வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 7.2

Screenshot_2020-09-30-16-03-02-1-4ad7c09e

மித்ரன், கையில் சில தீன்பண்டங்களுடன் உணவு மேசையருகே சென்று இவர்களை அழைக்க கிருஷ்ணா பின்னால் தேநீர் குழப்பிகளுடன் வந்தான்.மகிழ், வீணா வின் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு என்ன செய்வதென்று தடுமாற, வாசுகியோ வீணா திடீரென இப்படி  நடந்து கொள்கிறாளே என்னாச்சு காலை நன்றாகவே வேலைக்கு தயாராகி சென்றவள், வரும்போதும் பொலிவிழந்து வர அதனையே மனம் சிந்திக்க, இப்போதானால் மித்ரனின் குரல் சரியாக பெண்களை வந்தடைந்திருக்கவில்லை ஒருத்தியை தவிர. 

 

“மா என்னாச்சு?கிருஷ்ணா இவர்களை  நோக்கி வந்தவன் கேட்க, அப்போதுதான்  இருவருமே, 

“ஹான்… ” என்றபடி விழித்தனர். 

மித்ரன் அடுத்து அவ்விடம் வர முன்னமே, 

 

“பட்டு, அவன் நம்ம வீட்ல கெஸ்ட் கிடையாது, சோ இப்படித்தான் இருப்பான். அதோட நீ  இப்போ அவனுக்கு ஜஸ்ட் நம்ம ரிலேஷன், மத்தபடி இப்போ ஸ்டாப்f, அவ்ளோதான். காலைல இருந்து அவன் கேட்குற கேள்விக்கெல்லாம் பதில் தந்தே ரொம்ப டென்ஷன் ஆகிட்டேன்.நீ இப்டி இருந்தா கேள்வி மேல கேள்வி கேட்பான். உனக்கு அதான் வேணும்னா சொல்லு.”

 

“நோ நோ.நான் ஒன்னும்சொல்லவே இல்லையே. “

 

“நீ ஒன்னும் சொல்ல தேவையே இல்லை. நீ இருக்கத பாரு? ” கிருஷ்ணா கடிந்து கொள்ள, இவ்வளவுக்கும் மித்ரன் ஓர்  இருபது அடி தூரத்தில் தான் இருக்கிறன்… மிக மெதுவாக அவளை அவன் செவி சென்றடையாதவாறு பேசிக்கொண்டிருந்தான். 

 

“டேய் என்னாச்சு? அவளை ஏன் திட்ற.அவள்  இன்னைக்கு ஏதோ நினைப்புல இப்டி இருக்கா. அவளே சரியாகிடுவா.பட்டுவ திட்டாதேடா கிச்சா. “

 

“ஆமா நல்லா வளக்குற, உன்னை போலயே.நல்லா அழ மட்டுமே கத்து கொடுத்திருக்க”

 

“டேய் இங்க எல்லாமே ஆறிப்போயிடும். ஹால்ல இருந்து இங்க வர நீ பஸ்ஸுக்கு வெய்ட் பண்றியா? “

 

“ஆமாடா இன்னும் வரல.அதான் நடந்தே  வரலாம்னு நடக்குறோம்.”

கூறிய கிருஷ்ணா அவ்விடையே மகிழையும் முறைத்தவன் இவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே  சென்றான்.

 

மித்ரன் ஒரு கையில் தேநீருடன்  மறுகையில் தின்பண்டம்… அவன் பணி ஆரம்பித்திருக்க, 

 

“மித்து ரொம்ப நாளைக்கப்புறம் உன் டீ சாப்பிடுறேன்… “

மகிழ் கூறியவாறே ஒரு மீடர் அருந்த, 

 

“டீ நான் போட்டது” மகிழை இன்னுமே முறைத்துக்கொண்டு கிருஷ்ணா கூறியவன் அவளருகே அமர்ந்தும் கொண்டான். 

 

ஹாய் மிஸ்.வீணா? உங்களை கவனிக்கவே  இல்லை.ப்ளீஸ் ஜோஇன் அஸ்.இன்னும் அமராது நின்றிருந்தவளை பார்த்து  கூறவும் ஒன்றும் செய்ய முடியா நிலையில் இருக்கையின் ஓரமாக அமர்ந்துக்கொண்டாள். 

 

மற்றவர்கள் உணவுண்டு தேநீர் அறிந்தியவாறே சகஜமாய் பேசி சிரித்தவண்ணம் இருக்க பெண்ணவள்  பெரும் அவஸ்தையை உணர்ந்தாள்.

 

‘கடவுளே எனக்குமே மறந்திருக்க கூடாதா?இவனோடு சகஜமாய்  பேசியிருப்பேனே ‘ மனமதுவோ கூவிட , 

 

அவள் அவஸ்தையை மற்ற மூவரும் கண்டாலும் வாசுகி ஏன்னென்று புரியா விடினும் புதிய ஒருவனைக் கண்டதனாலேயே என்று நினைத்திருக்க,அவளே அவளை  சரிப்படுத்திக்கொள்ளட்டும் என்று கண்டுகொள்ளாமல் இருந்தனர். 

