பாலைவன பெண்பூவே

பாலைவன பெண்பூவே

பாலைவன பெண்பூவே

 

    வானம் இருள் சூழ்ல காத்துக் கொண்டு இருக்க சூரியன் மதியின் வருகையை எண்ணியே மேகங்களின் நடுவில் தன்னை மறைத்துக் கொள்ள வானம் அதன் அழகில் மேலும் மெழுக்கேற்றி இருந்தது .

அதன் அழகில் மெய் மறந்து அந்த பூங்காவில் அமர்ந்து இரசித்துக் கொண்டு இருந்தாள் அவள்…

அவளின் இரு கண்ணங்களும் கூட அந்த அந்தி வானம் போல் சிவப்பேற தொடங்கி இருந்தது தன்னவனின் நினைவினில்‌..

பாலைவனமாய் இருந்த அவள் வாழ்வில் செம்மை செய்தவன் அவனே.

சிறிது தூரத்தில் இருந்த கதிரையில் ஒரு காதலர்கள் அமர்ந்திருக்க அவர்களது செல்ல சண்டைகளை கவனிக்க தொடங்கி இருந்தவளின் மனம் அவளது காதல் நினைவுகளை மனதில் படமாக ஓடத் தொடங்கியது…

நான்கு வருடங்களுக்கு முன்பு…,,

” அடியே கொஞ்சம் காலேஜ்க்கு கிளம்பு டி இப்படியே ஃபோன நோண்டிட்டு இருந்த அப்பறம் என்ன செய்வேனே தெரியாது ” என்று அவள் தோழி கிருஷ்வந்தி கத்த..

“ஹே நானே இப்போ தான டி ஃபோனை எடுத்தேன் அதுக்கு போய் ஏன் இப்படி திட்டுற ” என்று அவள் மொபைலை பார்த்த படி கேட்க…

“ஏய் எந்திரி டி நீ மொபைல எடுத்தா அத கீழ வைக்க கூட மாட்ட அதுல தேவையில்லாத வேலைய பாத்து பாத்து செய்றது ” என்று அவளது மொபைலை பிடுங்க…

“எத இப்ப நீ தேவை இல்லாத ஒரு வேலைன்னு சொல்லுற ” என்று கோபமாக கேட்க..

” அது உனக்கு தெரியாதா நான் எத சொல்ல வரேன்னு .யாரோ ஒருத்தன் இவள காப்பாத்துனான்னா அதுல இந்த மேடம் இம்பிரஸ் ஆயிட்டு அவன தேடிட்டு இருக்காங்கலாம் .என்னடி நினைச்சிட்டு இருக்கிற நீ . நீ எது செஞ்சாலும் யாரும் உன்ன கேக்க மாட்டாங்கன்னு நினைப்பா உனக்கு இதுக்காதான்னோ என்னவோ உன்னோட அம்மா அப்பா எல்லாம் உன்ன விட்டு பொய்ட்டாங்களோ என்னவோ ” என்று இதுவரை அமைதியாக  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த லாவண்யா மனதில் சந்தோஷத்துடன் வெளியே கோபமாகவும் கேட்க  அடுத்தநொடி கிருஷ்வந்தியின் அடியில் கண்ணம் பலுத்திருந்தது.

” என்ன டி பேசுற என்னோட மதுக்கு நான் இருக்கேன் ஒரு அம்மாவா அப்பாவா . அவள கேள்விக் கேக்குற உரிமைய உனக்கு யாரு கொடுத்தது சொல்லு ” என்று கிருஷ்வந்தி சீர..

கண்ணத்தில் கை வைத்திருந்த லாவண்யாவோ மதுவிடம் திரும்பி,” நீ எப்போ எங்களுக்குள்ள வந்தியோ அப்ப இருந்தே என்கிட்ட இருந்த என்னோட கிருஷ பிரிச்சுட்டீல உன்ன ” என்றவள் கிருஷின் முகத்தை கண்டு அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து கல்லூரிக்கு சென்றாள்…

” ஏன் டி அவள அடிச்ச ” என்று இரு கைகளையும் இடுப்பில் வைத்தவாறு கேட்க..

