யாழ்-5

IMG-20210214-WA0021-1710f694

யாழ் – 5

ஐந்து வருடத்திற்கு முன்…

“இப்ப என்ன மணி ஏழு தான ஆகுது.. எதுக்கு பிள்ளைய இப்படி பாட படுத்தர கல்யாணி” என்று மனைவியிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார்
சக்திவேல்.

“ஆமா.. தொட்டில்ல போட்டு ஆட்டுங்க சரியா..” என்றவர் “நாளைக்கே ஒரு வீட்டுக்கு போனா-னா என்ன தான
திட்டுவாங்க.. உங்களுக்கு என்ன” என்று கோபப்பட்டார் கல்யாணி.

“அதுதான்.. அடுத்த வீட்டுக்குப் போற வரைக்கும் இங்க அது இஷ்டத்துக்கு இருக்கட்டும் னு சொல்றேன்” என்று சக்திவேல் சொல்ல

“எல்லாம் நீங்களும் உங்க அண்ணனும் குடுக்கிற செல்லம் தான்” என்று பொரிய… கொட்டாவி விட்ட படியே தன்னுடைய அறையில் இருந்து வெளியே வந்தாள்
ராஷ்மிகா. அவர்களுடைய ஒரே புதல்வி.

“அம்மா… காஃபி” என்று கொட்டாவியை வெளியிட்ட படியே ஷோபாவில் வந்து
‘னங்’ என்று உட்கார்ந்த மகளை
முறைத்தார் கல்யாணி.

“ஏன்டி.. எவ்வளவு தடவ சொல்றது.. நேரத்துல எந்திரிச்சுப் பழகுனு.. மணியப்
பாத்தியா ஏழரையே ஆகப் போது” என்று கடிகாரத்தை சுட்டிக் காட்டி மகளைத் திட்டினார் கல்யாணி.

“நானும் எவ்வளவு தடவ சொல்றது.. என்னால எந்திரிக்க முடியலனு” என்று
சொன்ன மகளை கோபமாய்ப் பார்த்தவர்..

“போய் மாமியார் ட இடி வாங்குவள்ள அப்பதான் டி என் அருமை தெரியும் உனக்கு எல்லாம்” என்று திட்டியவர் மகள் கேட்ட காஃபியைக் கலக்க உள்ளே சென்று விட்டார்.

“ப்பா.. பாருங்க ப்பா.. இந்த அம்மாவ.. எப்ப பாரு கல்யாணம் பண்ணி அனுப்பி விடறதுலையே இருக்காங்க”
என்று சிடுசிடுத்தாள் ராஷ்மிகா.

“நீ விடுடா.. அவ கிடக்கறா” என்று செல்லம் கொஞ்ச காஃபியைக் கலக்கிக் கொண்டு வந்த கல்யாணி அப்பா மகள் இருவரையும் பார்த்துவிட்டு “ஏய் உனக்கு
என்ன சின்னக் குழந்தைனு நினைப்பா.. கொஞ்சமாவது 21 வயசுப் பொண்ணு மாதிரி நடந்துக்க” என்று அதட்டியபடியே கையில் காஃபியைக் கொடுத்தார்.

“முடியாது முடியாது” என்று வடிவேலு பாணியில் ராஷ்மிகா சொல்லிவிட்டுக் காஃபியைக் குடிக்க.. மகளைக் கொட்டிவிட்டுப் போனார் கல்யாணி.

சமையல் அறைக்குள் நுழையும் அன்னையை சிறிது கோபத்தோடு பார்க்க “விடுடா.. அவள பாத்துக்கலாம்” என்று
மகளின் தலையைத் தேய்த்து விட்டபடியே தந்தை சொல்ல.. காஃபியை உரிந்த படியே அவரிடம் வாயடித்துக்
கொண்டிருந்தாள்.

