❤உன்னிடத்தில் என்னை வீழ்த்துகிறாயடி❤

1597036689885
❤வீழ்ந்தேனடி 01❤

       ❤அத்தியாயம் 01❤
       
மும்பையில்,
      
          சூரியக்கதிர்களை தன்னுள் ஈர்த்து பூமிக்கு தனது ஒளியை வாரி வழங்கிக்கொண்டிருந்தது பௌர்ணமி நிலா.. அந்நிலாவுக்கே சவால் விடுவது போல் அந்தச் சிட்டியின் மத்தியில் அமைந்துள்ள அந்த பிரம்மாண்ட விழா மண்டபம் ஜொலித்துக் கொண்டிருந்தது.

        பல வண்ண விளக்குகளும் கண்ணை மயக்கக்கூடிய அலங்கரிப்புகளும் மண்டபத்தின் அழகை மெருகூட்டிக்காட்ட, பல விலையுயர்ந்த வாகனங்கள் வரிசையாக அடுக்கப்பட்டிருக்க, நாங்கள் 21ம் நூற்றாண்டை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக இளைஞர்கள் யுவதிகள் நவநாகரீக ஆடைகளையும் விலையுயர்ந்த அணிகலன்களையும் அணிந்து மண்டபத்தினுள் நுழைய, கருப்பு ஆடை அணிந்த பாதுகாவலர்கள் அவர்களை கவனித்து உள்ளே அனுமதித்தனர்.

         இன்று அந்த விழா மண்டபத்தில் முதலமைச்சராக பதவியேற்ற ஜெகதீஸ் அரோராவால் கொடுக்கப்பட்ட பார்ட்டிக்கான ஏற்பாடே நடைபெறுகிறது. மண்டபத்தினுள் கையில் மதுபான குவளைகளுடன் சிலர் கூடியிருந்து பேசிக் கொண்டிருக்க, நடனக்கலைஞர்கள் தமது நடனத்தை அரங்கேற்ற காத்துக்கொண்டிருக்க, மதுபான போத்தல்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள இடத்தில் தன் முன்னால் நின்றுக் கொண்டிருந்தவர்களை கனல் கக்கும் பார்வை கொண்டு எரித்துக்கொண்டிருந்தான் அவன்..

        அவன் தான் நம் கதையின் நாயகன் ஆர்யன் சக்கரவர்த்தி.. வெள்ளை ஷர்ட்டுக்கு ஏதுவாக கருப்பு நிற கோர்ட் மற்றும்  பேன்ட் அணிந்து, தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்பதை எடுத்தாக்கட்டக்கூடிய முறுக்கேறிய கட்டுக்கோப்பான உடலமைப்பு, அந்த உடை அவனுக்கு மிகச்சிறப்பாக பொருந்தியிருக்க,

        அலைஅலையான அடர்த்தியான கேசம், கூர்நேசி,  அழுத்தமான சற்று சிவந்த உதடுகள், நிறம் மாநிறம் தான் பெண்களை மட்டுமன்றி ஆண்களை கூட ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு ஒருவித வசீகரத் தோற்றத்தில் இருந்தான்.

        பெண்கள் ஆண்களிடத்தில் அழகு என எதிர்பார்க்கும் அளவான மீசை கச்சிதமா டிரிம் செய்யப்பட்ட தாடி,  தடித்த ஒட்டிய புருவங்கள் அதற்கு கீழ் முன்னால் உள்ளவர்களை தன் பார்வையாலயே அளவிடக்கூடிய அந்த ஆறடி ஆண்மகனின் காந்தக் கண்கள் இன்று ஏதோ தன் முன்னால் நிற்கும் தன் நணபர்களால் சற்று சிவந்திருந்தது.

     ஆதித்யா, ஹரிசரண், அபிமன்யு, சித்தார்த் இவர்களே ஆர்யனின் வலது இடது கைகள். இவர்களை பற்றி சுருக்கமாக கூற வேண்டுமானால் ‘ஆதித்யா’ அமைதியாக இருப்பான் ஆனால் சற்று கோபக்காரன். ‘ஹரிசரண்’ பயந்த சுபாவம் ஆனால் தன் நண்பர்களுக்காக அவன் எடுக்கும் ரிஸ்க் அவனுக்கு ரஸ்க்கு சாப்பிடுவது போல. ‘அபிமன்யு’ மொடர்ன் கண்ணன் என்றே சொல்ல வேண்டும். ‘சித்தார்த்’ எதையும் தாங்கும் இதயம் கிட்டதட்ட ‘எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான்டா இவன் ரொம்ப நல்லவன்டா’ அந்தமாதிரி..

    ஆனால் இன்று தன் நண்பனை கோபப்படுத்தி குளிர்காய்கின்றனர் அந்நாலு இளங்காளைகளும்.

