“வில்லனின் வீணையவள்” -அத்தியாயம் 8

Screenshot_2020-09-30-16-03-02-1-60b0d239

“வில்லனின் வீணையவள்” -அத்தியாயம் 8

“ஹாப்பிக்கா ரொம்ப அழகான ஊர்ல.டைம் கிடைச்சா கொஞ்சம் வெளில போலாமா? “

 

மகிழுடன் வீணாவும் வந்திருக்க வந்த  முதல் இரண்டு நாட்களுக்கு நேரம் உணவருத்தக்கூட குறைவாக இருந்தது. ஆம்.அவர்களது இரண்டு நாள் நான்கு நாட்களாக அருகே அமைந்திருந்த இன்னுமொரு ஊரையும் சேர்த்துக்கொண்டு நீடித்திருந்தது. 

 

மூன்றாவது நாள் காலை அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட  அறையில் இருந்தவாறே இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

 

“பட்டு இன்னைக்கு ஆப்டர் லஞ்ச் கொஞ்சம் பிரீ ஆகலாம்.அப்போ கண்டிப்பாக போலாம் டா. உனக்கு டையர்ட்னா நீ ரூம்ல ஸ்டே பண்ணிக்கோ.”

 

“நோ ஹாப்பிக்கா நானும் வரேன்.எனக்கும்  மனசுக்கு ரொம்ப ரிலாக்சா இருக்கு. “

 

இருவருமாக கிளம்பி அன்றைய நாளின் வேலைகளைக் கவனிக்க சென்றனர்… 

பகல் உணவின் பின்னர் இருவருமாக அவர்கள் தங்கியிருந்த விடுதியின் அருகே அமைந்திருந்த பூங்கா சென்று சுற்றி பார்த்து விட்டு வர இவர்களை கடந்து சென்ற ஓர் வாகனத்தில் இருந்து இவர்களுக்கு ஓர் இருநூறு மீட்டர் தூரத்தில் வண்டியின் கதவு திறக்கப்பட எதுவோ விழுவது போல இருந்தது. வண்டியோ அடுத்த கணமே காற்றாய் காணாமல் போயிருக்க இவர்கள் இருவரும் அவ்விடம் விரைய முன்னமே கூட்டமும் சட்டென்று கூடிவிட்டது.

கூட்டம் விளக்கியிருவரும் உள்ளே நுழைந்து பார்க்க கண்கள் கூசிக்கொள்ளும் அளவில் பெண்ணொருத்தி சுருண்டுக்கிடந்தாள். அனைவரும் பார்வையாளர்களே… எப்படித்தான் கண்கள் விரிய பார்த்திருக்க முடியுமோ… பார்க்கின்றனர். பெண்கள் இருவருக்குமே கோபம் மிகையாக சற்றும் யோசிக்கவில்லை.இருவரும் குளிருக்காக  போர்த்தியிருந்த இருவரது ஷாவ்ல் லினை கழட்டி கீழே கிடந்த பெண்னை மகிழ் மடி தாங்கிட வீணா நடுங்கிய கைகளுடன் போர்த்திவிட்டாள். 

 

மகிழ் வைத்தியர் என்பதால் பலமுறை இவ்வாறான நிகழ்வுகள் சந்தித்திருக்க வீணாவிற்கோ,மனதில் ஆயிரம் எண்ணவலைகள். இருந்தும் அந்நேரம் தாம் மட்டுமே உதவ வேண்டிய நிலையில் இருக்கிறோம் எனத் தோன்ற மனதை பூட்டியபடி செயற்பட்டாள். 

 

“ச்சே. என்ன மனுஷங்களோ…” 

திட்டியவாரே மகிழ் அவர்களின் தலைமை பொறுப்பாளருக்கு அழைப்பெடுத்து விபரம் கூற அவர்களும் அருகே என்பதால் அவசரமாகவே வந்து சேர்ந்தனர். 

 

வயதிருக்கும் அப்பெண்ணிற்கு பதினைந்து. மிருகங்களுக்கு வயதென்ன  உயிர் இருக்கிறதா என்பதுவே புரிய பல மணிநேரம் ஆகிடுமே.ஏன் என்றே புரியாத,மிகக் கொடிய அரியவகை உயிரினமாக மாறி வருகிறது இவ்வினத்தின் சில உயிர்கள். 

