மயங்கினேன்.! கிறங்கினேன்.! 10

 

அத்தியாயம் 10

விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும் வெற்றிமாறனின் வாழ்வு இப்போது கடினமானதாக மாற கூடிய நிலையில் இருந்தது.

சிரிப்பை கொண்டே அடுத்தவரை மயக்கும் வெற்றிக்கு , இப்போதைய நிலையில் சிரிப்பா அப்படி என்றால் என்ன என்று கேட்க்கும் அளவிற்கு அவனின் இனியா மீது வைத்திருக்கும் கோபம் மறைத்தது.

அவளால் தன் சுயத்தையே இழந்திருந்தான். என்ன செய்கிறான் என்ன செய்ய இருக்கிறான் என்று எதுவும் அவனுக்கு புரியவில்லை. ஆனால் ஏதாவது அவளை செய்தாக வேண்டும் என்பதே அவனது எண்ணவோட்டமாக இருந்தது. இசையின் இடத்தில் வேறொரு பெண்ணை நினைத்து பார்க்க கூட முடியவில்லை.

இதோ இனியா என்பவள் அவன் வாழ்வில் எதார்த்தமாக நுழைந்து மனைவியாக மாறிவிட்டாள்.

ஆனால் அவன் இசையோ காதலியாக வந்து காற்றோடு பறந்து விட்டாள்.

இசை ப்ராங்க் என்று சொன்னாலும் அதை அவனால் நம்ப முடியவில்லை. அவளின் விழியில் அவனுக்கான காதலை அன்று கண்டானே. அது எப்படி பொய்யான காதலாக இருக்க முடியும் . அவள் தன்னிடம் விளையாடியிருக்கிறாளோ என பலவாறாக யோசித்து யோசித்து பார்த்தவனின் உள்ளம் உலையாக கொதிக்க தொடங்கியது.

வாழ்வே சூன்யமாக தோன்றியது வெற்றிக்கு.

இசையின் வரவு அந்த ஆறு மாதங்களில் அவனுக்கு வசந்தமாக தான் இருந்தது. காதல் என்பதை நினைத்து பார்த்திறாதவனுக்கு தேவதையாக அவன் வாழ்வில் நுழைந்தவள் தான் இசை.

இசை என்பவள் யார்.? எங்கிருக்கிறாள்.? எதற்காக இப்படி செய்தாள்.? என்ற ஓராயிரம் கேள்விகள் அவன் மண்டைக்குள் குடைந்து கொண்டு இருக்க , அதனுடன் கூடவே இனியாவை பழிவாங்கும் திட்டங்களையும் யோசித்தது.

அந்த நிலவையே மாடியிலிருந்து யோசித்து பார்த்தவனுக்கு தொண்டை அடைத்தது.

அனைவரும் ரசிக்கும் படியாக நிலா இருந்தாலும் எட்டா கனியாக தான் இருக்கும். அதே போல் தான் இப்போது அவன் வாழ்வில் இசையும். எதார்த்தத்தை நினைக்க நினைக்க வாழ்வே வெறுத்து போனது.

காதல் வந்தால் மற்றவைகள் எல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுமோ.?

” வெற்றி..” என பின்னாலிருந்து குரல் வரவும் திரும்பி கௌதமை பார்த்தான்.

” நீ என்ன பண்றன்னு உனக்கு புரியுதா டா.?”

“….”

” சொல்லு வெற்றி. யாரு கவனிக்கலன்னா என்ன ,நான் பார்த்தேனே டா. மணமேடையில நீ தங்கச்சியை கீழே தள்ளி விட்டதையும் , ரிசப்ஷன்ல நீ உட்கார விடாம பண்ணதையும் பார்த்தேன்.”

” ஏன் இப்படி பண்ற டா.?”

“….”

” என் நண்பன் இப்படி கிடையாதே. அவனை நான் நல்லவன்னா தான் பார்த்திருக்கேன். அவனுக்கு இப்படி மத்தவுங்களை கஷ்ட படுத்த தெரியாது ” என காட்டமாக சொல்ல

” ஆமா டா. நான் நல்லவன்னா இருக்க போய் தான் எல்லாரும். என் தலையில நின்னு ஆடு ஆடுன்னு ஆடுறீங்க. நான் என்ன பண்ணேன். காதலிச்சது தப்பா , இல்லை அந்த இந்த பொண்ணை ஏமாத்த கூடாதுன்னு முன்னாடியே கல்யாணத்தை நிறுத்த சொன்னேனே  அது தப்பா சொல்லு டா கௌதம். எது தப்பு ” என பொங்கியவன் அமைதியாக நிலவை வெறித்தான்.

