யாகம் 25 02
யாகம் 25 02
யாகம் இருபத்து ஐந்து 02
ஒன்றோடு ஒன்று பின்னப்பட்ட, மரத்தின் வேர்களில் சில மண்ணிலிருந்து எழுந்து நிலத்தில் கோலமிட்டிருப்பது போல, பிரசாத்தின் கழுத்து நரம்புகள் புடைத்து எழ, கோவைப்பழமாக சிவந்த விழிகளும், முஷ்டியாக இருகிய கையுடன் தன் பால்கனியில் நின்றிருந்தான்.
கண்கள், அப்போது மொட்டு விரிந்த வெள்ளை ரோஜா இதழ்களில் துளியாக ஒட்டியிருந்த, தண்ணீர் திவளைகளைப் பார்த்தவனின் கண்முன்னே வந்தாடியது அமராவின் விம்பம்.
நேற்று ஒரே ஒரு துளி நீர் தான் அவளின் கண்ணிலிருந்து விழுந்தது. தலைநிமிர்ந்தாள், நேர்கொண்ட பார்வையிட்டாள், ஆளுமையாக வாதமிட்டாள், திமிராக தவறுகளை தெளிவுபடுத்தினாள், காணும் திசையெல்லாம் அவளின் விம்பங்களே பிரசாத்துக்குள் தீட்டப்பட, இப்போது இந்த நிமிடமே அவளை பார்க்க வேண்டுமென்று மனம் முறண்டுபிடித்தது.
ஆனால், அவள் தான் இப்போது இல்லையே. இல்லை அவனுடன் மெய்பொருளாய் இல்லை. ஆனால் ஆதிக்கப்பொருளாக அவனுள் அவள் ஆட்டிப்படைக்க, அவள் வைத்தியசாலையில் துஞ்சிக் கொண்டிருக்கிறாள்.
நேற்று, தாதிப் பெண் வந்து, அவசரம் என இசையை அழைக்க, இசையோ இருக்கையை விட்டு வேகமாக எழுந்து ஓடினாள். அவளுக்கு பின்னே, பிரசாத்தும் ஓட, அவர்களைத் தொடர்ந்த ஹஸ்வந்தை “வேண்டாம்டா, பிரசாத் பாத்துக்கட்டும்” என தடுத்துவிட்டான்.
‘ஏன்’ என ஹஸ்வந் பார்க்க, ‘எல்லாம் நன்மைக்கே’ எனும் விதமாக கண்னை மூடித்திறந்தான் இந்தர். அறையின் உள்ளே,
“லீவ் மீ” என சத்தம் போட்டுக் கொண்டே, கையில் ஏற்றப்பட்டிருந்த, குளுகோஸை கழட்டிக் கொண்டிருந்தாள் அமரா. “அண்ணி” என்று இசை உள்ளே நுழைய, “எங்க அவன், உன் மாமாவ எங்க ஒளிச்சு வைச்சிருக்க?” என்று இசையிடம் கடிந்தாள்.
“என்ன அண்ணி, புரியல. நீங்க முதல்ல உட்காருங்க” என இசை பேசிக் கொண்டிருக்கும் போதே, பிரசாத் உள்ளே வர, “தேவா, பிளீஸ் தேவா அவன்கிட்ட என்னக் கூட்டிட்டு போ தேவா. நான் நினைச்சது போலவே அமைராவையும்… இல்ல நான் அவனை இப்போவே கொல்லனும் லீவ் மீ” அவ் அறையில் அட்டகாசம் பண்ணியவள், வெளியே ஓடப்பார்க்க,
“அண்ணா” என்று கத்தினாள் இசை, “அமரா, சொல்றதைக் கேளு முதல்ல” என அவளின் கையைப் பிடிக்க, அதைத் தட்டிவிட்டு மீண்டும் ஓடப்பார்த்தாள்.
“தொடாத, தொடாத விடு என்னை” என அடங்கமறுத்தவளை, தன் கைவளைவிற்குள் கொண்டு வந்தவன் அவளைத் தனக்குள் இருக்கிக் கொண்டு, “காம் டவுன் அமரா” என மென்மையிலும் மென்மையாக கூற, மந்திரத்துக்கு கட்டுப்பட்டவள் போல ஒரு நிமிடம் அவனை ஏக்கமாக பார்த்தவள்,
“ஏன் எங்கள வாழ விடமாட்டிங்கலாடா” என்று நைந்து போன குரலில் கிசு கிசுத்தவள், அடுத்த கணமே “கருவருக்கனும் உங்க குடும்பத்தை சும்மா விடமாட்டேன். ஆஆ தலை..தலை” என்று அவனின் அணைப்புக்குள்ளேயே திமிர, ‘ஏதாவது பண்ணு’ என இசைக்கு கண்ணைக்காட்டியவன்,
அமராவின் பிடரியை அழுத்தமாக பிடித்து தன் தோள் வளைவிற்குள் புதைத்துக் கொள்ள, இசை மயக்கமருந்து ஏற்றப்பட்ட ஊசியை அவளின் புஜத்தில் ஏற்றினாள். ஏதோ பிதற்றிய வண்ணமிருந்தவளை, கட்டிலில் தூக்கிச் சென்று படுக்கவைத்த பிரசாத், முதல் முறையாக அவளின் நுதழ் முடிகளை சரி செய்து விட்டு, கேசங்களைக் கோதிவிட்டான்.
