💙இருளை ஈர்க்கும் ஒளி💙

eiFC8EY29611-cd705fad

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

ஈர்ப்பு – 8

“எந்த ஒரு செயலைச் செய்வதற்கு முன்னும் அதனால் வரும் பின்விளைவுகளை அறிந்து திட்டமிட்டும் செயல்பட வெற்றி என்னும் ஒளி நம்மை நோக்கிப் பாயும்”

தியா வரச் சொன்ன ஆள் வந்தான். அவள் ஏதோ மும்முரமாக வேண்டிக் கொண்டிருப்பதைக் கண்டு அவள் அருகே வர, அவள் விழிகளை மலர்த்தி “இறைவா நல்வழியைக் காட்டு”, என வேண்டி எதிரே இருப்பவனை கண்டாள்.

“வாங்கண்ணா”

“ம்…. வந்து ரொம்ப நேரம் ஆச்சா ”.

“இல்லை இப்ப தான் வந்தேன்”.

“சரி சொல்லு, ஏதோ முக்கியமான விடயம் பேசணும்னு சொன்ன”.

“ஆமாண்ணா, அங்க போய் அந்த தூண்கிட்ட உட்காந்து பேசலாமா?”

 “சரி போலாம்”.

இருவரும் எதிர் எதிரே அமர்ந்து பேச துவங்கினர்.

“என் பிரண்ட் ஒருத்தி பிரச்சனையில் மாட்டிக்கிட்டா எப்படி அவளை அதிலிருந்து வெளியே கூப்பிட்டு வரதுன்னு யோசனையா இருக்கு, உங்ககிட்ட பேசினா எதாவது வழி கிடைக்குமோனு தான் வரச் சொன்னேன்”.

“என்ன பிரச்சனை?”

அவள் தன் தோழியின் இக்கட்டைக் கூறினாள்.

“ம்….. நல்லா பிளான் பண்ணி அந்த பிள்ளையை மாட்ட வெச்சிருக்கான்”.

“அவ மேல தப்பு இருக்கிறதா உங்களுக்கு தோணுதா”.

“ம்ம்……அவ மேல தப்புனு சொல்ல முடியாது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்திருக்கலாம்”.

ம்……,“அவ….தற்கொலை அளவுக்குப் பேசவும் எனக்கு என்ன பண்றதுனே தெரியல”.

“இது யோசிக்க வேண்டிய விடயம், மொதல்ல அந்த பொண்ணு வீட்ல யாராவது ஒருத்தர்கிட்ட பக்குவமா பேசி அவளைக் கண்காணிக்க சொல்லு”.

“அப்போ நம்ப ஷ்யாமகிட்ட பேசறது தான் நல்லது”.

“ஏன்?”

“அண்ணா நான் இவளோ நேரம் சொன்ன அந்த பிரண்ட் வர்ஷா தான்”.

“வர்ஷாவா “

“ஆமா “

“சரி இரு ஷ்யாமக்கு கால் பண்ணி இங்கே வரச் சொல்றேன், கொஞ்சம் பக்குவமா சொல்லலாம்”.

“சரிண்ணா”.

ஷ்யாம் வந்து சேரவும் அருணிடம் சொன்னது போல் முதலில் பெயரைச் சொல்லாமல் விடயத்தை மட்டும் கூறி அவன் கருத்தைக் கேட்டனர்.

“என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு ஆன அதுக்கு முன்ன, அவள் வீட்டில் யார்கிட்டயாச்சி சொல்லி கண்காணிக்கச் சொல்லனும் ”, என்றான்.

“என்ன ஐடியா”, என இருவரும் ஒன்றாய் கேட்க.

அவன் சொன்னான்.

“ஆமாடா, இதுக்கு அவனைப் பார்த்தா சரியா இருக்கும். இந்த யோசனை எனக்கு டக்குனு வரல பாரு”

தியாக்கு இப்போது தான் மூச்சே வந்தது வர்ஷுவிடம் தைரியம் சொல்லினாலும் என்ன பண்ணலாம் என வழியில்லாமல் இருந்தவள் இதைக் கேட்டவுடனே இந்த பிரச்சனைக்குச் சீக்கிரம் தீர்வு காணலாம் என நம்பிக்கை கொண்டாள்.