“அவ பேசுனதுக்கு நீ தான் அவள அடிச்சிருக்கனும் ஆனா நீ சும்மா வேடிக்க பாத்துட்டு இருந்த அதான் நான் அடிச்சேன். எனக்கு கோபம் வந்த அளவுக்கு கூட ஏன் உனக்கு வரல ” என்று  கேள்வியாக கேட்க

“இதுக்கு நா எதுக்கு டி கோப படனும் சொல்லு .அவ சொல்றதுள்ள என்ன தப்பு இருக்கு நான் வேண்டானு தான என்னோட பதினைஞ்சு வயசுல என்ன தவிக்க விட்டு போனாங்க .அதுனால தான நான் இந்த ஆசிரமத்துக்கு வந்தேன். அப்புறம் உங்க இரண்டு பேருக்கும் இடையில வந்து இப்போ ஒரு பிரச்சனையா இருக்கேன் டி ” என்று கூறி கண் கலங்கியவளை கண்ட விந்துவிற்கு நெஞ்சு அடைத்தது போல் இருக்க அவளை இறுக்கி அணைத்துக் கொண்டாள்..

பின்னர் இருவரும் கல்லூரிக்கு கிளம்பி சென்றனர்…

வலமை போல் அனைத்தும் நடக்க மதுக்கு மட்டும் எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் சென்றது லாவண்யா மட்டும் இருவரிடமும் முறுக்கிக் கொண்டு போனாள்…

ஆசிரமத்துக்கு வந்தவள் நேராக காலை வைத்து விட்டு சென்ற மொபைலை எடுத்து நெட் ஆன் பண்ணியவள் ஏதேனும் நோட்டிஃபிக்கேஷன் வந்துருக்கிறதா என்று பார்த்தாள்…

அவள் எதிர்பார்த்த படியே மெசென்ஞர் மூலமாக ” குட்மார்னிங் மொழி ” என்று மட்டும் வந்திருந்தது.

அதை கண்ட அவள் கண்களில் மின்னல் வெட்ட புன்னகையுடன் அதற்கு ரிப்ளை செய்து விட்டு அடுத்த வேலையை காணச் சென்று விட்டாள்…

மாலையில் அங்கிருந்த மழலைகளுடன் விளையாடியவள் உணவு முடித்துக் கொண்டே அறைக்கு திரும்பினாள்.

கிருஷ்வந்தி லாவண்யாவை சமாதானம் படுத்தும் முயற்சியில் ஈடுபட தொடங்கி இருந்தாள்…

அவளை சமாதானம் செய்து அன்று அவளுடனே படுத்துக் உறங்கினாள்..

அறையில் தனியே இருந்தவளுக்கு உறக்கம் வர மறுக்க உறங்கிய ஃபோனை உயிர்பித்தாள்.

சிறிது நேரம் வாட்ஸப்பு சென்று நோண்டியவள் போரடிக்கவும் மீம்ஸ் பார்ப்பதற்காக ஃபேஸ்புக் சென்றாள் .

அங்கே சென்று சில மீம்ஸ் பார்த்து லைக்ஸ் அண்ட் கமெண்ட்ஸை போட்டவளின் கண்ணில் Piraisudan is online  என வர அதற்கு அடுத்தகாக ஒரு தத்துவம் இமேஜ் போட்டு இருந்தான்.

அதற்கு லைக்ஸ் போட அவனிடமிருந்து குட் நைட் மொழி என்று வந்தது..

” ஹாய் சார்..!!!ரொம்ப நாள் ஆச்சு நீங்க தத்துவம் போட்டு .ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்கு தான் போட்டு இருக்கீங்க ” என்று மெசேஜ் தட்டிவிட்டாள்…

“ஹாஹா கொஞ்சம் ஒர்க் இருந்துச்சி மொழி அதான் போட முடியல சும்மா வந்துட்டு மட்டும் தான் போக நேரம் இருந்துச்சி ” என்றான்…

“ஹோ..!! சார் அவ்ளோ பிசியா..???வர வர மொழின்னு ஒரு ஃப்ரண்ட் இருக்கிறது கூட ஞாபகம் இல்ல போல ” என்று முறுக்கி கொள்ள…

“மதுமொழி ” என்றதுடன் கோபமான முகம் உள்ள எமோஜியையும் அனுப்பி வைத்தான்..

