💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 31Prefinal💋

eiHO4LK40803-a9b532d6

💋இதழ் சிறையில் உறைந்தேனடி(டா) 31Prefinal💋

அத்தியாயம் 31 prefinal

ஒரு குழந்தையின் இழப்பில் பல ஏக்கம் கலந்திருக்க, வைத்தியசாலையிலிருந்து அழைப்பு வந்தாலே கதி கலங்கும் அவனுக்கு. 

அவசரமாக ஓடி வந்தவன், வைத்தியரை சந்திக்க, “போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துட்டு” என்று பரிசோதனை பெறுபேற்றை கையளித்தார். சற்று நேரம் உரையாடி விட்டு நகர்ந்தான்.

பெறுபேற்றை படித்து பார்த்தவன், பியானாவை பார்க்க வந்தான். “குழந்தையோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்துருக்கு” 

“அதுல என்ன இருக்கு?” என்று கண்களில் நீர் நிரம்ப கேட்டாள் பியானா. 

“லங்க்ஸ் வளர்ந்தது பத்தலனு மட்டும்தான் இருக்கு. ப்ளட் ரிப்போர்ட்ல ஜெர்ம்ஸ் போயிருக்குனு இருக்கு. கேர்ள் பேபிக்கு பேர் வைக்கனுமாம் அப்போதான் உன்ன டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கலாம். நீ எதும் பேர் வைக்க நினைச்சி இருந்தா சொல்லு அதையே வச்சிரலாம். இன்னும் கொஞ்சநேரத்துல பேபிய அடக்கம்…” 

“போதும் சேய். மனசாட்சி இல்லாம எப்படிதான் இந்தமாதிரி எல்லாம் கேக்குறாங்கனு தெரியல!” என்று கூறும் போதே பியானாவின் கண்களில் நீர் வழிந்தோடியது.

“மூனு நாள் உயிரோட இருந்ததால பேர்த் சர்ட்டிபிகேட் எண்ட் டெத் சர்ட்டிபிகேட் ரெண்டுமே செய்யனுமாம்” 

“ஓ, எனக்கு எந்த ஐடியாவுமே இல்ல சேய். தயவு செஞ்சு எறிச்சுறாதீங்க. குழந்த வலி தாங்க மாட்டா” என்று கூறி கதறி அழுதாள் பியானா.

“ம், மத்த பேபி எப்படி இருக்கு?” 

மூக்கலயும் வாயிலயும் இரத்தம் வந்துட்டுனு இப்போ என் ஐ சி யூ போட்டாங்க. வாழ்வா சாவானு போராடிக்கிட்டு இருக்கான். இந்த பேபிக்கும் ஏதாவது ஆச்சு…! நான் உயிரோடவே இருக்க மாட்டேன். அதுக்கு அப்புறம் நான் உயிர் வாழுறதே வேஸ்ட்” உள்ளுக்குள் எத்தனை ஆறாத ரணமிருந்தால் பியானாவின் வாயில் இருந்து இப்படியான வார்த்தைகளை காணலாம்

“அப்படி எல்லாம் பேசாத பியூமா, நீதான் அவனுக்கு நம்பிக்க குடுக்கனும். டாடி உன்ன கேட்டாருனு சொல்லு, கண்டிப்பா அவன் ரியாக்ட் பண்ணுவான். 

சீக்கிரமா அம்மா கிட்ட ஓடிவாங்கனு சொல்லு. பிரணவ்தான் தம்பி தம்பினு பேசுவான்ல அவனையும் ஞாபகப்படுத்து, இப்படி வீட்ல எல்லாரையும் ஞாபகப்படுத்து, பாட்டுபாடு கதை சொல்லு. கொஞ்சம் கொஞ்சமா சரியா வந்திருவான்” 

“சரி சேய்” என்று சில பொருட்களை கையில் கொடுத்து, “இந்த சாக்ஸும் கேப்பும், நம்ம பொண்ணு கடைசியா போட்டது, நர்ஸ் கொடுத்தாங்க. கவனமா வச்சிருங்க” தலையை அசைத்து கையில் வாங்கியவனின் கையிலிருந்து மீண்டும் எடுத்து தலையணிக்கும் காலணிக்கும் முத்தமிட்டு கொடுத்தாள். ஒரு தாய்க்கு ஒரு குழந்தையின் இழப்பு அதன் பிறகு எத்தனை குழந்தை பிறந்தாலும் அது ஈடாகாது.

