யாழ்-20

யாழ்-20

“போகலாமா?” என்ற தன்னவளின் மென்குரலில் சிகரெட்டை வீசிவிட்டுத் திரும்பியவனின், இமைமுடிகள் கூட அசையாது, அவனின் கருவிழிகள் மட்டும், அவளின் கால்கட்டை விரலில் தொடங்கி மெல்ல மெல்ல மேலே ஊர்ந்து, தனக்கு மட்டுமே சொந்தமான இடங்களை கண்களால் கொய்தபடியே சென்றனின் விழிகள், ரவிவர்மன் வரைந்து வைத்த வதனம் பார்த்து அப்படியே நின்றது.

பால் சிற்பமாய் தான் கொடுத்த தந்த நிற புடவையில், பளிங்கு கல்லை வைத்து செதுக்கிய சிற்பமாய், நின்றிருந்த தன்னுடைய கண்ணாட்டியை கண்டவனின் விழிகளில் சிறைபட்டதுபோல உணர்ந்தவள், பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டாள்.

தன் கைகளிலிருந்த உடையுடன் ட்ரெஸிங் அறைக்குள் நுழைந்தவள், புடவையை விரிக்க அதிலிருந்து சிறிய பெட்டி விழுந்தது.

யோசனையாக எடுத்து அவள் அதைத் திறந்து பார்க்க, பச்சைப் பட்டானி அளவிலான ஒற்றை முத்தை ப்ளாட்டினத்தில் வைத்த செயினும், அதே அளவிலான ஒரு செட் தோடும், அதோடு அவளின் கைக்கு அழகிய பிரேஸ்லெட்டும் இருக்க, கணவனாய் ஆன பின் அவன் வாங்கிக் கொடுத்த உடையையும், அணிகலன்களையும் ஆசையாகப் பார்த்தாள்.

ரவிக்கையை மாட்ட எடுத்தவள் அதன் தைக்கப்பட்டிருந்த டிசைனிலும் நேர்த்தியிலும் அசந்துதான் போனாள். திகைத்தும் போனாள். ஷாட் ஸ்லீவ் வைத்து, பின்னே அதி பயங்கரமாக இறங்கிய ப்ளவுஸைக் கண்டவள், தன் உதடுகள் பிரிந்து நின்றிருந்தாள். காரணம், அவள் கூட முதுகுப்புறம் இவ்வளவு இறக்கம் வைத்துத் தைக்க நினைத்ததில்லை.

ரவிக்கையை அணிந்தவள், முன்பும் சிறிது இறக்கம் இருப்பதைக் கண்டு, தவிப்பும், கிளர்ச்சியும் எழ, புடவையை சிங்கிள் ப்ளீட்ஸாக விட்டு, தன்னைக் காண்ணாடியில் பார்த்தாள், முன்புறம் புடவையைத் தாண்டி ஏதாவது தெரிகிறதா என்று. உற்றுப் பார்த்தால்தான் தெரிகிறது என்று உணர்ந்தவள், அடுத்து அவன் கொடுத்த முத்து செயின், தோடு, பிரேஸ்லெட் அனைத்தையும் அணிந்தாள்.

அடுத்து தன் முகத்துக்கு லைட்டான ஒப்பனையை முடித்தவள், லூஸ் ஹேரை விட்டு, பன்னீர் ரோஜா நிறத்தில் லிப்ஸ்டிக் ஒன்றை தன் அதரங்களில் சிறிதாக இழுத்துவிட்டு, ஒரு கல் பொட்டை புருவங்களுக்கு மத்தியில் வைத்துவளுக்கு ஏதோ ஒன்று குறையாகத் தோன்ற, நீண்ட நிமிடங்கள் கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடி நின்றிருந்தவள், தனது ஒப்பனை பெட்டியில் இருந்த குங்குமச் சிமிழை எடுத்தாள்.

மோதிர விரலால் செம்பருத்தியாய் சிவந்திருந்த குங்குமத்தை எடுத்து, தனது நெற்றி வகிடில் மிளகளவு அழகாய் வைத்துவிட்டு திருப்தியாய் புன்னகைத்துக் கொண்டவள், தன்னை முன்னும் பின்னும் ஒருமுறை பார்த்துவிட்டு, வெளியே வந்திருக்க,

கணவனின் பார்வையில், தன் கால் கட்டை விரலில் இருந்து தன் நெற்றி வகிடு குங்குமம் வரை, காந்தமாய் இழுத்து உயிரை இழுத்துக் கொள்ளும் அவனின் பார்வையில் படபடப்பில் துடிதுடித்துப் போனவள், திரும்பிக் கொள்ள, அவளின் பின் புற ப்ளவுஸ் டிசைனை பார்த்தவனுக்கு மர்மப் புன்னகை. ஹூக்கோ ஜிப்போ இல்லாத இரு பக்கமும் இழுத்து கட்டுவது போன்ற அமைப்பு இருந்த ப்ளவுஸை தைக்கச் சொல்ல அவன் பட்ட பாடு அவனுக்குத் தானே தெரியும்.