 

மித்ரன் பேச இவள் பக்க அவன் கன்னக்குழி அழகு, அவன் சிரிக்க அழகாய் இதழ்  குவித்து முத்தமிட அழைப்பதுவாய்… 

 

சிறிய கண்கள் இரண்டும் இதழுக்கு  போட்டியாக சிரிக்க அக்கண்கள் இரண்டுக்கும் காவலாய் இமை இரண்டாக மாறிவிட மாட்டோமா… 

 படிய வார கேசமது கலைந்தே இருக்க தலைக்கோதும் அவன் விரல்களில் முத்தமிட்டு தன் விரலோடு கோர்த்து  தானே அவன் சிகை கோதிவிட மாட்டோமா’

மனம் ஏங்கித்தவித்தது… 

 

அருகருகே  அமர்ந்திருந்தும்  இருவருமே உலகப்படத்தினில் வரையப்பட்ட இரு கண்டங்களாய்… சிறு இடைவெளியும்  சமுத்திர ஆழ் கடலென… ஏன் தான் இப்படியான ஓர் நிகழ்வு நம்மிடையே… 

 

அவனையே ஏக்கமாக பார்த்துக்கொண்டு  அமர்திருதாள் வீணா.எதேர்ச்சியாக இவள் பக்கமாய் திரும்பிய மித்ரன்அவனையே  பார்த்திருப்பதைக்கண்டு அவள் முகம் காண நிலவை அருகே கண்ட தேவானவனுக்கு அவள் முகத்தில் குடிகொண்டிருந்த  சோகம் எதையோ நினைவில் கொண்டு வருவதாய்… இதே முகத்தினை தானே தினம் பார்த்திருந்தான் அந்நாளில்.

 

சில நொடி அவளையே பார்த்திருக்க  அவன் முகத்தினில் எதைக்கண்டாளோ வீணா சட்டென தலை தாழ்த்திக்கொண்டாள்.மனமோ, 

‘கடவுளே என் நினைவுகள் வேண்டாம் என்  வில்லனுக்கு தாங்கிட மாட்டான்.அவன் உள்ளத்தினில் என் நினைவை  அழித்திடு…’ வேண்டிக்கொண்டு மீண்டுமாய் அவனை நிமிர்ந்து பார்க்க  அவளையே தான் பார்த்திருந்தான்.

 

இவளோ கண்கள் விரிய அவனை பார்க்க  அவனோ கண் சிமிட்டி கண்களாலே என்னவென்றும் கேட்டிட மறுப்பாய்  தலையசைத்தவள் தேநீர் குழப்பியை கையிலேந்தியவாறு முன்னறை செல்வதாய்க்கூறி எழுந்து அவளறைக்குள் நுழைந்துகொண்டாள். இதழ் பிரியா  புன்னகை யொன்றோடு அவள் செல்வதைப் பார்த்திருந்தவன் திரும்ப அவனையே பார்த்திருந்த கிருஷ்ணாவும் மகிழும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். 

 

“டேய் இன்னுமே என்ன விளையாட்டிது.இப்டியே  எவ்ளோ நாளைக்குத்தான் இருக்கப்போறதா நினைச்சிருக்க. மகிழ் நீ கூட யோசிக்க மாட்டியா. வீட்ல அப்பாம்மா எவ்ளோ வொர்ரி  பண்றாங்களா இருக்கும்? ‘

‘ம்மா நீங்கா கூடவா சொல்லல? “

 

“மகிழை  ஏதும் சொல்லாத. எல்லாம் இவன்தான்.நான் சொல்லி கேட்கவா போறான்… இதோ அவ வந்து  ஒருவருஷமாகுது தினம் சொல்றா, எதாவது காரணம் சொல்லி தட்டிட்டே இருக்கான்.அவகூட என்ன  புரிஞ்சிட்டாளோ உன் கூட பேசிதான் ஏதாச்சும் பண்ணனும் சொல்லிட்டு இருந்தா. “

 

‘இது எப்போ? ‘ எனும் விதமாய் மகிழ், கிருஷ்ணா இருவரும் ஒருவரையொருவர்  பார்த்துக்கொண்டனர். 

 

“ஓஹ்! சரி நாளைக்கே மகிழ் வீடு  போகலாம்.அப்பாட்ட சொல்லிருங்க. “

 

“மித்ரா உனக்காகத்தான்,உன்னால  கஷ்டமா இருக்கும்டா…”

 

“ஜஸ்ட் ஷட் அப்  கிருஷ்ணா. கட்டின பொண்டாட்டிய எவனாவது அவன் பிரெண்டுக்காக அவ அம்மா வீட்ல கொண்டுபோய்  விடுவானா? லூசா நீ எவளோ எதுவோ பண்ணினான்றதுக்காக உங்க லைப் ஸ்பாயில் பண்ணிப்பீங்களா? ‘

 

சரி எதுக்காக இப்டி பண்ணின சொல்லேன்?”

 

“அது…” 

விடு  கிருஷ்ணா … இனியும்  தள்ளிப்போடாத.இல்லன்னா கிளம்பு இப்போவே  போய் பேசிட்டு வரலாம் மகிழ் இனி இங்கேயே இருக்கட்டும்… “

 

“சரி…”கிருஷ்ணா  கூற… 

 

“இல்ல வேணாம் நாளைக்கு நான் கேம்ப்  போறேன். வர ரெண்டு நாள் ஆகும்.வந்ததும்  பேசிக்கலாம். “

 

“ஹ்ம் சரி அதுக்கப்புறம் நோ மோர் டிலே. ” இப்படியாக கலகலப்பாய் பேசிய உரையாடல் நடுவே இருவரின் வாழ்வையும்  சீர்படுத்திட வழி போட்டும் விட்டான் மித்ரன்.