யாழ்-14

IMG-20210214-WA0021-fe5f935b

யாழ்-14

அடுத்தநாள் காலை கண்விழித்த ராஷ்மிகாவிற்கு எங்கே இருக்கிறோம்
என்றே புலப்படவில்லை. பத்துநொடி விழித்தவளுக்கு அப்போதுதான்
நேற்று நடந்தது கண்முன் வந்து விரிந்தாடியது.

“ஷிட்!” தன்தலையில் அடித்துக்கொண்டவள் எழுந்து சென்று முகத்தைக்
கழுவிவிட்டு வெளியேவர, அறைக்கதவு தட்டப்பட்டது. அஸ்வினோ
என்று நினைத்தவள் பதில்பேசாமல் முகத்தை துடைக்க,

“ராஷ்மிகா!” செல்வமணி.

“ம்ம்… வரேன் ஆன்ட்டி!” கதவைத்திறந்தாள் ராஷ்மிகா.

“எழுந்தாச்சாம்மா?” கேட்டவர், அவள் கையில் ஒரு பேஸ்ட், ப்ரஷ்,
பாடிவாஷ், ஷாம்பு அனைத்தையும் தந்தார்.

“உன் ட்ரெஸ்சைஸ் என்னன்னு சொல்லு ராஷ்மிகா! நம்ம
கடையிலருந்து இப்போதைக்கு எடுத்துட்டுவர சொல்றேன். அப்புறம்
மெதுவா நம்மபோய் எடுத்துக்கலாம்” அவர் பாசத்தோடு பேச, ‘இவரோட
பையனா, இந்த சிடுமூஞ்சி அஸ்வின்’நினைத்தாள் ராஷ்மிகா.

அவளுடைய சைஸ் அனைத்தையும் அவள் சொல்ல மனதில்
குறித்துக்கொண்டார். “சரி ராஷ்மிகா… நீ எல்லாம் முடிச்சிட்டுவா டிபன்
சாப்பிடலாம்” சொல்லிவிட்டுச் செல்ல அங்கிருந்த சுவர்கடிகாரத்தைப்
பார்த்தவள் வாயைப்பிளந்தாள்.

மணிஆறுதான் ஆகியிருந்தது. பொதுவாக அவள் எழும்நேரம்
இதில்லை. புதிடம் என்பதால் தூக்கம் வராமல் எழுந்துவிட்டாளோ
என்னவோ. ஆனால், ஆறுமணிக்கே மங்களகரமாய் மாமியார் நின்றது
நினைவுவர, ‘இவங்க எத்தனை மணிக்கு எந்திரிச்சிருப்பாங்க’என
நினைத்தாள். ‘இனிமே நம்மலும் இந்த டைமுக்குதான்
எந்திரிக்கணுமோ’ நினைக்க அவளது மனம் சிணுங்கியது. 

எல்லா வேலைகளையும் முடித்துக்கொண்டு ராஷ்மிகா வெளியேவர,
கீர்த்தி பூஜையறையிலிருந்து வெளியேவந்தாள். அவள் குளித்து
முடித்திருக்க, தான்இன்னும் இரவு உடையிலேயே இருப்பதை உணர்ந்த
ராஷ்மிகாவிழித்தபடி நின்றாள். அவளின் உணர்வு புரிந்தோ என்னவோ
தனது அன்னையிடம் சென்று, “அம்மா… அவங்களுக்கு ட்ரெஸ் எல்லாம்
எப்ப வரும்?” கீர்த்தி மொட்டையாகக் கேட்க,

“அது யாரு உனக்கு?” செல்வமணி.

“அவங்க அண்ணணோட வைஃப்” கீர்த்தி சொல்ல,

“அதான் உன் அண்ணன் பொண்டாட்டி உனக்கு என்ன வேணும்?” 
செல்வமணி கேட்க,

“அண்ணி!”.