” நீ பண்றது ரொம்பவே தப்பு வெற்றி..” என எதையோ பேச வர

” போதும் நிறுத்து கௌதம். டோண்ட் க்ராஸ் யுவர் லிமிட்ஸ் . என் நண்பன்னா  அதோட எல்லைக்குளே நில்லு” என கௌதம் எட்ட நிறுத்தினான்.

” நீ இப்படி எல்லாம் பேசுன்னா , நான் அமைதியா போயிடனுமோ. அதெல்லாம் இங்க நடக்காது டா நட்புக்கு மட்டும் தான் இதை சொல்லனும் இதை சொல்லக்கூடாதுன்னு எந்த விதமான ரெஸ்ட்ரிக்ஷனும் இல்லை.”

” உனக்கு நண்பனா நான் இனி பேசல. ஆனா இனி என் தங்கச்சிக்காக பேசுவேன். மைண்ட் இட் ” என கீழே சென்றான்.

” அம்மா அப்பா போயி இப்போ என் நண்பனையும் என் கிட்ட இருந்து பிரிச்சிட்டல ” என மேலும் கோபத்தை இனியாவின் மீது வளர்த்து கொண்டான்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதலாம் பேய் என்பார்களே. இவனுக்கு இசை பைத்தியம் பிடித்திருக்கிறது. அதனால் எது நடந்தாலும் இனியாவை தான் குற்றம் சொல்லும்.

கௌதமிடம் கோபமாக பேசிவிட்டோமே என வருந்தி கீழே வந்தவன் , பெரியவர்கள் எல்லாம் நமட்டு சிரிப்பொன்றை சிரிக்கவும் ,” ஆள விடுங்க டா சாமி ” என‌ அறைக்கு வந்தவனுக்கு அங்கிருந்த அலங்காரத்தை பார்த்து  கோபம் தான் வந்தது.

” ச்சை ” என காலால் தரையில் உதைத்தவன் , குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.

இங்கே இனியா அழகிய சிவப்பு வண்ண புடவையை அணிந்து தேவதையாக மின்னினாள்.

“இன்னைக்கு என் கொழுந்தன் மயக்கம் போட்டு தான் விழப்போறான் பாரு ” என பூங்கோதை சொல்ல

” அச்சச்சோ ஏன்.? ” என புரியாமல் விழித்தாள் இனியா. அவளுக்கு அவனை நினைத்து பயம் மட்டுமே இருக்க வேறெதை பற்றியும் யோசிக்கும் மனநிலை இல்லை.

அவளை வேற்று கிரகவாசிப்போல் பார்த்தாள் இனியா.

” ஏன் க்கா அப்படி பாக்குற.?”

” வேற எப்படி டி பார்க்க சொல்ற லூசு.? நான் எதுக்காக அப்படி சொன்னேன்னு உண்மையா தெரியலையா”

” தெரியாததுனாள‌ தானே கேட்கிறேன் பதில் சொல்லேன்”

“அத்தை உன்ன பயம் காட்டியே வளர்த்துட்டாங்க டி. அது தான் உனக்கு இதெல்லாம் தெரியலை.”

” இப்படி முதல் இரவுக்கு போறவ இப்படி தேவதை மாதிரி போன்னா , உன்னை பார்த்ததும் வெற்றி மயங்கிவிடு வாங்க டி ” என்க

வெற்றியை நினைக்க வெட்கத்தில் சிவக்க வேண்டிய கண்கள் பயத்தில் சிவந்தது.

இதை தவறாக புரிந்து கொண்ட பூங்கோதை , அவளை மேலும் கிண்டலடித்தாள்.

” போதும் போதும் அவளை கிண்டலடிச்சது. அங்க உன் பையன் என் பையனை உண்டு இல்லன்னு பண்ணிட்டு இருக்கான். போ போயி பாரு ” என பெரிய மருமகளை விரட்டி விட்டார் விஜயலட்சுமி. அவர் கூட வந்த காந்திமதி அமைதியாக நின்றார்.

அவருக்கு எப்படி தன் அண்ணனின் சந்திப்பது என்ற கவலை. அவருக்கு வாக்கு கொடுத்திருக்கிறாரே . எப்படியாவது தன் மகளை அவரின் மருமகள் ஆக்குகிறேன் என்று.. அது இப்போது முடியாமல் போனதே என்று வருத்தப்பட்டாரே ஒழிய மகளின் மகிழ்ச்சியை நினைத்து பார்க்கவில்லை.