ராஷ்மிகா சக்திவேல் கல்யாணி தம்பதியருக்குப் பிறந்த ஒரே செல்ல மகள்.
சக்திவேலுடைய அண்ணன் தான் சிவக்குமார். சிவக்குமார் விஜயலட்சுமி தம்பதியருக்கு கல்யாணம் ஆகியும் மூன்று வருடம் குழந்தை இல்லாத போது தான் ராஷ்மிகா பிறந்தது. தம்பி மகளை பார்த்த அன்றே உருகிய சிவக்குமார்
ராஷ்மிகாவை அன்பால் கரைய வைக்க விஜயலட்சுமியும் சளைக்காமல் பாசத்தைக் கொட்ட அவர்களுக்கும்
செல்லமாகி வளர்ந்தாள் ராஷ்மிகா. ராஷ்மிகா பிறந்து ஒன்றரை வருடத்திலேயே ஹர்ஷவர்தனும் பிறந்தான். அதனால் ராஷ்மிகாவிற்கு
செல்லமும் குறையவில்லை.
ஹர்ஷவர்தனிற்கு அன்பிலும் குறை வைக்கவில்லை. இன்றுவரை எந்தத் தப்புத் தண்டாவிலும் ராஷ்மிகாவும்
வைத்துக் கொண்டதில்லை.

குளித்துவிட்டுப் பிஸ்தா நிற
குர்தாவையும் ப்ளூ ஜீன்ஸையும் அணிந்து கொண்டு கீழே இறங்கி வந்த
ராஷ்மிகா “அம்மா.. காலைல என்ன சாப்பிட?” என்றபடியே கழுத்துக்கும் கொஞ்சம் வரை கீழ் இருந்த முடியை ஸ்டைலாகக் கோதியபடியே வந்தாள்.

“போய் சாமி கும்பிட்டு வந்து சாப்பிடு” என்று சொல்ல அதை மட்டும் அன்னை சொல்லத் தட்டாமல் செய்தால். காரணம்
அவளது தந்தை வழிப்பாட்டி
தெய்வநாயகி.

“ஏண்டி.. தல முடிய நல்லா வளத்தி.. நல்லா சீவுனா எப்படி இருக்கும் அழகா” என்று குற்றப்பத்திரிகை வாசிக்க
ஆரம்பிக்க..

“ஹம் ஹம்.. நாளைல இருந்து.. எண்ணை தேச்சு.. தலைய பிண்ணிட்டு போறேன்” என்று நக்கலாய் இட்லியைப் பிட்டு
வாயில் போட்டபடியே சொல்ல “திமிரு திமிரு.. இதெல்லாம் அடக்க ஒருத்தன் வருவான் பாரு” என்றவர் இன்னொரு
இட்லியை மகளிற்காக வைக்கத் தவறவில்லை.

“ஹாய் ஆன்ட்டி” என்றபடியே உள்ளே வந்தான் சரண்.. “ஹாய் அங்கிள்” என்றபடியே சக்திவேல் அருகில் அமர்ந்தான் சரண்.

“என்னடா தடிமாடு சாப்பிட்டயா..?” என்று ராஷ்மி கேட்க “எத்தனை தடவை
சொல்றது ஆம்பிளை பசங்களை கண்டபடி கூப்பிடாதேனு” என்று அதட்டினார் கல்யாணி.

“ஆம்பிளை பையனா.. ஹா ஹா ஹா..” என்று சிரிக்க “இங்க பாருங்க உங்க பொண்ணு ரொம்ப தான் இப்போலாம் பண்றா” என்று கல்யாணி சக்திவேலிடம்
சொல்ல

“என்ன ராஷ்மி.. சீக்கிரம் விளையாட்டு பண்ணாம காலேஜ் கிளம்பு” என்று
மனைவிக்குத் தெரியாமல் மகளுக்குச் சொல்ல.. அதைப் புரிந்து கொண்ட ராஷ்மியோ சீக்கிரம் சாப்பிட்டு முடித்துக்
கொண்டு எழுந்தாள்.

“பை அம்மா….” என்றவள் “பை அப்பா” என்று அவரை ஒரு முறை கட்டிப்பிடித்து விட்டு “டேய் டிரைவர் வா” என்று
வேண்டுமென்றே சரணை டிரைவர் என்று வம்பிழுத்துவிட்டு முன்னே நடந்தாள்.

சரணுடன் காரில் முன்னால் ஏறி அமர்ந்தவள் அன்னை தந்தைக்கு டாடா காமிக்க சரணும் அவர்களுக்குக் கையை ஆட்டிவிட்டு காரை எடுத்தான்.

“என்னங்க பயமா இருக்குங்க” –
கல்யாணி.

“எதுக்கு பயம் கல்யாணி” – என்றார் நடந்தபடியே.

“வயசுப் பொண்ணு.. இப்படி போன என்னங்க நினைப்பாங்க?” என்று  கல்யாணி தாய்க்குரிய ஆதங்கத்தில் கேட்க..