“அண்ணா” குழம்பியவளாக இசை அழைக்க, “போ இசை போய் அம்மாவைப் பாரு” என வெளியில் அவளை அனுப்பி. “நான் பாத்துக்கிறேன்” என தாதியையும் வெளியில் அனுப்பியவன், நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகில் அமர்ந்தான்.
நிர்மலமான முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டிருந்தவளின், மூச்சுக்கள் சீராக ஏறியிரங்கின. செயற்கைத் தூக்கம். மயக்கஊசி செலுத்தப்படாவிட்டாள் எத்தனை ஆட்டம் ஆடியிருப்பாள். சிறிது நேரத்துக் கெல்லாம் அவளின் முகத்தையே பார்த்தவன், சட்டென, அவளின் தளிர் கரங்களை பிடித்து அதில் தன் நாசி, நயனங்களைப் புதைத்து அழத்துடங்கினான்.
மனதில் வெறுமையே மிஞ்சியிருந்தது. ‘ஏன்டீ இப்படி பண்ணுற’ அவளிடம் கத்த வேண்டும் எனத் தோன்றியது. அவனின் கவலைகளின் வடிகாலாக அவள் மாறவே மாட்டாளா, மாம்பழ வண்டாக மனதை வினாக்கள் குடைந்தன.
சட்டென பிரசாத்தின் வலது தோளில் ஒரு அழுத்தம் இறங்கியது. தலையை மட்டும் சற்று சரித்துப் பார்த்தால், மீண்டும் பலரசத்துடன் ஹஸ்வந்தும் இந்தரும் நின்றிருந்தனர்.
“குடிங்க பிரசாத்” என ஹஸ்வந் நீட்ட, மறுப்பாக தலையசைத்த பிரசாத், சற்று முன்னும் ‘குடும்பத்தை கருவருப்பேன்’ என கத்தியதைக் கூறி, “அவ, என்னை வெட்டி பொலி போட்டாலும் எனக்கு எதுவுமே வலிக்காது. ஏன்னா இங்கே ஏற்கனவே பாரமா ஏறிப்போய் கிடக்கு வலியும் வேதனையும்” தன் இடது பக்க மார்பை வலது கையால் அழுத்திப் பிடித்தவனாக கூறினான்.
“அவ தூங்கட்டும் வெளியே போய் பேசலாம்” இந்தர் இருவரையும் வெளியே அழைத்துச் சென்றவன் மீண்டும் நடைக் கோடியிலிருக்கும் ஜன்னலருகில் வந்து நின்றான்.
“முதல்ல இதைக்குடிங்க” வற்புருத்தலாக அவனை குடிக்க வைத்த பிறகே, “நாங்க சாப்பிடாம, குடிக்காம கூட வாழ்ந்துருவோம். பட் நீங்க டெயிலி டையட்ல இருக்கிங்க. டைம்க்கு புரோட்டின் எடுத்துக்கனும்ல. உங்க ப்ரொஃபஷ்னல் இம்ரூவ்மெண்ஸும் முக்கியம் தானே” பிரசாத் சற்றும் எதிர்பார்க்காத வார்த்தைகளை மொழிந்திருந்தான் ஹஸ்வந்.
