லவ் ஆர் ஹேட் 30

eiMYCJ267559-a021cde7

லவ் ஆர் ஹேட் 30

அடுத்தநாள் காலை முகூர்த்த நேரமாக இருக்க, இரவு வைஷ்ணவியை குழுமியிருந்து நிறைய பெண்கள் மருதாணி இட்டவாறு சிரித்து கேலி பேசிக் கொண்டிருந்தனர். சரியாக வைஷ்ணவிக்கு ஒரு அழைப்பு வர, திரையை பார்த்தவள் சுற்றிமுற்றி கண்களை சுழலவிட்டு அழைத்தவனை தேடியவாறு அழைப்பை ஏற்று காதில் வைத்தாள்.

எதிர்முனையில் அதிபன், “சீக்கிரம் ஸ்டோர் ரூமுக்கு வா!” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட, அதிர்ந்து விழித்தவளுக்கு இத்தனை பேரை சமாளித்து எப்படிச் செல்வதென்று சுத்தமாக தெரியவில்லை.

சிறிதுநேரம் யோசித்து யாருக்கும் சந்தேகம் வராதபடி திட்டத்தை தீட்டியவள், “கொஞ்சம் இருங்கடி, வொஷ்ரூம் போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு யாரும் பதில் கேள்வி கேட்பதற்கு முன்னே வேகமாக எழுந்து  அவளவன் சொன்ன இடத்திற்கு அவள் ஓட, ‘இந்த பக்கம் இருக்குற வொஷ்ரூமுக்கு எதுக்கு அந்த பக்கம் ஓடுறா?’ நினைத்தவாறு புரியாது அவளை பார்த்தாள் ரித்வி.

அறைக்குள் நுழைந்ததுமே அவளிடையை வளைத்து பின்னாலிருந்து அணைத்து கழுத்தில் முகம் புதைத்தவனின் ஸ்பரிசத்தில் முகம் சிவந்தவள், “மாமா, என்ன இது? உங்க இஷ்டத்துக்கு வான்னு கூப்பிடுறீங்க. அவங்கள சமாளிச்சி வர்றதுக்குள்ள எனக்குதான் போதும் போதும்னு ஆகிருச்சி” என்று சிணுங்கியவாறு சொல்ல, அவளை சுவற்றில் சாய்த்த அதிபன் கிட்டதட்ட அவள் மேல் சாய்ந்து இருப்பது போல் இருபக்கமும் தன்னவளை அணைக்கட்டி நின்றுக்கொண்டான்.

“இது கூட நல்லா தான் இருக்கு வைஷுமா” குறும்பாக சொன்ன அதிபன் அவளிதழையே விழுங்குவது போல் பார்த்து தன்னிதழை நாவால் ஈரமாக்கியவாறு, “அது வைஷுமா… நாளைக்கு கல்யாணமாகிரும். அதுக்கு முன்னாடி ஒருதடவை…” என்று இழுக்க, “மாமா…” என்று வைஷ்ணவி அதிர்ந்ததை பார்த்து, “அச்சோ வைஷுமா! ஒரே ஒரு கிஸ் தான். ப்ளீஸ்டி…” என்று அவன் கெஞ்ச, தன்னவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.

“அதான், நாளைக்கு காலையில உங்களுக்கு சொந்தமாகிருவேன் தானே! அப்றம் என்ன? எல்லாத்துக்கும் அவசரம். போங்க மாமா” அவன் மார்பில் கைவைத்து தள்ளிவிட்டு அவள் செல்ல போக, “உங்கிட்ட கேட்டுட்டு இருந்தா சரி வராது. நானே எடுத்துக்குறேன்” என்றுவிட்டு சற்றும் தாமதிக்காது அவளை இழுத்து அவளிதழை அவனிதழால் சிறைசெய்திருந்தான் அவன்.

முதலில் அதிர்ந்து விழித்த வைஷ்ணவி பின் தன்னவனின் முத்தத்தில் மூழ்கி கண்களை இறுக மூடிக்கொண்டு அவனின் சட்டை கோலரை இறுக பிடித்துக்கொள்ள, அவனோ அவளிடையை அழுந்த பற்றி சலிக்காது அவளுக்குள் மூழ்கிக்கொண்டே போக, நிமிடங்கள் கடந்து முதலில் சுதாகரித்தது என்னவோ வைஷ்ணவி தான்.