“சரி நான் சொன்ன மாதிரி அவங்க வீட்லையும் பேசிடு”.

“ம்……..”, என அருணும் தியாவும் மாறி மாறி ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர்.

நீயே சொல்லு, என அருண் தியாக்கு கண்காட்டவும், ஷ்யாமிடம் எப்படி அவள் வர்ஷு தான் எனக் கூறுவது என்று திண்டாடினாள்.

பின் ஒரு முடிவுக்கு வந்தவளாய்…. பெருமூச்சு விட்டு, “ஷ்யாம் நான் சொல்லப்போவதைப் பொறுமையா கேளுங்க….. நான் இவளோ நேரம் சொன்ன அந்த பொண்ணு…….. எனத் தயங்கி தயங்கி நம்ப வர்ஷு தான்” சொல்லியேவிட்டாள்.

என்ன? தன் தங்கையா இப்படி ஒரு பிரச்சனையில் மாட்டியது…. அவளா தற்கொலை அளவு யோசித்தது…..’ தன் காதுகளில் விழுந்த செய்தியை நம்பமுடியாமல் இறுகிப்போய் அமர்ந்திருந்தான்.

அவன் நிலை இவர்களைப் பாதித்தது.

“ஷ்யாம்……”, மெதுவாக அழைத்தாள்.

ம்ம்…. அவனிடம் பதிலில்லை.

“ஷ்யாம்”…என அருண் அவனை உலுக்கவும்.. ஆங்…..நண்பர்களைப் பார்த்தவனின் கண்களில் அத்தனை வலி.

“ப்ளீஸ் ஷ்யாம்….தைரியமா இருங்க…நம்ம தான் இருக்கோம்ல, அவளை இதுல இருந்து வெளிய கொண்டு வரலாம் கவலைப் படாதிங்க”

“ஆமா மச்சா”.

“ம்….”

“இதுலாம் எப்போ நடந்துச்சி”.

“லாஸ்ட் இயர் செகண்ட் செம் லீவ்ல உங்க தாத்தா பாட்டி வீட்டுக்கு போனால அங்க தான்”.

“அதுக்கு அப்புறம் ஒரு செம் முடிஞ்சு இப்போ நாலாவது செமே வந்துடுச்சே இவளோ நாள் அவ உன்கிட்டயோ இல்ல மித்துகிட்டயோ எதுவும் சொல்லலையா”.

இல்லையெனத் தலையாட்டினாள் அவள்.

“பாவம் அவ எல்லாம் மறக்க முயற்சி பண்ணிருப்பா போல, இப்படித் திரும்ப அவன் வருவானு யோசிக்களை”.

“ம்….”

“அப்புறம் எப்போ உங்க நண்பர்கிட்ட பேசப்போறீங்க”.

“இப்போவே போய் பாக்குறேன், அருண் வாடா”

சிறிது யோசித்து விட்டு, “நீயும் வரியா தியா” எனக் கேட்க,

“எனக்கு பிரச்சனை இல்லை ஆனா வீட்ல சொல்லணுமே….சரி இருங்க”, என வீட்டிற்குக் கால் செய்து, தான் ஷ்யாம் அருணுடன் வெளியில் போவதாகச் சொன்னாள்.

அவர்களுடன் தான் என்பதால் எதையும் தோண்டித்துருவிக் கேட்காமல் போய்வரச் சொன்னார்கள்.

பின் மூவரும் அந்த நண்பனைக் காணச் சென்றனர்.

ஷ்யாமின் கையில் கார் சீறிப் பாய்ந்தது, அவனின் கோவத்தின் அளவு அதில் தெரிந்தது. ‘தன் தங்கையை ஒருவன் மிரட்டுகிறானா’, அவளை எப்படி எல்லாம் பார்த்துக் கொண்டார்கள்….அவள் சாவைப் பற்றிப் பேசியதை பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை அவனால்.

‘அந்த ரவி இப்போ எங்க இருப்பான் அவன் மட்டும் என் கைல மாட்னான் அவளோ தான்’.இப்படி தன் யோசனையிலே மூழ்கி இருந்தவன் எதிரே வரும் வண்டியை கவனிக்கவில்லை.

