விழிகள் 23

eiLXM9P9470-6a9c6aed

விழிகள் 23

ஐர நிறுவனத்தினநிர்வாகி மிஸஸ்.மாயா மஹேஷ்வரியின் அதிரடி முடிவு”

“ஐரா காஸ்மடீக்ஸ் மற்றும் ஐரா நிறுவனங்களை தற்போது பொறுப்பேற்றிருக்கும் மிஸ்டர்.அகஸ்டின். மிஸஸ்.மாயா மஹேஷ்வரிக்கும் மிஸ்டர்.அகஸ்டினுக்கும் என்ன தொடர்பு?”

இவ்வாறான செய்திகள் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளிலும் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்க, கண்ணாடியிலான ஐரா நிறுவனத்தின் கட்டிடத்திலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியே வெளியே வெறித்தவாறு பேன்ட் பாக்கெட்டில் கையை இட்டு, கோட் சூட்டில் நின்றிருந்தான் அகஸ்டின்.

அவனுடைய முகம் இறுகிப்போய் இருந்தது. அவனுடைய பார்வையோ கட்டிடத்திற்கு கீழ் முட்டி மோதிக்கொண்டு மேல்தள கண்ணாடி வழியே தெரியும் அகஸ்டினை புகைப்படமெடுக்க போராடிக்கொண்டிருக்கும் பத்திரிகையாளரின் மேல்தான் வெறுப்பாக படிந்திருந்தது. அவனுடைட வாழ்க்கையை நினைத்தே அவனுக்கே ஆத்திரம்.

டீபாயிலிருந்த காகிதங்கள் இப்போது மொத்த ஐரா நிறுவனமும் அவனின் பொறுப்பிற்கு கீழுள்ளதை உணர்த்திக்கொண்டிருந்தன. இரண்டுநாளைக்கு முன்னே பொறுப்பை மாற்றியாகிற்று. ப்ரெஸ்மீட் வைத்து விடயத்தையும் அறிவித்தாயிற்று. ஆனால், அகஸ்டினின் முகத்தில் கொஞ்சமும் சந்தோஷம் இல்லை.

‘அவ்வளவுதானா நம் வாழ்க்கை!’ உள்ளுக்குள் வேதனையாக நினைத்துக்கொண்டவனின் நினைவுகள், மாயா இத்தாலியிலிருந்து இந்தியாவுக்கு வந்த சமயம் அவர்களுடன் நடந்த சம்பாஷனையைதான் நினைத்துப் பார்த்தது.

அன்று,

தனதறையில் அலைப்பேசியில் அகஸ்டின் விளையாடிக்கொண்டிருக்க, சட்டென அவனுடைய கையிலிருந்த அலைப்பேசியை பிடுங்கி அவனருகே அமர்ந்துக்கொண்டார் மாயா.

அதில், “அத்தை…” என்று அகஸ்டின் சிணுங்க, “ஓ கோட்! ஐராவோட நெக்ஸ்ட் சிஈஓ மொபைல் கேம்முக்காக கோச்சிக்கிறான். இவன் கையில மொத்த கம்பனியையும் கொடுத்து…” மாயா சட்டென சொல்லி விழிகளை சலிப்பாக உருட்ட, அதிர்ந்துவிட்டான் அவன். ஆனால், அதுவும் சற்றுநேரம்தான்.

அதிர்ச்சி மறைந்து கேலியாகச் சிரித்தவன், “காமெடி பண்ணாத அம்மு! ப்ரேன்க் பண்றியா என்ன? வயசுக்கும் மூளைக்கும் சம்மந்தமே இல்லை.” மாயா சொல்வதை நம்பாது அவர் கையிலிருந்த தன் அலைப்பேசியை பிடுங்கிக்கொண்டு முன்னே செல்ல, மாயாவிடமிருந்து எந்த பதிலும் இல்லை. சட்டென நின்றவன், திரும்பி மாயாவை புரியாதுப் பார்த்தான்.