 

போற்றத்தகுந்த,பண்புடைய, பாரம்பரிய பேரன்பு மிகு, சில நல் உயிர்களுக்கும் இவ்வாறான பல கொடிய கெட்ட உயிர்களால் என்றுமே தலை நிமிர முடியா நிலையல்லவா… 

ஆம் இவர்கள் சிலரே என மாறிட கொடியவன் பல என்றே அழைக்க மிகையாகி போகும் காலமிது… 

 

அப்பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கும் வரையிலும் மகிழோடு கூடவே இருந்தவள் பத்து மணியளவிலேயே அவர்கள் அறையை வந்தடைந்தனர். 

 

இருவருமே நன்றாகவே  களைத்து வந்திருக்க வந்ததும் மகிழ் குளித்து உணவும் உண்ணாது உறங்கிவிட, வீணாவின் உறக்கமோ தொலை தூரமாய். 

 

மனம் முழுதும், பாதையில் கண்ட விபத்து முதல் இப்போ இந்நொடி வரை அவள் மனம் நினைத்ததெல்லாம்…

 

அவள் உள்ளம் முழுதும் முழுமதியாய் பூரணமாய் நிறைந்திருந்த அந்நிலவைப் போலவே சில தினம் வளர் பிறையாய் குளிர் நிலவாய் வளம் வருபவன், சிலதினம்  தேய் பிறையாய் சுடும் நிலவாய் இருள் சூழ்ந்து மனதை ரணப்படுத்தும் தன் வில்லனை.வீரவில்லனை… 

 

மூன்று மாதங்கள் ஒரே வீட்டினில் வாழ்ந்திருக்க என்னளவில் நானே அவன் வசம் தன் மனதை இழந்தேனே தவிர  அவனில் மாற்றம் ஏதும் இருந்திட வில்லையே… 

அவன் எண்ணமெல்லாம் ஒன்றே.அவன் அவன் சுயம் அறிந்த நிலையில் இருந்திருந்தாலுமே தவறாய் ஏதும் நடந்திட கடுகளவும் வாய்ப்பில்லையே. அதையும் இரண்டு நாளைக்கு முன் கண்டுவிட்டாளே. 

 

மனம் இன்று சொல்லமுடியா மகிழ்வில் ஒருபுறம் என்றால், மகிழ்வை பகிர்ந்திட முடியா நிலையில் மறுபுறம் என மனதோடு உரையாடிய படி அவன் நினைவுகள் மட்டுமே  சுமந்திருந்த உள்ளத்தினை மிக நீண்ட நாளின் பின்னே திறந்தாள் பெண்ணவள். 

 

****

அன்றைய அடைமழை நாளில் கிருஷ்ணா எனும் ஆணழகனை சந்தித்த இரவிற்கு  கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு முன்… 

 

தாமரையின் திருமணம் முடிவாகியிருக்க தான் செல்வதோடு தன் தங்கைக்கும் நல் வழியொன்றை அமைத்து கொடுத்திட வேண்டும் என்று நினைத்து தன் தங்கையிடம் அவளது படிப்போடு  சம்பந்தமான சான்றிதல்கள் அனைத்தையும் நகல் எடுத்து தருமாறு கூறினாள். அத்தோடு அன்றைய நாள் வீட்டில் தன் தந்தையும் பாட்டியும் வீட்டில் இல்லாதிருக்க வீணாவையே சென்று எடுத்து வருமாறும்  கூற சரியென்று மாலை வேளை கையில் ஒரு பையோடு நான்கைந்து கடைகள் தள்ளியிருக்கும் நகலெடுக்கும் கடைக்கு சென்றாள் பெண்ணவள்.நகல் எடுத்தவள் திரும்பி வர அப்பாதை வழி நெடுகிலும் மனித நடமாட்டம் இல்லாமலிருக்க மற்ற  மூன்றுக்கடைகளும் பூட்டியிருந்தது. 