” என் கண்ணே பட்டுடும் டா. உன் அழகுக்கு போய் என் மகனை கட்டி வச்சிட்டேனே. “

“அத்தை ” என செல்ல சிணுங்கள் சிணுங்க

” உண்மைய தான் சொல்றேன். கருவாயனுக்கு ஹீரோயின் மாதிரி நீ கிடைச்சிருக்க. இல்லன்னா இவனுக்கு ஏதாவது ஒரு கருவாச்சி தான் கிடைச்சிருப்பா ” என மகனை கேலி பொருளாக்கி மருமகளிடம் ஐக்கியமாகினார்.

வித்தியாசமான மாமியாராக இருக்கிறார். முதலயே இனியாவிற்கு அத்தையை பிடிக்கும். ஆனால் இப்போது மாமியாராக மிகவும் பிடித்தது.

பின் இருவருமாக சேர்ந்து , இனியாவை பூஜையறைக்கு அழைத்து செல்ல , சாமி கும்பிட்டு விளக்கேற்றி வைத்தாள்.

பின்னர் , விஜயா அவளை அழைத்து கொண்டு மகனது அறையின் முன்பு விட்டவர் ,” நல்லா இரு மா “என்று வாழ்த்தி அனுப்பினார்.

உள்ளே சென்றவளுக்கு வெற்றியை நினைத்து சிறிது பயமாக தான் இருந்தது.

அன்று அவன் குடித்திருந்த போது கூட , இத்தனை பயமில்லை அவளுக்கு .சகஜமாக தான் இருந்தாள். ஆனால் இப்போது பயம் மட்டுமே இருந்தது.

‘அவன் எங்கே இருக்கிறான்’ என கண்களால் அலச , குளியலறையிலிருந்து தண்ணீர் கொட்டும் சத்தம் கேட்டது.

எவ்வளவு நேரம் இப்படியே நிற்பது என்று நினைத்த இனியா , அங்கே இருந்த சோஃபாவில் அமர்ந்து அறையை சுற்றி பார்த்தாள்.

அவனது அறை நன்றாக நேர்த்தியாகவே இருந்தது.

சாக்லேட் ப்ரௌன் நிறத்தில் பெயிண்ட் அடித்து , எல்லாம் மரப் பொருளாகவே வைத்திருந்தான்.

சுவற்றில் நிறைய நிறைய புகைப்படங்கள் மாற்றப்பட்டிருந்தது. குடும்ப புகைப்படமாக தனித்தனி படமாக சில அண்ணனும் ஊர் சுற்றிய எடுத்த படமாக என நிறைய இருந்தது. அதற்கெல்லாம் நடுவில் மட்டும் எதுவும் மாட்டப்படாமல் இருக்கவே ,’ ஏன்‌.?’ என்று யோசித்தாள்.

பின் ‘ எதுவாக இருந்தால் தனக்கென்ன ‘ என்று அமைதியாக அமர்ந்திருந்த நேரம் அவள் மேல் தண்ணீர் கொட்டியது.

தீடிரென்று தன் மீது தண்ணீர் கொட்டவும் திடுக்கிட்டவள் , சுதாரித்து எழுந்தாள்.

அவள் முன்பு ருத்தர மூர்த்தியாக வெற்றிமாறன் நிற்க , பையந்தே போனவள் இரு அடி பின்னாடி வைத்தாள்.

” இங்க உனக்கு என்ன வேலை .?”

” இ..ல…” என திக்க

” அன்னைக்கு நல்லா தானே வாய் கிழிய . இன்னைக்கு மட்டும் திக்குதோ ” என கோபமாக பேச

அதில் மேலும் பயந்தவள் , அழுகைக்கு தயாரானாள்.

” பச் , அழுகாத . உன்னால நான் தான் அழுகனும். நீ ஏன் அழுகிற.?”

” எனக்கு பயமா இருக்கு ” என்று கண் கலங்கியவளை மனம் வருந்தினாலும் நம்பிக்கை துரோகம் செய்தவளை பழி தீர்த்தே ஆக வேண்டும் என்ற வெறி இருந்தது.

” இந்த நடிப்பெல்லாம் என்கிட்ட வேலைக்காகாது.”