அதை கண்டு சிரித்தவள் “பாருடா என்னோட முழு பேர சொல்றீங்க, அப்போ கோபமா இருக்கீங்க போல . சரி அப்போ நான் பேசல ” என்று வாயை மூடிக் கொள்ளும் எமோஜி அனுப்பி வைத்தாள்…

“சரி சரி போதும் வருங்கால கணக்கு டிச்சரே . இன்னைக்கு காலேஜ் எப்படி போச்சி ஸ்டடிஸ்லாம் எப்படி போகுது ” என்று அனுப்ப

“அது எங்க போகுது நான் தான் போயிட்டு போயிட்டு வந்துட்டு இருக்கேன் ” என்று மொக்கையாக கடித்தவளின் மெசேஜை கண்டு அவன் உதடுகள் முறுவலுட்டது..

“என்ன பதிலையே காணோம் ” தட்டி விட…

” எவ்வளோ பெரிய காமெடி சொல்லிருக்கீங்க மொழி அதான் சிரிச்சிட்டு இருக்கேன் ” என்றான்…

“ஹாஹா செம்ம காமெடி ” என்று சிரிக்கும் பொம்மை போட

” என்ன இவ்வளவு நேரம் ஆன்லைன்ல இருக்க இன்னேரம் நீ தூக்கில இருப்பியே ” என்று பிறை கேட்க…

மதுமொழி இன்று நடந்த அத்தனை நிகழ்வுகளும் சொல்ல அவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை…

“உன்ன விட்டு அவுங்க போயிருக்காங்கன்னா, அவுங்கள விட உனக்கு அன்பு காட்ட யாரோ இருக்காங்கன்னு நம்பிக்கைல தான் பொயிருக்காங்க ” என்று அனுப்ப…

அவளின் மனதில் அவள் உயிரை காப்பாற்றிய கள்வனே மனதில் தோன்றி மறைய அவளின் பலூன் கண்ணங்கள் ஏனென்று தெரியாமலே வண்ணம் பூச தொடங்கியது…

அதன்பிறகு இருவருமே குட் நைட் சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டனர்…

மதுமொழி தாயையும் தந்தையையும் ஒரு விபத்தில்  இழந்து  கோவையில் இருந்த அனாதை இல்லத்தில் அடைக்கலம் ஆனாள். இப்போது பி.எஸ்.சி மேக்ஸ் இறுதி ஆண்டு படித்து வருகிறாள். இவளின் உலக வட்டாரம் மிகவும் சிறியது கிருஷ்வந்தி லாவண்யா மற்றும் குழந்தைகள் என அவளின் உலகத்தில் இருவர் புதியதாக சேர்ந்தன ஒன்று பிறைசூடன் மற்றொன்று அவளின் கள்வன்…

இருவரது நட்பும் முகநூலில் தான் ஏற்பட்டது. பிறை போடும் தத்துவம் இமேஜ் இவளிற்கு பிடித்து போக லைக் கமெண்ட்ஸ் என்று போய் இருவரது நட்பும் ப்ரைவேட் சாட்டில் கொண்டு வந்து விட்டது. இதோ இவர்களது நட்பு தொடங்கி ஆறு மாத காலங்கள் முடிந்து விட்டது…

நாட்கள் அதன் போக்கில் செல்ல மதுமொழி மட்டும் அவளின் கள்வனாய் அவளிடம் விளையாட்டு கொண்டிருக்கும் அவனை தேடுலில் ஈடுபட்டு கொண்டிருந்தாள்..

ஆனால் அவனின் கண்ணாமூச்சி ஆட்டம் தொடர் கதை போலவே நீண்டுகொண்டே போனது..

மதுமொழியின் இறுதி தேர்வுகள் வரவே பிறை மேக்ஸ் ப்ரோப்வசர் என்பதால் அவளின் விடை அறியா கேள்விகளுக்கு விடை அளித்தான்..