மதுரையில் உள்ள மிகப்பெரிய பொட்டிக்கிற்கு சென்றவன், இது மாதிரியான டிசனைகளை சொல்லிக் கொண்டிருக்க, அந்தக் கடை உரிமையாளரின் அருகே இருந்த இருபெண்கள் ஏதோ சொல்லி தங்களுக்குள் சிரிக்க, இவனுக்குத்தான் சங்கடமாகிப்போனது.

மனைவியின் அருகே சென்றவன், “போகலாம்” என்று அவள் இடையில் கைகொடுத்து அழைத்துச் செல்ல, கோயிலில் உள்ள சிலைகளின் அழகையும் மிஞ்சும் வண்ணம் நின்றிருந்தவள், உண்மையில் சிலையாகத்தான் இருந்தாள்.

கதவை சாற்றியவன் அங்கு தனக்காக காத்திருக்கும் ஒருவனிடம் சென்று அவனிடம் கவனமாய் எதைஎதையோ சொல்லி, அவன் கரத்தில் சாவியைக் கொடுத்துவிட்டு வர, பெண்ணவளோ அதை கவனித்தாலும், மனதில் வேறு அல்லவா ஓடிக் கொண்டிருந்தது.

அவனிடம் சிலவற்றை சொல்லிக்கொண்டு வந்தவன் மனைவியின் இடையில் கைபோட்டு அழைத்துச் செல்ல அப்போதுதான் கவனித்தாள் அவனின் உடையை. தந்த நிற சர்ட்டும், க்ரே நிற பாண்ட்டும்.

அவனையே பார்த்திருந்தவளின் இடையில் அவனின் கரம் சற்று அழுத்தத்தைக் கொடுக்க, நெளிந்தவளை, தன்னோடு மேலும் சேர்த்துக் கொண்டவன், அழைத்துச் சென்று நிறுத்தியது கடல் மணலில்.

ஒரு மிகப்பெரிய வட்டத்ததை உருவாக்கி, வட்ட வடிவிலேயே நீளமான கேன்டில் ஸ்டிக்கை நிற்க வைத்து, அதன் மேலே கேன்டிலை வைக்கப்பட்டு, கடற்காற்றில் அது அணையாமல் இருக்க, அதைக் காண்ணாடிக் குடுவையால் மூடியும் இருந்தனர்.

வட்டத்திற்கு நடுவே அமைத்த பாதையில் மனைவியை வித்யுத் அழைத்துச் செல்ல, அவர்கள் நடந்த முப்பது அடிகளுக்குமே அவர்களை வரவேற்றது, இருபக்கமும் கண்ணாடிக் குடுவையால் அழகாய் மூடியிருந்த மெழுகு வர்த்திகள்.

சூரியன் அஸ்தமனமாகி அவனின் கதிர்கள் மட்டும் இதோ செல்கிறேன் எனும் நேரத்தில் நிற்க, கீழ் வானம் குங்குமாய் சிவந்து பொன் வெளிச்சம் பரவி, அடர் நீல நிற கடலில் விழ, இயற்கையில் சிறதளவும் பிழை இல்லாமல், இதத்தின் செழிப்பிடமாய் இருந்தது அவ்விடம்.

தன்னவளை அங்கிருந்த இருக்கையில் அமர வைத்தவன், தன் இருக்கையில் வந்து அமர, அந்த டேபிளின் மேலிருந்த மெழுகுவர்த்திகளும், ரோஜா பூங்கொத்தும், தண்ணீர் ஊற்றி வைக்க இருந்த அழகிய குடுவைகள் எதுவும் யாழ்மொழியின் விழிகள் ரசிக்கவில்லை.

தன் யோசனைகளில் உழன்று கொண்டிருந்தவளை, தன்னவனின் அழைப்பு நிகழுக்கு கொண்டு வர, “எவ்வளவு நேரம் கூப்பிடறேன்? ஆர் யூ ஓகே?” வினவியவனிடம், “ம்ம்” என்றாள்.

அங்கிருந்த மெனுவை அவளிடம் நீட்டியவன், அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்க, வாயில் நுழைந்த பெயர்களை சொல்லி அவள் கொடுக்க, அங்கிருந்த சர்வர் சென்றபின், இரு கைகளையும் டேபிளில் வைத்துக் கோர்த்து அவளைப் பார்த்தவன்,

“வாட் இஸ் ஈட்டிங் யூ?” கேட்க, அதுவரை அமைதியாய் இருந்தவள் அவனை நிமிர்ந்து பார்த்து,

“யுவர் இன்காம்பரஹென்சிபிள் ஆக்ஷன்ஸ் ஆர் ஈட்டிங் மீ வித்யுத் வருணன் (Your incomprehensible actions are eating me Vidyuth Varunan)” என்றவளுக்கு மெய்யாகவே அவனின் நடவடிக்கைகளில், அவளுக்கு அவனுடன் இருப்பது போலவே தோன்றவில்லை. ஏதோ மூன்றாம் மனிதுடன் இருப்பதுபோல தோன்றியது.