   “என்னடா நாங்களும் எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டு இருக்கோம்… பதில் சொல்லவே மாட்டிக்கிற”  -அபி

   “அம்மா பாவம் டா அவங்களும் உன்கிட்ட எவ்வளவு தடவ தான்டா கெஞ்சுவாங்க. அவங்களுக்கு ஒரு பிடி கொடுக்கவே மாட்டிக்கிற.. உன் மனசுல என்ன தான்டா நினைச்சிக்கிட்டு இருக்க” -ஹரி

      அவர்கள் பேசுவதை கண்டுக்காது தன் கையில் வைத்திருக்கும் ஜுஸில் ஆர்யன் கவனமாக இருக்க,

      ” டேய் பக்கி என்னதான் டா உன் பிரச்சின” – ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்காது ஆதி கோபத்தில் கேட்க,
   
      “டேய் அவங்களுக்கும் சரி உங்ககிட்டயும் சரி பல தடவ சொல்லிட்டேன். இதப்பத்தி பேசாதீங்கன்னு புரிஞ்சுக்கங்களேடா”
-ஆர்யன்
  
      அவன் கூறியதை கேட்டு அபி வேறு புறம் முகத்தை திருப்பி “எவனுக்கு தேவையோ அவன கண்டுக்குறது இல்ல எவன் வேணான்னு சீன் போடுறானோ அவன பிடிச்சு தொங்க வேண்டியது.. காலக்கொடும” என முனுமுனுத்தான்..
  
“சரி நாங்க புரிஞ்சிக்கிறோம் நாங்க கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு” -சித்து

    “முடியாதுன்னா மட்டும் விடவா போற கேளு கேட்டு தொலையும்” -ஆர்யா

    ” நீ எங்களுக்கு தெரியாம யாரயாச்சும் லவ் பன்றியாடா” – என சித்து கேட்க ஆர்யன் அவனை தீயாய் முறைத்தான்.

   “டேய் மடையா எனக்கு கல்யாணமே வேணான்னு சொல்றேன். யாரயாச்சும் லவ் பன்றியான்னு கேக்குற அறிவு கெட்டவனே” -ஆர்யா

   “அப்போ ஓகே உன் மனச கவர்ர மாதிரி ஒரு பொண்ண பார்த்தா அவள லவ் பன்னி கல்யாணம் பன்ற ஐடியாவாவது இருக்கா” -ஆதி

   இவர்கள் இவ்வாறு கேள்வி கேட்க அவர்களை ஒன்றும் செய்ய முடியாது தற்போதைய நிலையை சமாளிக்க,
     “சரி டா என் மனச கவர்ர மாதிரி ஒரு பொண்ண பார்த்தா நீங்க என்ன சொல்றது நானே அவ பின்னாடி லோலோன்னு அலைஞ்சி அவள கரெக்ட் பன்னி கல்யாணம் பன்னிப்பேன் போதுமா ”  என ஆர்யன் வினவ,

      “இது போதும்டா இன்னைக்கு இந்த ஹால்ல இருந்து போகுறதுக்கு முன்னாடி உன் மனசுக்கு புடிச்ச பொண்ண நாங்க கண்டுபிடிக்கிறோம் உன்கூட கோர்த்து விடுறோம் என்னடா ஓகே தானே.. ” -என ஹரி வினவ மற்ற மூவரும் (ஆர்யனை தவிர) ‘ஓகே’ என ஓலமிட்டனர்..

     ஆனால் ஆர்யன் அறிந்திருக்கவில்லை இன்று நிஜமாகவே தன் நண்பன் கூறியது போல் தன் மனதை கொள்ளையடிக்கப் போகிறவளை சந்திக்க தான் போகிறோம் என்று..

      ஆர்யா, அபி, ஆதி, சித்து, ஹரி ஐவரும் ஐந்துடல் ஓருயிர் போல. பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி வரை ஒன்றாகவே படித்து தற்போதும் ஒன்றாகவே வேலை செய்கின்றனர்.

      “ஹெலோ லேடீஸ் என்ட் ஜென்ட்ல்மென் வெல்கம் டு அவர் க்ரேன்ட் பார்ட்டி (hello ladies and gentlemen welcome to our grand party)” என ஜெகதீஸ் அரோராவின் குரல் ஒலிக்க அனைவருடைய கவனமும் அவர்பக்கம் சென்றது. நம் கதா நாயகர்களின் கவனமும் கூட..

        “இந்த பார்ட்டி எதுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதுன்னு உங்களுக்கே தெரியும். இத்தனை வருட என் அரசியல் வாழ்கையில எனக்கு கிடைச்ச அங்கீகாரமா தான் நா இத நினைக்கிறேன். இந்த தருணத்துல என் மகன் ஆர்னவ் அரோராவ உங்களுக்கு அறிமுகப்படுத்த கடமை பட்டிருக்கேன். கம் டு  த ஸ்டேஜ் மை பாய்(come the stage ma boy)”  என அவர் அழைக்க அவன் மேடை ஏறினான்.

       தன் மகனை அழைத்தவர் இன்னும் சில வார்த்தைகளை பேசி தன் கையில் இருந்த மதுபான குவளையை உயர்த்தி பார்ட்டியை ஆரம்பித்து வைக்க மற்ற அனைவரும் அவ்வாறே செய்து தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

     ஆனால் அக்கூட்டத்தில் சில கண்கள் மட்டும் ஆர்னவையும் அவனுடன் இருந்த அவன் நண்பர்கள் கிருஷ் மற்றும் ஹரிஷை பழிவாங்கும் வெறியோடு கண்களில் வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன…

                             யார் அந்த கண்கள்???
தொடரும்….❤❤

…………………………………………..
    edhawadhu mistake irundha enaya mannichuu.. and story epidi irukkunnu Unga comments a slluga friends..

❤ZAKI