💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙
💙இருளை ஈர்க்கும் ஒளி 💙
ஈர்ப்பு – 19
உன்னை என்னவள் என்பதை எப்படி இத்தனை நாட்கள் அறியாமல் இருந்தேன்….
என் மனம் என்ன என்பதை அறியக் காதலில் கரைகண்ட மகாகவியின் உதவி தேவைப் படுகிறது என்ன செய்ய…..
அங்கே தோட்டத்தின் ஒரு பகுதியில் சுடரொளி களியாட்டம் (campfire) தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.
இவர்கள் வரவும் முருகன் நெருப்பைப் பற்ற வைத்தான்.
அது எஸ்டேட் மலைப் பகுதி எனவே இரவில் பூச்சி போட்டு வர வாய்ப்பிருப்பதால் தோட்டம் முழுவதும் மின் விளக்கு இருக்கவே நெருப்பேரியும் இடம் மட்டும் அல்லாமல் எங்கே பார்த்தாலும் வெளிச்சமாய் பகல்போல் காட்சியளித்தது.
தியாக்கு எப்போதுமே தோட்டம் விருப்பமான ஒரு இடம் செடி கொடிகளோடு நண்பர்கள் போல் உரையாடுவாள் அவள். இங்கு வந்த போதே இந்த தோட்டத்தின் அழகு அவளை கவர்ந்திருக்க அங்கே இவ்வாறு அமைத்திருப்பது அவளைத் துள்ளவைத்ததில் என்ன ஆச்சரியம்.
“செம அண்ணா “, என முருகனைப் பாராட்டினாள்.
அதில் நம் நாயகன் கடுப்பானான்.
பின்னே அவளுக்குப் பிடிக்குமென இவன் அனைத்தையும் இவனே தயார் செய்யப் பாராட்டு முருகனுக்குப் போய் விட்டதே.
“ஐயோ நான் ஒன்னும் பண்ணலைங்கம்மா எல்லாம் ஷ்யாம் தம்பி தான் பண்ணுச்சி நான் சும்மா ஒத்தாசைக்குத் தான் இருதேன்”.
“ஷ்யாம் இது உங்க ஐடியாவா ”.
“ம்…”
“செம எனக்கு இது ரொம்ப பிடிச்சி இருக்கு”.
“அப்போ வா உட்காரு. எல்லாரும் வாங்க”.
அனைவரும் நெருப்பைச் சுற்றி அமர்ந்தனர்.
ராஜிக்கு வர்ஷு அருகே அமர ஆசை இருந்தாலும் அவள் முறைப்பை வாங்க அவன் தயாராயில்லை. எனவே தியா, அருண் இருவருக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான்.
அருணின் மறுபுறம் மித்து, அதை தொடர்ந்து வர்ஷா, லட்சு , சந்திரன் , ஷ்யாம், தியா
ஷ்யாம் தியா அருகில் பிளான் செய்து அமர்ந்திருந்தான்.
முருகன் வள்ளி சற்று தள்ளி அமர்ந்து கொள்ள ஷ்யாம் அவர்களை வற்புறுத்தி அவர்களுடன் அமர்த்திக் கொண்டான்.
“என்டா இப்படி பேய் வாக்கிங் போற நேரத்துல இங்க ஒன்னுகூட்டி இருக்கியே எதுக்கு”.
“அத உன் ஆளு சொல்லும் கேளு”.
“வணக்கம் மக்களே தியாவின் பிறந்தநாளையொட்டி ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனப் பட்டையைக் கிளப்பப் போறோம்”.
அனைவரும் கைதட்டி ஆரவாரித்தனர்.
“முதல நம்ப ஆஸ்தான கேமான பாஸ்ஸிங் தே பால் வித் மியூசிக் (passing the ball with music ) தான் ஆட போறோம். கண்டிப்பா இது எல்லாருக்கும் தெரிந்தது தான் இருந்தாலும் என் கடமை நானும் ஒரு முறை ரூல்ஸ் சொல்லுறேன்”.