கஷ்டப்பட்டு அவனிதழிலிருந்து தன்னிதழை பிரித்தெடுத்து அவள் அவனை முறைத்துப்பார்க்க, “ஹிஹிஹி… கடிச்சிட்டேனா செல்லம்?” என்று அசடுவழிந்தவாறு கேட்டான் அதிபன். “ச்சீ… போ மாமா” என்று வெட்கப்பட்டவாறு அவனை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்று தன் தோழிகளுடன் அவள் இணைந்துக்கொள்ள, அவளின் சிவந்த முகத்தையும் கலைந்திருந்த மருதாணியையும் மாறி மாறி பார்த்த பெண்களுக்கு ஏதோ ஒன்று புரிந்தது.

அடுத்து என்ன? அவளை கேலிசெய்தே ஒருவழிப்படுத்திவிட்டனர். அவர்கள் மட்டுமா? அதிபனின் சட்டையில் ஒட்டியிருந்த மருதாணியை வைத்து அவனை கேலி செய்தே வெட்கப்பட வைத்துவிட்டனர் ஆடவர்கள்.

இவ்வாறு அன்றையநாள் கழிந்து அடுத்தநாள் காலை, கோவிலில் ஹோமகுண்டத்தின் முன் மந்திரங்களை உச்சரித்தவாறு அதிபன் அமர்ந்திருக்க, பெண்கள்படை சூழ அழைத்து வரப்பட்ட தன்னவளை நிமிர்ந்து பார்த்தவனுக்கு நேற்று நடந்த முத்தச்சம்பவம் தான் நியாபகத்திற்கு வந்தது.

அவளுக்கும் அவனை பார்த்ததுமே முகம் குப்பென்று வெட்கத்தில் சிவந்துவிட, கல்யாண கோலத்தில் அந்த வெட்கச்சிகப்பும் அவளின் அழகை மேலும் மெருகூட்டித் தான் காட்டியது.

இங்கு வைஷ்ணவியை அழைத்து வந்த பெண்களுக்கு நடுவிலிருந்த உத்ராவை, சந்திரன் வைத்தகண் வாங்காமல் பார்க்க, ஏதோ ஒரு உந்துதலில் தன்னவனின்புறம் திரும்பியவள் அவன் பார்வையின் அர்த்தம் புரியாது கேள்வியாக நோக்கினாள். அவனோ சட்டென ஒற்றை கண்ணை சிமிட்டி பறக்கும் முத்தமொன்றை வழங்க, முதலில் அதிர்ந்து விழித்த உத்ரா பின் வெட்கப்பட்டு குனிந்து சிரித்தாள்.

இரண்டு ஜோடிகளின் பார்வை காதலாக தம் துணைகளை தழுவியிருக்க, ஒருவனின் பார்வை மட்டும் தன்னவளின் மேல் ஏக்கமாக படிந்திருந்தது. மயில்கழுத்து வண்ண புடவையில் கொண்டையிட்டு மல்லிகைசரம் சூடி நான்கரை மாத மேடிட்ட வயிற்றுடன் புதுப்பொலிவுடன் நின்றிருந்த ரித்வியையே ஏக்கமாக பார்த்தவாறு இருந்தான் யாதவ்.

தன் காதலை மொத்தமாக அவளிடம் கொட்டுபவன், அவளின் காதலை எதிர்ப்பார்க்கவில்லை தான். ஆனாலும், காதலோடு செய்யும் ஒவ்வொன்றையும் ‘நடிப்பு’ என்ற ஒரு வார்த்தையில் அவள் கடப்பதை தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அவன் பக்கத்தில் வந்து நின்ற தேவகி அவனின் ஏக்கமான பார்வையை பரிதாபமாக பார்த்து, “இன்னும் அவ உன்னை புரிஞ்சிக்கல்லையா?” என்று கேட்க, வாடிய முகத்துடன் ‘இல்லை’ எனும் விதமாக தலையாட்டியவனை பார்க்க அவருக்கே பாவமாகத் தான் இருந்தது.

“காலம் தான் சில காயங்களை ஆற்றும். உன் அன்பை அவக்கிட்ட வெளிப்படுத்திக்கிட்டே இரு! ரித்வியால அவளுக்கு பிடிச்சவங்கள ஒதுக்கி வைக்க முடியாது. சீக்கிரம் உன்னை புரிஞ்சிப்பா” தேவகி ஆறுதலாக சொல்ல, “எப்போ பாட்டி? நான் அவள ரொம்ப மிஸ் பண்றேன். ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று விரக்தியாக வந்தன யாதவ்வின் வார்த்தைகள்.

