அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 14

IMG-20220619-WA0006-7a452923

அனல் நீ குளிர் நான் -அத்தியாயம் 14

An kn 14 

வீட்டிற்கு வந்த ஐரா குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்தாள். ஐராவின் அறை பால்கனியில் போடப்பட்ட சாய்வு இருக்கையில் அமர்ந்து அகிலோடு பேசிக் கொண்டிருந்தான் கெளதம்.

ஏதோ ரகசியமாய் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்க இவளுக்கு என்ன பேசுகின்றார்கள் என்று புரியாவிட்டாலும் ஏதோ இவளைப் பற்றித்தானோ என நினைத்து மெல்லமாய் தலையை துவட்டிக்கொண்டே திரைச் சீலைக்கு மறைந்து நின்றுக் கொண்டாள். என்ன பேசுகிறார்கள் என்பது இப்போது நன்றாகவே கேட்க முடிந்தது.

அவன் ஐராவின் ஆபிஸ் அறைக்கு தெரியாது போய்விட்ட கதையை சொல்லிக் கொண்டிருந்தான். 

‘ஓஹ் இதைத்தான் இவ்ளோ மெல்லமா சொல்றானா?’ திரும்பி உள்ளேச் செல்லப்பாரக்க, 

“ப்பா, இன்னிக்கு அங்க ஒரு அங்கிள் வந்திருந்தாங்க.”

“ஹ்ம்.”

“அன்னிக்கு அம்மாக்கு ரொம்ப பிடிக்கும்னு போட்டோல காட்டுனீங்களே அவங்களே தான்.” 

“ஓஹ் இஸ் இட்?’ தெரியதவனாய் கேட்டவன்,

‘சரி உங்கூட பேசினாங்களா கெளதம்?”

“நோ ப்பா. பேசிக்க சான்ஸ் கிடைக்கல, இல்லன்னா உங்களுக்கும் எங்க அம்மாவை பிடிக்குமானு கேட்டிருப்பேன்.”

ஐராவுக்கு அவன் பதிலில் பேச்சே எழவில்லை. தானாய் தன் கைகளை அவள் வாயில் வைத்துக் கொண்டாள்.

“நெக்ஸ்ட் டைம் கேட்கட்டுமாப்பா.” 

“ஹ்ம் கேட்கலாம் கெளதம். உனக்கு அவங்களை பிடிச்சிருக்கா கெளதம்?” 

“லூக்கிங் குட். ஹ்ம்… ஹண்ட்ஸம் மேன் டூ.”

“ஓஹ் இஸ் இட். பட் உனக்கு அவங்களை பிடிக்குமான்னு கேட்டேன்.”

” ஹ்ம்… ப்பா, ஐ நெவர் ஸ்போக்கன் டு ஹிம்,ஈவன் வித்தவுட் தட் ஹௌ கேன் ஐ டெல் தெட் ப்பா.”

“ஆமால்ல…”

“ஹ்ம்… “

“ஆனா நீ பேசுனா கண்டிப்பா உனக்கும் அவங்களைப் பிடிக்கும், அவங்களுக்கும் உன்னை பிடிக்கும் கெளதம். நீ வேணும்னா அப்பான்னு கூட கூப்பிடலாம் கெளதம்.”

“இட்ஸ் நொட் பொஸ்ஸிபல் ப்பா.’ 

“ஏன், என்னை கூப்பிடற போலயே பேசலாமே.”

“நோ வேய். இட்ஸ் நெவர் கொன்ன பி பேர். உன்ன மட்டும் தான் அப்பா சொல்வேன்.’

‘வேணும்னா டாடி சொல்லிக்கலாம். பிங்கி கூட அவங்க அப்பாவை அப்படித்தான் கூப்பிடுவா.” 

“ஹ்ம் உன் இஷ்டம் கெளதம்.’

‘அம்மா எங்க?”

“ஷீ இஸ் பாத்திங்.”

“ஓஹ்!”

‘இவ்ளோ நேரம் குளிக்க மாட்டாளே…’

‘சரி, நீ போய் தூங்கு கெளதம். டைமாச்சு. காலைல பேசலாம்.”

“ஓகேப்பா, குட்நைட்.”

கெளதம் அங்கேயே அலைபேசியை வைத்துவிட்டு வர ஐரா கட்டிலில் அமர்ந்திருந்தாள். பின்னோடு வந்து அவள் கழுத்தில் கையிட்டு முதுகில் சாய்ந்துக்கொண்டான் சின்னவன்.

