😍உணர்வை உரசி பார்க்காதே! 15😍

IMG-20211108-WA0067-1f55b874

🌹அத்தியாயம் 15

சஷ்டி, கிட்ட தட்ட இரண்டு வருடங்களாக உணவு உண்ணாமல் தொண்டைகுழி வறண்டு போயிருந்தது. “எனக்கு ரொம்ப தாகமா இருக்கு தண்ணீ தாரீயா ணா?” 

“இதோ தாரேன் மா.” என்று பக்கத்து மேசையில் இருக்கும்  நீர் போத்தலை எடுத்து ஒரு கோப்பையில்  ஊற்றி மெதுவாக புகட்டினான். 

சிறிதளவு குடித்துவிட்டு, “போதும் ணா.” என்று சஷ்டி உரைக்க, வைத்தியர் வந்து சேர்ந்தார். 

“டாக்டர் என் தங்கச்சி தவறிட்டதா சொன்னீங்க. பட் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னாச்சு தெரியுமா? சஷ்டி எங்கூட பேசுனா, என்னால நம்பவே முடியல, என்ன நடந்துச்சினும் தெரியல?” சஷ்டி இறந்து விட்டதாக கூறிய வைத்தியரிடம் சஷ்டி உயிருடன் இருப்பதாக கூற, அதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.  வியக்கவுமில்லை என்பதை விகுஷ்கி கவனிக்க மறக்கவில்லை. 

“என்ன டாக்டர் பேசாம இருக்கீங்க, நான் எவ்ளோ பெரிய விஷயம் சொல்றேன். நீங்க எந்த ரியாக்ஷனுமே இல்லாம இருக்கீங்க!” என்ற விகுஷ்கிக்குதான் வியப்பாய் இருந்தது. 

“என்ன சஷ்டி, உன் அண்ணாட்டா எதுமே செல்லையா?” என்று விகுஷ்கி கேட்ட கேள்விக்கு, சஷ்டியை பார்த்து பதில் கூறாமல் கேள்வியை கேட்டார். 

‘இல்லை’ என்று மறுத்து தலையை அசைத்தாள் சஷ்டி. 

“சஷ்டி, உண்மையா உனக்கு என்னமா ஆச்சு, நீயாவது சொல்லு மா, எனக்கு பைத்தியமே புடிக்கிற மாதிரி இருக்கு.” என்று நெற்றியை இரண்டு விரல்களால் நீவினான். 

“நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்குற, உனக்கு தெரிஞ்சுதான் எல்லாமே நடந்துருக்கும். நீதான் இப்போ நடிக்கிற ணா.” என்று சஷ்டி கூற,  விகுஷ்கிக்கு குழப்பமானது. 

“நான் எதுக்கு மா நடிக்க போறேன்? அதும் உடம்பு சரியில்லாம நீ இப்படி இருக்கும்போது நான் நடிக்கிறதுல  என்ன பிரயோஜனம் சொல்லு?” 

“நீ வக்கீல்தானே அதான் நீ ஜெயிச்சிட்ட ணா.” 

“டாக்டர்,  சஷ்டி ரொம்ப அறுக்குறா, எதையும் நேரா சொல்லுற பழக்கமே இல்ல. நீங்களாவது நடந்தத சொல்லுங்க?” என்று இறைஞ்சினான் வைத்தியரிடம். 

“நர்ஸ் என்ன அவசரமாக கூப்பிட்டாங்க விகுஷ்கி, நானும் வந்து பார்த்தேன். சஷ்டிக்கு வழமைக்கு  மாறா கண்ணீரோட மூச்சு திணறல் அதிகமா இருந்துச்சு, 

ஃபர்ஸ்ட் அதை கன்ட்ரோல் பண்ணேன். அதுக்கு அப்பறம் அண்ணா அண்ணானூ பதற்றமா சொல்ல ஆரம்பிச்சா. அதான் உடனே ஃபோன் போட்டு உங்கள வர சொன்னோம். பட் நீங்க வந்தது லேட். 