அடுத்த சிலநொடிகளிலே ஐயர், “கெட்டிமேளம்… கெட்டிமேளம்…” என்று சொல்ல, மங்களநாணை வாங்கி தன்னவளின் கழுத்தில் அணிவித்த அதிபன், “லவ் யூ வைஷு” என்று கிசுகிசுப்பாக சொல்ல, ஓரக்கண்ணால் அவனைப் பார்த்து, “லவ் யூ மாமா” என்றாள் வைஷ்ணவி வெட்கம் கலந்த சிரிப்புடன்.

அந்த தருணத்தை அழகாக படம்பிடித்த இந்திரன் இன்றும் பக்கத்திலிருந்த ரித்வியிடம், “இவனுக்கெல்லாம் கல்யாணம் ஆகுது. நமக்கு கல்யாண யோகம் இருக்கான்னே தெரிய மாட்டேங்குது” என்று வராத கண்ணீரை வரவழைத்து துடைக்க, “நான் இப்போவும் சொல்றேன். உனக்கு உள்ளூர் எல்லாம் இல்லை. வெளியூர் பொண்ணா கிடைக்க போறா இந்திரா. அதுக்கு நான் கேரண்டி” அன்று சொன்னது போல் இன்றும் அதே பாணியில் சொன்னாள் ரித்வி.

சரியாக, “யாதவ்…” என்ற ஒரு இளம்பெண்ணின் குரலில், ‘இந்த குரல் நமக்கு ரொம்ப பழக்கப்பட்ட குரலாச்சே!’ என்று யோசித்தவாறு குரல் வந்த திசையை நோக்கிய ரித்விக்கு அத்தனை அதிர்ச்சி! அங்கு நின்றிருந்தது சாட்சாத் நடாஷாவே தான்.

நடாஷாவும் அவளின் வெளிநாட்டு தோழி ஹெலனும் நின்றிருக்க, ரித்வியின் அதிர்ந்த முகத்தை சற்றும் கவனிக்காத யாதவ், “ஹாய் நடாஷா…”  என்று கத்தியவாறு அவளை நோக்கிச்சென்று அவளிடம் சிரித்து சிரித்துப்பேச, “வாங்கம்மா, எப்படி இருக்கீங்க?” என்று நடாஷாவை விசாரித்த மஹாதேவன், “கார்த்தி, இவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு போ! விருந்து தயாராகிட்டு. நீதான் இவங்களை நல்லா கவனிக்கனும்” என்றுவிட்டு செல்ல, ரித்விக்கோ காதில் புகை வராத குறைதான்.

யாதவ் ரித்வியின் மேல் காதலை உணர்ந்த தருணமே நடாஷாவுக்கு அழைத்து மன்னிப்புக் கேட்டு பேசியிருக்க, முன்பு போல் இருந்த நெருக்கம் இல்லாவிடினும் ஒருவருக்கொருவர் நல்ல நலன்விரும்பிகளாக இருந்தனர் இருவரும். அதுவும் நடாஷாவின் அம்மா லண்டனில் நடத்தும் கம்பனியின் இன்னொரு கிளையை கொழும்பில் ஆரம்பிப்பதற்கு தேவையான அத்தனை வேலைகளுக்கும் நடாஷாவிற்கு உதவியாக இருந்தான் யாதவ்.

ஆனால், இது எதுவும் ரித்விக்கு தெரியாது அல்லவா!

யாதவ்வோ ரித்வியின் முகபாவனையை கவனிக்காது நடாஷாவுடன் வேலைகள் தொடர்பாக பேசிக்கொண்டிருக்க, ஹெலாவை குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த இந்திரனுக்கு, ‘ஒருவேள, நம்ம வெளியூர் பச்சைக்கிளி இவ தானோ?’ என்ற எண்ணம் வேறு!

விறுவிறுவென அவர்களுக்கெதிரே சென்று நின்றவன், “ஹாய் கேர்ள்ஸ். ஹவ் ஆர் யூ? மீ ஃபைன். ஹவ் யுவர் வர்க் கொய்ங்? மை வர்க் நைஸ் நைஸ்” என்று தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே போக, இருபெண்களும் அவனை புரியாது பார்த்தார்கள் என்றால், ‘இந்த ஆமை எதுக்கு இப்போ அம்மிக்கல்லு ஆட்டுது?’ என்று இந்திரனை சந்தேகமாக பார்த்த யாதவ் அவனை தன் தோழிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

யாதவ்வும், நடாஷாவும்  பேசிக்கொண்டிருக்க, ஹெலனை பார்த்த இந்திரனுக்கோ அவனின் இயல்பான குறும்புக்குணம் தலைத்தூக்கியது.