“வெல், இப்போ சொல்லுங்க. என்ன கேட்கனும்” இந்தர் வினவ, “எனக்கு என்னைப் பத்தி எதுவும் கவலை கிடையாது. பட் இசை, கவி, அம்மா அவங்க பாவம். அம்மாக்கு இதுலாம் தெரி…” பிரசாத்தின் இடையில் புகுந்த இந்தர்,
“அம்மாக்கு எதையுமே சொல்ல வேண்டாம்னு அமரா சொல்லிருந்தா. இசை, கவிக்கு எல்லா பிராப்லமும் தெளிவா சொல்லனும் அமரா முடிவெடுத்து இருந்தா. குடும்பத்தை பலி வாங்குவேன்னு கோபத்துல தான் சொல்லுறா தவிர, அவளுக்கு அந்த எண்ணம் சுத்தமா கிடையாது” என்ற இந்தரை புரியாத பார்வை பார்த்த பிரசாத்திடம்,
“எங்களுக்கு அவள இருபத்தைஞ்சு வருஷமா தெரியும். அவ மூச்சுவிட்டாக் கூட அதற்கான பொருள் என்னனு தெரியும். அவளுக்கு பழி தீர்க்குற வஞ்சகம் இருந்தது தான் ஆனா அது உங்களைக் கிடையாது. அவ அம்மாவுக்கு தேவான்னா உயிர்னு அவளுக்கு நல்லாவே தெரியும். அது மட்டும் இல்லாம..” ஹஸ்வந் பேசவும்,
“பெத்தவங்க பாவத்துல முழுசயும் அவ பிள்ளைங்களுக்கு திணிக்க விரும்பல, ஜஸ்ட் உங்கள கொஞ்சமே கொஞ்சம் அழ வைக்கனும்னு நினைச்சா. அவளுக்கு இசை, மேகம் மேல எந்த தனிப்பட்ட பகையும் கிடையாது. எண்ட் மறந்தும் கூட அமராகிட்ட இசையையோ இல்லை மேகத்தையோ கஷ்டப்படுத்த நினைச்சியானு கேட்டுறாதிங்க.” இந்தர் கூறினான். அதற்கு பிரசாத் ‘ஏன்’ என நோக்க,
“எம் ஐ எ மேட், ஆர் சைக்கோனு கேட்பா அது மட்டும் கிடையாது, அவளுக்கு நோ மீண்ஸ் நோ தான். பிசிக்கல் ஹராஸ்மன்ட், அப்யூசன் எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நாங்க எங்க பொண்டாட்டி கையால அடி வாங்கினா கூட சந்தோச படுவா பட் அவங்க மேல நாங்க கைய வைச்சிருந்தா, எங்க கன்னமும் பழுத்திருக்கும்” ஹஸ்வந் மிகைப்படுத்தாமல் உண்மையை கொட்டினான்.
பிரசாத்தோ மேலும் ஆச்சரியமாம பார்க்க, “அமரா ஒரு கேள்விக்குறி பிரசாத். அவளை பத்தி தேடத் தேட கண்டிப்பா நீங்க, அவளுக்குள்ள வீழ்ந்திடுவீங்க” மென்மையாக பிரசாத்தின் புஜத்தில் தட்டிக் கொடுத்தான் இந்தர்.
இந்தரின் விளக்கத்திற்கு எவ்வாறு பிரதிபலிப்பது என்று அறியாத பிரசாத், “அவ தலைவலினு ஏதோ” அவன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, காந்திமதி அம் மூவரின் அருகிலும் வந்தவர்,
“அமைரா குட்டி இப்போ நார்மல் ஆகிட்டா. நவ் சீ இஸ் சிலீப்பிங். கண்ணுக்கு முன்னே எதையோ பார்த்து பயந்து போனதால, வந்த மயக்கம் தான். எண்ட் அமரா…” அவர் நெற்றியை நீவ,
“என்னாச்சு” ஆண்கள் மூவரும் ஒருமித்த குரலில் வினவ, “நத்திங் டூ வொரி. முன்னமே ஏக்சிடன்ட் ஆனப்போ, தலையில சின்னதா க்லாட் இருந்திச்சே.” காந்திமதி கூற,
“அதை ரிமூவ் பண்ணியாச்சே மதிமா” பதட்டமாக ஹஸ்வந் கேட்க, “ஆனா அவ அதிகமா நேர்வஸ் ஆககூடாதுனு டாக்டர்ஸ் சொன்னாங்க இல்ல” இந்தர் கேட்க,
“எஸ், கொஞ்ச நாளவே ஏதோ திங்கிங்ல இருந்திருப்பா போல. அவளைத் தெரியாதா நமக்கு. வெளியவும் சொல்லிக்க மாட்டா. லாஜிக்கல் மைண்ட்க்கு ஓவர் பிரசர் ஆனாதால தான் இப்படி. இரண்டு நாள் கண்டினியூவா சிலீப்பிங்ல வைச்சிருந்தா, சீ வில் பீ ஓகே” என்ற காந்திமதி,
“பிராசாத், உங்க அப்பாக்கு ஹெவி பிலட் லாஸ்ட். பிலட் பம்ப பண்ணியிருக்கோம். எண்ட் உங்க மாமா, அவரோட கேஸ் அன்பிரிக்டபில். கண்ணு முழிச்சதும் பாத்துக்கலாம். லோங் டேர்ம் சிலீப்பிங் போல. நாளைக்கு ராத்திரி வர பாத்துக்கலாம்” அவர் கூறிவிட்டு தலையசைப்புடன் செல்ல,
பிரசாத், அவனின் தந்தை மற்றும் மாமா பற்றி எதும் மேலதிகமா தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டவில்லை. நான்கு பேரும் நான்கு வைத்திய அறையில் உறங்கிக் கொண்டிருக்க, அவனுக்கு அது உறங்கா இரவாக மாறியது.