நிதானமாக எழுந்து நின்றவர், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி கொடுப்புக்குள் சிரிக்க, அதிலே அகஸ்டினுக்கு புரிந்துப் போனது.

விழி விரித்தவன், ” நீ விளையாடுற மாதிரி எனக்கு தெரியல அம்மு. அப்போ மஹி…” அதிர்ச்சி குறையாது கேள்வியாக இழுக்க, “அவனுக்கு இதுல ஆர்வம் இல்லை.” மாயா சொல்லிமுடிக்கவில்லை, “எனக்கும்தான் இல்லை. என்னை ஃபோர்ஸ் பண்ணி கம்பனியில வேலை பார்க்க வச்ச. இப்போ ஏதோ பர்ஃபி சாப்பிடுங்குற மாதிரி கம்பனிய ஏத்துக்க சொல்ற.” கோபமாக வந்தன அகஸ்டினின் வார்த்தைகள்.

“இல்லை அகி, மஹியோட ஆர்வம் வேற பாதையில இருக்கு. அதுமட்டுமில்ல, நம்ம கம்பனி பெயருக்கு எப்போவுமே கலங்கம் வர விடக் கூடாது. நம்ம தொழில நாம மதிக்க கத்துக்கணும். அன்னைக்கு என் அம்மா இறந்த சமயம் ஐரா கம்பனீஸ்ல ஏகப்பட்ட பிரச்சினை. மொதல்ல விட்டு ஓடிட்டேன், ஆனா நம்ம அடையாளத்தை சிதைய விடக் கூடாதுன்னு பல தடையங்களுக்கு அப்றம் மொத்த கம்பனி பொறுப்பையும் ஏத்துக்கிட்டேன். இதே இக்கட்டான சூழ்நிலைதான் அன்னைக்கு நடந்திச்சு. மனோகரன் ஆத்வியை கடத்தி மிரட்டினதும் மஹி சென்ட்டிமென்ட்டா பிஹேவ் பண்ணான். அது தப்புன்னு சொல்லல்ல, ஆனா சாதுரியமா நடந்திருக்கலாம். பட் யூ…” என்று நிறுத்திய மாயா, அவனை மெச்சுதலாக பார்த்தார்.

“அதானே பார்த்தேன். என்னடா அப்போவே கண்டுபிடிச்சிருப்பாங்களே!  என்கிட்ட எதுவும் கேக்கலையேன்னு.” அகஸ்டின் கேலியாகச் சொல்ல, “நம்ம வீட்டுப்பொண்ண கடத்தியிருக்காங்க.  சும்மா இருந்துருவேனா என்ன?” சற்று கர்வமாகவே சொன்னவர், “அன்னைக்கே முடிவு பண்ணேன், இதை உன்னாலதான் பண்ண முடியும்னு.” என்றார் புன்னகையுடன்.

“ச்சே! என்னைப் பத்தி உனக்கு நல்லாவே தெரியும். தெரிஞ்சும் ஏன்? என்னால முடியாது.” அகஸ்டின் அழுத்தமாகச் சொல்ல, மெதுவாக அவனருகே வந்து, “மஹிய என்னால ஃபோர்ஸ் பண்ண முடியாது. நீயும் என் மகன்தான். என் தாத்தாவோட உழைப்ப இப்போ வரைக்கும் காப்பாத்திட்டு வர்றேன். எனக்காக நீயும் பண்ணுவேன்னு நான் நம்புறேன் அகி. ஏன்னா, நீ என்னோட மகன். பீ ரெடி!” ஆரம்பத்தில் சென்ட்டிமென்ட்டாக பேசி, இறுதி வசனத்தை அழுத்தமாக உரைத்துவிட்டுச் சென்றார்.

அன்று அதிர்ச்சியில் உறைந்துப்போய் நின்றவன், இன்று நடந்ததை ஜீரணிக்க முடியாது எதுவும் செய்ய முடியாத கையாலாகாததனத்தோடு நிற்கிறான்.

