பாரு  எவ்ளோ கூட்டம்” என்று கருவிக் கொண்டே அவசர வேலையாக வெளியே சென்றவனுக்கு அப்போது தெரியவில்லை. அவன் காதல் ராகம் மௌன ராகமாக மாறப்போகிறது என்று… (சோ சேட்)

 

அகரன் வெளியில் சென்றவன்.  வீட்டுக்கு திரும்பி வரும்போது பொழுது சாய்ந்து விட்டது. அகரன் தன் அறைக்கு சென்றவன். முகம் கழுவிய அசத்தலாக  ரெடியாகி தியாவை பார்க்க வெளியே வர, அவன் அம்மாவும், சித்தி, அத்தையும் தியாவை ஹாஹா, ஓஹோ என்று புகழந்துகொண்டிருப்தை கேட்டவன் மனது, அவள் அவனுடையவள் என்ற நினைப்பில் கர்வம் கொள்ள. அடுத்து அவன் அம்மா லட்சுமி சொன்ன வார்த்தையில் வானில் பறந்தது.

 

 “கார்த்தி… எனக்கு ஒரு ஆசைடி, நம்ம தியாவை எனக்கு மருமகளாக்கி நம்ம கூடவே வச்சிகணும்னு, எனக்கு ஆசைய இருக்குடி” என்று லட்சுமி தங்கையிடம் சொல்ல. “ஆமாக்கா எனக்கும் கூட அந்த ஆச இருக்கு. அதுவும் என்னைக்கு அவளை, நா முதல்ல பாத்தனோ, அப்பவே அந்த ஆசை எனக்குள்ள வந்திடுச்சு க்கா. அவளை நம்ம மருமக ஆக்கிட்ட.. அண்ணாவும், அண்ணியும் கூட இங்கயே வந்துடுவாங்க இல்ல” என்று கார்த்திகா தன் மனதின் ஆசையை சொல்ல…

 

“அது சரிதான் அண்ணி. ஆனா, இந்த அகரன் தான் தியாவ பாத்தாலே சூடு‌ற தோச தவால தெளிச்ச தண்ணி மாதிரி கொதிக்குறனே. அப்றம் அவன எப்டி தியாக்கு கட்றது?” என்ற மகாவை முறைத்த லட்சுமி,  “அதெல்லாம் எம்பையன் நா சொன்ன கேப்பான். நீ வேணும்னா பாரு. தியா தான் இந்த வீட்டு மருமக” என்று லட்சுமி சந்தோஷமாக சொல்ல… அந்த சந்தோஷம் வைரஸ் போல் அகரனை தொற்றிக்கொள்ள. அதே மகிழ்ச்சியோடு அவன் தியாவை காணச்சொல்ல… விதி அங்கே சந்தோஷ வைரஸ்கான அண்டிடோட்டோடு சோக வைரஸ் நிறப்பிய ஊசியோடு அகரன், தியாவை குத்த காத்திருந்தது.

 

தியாவை தேடி வந்த அகரன் அவள்  மொட்டைமாடியில் இருப்பதை பார்த்து,‌ “இந்த ராத்திரி நேரத்துல இந்த குட்டிபிசாசு மாடில தனிய என்ன பண்ணுது? ம்ம்ம்…! யாருக்கு தெரியும் பேய், பிசாசு கூட எதும் மீட்டிங் கூட பேசிட்டு இருந்தாலும் இருப்ப” என்று அவளை சொல்லமாக திட்டிக்கொண்டே மாடிப்படி ஏற… அவள் ஃபோனில் “ப்பா” என்று சொன்னபடி ஃபோனில் பேசிக்கொண்டிருக்க… “ஒஒஒ… தியா அவ அப்பாகிட்ட பேசிட்டு இருக்க போல? நம்ம அப்றம் வரலாம் என்று நகர்ந்தவன். அவள் ஃபோனில் “ப்ராபர்டி” என்று ஏதோ சொல்ல அகரன் சட்டென நின்றவன். அவள் பேசுவதை கவனித்தான்.