சஷ்டிக்கு கான்சியஸ் வர போகுதுன்னு புரிஞ்சிக்கிட்டேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சமாக முழுசா கான்சியஸ் வர வச்சேன்.  கான்சியஸ் வந்ததும் அண்ணாவ பார்க்கணும்னு அழ ஆரம்பிச்சாங்க. 

அண்ணா இருக்க இடத்துக்கு கூட்டிட்டு போக சொன்னாங்க.  என் அண்ணா நல்லா இருக்கானானு பத்து தடவைக்கு மேல கேட்டாங்க. 

ரொம்ப பயந்து போய் இருந்தாங்க. நீங்க வரும் வரைக்கும் சஷ்டிக்கு பயம் போகல. நீங்க வந்ததும் கண்ணாடி வழியா பார்த்துட்டு கொஞ்சம் கூல் ஆனாங்க. சரி உங்க அண்ணா வரச் சொல்லுறேன். உனக்கு கான்சியஸ் வந்துருச்சுனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்பாடுவாருனு சொன்னேன். 

உடனே சஷ்டி, வேணாம் டாக்டர் நான் செத்துட்டதா சொல்லுங்கனு சொன்னா, நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேன். அது தப்புனு சொன்னேன். உங்க தங்கச்சி கேட்ட பாடில்ல. சரி ரொம்ப நேரம் செத்த மாதிரி நடிக்க வேணாம். உங்க அண்ணனுக்கு எதும் மெண்டலி ப்ராப்ளம் வந்த நான் பொறுப்பில்லை சொல்லிட்டு நான் நகர்ந்துட்டேன். அதுக்கு அப்பறம் இப்போ நான் வாரேன். அவ ஏன் அப்படி சொன்னானு அவகிட்டவே கேட்டுக்கோங்க. எனக்கு வொர்க் இருக்கு ரௌண்ட்ஸ் போகணும்.” என்று கூறினார் வைத்தியர். 

வைத்தியரை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். “நீங்க இல்லனா இந்நேரம் என் தங்கச்சிக்கு என்னாகிருக்கும்னு என்னால நெனைச்சு கூட பார்க்க முடியல. என்னால எதும் நடக்கணும்னா சொல்லுங்க டாக்டர் நான் செஞ்சி தாரேன். 

ரொம்ப நன்றி டாக்டர் என் உசுரையே திருப்பி தந்துட்டீங்க. கொஞ்ச நாளா பித்து புடிச்சவன் மாதிரி எப்படியெல்லாம் இருந்தேனன்னு எனக்குதான் தெரியும். இப்போதான் மனசு கொஞ்சம் லேசா இருக்கு. தேங்க் யூ டாக்டர் நீங்க இல்லனா என் தங்கச்சி இல்ல.” என்று மீண்டும் வைத்தியரிடம் மனதார நன்றியை தெரிவித்தான். 

“நான், என் கடமையதான்  செஞ்சேன் விகுஷ்கி. நீங்க தேங்க்ஸ் பண்றதா இருந்தா, டெய்லி உங்க தங்கச்சிக்கூட வந்து பேசிட்டு போற அந்த பொண்ணுக்கு தேங்க்ஸ்  பண்ணுங்க. உண்மையாவே அந்த பொண்ணுதான் உங்க சிஸ்டர் கூட ரொம்ப மெனகட்டு இருக்காங்க. சஷ்டியோட ஃபீலிங்க்ஸ வெளிய கொண்டு வந்துருக்காங்க. நான் பண்ணதவிட அவங்க குடுத்த ட்ரீட்மண்ட் பேஸ்ட். இதுக்கு அப்பறம் ஹேப்பியா இருங்க. சஷ்டிய கவனமா பார்த்துக்கோங்க.” என்று வைத்தியர் பரிந்துரைகளை கூறினார். 

வைத்தியர் மீத்யுகாவிற்கு நன்றி கூற வேண்டுமென்று பரிந்துரைக்க, விகுஷ்கி மனதளவில் கருகினான். ‘என் தங்கச்சிய காப்பாத்தி தானு இவகிட்ட கேக்கலயே! நான் எதுக்கு நன்றி சொல்லணும்? அக்கா பண்ண பாவத்துக்கு தங்கச்சி பரிகாரம் பண்றா, அதுக்கு நான் நன்றி சொல்லணுமா? அதுக்கும் எனக்கும் எந்த பொறுப்புமில்ல’ அவளை அடித்ததை மறந்துவிட்டான்.