“ம்ம்… அதான் முறை. இப்பசொல்லு என்ன சொல்ல வந்தேன்னு”
செல்வமணி கேட்க,

“இல்ல…. அண்ணிக்கு எப்ப ட்ரெஸ் எல்லாம் எடுப்பிங்க? பாவம்
அப்படியே நிக்கறாங்க…”கீர்த்தி கேட்க,

“இப்போதைக்கு ஜாக்கிங் போன உன் அண்ணன் அப்படியே எடுத்திட்டு
வருவான் நம்ம கடைக்கு போய்…” என்றவர், “ராஷ்மிகா காஃபி
குடிப்பதானே?” வெளியேவந்து வினவ ராஷ்மிகா தலையாட்டினாள்.

அவளுக்கு தன்வீட்டில் அதிகாரம் செய்தது எல்லாம் நினைவுவர மனம்
சுருங்கியது. அந்நேரம் அஸ்வின் வீட்டிற்குள் நுழைய முகத்தை
தெளிவாக வைத்தாள். “ராஷ்மிகா… காஃபி ரெடி!” செல்வமணி
அழைக்க, டைனிங்ஹாலுக்கு சென்றாள் ராஷ்மிகா.

“ம்மா… காஃபி”குரல் கொடுத்தபடியே ராஷ்மிகா அருகில்அமர்ந்தான்
அஸ்வின்குமார். அவனுக்கும் காஃபிவர, அவனிற்கு வைத்துவிட்டுச்
செல்ல கீர்த்தியும் காலேஜிற்கு ரெடியாக சென்றாள்.

அஸ்வினும் ராஷ்மிகாவும் தனித்து விடப்பட்டிருக்க அமைதியாக
உட்கார்ந்து காஃபியை உறிஞ்சிக்கொண்டிருந்தவளிடம் வம்பிழுக்க
எண்ணினான் அஸ்வின். அவளின் இந்த அமைதி அவனுக்கு
பிடிக்கவில்லையோ என்னவோ.

“என்ன… நீ காலேஜ் கிளம்பலையா?” வினவினான்.
வேண்டுமென்றேதான் வினவினான். ராஷ்மிகா அவனைத்
திரும்பிப்பார்க்க தனது ஜாக்கிங் சூட்டில் உட்கார்ந்திருந்தவன்
மௌனமாய் சிரித்தபடியே காஃபியை உறிஞ்சிக்கொண்டிருப்பது
தெரிந்தது அவளிற்கு.

“எது, இந்த ட்ரெஸோடையே காலேஜ் போகட்டா?” தனது நைட்டிரெஸை
சுட்டிக்காட்டிப் பேசியவள், “நான் வெளியில போய் மூஞ்சிய காமிக்கற
அளவுக்கா நீ பண்ணி வச்சிருக்க” சிடுசிடுத்தாள் ராஷ்மிகா.

“ஓஓ… வெளியே போனா உன் மூஞ்சிய மட்டும்தான் எல்லாரும்
பாக்கறாங்க!”, “அவ்வளவு அழகா இருக்கன்னு நினைப்பா?” அஸ்வின்
கேட்க,

“போடா நெட்டக்கொக்கு… நீ சொல்ற அளவுக்கெல்லாம் நான்
மோசமில்ல… அப்படியே இருந்தாலும் நீதான், என்னை கல்யாணம்
பண்ண! நான், உன் பின்னாடி வந்துக் கெஞ்சல…” வார்த்தைகளை
கடித்துத் துப்பியவள் எழ, இரும்பாய் அவள் கையைப்பற்றினான்
அஸ்வின்.

“இந்த திமிருதான்டி, உன்ன இந்த இடத்துல கொண்டுவந்து
நிறுத்திருக்கு” அவன் சீற, அதற்குள் செல்வமணி அங்குவர
ராஷ்மிகாவின் கையைவிட்டான் அஸ்வின்.