வினயையும் யுவாவையும் வைத்தியசாலைக்கு வருமாறு அழைக்க இருவரும் வந்து சேர்ந்தனர். நேராக பிணவறைக்கு சென்று குளிரூட்டப்பட்ட நிலையில் இருக்கும் அனைத்து குழந்தை செல்வங்களை பார்த்தது புறஞ்சேயனுக்கு மனமுழுவதும் பாரமாகி கண்கள் சிவக்க, வான் தூவும் திவலைகளும் தோற்றுப்போனது அவன் கண்ணீரில். 

அவனுடைய குழந்தைக்கும் அதே நிலைதான். ஒரு சிறிய பெட்டியில் குழந்தையை வைத்து கொடுக்க, “என்னால முடியலடா, நீ எடுத்துட்டு வாரீயா” 

வினயிக்கும் கவலைதான் இருந்தாலும் கைகள் நடுங்க நடுங்க வாங்கிக்கொண்டான். நண்பன் படும் துயரை பார்க்க இயலவில்லை அவனால். 

பூமியில் பிறந்த அக்குட்டி தேவதையை வானிற்கு அனுப்ப தயாராகினர். நல்லதோர் ஆடை வாங்கி பிணமெரிப்பவன் கையில் கொடுத்து ஆடையை அணிவித்து, “அடக்கம் பண்ண போறேன். கடைசியா பார்க்குறவங்க பாருங்க” என்று பிணமெரிப்பவன் கூற, யுவாவும் வினயும் பார்க்க, புறஞ்சேயனை இறுதியாக குழந்தையைப் பார்க்க மறுத்தான். 

“நெருங்குன சொந்தமிருந்தா மண் அள்ளிப் போடுங்க” 

“மச்சான் ஒரே ஒரு புடி மண்ணு போடுடா” என்று தாழ்ந்த கலக்கமான குரலில் கூறினான்.

“நான் பெத்த புள்ளைக்கு நானே மண்ணள்ளி போடுவா? முடியாதுடா” புறஞ்சேயனின் கண்கள் கலங்க ஆரம்பித்தது. 

“அண்ணா, இது அனாத குழந்த இல்ல நம்ம குழந்தணா” என்றான் யுவா.

புறஞ்சேயன் மறுக்க மறுக்க வினயும் யுவாவும் சேர்ந்து அவன் கையால் மண்ணை அள்ளி வீசினர். 

“ஆண்டவா! நான் பெத்த புள்ளைக்கு நானே மண்ணள்ளி போட்டேனே, என் கையால மண்ண போட்டேனே, இந்தமாதிரி கொடுமை யாருக்குமே வரக்கூடாது. இது என்னோட முடியட்டும்” என்று தலையில் அடித்து கதறி கதறி அழுதான் புறஞ்சேயன். 

நண்பனின் கவலையை போக்க வேறுவழியின்றி, “யுவா நீ வீட்டுக்கு போ, அப்பறமா புறாவ வீட்டுக்கு கொண்டு வந்து விடுறேன்” என்று கூற யுவா கிளம்பிவிட்டான். 

மதுக்கடைக்கு அழைத்துச் சென்று மதுவை பருகிக்கினான் வினய், புறஞ்சேயனுக்கு. 