 

“என்னப்பா நீ! நா இங்க வந்தே கொஞ்ச நாள் தான் ஆகுது. இப்ப போய் நீ ப்ராபர்டி பாத்தி பேசுன‌ என்ன‌ அர்த்தம்? இதுக்கு நா‌ என்ன சொல்றது…” என்றவளுக்கு அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ?… “எனக்கும் கொஞ்சம் டைம் வேணுமில்ல. ப்ளீஸ் கொஞ்சம் வெய்ட் பண்ணுப்பா”  என்று அவள் சொல்ல, அந்த பக்கம் ஏதோ சொல்ல?

 

“ம்ம்ம் நீ சொல்றது எனக்கு நல்ல  புரியுது. சரி விடு, இப்ப தான் திருவிழா முடிஞ்சிருக்கு. தாமரை கல்யாணம் முடியட்டும். அப்றம் ‌ நா என்னோட கச்சேரிய ஸ்டார்ட் பண்றேன். இங்க எல்லாருக்கும் என்ன ரொம்ப புடிச்சிருக்கு. அதுவும் அகரன் என்னை? என்று சிரித்தவள்.. “அது ஒன்னு போதும் இவங்க எல்லாரையும் கவுக்க” என்றவள் “சரிசரி… நா அப்றம் ஃபோன் பண்றேன், பை” என்று ஃபோனை கட் செய்துவிட்டு சிரித்தபடியே திரும்ப, அகரன் கை அவள் சிரிப்பை அழித்தபடி அவள் கன்னத்தில் தன் ரேகையை பதித்திருந்தது.

 

“கடைசியில நீ!… அந்த ஆள் பொண்ணுன்னு‌ நிருபிச்சிட்ட இல்லடி.. ச்சா…!! உன்ன போய் நா?”‌ என்று தலையில் அடித்துக்கொண்ட‌ அகரன், “என்னடி… உங்கப்பன் சொல்லி ஆனுப்புனான? … நீ போய் அங்க நல்லவ மாதிரி நடிச்சு மொத்த சொத்தையும் எடுத்திட்டு இங்க ஓடி வந்திடுனு சொல்லிக்குடுத்து அனுப்பி வச்சாரக்கும் அந்த பெரிய மனுஷன்…? உனக்கு சொத்து தான் வேணும்ன வந்த அன்னைக்கே சொல்லி இருக்கலாம் இல்லடி, உன்னோட பங்க பிரிச்சு தந்திருப்போமேடி. எதுக்குடி இங்க எல்லார் மனசுலயும் ஏடம்புடிச்ச? எதுக்குடி காலையில என்கிட்ட அப்டி சொன்ன?? எதுக்குடி என் மனசுல உன்ன‌பத்தி ஆசய வளத்த? எதுக்குடி காதலிக்கிற மாதிரி நடிச்சு?” என்று ஆரம்பித்தவன் அந்த வார்த்தையை முடிக்கமுடியாமல்‌ தவிக்க… தியா அகரனையே இமைக்காமல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“எனக்கு தெரியும்டி… நீ இப்டி தான் இருப்பேனு எனக்கு நல்லா தெரியும்…! என்ன இருந்தாலும், பெத்த அம்மா, அப்பா வச்சிருந்த பாசத்தை, நம்பிக்கைய, மதிக்காம ஓடிப்போன அந்த அரவிந்தன் பொண்ணு தான நீ? நீ அப்டி தான்டி இருப்ப” என்று சொல்லி முடிக்கும் முன் தியா “திருத்துடா” என்று அடித்தொண்டையில் இருந்து கத்த. கோலத்தில் சிவந்திருந்த அவள் கண்களிலும், அந்த குரலிலும் அகரன் ஒரு நிமிடம் அரண்டே விட்டான்.