நேற்றைய சம்பாசனையும் சற்று முன் முற்றும் முழுதாக, உண்மைகளை இந்தரும் ஹஸ்வந்தும் தெளிவுபடுத்தியதையும் பிரசாத்தின் சிந்தனை வட்டமிட்டுக் கொண்டிருந்தது.
ஒரு வேளை, சேகரகுமாரின் தந்தை சீதாராமன், அரிதிலும் அரிதாக அன்று தன் மகன், மருகளை காணச் சொன்றிருக்காவிடின், இன்று அமரா, அமைரா இருவரும் சாம்பலாகி இருபத்து ஐந்து வருடங்களைக் கடந்திருக்கும்.
இளங்குருத்துக்கள் ஜீவித்தவுடனேயே மரணத்தை சுகித்திருக்கும் அல்லவா? தமிழ் நாட்டிற்றகு பிரிதொரு வியாபாரம் நிமிர்த்தம் வருகைதந்த, சீதாராமனின் மனதில் ஏதோ அசரிரி ஒலிக்கவே அவர், அன்று தன் மகன் மற்றும் மருமகளைத் தேடிச் சென்றதும். தோடலுக்கு விளைவாக, பெற்றவர்களை தொலைத்த மழலைகளை அடைந்ததும்.
எத்தனையோ செய்தாகிவிட்டார்கள், துரோகிகள் என வேலுவையும், நடராஜனையும் நினைத்திருந்த போது, யாரும் சற்றும் எதிர்பார்காத ஒன்று மேகவியின் தாயை, வேலு கொலை செய்தது. அன்று மேகவியின் தாய் மலர்வளையத்துக்கு மத்தியில், வெள்ளைத்துணியால் மூடியிருக்கும் போது,
என்னை தனியா விட்டுட்டு போயிட்டியே, என வேலு ஊர் ஜனத்துக்கு முன் என்னமா நடித்தார். “சே” என்று கையை முஷ்டியாக இறுக்கி, பால்கனி தூணில் ஓங்கி ஒரு குத்தை விட்டான் பிரசாத்.
‘அமராவா, அமைராவா இல்லை கவியா, இசையா வாழ்கையில் அவன் சந்திந்த அவனில் அதிகமாக தாக்கம் செலுத்திய பெண்களின் முகங்கள் மனதில் வந்து போக, கடைசியா ஒருத்தியிடம் போய் நின்றது அவன் மனது, அவள் அவனின் காதலி, ஆனால் இப்போது?’,
“மிஸ் வைட்டி” அவன் இதழ்கள் தானாக முணுமுணுத்துக் கொண்டன.
பத்து நிமிடங்களா இசைபிரபா, நீள்விருக்கையிலிருந்து அசையமறுத்து, தலையை நிமிர்ந்து அருகிலிருக்கும் ஹஸ்வந்தை ஏறிடாமல், கைகளில் தலையை அழுத்தப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
மேகவி, தன் தாயினைக் கூட தந்தை கொலை செய்து விட்டார், என அறிந்தவுடன், வேகமாக விம்மி வெடித்துக் கொண்டு அவளின் அறையை நோக்கி ஓட, இந்தர் அவளை ஏறிடவும்,
‘பார்த்துக் கொள்ளுங்க’ என்ற தலையாட்டலுடன் பிரசாத் தனது அறைக்குள் செல்ல, இந்தரும் தன் மனையாளின் பின்னால் ஓடினான்.
“பிரபா” திமிர்த்துப்போய் உட்காந்திருக்கும் இசைபிரபாவை, ஹஸ்வந் அழைக்க, மூன்றாவது முறையாக அவனின் கன்னத்தில் கைகளை இறக்கினால் இசை.
“எ..என்ன பிரபா? நீ என்ன என்ன காரியம் எல்லாம் பண்ணியிருக்க, பலிவாங்கினது தப்புனு சொல்லல. ஆனா நீ என்னை ஏமாத்தியிருக்க. என்னைக் கடத்தியிருக்க. அப்போ நீ தானே எனக்கு டிரக்ஸ் ஊசி போட்ட…” அவள் கேபமாக கத்த,
“ப்ச், எப்போ பிரபா என்னை புரிஞ்சிக்க போற. இல்லை எப்போ என்னை புரிஞ்சிக்க போற. எனக்கு ஒன்னு மட்டும் புரியல? நான் என்னோட காதலை சரியா வெளிக்காட்டவே இல்லியா” நொந்து போனவனாக மெல்லிய குரலில் கேட்க,
அப்போது தான் புத்திக்கு உரைத்தது, ‘இசை, ஏன்டீ ஹஸ்ஸூனு வரும் போது பைத்தியமா நடந்துக்குற’ என மனது தூபம் போடவும்.