அவன் பிடிந்திருந்த கையைத் தேய்த்தபடியே தனக்குக் கொடுத்த
அறைக்குள் புகுந்துகொண்டாள் ராஷ்மிகா. அஸ்வினும் காஃபியைக்
குடித்துக்கொண்டு எழ, “குமரா!” செல்வமணியின் குரல் அவனைத்
தடுத்தது.

“இதென்ன கவர்?” மேசை மேலிருந்த கவரை சுட்டிக்காட்டிக் கேட்டார்.
அப்போதுதான் ஞாபகம் வந்தது அவனிற்கு…தான் ஜாக்கிங்
சென்றிருந்தபோது, அன்னை, அவனிற்கு அழைத்து ராஷ்மிகாவிற்கு
துணி எடுத்து வரச்சொன்னது.

“அது அவளுக்குதான் அம்மா!அவகிட்ட தந்திடுங்க”என்றான்.

“நீதானே, கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்த… நீயே போய் குடு
குமரா!”, “நான், உன் அப்பாக்கு காலையில டிபன் குடுக்கணும்”
என்றுவிட்டு அவர் செல்ல,

‘இப்பதான் அவகிட்ட வம்பிழுத்து வச்சேன். இனி போனா ஓவரா
பேசுவளே அந்த வாயாடி!’ நினைத்தவனை, ‘என்ன அஸ்வின்
பயப்படறியா?’ அவன் மூளை கேட்க, ‘ஹே! அவள பாத்து எனக்கு பயமா?’
 மனதால் நினைத்தவன் கவரை எடுத்துக்கொண்டு அவள் அறைக்கு
விரைந்தான்.

அவளை என்ன என்று அழைப்பது என நினைத்தவன் கதவைத்
தட்டினான். கதவைத் திறந்தவள் இவனைப் பார்த்தபின் எதுவும்
பேசாமல் உள்ளே திரும்ப அவள்பின் சென்றவன், “உனக்கு தேவையான
ட்ரெஸ் எல்லாம் இருக்கு” என்றவன் கவரை பெட்டின்மேல்
வைக்க, அவள் பேசவில்லை.

அவன் ஏதோ ஆரம்பிக்க, “ப்ளீஸ்! தயவுசெஞ்சு என்ன மறுபடியும்
இரிடேட் பண்ணாதே… நான் ஏதாவது சொல்லுவேன். அப்புறம், அதுக்கு
நீ ஏதாவது திருப்பி சொல்லுவ. தேவையில்லாம எந்தப்பேச்சும்
வேண்டாம்” அவனின் பேச்சைத் தவிர்க்க எண்ணி அவள் சலித்தபடி
பேச, அஸ்வினுக்கோ கோபம் ஏறியது.அவள் தன் பேச்சைத் தவிர்ப்பதா
அல்லது இப்படி அவனைக் குத்திக்காண்பித்ததா என்று தெரியவில்லை.
அவனிற்கு கோபம் ஏறியது.

“ஏய்! நான் என்ன உன்னை கூட்டிட்டு வந்து இங்க டார்ச்சர் பண்றமாதிரி
பேசற? என்ன சொல்ல வர்றேன்னுஃபர்ஸ்ட் கேளு. அப்புறம் அதுக்கு
என்கிட்ட வாயடிக்கலாமா இல்ல திமிரு காட்டலாமான்னு முடிவு
பண்ணு…” அதட்டியவன்,

“அம்மா, உனக்கு ட்ரெஸ் வாங்கணும்னு சொன்னாங்க. நானே உன்
சைஸ்க்கு எங்க கடைல இருந்து எடுத்திட்டு வரச்சொல்றேன். நீ ஒரு ஒன்
வீக் எங்கையும் வெளில போகாத. காலேஜூலயும் நான்
பாத்துக்கறேன்!” என்றவன், அதற்குமேல் எதுவுமில்லை என்பதுபோல
வெளியே சென்றுவிட்டான்.