“என் பேரு இந்திரன். எல்லாரும் இந்து இந்துன்னு கூப்பிடுவாங்க. உன் பேரு ஹெலன் தானே! நான் வேணா உன்னை எலி எலின்னு கூப்பிடவா?” அவன் கேலியாக கேட்க, “எக்ஸ்கியூஸ் மீ…” என்று கண்களை உருட்டியவாறு அவள் அங்கிருந்து நகர, “எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துருச்சிடி…” என்று பாடியவாறு அவள் பின்னாலே சென்றான் இந்திரன்.

இங்கு யாதவ்வுடன் பேசிக்கொண்டிருந்த நடாஷாவை மேலிருந்து கீழ் பார்த்தவாறு, “அந்த பொண்ணு தானே அன்னைக்கு ஒருநாள் இந்த முசுடு மூஞ்சை காதலிக்கிறேன்னு வீட்டுக்கு வந்து நின்னுச்சி. இப்போ ஏன் இங்க வந்திருக்கா? ஆனா, சும்மா சொல்லக் கூடாது செம்ம ஃபிகரு! நம்ம ஊருல இந்தமாதிரி ஃபிகருங்க இல்லாம போச்சே… ச்சே!” என்ற ஆரனின் வார்த்தைகள் பக்கத்திலிருந்த தாராவின் காதில் நன்றாகவே விழ, தன் அத்தானை உதட்டைச் சுழித்துப் பார்த்தாள் அவள்.

அவளின் முறைப்பை அடக்கப்பட்ட சிரிப்புடன் பார்த்தவன், “என்னடி முறைப்பு?” என்று அதட்டலாக கேட்க, “அத்தான், எனக்கு சுத்தி வளைச்சி பேச தெரியாது. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான். என் படிப்பு இன்னும் இரண்டு வருஷத்துல முடிஞ்சிரும். அதுவரைக்கும் உங்க கண்ணை அடக்கி வைங்க. இல்லைன்னா நோண்டி புடுவேன் நோண்டி” மிரட்டலாகவே தாரா சொல்ல, ‘அய்யடா!’ என்றவாறு அவளை மேலிருந்து கீழ் ஏளனச்சிரிப்போடு ஒரு பார்வை பார்த்தான் ஆரன்.

அவளின் மிரட்டலை உள்ளுக்குள் ரசித்தவாறே, “இல்லைன்னா என்னடி பண்ணுவ? நான் பேசாம அந்த லண்டன் பொண்ணையே…” என்று அவன் முடிக்கவில்லை, “கடத்திருவேன் பார்த்துக்கோங்க! தேவகியோட பேத்தியாக்கும் நானு” என்ற தாரா முடியை சிலுப்பிக்கொண்டு செல்ல, அவளின் சிறுபிள்ளை தனமான மிரட்டலில் சிரிப்புத் தான் வந்தது அவனுக்கு.

வீட்டிலே சொந்தபந்தங்கள் அனைவருக்கும் தடல்புடலாக விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்க, மொத்த ஊருமே மஹாதேவனின் வீட்டை சுற்றி தான். வீட்டிற்கு வருவோரை கவனிப்பதில் சுழன்று சுழன்று வேலைப் பார்த்த வீட்டாற்கள் ரித்வியை தான் எந்த வேலையையும் செய்யவிடவில்லை. யாதவ்வின் மிரட்டல் அப்படி!

யாதவ்வோ தன் தோழிகளுக்கு உணவுப்பரிமாற சொல்லி  உடனிருந்தே கவனித்துக்கொள்ள, கையிலிருந்த குளிர்பானத்தை மெல்ல மெல்ல அருந்தியவாறு தன்னவனை தான் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி. அவளுக்கோ சற்றும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