அவனின் உதவியால் மது அவளது இறுதி தேர்வை முடித்திருந்தாள்.

மதுமொழிக்கு சென்னையில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அங்கிருந்த ஒரு பள்ளிக்கு அவளது ரெஸ்யூம் அனுப்பினாள்.

மதுவின் ஆசைக்காக கிருஷ்வந்தியும் அதே பள்ளிக்கு போட லாவண்யா வேறு வழியின்றி போட்டாள்..

லாவண்யா மற்றும் மது  இருவரும் பேசிக் கொள்ளாவிட்டாலும் இருவரும் பிரிந்தது இல்லை..

அவர்கள் அனுப்பிய ரெஸ்யூமிற்கு இன்டர்வியூக்கு வரும் படி மெயில் அனுப்பி இருக்க மூவரும் அவர்கள் வளர்ந்த இடத்தை கனத்த மனதுடன் விட்டுவிட்டு வெளியே வந்தனர்…

அடுத்தநாள் காலை அவர்கள் சென்னை வந்து சேர..,,மூவரும் ஏற்கனவே பிறையின் மூலமாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்துக் கொண்டனர்…

அடுத்தநாள் மூவரும் இன்டர்வியூ அட்டன் செய்ய அதில் மூவருமே செலக்ட் ஆகினர்…

அதன் பின் நாட்கள் எல்லாம் பள்ளி, பள்ளி விட்டா வீடு‌ என்றே ஆகிப்போனது..வார இறுதியில் சென்னையை சுற்றி வர செய்தனர்..

இதற்கிடையில் மதுமொழிக்கு பிறந்தநாள் வர அவளின் சம்பளத்தில் அவளது தோழிகளுக்கு ட்ரீட் வைக்க முடிவு செய்து அழைத்து வந்திருந்தாள்…

அதேபோல் பிறைக்கும் அழைப்பு விட்டிருக்க அவனும் வருவதாக ஒப்புக்கொண்டான்..

அவனை இன்று தான் முதன்முதலில் காண போகிறாள். ஆர்வத்துடன் அவனுக்காக காத்திருக்க தொடங்கி இருந்தாள்…

“ஹே உக்காரு டி அவுங்க வருவாங்க. இப்படி நீ எட்டி எட்டி பார்த்தா மட்டும் உனக்கு அது அவுங்க தான்னு தெரியவா போகுது சொல்லு” என் கிருஷ்வந்தி கிண்டலடிக்க…

” ஹே கலாய்க்காத டி கிட்டத்தட்ட ஒரு வருஷம் நட்பு டி அது . இன்னைக்கு தான் அந்த நட்ப பாக்க போறேன் அதான் கொஞ்சம் எக்ஸைட்டிங்கா இருக்கேன் ” என்றாள் வெளியே பார்த்த படி…

“ரொம்ப நேரமாச்சி நாம இங்க வந்து . அவுங்கள இன்னும் காணோம் .இதுக்கு தான் சொல்றது யாரையும் நம்ப கூடாதுன்னு ” என்று லாவண்யா பொரிய ஆரம்பிக்க..

அவளை பார்வையினாலே அடக்கினாள் மதுமொழி. இதனை கண்ட கிருஷ்வந்திக்கு ஈ ஆட வில்லை…

“என்னடி ” என்று பார்வையால் லாவண்யா கிருஷை பார்த்து கேட்க

” ஒன்றுமில்லை” என்று தலையசைத்தாள்…

“பிறை அவுங்களுக்கு கால் பண்ணி கேள்ளு அவுங்க எங்க வந்துருக்காங்கன்னு ” என்று லாவண்யா சொல்ல

சரியென்று தலையசைத்தவள் சிறிது தூரம் சென்று அவனுக்கு டயல் செய்ய அடுத்த நொடியே அவன் மொபைலை உயிர்பித்தான்.

“எங்க  இருக்கீங்க பிறை ..??” என்று கேட்க

“இதோ உங்களுக்கு பின்னாடி தான் வந்துட்டு இருக்கேன் “என்று சொல்ல உடனே திரும்பிய மது விழி விரித்து நின்றிருந்தாள் அவனை கண்டு….