கவலையில் பல புலம்பல்கள் அவன் வாயிலிருந்து, “நான் கல்யாணம் பண்ணாம இருந்து இருந்தா பியானா சரி நிம்மதியா இருந்திருப்பாடா, நானே அவ நிம்மதிய கெடுத்துட்டேன்” 

“சரிடா உனக்கு போதை அதிகமாகிருச்சு. இப்போ வீட்டுப் போகலாம்” 

“என் புள்ள, நான் பெத்த புள்ள என்னைய விட்டு போயிருச்சு. புள்ளைதான் என்னைய வழி அனுப்பி வைக்கனும். எனக்கு எல்லாம் தலைகீழ நடக்குது” 

“சரி சரி போதும்” என்று புறஞ்சேயனின் கையை வினயின் தோல் மேல் போட்டு, வீட்டில் வந்து சேர்த்தான். 

இரவு உணவை உண்ணாமலே உறங்கினான் புறஞ்சேயன். 

காலை எழுந்துபோதே தலைவலியுடன்தான் எழுந்தான். எழுந்த கணமே முதலில் நினைவிற்கு வந்தது. குழந்தையை புதைத்ததுதான்.

கண் விழித்து பார்த்த போது 

புதைந்த வண்ணமே 

உன் காலணி ஒன்றுதானே 

நினைவு சின்னமே 

கதறி கதறி எனது உள்ளம் 

உடைந்து போனதே 

சிதறிப்போன சில்லில் எல்லாம் 

உனது விம்பமே! 

விதைத்தவனே புதைக்கும் நிலை 

இனியும் வேண்டுமோ

இதற்கு நான் புதையும் எண்ணமெல்லாம் 

என்னவாகுமோ! 

மார்பில் போட்டு விளையாட மனமேங்குதே! 

குழியில் உன்னை இட்டு என்

கையால் மண்ணை இட்டேனே 

மார்பில் அடித்து அழுகிறேன். 

நானும் தகப்பன் பாவியே! 

பெண் குழந்தையின் காலணியை கையில் வைத்து கண்ணில் ஒற்றிக்கொண்டான். ஒற்றி எடுத்துக்கும் போது கண்களில் நீர் வழிந்தது ஒன்றுதான் மிச்சம். 

நேரத்தை பார்த்தவன் குளித்துவிட்டு ஜானை பார்ப்பதற்கு புறப்பட்டான். 

“வா பா, நல்லா இருக்கியா?” 

“அப்பா” என்று சிறு தயக்கத்துடன், “எங்களுக்கு குழந்த பிறந்துட்டுபா. ஒரு பொண்ணு, ஒரு பையன்!” 

“அப்படியா! என் கீதா பொறந்துட்டாளா?” என்று ஆசையாக கேட்டார். குழந்தைகளைப் பார்ப்பதற்கு ஜானின் கண்கள் துடித்தது. 

“அது வந்துபா” என்று ராகமிழுந்தவன் துர்திஷ்டவசமாக நடந்ததை கூறினான். 

ஜானின் இதய துடிப்பே நின்றுவிட்டது. “என்னபா சொல்லுற! என் கீதா போயிட்டாளா? நான் செஞ்ச தப்புக்கு என்னை சோதிக்காம, என் புள்ளைய சோதிச்சுட்டியே ஜீசஸ்” ஜான் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்தது. 

அவர் செய்த கொலைக்கு குழந்தையின் இழப்பு நேர்ந்தது என்று கணக்கிட்டார். 

“சரிபா, நான் கிளம்புறேன். பியானாவ பார்க்கப் போறேன்” 

“சரிபா நீ கிளம்பு. இருக்குற ஒரு குழந்தய எப்படியாவது காப்பாத்திருங்க. அது போதும்” 

அங்கிருந்து வைத்தியசாலைக்கு வந்தான் புறஞ்சேயன், “உடம்பு எப்படி இருக்கு, பேபி கிட்ட எதும் பேசுனியா?” 

“இப்போ பரவாயில்ல. டாடினு சொல்லும்போது அசையிறான்” 

“இப்படியே பேசிக்கிட்டு வா சரியாகி வருவான்” 

“ம், சேய்” 

“என்னடா?” 

“மத்த குழந்த…” என்று அவள் தொண்டை அடைக்க, அதை புரிந்து கொண்டான் புறஞ்சேயன். 