“சாரி, சாரி ஹஸ்ஸூ. நேத்துல இருந்து ஒரே டென்சன். நேத்து சாயந்தரம் அண்ணா ஃபோன பண்ணி, எல்லாரையும் ஹஸ்பிடல் கூட்டிவர சொன்னான். அப்போவே எனக்கு ஏதோ சரியில்லனு தோனிச்சு. சன்டே லீவ்ல இருக்குற என்னை மட்டுமில்லாம ஏன் எல்லோறையும் வர சொல்லுறான்னு தோனிச்சு,
யாருக்கு ஏதோனு படபடனு அடிச்சுக்கவே, ஹாஸ்பிடல் வந்தா நாளு பேரும் நாளு ரூம்ல படுத்து கிடக்காங்க, போலீஸ் வேற தோண்டி துருவி கேள்வி கேட்க. அண்ணா, நீ, இந்தர் மூனு பேரும் பதில் சொல்லிட்டு நிக்கிங்க. டாக்டரா வேக் பண்ணுவம்னு போன அங்க அமைராவை பார்த்தது ஆயிரம் கேள்விங்க.
சாரி ஹஸ்ஸூ தொடர்ந்து, அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியா. என்னை மன்னிச்சுரு, அது என்னவோ…” அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே,
அவளின் முகத்தை இழுத்து ஆழ்ந்த இதழ் முத்தமொன்றினை வைத்தவன், பின் விலகி, “டாக்டருக்கு காதல்னூ வியாதி வந்திருச்சு அதுதான் கேஸ் போடலாம்னு லாயரைத் தேடுறிங்க போல” கண்சிமிட்டி சிரித்தவன். அவளுடைய நெற்றியோடு நெற்றிமோதி,
“பிரபா, உனக்கு ஹஸ்ஸூ பைத்தியம் பிடிச்சிருக்கு, புரியலியா? எல்லாப் பொண்ணுங்களும் அதிகம் உரிமை இருக்குறவங்க கிட்டத்தான் சண்டை போடுவாங்கலாம்னு, ஃபார்வாட் மெசேஜ்ல படிச்சேன்” என அவன் கூற,
கோபம், சிந்தனை, தடுமாற்றம் என அத்தனை உணர்சிகளும் மறைந்து கிளுங்கினாள் இசை. “இந்த வாய் இல்லைனா, உன்னோட ஆட்டம் எல்லாம் ஓவர் ஹஸ்ஸு” என்றவள், அவனின் பக்கம் நன்கு வாகாக நெருங்கி அமர்ந்தவள்,
“எனக்கு எதுவுமே தெரிஞ்சிக்க வேணாம். நீ எது பண்ணியிருந்தாலும் எனக்கு பிராப்லமே கிடைாது, என் ஹஸ்ஸூ தப்பு பண்ணியிருக்க மாட்டான். ஐ ட்ரஸ்ட் ஹிம்” என்று கூறவும்,
“பட் ஐ ஹேவ் டூ டெல் பிரபா. எனக்கு உன்னைப் பார்க்கும் போது இனிமே குற்ற உணர்சியே வரக்கூடாது. வேற வேற உண..” வலது புருவத்தை உயர்த்தி நாக்கை கடித்து சிரிக்கவும், அவனின் தோளில் லேசாக தட்டியவள், பின் அத் தோளிலேயே சாய்ந்து கொள்ள,
“நான் சொல்லிடுறேன்” என்று அவளை அணைத்தவன், விளக்கங்களை கூற ஆரம்பித்தான்.
“உன்னைக் கடத்தி, உங்க அப்பாவை இரண்டு நாளைக்கு டென்சன் பண்ணி, அந்த பைத்தியம் தினேஷ் கூட உன் கல்யாணத்தை நிருத்த தான் பிளேன் பண்ணினோம். சோ உன்னை ஃபாலோ பண்ணி எவிடன்ஸ் இல்லாம தூக்கனும்னு, உங்கிட்ட ஃபிரண்ட் ஆக ட்ரை பண்ணினேன். அதானல தான் காந்திமதிமா இருந்தும் உன்கிட்ட ஃபீவர்னு வந்து நின்னேன்” என்றான்.