“இந்த இரண்டு மாசத்துல நீ பேசாம இருந்தப்ப கூட எனக்கு எதுவும் தோணல. ஆனா, இப்ப திடீர்னு இப்படி.. இத்தனை எதுக்காக?” கேட்டவளிடம் தன் தீர்க்கமான பார்வையே பதிலாகத் தந்தவன் வேறு எதுவும் பேசவில்லை.

“கடைசில எல்லாம் முடிச்சிட்டு ஹர்ட் பண்ண போறியா?” ‘எல்லாம்’ என்பதில் அழுத்தம் கொடுத்து கேட்டவளை பார்த்து சில நொடிகள் விழிகளால் புன்னகைத்தவன்,

‘True love is supposed to heal, Not hurt” என்றவன் அவளின் கரத்தில் இருந்த மென் விரல்களில் மீசை முடி குத்த முத்தமிட, தன்னவன் தந்த முத்தம் பெண்ணவளின் நாடி நரம்பெல்லாம் ஓடி இதயத்தில் அதிவேகத்துடன் பாய்ந்து, அவனின் காதல் உடலில் ஜிவ்வென்று பரவ, சிலிர்த்துப் போய் அமர்ந்திருந்தாள்.

அவளின் கரத்தில் முத்தமிட்டவன் அவளை நிமிர்ந்து பார்க்க, அவளின் வதனமோ ஒரு நொடி ஏதோ ஒன்றை எதிர்பார்க்க, “என்ன ஆச்சுன்னு அதுக்கு காரணமான நபரை நீ என்ன பண்ணனு எனக்கு அப்பவே தெரியும்” இறுகிய முகத்துடன் அவன் சொல்ல, யாழ்மொழியின் தண்டுவடமோ கணவனின் வார்த்தையில் சில்லிட்டுப் போனது.

‘புலிக்கு பிறந்தது பூனையாகுமா?’ என்ற பழமொழிக்குச் சான்றாகிப் போனாள் யாழ்மொழி.

சம்யுக்தாவின் நிலைக்குக் காரணமான அந்த டெவிலை அவள் இல்லாமல் ஆக்கிவிட்டுத்தான் இந்தியா திரும்பியது. தவறு செய்தவர் தண்டனை அனுபவித்துதானே ஆகவேண்டும்!

“உன.. க்கு” யாழ்மொழி திணற, அவளின் கரத்தை தன் கரத்தால் பிடித்தவன், “அவ்வளவு பெரிய விஷயம் பண்ணிட்டு. அமெரிக்கா போலீஸ் கண்ணுலையே விரலை விட்டு ஆட்டிட்டு வந்திருக்க? எதுக்குடி இந்த திணறல்?” என்றவனை அவள் அமைதியாகவும், கேள்வியாகவும் பார்த்தாள்.

“அந்த நியூஸை பாத்தப்பவே ஏதோ சரியில்லைனு தோணுச்சு. தி பெஸ்ட் பிசினஸ் மேன் ஸ்ரீ ராம் மூலியமா பர்சனலா ஒரு டிடக்டிவ் வச்சு விசாரிச்சேன். மூளைக்காரன்! இரண்டே நாள்ல அதாவது நீ யூ.எஸ்ல இருந்து மொத்தமா பேக் ஆகும்போதே எல்லாம் கையில வந்திடுச்சு. மிச்ச படிக்க இருந்த ஒன்றரை வருஷம் இதை ரூம் போட்டு யோசிச்சயோ?” அவன் வினவ, அவனை எரித்துவிடுவதைப் போல பார்த்தவள்,

“அப்ப எல்லாம் தெரிஞ்சு தான் என்னை வேணும்னே கல்யாணத்துக்கு அப்புறமும் ஹர்ட் பண்ணியிருக்க?” அவள் எரியும் அக்னித் துண்டாய் மாறி வினவ, அவளை வேதனையும் கோபமும் கலந்த ஒரு பார்வை பார்த்தவன், “தெரியும். பெருமையா இருந்துச்சு கேட்டப்ப. ஆனா, சம்யுவை நீ அன்னிக்கு நம்பியிருந்தா?” அவன் கேட்க, அதுவரை எரியும் தணலைப் போல அனலைக் கக்கிக் கொண்டிருந்தவள், தோழியின் நினைவில் உருகினாள்.

இப்போதும் எதனால் தோழியின் மீது சந்தேகம் கொண்டாள் என்று அவளால் உடைக்க முடியும்.