“குழந்தய…” சிறு இடைவேளையின் விட்டு, “அடக்கம் பண்ணியாச்சு” என்று தலை குனிந்து கொண்டு கூறினான். 

தொப்பென்று கட்டிலில் அமர்ந்தாள். எண்ணமெல்லாம் மண்ணுக்குள் இருக்கும் குழந்தையால் சவாசிக்க முடியுமா? என்ன பாடுபடுகிறதோ? என்று விழி நீரும் ஓடியது.

எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதம்மா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதம்மா

கொல்லையில வாழ எல

கொட்டடியில் கோழி குஞ்சு

அத்தனையும் உன் மொகத்த சொல்லுதம்மா

ஆடும் மாடும் வெறும் வாய மெள்ளுதம்மா

காத்தோட உன் வாசம்

வீடெல்லாம் ஒம் பாசம்

ஊத்தாட்டம் ஒன் நெனப்பே ஊறுதம்மா

சால்சாப்பு வேணாம் வந்து நில்லும்மா

சாவையும் கூறு போட்டு கொல்லம்மா

கல்லாக நின்னாயோ

சாமிக்கிட்ட போனயோ

கண்ணே நீ திரும்பி வரணும் தாயின் கையிக்கு

மல்லாந்து போனாலும்

மண்ணோடு சாஞ்சாலும்

அம்மா நீ பெருமை சாதி சனத்துக்கு

தலைச்சம் புள்ளை இல்லாம

சரிஞ்சது எத்தன ஆட்சி

நீயே எங்க ராசாத்தி வா வா களத்துக்கு

தாயோட பாரம் மாசம் ஏழும்மா

தாங்காம நீயும் போனா தப்பம்மா

எள்ளு வய பூக்கலையே

ஏறெடுத்தும் பாக்கலையே

ஆலால ஒன் சிரிப்பு கொத்துதம்மா

அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதம்மா

முளையில் பால் சொட்டிடவே 

உன் பிஞ்சு வாய்கொண்டு

உறிஞ்சும் முன்னே

மண்ணுக்குள்

போனதென்னம்மா

மடியினில் நான் இட்டு 

தாலட்டி நீ உறங்கிடவே 

மண்ணுக்குள் சென்று 

துயிலாழ்ந்தது ஏன்னம்மா

மரணவலிகள் அத்தனையும் 

பொறுத்தது வீணம்மா 

மாண்டுபோனது நீயல்ல

நான்னம்மா!

“என்னால முடியல சேய், நம்ம குழந்த எவ்ளோ கஷ்டபட்டிருக்கும். பசிச்சா கூட சொல்ல தெரியாம எவ்ளோ கஷ்பட்டிருப்பா, ஆ ஆ…” என பியானாவின் கதறலுக்கு அளவே இல்லாமல் போனது. 

“அழாத பியூமா, அழாத டா. என்னாலயும் முடியல எம்புள்ளைய நானே பொதச்சுட்டேன் பியூமா. நானே பொதச்சுட்டேன்” என்று கூறும் அவன் கண்களை பியானா பார்க்க பரிதாப நிலையில் நீர் ஓடிக்கொண்டிருக்க, துடைத்துவிட்டவள் இதன் பிறகு இதை பற்றி புறஞ்சேயனின் முன் பேசக்கூடாது என்று முடிவு செய்து கொண்டாள். 

“நீங்க கிளம்புங்க சேய். நேரம் சரி” ஆறுதலாய் அவள் தலையை கோதிவிட்டு கிளம்பினான். 

ஒரே மாதத்தில் ஏழு குழந்தைகளின் மரணத்தை கண்களால் பார்த்தவளுக்கு இன்னும் மனம் மருகியது. கொரோனா தொற்றின் ஆதிக்கத்தில் சரியான பரிசோதனை முறையும் தெளிவும் இன்றி தாய்மார்க்களின் கதறல்களும் அவலநிலையையும் யார் அறிவர்? 

பியானாவை போல் சிலரின் குழந்தைகளும் அதிதீவிர பிரிவில் இருந்தனர். 