“பட், அப்போ உண்மையா காய்ச்சல் அடிச்சிச்சே” இசை கேட்க.
“பின்னே சும்மாவா? நாளு மணிநேரம் ஸ்விம்மிங் பூல்ல இருந்து வெளிய வராம நீச்சல் அடிச்சா பீவர் வருமே. டாக்டர பார்க்க போக என்னால முடிஞ்ச ஒரு சின்ன வொர்க்கவுட். ஆனா சத்தியமா உன்னை முதல் தடவ நேரில், உன் ரூம்ல தான் பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது, இது வரைக்கும் பொண்ணுங் கிட்டேயே போக மாட்டேன் பட்…” இழுக்க,
“பட்?” என்றாள் இசை. “உன்னை ரொம்ப சைட் அடிச்சேன். ஆனா உண்மையிலயும் ஊசினா பயம்மா, அதான் கட்டி எல்லாம் பிடிக்க வேண்டியதா போச்சு. நெக்ஸ்ட் மீட்டிங் காந்திமதிமா ரூம்ல அது கோ இன்சிடன்ட்.
அந்த காஃபி ஷாப்ல நடந்தது பக்கா பிளானிங். உன்னை பார்த்துட்டு, பணம் கொடுத்து அந்த டேபில் ரிசேர்வ்ட்னு சொல்ல வைச்சேன். அடுத்த மீட்டிங்கும் திட்டமிடாத ஒன்று தான். அப்புறம் ஃபிரண்ஸ் ஆனோம்.
எல்லா சந்திப்பிலேயும் என் கண்ணு எனக்கே கட்டுப்படாம உன்னை சுத்தி சுத்தி ரசிக்கும். நானும் அடிக்கடி மீட் பண்ணுரமே அதுனால தான் இப்படினு விட்டுட்டேன். லாஸ்டா உன்னைக் கடத்த பிலேன் பண்ணினேன்.
உன் காரை பஞ்சராக்கினேன். பட் எனக்கு முன்னமே வேற ஒருத்தன் உன்னைத் தூக்கிட்டான்” அவன் பெருமூச்சை விட,
“யாரு? யாரு அது” எனக் கேட்டாள்.
“உன் ஃபிரண்ட் அறிவு. அவன் தான் உன்னைக் கடத்தினது. அந்த ஃபோட்டே எல்லாம் என் மெயிலுக்கும் உன் மெயிலுக்கும் அனுப்பினது” மொழியில் ஏகத்திற்கும் கோபமிருக்க செப்பினான் ஹஸ்வந்.
“ஏன்..” இசை வினவ, “அவன் காலேஜ்ல, எல்லார் முன்னாடியும் வைச்சு உனக்கு பிரபோஸ் பண்ணியிருக்கான், நீயும் சொல்லி சொல்லி பார்த்து முடியாம போக அவனை அடிச்சிருக்க. அந்த வெறியைத் தீர்த்துக்க,
உன் கிட்ட நல்லவன் வேசம் போட்டு ஏமாத்தியிருக்கான். உனக்கு கல்யாணம் கூடிய சீக்கிரம் நடக்கப்போகுதுனு தெரிஞ்சு அதை நிருத்தனும்னு உன்னைக் கடத்தி ஃபோட்டே எடுத்து மிரட்ட யோசிச்சு இருக்கான். அதனால உன்னை கடத்தின ரௌடிங்க கிட்ட மெடிக்கல் டிரக்ஸ் கொடுத்து உன் முகத்தை ஃபோட்டோ பிடிச்சி கேட்டிருக்கான்” ஹஸ்வந் உண்மை உடைக்கவும்.
“ச்சி ஸ்கவுன்டர்ஸ்” என அவள் சொல்ல, “இதுல அந்த சைக்கோ தினேஷ் வேறு ஒரு அடிமட்டமான காரியத்தை பண்ணியிருக்கான்,
என்னடா கல்யாணப் பொண்ணுனு சொல்றாங்க, ஆனா எப்போவும் திமிரா பேசுறாலே. இவளுக்கு ஏதோ சரியில்லைனு உன்னை ஒருத்தன விட்டு ஃபாலோ பண்ண சொல்லியிருக்கான்.
அந்த மடையனும், நீயும் நானும் லவ்வர்ஸ்னு நினைச்சு நம்மல ஃபோட்டோ எடுத்து அனுப்பியிருக்கான். கடைசியா உன்னைக் கடத்தினப்போ…”ஹஸ்வந் குறும்பாக சிரிக்கவும்,
“எ..என்ன?” இசை ராகம் பாட,
” அதுதான் நச்சு நச்சுனு கொடுத்தியே முகம் முழுக்க, அதை வீடியோ எடுத்து தினேஷ்க்கு அனுப்ப, அவன் உன் அப்பா, அண்ணாக்குனு அனுப்பியிருக்கான்…ம்ஹ் பைத்திய காரன் எனக்கு அனுப்பியிருந்தாலாச்சும்…” அவன் முடிக்கும் முன்னே அவனின் வாயை கையால் மூடினாள் இசை.