‘இவ ஏன் திடீர்னு வந்திருக்கா? இப்போ இவள யாரு கூப்பிட்டா? இவ்வளவு நாளா என் பின்னாடியே சுத்திக்கிட்டு இருந்தவரு இப்போ நான் சாப்பிட்டேனான்னு கூட கேக்காம அவள கவனிச்சிக்கிட்டு இருக்காரு. நான் வேற அவர் மேல கோபத்துல இருக்கேன். இந்த சமயம் பார்த்து இவ வேற வந்திருக்கா. ஒருவேள, பழைய காதல் மறுபடியும் வந்து ஒட்டிக்கிச்சின்னா? அய்யய்யோ! இருக்காது. இருக்காது. ஆனாலும், அவ போனதுக்கு அப்றம் என் பின்னாடி வந்து அம்மு, பொம்முன்னு புள்ளைய கொஞ்சட்டும் அப்றம் இருக்கு அவருக்கு’ மானசீகமாக ஏதேதோ யோசித்து தன்னவனை திட்டியவாறு அமர்ந்திருந்தாள் ரித்வி. கர்ப்ப காலத்தில் பெண்களுக் உண்டாகும் மூட் ஸ்விங் பிரச்சினை என்று கூட சொல்லலாம்.

அதற்கு மேல் அங்கிருக்காது அவள் அறைக்குச் செல்லப்போக, அவளை தேடி வந்தார் ஆண்டாள். “ரித்விமா, இங்க அங்கன்னு என்ன அலைஞ்சிக்கிட்டு இருக்க? உன் புருஷன் பார்த்தான்னா அவ்வளவு தான். ஆமா… மொதல்ல சாப்பிட்டியா நீ?” ஆண்டாள் அக்கறையாக கேட்க, “எனக்கு எதுவும் வேணாம்” என்றுவிட்டு நகர போனவளை பிடித்து நிறுத்தினார் அவர்.

“என்னம்மா நீ? நேரத்துக்கு சாப்பிட்டா தானே புள்ள ஆரோக்கியமா இருக்கும். இங்கேயே இரு, சாப்பிட எடுத்துட்டு வர்றேன்” என்றுவிட்டு நகர போன ஆண்டாள், அடுத்து ரித்வி சொன்னதில் அவளை அதிர்ந்து நோக்கினார்.

“நீங்க எடுத்துட்டு வர வேணாம். என் புருஷன எடுத்து வர சொல்லி ஊட்டிவிட சொல்லுங்க. சீக்கிரம், எனக்கு தலை வலிக்குது” ரித்வி நெற்றியை நீவிவிட்டவாறு சொல்ல, அந்த அதிர்ச்சியிலிருந்து ஆண்டாள் மீள்வதற்குள், “அத்தை, இவ சாப்பிட்டாளா?” என்று கேட்டவாறு வந்து நின்றான் யாதவ்.

நமட்டுச்சிரிப்புடன், “ஆங்… அதுவா? அது… உன் பொண்டாட்டிக்கு சாப்பாடு வேணாமாம்” என்று ஆண்டாள் முடிக்கவில்லை, “என்ன அத்தை நீங்க? அவ வேணாம்னா விட்டுருவீங்களா? ரித்விகா, உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். உனக்கு பிடிக்குதோ, இல்லையோ? நேரத்துக்கு குழந்தைக்காக சாப்பிடுன்னு… கேக்க மாட்டியாடி நீ?” அவரை இடைவெட்டி ரித்வியை வசைப்பாடிக்கொண்டே சென்றான் யாதவ்.

“அய்யோ பொறுப்பா!” என்று அவனை அமைதிப்படுத்தியவர், “அவ நீ ஊட்டி விட்டா தான் சாப்பிடுவாளாம். இரு சாப்பாட்டை கொடுத்து விடுறேன்” என்றுவிட்டு செல்ல, முதலில் அதிர்ந்து பின் ‘அப்படியா?’ என்ற ரீதியில் ரித்வியை சந்தேகமாக ஒரு பார்வை பார்த்தான் அவன்.

ரித்வியோ திருதிருவென விழித்தவாறு நிற்க, அவளின் முகபாவனையை கவனித்தவனுக்கு அப்போது தான் விடயம் மூளைக்கு உரைத்தது. ‘ஓஹோ! இதுதான் சங்கதியா? இந்த பொறாமைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என்று நினைத்தவனுக்கு நிஜமாகவே தன்னவளுக்கு தன் மீது இருக்கும் உரிமை உணர்வை பார்க்கும் போது உள்ளுக்குள் குளுகுளுவென்று தான் இருந்தது.