“நம்ப முருகன் அண்ணா மியூசிக் ஓட விட்டவுடனே பால் பாஸ் பண்ண ஸ்டார்ட் பண்ணிடனும் மியூசிக் ஆப் ஆகும் போது யார் கைல பால் இருக்கோ ஆவங்களுக்குப் பால் பாஸ் பண்ணவங்க ஏதாவது டாஸ்க் கொடுக்கணும் ஓகே வா எல்லாருக்கும் புரிந்ததா”.
எல்லோரும் கட்டை விரலை உயர்த்தி புரிந்ததற்கு அறிகுறியாய் தலையாட்டினர்.
“ஓகே அண்ணா உங்களுக்கும் புரிந்தா”.
“புரிந்தது மா”.
சரி அண்ணா ஆராமிக்கலாம்.
முருகன் மியூசிக் பிளேயரை அழுத்த பாடல் துவங்கியது.
பால் கை மாறிக் கொண்டே செல்ல லட்சு ஆண்ட்டியிடம் வரும் போது பாடல் நின்றது.
மித்து, “லட்சு ஆன்ட்டிக்கு பால் பாஸ் பண்ணது நம்ப வர்ஷு சோ அவ தான் டாஸ்க் கொடுக்கணும்”.
“நானா என்ன டாஸ்க் கொடுக்க”.
“வர்ஷு என்னதான் இருந்தாலும் உன் வரும்கால மாமியார் கொஞ்சம் பாத்து குடு”, என அருண் வம்பிலுக்க.
அருண் சொன்னதில் காண்டாகி அருணை பார்க்க அதே நேரம்,
“டேய் உன் திருவாயமுடிக்கிட்டு கொஞ்சம் சும்மா இருக்கியா”, என ராஜ் அவன் தொடையில் நறுக்கேன கிள்ளிவைதான்.
ராஜ் கிள்ளியதைப் பார்க்கவும் அவளுக்கு லேசாகச் சிரிப்பு வந்தது.
ராஜிக்கு அதுவே போதுமானதாக இருக்க ‘அப்பாடி தப்பிசோம்டா சாமி’ என பெருமூச்சு விட்டான்.
“ஆண்ட்டி ஒரு பாட்டு பாடுறீங்களா”, எனக் கோரிக்கையாய் லட்சுவிடம் கேட்டாள்.
லட்சு தன் தொண்டையை செருமிக்கொண்டு பாடத் தயாரானார்.
🎼உனக்காக
பொறந்தேனே எனதழகா
பிரியாம இருப்பேனே
பகல் இரவா
உனக்கு
வாக்கப்பட்டு வருஷங்க
போனா என்ன போகாது
உன்னோட பாசம் என்
உச்சி முதல் பாதம் வரை
என் புருஷன் ஆட்சி ஊர்
தெக்காலத்தான் நிக்கு அந்த
முத்தாலம்மன் சாட்சி 🎼
ஒவ்வொரு வரியிலும் காதல் சொட்ட சந்திரனைப் பார்த்துக்கொண்டே பாடினார் லட்சு….
இருவரின் பார்வை கோடும் மற்றவரின் கைத்தட்டலில் அறுபட்டது.
வாவ் ஆண்ட்டி நீங்க இவ்ளோ சூப்பரா பாடுவீர்களா என லட்சுவை கட்டிக்கொண்டாள் வர்ஷா.
அனைவரும் அவரை பாராட்டி முடியவும் மீண்டும் பாடல் ஒலித்தது இப்போது மியூசிக் நிற்கும் போது பால் ராஜின் கையில் இருந்தது.
தியா தான் தன் அண்ணனுக்கு டாஸ்க் கொடுக்க வேண்டும். அவள் அவனை ஒரு கவிதை சொல்லச் சொன்னாள்.
*தனிமை கடலில் தத்தளித்தேன்… தோழமையின் தோள் கிடைக்கவே சிறிது நிதானித்தேன்…..
இப்போது குடும்பம் என்னும்
படகில் உயிர்ப்பித்தும் கரைசேர முடியாமல் தவிக்கிறேன்….
கரைசேர்ந்து முழுதாய் உயிர்த்தெழுவேனா?