அவள் யோசிப்பதற்கு நேரம் விடாமல் அவள் செல்போன் அலறியது.
சரண்தான் அழைத்திருந்தான். அவள் நேற்று கையில் வைத்திருந்தது
ஃபோனை மட்டும்தான். அவளுடைய காலேஜ்பேக் அனைத்தும் சரணின்
காரில் இருந்தது. தன்னை சரணும் நம்பவில்லையென்றால் என்று
யோசித்த ராஷ்மிகாவிற்கு பயமாக இருந்தது. முழுரிங் வந்து கட்
ஆனபின் ராஷ்மிகாவே மனதைத் தேற்றிக்கொண்டு சரணிற்குத்,
தானே அழைத்தாள்.

ஃபோனை எடுத்தவன் “ஸாரி ராஷ்மி!” என்றான் சரண்.

ராஷ்மியோ அவனது பேச்சில் வாய் திறக்கமுடியாமல் உட்கார்ந்திருக்க,
“ஸாரிடி… நேத்து அவன், உன் பக்கத்துல வர்றதை பாத்துட்டேன்…
நானும், சிவாவும் வர்றதுக்குள்ள எங்களை அவன் கார்ட்ஸ் எல்லாரும்
வந்திழுத்துட்டு போயிட்டாங்க”சரண் சொல்ல,

“பரவாயில்லை விடுடா! நீ என்ன பண்ணுவ சொல்லு?“ நண்பனை
சமாதானம் செய்தாள்.

“அம்மா, அப்பா, என்ன சொன்னாங்க ராஷ்மி?” சரண்.

“சரண்!” ஆரம்பித்தவள் எல்லாவற்றையும் சரணிடம் கொட்டித்தீர்த்தாள்.

“நான்அங்கிள்கிட்ட பேசட்டா ராஷ்மி!”

“வேண்டாம் சரண்… அப்பாவே ஒருநாள் புரிஞ்சுப்பாரு!” மறுத்தாள்
ராஷ்மிகா. ஆனால், தந்தையை நினைத்து ஊமையாய் அழுதாள்.

“சரி, எப்ப காலேஜ் வர்ற ராஷ்மி?” 

“தெரியலைடா. இப்போதைக்கு எனக்கு வர பிடிக்கல. இங்கையும்
இப்போதைக்கு வேணாம்னு சொல்றாங்க”

“யாரு சொல்றாங்க?”

“அவன்தான் அஸ்வின்!” பல்லைக் கடித்தாள். .

“அவரு உன் ஹஸ்பன்ட் ராஷ்மி..” சொன்ன சரணிற்கே சிரிப்பு
வந்துவிட்டது. பத்தாவதில் இருந்து பார்த்தவள் இன்று திடீரென
திருமதியானது, அவனிற்கு சிரிப்பைத் தந்தது.

“வந்தேன்னா, அடிச்சு மண்டைய உடைச்சிருவேன்டா…” ராஷ்மிகா திட்ட,

“ராஷ்மி… இனி நீ சொன்னாலும் சொல்லலைனாலும் மிஸஸ்.ராஷ்மிகா
அஸ்வின்குமார் தான் நீ!” என்றான்.

“…” ராஷ்மிகாவிடம் பதிலே இல்லை.

“ராஷ்மி இங்க பாரு, நடந்ததை எதும் மாத்தமுடியாது” அவளுக்கு
புரியவைக்க முயன்றான் சரண்.

“என்னால நடந்த எதையும் ஏத்துக்கமுடியல சரண். என்னை அப்பா
நம்பாம போயிட்டாரு. அவன் என்னை அழ வைக்கனும்னு நினைச்சான்
பண்ணிட்டான்” ராஷ்மிகா கரகரத்த குரலில் சொல்ல,

“ராஷ்மி, நான் முன்ன சொன்னதுதான். நடந்த எதையும் மாத்தமுடியாது.
இனி, நீ எடுத்துக்கிறதுலதான் இருக்கு. அதையே யோசிச்சு
குழப்பிக்காத!” ராஷ்மிகாவின் வாழ்க்கையை எண்ணி கவலை
கொண்டவனாய், நல்லநண்பனாய் அறிவுரை வழங்கினான் சரண்.