வைத்தியர், சஷ்டியின் புறம் திரும்பினார். “சஷ்டி தினமும் மெடிசின் ஃபாலோவ் பண்ணணும் ஆஸ்பிடல் வந்து இன்ஜெக்ஷன் போட்டுக்கணும். மறந்திடக் கூடாது ஓகே. டேக் கேர்.” என்று கூறிவிட்டு வைத்தியர் அவ்வறையை விட்டு நகர்ந்தார். 

வைத்தியர் நகர, விகுஷ்கியின் முகம் உர் என்றானது. “ஏன் சஷ்டி மா நீ தவறிட்டதா சொல்ல சொன்ன, நான் உன்மேல வச்சிருக்க பாசத்த பதம் பார்க்குறியா?, இல்ல நீ செத்துட்டதா சொன்னா என்னோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னு டெஸ்ட் பண்ணி பார்க்குறியா? உன் மேல செம்ம கோவமா இருக்கேன் சஷ்டி, நீ திரும்ப உயிர் பொழச்சி வந்தது எனக்கு சந்தோசமா இருக்கு, நீ இந்த உலகத்துல இல்லனு சொல்லும்போது விகுஷ்கி செத்துட்டான்.” 

“ஆமா, நீ மட்டும் உன் ஆள வச்சு என்னைய டெஸ்ட் பண்ண, அது உன் கண்ணுக்கு தெரியலயா ணா, நீ உயிருக்கு போறாடுறேனு சொல்லும்போது எனக்கும் எப்படி இருந்துச்சு தெரியுமா, என்னால கண்ண கூட தெறக்க முடியல அவ்ளோ கஷ்டப்பட்டேன்.” என்று கூறும்போது சஷ்டியின் கண்கள் கலங்கியது.

“அழாதடா, நீ என்ன சொல்ற, யாரு என் ஆளு, யாரு சொன்னா நான் உயிருக்கு போராடிக்கிட்டு இருக்கேனு?” 

“ஓவரா நடிக்காத ணா, கோர்ட்டுல மட்டும் வக்கீலா இருக்க, இப்போ உன்னால வக்கீலா திங்க் பண்ண முடியலயா? உன் ஆளு, என் அண்ணி, அவங்கதான் சொன்னாங்க.” 

“ஓகே அவ என்ன சொன்னா, சொல்லு?” 

“என்னால உன்னைய உதைக்க முடியாதுன்னு தைரியத்துல பேசுறியா, புருஷனும் பொண்டாட்டியும் ப்ளான் பண்ணியெல்லாம் பண்ணிட்டு இப்போ வந்து எங்கிட்ட என்ன நடந்துச்சுனு கேக்குற?” 

“சஷ்டி மா, சத்தியமா எனக்கு தெரியாது டா” 

“உன் ஆளுகிட்டவே போய் கேளு, என்ன பண்ணாங்கனு.” என்று கூறிவிட்டு ஒரு புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள். 

“அவகிட்ட போய் கேட்டு தெரிஞ்சிக்கிற வரைக்கும் எனக்கு பொறுமை இல்லமா, நீயே சொல்லிரு டா, என் தங்கம், பட்டு சொல்லுடா.” என்று தங்கையிடம் இறைஞ்சி நின்றான். 

“உன் ஆளு, உனக்கு ஆக்சிடன்ட் ஆகிட்டு சொன்னாங்க ணா, அது வரைக்கும் நான் எப்படி இருந்தேனு தெரியல. உனக்கு ஆக்சிடன்ட்னு சொன்னதும் எனக்கு அப்பவே தூக்கி போட்டுருச்சு. உடனே எழும்பி ஓடணும் போல இருந்துச்சு. 

பட் என்னால முடியல. எவ்வளவோ டிரை பண்ணேன் எழணும்னு, ஆனா என்னால அழதான் முடிஞ்சுது. அவங்க ஏன் அப்படி  சொன்னாங்கனா இப்போ தான் புரியுது.” 