“இதுல என்ன இருக்கு கல்யாணி.. அவங்க டென்த்-ல இருந்து ஒன்னா படிக்கறாங்க.. நல்ல ப்ரண்ட்ஸ்.. சரணும்
நல்ல பையன்.. நம்ம பொண்ணும் அந்த மாதிரி எதுவும் பண்ணாது” என்று
மகளின் மீதுள்ள ஆதீத நம்பிக்கையில் பேசினார்.

“அது சரிங்க.. இரண்டு பேருமே நல்ல பிள்ளைக தான்.. ஆனா ஊரும் அதே மாதிரி நினைக்குமா?” என்று கேட்டார்.

“சென்னைல இருக்க கோடி பேருக்கும் வேலை இருக்கு கல்யாணி.. நம்ம பொண்ண கவனிக்கறதுல யாருக்கும்
வேலை இல்ல” என்று குறுஞ்சிரிப்புடன் சொன்னவர் மனைவியைத் திரும்பிப்
பார்க்க… கல்யாணியின் யோசனையான முகத்தைக் கண்டவர் “இங்க பாருமா..
எதுக்கு தேவை இல்லாம யோசிச்சு குழம்பற.. எது நடந்தாலும் நல்லதுக்கு தான்” என்று சமாதானம் செய்து விட்டு தன்னுடைய டிப்பார்ட்மென்டல் ஸ்டோருக்குக் கிளம்பினார் சக்திவேல்.

காரில் சென்று கொண்டிருந்த சரணிடம் வளவளத்தபடியே வந்தாள் ராஷ்மிகா. “டேய் இன்னிக்கு கட் அடிச்சிடலாம்.. நம்ம கேங்-அ பேசாம ஓ.எம்.ஆர் வர சொல்லிடு டா” என்று சொல்ல சரண் சடன் ப்ரேக்
போடாத குறை தான்.

“ஏய்.. பைனல் இயர் வந்த தைரியம் உனக்கு அதிகம் தான் ராஷ்மி.. வேண்டாம் ராஷ்மி இன்னிக்கு காலேஜ் ல
ஜூனியர்ஸ் வராங்கலாம்.. போய் அவங்கள வச்சு ஃபன் பண்ணலாம்” என்று குஷியாக அவன் சொல்ல..

“பொண்ணுங்கள சைட் அடிக்கப் போறன்னு சொல்லு” என்று அவனை மேல் இருந்து கீழ் வரை கேவலமான லுக்
விட்டவள் சிக்னல் வர வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

சிக்னலில் தங்கள் பக்கத்தில் ஒரு பைக்கில் தந்தையுடன் உட்கார்ந்திருந்த ஒரு 5 வயது சிறுவனைப் பார்த்தவள்
தனது வேலையை ஆரம்பித்தாள். “ஹாய்” என்று கையை ஆட்ட சிறுவனும் கையை ஆட்டினான்.

“உன் பேர் என்ன?” என்று சைகையில் கேட்க “அஸ்வின்” என்றான் சிறுவன்.

“என் பேர் தெரிமா?” என்று கேட்க சிறுவன் இடமும் வலமும் தலையை ஆட்ட “ராஷ்மிகா” என்று சொன்னாள்.

சிக்னல் விழுந்ததும் சரண் காரை எடுக்க “பை அஸு” என்று ப்ளையிங் கிஸ்ஸைத்
தர சிறுவனோ வெட்கப்பட்டு டக்கென்று டாடா காண்பித்துவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.

அவனின் செயலில் காரின் சீட்டில் சாய்ந்து ராஷ்மிகா சிரிக்க “அடங்கவே மாட்டியா ராஷ்மி” என்று சரண் கேட்ட
மாத்திரத்தில் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ பையன் கிட்ட பேசற.. அங்க இருந்த நிறையா பேர் உன்ன தான் பாத்துட்டு இருந்தாங்க.. அந்த பையனோட அப்பாவும்” என்று சிரிக்க.. அவனை
முறைத்தவள் மேலே எதுவும் பேசவில்லை.

இருவரும் வந்து காலேஜில் காரை பார்க் செய்து இறங்கி நடக்க ஆரம்பிக்க ராஷ்மிகாவின் ஃபோன் அலறியது. ஃபோனை எடுத்தவள் “சொல்லுடி” என்றாள்.

“ராஷ்மி எங்க இருக்கீங்க.. நீயும் சரணும் தான” – அவர்களின் காங்கில் ஒருத்தியான மான்சி.