அவன் அருகிலிருந்த அருண் சுதாரித்துக் கத்தும் முன், “ஷ்யாம் பாத்து”, என்ற தியாவின் குரலில் சுதாரித்து லாவகமாக வண்டியைத் திருப்பினான்.

கண் மூடி நெஞ்சில் கைவைத்து வாயில் உப் என மூச்சை விட்டவளைப் பார்த்தவன் தன்னையே நொந்து கொண்டான்.

“சாரி”, என காரின் வேகத்தைக் குறைத்து ரோட்டில் கவனத்தை பதித்தான்.

தன் நண்பனின் வீட்டின் முன் காரை நிறுத்த, சத்தம் கேட்டு வெளியே வந்த இவன் நண்பன் ராஜேஷ், ஷ்யாமையும் அருணையும் பார்த்தது “ஹாய் மச்சா எப்படிடா இருக்கிங்க வாங்க வாங்க….. அருகே இருந்த பெண்ணை பார்த்தவன், நண்பர்களைக் கேள்வியாய் நோக்க.

“இது தியா”.

“உள்ள வாங்க”.

நண்பனின் முக இறுக்கம் ஏதோ சரியில்லை என உணர்த்த, அவர்களை அமர வைத்து மூவருக்கும் டீ எடுத்துவந்து கொடுத்தான்.

சொல்லுடா எதாவது பிரச்சனையா என நண்பனை ஊக்குவித்தான்.

அவன் கேட்டது தான் தாமதம் தன் தங்கை விடயத்தை ஒன்று விடாமல் கூறினான்.

அனைத்தையும் கேட்டவனுக்கு நண்பனின் மனநிலை புரிந்தது.

மேலும் தியாவிடம் அவளுக்குத் தெரிந்த விடயங்களைக் கேட்டு சில சந்தேகங்களை தெளிவு படுத்திக் கொண்டான்.

“மச்சி அவன் எங்க இருப்பான்னு நமக்கு தெரியணும்டா அப்போ தான் எதாவது பண்ண முடியும்”.

“எப்படிடா அதைக் கண்டுபிடிக்கிறது”.

“என் கிட்ட ஒரு பிளான் இருக்கு கொஞ்சம் ரிஸ்க் தான் ஆன ஆளு கண்டிப்பா வெளிய வருவான்”.

“சொல்லுடா”.

அவன் ப்ளானை சொன்னான், “இதுல ரிஸ்க் பேக்டர் என்னென்னா அவன பத்தி நமக்கு முழுசா தெரியாது சோ எல்லாத்துக்கும் தயாரா இருக்கனும்”.

“தியா இந்த பிளான வர்ஷாகிட்ட புரியவைத்து அவளை தயாராயிருக்க சொல்லு”, என்றான் ராஜ்.

“சரிங்கண்ணா”

“இப்போவே கால் பண்ணிச் சொல்லுமா போனை ஸ்பீக்கரில் போடு”.

ம்.. என அவள் பேச துவங்க நண்பர்கள் மூவரும் இவர்களின் பேச்சில் கவனமானார்கள்.

எடுத்தவுடன் அவள் கேட்டது ஏதாவது தீர்வு கிடைத்ததா என்பதே.

“ம்…. இப்போ தாண்டி ஒருவரைப் பார்த்தேன் என ராஜை பற்றிக் கூறி அவனின் திட்டத்தை விளக்கினாள். நீதான் இதுல முக்கியமா ஒத்துழைக்கனும் புரியுதா”.

“ம்…. புரியுது”.

“சரிடி அப்போ ரெடியா இரு அவனைப் போட்டு மொத்த, பேட்டில்க்கு(battle) ரெடியாகு ஆயுதங்கள் தயாராயிருக்கட்டும்”.

(அந்தக்காலத்துப் பாணியில் கூறினாள்)

அவள் மெதுவாய் சிரித்து, “கிட்டு ரெடியா தான் இருக்கு நீ முதல சொன்ன அப்பவே ரெடி பண்ணிட்டேன்”.

“சூப்பர்டி…சரி அப்புறம் கூப்புடுறேன்”.

“அப்படி என்ன ஆயுதம்மா வெச்சிருக்கீங்க”, என ராஜ் கேட்க.

இவள் அடுக்கினாள், ஒரு பாக்கெட் மிளகாத்தூள், பெப்பர் ஸ்பிரே, ஒரு சின்ன கத்தி, குண்டூசி/சேப்டிப் பின் இப்படிப் பல இருக்கு.