 

வீணாவோ நிம்மதியாய் பொறுமையாக  கண்களாலே இருமருங்கிலும் பார்த்தவாறு  நடந்து வந்துக்கொண்டிருந்தாள்.வீதிக்கு  அந்தபக்கம் கட்டப்பட்டிருந்த வீடுகள் பிரமாண்டமாக  இருந்ததோடு தினம் இதே வழி கடந்து போயினும் அருகே பார்த்து ரசித்ததெல்லாம் இல்லை. இன்று அதற்கான  சந்தர்ப்பம் கிடைக்க சிறு பிள்ளையாய் பார்த்துக்கொண்டே வந்தாள். அப்பாதை வேறு பிரதான பாதையாக இருக்க வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாமகவே இருக்கும் அன்று அது வேறு குறைவாகவே இருக்க வரும் ஒரு சில  வண்டிகளும் அந்நேர் பாதை வழியே சீறிக்கொண்டு வர அதையும் பெண்ணிவளோ ரசித்த படியே நடந்து வந்தாள். 

 

கருப்பு நிற பாவாடை சட்டை,அதற்கு சாம்பல் நிற தாவணி அணிந்திருந்தாள்.அலங்காரம்  ஏதுமில்லை. நெற்றியில் பொட்டிட்டும் இருக்கவில்லை. கூந்தலும் களைந்து காதோரமாய் கன்னத்தில் சில கற்றை முடிகள் காற்றில் ஆட அவள் கைகளும் காற்றில் ஆட்டியபடி நடந்துக்கொண்டு வந்தாள். 

அவள் நடந்து வர தூரமாய் அவள் கண்களுக்கு தெரிகிறது அவளுக்கு பிடித்த வண்டி கருப்பு நிற ஜீப் ரக வண்டியது.பார்த்தவள் சிலநொடி நடை மறந்து நின்றுவிட்டாள்.கண்கள் விரிய பார்த்திருந்தவள் அது தன் பக்கமாய்  அருகே வர வர பெண்ணவளுக்கோ கண்கள் மின்னுகிறது.’ஹை என் பக்கமா தான் வருது ரொம்ப பக்கத்துல பார்த்துக்கலாம் ‘மனமோ கும்மாளமிட இவளை கடும் வேகமாய் தாண்டிய வண்டி அரை கிலோமீட்டரையும் தாண்டிச்சென்றிருக்கும்.நேர் பாதையல்லவா வண்டி இவளை தாண்டி செல்லவுமே இவளுமே மறுபக்கமாய்  திரும்பி அது போகும் வழியை பார்த்திருந்தாள்.

 

‘ச்சே இவ்ளோ வேகமா போய்ட்டு, என்னால சரியா பார்க்கக்கூட முடில.’

இவள் முகமோ சிறு குழந்தையை காட்டிட செய்கையும் அதனையே நிரூபித்தது. தூரச்சென்ற வண்டியோ வேகம் குறைத்து தொலைவாய் நடு வீதியில் நின்றது. 

 

‘அச்சோ என்னாச்சு? ‘பெண் மனம் இங்கே  துடிக்க, வண்டியில் அமர்ந்திருந்தவனோ இவளைத்தான் தொலைவிலிருந்தபடி  பார்த்துக்கொண்டே வந்து கடந்தும் சென்றவன்,இப்போது வண்டியையும் நிறுத்தி பார்த்துக்கொண்டிருந்தான். 

 

அவள் தோற்றம் அவனை ஏமாற்றிய தோற்றமது. அவன் ஏமாறியது அவன் முன்னே பொய்யாய் கண்ட தோற்றரத்திலேயே.இதுவே மெய்யானது  என்பதை அவன் இருந்த நிலை அவனுக்கு எடுத்துரைக்க மறுத்துவிட்டது. 

 

இவளுமே அத்தகையவள், இவள் மட்டுமல்ல  இவள் போன்று தோற்றத்தில் இருப்பவர்கள் எல்லாமே அப்பாவிகளாய் தோற்றமிட்டு மயக்கும் மாயப்பெண்கள் என்றே நினைத்துவிட்டான்.அவன் மனமோ அதுவே  உண்மை என்று பதித்து கொண்டிருந்தது. 