“ஆமாடி.. பர்ஸ்ட் ஹார் எங்க?” என்று ராஷ்மிகா கேட்க..

“இல்ல.. நீங்க ஆடிட்டோரியம் வாங்க” என்றவள் கட் செய்து விட்டாள்.

“டேய் வா ஆடிட்டோரியம் போனுமாம்.. ஐ திங்க் இன்னிக்கு பர்ஸ்ட் இயர்க்கு
ஓரியன்டேஷன் ப்ரோகிராம்” என்று சொல்ல இருவரும் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆடிட்டோரியம் வந்து கடைசியில் சென்று தங்களை படையோடு உட்கார சரண்
பசங்களோடு சேர்ந்து எந்த பொண்ணு நல்லா இருக்கணு பார்க்க ஆரம்பிக்க.. ராஷ்மிகா நன்றாக பேச ஆரம்பித்திருந்தாள் தோழிகளோடு. பின் ப்ரினிசிபால் கரஸ்பாண்டன்ட் என அனைவரும் பேசி முடிக்க ஒரு வழியாக அந்தக் கூட்டம் கலைந்தது.

இவர்களும் கலைய கடனே என்று மதியம் வரை வகுப்பில் உட்கார்ந்திருந்தனர். மதியம் கான்டீனில் உட்கார்ந்து
அனைவரும் உண்ண “ஹேய்.. நான் இன்னிக்கு அவள ராக் பண்ண போறேன்” என்று ஆரம்பித்தான் அவர்களுள்
ஒருவனான சிவா.

அனைவரும் யாரென்று திரும்பிப் பார்க்க அங்கே ஒரு பெண் ஒரு பெண்ணுடன்
உட்கார்ந்து கொண்டு தனது உணவை அளந்து கொண்டு இருந்தாள். “பாத்தா.. பெரிய இடத்து பொண்ணு மாதிரி
இருக்கு சிவா.. வேண்டாம் ரிஸ்க்.. ஏதாச்சு கம்ப்ளைன்ட் பண்ண போறா” என்று
மான்சி எச்சரிக்க..

“பெரிய இடம்னா.. தனியா காலேஜ் கட்டி படிக்க சொல்லு.. டேய் சிவா ஈவ்னிங்
ஆடிட்டோரியம்ல வச்சிடலாம்” என்று ராஷ்மிகா ஆரம்பிக்க சரண் தலையில் கை வைத்துக் கொண்டான்.

“அப்ப நீ வர மாட்டல.. அப்ப அவ்வளவு தான் ல ப்ரண்ட்ஷிப்” என்று சரணின்
செய்கையில் வேண்டுமென்றே ராஷ்மிகா பாவமாக ஆரம்பிக்க..

“ஆத்தா.. மாரியாத்தா.. வரேன் போதுமா”என்றான் ஒரு கும்பிடோடு. இவர்களின்
மொழியில் ராக்கிங் என்றால் கூப்பிட்டு குரலை இறுக வைத்துக் கொண்டு பெயர்..
ஊர்.. என எதையாவது பேசவது மட்டுமே.. சீனியர் என்ற கெத்தை காட்ட நினைப்பது.. மத்தபடி எதுவும் இல்லை.

பிரச்சினையை காசு கொடுக்காமல் வாங்க வந்தனர் நால்வரும்.

ஒரு இரண்டாம் ஆண்டு மாணவியை வைத்து அப்பெண்ணை ஆடிட்டோரியம்
வர வைத்தனர் நால்வரும். உள்ளே நுழைந்தவள் யாரும் இல்லாததைக் கண்டு கண்களை சுற்றி முற்றித் தேட
திடீரென ஆடிட்டோரியம் ஸ்பீக்கரை ஆன் செய்தனர். அது எழுப்பிய குரலில் பயந்து
அவள் காதைப் பொத்த “சௌன்ட்-அ கம்மி பண்ணு எரும.. பயந்துட்டா போல
பாவம்” என்றாள் ராஷ்மிகா சிவாவிடம்.

“ஹே.. ரிலாக்ஸ்.. இங்க மேல வா” என்று ஒளிந்திருந்த ராஷ்மிகா வெளியே வந்து
அப்பெண்ணை ஸ்டேஜிற்கு அழைத்தாள்.

“உன் பேர் என்ன?” என்று வந்தவுடன் முந்திக் கொண்டு சிவா கேட்டான்.