கல்லூரியில் தான் பட்ட அவமானம் என எண்ணி அறிவு, இசைபிரபாவைக் கடத்த, அதே நேரம் அவளை தொடர்ந்து கொண்டிருந்த, தினேஷ்ஷின் கையாள் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று உள்ளே நுழையும் முன்னே இசைபிரபாவுக்கு போதை ஊசி ஏற்றப்பட்டிருந்தது.
அவளை பின் தொடர்ந்தவனும், எப்படி உள்ளே சென்று பார்ப்பது என காத்திருக்க, எந்த அடியாட்களை வைத்து இசைபிரபாவைக் கடத்த சொன்னானோ அதே அடியாட்களுடன் இப்போது, அவளைக் காப்பாற்ற வந்திருந்தான் ஹஸ்வந்.
அவர்கள் அனைவருடனும் தினேஷ்ஷின் ஆளும் மறைந்து உள்ளே சென்று, ஹஸ்வந்தையும் இசையையும் காணொளி எடுத்து அனுப்பியிருந்தான் அவன்.
அக்காணொளியை வைத்து தினேஷ் இசையின் தந்தையுடன் சண்டையிட, ஏற்கனவே பாலில் அமரா கலக்கிய மருந்து வில்லை, இசைபிரியாவின் குரலில் பாடல் என அவருக்கு மாரடைப்பை ஏற்படுத்தியது.
அடுத்து, பிரசாத்துக்கும் அக் காணொளியை அனுப்ப, அவனோ கடைசியில் ஹஸ்வந்துக்கும், இசைக்கும் திருமணத்தையே பேசி முடித்தான். அறிவுவோ,
ஹஸ்வந்துடன் தான் இசையின் திருமணம் என தெரிந்து, வக்கிரமமாக சிந்தித்தவன், இசை திருமணத்தின் பின் நிம்மதியாக இருக்க கூடாது என திட்டமிட்டு புகைப்படங்களை போலியாக உருவாக்கினான். ஹஸ்வந்தின் முகவரி அட்டையை எப்படியோ கண்டுபிடித்தவன், அதிலிருந்த அவனின் மின்னஞ்சல் முகவரிக்கு, திருமணமான அடுத்த நாளே அப்புகைப்படத்தை அனுப்பி விளையாட ஆரம்பித்தான்.
இவ் உண்மைகளை தனது வழக்கறிஞர் மூளையையும், யூகங்களையும் வைத்து கண்டுபிடித்தான் ஹஸ்வந். அதனாலேயே அன்று வைத்தியசாலையில் வைத்து அறிவுடன் சண்டையிட்டான். அடுத்த நாளே அவனை தரத்தில் குறைவான வைத்தியசைாலைக்கு பணிமாற்றம் செய்ய வைத்து அவனின் வருங்காலத்தில் விளையாடினான்.
அடுத்து, ஹஸ்வந் அதிகமா நீதி உண்மை என்ற சொல்லுக்கு கட்டுப்பட்டவன். இசையிடம் எல்லாவற்றையும் மறைத்து திருமணம் செய்வதா? என்ற கேள்வி அவனை உருத்த, காதல் கொண்ட மனமோ, அவளில்லாமல் உனக்கு வாழ்க்கை ஏதாடா என வியாக்கியானம் பேசியது.
எனக்கு, அமரா மற்றும் இந்தரை தெரியும் என்றாவது சொல்லிவிட வேண்டும் என்றுதான் அவன் திருமணத்திற்கு முன் நாள் அவளைத் தனியே அழைத்தது.
உண்மையிலும் அமரா இந்தரின் திருமணத்தில் தான் பங்கெடுக்கவில்லை.
என்னை ஒரு ஓரமாக வைத்தாவது திருமணத்தை நிகழ்த்தவில்லை என்ற கோபத்தில் அவன் இந்தரைப் பார்க்கும் நேரமெல்லாம் முறுகிக் கொண்டுதான் இருந்தான். அதனால் தான் வைத்திய சாலையில் முறுக்கிக் கொண்டு நின்றது.
எப்படியோ திருமணம் முடிந்திருந்த போதும் அடிக்கடி அறிவு அனுப்பியிருந்த புகைப்படத்தால் இசை, ஹஸ்வந்திற்குள் பிரட்சினைகள் மூண்டன. இசை மகவை சுமக்கிறாள் என்றதும் எத்தனை உவகையிருந்ததோ, அதே அளவு கவலையும் அவனிடத்திலிருந்தது.