“ம்மி இப்போதான் கால் கட் பண்ணுனாங்க, நீயும் பேசியிருக்கலாம் ம்மி.”

“நான் அப்புறமா பேசுறேன் கெளதம்.

“ப்பா இல்லாம எப்டிம்மி இருக்க? ஐ காண்ட் வித்தவுட்ஹிம் ம்மி. மிஸ் ஹிம் அ லோட்.” 

நேற்று இரவிலிருந்தே அதன் தாக்கத்தை அவன் முகத்திலும் பேச்சிலும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள். அவன் கன்னங்களை வருடிக்கொடுத்தவள், “அப்பாக்கு இப்படி அடிக்கடி வெளியூர் போகவேண்டியது வரும் கெளதம். சோ நீங்க அதுக்கு பழகித்தான் ஆகணும். சில வீட்ல அப்பாங்கெல்லாம் வருஷத்துக்கு ஒருதடவைன்னு தான் வருவாங்க. ஒவ்வருத்தங்க வேலை பொறுத்துதான். அப்பா இப்டி மந்த்லி ஒன்ஸ் ஓர் ட்வைஸ் போய்ட்டு வருவாங்க. ” 

“ஹ்ம்…”

இப்போ சில மாதங்களாகத்தானே இவர்களோடு அகில் இருக்கிறான்.

அதற்கு முன் முடிந்த இரண்டு வருடங்களும் இவர்கள் தனியாகத்தானே இருந்தார்கள். அதற்கு முன் அவனுக்கு நினைவில் இருக்கும் வயதில்லையே. ஆனாலும் அலைபேசியில் அவர்கள் கழித்த நிமிடங்களின் நிழல்களாய் பல படங்கள் உயிர்ப்பாய் இன்றும் இருக்கத் தானே செய்கிறது. அவற்றை பார்த்து அவ்வப்போது அகிலிடம் கேள்விகள் கேட்டு உயிரெடுப்பான்.

‘முன்ன நாம அப்பாக் கூட இல்லையே இப்போ கொஞ்ச நாளாதானே இருக்கோம்.’ எனக் கூற நினைத்தவள் மீண்டும் எதற்கு பழையவை என விட்டுவிட்டாள். 

இவர்களின் உரையாடல் கேட்டவளுக்கு அகிலின் மனதில் இருக்கும் எண்ணம் நன்றாகவே புரிந்தது.

தன் முடிவு அவன் வாழ்வை சரிப்படுத்தும் என்றிட அவனுக்காக அவன் விருப்பத்தை நிறைவேற்றலாம் என்ற எண்ணம் அவளுள் தளிர்விடத் துவங்கியது. அதற்காக இனி தன்னை தயார் படுத்திக்கொள்ள நினைத்தாள். 

அவள் முதுகிலேயே கெளதம் உறங்கியிருக்க மெல்லமாய் தலையணையில் அவனை உறங்க வைத்தவள் அவனை தட்டிக்கொடுத்துக் கொண்டே அவளும் அப்படியே உறங்கியிருந்தாள். 

அவள் எண்ணமும் அவன் எண்ணமும் ஒன்றா? அவனுக்காய் அவள் எடுக்கும் முடிவு யாருக்கு சாதகமாய் அமையும்?

பார்க்கலாம் இனி. 

***

கீதா மயூரியின் சூப்பர் மார்க்கெட்டில் வேலைக்குச் சேர்ந்து இன்றோடு ஒருமாதம் முடிந்திருந்தது.

அவள் சம்பளத்தினை வாங்கிக்கணக்கிற்கு மாற்றம் செய்திருந்தாள் மயூரி. மற்றவர்களுக்கான சம்பளப்பணம் கைக்கு கொடுத்து விடுவாள். ஆனாலும் கீதாவிற்கு கொடுத்து இருவருக்கும் இடையான தரத்தை காட்டிக் கொள்ள விரும்பவில்லை மயூரி.

“க்கா நைட் உங்க ட்ரீட் தான். நான் மதியமும் சாப்பிடாம வயிற எம்டியா வச்சிருக்கேன்.”

“ஓஹ் கண்டிப்பா.” என கீதா கூற,

“ஜனனியும் கூட்டிட்டு வாங்க மூனுபேருமா போகலாம்.” இரவு இவளே அவர்களை அழைத்துச் செல்ல வருவதாகவும் கூறினாள்.