“கீ… … … …னி” என்று அப்பெண்
வாய்குள்ளேயே சொன்னது யாருக்கும் எதுழும் கேட்கவில்லை. அதாவது
அவளுக்கு பயம் என்று இல்லை.. வேண்டா வெறுப்பாக நின்றிருந்தாள்.

“சத்தமா பேசத் தெரியாதா…” என்று ராஷ்மி அதட்ட அவளின் குரல் வெளிவந்தது.

“கீர்த்தனா ஆதர்ஷினி” என்றாள் கடினமானக் குரலில்.

“ஸ்கூலிங் எங்க பண்ண” – சரண் ஒரு டேபிளின் மேல் கால்களை தொங்கப்
போட்டபடியே கேட்டான்.

“செட்டிநாடு வித்யாஷ்ரம்” என்றாள்.. வெறும் பதில் தான்.

“உன் ஹைட் வெயிட் என்ன?” என்று சிவா கேட்க அனைவருமே அதிர்ந்தனர்..
“டேய்..” என்று சிவா அவன் தோளைப் பிடிச்சு காதைக் கடிக்க.. அவனோ ஹீரோ
பாவனையோடு நின்றிருந்தான்.

“சரி வீடு எங்க இருக்கு?” என்று பேச்சை மாற்றி விட்டாள் ராஷ்மிகா.. அவளிற்குமே
சிவாவின் கேள்வி பிடிக்கவில்லை. இருந்தாலும் அன்னியப் பெண் முன்
நண்பனைக் கடியவும் மனம் இல்லை. அதுதான்.

“நீலாங்கரை” என்று கீர்த்தனா
ஆதர்ஷினி சொல்ல சரணிற்கு
எங்கேயோ இடித்தது.

“என்ன உனக்கு சீனியர எப்படி
கூப்பிடனும்னு தெரியாதா.. என்ன கேட்டாலும் அப்படியே ஒன் வோர்ட் ஆன்சர் பண்ற.. ஒழுங்கா ஸார் மேம் ன்னு
கூப்பிடு” என்று ராஷ்மிகா அதட்டினாள்.

“ம்ம்” என்று தலையை மட்டும் ஆட்ட ராஷ்மிகாவிற்கு எரிச்சல் தான் வந்தது. இப்போ என்ன பண்ணிட்டோம்னு இவ
இப்படி நிக்கறா.. இவ எல்லாம் மெடிக்கல் காலேஜ்ல சேர்ந்திருக்கனும் என்று
மனதில் நினைத்தவள் எதுவும் பேசாமல் நின்றுவிட்டாள்.

“சரி டிக்டாக் பண்ணுவியா?”.. நான் ஒரு டயலாக் எடுத்துத் தரேன் என் ஃபோன்ல
பண்றையா?” என்ற ராஷ்மிகா.. “இல்ல எடுத்துத் தரேன்.. நீ பண்ணிட்டு தான் போகணும்” என்று சீனியருக்கே உண்டான கட்டளை போலச் சொல்லக்
கீர்த்தி ராஷ்மிகாவை வெட்டவா குத்தவா என்று முறைத்தாள்.

“ஏய்.. என்ன முறைக்கற.. இப்ப உன்னை என்ன பண்ணாங்க.. என்ன சீன் போடறியா” என்று அதட்ட… சரணிற்கு “அயயோ.. இவ என்ன டென்ஷன் ஆகறா”
என்றிருந்தது.

“சரி விடு ராஷ்மிகா.. அவ போகட்டும்.. சரி நீ போ” என்று சரண், கீர்த்தனா ஆதர்ஷினியை அனுப்ப ராஷ்மிகா சரணிடம் திரும்பினாள்.

“டேய்.. இவ என்ன ஊமக் கொட்டான் மாதிரி நிக்கற.. கூப்பிட்டு பேர் தான கேட்டோம்.. சீன் சரியான சீன்” என்று
ராஷ்மி பொரிய.. “கூல் டி.. அவளே காலேஜ்ல பர்ஸ்ட் டே.. அதான் பயந்திருப்பா” என்று சரண் ராஷ்மியிடம்
சமாதானத்திற்கு சொன்னாலும்.. அவனிற்குத் தெரியும் கீர்த்தி பயப்படவில்லை என்று.