 

“யாரு டா பெத்தவங்கள? அவங்க பாசத்த மதிக்கல?…” 

 

எங்கப்பாவ? எங்கப்பாவாடா?” என்று கத்தியவள். “இல்லடா, இல்லவே இல்ல. எங்கப்ப பெத்தவங்களை மதிச்சனால, அவங்க வளர்த்த வளர்ப்பு தப்ப போகக்கூடாதுன்னு தான்டா அப்டி செஞ்சாரு… ஒருவேள தாத்தாவுக்காக அவர் பாத்த பொண்ண எங்கப்ப கட்டியிருந்த.. ஊர்ல திரவியம் பையன் ஒரு பொண்ண நம்ப வச்சு கழுத்தறுத்துட்டு, இன்னொருத்திய கட்டிக்கிட்டான்னு  தான்டா சொல்லி இருப்பாங்க… அப்டி ஒரு பேர் தாத்தாக்கு வரக்கூடாதுனு தான் எங்கப்பா அப்டி‌ செஞ்சாரு. சின்ன வயசுல இருந்து தாத்தா அப்பாக்கு யாரையும் ஏமாத்த கூடாது, யாருக்கும் நம்பிக்கை துரோகம் பண்ணக் கூடாதுன்னு சொல்லி சொல்லி வளத்திருக்காருடா. அப்டி ஒரு வேளை தாத்தாவுக்காக அப்பா, எங்கம்மாவ விட்டிருந்த.. அவர் அப்பாவோட! உன் அருமை தாத்தாவோட வளர்ப்பு தப்பாகி இருக்கும் டா அறிவுகெட்டவனே… சரி நீ எங்கப்பாவ தப்பு சொல்றீயே… உன்னோட‌ அந்த‌ கெழடு பண்ணது மட்டும் சரியடா.? கல்யாணம் பண்ணிக்க போனவர் கிட்ட அந்த கல்யாணம் புடிச்சிருக்க? புடிக்கலயன்னு ஒரு வார்த்த கூட கேக்காம.. அவர் பாட்டுக்கு பெரிய‌ அப்பாடக்கர் மாதிரி முடிவெடுத்த எங்கப்பா, அம்மா அத கேக்கணும்னு‌ அவங்களுக்கு தலயெழுத்தடா… நீயும் தான் தாத்தா மேல உயிரையே வச்சிருக்க. நாளைக்கே தாத்தா உன்கிட்ட வந்து நா உனக்கு பொண்ணு பாத்துட்டேன். நீ அவள தான் கட்டிக்கணும்னு சொன்ன. நீ என்னடா செய்வ. வாய மூடிட்டு அவர் சொல்ற பொண்ண கட்டிபிய? இல்ல தாத்தா நா தியாவ விரும்புறேன் அவள தான் கட்டிக்குவேன்னு சொல்லுவிய? அப்டி நீ சொல்லியும் தாத்தா பிடிவாதம‌ அதை தடுத்த நீ என்னடா செய்வ…? அப்டி ஒரு நெலமயில நீ என்ன செய்வீயே அதையே தான் டா எங்கப்பாவும் அன்னைக்கு செஞ்சாரு… அப்றம் எங்கப்பா ஒன்னு ஓடிப் போல, உன் அருமை தாத்தா தான் வெரட்டி விட்டாரு, அத மறந்துடாத…” என்று அகரனை வறுத்தெடுத்தவள். 

 