ஆண்டாள் உணவுத்தட்டை கொண்டுவந்து கொடுக்கவும், அவளை அமர வைத்து அவள் பக்கத்தில் அமர்ந்து யாதவ் தன்னவளுக்கு உணவை பிசைந்து ஊட்டிவிட, அவளும் மறுக்காது வாங்கிக்கொள்ள, சுற்றியிருந்த சிலருக்கோ இவர்களை பார்த்து சற்று பொறாமை தான்.

யாதவ் ஊட்டிவிட, ரித்வி சாப்பிட என்று சிறிதுநேரம் நன்றாகத்தான் சென்றது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் யாதவ்விடம் வந்த வேலையாள், “ஐயா, அந்த பொண்ணுங்க இரண்டு பேரும் கிளம்புறாங்க போல, உங்களுக்காக தான் காத்திருக்காங்க” என்று சொல்ல, “ரிது, கொஞ்சம் இரும்மா. வழியனுப்பிட்டு வர்றேன்” என்றுவிட்டு உணவுத்தட்டை அவளின் கைகளில் கொடுத்துவிட்டு நடாஷாவை தேடிச்சென்றான் யாதவ்.

போகும் அவனை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க முறைத்துப் பார்த்தவளுக்கு கோபம் உச்சத்தை தொட, உணவுத்தட்டை தரையில் விசிறியடித்துவிட்டு விறுவிறுவென்று அவள் அறைக்குச் செல்ல, இதில் ரித்வியின் கோபத்தை முதல்தடவை பார்த்த சொந்தங்களுக்கு தான் அதிர்ச்சி!

இங்கு தன்னை நோக்கி வேகமாக வந்த யாதவ்வை புன்னகையுடன் பார்த்த நடாஷா, “ஓகே யாதவ், அப்போ நான் கிளம்புறேன். ஆனா, அதுக்கு முன்னாடி நான் ரித்விகா கூட பேசலாமா? அவ எங்க இருக்கா?” என்று கேட்க, “அது… அவ…” என்று தடுமாறியவனுக்கு ‘ரித்வியுடனான நடாஷாவின் சந்திப்பு நடாஷாவுக்கு ஏதாவது சங்கடத்தை நேர்த்திவிடுமோ?’ என்ற பயம்!

ஒரு பெருமூச்சுவிட்டவாறு யாதவ் நடந்ததை நடாஷாவிடம் சொல்லி முடிக்க, அவளுக்கோ அதிர்ச்சி!

“நீ தப்பு பண்ணிட்ட யாதவ்” அவள் அழுத்தமாக சொல்ல, “ஐ க்னோ, ஆனா நான் அவள ரொம்ப காதலிக்கிறேன். இது பொய் கிடையாது” என்று யாதவ் சொல்லிக்கொண்டிருக்க, அதை இடைவெட்டி, “எந்த காரணம் சொன்னாலும் கண்டிப்பா ரித்வியால ஏத்துக்க முடியாது” என்று நடாஷா சொல்லவும், அவனுக்கோ முகமே வாடிவிட்டது.

அவளுக்கு அவனை பார்க்க பாவமாக இருந்திருக்க வேண்டும்!

“நான் ரித்வி கூட பேசனும்” நடாஷா சொல்ல, ஒரு தலையசைப்பை கொடுத்தவாறு அவளை தன்னவளிடம் யாதவ் அழைத்துச்செல்ல, அங்கு தரையில் சிதறியிருந்த உணவையும், அதை வேலையாள் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பதையும் புரியாது பார்த்தனர் இருவரும்.

“என்னாச்சு? இங்க தானே ரிது இருந்தா. அவ எங்க?” சுற்றிமுற்றி தன்னவளை தேடியவாறு கேட்ட யாதவ், வேலையாள் நடந்ததை சொல்லவும் “ஓ ஷீட்!” என்று நெற்றியில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவாறு நடாஷாவை தான் பாவமாக பார்த்தான்.

அதில் வாய்விட்டு சிரித்து, “எப்போ பார்த்தாலும் மூஞ்ச உர்ருன்னு வச்சிக்கிட்டு எங்களை எப்படியெல்லாம் கடுப்பேத்தியிருப்ப. இப்போ பாரு! கர்மா இஸ் பூமெரங்” என்ற நடாஷா, “நான் போய் அவள பார்க்குறேன்” என்றுவிட்டு அவளை தேடிச்செல்ல, அறை ஜன்னல்வழியே வெளியே வெறித்தவாறு நின்றிருந்தாள் ரித்வி.