“ம்ம்!”, “சரி சரண்! ஆன்ட்டி கூப்பிடுவாங்க, வைக்கறேன்…” சொல்ல,
சரணும் வைத்துவிட்டான்.

ஃபோனை வைத்தவள் குளித்து முடித்துவிட்டு வெளியேவந்து,
ரெடியாகி அடுத்து என்ன செய்ய என்று நினைத்து அப்படியே
உட்கார்ந்துவிட்டாள். பசிவேறு எடுக்க அறையைவிட்டு வெளியே
வந்தவள் ஹாலிற்கு வர கீர்த்தி அமர்ந்து உண்டுகொண்டு இருந்தாள்.
அவளைப்பார்த்த கீர்த்தி, “வாங்க!” என்று சிநேகமாய் புன்னகைத்து
அழைக்க ராஷ்மிகாவிற்கோ சங்கடமாய் இருந்தது.

தனது கணவருக்கு காலை உணவைத் தந்துவிட்டு வெளியேவந்த
செல்வமணி, “வா ராஷ்மிகா, சாப்பிடலாம்” அழைக்க லேசாய்
புன்னகைத்தவள் கீர்த்தியின் அருகில் சென்றமர்ந்தாள்.

தட்டில் இட்லி, சாம்பார், சட்னியை வைத்த செல்வமணி கேசரியையும்
எடுத்துவந்து பரிமாற, “என்னம்மா… இன்னிக்கு ஏதாவது ஸ்பெஷலா?
கேசரி எல்லாம் வருது தட்டுக்கு” கீர்த்தி வினவ,

“என்னன்னு தெரியல உன் அண்ணன்தான் செய்யச்சொன்னான்”
செல்வமணி சொல்ல சரியாக உள்ளேவந்த அஸ்வினின் பார்வையும்
ராஷ்மிகாவின் பார்வையும் சந்தித்தது. அன்று கல்யாண வீட்டில் அவன்
கேசரி வைத்தது காரணமில்லாமல் நியாபம் வந்தது ராஷ்மிக்கு.

“அண்ணா!” கீர்த்தி எதிரில் அமர்ந்திருந்து அண்ணனை அழைக்க,“ஓ
ஸாரிடா… மறந்துட்டேன்!” என்றவன் தங்கைக்கு முதல்பிடியை ஊட்ட, .

“பெரிய பாசமலர் சிவாஜிகணேசன் இந்தம்மா சாவித்திரி”
முணுமுணுக்க அது கீர்த்திக்கு கேட்டாலும் கேட்காதமாதிரிஇருக்க, “உன்
தம்பி நேத்து இங்க காட்டுன பாசமலருக்கு இது கம்மிதான்”அஸ்வின்
சொல்லிவிட்டு உண்ண ஆரம்பிக்க ராஷ்மிகாவோ அவனை
முறைத்தாள்.

“என்னை முறைக்காம சாப்பிடு!” அஸ்வின் சொல்ல, எதுவும் பேசாமல்
உண்ண ராஷ்மிக்க ஆரம்பிக்க சாப்பிட்டு முடித்த அண்ணனும்
தங்கையும் கிளம்பினர். பதினொருமணி போல் அவர்கள்
கடையிலிருந்து ராஷ்மிகாவிற்கு தேவையான அனைத்தும் இருவர்
கொண்டுவர செல்வமணி, ராஷ்மிகாவை அழைத்து
பார்க்கச்சொன்னார்.