 

அவளை நோக்கி பின்னாக வருகிறது.மிக  மெதுவாக வருகிறது அவ்வண்டி.எதாவது விழுந்து விட்டதோ  பெண் இப்போ அங்கும் இங்குமாய் கண்கள் தலை எட்டி கண்களால் தேட, அதுவும் அவன்  கண்களுக்கு பிழையாகவே தென்படுகிறது. 

 

இவன் வர இவர்களை,இவர்கள் உரையாடப்போவதை யாரும் பார்த்துவிடுவார்களோ என பெண்  சுற்றத்தை பார்ப்பதாய் நினைத்துக்கொண்டான். 

 

அவ்வண்டி மிக அருகே வரவும் ஏதோ மனம் நெருடவே வீணா வண்டியை கூர்ந்து பார்த்தாள். பின்னால் கருப்பு நிறக் கண்ணாடியாக இருக்க உள்ளே ஒன்றும் விளங்கவில்லை. அத்தோடு அப்போது தான் சுற்றத்தை கவனிக்க அவளை தவிர  பாதையில் யாருமிருக்கவில்லை. அவசரமாக திரும்பி நடக்க ஆரம்பித்து விட்டாள்.அதைக்கூட பிழையாகவே எண்ணிவிட்டான் வண்டியில் இருந்தவன். 

 

யாரையோ பெண்ணவள் கண்டு விட்டு நல்லவளாக திரும்புகிறாள்  என்றே நினைத்தவன் கால்கள் அழுத்த வண்டியை ஒரே தடவையில் வேகமாய் செலுத்தியவன் நிறுத்தியது  பெண்ணவளை சற்றே பின்னாக இடித்து… தூக்கியெறியப்படவில்லை, இருந்தும் சற்று தள்ளி விழ நெற்றியில் புருவதோடு  பாதையில் பட்டு கிழிந்து இரத்தம் வழிந்த வண்ணம் இருந்தது.

வேங்கை என வண்டி விட்டிறங்கியவன் அருகே வர முன்னமே  மயக்கமாகி இருந்தாள் வீணா. பசியாற்றவே உண்பவள் உடல் சிறு வெட்டுக்காயத்தினையே தாங்காதவள் மயங்குவதில் வியப்பில்லையே. அள்ளி எடுத்தவன்  பின் பக்க கதவை திறந்து இருக்கையில் போட்டவன்.வண்டியை புயலென கிளப்பினான் அவள் வாழ்வினை தானே அறியாது முழுமையாய் தன்னுள்ளே சுருட்டிக்கொண்டு.

 

ஆம் அஃறினையாகவே அவளைக் கையாண்டான்.அவன் உள்ளம் கொண்ட தூயக்காதலை பெண்ணொருத்தி  ஏமாற்றியிருக்க அப்பெண்ணை போலவே அவள் உருவில் கண்ட பெண்ணிவளும் இருப்பாள் என நினைத்துவிட்டான. அன்றைய நாளின் நிகழ்வு இன்னுமாய் அவன் மனதை காயப்படுத்தியிருந்தது. 

 

அன்று காலை ஆபிஸ் செல்லும் வழியில் நிஷாவை சந்தித்திருந்தான், அதுவும் எப்போதும் அவளை கண்டிரா உடையில், பாவனையில், அத்தோடு அவள் நின்றிருந்தது மகிழின் அண்ணனோடு. அவன் படித்ததெல்லாம் வெளிநாட்டில் அதனால் மகிழின் அண்ணன் என்றளவில் மட்டுமே தெரிந்திருந்தது. இவனைக்காணவும் அவளாகவே வந்து  பேசியது இவனை இன்னுமாய் கோபமூட்டியது. உறங்கியிருந்த எரிமலையை உயிர்கொள்ள செய்தது. அதுவும் அவள் இவனை அறிமுகபொடுத்திய விதம், 

 

“ஹாய் மித்து, ரொம்ப நாளைக்கப்புறம்.இது மித்ரன், நான் சொல்லிருக்கனே, என் ஸ்டடிஸ்க்கு ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க,என்கூடவே  இருந்தாங்கன்னு… “

 

“யா கென் ரிமெம்பெர்.ஹலோ அம் பிரணவ். “

மித்ரனின் அறிமுகத்திற்க்காக கை நீட்ட, இவனும் கைகுலுக்கியவன், நீங்க மகிழ் பிரதர்…? “

 

“யா.தெரியுமா அவளை? “

“ஷி ஐஸ் மை குட் பிரென்ட்…ஓகே தென், வில் மீட் சம் அதர் டைம் பை. “

 

நிஷாவின் பக்கமும் திரும்பவில்லை.