“யாரு அந்த அவங்க?” என்று தெரியாமல் விகுஷ்கி கேட்டான். 

“மண்டு உன் ஆத்துக்காரி டா, கோமால இருந்து ரொம்ப கஷ்பப்படுத்திடேன்ல. அதான் அண்ணி வந்து சரிபடுத்திட்டாங்க. இதுக்கு அப்பறம் கஷ்டப்படுத்த மாட்டேன் ணா.” 

“நீ யாரையும் கஷ்டப்படுத்தல. கண்டதையும் யோசிச்சு மனச கஷ்டப்படுத்திக்காத மா.” என்று விகுஷ்கி கூற, சில மணிநேரம் வெளியே இருந்த லட்சுமி உள்ளே நுழைந்தார். 

“என்ன பாப்பா எங்கள இப்படி அழ வச்சிட்ட, இதெல்லாம் விளையாடுற விஷயமா?” 

“இல்ல லட்சுமி மா, அப்போதான் கிக்கா இருக்கும். சரி சரி நாளைக்கு என்ன சட்னி வைக்க போறீங்க?” 

“இனிமே இந்த விளையாட்டெல்லாம் வேணாம் பாப்பா. உனக்கு என்னென்ன சட்னி வேணுமோ எல்லாமே பண்ணி தாரேன் சஷ்டி பாப்பா.” என்று சஷ்டியிடம் கூறிவிட்டு, “தம்பி நான் வீட்டுக்கு கிளம்புறேன். ஆர்த்தி கரச்சி வைக்கிறேன், நீங்க வாங்க.” 

“சரி மா நீங்க கிளம்புங்க.” என்றான். 

லட்சுமி வீட்டுக்கு கிளம்ப, “அண்ணா உங்கூட பேசமாட்டேன். நீ ரொம்ப மோசம்.” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள் சஷ்டி. 

“இப்போ தான் உடம்பு சரி ஆகியிருக்கு. அதுக்குள்ள என்ன சண்ட போடுற, வீட்டுக்கு போய் பொறுமையாக சண்டை போடலாம். நீ இரு ஆஸ்பிடல் பில் செட்டில் பண்ணிட்டு வாரேன். என்று வைத்தியசாலை வரவேற்பு இடத்திற்கு சென்று பற்றுச்சீட்டை பெற்றுக்கொண்டு அதற்கான பணத்தை வழங்கினான்.

அதன் பிறகு சஷ்டிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்களுக்கும்  சஷ்டியை பராமரித்த செவிலியர்களுக்கும் நன்றியை தெரிவித்து இருவரும் வீட்டிற்குப் புறப்பட்டனர். 

மகிழுந்தில் செல்லும்போது கூட சஷ்டி எதுவும் பேசவில்லை. விகுஷ்கி கெஞ்சிக்கொண்டே வந்தான். ஏன்னென்று தெரியவில்லை, சஷ்டியின் திடீர் கோபத்திற்கு காரணம்.

வீட்டிற்கு வந்து லட்சுமி திருஷ்டி கழித்து முடிய உள்ள வந்தாள் சஷ்டி. வந்த முதல் அவள் கண்கள் யாரையோ தேடியது. “அண்ணா, அண்ணி எங்க?” என்று சஷ்டி வினாத் தொடுத்தாள். 

அவன் அதற்கு பதில் அளிக்காமல், “நீ ரெஸ்ட் எடுக்கணும், சோ சாப்பிட்டு மாத்திரப் போட்டுக்கோ மா.” 

“எப்போ கல்யாணம் ஆச்சு ணா?” 

“அதெல்லாம் அப்பறம் பேசலாம் சஷ்டி மா.” 

“அப்போ உனக்கு குழந்தை இருக்கா ணா?” 

“டேய் சஷ்டி மா, முதல்ல நீ குளிச்சுட்டு வா ஓடு.” 