அவள் இதழ்கள் “பிறை ” என்று சொல்ல கண்களிலோ கண்ணீர் துளி வெளியே எட்டிப் பார்த்தது…

ஓடிச் சென்று அவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் . இதனை சிறிதும் பிறை எதிர் பார்க்க வில்லை திடுக்கிட்டு நிற்க அதேபோல் தான் கிருஷ்வந்தியும் லாவண்யாவும் நின்றிருந்தனர்…

அவளை விட்டு விலக்க நினைத்தாலும் அவளின் பிடி அவனை விட்டு தள்ள விட வில்லை..

“மது என்னப் பண்ற பிறை அவுங்கள விடு ” என்று லாவண்யா கூற…

“வணி மா இது யாருன்னு தெரியுமா இவர் தான் அது என் உயிர காப்பாத்தியது ” என்று அவனை விட்டு விலகி நின்று கூற..

அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று கிருஷ்வந்திக்கும் லாவண்யாவுக்கும் புரி பட இவளின் பேச்சை கண்டு விழி விரித்து நின்றான் அவளின் கள்வனான பிறைசூடன்..

இங்க என்ன நடக்குது  என்று அவனுக்கு புரிபடுவதற்குள் ” ஐ லவ் யூ மிஸ்டர் பிறைசூடன் ” என்று கூறி இடம் பொருள் ஏவல் பாராமால் அவள் காதலை வாய் மொழி உணர்த்த தொடங்கினாள்…

அவளை தன்னிடம் இருந்து பிரித்தவன் மொழியின் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்…

“என்ன நினைச்சிட்டு இருக்க நீ ஒரு ஃப்ரண்டா உன் ப்ரேத்டே ட்ரிட்ன்னு சொல்லி கூப்பிட்டன்னு வந்தா இப்படி மோசமா பிஹேவ் பண்ற ” என்று கோபத்துடன் பொரிந்து தள்ள…

“இங்க பாருங்க பிறை உங்கள பாக்குற வரைக்கும் எனக்கு தெரியாது நீங்க தான் நான் லவ் பண்ற பையன்னு .கிட்ட தட்ட உங்கள நான் உங்கள ஐஞ்சு வருசமா காதலிக்கிறேன் எப்போ என்னோட உயிர காப்பாத்தி எனக்கு தந்தீங்களோ அப்போவே இந்த உயிர் உங்களுக்காக தான்னு நான் முடிவு பண்ணிட்டேன் ” என்று நிதானமாக அழுத்தி கூறினாள்…

” லூசு மாதிரி பேசாத மொழி நான் உன்ன இதுவரைக்கும் பார்த்ததே இல்ல .இதுல எங்க உன்னோட உயிர காப்பாத்துறது ” என்று கடுங்கடுந்த கோபத்தை அடக்கிய படி கேட்க…

“ஐஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நானும் எங்க அப்பா அம்மாவும் ஒரு மேரேஜ்க்காக சென்னை வந்துருந்தோம். நான் அவுங்களுக்கு ஓரே பொண்ணு அதுனால வீட்ல ரொம்ப  ஓவ்வர் செல்லம். அதுக்காக நான் அத மிஸ்யூஸ் பண்ணது இல்ல . மேரேஜ் அட்டன் பண்ணிட்டு ஊருக்கு போகலாம்னு முடிவு எடுத்த போது நான் தான் கார் ஓட்டுவேன்னு அடம்பிடிச்சு ஓட்டிட்டு வந்தேன். எல்லாமே கரக்டா தான் போச்சி ஆப்போட்சிட்ல அந்த லாரி தாறுமாறா வரவரைக்கும் தான். சட்டென்ன அந்த லாரி ராங் பாத்ல திரும்பி எங்கள நோக்கி வந்துச்சி என்ன பண்றதுன்னு யோசிக்கிறதுக்குள்ள எல்லாம் முடிஞ்சிருச்சி . மூணு பேரும் இரத்த வெள்ளத்துள மிதந்தோம். எல்லாரும் ஓடி வந்து வேடிக்கை தான் பார்க்க செய்தாங்க யாரும் எங்கள காப்பாத்த வரல என்னோட உயிர் போகவா வேணாமான்னு மூச்ச இழுத்து இழுத்து விட்டுட்டு இருந்தேன். அப்போ தான் நீங்க அந்த கூடத்த தாண்டி எங்கள காப்பாத்த முயற்சி பண்ணிங்க . உங்கள கண்ணுல காட்டுன்ன எங்க அப்பா அம்மா அவுங்க உயிரை விட்டுட்டு நிம்மதியா போய் சேந்தாங்க .ஹாப்பிடல் சேர்த்து எனக்கு பிளட் குடுத்து என்னோட உயிர காப்பாத்திட்டு போனீங்க. உங்களோட காதல எனக்குள்ள பதிசிட்டு உதிரமா ஓட வச்சிட்டு போய்ட்டிங்க ” என்றாள் பெரு மூச்சுடன் கண்ணீர் வழிந்தது. இன்றும் அவளின் வாழ்வைய நாள்ளை நினைத்து கண்ணீர் மல்க நின்றிருந்தாள்…