பதில் காலத்தின் கைகளில்*
அனைவரும் கவிதையை ரசிக்க இளசுகளுக்குக் கவிதையின் அர்த்தம் விளங்க வர்ஷாவை பார்த்தனர். அவளுக்கு மனம் ஏதோ செய்ய ராஜை பார்த்தாள்.
அவன் முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் சட்டெனத் தலை குனிந்தாள்.
மீண்டும் பால் ஒவ்வொரு கையாக தன் பயணத்தைத் தொடர்ந்தது இப்போது அது தன் பயண களைப்பால் தியாவின் கைகளில் தவழ்ந்தது.
தியாக்கு ஷ்யாம் தான் டாஸ்க் கொடுக்க வேண்டும் மித்து வர்ஷா ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“உனக்கு டான்ஸ் ஓகேவா தியா”, எனப் பொறுமையாய் அவளிடம் கேட்டுவிட்டு அவள் சம்மதிக்கவும் அனைவரும் கேட்கும்படி கூறினான்.
அவள் பரதம் பயின்றவள் எனவே ஷாளை முன்னே படரவிட்டு இடுப்பைச் சுற்றிக் கட்டி முதலில் பூமிதாயை வணக்கி நடனத்தைத் துவக்கினாள்.
🎼 விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ🎼
அவள் கண்கள் சுழல…. ஷ்யாம் தனக்குள் பதிலளித்தான்.
‘உன் கண்கள் குளிர்விக்கும் சந்திரன் தான் அந்த கண்ணிலிருந்து பாயும் ஒளிக்கு சூரியணையும் ஒப்பிடலாம்’.
🎼வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ🎼
இந்த வரிகளுக்கு அவள் கண்களைச் சுட்டி கட்டி பாவனை செய்ய,
‘அந்த கரிய விழிகளில் தானே சிக்கித் தவிக்கிறேன்’.
🎼பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ🎼
‘நீ புடவை கட்டி பார்களையே பாக்கணும் போல இருக்கு’ மானசிகமாய் ஒரு வேண்டுதல் விடுத்தான்.
🎼சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்🎼
‘ உண்மைதான் உன்னோட புன்னகை என்னை மயக்குது’
🎼நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ🎼
‘இன்று தான் அந்த இனிமையான குரலை நான் கேட்டேன்…எப்பா தேன் குரல் தியாக்குட்டி உனக்கு’
🎼வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்🎼
பொருள் :பேரழகியே கண்ணம்மா உன் அழகில் மீளா காதல் கொண்டேன்
இந்த வரிகளில் அவன் அவளையே பார்திருந்தான்.
🎼சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று🎼
பாரதி தன் காதலிடம் கேட்கிறார் வரைமுறைகள் சொல்லி கரைக்கடந்த என் காதலுக்கு ஏன் தடை விதிக்கிறாய் கண்ணம்மா பெரியவர்கள் சம்மதித்த பின் திருமண சடங்குகளை வைத்துக் கொள்வோம் இப்போது என் முத்தத்தை உன் கண்ணத்தில் ஏற்றுக்கொள்ளேன்.
முன் வரிகளில் உறைந்தவன் பின் வந்த வரிகளில் மொத்தமாய் சிலையானான்.
தியாவின் ஆட்டம் முடியவும் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரிக்க மீண்டும் விளையாட்டு தொடர்ந்தது.
அந்த விளையாட்டு முடியும் வரையும் ஷ்யாம் என்னும் சிலைக்கு உயிர் வரவில்லை.
ஆட்டம் பாட்டம் முடிந்து அனைவரும் எழ முருகன் ஷ்யாமிடம் ஞாபகப் படுத்த அப்போது தன் சிறிது உணர்வு வந்து.
கொஞ்சம் நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு வாங்க இங்கருந்து ஒரு ஒரு மணி நேர பயணத்துல திருநெல்லி கோவில் இருக்கு அங்க போகலாம்.
அதுவரை கேளிக்கையில் தெரியாத தூக்கம் இப்போது கண்களைக் கெஞ்ச அனைவரும் தலையசைந்து அவரவர் அறை நோக்கிச் சென்றனர்.