“நீ ரொம்ப மாறிட்ட ணா, நான் இல்லாம நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு சொன்ன, அப்பறம் உனக்கெல்லாமே நான்தானு சொன்ன, நான் பொண்ணு பார்த்து குடுக்கணும்னு சொன்ன, இப்போ என்னாச்சு இதெல்லாம்?” என்றிடும்போது சஷ்டியின் வதனம் வாடியது.

“அச்சோ! சஷ்டி அதெல்லாம் விளக்காம சொல்லுறேன் மா.  மேரேஜ் நடந்து ஃபார்ட்டிஃபை டேஸ்தான் டா. உன் ஆசை பன்னி” என்றிட, “என்ன ணா?” என்றாள் சஷ்டி.

“உன் ஆசை அண்ணி வரட்டும் எல்லாத்தையும் சேர்த்து சொல்லுறோம்.” 

“சரி ணா, அண்ணி முகத்த நான் இன்னும் பார்க்கல, பட் நான் இப்போ எழும்பி உயிரோட நடமாடுறேனா அதுக்கு அண்ணிதான் காரணம் ணா. யூ ஆர் வெரி லக்கி ணா.” என்று சஷ்டி, மீத்யுகாவை புகழுரைப்பதெல்லாம் அவன் காதில் தீ குழம்பை ஊற்றியது போல் இருந்தது. இருப்பினும் சஷ்டி கூறியதுதான் உண்மை மீத்யுகாவின் விடாமுயற்சியே சஷ்டி இப்போது நடமாடுவதற்கு காரணம். 

ஒரு வழியாக சஷ்டியை லட்சுமியின் உதவியுடன் குளிக்க வைத்து, உணவை புகட்டினான். மாத்திரைகளை கொடுத்து விட்டு சாய்ந்து இருக்குமாறு கூறி அறை கதவை சாற்றிவிட்டு வந்தான். 

“லட்சுமி மா, அவ எங்க?” 

“அந்த பொண்ணா தம்பி?” 

“ஆமா மா.

“நான் வரும்போது வெளிய போனப்பா.” 

“சரி லட்சுமி மா நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. நான் சஷ்டிக்கு தேவையான திங்க்ஸ் வாங்கிட்டு வாரேன்.” 

“சரி தம்பி, நான் ஒண்ணு சொல்லுவேன் தப்பா எடுத்துக்காதீங்க.” 

“என்ன லட்சுமி மா சொல்லுங்க. நீங்க எனக்கு அம்மா மாதிரி தயங்காம சொல்லுங்க.” 

“அது வந்துப்பா,  அந்த பொண்ண ஆஸ்பிடல்ல வச்சு அறஞ்சி இருக்கக் கூடாது. ஒரு பொண்ண நாலு பேர் நடமாடுற இடத்துல வச்சி அப்படி அடிச்சிருக்கக் கூடாது. இதுக்கு அப்பறம் பார்த்து சூதானமா நடந்துக்கோப்பா.” 

“அந்த நேரம் கோவம் வந்துட்டு லட்சுமி மா, சஷ்டிய எனக்கு எவ்ளோ புடிக்கும்னு உங்களுக்கே தெரியும் தானே!” சஷ்டி செய்த லீலைக்கு மீத்யுகாவின் கன்னங்களுக்கு அளித்த விருந்தை எண்ணி அப்போதுதான் மன உளைச்சலுக்கு ஆளானான். 

வைத்தியர் கூறும்போது புரிந்து கொள்ளவில்லை. லட்சுமி,  தாயின் நிலையிலிருந்து கூறும்போது அவன் புத்திக்கு எட்டியது.

“தம்பி அந்த பொண்ணு வருதுப்பா.” என்று கூறிவிட்டு லட்சுமி சமையலறைக்குள் சென்றார். அதன் பிறகு இரண்டு மூன்று நாட்களாக சஷ்டி தூக்க மாத்திரையை உண்டு மீத்யுகா வீட்டிற்கு வருவதற்கு முன்னரே உறங்கிடுவாள். சஷ்டி எழும் முன் கிளம்பி தனது பணிக்கு கிளம்பிடுவாள். இப்படியே ஒரு நாள் திவ்யாவுடன் பேசிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.