ஆனால்?

அவளின் காதலையும் அல்லவா சொல்ல வேண்டிய நிலையையும், இருவரும் அலைபேசியின் மூலம் இணக்கமாக இருந்த நிலையையும் என்று எண்ணியவள், வாயைத் திறக்கவில்லை. அவர்களைப் பொறுத்த வரை அவர்களின் சம்யுக்தா அவர்களுக்கு உண்மையாக இருந்தால் என்றே இருந்துவிட்டுப் போகட்டும் என்று எண்ணியவளுக்கு சம்யுக்தாவின் நிலையும் நன்கு தெரியும்.

எதனால் அவள் யாரிடமும் கூறாமல் இருந்தால் என்றும் அவளுக்குத் தெரியும்?

“என்மேல இருந்த கோபம் அப்ப இன்னும் போகல?” அவள் இறுக்கமாக வினவ, அவனோ அதற்கு பதிலளிக்கவில்லை. மாறாக, டேபிளில் இருந்த மெழுகுவர்த்தியையே பார்த்துக் கொண்டிருந்தான்.

தன்னவளின் அவசரச் செயலால் ஒரு இழப்பு ஆகிவிட்டதே என்று நினைத்தவனால் இன்னும் சம்யுக்தாவின் இழப்பைத் தாஙக முடியவில்லை தான். காலப்போக்கில் அவள் இல்லை என்பதை மூளை சமாதானம் செய்தாலும், மனம் அந்த இழப்பின் காரணத்தை ஏற்க மறுத்தது.

திருமணம் முடிந்து அவளைக் கதறவிட வேண்டும் நினைத்தவனால் அது முற்றிலும் முடியாமல் போனது. அன்னை தந்தையின் வளர்ப்பு அப்படி இல்லையே. இருந்தும் அவளை தள்ளி வைத்து தரையில் படுக்க வைத்தான். அப்படி ஒருத்தி தன்னுடன் இருப்பதையே சிறிதும் கண்டுகொள்ளாமல் இருந்தான்.

குழந்தையைப் பற்றி அப்பத்தா கேட்க, தன்னவள் முகம் போனதைக் கண்டவனின் முகம், தன்னை மீறி அவளின் வருணாய் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. ஆனால், அவனின் ஈகோவை விட்டு அவளைக் கொஞ்சி அவனை அழைக்க விரும்பாதவன், கிட்டத்தட்ட கடத்திக் கொண்டுதான் வந்திருந்தான் கட்டிய மனைவியையே.

இருவரும் மௌனமாய் இருக்க இருவரும் ஆர்டர் செய்த உணவு வகைகளும் வந்து சேர்ந்தது. இருவரும் அமைதியாய் உண்ண ஆரம்பிக்க, தன்னருகே ப்ளூட் க்ளாஸில் வைத்திருந்த மொரிஷியஸ் பேமஸ் கேன் ரம்மை அவன் எடுக்க, ஓரவிழியால் அவனை அவள் பார்த்த பார்வையிலேயே, அவன் அதை இருந்த இடத்தில் வைத்துவிட்டான்.

ஆல்கஹாலின் வாசனையையே வெறுப்பவள் அவள். ஒவ்வாமையும் கூட உள்ளது. அதனாலேயே அதை வைத்தவன், பேரரை அழைத்து ஒரு நான்ஆல்கஹாலிக் ரெட் வைனை தனக்கு ஆர்டர் கொடுத்தான்.

தட்டையே அளந்து கொண்டிருந்தவள், “அப்ப இன்னிக்கு நைட் சீரியஸா அது நடக்கப் போகுதா?” தட்டில் விட்டால் தலையை புதைத்துவிடுவேன் என்னும் நிலைக்குச் சென்று கேட்க, உதட்டைச் சிறிது சுழித்து குவித்து சிரிப்பை அடக்கியவன், “எது?” என்று வினவினான்.

“அதுதான்.. லவ்..” என்றவள் முடிக்கும் முன்,

“ஏன் நீ ஆசைப்பட்டது தான இதெல்லாம்? என்ன.. நம்ம போன்ல பேசுனது மால்தீவ்ஸ் பட் வந்திருக்கிறது மொரிஷியஸ். மத்தபடி நீ கேட்ட தனி ஐலேன்ட், நான் உன்னை பாக்க ஆசைப்பட்ட ஸ்விம் சூட், கேன்டில் லைட் டின்னர், இப்ப அடுத்தது..” அவன் தொடங்கி நிறுத்த, இருவரும் அலைபேசியில் பேசியதை நினைத்து யாழ்மொழிக்கு அச்சம் வந்தது என்றால், அவனுக்கோ உடல் சூடேறியது.