“அந்த இடத்துல யார் இருந்தாலும் காப்பாத்திருப்பேன் மதுமொழி ” என்று சொல்ல…

அவர்களுக்கு தனிமை கொடுத்து இருவரும் வெளியே சென்றனர்…

” நீங்க காப்பாத்திருப்பீங்க தான் ஆனா துடிச்சிருக்க மாட்டிங்க மிஸ்டர் பிறைசூடன் ” என்றாள் நிதானமாக…

“அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது” என்று பதில் வேகமாக வந்தது…

“என்னால யாரையும் காதலிக்க முடியாது மதுமொழி உனக்கான நல்ல வாழ்க்கையை தேடி அமைச்சிக்கோ இப்படி லூசு மாதிரி பண்ணாத ” என்றவன் அந்த இடத்தை விட்டு நகர…

” உங்களால ஏன் என்னோட காதலை ஏத்துக்க முடியாது அதுக்கான ரீசனை சொல்லுங்க மிஸ்டர் பிறை ” என்று அவன் கையை பிடித்து நிறுத்திட…

பிறை அமைதியாக நிற்க ” சொல்லுங்க பிறை எதுக்கு இப்படி அமைதியா இருக்கீங்க ” என்று கத்த…

” ஏன்னா நான் பையன்னே இல்ல நான் ஒரு திருநம்பி போதுமா ” என்று அவளை விட இவன் அந்த இடமே அதிரும் படி கத்த…

அவளின் பிடி தளர்நதிட அவள் பிடித்திருந்த அவனின் கைகளை விடுத்துக் கொண்டான்…

“நான் பொண்ணா பிறந்து ஹார்மோன்ஸ் சேஞ்சஸ்னால இப்படி பையன்னா மாறிட்டேன் .என்னால உன்னோட வாழ்க்கைக்குள்ள வந்து நரகத்தை கொடுக்க முடியாது ” என்று விட்டு நகர்ந்து விட்டான்…

பிறை சென்றதை கண்ட இருவரும் உள்ளே வந்து அவளை பார்க்க அவளோ உயிரற்ற சிலையாய் அமர்ந்திருந்தாள்.

மதுமொழியால் எதுவும் யோசிக்க முடியவில்லை.

கிருஷ்வந்தி அவளிடம் வேகமாக வந்து அவள் தோளில் கை வைத்து சுய நினைவிற்கு கொண்டு வர தாயை கண்ட பிள்ளை போல் அவளை அணைத்துக் கொண்டு அழத் தொடங்கினாள்…

” இங்க பாரு மது  நீ காதலிக்கிறதுனால அவுங்களும் உன்ன காதலிக்கனும் எக்ஸ்பெக்ட் பண்ண கூடாது டா ” என்று அவளை ஆறுதல் படுத்த‌..

அவளிடமிருந்து பிரிந்தவள் கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு இருவரையும் வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டாள்..