அமரா, குறிப்பிட்ட சில நாட்களாக யோசனையில் சுற்றுவதை அவன் அவதானித்துக் கொண்டிருந்தான். தானும் உண்மையைக் கூறாமல் இசையுடன் வாழ்ந்து விட்டேன் என்ற குற்றவுணர்சியிலேயே, அன்று அவனின் நடவடிக்கை மாறியது. ஆனால் பின் கடற்கரையில் யோசித்து முடிவு எடுத்தவனாகவே அன்று இரவு இசையிடம் அவன் பேசியது தான்.
“இவ்வளவு தான் பிரபா! ஆரம்ப நாட்கள்ல நீ அந்த ஃபோட்டோவ. பார்த்துட்டு பிதற்றும் போது எல்லாமே, நான் தனிய உக்காந்து நோந்து போயிடுவேன். இங்க பொண்ணுங்க தைரியமாயிருக்கனும்னு சொல்லுற சமூகம் ஆண்களுக்கு பெண்களை மதிக்கனும்னு சொல்லிக் கொடுக்கிறது கிடையாது. அதுனால தான், உன் உணர்வுகளோட விளையாடி பார்க்கனும்னு அந்த தினேஷ் எண்ட் அறிவு நினைச்சாங்க.” அவன் முடித்ததும்,
“ல்வ் யூ ஹஸ்ஸூ” என அவன் முகம் முழுக்க முத்தமிட, “நம்ம இருக்கிறது நடு ஹால்மா, நம்மலோட ரூம் இல்லைடாமா” என்றான் ஹஸ்வந்.
“ம்கூம்! அமரா என்னை விட்டுட்டு போக சொன்னா போயிடுவியா? ஹஸ்ஸூ” சம்மந்தமில்லாமல் வினவவும்.
“நான் உன்னை லவ் பண்ணுறன்னு அவளுக்கு எப்போவோ தெரியும். இவ்வன் நானே உணரதுக்கு முன்னமே அவ கண்டுபிடிச்சி கேட்டா. நான், பிரபா ஏதோ கொஞ்சம் அழகாயிருக்கா அதுதான் பார்க்குறேன் போலனு சொல்லியிருந்தேன்.
அப்போவே அவ சொன்னா, ஒரு வேளை எனக்கு விருப்பம்னா உன்னைக் கல்யாணம் பண்ணிக்கோனு. அப்போலாம் எனக்கு அந்த ஐடியாவே கிடையாது.”, “ச்ச், வலிக்குது பிரபா” அவனின் பேச்சுக்கு அவள் அவனின் கையில் நருக் என கிள்ளியிருந்தாள்.
“அட! நம்ம கல்யாணத்தப்போ அமரா செல்லியிருந்தடா, என் கிட்ட, உன்னோட காதல் உனக்கு கிடைக்குது, அதனால விட்டுடாத கெட்டியா புடிச்சிக்கோனு சென்னா. எண்ட் என்னோட சந்தோசம் எல்லாமே அவளுக்கும் சந்தோசம் தான். உங்க யாருக்கும் அவளை சரியா தெரியல, கொஞ்ச நாள் பலகி பாரு. சீ இஸ் ஆன் ஏன்ஜல்” அழகாக உதடு விரித்து, வரிசையாக வெண்பற்களை காட்ட,
“ஹஸ்ஸூ, நீயா என்னை காதலிச்சியா இல்லை நானா உன்கிட்ட வந்து புரெப்போஸ் பண்ணவும்…” தயக்கமாக பிரபா பேச,
“மக்கு டாக்டர். ஆரம்பத்துல எனக்கு காதல் எதுவும் கிடையாது, பட் சீக்கிங் ஓப் அட்ராக்சன் இருந்திச்சு. உன்ன எப்போ என் முன்னே கடத்திட்டுப் போனாங்களே, அப்போ துடிச்சிச்சு என்னோட இதயம். முன்ன பின்ன அதிகமாக தெரியாத எங்க ஏதிரி பொண்ணுலேயே, தலைக்குப்புற விழுவேன்னு எனக்கு தெரியாம போச்சே. அதிலேயும் அந்த ராத்திரி வண்டி கூட ஓட்ட விடாம டெம்ட் பண்ணியே, முடிவாச்சு கட்டினா இவள கட்டுறோம், இல்லைனா கட்டுறவன் தலையை வெட்டுறோம்னு” கலகலவென சிரித்தவனின்,
கண்ணோடு கண் கலக்கவிட்டவள் அவனின் கண்ணுக்குள் மணியாகி, உயிருக்குள் உயிராகிப் போனான்.