‘அய்யோ நான் கிழவியே ஆனாலும் அன்னிக்கு பேசுனதை மறக்க மாட்டான் போலியே’ உள்ளுக்குள் நினைத்தவளுக்குத் தெரிந்து போனது இன்னும் சற்று நேரத்தில் என்ன நடக்க இருக்கிறது என்று.

மொரிஷியஸ் ஸ்பெஷல் பிரியாணியை ஆமை ரேஸுக்கு வந்தவள் போன்று அவள் வேண்டுமென்றே மெதுவாக சாப்பிட, அவள் மெதுவாக சாப்பிடுவது கூட, அவனுக்கு வசதியாகிப் போனது.

சாப்பிட்டு முடித்தவர்கள் சிறிது நேரம் கடல் அலையில் பாதங்களை மட்டும் நனைத்தபடி நின்றுவிட்டு, இருவரும் அமர்வதற்கான போடப்பட்டிருந்த இருக்கையில் சென்று அமர, தொலைவில் இருந்து வேகமாக வந்தது ஒரு படகு.

படகிலிருந்து ஆறு ஜோடிகள் இறங்க, அங்கிருப்பவர்கள் அவர்களிடம் சென்று ஏதோ பேசத் துவங்க, ஆண்பிள்ளைகளுக்கும் இங்கு இருந்த மேனேஜருக்கும் வாக்குவாதம் ஆரம்பித்தது.

அதில் ஒரு பெண்ணின் விழிகள் மட்டும் கட்டியிருக்க, அங்கிருந்த ஒருவனை அழைத்த வித்யுத் என்னவென்று விசாரிக்க, “ப்ரைவேட் ஐ லேன்ட்னு தெரியாமா வந்துட்டாங்க ஸார். ஏதோ ப்ரோபோசல் பண்ண சர்ப்ரைஸா இங்க தெரியாம கூட்டிட்டு வந்துட்டாங்க. ஸாரி ஸார். வீ க்ளியர் தெம் சூன்” என்றிட, அவர்களை எட்டிப் பார்த்தான் வித்யுத்.

கல்லூரி பருவத்தில் இருக்கும் இருபதுகளின் தொடக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும்.

இதத்துடன் ஒரு புன்னகையை அதரங்களில் படரவிட்டவன், “பரவாயில்ல விடுங்க. லெட் தெம் என்ஜாய்” என்றவனின் கூற்றை அவர் சென்று அங்கு ஒப்பிக்க, வித்யுத்தை திரும்பி நன்றியுடன் பார்த்தவர்கள் தங்களுடைய திட்டத்தை மளமளவென்று தொடங்கினர்.

கடல் மணலில் பெரிய அளவிலான இதயவடிவ கார்ப்பெட்டை விரித்தவர்கள், அதில் கையடக்க பரிசில் துவங்கி ஆறடி பரிசு வரை மொத்தம் இருபத்தியொரு பரிசுகளை இருபத்தி ஒன்று எண்ணைப் போல வைத்தனர்.

அந்தப் பெண்ணுக்கு இருபத்தியொன்றாவது பிறந்தநாள்!

அப்பெண்ணை அழைத்துச் சென்ற அவளின் காதலன், அவளின் விழிகளை மூடியிருந்த துணிக்கட்டை அவிழ்த்து, “ஹாப்பி பர்த்டே அன்ட் ஐ லவ் யூ ரோஹி” என்று சொல்ல இதை எதிர்பாராத அந்தப் பெண் அவனை கட்டியணைத்துக்கொள்ள, அவளை அழைத்துச் சென்றவன் ஒவ்வொரு பரிசுகளையும் அவளை பிரிக்க வைத்தான்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த நமது ஜோடிக்கோ தங்களின் காதல் நினைவுகள்!

கையடக்க இதயத்தில் தொடங்கிய பரிசு ஆறடி டெடி பியரில் முடிய, ஒவ்வொரு பரிசிற்கும் காதலனை ஆவலுடன் பார்த்த அந்தப் பெண், அவனின் கன்னத்தில் இறுதியாக முத்தமிட, கையில் கேக்கைத் தூக்கிக் கொண்டு வந்தனர் அவர்களின் நண்பர்கள்.

கத்தலும், சிரிப்பும், கேலியுமாக கேக்கை வெட்டிய இருவரும் முதல் துண்டை எடுத்துக் கொண்டு நமது ஜோடியிடம் வந்து நீட்டினர். “தாங்க்ஸ் எ லாட். நீங்க மட்டும் ஓகே சொல்லலைனா கண்டிப்பா மொரிஷியஸ் வந்ததே வேஸ்ட் ஆகியிருக்கும்” என்றவன் கேக்கை வித்யுத்திடம் நீட்ட, சாக்லேட்டில் மூழ்கியிருக்கும் டிபிசி கேக்கை மனையாளுக்கு ஊட்ட, தந்த நிற டிசைனர் புடவையில், அழகாய் நின்றிருந்த யாழைப் பார்த்து,

“வாவ். ஷீ இஸ் ஸோ பியூட்டி ஃபுல்” அதிலிருந்த ஒருவன் யாழைப் பார்த்தபடி கூற மற்ற ஐவரும் அவனை முறைக்க, அவனின் காதலி அவனின் விலாவில் இடித்தாள்.