ஷ்யாம் தன் இறுக்கம் தளர்ந்து சிறிது இதழ் பிரித்தான்.

“எல்லாம் சரி இந்த குண்டூசிவெச்சி என்ன பண்ணுவ”, என அருண் கேட்க.

“அதுதான் அதிகம் யூஸ் பண்ணறது, நம்பல சீன்றவங்கள கைல குத்த”.

“நீங்க தான் ஸ்கூட்டில வரிங்களே, வர்ஷு ஷ்யாம்கூட வரா அப்புறம் எதுக்கு அது”.

“பஸ்ல மட்டும் தான் இப்படிலாம் நடக்குமா என்ன, நம்ப காலேஜ் கேன்டீன்ல தனித்தனி வரிசை இல்லயில்ல அங்க, அப்புறம் வெளிய சொன்னா வெட்கக்கேடு காலேஜ் சாருங்க சில பேர் இப்படி நடக்கறது உண்டு, இப்படிப்பட்ட இடிமன்னர்களுக்கு அது தான் ஆயுதம்”.

“தெரியாம படுறதுக்கும் வேணுனே பண்றதுக்கும் வித்தியாசம் தெரியும் சோ ட்ரெஸ்லையே குத்தி வெச்சிப்போம் அவசியம் வரும் போது யூஸ் பண்ணிப்போம்”.

“நல்ல ஆயுதம் தான். சரி நாளைக்கு போறோம் எப்பவும் சுதாரிப்பா இருங்க”.

“ம்…” எனத் தலையாட்டினாள் தியா.

“சரிடா”, என்றான் அருண்.

“என்னடா ஷ்யாம் நீ எதுவும் சொல்லாம இருக்க”.

“நீ சொல்றமாதிரியே செய்யலாம்டா சீக்கிரம் வர்ஷுவ இந்த பிரச்சனையிலிருந்து வெளிய எடுத்துட்டு வந்தா போதும்”.

“கண்டிப்பாடா”, என நாளை செயல்படுத்தப் போகும் திட்டத்திற்கு சிலப் பல முன்னேற்பாடுகள் செய்தான்.

இவ்வாறு அவர்கள் யாரைப் பிடிக்க முயற்சி செய்கிறார்களோ அவன் வர்ஷாவின் கல்லூரிக்கு அருகே ஒரு நகரில் வீடு எடுத்து தங்கியிருந்தான்.

ரவி ஒரு பணத்தாசை பிடித்த மிருகம். அவனுக்கு பணம் வேண்டும் ஆனால் உழைப்பது பிடிக்கவில்லை. உழைக்காமல் எப்படிச் சம்பாதிப்பது என யோசித்தவன் சரக்கு, கஞ்சா, சில கொள்ளைகள் போன்ற தொழில் செய்துவந்தான் அதில் கிடைத்தது அவனுக்குத் திருப்தியில்லை அவனுக்கு வேண்டியது வசதியான வாழ்க்கை. ஒரு நாள் அவன் நண்பன் ‘பேசாம பணக்கார பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணிக்கோ லைப் செட்டில்”, என அறிவுரை கூற.

‘நமக்கு ஒரே பொண்ணு கூட வாழரதுலாம் செட் ஆகாதுடா”, என மறுத்தான்.

பின் தன் தாயைப் பார்க்கச் சொந்த ஊரான கும்பகோணம் சென்றவன்.

அவர் வேலை செய்யும் தோட்டத்திற்குப் போனபோது தான் அங்கே தன் தாத்தா அம்மாவுடன் வந்த வர்ஷாவை பார்த்து, “தன் நண்பன் கூறியபடி செய்தால் என்ன”, என்று தோன்றியது.

அதற்கான வழிகள் செய்தான். அவன் நினைத்தது அனைத்தும் நடக்க, இவன் கெட்ட நேரமோ இல்லை வர்ஷுவின் நல்ல நேரமோ அவனே எதிர்பாராமல் அவன் சுயரூபத்தைக் கண்டுகொண்டாள் வர்ஷா.