விகுஷ்கியும் அவ்வேளை வீட்டிற்குள் இருக்க அவளை பின் தொடர்ந்தான். சஷ்டி தினமும் அண்ணியை கேட்டு விகுஷ்கியை அன்பு தொல்லை செய்வதை அவனால் தாங்க முடியவில்லை.

மீத்யுகா அவனது அறைக்குள் செல்ல, அவளை பின்னே சென்றான். 

மீத்யுகா அவளது தோளில் இருக்கும் கறுப்பு வர்ண புடவையின் ஊசியை கழட்டி விட்டு, கண்ணில் லேசாக கசிந்த கண் மையை சரி செய்து கொண்டிருந்தாள். 

ஒரு பெண் உள்ளே இருக்கிறாள். அனுமதி வாங்கிவிட்டு உள்ளே செல்ல வேண்டுமென்ற நாகரீகமின்றி கதவை திறந்து உள்ளேச் சென்றான். 

மீத்யுகா  அவனை கண்டவுடன், அவன் முகம் பார்க்க பிடிக்காமல் வெளியே செல்ல, அவள் கையை அவன் பற்றினான். “ஒரு நிமிஷம்!” என்றான் இதமான குரலில். 

“எதுக்கு?” என்றது திமிரேறிய அவள் குரல். ஒரு பக்கமாக புடவையின் முந்தானை சரி செய்தாள். அதை அவன் கவனிக்காமல் இல்லை.

“நான் உன்ன அடிச்சிருக்கக் கூடாது. நான் பண்ணது தப்பு ஸாரி. சஷ்டி இந்த மாதிரி விளையாடுவானு எதிர்பார்க்கல்ல. நீ போயிட்டு பேசிதான் சஷ்டி எழுந்து நடக்கிறதா டாக்டர் சொன்னாங்க. அதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.”  மீத்யுகா நிற்கும் அரைகுறை கோலம் அவன் உணர்ச்சிகளின் ஆர்மோனை கிளரிவிட்டிருந்தது. 

“நீங்க நெனைச்சா கொஞ்சுறதுக்கும், வேணாம்னா தூக்கி போடுறதுக்கும் நான் ஒண்ணும் நீங்க வளர்க்குற நாய் குட்டி கெடயாது. மைன்ட் இட்!” 

“ரொம்ப பண்ணாத, நானே இறங்கி வரப்போ உனக்கென்னவாம்?” என்று மன்னிப்பு கேட்பது கூட ஆணாதிக்கமாய் இருந்தது. 

“நீங்க விட்ட அடிய திருப்பி தரட்டுமா, அப்போதான் என் மனசு ஆரும். உங்கள மன்னிச்சதா அர்த்தம்.” என்று எகத்தாளமாய் செப்பினாள். 

“ஓவரா போற மீத்யுகா!” என்று சத்தமாக கூறினான். அதன் பிறகு வேகமாக அவளருகில் சென்று பலவந்தமாய் அவள் தலையை சரித்து உதட்டோடு உதட்டை பொருத்தினான். 

பெண்மை திக்கு திணறி அவனில் இருந்து விடைப்பெற்றாள். அவன் விலகிச் செல்ல, மீத்யுகா பழைய கணக்கை கழிப்பதற்காக அவளே மீண்டும் அவனை இழுத்து அணைக்க, இருவருக்குள்ளும் முத்த காண்டம்  நடந்தேறியது. 

முத்தமிட்ட மூச்சுக்காற்று

பட்டுப் பட்டு கெட்டுப் போனேன்

பக்கம் வந்து நிற்கும் போது

திட்டமிட்டு எட்டிப்போனேன்

உன்னை விரும்பாத பெண்ணே

எந்தன் நெஞ்செல்லாம் நஞ்சாகும்

அணைக்காதே பெண்ணே

எந்தன் அச்சங்கள் அச்சாகும்

விழியால் எனை நீ சிதைத்தாய் போதும்

 

இதழ் இணைவு முடிவடைய ஏதோ மூன்றாம் உலக மகா யுத்ததிற்கு ஆயத்தமாய் இருந்தது போல் இருவரின் ஈரிரண்டு கண்கள் கோபத்தை கக்கியது. 

***

உணர்வுகள் தொடரும்…