அதைப் புன்னையுடனே ஏற்ற வித்யுத்திற்கு தெரியும். எதார்த்தமாக சொல்லும் இளைஞனை கண்டுகொள்ள இயலாதவனா அவன். அந்த வயதைக் கடந்துதானே வந்திருக்கிறான் அவனும்.

தன்னவளின் தோளில் கைபோட்டு தன் தோள் வளைவிற்குள் அவளை இழுத்தவன், “மை வைஃப் ஹேஸ் எ டிவைன் பியூட்டினஸ் (My wife has a divine beautiness)” என்றவனின் சொல்லில் ஆறுபேரும் தங்களுக்குள் தங்கள் துணைகளைப் பார்த்தபடி வெட்கப் புன்னகையை உதிர்க்க, தன்னவளின் செவியில், “அன்ட் மை ஒன்லி டிசையர்ட் செக்ஸி கேர்ள் (And my only desired sexy girl)” என்றிட, தன்னவனின் தாபமும், மோகமும், கிளர்ச்சியும், வேகமும் அறியாத வஞ்சியா அவள்.

உடலில் உள்ள அனைத்து இரத்தமும் அவளின் வதனத்தில் பாய, இதயத்தின் சுவாசம் கூட அவளுக்கு தடைப்பட்டுப் போக, உதட்டைக் கடித்துக் கொண்டு தலைகுனிந்தவள், தன் மொத்த உணர்ச்சிகளையும் அடக்கிக்கொண்டு நின்றிருந்தாள் வித்யுத்தின் யாழ்.

அவர்கள் அனைவரும் இருவரிடமும் விடைபெற்றுக் கிளம்ப, அவர்களின் படகு புள்ளியாய் மறையும் வரை, அவர்களைப் பார்த்திருந்தவள், தன்னவனை மெல்ல விழி உயர்த்திப் பார்க்க, அவனின் கூர் கண்கள் அவளின் விழிகளை கிழித்துக் கொண்டு சென்று இதயத்தில் வாளாய் இறங்க, ஸ்தம்பித்துப் போனவள், கணவனின் பார்வையில் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

தன்னவளை அழைத்துச் சென்றவன், அறைக்குச் செல்லும் முன் அவனின் அலைபேசி அடிக்க, “ப்ச்” சலித்துக் கொண்டவன், “நீ போ. ஒரு அபிஷியல் கால் பேசிட்டு வர்றேன்” என்று அவளை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே நிற்க, அறையைத் திறந்தவளின் விழிகள் விரிந்து, இதழ்கள் பிரித்து நின்றுவிட்டாள்.

அறை முழுதும் தேனிலவு தம்பதிகளுக்காக தயார் செய்யப்பட்டிருந்தது, அவள் அன்று அவனிடம் கேட்டதுபோல, இன்று அவன் அதை மறக்காமல் செய்யச் சொல்லிவிட்டுக் கட்டளையிட்டுச் சென்றது போல.

‘எதையும் மறக்காம வச்சிருக்கவன், அப்ப..’ நினைத்தவளுக்கு சகலுமும் உள்ளுக்குள் வெட்கத்தாலும், முதல்முறை என்கிற அச்சத்தாலும் நடுங்கத் துவங்கியது.

அறையின் தரை முழுதும் சிவப்பு நிற ரோஜாத் தோட்டம் கொட்டிக் கிடக்க, தரையே அவளுக்குப் புலப்படவில்லை. இருபக்கமும் கேன்டில் லைட்ஸ் வைக்கப்பட்டிருக்க, உள்ளே நடந்து சென்றவள், படுக்கை அறையை திறக்க, அவள் மயக்கம் போட்டு விழாத குறைதான்.

அவள் கேட்ட ரூம் ப்ரெஷ்னர் வரை உள்ளே மணம் வீச, அதை ஆழ்ந்து இழுத்து நிரப்பிக் கொண்டவளுக்கோ, அடுத்து அவர்கள் படுக்கையின் பின்னிருந்த சுவற்றில், “VY” என்ற எழுத்துக்கள் ரோஜா இதழ்கள் கொண்டு சுவற்றில் ஒட்டப்பட்டு, அதற்கு நடுவே மிகச் சிறிய கடுகு அளவே ஆன லைட், அந்த எழுத்துக்களை மயக்கும் வண்ணம் காட்டிக் கொண்டிருக்க, அவர்கள் அன்று பேசிய உரையாடல்கள் அவள் இரு செவிகளிலும் அதே கிசுகிசுப்போடு ஒலித்தது.