அவனுடைய நினைவுகளோ அடுத்து அந்த ஒருத்தியின் முகத்தை நினைவுப்படுத்தி ரணத்தை மேலும் கிளறின. இதழ்கள் “அலீஷா…” என்று முணுமுணுக்க, விழிகள் அடக்கப்பட்ட கோபத்தில் கலங்கிபோகின.

அதேநேரம், முட்டியை கைகளால் கட்டி முகத்தை புதைத்து மாதவியை நினைத்து விம்மி விம்மி அழுதுக்கொண்டிருந்தாள் அலீஷா. சரியாக, அவளுடைய வீட்டிற்குள் ஓடி வந்த சிறுவனொருவன், மூச்சு வாங்கியவாறு “யக்கோவ்! அன்னைக்கு உன்னை கூட்டிட்டு ஒரு அண்ணா வந்தாருல்ல, அவர்தான் இப்போ ஊருல தலைப்புச்செய்தியே!” என்றுவிட்டு அலைப்பேசிச் செய்தியைக் காட்டினான்.

அதைப் பார்த்ததும் முதலில் அதிர்ந்தவள், பின் விரக்தியாகச் சிரித்துக்கொண்டாள், தன்னிலையை நினைத்து. அழுது சிவந்து வீங்கிய விழிகள் இப்போது தன்னவனுக்கு சற்றும் பொருந்தாத தன் தகுதியை நினைத்து மேலும் அழுது கரைந்தன.

இவ்வாறு இரண்டுமாதங்கள் கழிந்திருக்க,

“மாம், இப்போதான் ஷோ முடிஞ்சது. பொறுமைன்னா என்ன விலைன்னு கேப்பீங்க போல, அதான் நாளைக்கு ஈவினிங்குள்ள வரேன்னு சொன்னேனே!” மஹி அலைப்பேசியில் கத்த, எதிர்முனையிலிருந்த மாயா என்ன சொன்னாரோ, “ஓ கோட்! சரி சரி வர்றேன்.” கடுப்பாக.ச் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்து ஆழ்ந்த பெருமுச்சுவிட்டான் அவன்.

இரண்டு மாதங்கள் அவன் உழைத்த உழைப்பெல்லாம் இன்று நடைப்பெற்ற நிகழ்ச்சிக்காகதான். கிட்டதட்ட பத்துவிதமான தன் ஆக்கங்களை பார்வைக்கு வைத்தவனின் முயற்சி வீண்போகவில்லை. அவனுக்காக நிகழ்ச்சியை ஏற்படுத்திக்கொடுத்த நிறுவனத்திற்கு திருப்தி மட்டுமல்ல, ஏகப்பட்ட உல்லாசப்பயணிகள் ஆக்கத்தை கேட்ட விலைக்கு இலாபமும்தான்.

சில பாதுகாப்புக் கருதி மக்களின் முன் செல்லாது தனக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தங்கியிருந்தவன், மீண்டும் மங்ளூர் செல்வதற்காக ஆயத்தமாக, கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தாள் நடாஷா.

அந்த சத்தத்தில் திரும்பிய மஹி, உள்ளே வந்தவளைப் பார்த்து புன்னகைக்க, “ஊருக்கு கிளம்பியாச்சு போல! என்ட், மிஸ்டர் என்ட் மிஸஸ்.ரோஹன் இந்தியாவுக்கு வந்திருக்காங்கன்னு நியூஸ்ல சொன்னாங்க. நிஜமாவா?” தெரிந்த விடயமென்றாலும் தெரியாதது போல் அவள் கேட்க, “ம்ம், இரண்டுநாளைக்கு முன்னாடிதான் வந்தாங்க. வந்ததிலிருந்து ஊருக்கு வரச் சொல்லி ஒரே டோர்ச்சர். ஐ டேம்ன் ஷுவர், ஏதோ என்கிட்ட மறைக்கிறாங்க.” நாடியை நீவிவிட்டவாறு சொன்னான் மஹி.