 

வண்டியை கிளம்பியவன் ஆபிஸ் செல்லவுமில்லை, எங்கே என்று தெரியாமல் பல கிலோமீட்டர் கடந்து பாதை செல்லும் வழியெல்லாம் இவன் பயணிக்க  இறுதியில் வண்டி நின்றதென்னவோ பாவாடை தாவணி அணிந்த பெண்ணிவளிடம். 

 

ஒருவாரமோ, ஒருமாதமோ, பல வருடமோ தான் கொள்ளும் தூய்மையானா  காதல் மறுக்கப்பட்டாலும் வழி மிகையாகி இருக்காதோ என்னவோ. பொய்யாக்கப்பட்டது, அது காதலே இல்லை என்றாக்கப்பட்டது,அவளொருத்தியின்  சுயநலத்திற்காக அது வெறும் கவர்ச்சியின் பெயரில் உருவான ஏதோ வொன்று என்றிட இவன் மனமோ கண்ணடித்துகள்களாய் தூள் தூளாகிப்போனது. பொய்யாய் வேறேதும் காரணம் கூறி அவனை மறுத்திருந்தாலாவது இவ்வாறு கஷ்டப்பட்டிருக்க மாட்டான் போல. 

 

அவன் உள்ளத்திற்க்கு நேசம் கொள்ள மட்டுமே தெரிந்திருக்க, வழி பற்றி அறியாதிருக்க, எப்போதுமே சிறு மழலை  உள்ளமாய் தூயவனாக இருந்திருக்க இத்தனை தாங்க முடியாமல் போனது. அதற்காக அவன் மனம் யாரிடமும் திறக்கப்படாமல் இருக்க அணை உடைத்த வெள்ளமாய் முழுமையாய்  கொட்டியதென்னவோ பெண்ணிவளிடம். 

 

வண்டியை படுவேகமாக செலுத்தியவன் சென்று நின்றது அவர்களின் அங்காடியின்  மேலதிக துணி, மீள் பொதியிடல் ஆடைகள் என்பன சேகரித்து வைக்கப்படும் இடத்தில். அது ஒரு வீடு. அண்மையில் தான் வாங்கியிருந்தார்கள் நண்பர்கள் இருவரும். இதற்கு முன் வந்ததே இல்லை. சமீபமாய் அவனுக்கென்று ஓரறை அமைத்து அடிக்கடி வந்து தனித்து இருப்பதற்காக  பயன்படுத்துகின்றான்.

 

பெண்ணவளை தூக்கியவன் அவள்  முகத்தில் வழிந்து காய்ந்திருந்த இரத்தத்தைக் கண்டுக்கொண்டதாய் தெரியவில்லை. அவளை அவனறைக்குள்ளே இருந்த இன்னுமொரு அறையின் ஒருமுலையில் கிடந்த ஒற்றைக்கட்டிலின் மெத்தை ஒன்றில் கிடத்தியவன், அவன் அறையிலிருந்து ஏதோ ஒரு வெண்ணிற பெட்டி ஒன்றினை எடுத்து வந்தான். அவள் மயங்கிய  நிலையிலேயே இருக்க அவள் காயத்தினை சுத்தப்படுத்தியவன் தையலிட்டு மருந்திட்டான். மருந்திட்டு முடிய 

“இவ் வழிகளெல்லாம் வலியே இல்லை என்பாய் நானினி உனக்காய் தரும் வலிகள்.”

கூறியே  நிமிர்ந்தான், மித்ரன்  வீரமித்திரன, வீணாவின்  வில்லனாகி போன வீரமித்திரன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!