“ரித்விகா…” என்ற நடாஷாவின் அழைப்பில் சட்டென திரும்பியவள் ஏதோ அப்போது தான் அவளை பார்ப்பது போல், “ஆங் நீங்களா? வாங்க வாங்க… எப்படி இருக்கீங்க? சாப்பிட்டீங்களா? என் புருஷன் தான் உங்கள நல்லா கவனிச்சிருப்பாரே…” என்று ஒருமாதிரி குரலில் கேட்க, நடாஷாவுக்கோ அவள் பேசிய விதத்தில் சிரிப்புத் தான் வந்தது.

“நான் உன்னை முதல்தடவை பார்த்த மாதிரி இல்லாம இப்போ நீ ரொம்ப மாறிட்ட” நடாஷா சிரிப்புடன் சொல்ல, “மாறல்ல. மாத்திட்டாங்க” விரக்தியாக வந்தன ரித்வியின் வார்த்தைகள்.

“ரித்விகா, நான் ஒன்னு சொல்லவா? யாதவ்…” என்று நடாஷா ஆரம்பிக்கும் போதே, “எதுவும் சொல்லாதீங்க! நான் அவர பத்தி எதையும் கேக்க தயாரா இல்லை” என்று கத்தியவாறு இடைவெட்டியவள், “என்ன அவர் தூது விட்டு அனுப்பினாரா?” என்று ஏளனமாக சிரித்தவாறு கேட்க, “நான் அவனுக்காக பரிந்து பேச வரல” என்றாள் நடாஷா நிதானமாக.

ரித்வியோ புருத்தை யோசனையில் நெறிக்க, “யூ க்னோ வன்திங் ரித்விகா? எனக்கு அவன்மேல காதல் இருந்ததுக்கு அவன் ஒருதடவை கூட அந்த த்ரீ மேஜிகல் வர்ட்ஸ் அ என்கிட்ட சொன்னது கிடையாது. ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப் எங்களுக்குள்ள இருந்திச்சி. ஆனா, அவனோட காதல என்கிட்ட எக்ஸ்போஸ் பண்ணதே கிடையாது. ஆனா, உன்கிட்ட அவனோட மொத்த காதலையும் வெளிப்படுத்துறான். பார்க்கும் போது ரொம்பவே வித்தியாசமா இருக்கு. பொறாமையாவும் தான்” நடாஷா புருவத்தை உயர்த்தி வியப்பாக சொல்ல, ரித்வியோ அவளையே தான் இமைக்காது பார்த்திருந்தாள்.

“த்ரீ மன்த்ஸ் முன்னாடி நான் கொழும்புக்கு வந்த விஷயம் கேள்விப்பட்டு யாதவ் என்னை சந்திக்க வந்தான். அப்போ அவன் உன்னை பத்தி பேசும் போது அவனோட கண்ணுல பொய்யான அன்பை நான் பார்க்கல ரித்விகா. அன்புக்காக ரொம்ப ஏங்கியிருக்கான். நான் ப்ரோபோஸ் பண்ணப்போ அக்செப்ட் பண்ணானே தவிர அவன் எதிர்ப்பார்த்த அன்பை என்கிட்ட அவன் உணரல்ல போல!” என்றவள் விரக்தியாக சிரித்தவாறு,

“எனக்கு துரோகம் பண்ணிட்டான்னு குற்றவுணச்சியில உன்னை விட்டு வந்து என்னை கல்யாணம் பண்றேன்னு கூட சொன்னான். அது காதலால கண்டிப்பா கிடையாது. வெறும் குற்றவுணர்ச்சி தான். அவனோட காதல் நீதான் ரித்வி. அவன் இழந்த அன்பு, அதனால உண்டான கோபம் அவன தப்பு பண்ண தூண்டியிருக்கலாம். ஆனா, உன்னை ரொம்ப காதலிக்கிறான். இதை தான் சொல்ல நினைச்சேன். டேக் க்யார் ரித்வி. சீ யூ” என்றுவிட்டு சென்றிருக்க,

அவள் சொன்னதை கேட்டு உறைந்துப்போய் நின்றிருந்தாள் ரித்வி. ‘அவனோட காதல் நீதான் ரித்வி’ நடாஷாவின் அந்த வார்த்தைகளே அவளின் காதில் ஒலித்துக்கொண்டிருந்தன.

சிலநிமிடங்கள் கழித்து நடாஷா பேசியதை நினைத்தவாறே அறையிலிருந்து வெளியே வந்தவள் முதலில் தேடியது என்னவோ தன்னவனை தான். விழிகளை சுழலவிட்டு அவள் தேட, சரியாக சிக்கினான் அவளவன் அவளின் விழிச்சிறையில்.