அவளின் இந்த இருபத்தி ஒன்றாம் பிறந்தநாளில் அவள் வாழ்வே திசை திருப்பியது…

வீட்டிற்கு வந்தவள் எதுவும் பேசாமல் அறைக்கு சென்று விட்டாள்..

ஒரு மாத காலம் சென்றது வேகமாக மதுமொழி மற்றவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள்..

பிறை அவனின் முகநூலை டீஅக்டிவேட் பண்ணிவிட்டான்.

அன்று சனிக்கிழமையாக இருக்க ஸ்கூலுக்கு போயிட்டு வந்த மது எல்லா வேலையையும் முடித்து விட்டு அறைக்கு சென்று அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க தொடங்கினாள்…

அவளின் சிந்தனைக்கு தகுந்த யோசனை வரவே இதுனால்வரை துலைந்து இருந்த புன்னகை துளிர்த்தது…

அந்த நிம்மதியிலே இரவு உணவை முடித்து விட்டு உறங்கி போனாள்…

அடுத்தநாள் காலை பதினோரு மணி அளவில் மதுமொழியிடமிருந்து பிறைக்கு அழைப்பு வர அதை கண்டவனின் முகத்தில் எதுவும் பகுத்தறியா உணர்ச்சிகள் தோன்றியது…

அதை எடுத்து உயிர் பித்தவன் காதில் வைக்க ” பிறை அண்ணா ” என்ற கிருஷின் குரல் வர

“சொல்லு மா. மொழி ஃபோன்ல இருந்து கூப்பிட்டிருக்க  ” என்று கனிவுடன் கூற..

” அண்ணா கொஞ்சம் இந்த ஹாஸ்பிடல்லுக்கு வர முடியுமானா ” என்று கேட்க..

” ஹாஸ்பிடல்லா ” என்று பதறி கேட்க

” ஆமாம் அண்ணா இந்த மது …” என்று சொல்லி முடிப்பதற்குள் லைன் கட்டாகியது…

பிறையின் மனது ” மொழிக்கு என்ன ஆச்சி ” என்றே பதற

எதையும் பற்றி யோசிக்காமல் கிருஷ்வந்தி சொன்ன மருத்துவமனைக்கு பதறியடித்து ஓடி வந்தான்…

அவளின் பெயரை சொல்லி அவள் அறைக்கு வந்து பார்க்க வாடிய பயிராய் படுக்கையில் படுத்திருந்தாள் மதுமொழி…

பக்கத்தில் இருந்த லாவண்யாவிடம் ” என்ன ஆச்சி மொழிக்கு ” என்று கேட்க

” அவ அவளோட கர்ப பையை எடுத்துட்டா  அண்ணா ” என்று கண்ணீர் மல்க அவள் சொல்ல…

இதை கேட்ட அவனுக்கு கண்ணீர் வந்தது . அவனின் கண்ணீர் துளி அவள் கையில் பட மெதுவாக இமை திறந்தாள்…

பிறையை கண்டவள் வலியையும் தாண்டி இன்முகத்துடன் அவனை எதிர்கொள்ள…

” ஏன் டி இப்படி பண்ண ” என்று கேட்க…

” எல்லாம் உன்னோட காதலுக்காக தான்” என்று சொல்லி கண்ணடிக்க அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தான்…

“என்னக்காக இப்படி நீ பன்னுவன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை டி ” என்று அந்த அணைப்பில் சொல்ல…

” உன்னோட காதலை இதோ உன் கண்ணு மூலமா அன்னைக்கே நான் பாத்துட்டேன் டா . அதான் அதைய வெளிய கொண்டு வர நினைச்சேன் .இதோ இப்போ உன்னோட காதலும் என் கிட்ட வந்துருச்சி ” என்றாள் அழகாய்…

அதில் கிறங்கியவன் அவளையே பார்க்க அதில் வெட்கம் கொண்டு தலை கவிழ்ந்து கொண்டாள்…

“நான் ஒரு திருநம்பின்னு தெரிஞ்சும் நீ ஏன் நான் தான் வேணும்னு இப்படி ஒரு காரியத்த பண்ண ” என்று கேட்க..