செல்லும் தியவையே ஷ்யாமின் கண்கள் சிறைபிடித்தது.
தன் அறைக்கு வந்த ஷ்யாம் சாளரத்தின் வழி நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தான்.
அவன் காதுகளில் ஹெட் செட் அதில் தியா ஆடியே அதே பாடல் ஒளிந்து கொண்டிருக்க இப்போதும் “மருவக் காதல் கொண்டேன்” என்னும் வரிகளும் அதன் பின் வந்த வரிகளும் அவன் மனதை பிசைந்தது.
‘தியாவை கல்யாணம் செய்து அவளோடு ஒரு அழகிய வாழ்வை வாழத் தான் என் மனசு ஆசை படுத்து. ஆமா உன்மையாவே அவகிட்ட நான் மீளா காதலில் தான் இருக்கேன்’
‘நான்….. நான்…. தியாவை லவ் பண்றேன்….’ அவன் முகத்தில் அப்படி ஒரு பொலிவு இதழ்கள் புன்னகைக்கு என்னிடம் பஞ்சமில்லை என நிரூபித்தது.
‘இது ஏதோ ஒரு ஈர்ப்புனு நினைச்சேன். இப்போ தான் அந்த ஈர்ப்பு காதலினால்னு இந்த மரமண்டைக்கு புரிஞ்சிருக்கு தியாக்குட்டி’
“தியாக்குட்டி ஐ லவ் யூ ஐ வாண்ட் டு லிவ் வித் யூ”, அவன் உதடுகள் முணுமுணுத்தது.
காலை விடியலில் தோட்டம் நோக்கிச் சென்றான் ஷ்யாம். தன் மனதை உணர்ந்தவன் சிறிது நேரம் தான் உறங்கினான். அதுவே அவனுக்கு போதுமானதாக இருந்தது.
“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்ற தியாவின் குரல் கேட்கவும்,
‘என்னடா இது காலையிலேயே தியாக்குட்டி நம்பல பாராட்டறா’, என எண்ணிக்கொண்டே திரும்பியவன் கண்டது தியா ரோஜாச் செடியைப் பார்த்துப் பேசியதை தான்.
‘அதானே பார்த்தேன் நம்பகிட்ட இப்படி எப்போ பேசுவாளோ ம்…’
அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தான். அவன் மனம் உணர்ந்த பின் அவள் அவனின் கண்களுக்கு புதிய பரிமாணத்தில் தெரிந்தாள்.
அதே சமயம் அரவம் கேட்டுத் திருப்பிய தியாவின் உடை ரோஜாச் செடியின் முள்ளில் மாட்ட அதைக் கவனித்த ஷ்யாம் “தியா இரு” என அருகே வந்து அதை லாவகமாய் எடுத்தான்.
“பாத்து வரக் கூடாதா”.
“அதுக்கு நான் தள்ளி போறது பிடிக்கல்ல போல அதான் டிரஸ் பிடிச்சி நிறுத்தி இருக்கு”.
“என்ன…”
“அது அழகா இருக்குனு பாராட்டு பத்திரம் வாசித்தேன்ல அதான் அதுக்கு என்னை ரொம்ப பிடிச்சிடுச்சி போல”, எனவும்,
அந்த ரோஜாவை திரும்பிப் பார்த்து ‘நீயெல்லாம் எனக்குப் போட்டியா’ மானசிகமாய் தலையில் அடித்தான்.
இருவரும் பேசிக் கொண்டே நடந்தனர்.
“ச்ச சொல்ல மறந்திட்டேன் பாருங்க குட் மார்னிங்”.
“வெரி குட் மார்னிங் அண்ட் ஹாப்பி பர்த்டே”.
“தேங்க்ஸ் ஷ்யாம் விஷேஸ்க்கு மட்டும் இல்ல நேத்து நான் ரொம்ப என்ஜாய் பண்ணேன் அதுக்கும் தான்”.
“ஆமா கேட்டணும்னு நினைத்தேன் நீங்க எல்லா எப்படி இந்த இடத்துல இது அப்பா மீட்டிங்க்கு அலோட் பண்ண இடமாச்சே”.