” இல்ல உண்மையாவே நான் கொஞ்சம் இல்ல நிறையாவே பயப்படுவேன். வெளிய அதை காட்டிக்க கூடாதுன்னு அதிகம் பேசுறது . அம்மா கொஞ்சம் ஸ்ரிக்ட் அதான் இப்படி” என்று முடித்தாள்.

” ஹாஹாஹா. ஜோக் ஆஃப் தி டே ” என சத்தமாக சிரிக்க

” உண்மைய தான் சொல்றேன். மாமா வந்து என்னை மிரட்டிட்டு போனாரு.‌இந்த கல்யாணம் நடக்கலைன்னா செத்துடுவேன்னு. எனக்கு வேற வழி தெரியலை ” என உதடு பிதுக்கியவளை கண்டு ,

” அதை என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே. நான் வேற ஏற்பாடு பண்ணி இருப்பேன்ல. இப்போ பாரு எல்லாம் முடிஞ்சிருச்சி ” என்று சொல்லி அங்கேயும் இங்கேயும் நடந்தான்.

அவள் பயத்திலும் குளிரிலும் நடுங்க , இனியாவை பழி வாங்க எண்ணி ஏசியை கூட்டி வைத்தான்.

மேலும் நடுங்கிய இனியா , தனது பேக் எங்கே இருக்கிறது என ஆராய

” என்ன தேடுற நீ.?”

” என்னோட பேக்..”

” ஹோ அதுவா பாத்ரூம்க்குள்ள இருக்கு . போ போய் எடுத்துக்கோ ” என்று சொல்ல

” சரி ” என்றவள் அங்கே சென்று பார்த்தவளுக்கு கண்கள் பெரிதாக விரிந்தது.

அனைத்து ட்ரெஸையும் தண்ணீரில் நனைத்து வைத்திருந்தான்.

‘கடன்காரா கடன்காரா இப்படி பண்ணிட்டானே ‘ என உள்ளுக்குள் அவனை திட்டினாள்.

இவளின் இந்த அமைதிக்கு காரணம் எல்லாம் அவனும் அவளது அன்னையும் தான்.

அவளை பொருத்தவரை உரிமையுள்ள இடத்தில் தான் சண்டை போட வேண்டும். ஏன் இவள் உரிமை உள்ள இடத்தில் தான் தன்னை வெளிக்காடவே செய்வாள். அதனால் தான் அன்று காரில் அவனுடன் வம்பிழுத்து வந்தது எல்லாம்..

என்று வெற்றியின் மனதில் தான் இல்லை வேறொரு பெண் இருப்பது தெரிந்ததோ , அப்பவே இந்த உரிமை எல்லாம் இல்லாமல் போனது.

அவள் மற்றவர்களிடம் காட்டும் பயமும் சிறு ஒதுக்கமும் இப்போது இவனிடமும் வந்தது.

தான் அணிந்திருந்த உடை வேறு ஈரமாக இருக்க , இப்போது மற்ற ஆடைகளும் நனைந்து போய் இருக்க , என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தாள்.

” இன்னும்மா உன் ட்ரெஸை எடுக்கிற.? எடுத்ததெல்லாம் போதும் இங்க வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றான்.

‘ என்னத்த பேசனுமாம் இவருக்கு’ என நினைத்து சோகமாக வெளியே வந்தாள்.

” சொல்லுங்க. ஏதோ பேசணும்னு சொன்னீங்க”

“நாம இங்க எப்படியும் ஒன்னா தான் இருந்தாகனும். என்னால என்னோட அப்பா அம்மாவை கஷ்டபடுத்த முடியாது. சோ வெளிய புருஷன் பொண்டாட்டியா நடிக்கனும். வெளிய நீ யாரோ நான் யாரோ சரியா “

” ம்ம்ம்..” என தலையாட்டி வைத்தாள்.

” போ போய் அந்த சோஃபாவில் போய் படு “

” அது ஈரமா இருக்கே . அங்க எப்படி போய் தூங்க.?”

” அது தான் நான் கொடுக்கிற முதல் தண்டனை ‌” என சொல்லி இழுத்து போர்த்தி கொண்டு படுத்துவிட்டான்.

இவள் தான் உள்ளே அவனை வறுத்தெடுத்தாள்.

நனைந்த துணிகளை எடுத்து உலர்த்தி காய வைத்தவள் கடினப்பட்டு உறங்க முயன்றவளை விடியலின் போது தான் உறங்கினாள். அதற்குள் அவளின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிட்டிருந்தான் இன்னாள் வில்லன் மிஸ்டர். வெற்றி.