“‌என்ன சொன்ன? நா சொத்துக்காக இங்க வந்தன? என்று அலட்சியமாக சிரித்தவள். “உங்க மொத்த சொத்து மதிப்பு எவ்ளோடா இருக்கும்.? என்ன ஒரு பத்துகோடி இருக்குமாடா? இல்ல இருவது கேடி இருக்குமா?? இத விட  மூனு மடங்கு பணம் என்கிட்ட இருக்கு டா. அதுவும் நா, இந்த திரவியா அரவிந்தன் சொந்தகால் நின்னு‌ சம்பதிச்சதுடா.‌.. நீ என்ன சொன்ன? சொத்துக்காக நா உன்ன? என்றவள் பல்லைக் கடித்து தன்‌ கோவத்தை அடக்கி. “நா இப்ப ‘உம்னு’ சொன்ன என்னை கட்டிக்க, பெரிய பெரிய பிஸ்னஸ்மேன் எத்தனை பேர் கத்திருக்காங்கனு தெரியும‌டா உனக்கு. நா ஒன்னும் உன்னோட சொத்துக்காக உன்ன… என்றவள் கண்கள் கலங்கியிருக்க. “லைஃப் ல ஃபர்ஸ்ட் டைம்… ஒருத்தனை சரின்னு தப்பா புரிஞ்சுகிட்டேன். தகுதியில்லாத ஒருத்தன்கிட்ட போய் என்னோட காதல?” என்று கண்ணை அழுத்தி துடைத்தபடி அங்கிருந்து ‌நகர்ந்தவள். அதுவரை அவள் பேசியதில் சிலையாகி நின்றிருந்த அகரன் தோளை தொட்டு தன் புறமாக திருப்பி. அவன் கன்னத்தில் அவள் ஐந்து விரல்களையும் பளார் அழுத்தி எழுதியிருந்தாள். “நா யார்கிட்ட எத வாங்கினாலும் உடனே திருப்பி தந்திடுவேன்” என்றவள் அகரனை ஒரு பொருட்டாக மதிக்காத பார்வை பார்த்துச் செல்ல… இதுவரை அங்கு நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த திரவியம் தாத்தாவும், அகிலா பாட்டியும் கூட உறைந்து நின்றிருந்தனர்.

 

தாத்தா அமைதியாக அமரந்திருக்க அகிலா பாட்டி கையை பிசைந்து கொண்டு நின்றிருந்தார்… “ஏங்க நா சொல்றத…” என்று பாட்டி ஏதோ பேச வர. தாத்தா வேண்டாம் என்று கை காட்டியவர். “இன்னும் ஐஞ்சு  நாள்ல தாமரை கல்யாணம் முடிஞ்சிடும். அது முடிஞ்ச அடுத்த மூகூர்த்தத்துல அகரனுக்கு கல்யாணம். அருள், சரண்யா ஏற்கனவே ஒருத்தர ஒருதர் விரும்புறாங்கனு காத்து வாக்குல கேள்விப்பட்டேன். மூத்தவன் அகரன் இருக்கும் போது, அத பத்தி பேச வேணாம்னு தா இவ்ளோ நாள் அமைதிய இருந்தேன். இப்ப அகரன் கல்யாணம் உடனே நடந்தே ஆகணும்னு முடிவு பண்ணிட்டேன்…” என்று உறுதியாக சொல்ல.

 

“ஏன்னங்க… அவங்க ரெண்டு பேர் பேசுனத கேட்டீங்க இல்ல.? அதுங்க ஒன்ன ஒன்னு விரும்புதுங்க. இப்ப‌ போய் அகரனுக்கு கல்யாணம்” என்று பாட்டியை பாதியில் நிறுத்திய தாத்தா… காலையில தாமரை மாமியார் வீட்டுல இருந்து நமக்கு மொறப்படி பத்திரிகை வைக்க வரங்க. அவங்க வர்ரதுக்கு முன்ன அகரன் கல்யாணம் பத்தி நா பேசணும்னு சொன்னேன்னு எல்லா‌ புள்ளைகளையும் இங்க வரச்சொல்லு… இதுதான் என் முடிவு”‌ என்றவர் அங்கிருந்து சென்று விட… பாட்டி செய்வதறியாது கலங்கி நின்றார்.

 

இங்கு அகரன் தன் செய்தது சரியா, தவறா என்று புரியாமல் அவசரப்பட்டு அவன் தீராவை அடித்தை நினைத்து தவித்துக் கொண்டிருக்க. அங்கு தியாவோ தன் நெஞ்சில் ஆறியிருந்த பழைய காயத்தை பல வருடம் கழித்து அகரன் குத்தி கீறியதின் வலியை தாங்கவும் முடியாமல்  வாய்விட்டு அழவும் முடியாமல் மௌனமாக உள்ளுக்குள் கதறிக் கொண்டிருந்தாள், நாளை காலை நடக்கப்போகும் விபரிதம் தெரியாமல்…

 

காலை வீடே பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்க. சரியான நேரத்தில் அங்கு வந்து சேர்ந்தனர் சூர்யா குடும்பத்தினர். 