அவள் கேட்டுக்கொண்டே இருக்கும் போது வள்ளி இன்று என்ன சமைக்கவென வந்து கேட்க மேலும் குழம்பினாள்.
“அவங்க எதுக்கு உங்ககிட்ட கேட்குறாங்க”, எனப் பேசிக்கொண்டே வந்தவர்கள் கேட்டின் அருகே வந்திருந்தனர்.
அவன் ஒரு இடத்தை சுட்டிக் காட்ட அதில் ‘கே. ஆர் எஸ்டேட் பங்களா’ என்று மின்னும் எழுத்துகளைக் கண்டவள்.
“அப்போ…. இது…..”
“நம்ப இடம் தான்”.
“ச்ச…வேடிக்கை பாத்துட்டே வந்ததுல அதை பாக்கல”.
“நல்லதா போச்சி”, என ஷ்யாம் கூற.
“அப்போ மீட்டிங்னு சொன்னதெல்லாம் சும்மாவா”.
“ம்…”
“ச்ச இப்படியா லூசா இருப்பேன்”, என தன் தலையில் குட்டிக்கொண்டாள்.
“பாத்து தியா”, என அதற்கே பதறினான் அவன்.
ஒவ்வொருவராய் வர அனைவரும் கிளம்பச் சொல்லி தானும் தயாராக சென்றான் ஷ்யாம்.
அனைவரும் தயாராகி உணவு மேசையில் கூடி இருக்க அங்கே வந்த ஷ்யாமின் கண்கள் தன்னவளையே தேடியது.
“எங்கே பர்த்டே பேபிய காணோம்”, என்று மித்து கேட்கும் போதே தியா வர,
“அதோ வந்துட்டா”, என லட்சு காட்டிய திசையில் பார்த்த ஷ்யாமின் கண்கள் இமைக்க மறந்தது.
🎼ஒரு தேவதை பார்க்கும்
நேரம் இது
மிக அருகினில் இருந்தும்
தூரம் இது
ஓ.ஓ.கண்கள் இருக்கும்
காரணம் என்ன
என்னை நானே கேட்டேனே
உனது அழகை காணத்தானே
கண்கள் வாழுதே🎼
தேவதையாய் பட்டுப் புடவை சரசரக்க நின்றாள் அவள்.
அந்த புடவை மூன்று வெவ்வேறு டிசைன்களுடன் இருந்தது மேலிருந்து பெரிய தங்கப் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் இருக்க, அதன் கீழ் இளஞ்சிவப்பில் பெரிய தங்க மாங்காய் டிசைன் இருந்தது, அதன் கீழ் சிறிய தங்கப் பூக்கள் ஆரஞ்சு வண்ணத்தில் தவழ இறுதியாய் பச்சை இளஞ்சிவப்பு பார்டர் புடவைக்கு அழகைச் சேர்த்தது.
அவள் உடலில் பாந்தமாய் பொருத்தி இருந்தது அந்த புடவை அதை பார்த்தவனின் கண்கள் அவளை ஆசையாய் தழுவியது.
இவன் பார்வை காதலாய் தழுவ ராஜின் பார்வை பாசமாய் தழுவியது.
தான் சம்பாதித்து இதுவரை யாருக்கும் இப்படி அன்பாய் வாங்கியது இல்லை இதுவே முதல் முறை அதனால் மனம் நிறைந்தது. ஆம் அவன் தியாவின் பிறந்தநாளுக்கென தந்த பரிசு தான் அந்த சேலை இன்று தான் அவளுக்குக் கொடுத்தான்.
“புடவை ரொம்ப நல்லா இருக்கு அண்ணா செம செலேச்டின்”.
“உனக்கு பிடிச்ச சரிடாமா”.
அணைத்து உணவுகளும் தியாக்கு பிடித்தது தான் அடை தோசை அதற்கு தோதாய் அவியல், நெய் மைசூர் பாக் அவள் அம்மாவின் கைவண்ணத்தில் தயாராய் இருக்க, அது இல்லாமல் கேரளா ஸ்பெஷளான புட்டு கடலைக் கறி, உண்ணியப்பம், அடை பிரதமன்(பாயசம்) என வள்ளியும் சமைத்திருந்தார்.