“எல்லாத்துக்கும் என் காதல் தான் காரணம் டா. எனக்கு இந்த செக்ஸ்வல் முக்கியம் இல்ல அதுல வர குழந்தையும் முக்கியம் இல்ல உன்னோட காதல் மட்டும் தான் டா பெருசு.. உன்னால ஒரு குழந்தையை தர முடியாது அப்புறம் அது இருந்தா என்ன இல்லாட்டி என்ன ” என்று சறுவ சாதரனமாக சொல்ல…

அவனின் காதலை அவளுக்கு உணர்த்தும் பொருட்டு அவளின் இதழை தனதாக்கிக் கொண்டான். அவளும் அவனுக்கு சரிசமமான காதலை உணர்த்து வதில் பங்கு கொண்டாள்…

அடுத்து வந்த இரண்டு நாளில் மதுவை மருத்துவமனையில் இருந்து அழைத்து வந்தனர்…

ஒருவாரம் வீட்டில் இருந்து ஓய்வெடுக்க அவளை தந்தையும் தாயுமாக இருந்து அவளை கவனித்துக் கொண்டான்…

அதன் பின் இருவரது காதலும் ஒரு வருடத்திற்கு செல்ல இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து லாவண்யா மற்றும் கிருஷ்வந்தியின் முன்னிலையிலும் தேவர்களின் ஆசிர்வாதத்திலும்  அவர்களது திருமணம் இனிதே முடிந்தது…

மூவரையும் கரஸ்ஸில் பி.எட் சேர்த்து விட வேலைக்கு சென்ற படியே படிக்க ஆரம்பித்தனர்…

இருவரது காதலும் அவளின் படிப்பு வாழ்வில் மேலும் வளர்ந்தது…

இதோ மூவரும் அப்படி இப்படி என கல்லூரியில் படிப்பை முடித்தனர்..

மதுவின் நினைவில் எல்லாம் படமாக ஓட அதில் அவள் தன்னை தொலைத்து இருந்தவளை “மொழி ” என்று அழைக்க அதேநேரம் ” அம்மா ” என்ற குரலும் வரவே தன்னிலை வந்தாள் மதுமொழி..

ஒரே நேரத்தில் தன் கணவரையும் தன் மகளையும் காண இருவரும் இரண்டு கைகளிலும் ஐஸ்கிரீம் வைத்துக் கொண்டு நின்றனர்…

இதை கண்டவள் இருவரையும் முறைக்க ” அப்பா தான் வாங்கி கொத்தது (கொடுத்தது) ம்மா” என்றாள் மது பிறையின் தவப் புதல்வி பிறைநிலா. மொழியின் இல்லத்தில் இருந்து தத்தெடுத்து கொண்டனர்.

“மொழி நிலாவ நம்பாத அவ தான் எனக்கு ரெண்டு வேணும்னு கேட்டு வாங்கினா ” என்று சொல்ல

“நீங்க ரெண்டு பேரும் யாருன்னு உங்கள விட எனக்கு நல்லா தெரியும் சீக்கிரமா சாப்பிடுங்க கிளம்பனும் அப்போ தான் இருட்டுக்குள் போய் சேர முடியும் ” என்றவள் அவளின் கள்வனின் கையில் பாதி சாப்பிட்டு வைத்திருந்த ஐஸ்க்ரீமை வாங்கி சாப்பிட தொடங்கினாள்…

இதையே எதிர்பார்த்த அவனுக்கு முகத்தில் புன்னகை அறும்பியது.

சாப்பிட்டு முடித்தவுடன் மூவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றனர்.

நாளை கிருஷ்வந்தி மற்றும் லாவண்யாவுக்கு ஓரே மேடையில் திருமணம் வைத்திருந்தனர்.. ஒரு அண்ணணாக இருந்து பிறை இந்த திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தான்…

அடுத்தநாள் விடிய..,,நல்ல விதமாக இருவரது சங்கு கழுத்திலும் பொன் தாலி ஏறியது. அடுத்து நடக்க வேண்டிய அனைத்து சடங்குகளும் நடை பெற்று முடிய குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருந்தனர்…

💐💐முற்றும்💐💐

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!