நடாஷாவை வழியனுப்பிவிட்டு வந்தவனும் தன்னவளை தான் தேட, அறை வாசலில் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த ரித்வியை கண்டதும் அவனுக்கோ சுர்ரென்று கோபம் ஏறியது.

அடுத்தநொடி விறுவிறுவென்று அவளிடம் ஓடி வந்தவன், “எதுக்குடி ப்ளேட் அ வீசிட்டு போயிருக்க? உனக்கு ரொம்ப திமிரு கூடிப்போயிருச்சி ரித்விகா. நானும் பார்த்துக்கிட்டு தான் வர்றேன். உன்னை…” என்று விடாது திட்டிக்கொண்டே போக, அவனை இடைவெட்டி அவள் கேட்ட கேள்வியில் கடுப்பாகிவிட்டான் யாதவ்.

“என்ன உங்க பழைய காதலிய சிறப்பா கவனிச்சி வழியனுப்பிட்டு வந்துட்டீங்களா?” ரித்வி கேலியாக கேட்க, கைமுஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்பத்தியவன், “என்ன கேள்வி இது?” என்று இறுகிய குரலில் கேட்டான்.

“பின்ன இல்லையா? அம்புட்டு கவனிப்பு அவங்களுக்கு! இப்போ தான் நான் உங்க கண்ணுக்கு தெரியுறேனாக்கும். போங்க போய் உங்க வேலைய பாருங்க” என்றவளின் வார்த்தைகளில் அத்தனை கடுப்பு!

பேச வேண்டியதை பேசிவிட்டு ரித்வி நகர்ந்திருக்க, இடம்பொருள் பாராது “அய்யோ!” என்று கத்தியவாறு தலைமுடியை பிடித்துக்கொண்டான் யாதவ். இதில் இந்திரன் வேறு, “அவள் பறந்து போனாளே… என்னை மறந்து போனாளே…”  என்று தன்னை கண்டுக்காது சென்ற ஹெலனை நினைத்து சோகமாக பாடியவாறு யாதவ்வை கடந்துச் செல்ல, இவனுக்குத் தான் தலையே சுற்றிவிட்டது.

அன்றிரவு, முதலிரவு அறையில் அதிபன் தன் மனைவியை எதிர்பார்த்து காத்திருக்க, உள்ளே நுழைந்த வைஷ்ணவியின் முகத்தில் சோகரேகைகள்!

அதைப்புரியாது பார்த்தவாறு அவளை நெருங்கி அவளின் கன்னத்தை தாங்கியவன், “என்னாச்சு வைஷு?” சற்று பதட்டமாகவே கேட்க, “அது வந்து மாமா… நாம இன்னைக்கே வாழ்க்கைய ஆரம்பிக்கனுமா? ரித்வியோட வாழ்க்கை சரியானதும்…” வைஷ்ணவி தயக்கமாக இழுக்க, “அதிகம் தமிழ் சீரியல் பார்ப்பியோ?” என்று முறைத்தவாறு கேட்டான் அதிபன்.

வைஷ்ணவியோ திருதிருவென விழிக்க, “அடியேய்! உனக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? அதுங்க நல்லா ஜாலியா இருந்துட்டு தான் இப்போ பிரச்சினைய இழுத்துட்டு வந்து முட்டிக்கிட்டு நிக்கிதுங்க. அதுவும், இதுங்க பிரச்சினை சரியாகும்னு உன்னை விட்டு விலகியிருந்தா காலம்பூரா சன்னியாசி தான் நானு. சோ, நோ மோர் எக்ஸ்கியூஸஸ்” என்று குறும்பாக சொன்னவாறு தன் மனைவியை கைகளில் ஏந்திக்கொண்டவன், அவளை மஞ்சத்தில் சரித்து அவளின் மேல் படர்ந்தான்.

“மாமா… அது நான்… எனக்…” என்று வெட்கத்தில் முகம் சிவக்க பேச வந்தவளை மேலும் பேச அவளின் மணாளன் விட்டால் தானே!

இதழை தன்னிதழால் சிறைபிடித்திருந்தவன், அவளை பேசவிடாது அவளுக்குள் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பித்து, அவளையும் அந்த சுகமான உணர்வில் மூழ்கச்செய்ய, அதில் விரும்பியே தொலைந்துப் போனாள் அவனவள்.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!