அனைவரின் கண்ணில் கண்ணீர் காவிரிதான் பியானாவை போல்.  குழந்தைகளை பிரிந்திருக்கும் தாயுள்ளங்களை காட்டிலும் ஒரு தாய் மாத்திரம் குழந்தையை பார்க்க வராமல் இருப்பதை கவனித்தவள் அத்தாயின் அருகில் சென்றாள். “நீங்க அஞ்சா நம்பர் குழந்தையோட அம்மாவா?” 

சாய்ந்தவாறே, “ஆமா” 

“ஏன் நீங்க குழந்தைய பார்க்க வரல. பால்கூட அனுப்பல குழந்த பாவமில்லயா?” 

“குழந்தய பார்க்க புடிக்கல. அதான் வரல” என பட்டென்று கூற, இப்படியும் தாயா என்று பியானா திகைத்துப் பார்த்தாள். 

“உங்க பேர் என்ன?” 

“ராதிகா” 

“இங்க பாருங்க ராதிகா, இப்படி எல்லாம் பேசாதீங்க. குழந்தய வந்து பாருங்க அம்மாவுக்காக ஏங்குவாங்க” தாயின் குரலை பிள்ளை தேடும் என்றே அப்படி கூறினாள். 

“எனக்கு குழந்தையே வேணாம். அப்பா இல்லாத குழந்தய நான் எப்படி வளர்க்க முடியும்?” 

“ஏன் அப்பா இல்ல, அப்பா இல்லாம எத்தன பேர் குழந்தைங்கள வளர்க்குறாங்க தெரியுமா?”

“ஏன்னா அவன் என்னை ஏமாத்திட்டான். எங்க வீட்டாளுங்க அவன பார்த்தா அவ்ளோதான்” என்று கூற பியானா வியப்பில் ஆழ்ந்தாள். தப்பான முறையில் உருவாகிய குழந்தை என்பதை புரிந்து கொண்டாள். 

“யார் யார ஏமாத்துனா, நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து குழந்தய ஏமாத்திட்டீங்க. கல்யாணத்துக்கு அப்பறம் கணவன் மனைவிக்குள் நடக்க வேண்டிய தாம்பத்ய உறவ கேவலப்படுத்திட்டீங்க. ஒரு முறை சேர்ந்தா குழந்த பிறக்கும்ங்குறது பழைய காலம். எத்தன முறை புருசன் பொண்டாட்டியா இருந்தீங்களோ! அத்தன முறையும் உங்க விருப்பமில்லாம தொட்டானா?” என்று பியானாவின் கேள்விகளுக்கு ராதிகாவிடம் பதிலில்லை. ஊசி விருப்பமில்லாமல் நூல் நுழைந்த கதையாய் ராதிகா கூறலாமா? என்ன செய்து என்ன பலன் பெற்றோர் செய்த பாவத்திற்கு பச்சிளம் பிள்ளை தண்டனை அனுபவிக்க வேண்டுமா? 

“நீங்க என்னோட குழந்தய எடுத்து வளர்க்குறீங்களா?” 

“ஹஸ்பன்ட்கிட்ட கேட்டு சொல்லுறேன்” என்றாள் பியானா. 

புறஞ்சேயனிடம் லக்ஷதாவிற்கு இக்குழந்தை எடுத்து கொடுக்கலாம் என்று கூறி சம்மதம் பெற்றுக்கொண்டாள். 

அன்றிலிருந்து ராதிகாவின் குழந்தைக்கும் சேர்த்து பசியாற்றினாள்.

இங்கு புறஞ்சேயனோ மற்ற குழந்த உயிர் பிழைப்பதற்காக கோவில், தேவாலயம் சென்று அன்னதானம் நன்கொடையென மனதார வழங்கினான். 

இத்தாலியில் இருக்கும் தேவாலயத்திலும் சிறப்பு பூஜைகள் இடம் பெற்றது குழந்தைக்காக. 

இந்த குழந்தையும் உயிர்ப்பிழைக்காவிட்டால் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ளும் நிலையில் பியானா. 

***

Leave a Reply

error: Content is protected !!