 

சூர்யாவின் அப்பா திரவியம் தாத்தாவை கையெடுத்துக் கும்பிட்டவர், “அய்யா நீங்க தப்ப நெனக்காட்டி, நா சாமிகிட்ட பூஜை செஞ்ச இந்த பத்திரிகைய, இந்த கல்யாணம் இப்ப எந்த தடையும் இல்லாம நடக்க முழு காரணமா இருந்த ஒருத்தருக்கு. இந்த பத்திரிகைய உங்க அனுமதியோட கொடுக்கணும்னு ஆசப்படுறேன். அதுக்கு உங்க அனுமதி வேணும் ஐயா” என்று கேட்க…

 

“அதுக்கு என்ன சம்பந்தி, நீங்க இவ்ளோ சொல்றீங்கன்னா கண்டிப்பா, அவங்க ரொம்ப முக்கியமான ஆளா தான் இருப்பாங்கனு நினைக்கிறேன். நீங்க தாராளம போய் அவங்களுக்கு பத்திரிகை வச்சிட்டு வந்து, அப்றமா எங்களுக்கு வைங்க. எனக்கு முழு சம்மதம்” என்று தாத்தா சொல்ல

 

“நா எங்கயும் போகணும்னு அவசியம் இல்ல ஐயா. நா சொன்ன அந்த முக்கியமான ஆள் வேற யாரும் இல்ல. இதோ நிக்குறாளே உங்க பேத்தி திரவியா. இவ தான்யா அந்த ஆளு. இப்ப இந்த கல்யாணம் எந்த பிரச்சனையும் இல்லாம நடக்கப்போகுதுனா அதுக்கு காரணம் இந்த பொண்ணு தான். அதுக்கு நன்றின்னு வெறும் ஒரு வார்த்தையில சொல்லிட முடியாது. அதனால தான்யா சாமிக்கு பூஜை செஞ்ச இந்த பத்திரிகைய அந்த புள்ளைக்கு தரனும்னு நாங்க ஆசப்பட்டோம்” என்றவர் முழு மரியாதையுடன் ஒரு தட்டில் பட்டுப்புடவை, பூ, மஞ்சள் என்று அடுக்கி., அதன் மீது பத்திரிகை வைத்து தியாவிடம் நீட்டியவர். “நீ மட்டும் இல்லேன்னா இன்னேரம் என் குடும்பமே இல்லாம போயிக்கேம்மா. உனக்கு எப்டி நன்றி சொல்றதுனு தெரியாம தான்மா இப்டி செய்றேன். என்ன ஏதுன்னு எதையும் யோசிக்காம நீ…! யாருக்கு வரும்மா இந்த மனசு, என்ன பொறுத்தவரை இப்ப அந்த சாமியும், நீயும் எனக்கு வேற வேற இல்லம்மா. நீ மனசல எம் புள்ளை நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிட்டு இந்த தட்ட வாங்கிக்கோமா” என்று  அவர் தட்டை அவள் முன் நிட்ட… தியா, சூர்யா குடும்பத்தை தவிர்த்து அங்கிருந்த அனைவரும் அங்கு என்ன நடக்கிறது‌? என்று புரியாமல் குழம்பி நின்றனர்.

 

அவர் எதற்காக அப்படி செய்கிறார் என்று தியாவுக்கு நன்கு புரிந்தாலும், வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தவள், தட்டை வாங்காமல் தயங்கியபடி தாத்தாவை பார்க்க. அவள் பார்வையின் அர்த்தம் புரிந்த தாத்தா. தான் சொல்லாமல் அவள் தட்டை வாங்க மாட்டாள் என்று தெரிந்து, “திரவியா… தட்ட வாங்கிக்க” என்று கம்பிரமாக சொல்ல. தாத்தா முதல் முதலில் தன் பேரை சொல்லி கூப்பிட்ட சந்தோஷத்தோடு தியா தட்டை வாங்கிக்கொண்டாள்.

 

கொஞ்ச நேரம் முன் சூர்யா சொன்ன அனைத்தையும் கேட்டு, அந்த வீடே அமைதியை குத்தகைக்கு எடுத்து போல் அத்தனை நிசப்தமாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!