“நம்ம ஹனிமூன்ல ‘VY’ கண்டிப்பா வால்ஸ்ல (சுவர்) வேணும்” என்று அவள் அவன் ஏற்றிவிட்ட கிறங்கும் குரலில் ஃபோனில் பேசி கொண்டிருக்க,

“VYன்னா வித்யுத், யாழா?” அவன் வினவ, “ம்கூம்” என்று போர்வைக்குள் தலையாட்டியவள், “Vன்னா வயலன்ஸ்(violence) Yன்னா யேர்ன்(yearn)” என்றவள் ஃபோனிலேயே கிளுக்கிச் சிரிக்க,

“அப்படினா?” என்றானே பார்க்கலாம் அவன்.

“சரியான ட்யூப் லைட்” முணுமுணுத்தவள், “வயலன்ஸ்னா வன்முறை அது நீ.. யேர்ன்னா..” இழுத்தவள், நாணத்தை விட்டுத் தள்ளி, “ஏக்கம் அதாவது டிசையர்னு அர்த்தம். அது நான்” என்று தன்னுடைய தலையணையை கட்டிப் பிடித்தபடி அவள் சொல்ல, ஆடவணுக்குத்தான் தன்னவளின் ஆசையிலும், அவளின் கிறக்கம் கொஞ்சிய குரலிலும் ஆங்காங்கே சூடு ஏற, அவனும் அருகிலிருந்த தலையணையை கட்டிக் கொண்டான்.

“அப்படினா வயலன்ஸும் டிசையரும் அந்த இடத்துல ஒண்ணு சேரணும். அதானே?” அவன் வெளிப்படையாக கிசுகிசுப்பான குரலில் கேட்க, “ம்ம்” என்றவளுக்கு அதற்குமேல் வந்தால்தானே.

திடீரென்று தன்னை பின்னிருந்து அணைத்த கணவனின் பிடியில், கடந்தகாலத்தில் இருந்து வெளியே வந்தவள், சுவற்றில் இருந்த எழுத்துக்களையே பார்த்து எச்சில் விழுங்கினாள்.

இத்தனை வருடங்களும் காதலிலேயே மூழ்கியிருந்தால், தாம்பத்தியத்தை எண்ணி இத்தனை அச்சம் கொண்டிருக்கமாட்டாள். இடைப்பட்ட காலங்களில், பேசாமலேயே இருந்து திடீரென இங்கு வந்து குதித்ததில் அவளுக்கு வந்த பயம் இது.

“பாப்ஸ்!” நீண்ட நாட்களுக்கு பிறகான அவனின் அழைப்பில், விழிகள் கலங்கியவள், கழுத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க, அவளின் இமை மேல் முத்தமிட்டவன், “வயலன்ஸ் வித் யேர்ன் ஓகே தானே?” என்று கேட்க, அவளுக்கோ காற்றுதான் வந்தது வாயிலிருந்து.

அவன் கேள்வியாய் பார்க்க தலையை மட்டும் ஆட்டியவள், விழிகளை மறுபடியும் கண்களால் அலச, எரிந்து கொண்டிருந்த அடர் மஞ்சள் நிற விளக்கையும் வித்யுத் அணைத்துவிட, சுடராய் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்திகள் மட்டுமே அங்கு.

அவளின் பின் வந்து நின்றவன், அவளின் முடியை முன்னே நகர்த்திப் போட்டுவிட்டு, தன் முரட்டு விரலால் மென்மையாக அவளின் முதுகுப் புறத்தில் கோலமிட, கூசிப் போனவள், நகரப் பார்க்க அவன் விட்டால் தானே.

“வ.. ருண். கூசுது” எதையும் காதில் வாங்காதவன் அவள் சொல்லி முடிக்கும் முன், அவளின் முதுகில் முத்தமிட்ட, அவளுக்கோ இதயம் பந்தயக் குதிரையாய் ஓட, அவனுக்கும் மோகம் எல்லையைக் கடக்கத் துவங்க,

அவளின் இழுத்துக் கட்டியிருந்த ப்ளவுஸ் முடிச்சில் கை வைத்தவன், அதை மெதுவாக இழுக்க, அவள் நாணத்துடன் முன்னே சிறிது நகர்ந்ததில் அது மொத்தமாய் அவிழ, தன் மாராப்பைப் பிடித்தபடி அவள் திரும்ப, நாணத்தின் பிம்பமாய், அழகின் மறு உருவமாய், விழிகளில் மோகத்தோடு பார்த்த காந்தையின் பார்வையில் அவனின் கால்கள் தானாக, தன்னவளைத் தேடிச் செல்ல, பின்னே நகர்ந்தவள், அலங்கரிப்பட்ட மெத்தையின் மேலேயே விழ, படுக்கையில் குவித்து வைத்திருந்த ரோஜா இதழ்கள், அவள் தொப்பென்று விழுந்ததில் மேலே சாரலாய் சிதறி, சில இதழ்கள் அவள் மேலேயே விழுந்தது.