“ஓ…” யோசனையோடு இழுத்தவாறு, “உங்க கசின் வரல்லயா? அதான், சிஈஓ ஆஃப் ஐரா.” நடாஷா தன் அடுத்த சந்தேகத்தைக் கேட்க, “நோ, சார் ரொம்ப பிஸி. வன் மன்த் அவனுக்கு ட்ரெயினிங்தான். மாம்தான் கூடவே இருந்திருக்காங்க. இன்ஃபேக்ட், அவன்கூட பேசியே டூ மன்த்ஸ் ஆகுது. அவனும் யார்கூடவும் பேசிக்கிறது கிடையாது.” என்ற மஹியின் குரலில் ஒருவித வேதனை. அதை அவளும் உணரத்தான் செய்தாள்.

இருவருக்குமிடையில் சிறிதுநேரம் அமைதி நிலவ, அதை முதலில் கலைத்தது நடாஷாதான். சட்டென எழுந்து நின்றவள், “ஓகே மஹேந்திரன், நாளைக்கு பார்க்கலாம்.” என்றுவிட்டு விறுவிறுவென வெளியேற, “வாட், நாளைக்கா? நான்தான் இருக்க மாட்டேனே…” என்ற அவனுடைய வார்த்தைகள் அவளுடைய காதுகளில் விழுந்தாலும் விழாதது போலவே சென்றாள்.

அதற்கான அர்த்தம் அடுத்தநாள் அவனுக்கு புரிந்தது.

எப்படியோ சிலபல வேலைகளை முடித்துவிட்டு பயணத்தை ஆரம்பித்தவன், மதியம் வீடு போய் சேர்ந்திருக்க, உள்ளே நுழைந்தவனுக்கு ‘தன் வீடுதானா?’ என்ற சந்தேகமே வந்துவிட்டது. எல்லோரும் பரபரப்பாக அங்குமிங்கும் நடமாட, நடப்பதை வினோதமாகப் பார்த்தவாறு பயணக்களைப்பில் சோஃபாவில் அமரப் போனவனின் முழங்கையைப் பிடித்து அமர விடாது தடுத்தது ஒரு கரம்.

‘யார்ரா அது?’ வேகமாக மஹி நிமிர்ந்துப் பார்க்க, “இப்போ இதுக்கு நேரமில்லை பேட்டா.” சிரிப்புடன் சொன்னவாறு முழங்கையைப் பிடித்திழுத்து நிற்க வைத்தார் ரோஹன். அவனுக்கோ ஒன்றும் புரியவில்லை.

“ப்பா, ரொம்ப டயர்ட்டா இருக்கு, ப்ளீஸ்.” மஹி நடப்பது தெரியாது கெஞ்ச, “கண்ணா…” சாரியின் மடிப்புக்கள் காலை தடுக்காதிருக்க தூக்கிப்பிடித்தவாறு வேகவேகமாக வந்த மாயா, “சீக்கிரம் குளிச்சிட்டு ரெடியாகு! இன்னைக்கு உன்னை மாப்பிள்ளை பார்க்க வர்றாங்க.” சாதாரணமாகச் சொல்லிவிட்டு பெரிய குண்டைத் தலையில் போட, ஆடிப்போய்விட்டான் அவன்.

“வாட்! மாப்பிள்ளை பார்க்கவா? ஆனா… பொண்ணு பார்க்கதானே போவாங்க?” அந்நிலையிலும் தன் சந்தேகத்தை மஹி தீவிரமாக கேட்க, “ஓஹோ! என் மருமகனுக்கு அதான் பிரச்சினையா? ஒன்னும் பிரச்சினையில்லைப்பா, மொதல்ல அவங்க வரட்டும், அப்றம் நாங்க போகலாம்.” கீர்த்தி சொல்ல, இவனுக்கு தலையே சுற்றிவிட்டது.

“அது, என்னன்னா எனக்கு…” அவன் மறுத்து ஏதோ பேச வர, “லுக் மஹி, உன் வயசுல நாங்கெல்லாம்…” தருண் இடையிட்டு ஏதோ பேசுவதற்கு முன்வர, “என்ன… என் வயசுல நீங்கெல்லாம் குட்டி போட்டுட்டீங்க. அதானே! அதுக்காக எல்லாம் என்னால குட்டி போட முடியாது மாமா.” அவரை குறுக்கிட்டு சொன்னான் மஹி.