“சரி வா கிளம்பலாம்” என்று ராஷ்மிகா சொல்ல.. மான்சியிடமும் சிவாவிடமும்
சொல்லிக் கொண்டு சரணும்
ராஷ்மிகாவும் கிளம்பினர்.

வருகிற வழியில் “பசிக்குது டா…” என்றாள் ராஷ்மிகா. ஆரம்பிச்சுட்டா டா என்று நினைத்த சரண் ஒரு சின்ன
சந்திற்குள் வண்டியை விட்டான். அவர்கள் எப்போதுமே சாப்பிடும் ஆங்கிலோ இந்தியன் கடை தான். சாண்ட் விச் வகைகள்.. சவர்மா.. பர்கர்ஸ் என
அனைத்தும் இருக்கும் ஒரு குட்டி சைஸ் கடை.. ஆனால் கூட்டமோ தள்ளு முள்ளு
தான். இன்று அவர்கள் சீக்கிரமே வந்து விட்டதால் ஒன்று இரண்டு பேர் தான்
இருந்தனர்.

இருவரையும் பார்த்து புன்னத்தைவர் ஆர்டரைக் கேட்டுக் கொண்டு சென்றார்.
இருவரும் அங்கிருந்த இரண்டு பேர் நிற்கக் கூடிய நிழற்குடை அடியில் நின்றனர். திடீரென அங்கு வந்த BMW கார் ஒன்று சரணுடைய வோக்ஸ்வேஜன்
வெண்டோவை உரச “கீர்ர்ர்ர்” என்று வந்த சத்தத்தில் அனைவரும் திரும்ப அந்தக்
காரும் சிறிது தூரம் சென்று நின்றது.

சரணும் ராஷ்மியும் ஓடி வந்து காரைப் பார்க்க அது ஒரு பக்கம் முழுதாக கீறி இருந்தது. ராஷ்மிக்குத் தெரியும் சரண்
கல்லூரியில் ராங்க் ஹோல்டர் ஆனதிற்கு அவனுடைய தந்தையிடம் கேட்டு வாங்கிக்
கொண்டது என்று. சரணின் கண்களில் கண்ணீர் கீற்று உருவாக.. கீறல் விழுந்த
இடத்தைத் தடவியனுக்கு இதயம் வலித்தது.

ராஷ்மிகாவின் கத்தலைக் கேட்டவன் என்னவோ என்று திரும்ப அவள் உள்ளே
உட்கார்ந்திருந்த கார்காரனிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்தது மட்டும் தெரிந்தது. உள்ளே உட்கார்ந்தவன் ஏதோ
வெளியே கையை நீட்டி எச்சரித்து பணத்தை எடுத்துத் தர… ராஷ்மிகாவும் ஏதோ அழுத்தமான பதிலைத் தந்துவிட்டு பணத்தை உள்ளே வீசி எறிந்துவிட்டுத் திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவனும்
அதே வேகத்தோடு காரை எடுத்துவிட்டு கிளம்பிவிட்டான்.

இதெல்லாம் சரண் சுதாரித்து
வருவதற்குள் நடந்து விட்டது. “ராஷ்மி.. எதுக்கு அவன் கிட்ட சண்டைக்கு போன..” என்று கண்டித்தான் சரண்.

“பின்ன.. ஒரு ஸாரி கூட சொல்லாம போறான்.. கேட்டா திமிரு வேற.. ஊமக் கொட்டான் மூஞ்சி.. மூஞ்சியும் அவனும்”
என்று பொரிந்தவள் கடுகடுவென இருந்தாள்.

“சரி வா வந்து சாப்பிடு..” என்று சரண் அழைக்க..

“பர்ஸ்ட் நாம காரை எடுத்திட்டுப் போய் காமிக்கலாம் வா.. எனக்கு சாப்பிடற மூடே இல்ல” – என்றாள் ராஷ்மி.. ஏனோ
சரணின் கார் இப்படி ஆனதிற்கு தானும் ஒரு காரணமோ.. பேசாமல் வாயை மூடிக் கொண்டு வீட்டிற்கே நேராக சென்றிருக்கலாமோ என்று தோன்றியது அவளுக்கு.

“ராஷ்மி… ப்ளீஸ் வந்து சாப்பிடு.. இத நான் பாத்துக்கறேன்” என்று வற்புறுத்தி அவளை அழைத்துச் சென்று சாப்பிட
வைத்தான்.

அடுத்த நாள் நடக்கப் போவதை
இருவருமே அறியவில்லை.