“நான் இவ்வளவு காஸ்ட்லியா போடமாட்டேன் ஆன்ட்டி! நம்ம வேணா
இந்த ரேட்ல பாக்கலாம்” விலையுயர்ந்த துணிகளை மறுத்தாள்.

அவள் அவ்வளவு விலையில் துணிகளை அணியவும் மாட்டாள்.
நைட்டிரெஸ், இன்னர்ஸ் என அனைத்தையும் எடுக்க மீதியிருந்தது
எல்லாம் எடுத்துக்கொண்டு இருவரும் சென்றுவிட்டனர்.

“ஏன்மா டல்லாவே இருக்க?” மதியம்போல ராஷ்மிகாவிடம் கேட்டார்
செல்வமணி.

“இல்லயே ஆன்ட்டி” முகத்தை சிரித்தபடி வைத்து.

“அப்புறம் ஏன் இந்த ரூமுக்கு உள்ளயே அடஞ்சிருக்க… ஹால்ல வந்து
உக்காரு. டி.வி பாரு இல்லைனா, என்கிட்ட பேசு!” என்று சொல்ல,

“ம்ம்… சரி ஆன்ட்டி!” ராஷ்மிகா.

“அதென்ன ஆன்ட்டி… அத்தைனு சொன்ன அழகா இருக்கும்”அவர்
சொல்ல, புன்னகைத்தபடி தலை ஆட்டினாள். அவளை அழைத்துச்
சென்றவர் வீட்டில் ஒவ்வொரு அறையையும் காண்பித்தார். ஒவ்வொரு
அறையிலும் பணச்செழிப்பு மின்ன, அதேசமயம் ஒவ்வொரு அறையும்
அழகாக நேர்த்தியாக இருந்தது.

“இது குமரனோட அறை ராஷ்மிகா!” சொல்ல, முதலில் புரியாமல்
விழித்தவளுக்கு, அப்போதுதான் அவனின் முழுப்பெயர் அஸ்வின்குமார்
என்பது நினைவு வந்தது.

“ம்ம்…” என்றவள், அவன் அறையைத் திறக்கப்போன செல்வமணியிடம்,
“இல்ல அத்தை வேணாம். மறுபடியும் பாத்துக்கறேன்!”என்று
மறுத்துவிட்டாள்.

இருவரும் ஹாலிற்கு வந்து அமர, ராஷ்மிகாவிடம், ‘வேதாந்தம் குரூப்ஸ்’
பற்றிச்சொல்ல ஆரம்பித்தார் அவர். அதன் பெருமை, கௌரவம்,
மரியாதை அனைத்தையும் அவர் சொல்லச்சொல்ல, ஒன்றுவிடாமல்
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்தவள் மனதில் ஒருசிலது
பளிச்சிட்டது. தன் தந்தையை விட்டுத் தன்னைப் பிரித்தவனை ஏதாவது
செய்யவேண்டும் என்று தோன்றியது அவளுக்கு. அஸ்வினை, ‘ஏன்டா
இவளிற்கு தாலி கட்டினோம்’என்று எண்ணவைக்க நினைத்து சிலதை
முடிவு செய்தாள் ராஷ்மிகா.

அஸ்வினைப் பற்றி அறிந்தும் இவ்வாறு செய்யத் துணிந்தது அவளின்
மடமையை காட்டியது. அஸ்வின் செய்தது ஒருதவறுதான். அதற்கும்
அவன், அவள் தந்தையிடம் சொல்லிவிட்டான்.

நம்பாமல் சென்றவரை அவனால் என்ன செய்யமுடியும். சரண் தந்த
அறிவுரையையும் பெரியவர்கள் தந்த அறிவுரையையும் அப்போது
மறந்தாள் ராஷ்மிகா. தந்தையிடமிருந்து பிரிந்தவளுக்கு அஸ்வினைப்
பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது.
அதற்கான விளைவை அவள் யோசிக்கவில்லை.