“கல்யாணம் பண்றதுல இப்போ உன் பிரச்சினைதான் என்ன?” சஞ்சய் சந்தேகமாகக் கேட்க, “அது… அது வந்து… நான் வேறொரு பொண்ண சின்சியரா காதலிக்கிறேன். அத்தைக்கு கூட தெரியும்.” பட்டென்றுச் சொன்னான் மஹி.

மாயாவோ ‘அப்படியா?’ என்ற ரீதியில் அலைஸ்ஸையும் கீர்த்தியையும் நோக்க, “அதான் ப்ரேக்அப் ஆகிருச்சாமே, தென் வாட்?” அலைஸ் அசால்ட்டாகக் கேட்டதில், “எதே, எவன் சொன்னான்?” அதிர்ந்துக் கேட்டான் அவன்.

“ஆத்விதான். எப்போவோ சொல்லிட்டா. சரி நம்ம பையனுக்கு பழசை மறக்குற வரைக்கும் கொஞ்சம் டைம் கொடுப்போம்னு நாங்களும் விட்டுட்டோம். இப்போ நல்ல வரன் வந்திருக்கு, விட மனசில்லை.” கீர்த்தி சொல்ல, பற்களைக் கடித்துக்கொண்டான் அவன்.

ஒருகட்டத்திற்குமேல் முடியாமல், “ஆத்வி என்னடான்னா கல்யாணத்தை பத்தி பேசினாலே வீட்டை விட்டு போவேன்னு மிரட்டுறா. அகிக்கிட்ட சாதாரணமா பேசவே பயமா இருக்கு. நீ என்னடான்னா…” என்றுவிட்டு எல்லோர் தாய்மார்களும் பயன்படுத்தும் ஆயுதத்தை மாயாவும்  பயன்படுத்த, மஹியோ திணறிவிட்டான்.

“மாம்…” அதற்குமேல் அவனை எதுவும் பேசவிடவில்லை. அவனை சமாளித்து அறைக்கு அனுப்புவதற்குள் படாத பாடுபட்டுவிட்டனர் பெரியவர்கள்.

அறைக்குள் வேகமாக வந்தவன், “ஓ ஷீட்! இந்த கடவுள் நாம கேக்குறதை தாராறோ, இல்லையோ? வேணாங்குறதை அள்ளி அள்ளி கொடுப்பாரு. அய்யோ! என்னதான் பண்றது?” வாய்விட்டு புலம்பியவாறு குறுக்கும் நெடுக்குமாக நடந்துக்கொண்டிருக்க, கதவை சாத்தி தாளிடும் சத்தம்.

திடுக்கிட்டு மஹி திரும்பிப் பார்க்க, அங்கு அவனை முறைத்தவாறு அறைக்கதவில் சாய்ந்து நின்றிருந்தாள் ஆத்வி. அவளைப் பார்த்ததும் உள்ளுக்குள் இனம்புரியா உணர்வு தோன்றினாலும் அதை சிரமப்பட்டு அடக்கிக்கொண்டவன், இறுகிய முகமாக ஒரு பார்வைப் பார்த்தான்.

அந்த அந்நியப்பார்வையில் உள்ளுக்குள் குமுறிக்கொண்டாள் ஆத்வி. இரண்டு மாதங்கள் அவளும் தன் காதலை தன்னவனுக்கு உணர்த்த முயற்சிக்க, அவன் அவளை ஏறிட்டுப் பார்த்தால்தானே! அதுவும் நிகழ்ச்சிக்காக இரவும் பகலுமாய் வேலை செய்தவன், உணவைக் கூட அறைக்கே வரவழைத்து உண்ண, அவளால் அவனைப் பார்ப்பது கூட அரிதானது.

இவனிடம் புரிய வைக்க முடியாத காதலை தன் அம்மா, அத்தைக்களிடமாவது உணர்த்தவே ஆத்வி ஒரு திட்டத்தைத் தீட்டி மஹிக்கு காதல்தோல்வியென கதையடிக்க, அது அவளுக்கே ஆப்பாகிப் போனது.