அவள் ஊருக்குத் திரும்பியது தாமதமாகத் தான் தெரிந்தது அவனுக்கு, அதன் பின் அவளைச் சந்திக்க எவளோ முயன்று முடியாமல் கடுப்பானான். அவள் இருக்கும் இடம் சென்று பார்க்கலாம் என முடிவெடுத்த நேரம் அவன் முன்பு செய்த ஒரு கொள்ளையில் மாட்டி ஆறு மாதம் சிறை கம்பி எண்ணினான்

அதன் பின் சென்னையில் அவள் படிக்கும் காலேஜுக்கு முன் வந்து நோட்டம் விட்டான், இத்தனை நாள் பார்த்ததில் அவள் வீடு, வீட்டை விட்டால் கல்லூரி என்று இருக்க, வீட்டின் அருகே அதிகம் மாட்டும் சந்தர்ப்பம் இருக்கவே கல்லூரி அருகிலேயே தங்கினான், இவனைக் கண்டால் அவளே வந்து பேசுவாள் என எண்ணினான்.

அவ்வாறே தனிமையில் ஒரு நாள் அவளிடம் பேச வாய்ப்பு கிடைத்தபோது தான், அவள் தன்னை கண்டுகொண்டதை அறிந்தவன் வந்த வரை லாபம் என அவளை மிரட்டி பணம் பறிக்க பார்த்தான்.

அவள் வீட்டையும் ஆள் வைத்து நோட்டம் விட்டுக்கொண்டு தான் இருந்தான், அப்படி தான் அவளை பின் தொடர்ந்து அமுஸ்ட்மெண்ட் பார்க் சென்றது.

(அப்புறம் நடந்தது என்னனு உங்களுக்கே தெரியும் மக்களே)

“வர்ஷாகிட்ட பணத்தை ஆட்டையப்போட்டு ஜாலியா இருக்கலாம்னா அவ ரொம்ப தண்ணி காட்றா. இனி வெறும் மிரட்டல் சரி படாது, நாம ரெடி பண்ணத அவகிட்ட காட்னாதா கொஞ்ச மாச்சி நம்பல பாத்து மிரல்வா”, என யோசித்தவன், அவளுக்கு போன் பண்ணி நாளை மீட் பண்ணியே ஆகவேண்டும் என மிரட்டினான்.

அவள் நம்பரை அடாவடியாய் வாங்கி இருந்தான்.

ராஜ் வீட்டில்…..

“சரி அப்போ கிளம்புறோம்டா”.

தியாவிற்குக் கால் வந்தது.

“வர்ஷா தான் பன்றா ஷ்யாம்”.

“பேசு”.

“சொல்லுடி”.

“அந்த ரவி கால் பண்ணான்டி”.

இவளின் முகமாறுதலில் என்ன என இவர்கள் கேட்க இவள் கூறினாள்.

மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.

“நான் பேசுறேன்”, என ராஜ் கூற.

“நான் சொன்னேன்ல, ராஜ் அண்ணா அவர் பக்கத்துல தான் இருக்கார் இரு போனை ஸ்பீக்கர்ல போடறேன்”.

“அவன் என்ன சொன்னான்”, என ராஜ் விசாரிக்க.

“நாளைக்கு மீட் பண்ண சொல்றான்”.

“சரி அப்போ மீட் பண்ணுவோம்”.

நாளை என்னென்ன செய்ய வேண்டும் என அவளுக்கு அறிவுரை கூறி போனை வைத்தான்.

“என்னடா இது அவனே கூப்பிடுறான்”.

“விடு மச்சி எலி தானா பொறில மாட்ட வரேன்னு சொல்லுது ரா ரா…. சரசுக்கு ரா…. ரா….. னு போட வேண்டியது தான்”, என அவன் முன்னாள் செய்த ஏற்பாடுகளில் சிறு மாற்றங்கள் செய்தான் ராஜ்.

“அப்போ சரி நாளைக்கு எல்லாம் ரெடியா இருங்க அவனை ஒரு வழி பண்ணலாம்”.

(சரி அவங்க என்ன திட்டம் போட்டாங்க? ரவி என்ன ரெடி பண்ணி வெச்சிருக்கான்? நண்பர்கள் சேர்ந்து ரவியை ஒரு வழி பண்ணார்களா? இந்த கேள்விகளுக்கான பதிலை அடுத்த எபில பாக்கலாம், பை……பை….)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!