தன்னவளின் சேலையை கரத்தில் பிடித்தவன் அதை விலக்கி, அதற்கு மேல் முடியாமல் அவள் மேல் விழுந்தவன், அவள் கழுத்தில் புதைந்து, “யாழ்” என்று கிறக்கத்தை குத்ததைக்கு எடுத்தவன் போன்று அழைக்க, அவளோ சுத்தமாக எதையும் உணரும் நிலையிலேயே இல்லை.

திடீரென ஏதோ நினைத்தவள், தன்னவனை விலக்கி மேலே கை காட்ட, அவர்களின் படுக்கைக்கு மேலே, அவர்களின் படுக்கையை முழுதாக ஆக்கிரமிப்பது போலிருந்தது அனைத்தும் தெரியும் கண்ணாடி.

அவளின் சங்கோஜம் புரிந்து சிரித்தவன், அவள் காதில் வெளிப்படையாக ஒன்றை சொல்ல, “ச்சை! இன்னும் மாறாவே இல்லடா நீ. கருமம்” என்ற சிணுங்கலை நீண்ட வருடங்களுக்குப் பிறகு கேட்டவனுக்கு வாலிபம் தாளமிட்டது.

உடைகள் தளர, அவனின் கை ரேகைகள் அவள் உடலில் பதியாத இடம் இல்லாது போக, அவளைக் கொண்டாடியவன், யார் மீது யார் என்றே புரியாது இருவரும் இருக்க, அவனின் பற்களும் அவளின் நகங்களும் போட்டிபோட்டு நினைவுகள் உருவாக்க, அங்கு வந்து கொண்டிருந்த முனகல் சப்தங்கள் சாட்சி சொன்னது அங்கு நடப்பனவற்றை.

“வ.. ருண்! பயமா இருக்குடா” இறுதிப் போட்டியின் போது அவனின் புஜத்தைப் பிடித்து விழிகளை மூடிக்கொண்டு, பேசியவளின் நெற்றியில் அவன் முத்தமிட, சரசரவென்று அவள் விழியில் இருந்து கண்ணீர் வழிந்தது.

எத்தனை இரவுகள் இந்த நெற்றி முத்தத்திற்கு ஏங்கினாள்!

அவளின் முகம் பார்த்தவன், அவளின் விழிகளை உற்று நோக்கி, “லஸ்ட்(Lust) ஒரு அழகான வார்த்தை தெரியுமா?” கேட்க, அவனையே தன் மீது ஆடையாய் போட்டிருந்தவள் புரியாமல் விழிக்க, அவள் இதழில் முத்தம் பதித்து விலகியவன்,

“ஆனா, லஸ்ட் லவ்வுங்கற வார்த்தையோட சேரும்போது ரொம்ப இன்ட்ரஸ்ட் ஆகும்” என்றவனின் சொற்களை புரிந்து கொண்டவள், புன்னகைப்பூவாய் விழிகளை மீண்டும் மூடிக்கொள்ள, அந்த அழகிய தீவுக்கு நடுவே, அழகிய இல்லறம் என்றால் என்ன என்று ஈருடல் ஓருயிராகக் கலந்து காட்டியிருந்தான் யாழ்மொழியின் வித்யுத் வருணன்.

அவளை விட்டு அவன் விலக, மேலே கண்ணாடியைப் பார்த்தவள், இருவரும் இருந்த நிலை புரிந்து தன்னைப் போர்த்திக் கொள்ள, தன்னவளைப் பார்த்து கை கொடுத்து ஒருக்களித்து படுத்தவன், அவளின் முகத்தில் இருந்த ரோஜா இதழ்களை இதழ்களால் எடுத்தபடி, “இனி மூடுனா என்ன? மூடாட்டி என்ன?” கேட்டு வைக்க, அவனின் வாயில் அடித்தவள்,

“கலெக்டர் மாதிரியாடா பேசற நீ? பேட் பாய்” திட்டியவளை முறைத்தவன்,

“எது நான் பேட் பாயா? இங்க பாருடி பிசாசு மாதிரி கீறி வச்சிருக்க” என்று தன் தோள்களையும் புஜங்கையும் காட்ட, “அப்ப நீயும் தான் கடிச்சு வச்ச” என்றவளிடம், “எங்க காட்டு பாக்கலாம்” என்றவன் அவள் தடுக்கத் தடுக்க போர்வைக்குள் நுழைய, கடலில் மூழ்கியிருந்த கதிரவன் மேலே எழும்பி வந்து தன் கதிர்களை கண்ணாடித் தடுப்பு வழியாக அனுப்பும் வரை அவன் அவளை விடவே இல்லை.

(தேர் இஸ் ஆல்வேஸ் சம்திங் ஸ்பெஷல் இன் VY💙)