சாப்பிட்டு முடித்து திருநெல்லி கோவில் நோக்கிச் சென்றனர்.
காரில் லட்சு, வர்ஷா, மித்து மூவரும் பின்புறம் அமர, நடுவில் சந்திரன், ராஜ், அருண் அமர்ந்து கொண்டனர்.
புடவை கட்டியத்தால் தியா வசதியாய் அமரட்டும் என முன்னே விட்டிருந்தனர்.
அனைவரும் அமர்ந்த பின் வண்டியேடுக்க வந்தவன் தியா முன்புறம் இருப்பதைப் பார்த்து குத்தாட்டம் போட்டான்.
அவளைப் புடவையில் பார்க்க வேண்டுமென நேற்று தான் நினைத்தான் இன்று அது நிறைவேறிவிட்டது. இதோ தன்னவள் அதுவும் புடவையில் தன் அருகே அமர்ந்திருக்க வேற என்ன வேணும் மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது.
திருநெல்லி கோயில் என்பது இந்தியாவின் கேரளாவில் உள்ள பிரம்மகிரி மலையின் பக்கத்தில் , கர்நாடக மாநில எல்லைக்கு அருகில் மகா விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான கோயிலாகும் . மலைகள் மற்றும் அழகான காடுகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்கில் வடக்கு வயநாட்டில் சுமார் 900 மீட்டர் உயரத்தில் கோயில் உள்ளது . மானாதவாடியிலிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ளது .
3000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோயிலை மூன்று வனவிலங்கு சரணாலயங்கள் வழியாக வாகனம் ஓட்டினால் அடையலாம்.
பாரம்பரியத்தின் படி, பிரம்மா தனது ஹம்சத்தில் பிரபஞ்சத்தைச் சுற்றிக் கொண்டிருந்தார் , அப்போது அவர் பிரம்மகிரி மலை என்று அழைக்கப்படும் பகுதியின் அழகால் ஈர்க்கப்பட்டார் . அந்த இடத்தில் இறங்கிய பிரம்மா , ஒரு அம்லா மரத்தில் அமைக்கப்பட்டிருந்த சிலையைக் கண்டார். பிரம்மா அந்த விக்கிரகத்தை விஷ்ணுவாகவும் , அந்த இடத்தை வைகுண்டமாகவும் ( விஷ்ணுலோகம்) அங்கீகரித்தார். தேவர்களின் உதவியுடன் பிரம்மா, சிலையை நிறுவி அதற்கு சாஹ்யமலக் க்ஷேத்திரம் என்று பெயரிட்டார். பிரம்மாவின் வேண்டுகோளின்படி விஷ்ணு அப்பகுதியின் நீர் அனைத்து பாவங்களையும் கழுவும் என்று உறுதியளித்தார். இதனால், கோயிலுக்கு அருகில் உள்ள நீரூற்று மற்றும் நதி பாபநாசினி என்று அழைக்கப்படுகிறது (“எல்லா பாவங்களையும் கழுவுகிறது”).
பாபநாசினியில் கால் நினைத்து சிறிது தலையில் தெளிந்து கொண்டு உள்ளே சென்றனர் அது கேரளா பாணியில் அமைக்கப் பட்ட ஒரு பழைய கோவில் மிகவும் அருமையாய் இருந்தது.
உள்ளே உலகை காக்கும் மகா விஷ்ணுவைத் தரிசித்து அவரவர் தேவைக்கேற்ப வேண்டிக்கொண்டனர்.
இனி எஸ்டேட் சென்று மதிய உணவை முடிந்து மலை ஏற தோதாய் தியாவும் சுடி மாறிக் கொண்டு செல்லாம் என யோசித்து வண்டியை எஸ்டேட் பங்களாவிற்கு விட்டான் ஷ்யாம்.
(இவ்வாறு என் மனதை உணர்ந்து கொண்டான் ஷ்யாம். இனி அவன் நாட்கள் எப்படி செல்லும்? இனி வர எபில பாகலாம்)