ஏகத்துடன் அவனையேப் பார்த்திருந்த ஆத்வி, “மேன்னர்ஸ் இல்லை? அதான் ட்ரெஸ் சேன்ஜ் பண்ணப் போறேன்னு தெரியும்ல, வெளியில போ!” மஹி கடுகடுக்கவும், “இது கொஞ்சமும் நியாயமில்லை தீரா. மாயா அத்தை சொன்னபடி உன்னை பிடிக்காத விஷயத்துக்கு ஃபோர்ஸ் பண்ணா பிடிச்ச விஷயத்தை உன்னை மீறி வெளிப்படுத்துவன்னு நான் ஒரு திட்டம் போட்டா, நீ உன் பாட்டுக்கு ரெடியாக வந்துட்ட. என்னைதான் காதலிக்கிறேன்னு போய் சொல்லுடா!” மூக்குச் சிவக்க படபடவென பேசினாள்.

ஆனால், மஹியோ அவளின் வார்த்தைகளை கண்டுக்கொள்ளவேயில்லை. “இருந்தாதானே சொல்ல! லுக், இப்போ கல்யாணத்துல கொஞ்சம் விருப்பமில்லைதான். ஆனா, அதுக்காக பண்ணிக்க மாட்டேன்னு இல்லை. பொண்ணு பார்த்ததும் பிடிக்கக்கூட வாய்ப்பிருக்கு. சோ, கெட் அவுட்!” முழங்கையை இறுகப்பிடித்து அவளை வெளியே தள்ள முயற்சித்தான்.

“தீரா ப்ளீஸ், நீ என்னை லவ் பண்ற, ஐ க்னோ. அப்றம் ஏன் நடிக்கிற, ஏன்டா என்னை ஒதுக்குற? நீ என்னை காதலிச்சது ஆரம்பத்துல எனக்கு தெரியலடா. எப்போ தெரிஞ்சதோ, அப்போதிலிருந்து நீ மட்டும்தான் எனக்குள்ள இருக்க. எனக்கு நீ வேணும்டா. நான் அம்மா, அத்தைக்கிட்ட பேசுறேன். ” ஆத்வி புரிய வைக்க முயல, மஹியின் இதழ்களோ விரக்தியாகச் சிரித்துக்கொண்டன.

“என்னோட காதலுக்குன்னு ஒரு வெல்யூ இருந்திச்சு. எனக்கு நீ வேணும்னா, அகி வேற பொண்ண காதலிக்கிறான்னு நீ சொல்லி என் நெஞ்சில சாஞ்சி அழுதப்போவே என் காதலை சொல்லி அட்வான்டேஜ் எடுத்திருப்பேன். பட், நான் அப்படிப்பட்டவன் கிடையாது. நீ இன்னொருத்தனை காதலிக்கிறேன்னு தெரிஞ்சதுமே என் காதல் செத்துப்போச்சு. இனி வேணாம்.” அழுத்தமாகச் சொன்னவன், அவளை வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டுச் சென்று வெளியில் தள்ளி கதவை அறைந்து சாத்தியிருந்தான்.

“அப்போ நான் வேணாமா, எல்லாம் அவ்வளவுதானா?” பூட்டியிருந்த கதவைப் பார்த்து கேட்டுக்கொண்டவள், ‘அய்யோ! சும்மாவே இப்படி இருக்கான். வர போற சிறுக்கி யாருன்னு தெரிஞ்சா ரொம்ப பண்ணுவானே!’ உள்ளுக்குள் புலம்பித்தள்ளினாள்.

அடுத்த சில நிமிடங்களில் பெண் வீட்டாற்களும் வர, மாப்பிள்ளைப் போல் தயாராகி எல்லோரையும் வரவேற்க ஹோலுக்கு வந்த மஹி, அங்கு வந்தவளைப் பார்த்து விழி பிதுங்கிவிட்டான்.

Leave a Reply

error: Content is protected !!