இரவு இவள் அங்கே அவர்களது வீட்டுக்குச் செல்ல விஷ்வாவும் அவர்களோடு வாசலில் நின்றிருந்தான்.

அக்காவுக்கு தம்பியை அழைக்க ஏதோ ஒரு உறுத்தல், தம்பிக்கோ அக்காவோடு சென்று அவளை எப்படி செலவு செய்ய விடுவது உள்ளுக்குள் இருவரும் சிந்தனையில். இவளைக் காணவும், “இப்டி வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போறீங்க. சாப்பாட்டுக்கு இத்தனை அல்பம்னு தெரியாம போய்டுச்சு.” விஷ்வா கிண்டல் செய்தான்.

அவனை முறைத்தவள், “கீதாக்கா, உங்க தம்பி வர்றதுன்னா நான் இப்படியே போய்டுறேன். நீங்க அவர் கூடயே போய்க்கோங்க.” 

“அது என் இஷ்டம்.” கூறிக்கொண்டே வந்து அவள் வண்டியின் முன் இருக்கையில் ஏறி அமர்ந்தும் விட்டான். தந்தையின் காரை எடுத்துக்கொண்டு வந்திருந்தாள் மயூரி.

“இதுக்கு இவ்ளோ யோசிக்கணுமா சார், ரொம்பத்தான்.” என அவனைப்பார்த்துக் கேட்டாள். கீதாவோடு ஜனனியும் வந்து பின்னால் ஏறி அமர, பிரபல உணவகம் ஒன்றிற்கு சென்றனர். 

விஷ்வா முதல் ஆளாக இறங்கப்பார்க்க, பின்னிருந்தவர்கள் அறியாது அவன் கை பிடித்துக் கொண்டாள்.

“க்கா நீங்க ரெண்டு பேரும் உள்ள போய் நல்ல இடமா உட்காருங்க. ஆர்டர் கொடுத்துருங்க. ஏன்னா கொஞ்சம் டிலே பண்ணுவாங்க, சோ நான் வர்றப்ப சாப்பாடு ரெடியா இருக்கும்.”

“இப்போ நீ எங்க போகப் போற? முன்னால் இருந்த ஒரு கடையினை காட்டியவள், ‘அங்க ஒரு சாமான் வாங்க இருக்கு சீக்கிரமா வந்துர்றேன்.” 

“இந்நேரத்துக்கு தனியா போகாத. விஷ்வா நீ அவகூட போ. நாம உள்ள வெய்ட் பன்றோம்.” எனக் கூறி அவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள்.

“ஹேய் அவங்க அப்டி தனியா போய் பழக்கமில்லை. கூட போலாம் மயூரி.” 

“லெட் தெம் கோ விஷ். அவங்களை பிரீயா விடுங்க விஷ்வா. நான் கூப்பிடலைன்னா அவங்க வெளில போக நினைச்சிருந்தாலும் தயக்கமா இருந்திருக்கும்.” 

“உங்க விஷயத்துல தலையிடறது தப்பு தான், இந்த முறை மட்டும் சகிச்சுக்கோங்க.”

“உன்ன…” அவள் தலை பிடித்து ஆட்டினான். 

“ஆமா எங்கேயோ போகணும்னு காமிச்ச, போகலாமா? ” 

“அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒரு பத்து நிமிஷம் இப்டி இருந்துட்டு போகலாம்.”

“சரிதான்.” சற்று சாய்வாக இருக்கையை சரிசெய்து அமர்ந்துக் கொண்டான். 

“விஷ்வா நெக்ஸ்ட் மந்த் அண்ணா வரேன்னு சொல்லிருக்கான். அங்க சம்மர் ஹாலிடேஸ்ல.”

“ஓஹ் நல்லது தானே…”

“ஹ்ம். வீட்ல சின்னண்ணி பத்தி தெரியும்ல. அப்பா சொல்றாங்க அவங்களை தனி வீடு ஷிப்ட் பண்ணலாம்னு.”

“ஓஹ்!”

“அவனும் எனக்கு முன்ன கல்யாணம் பண்ணிட்டேன்னு வீட்ல என்ன நடந்தாலும் பேச பயப்படறான். பிரச்சினை பெருசாகும்னு. அவங்களுக்குள்ள அடிக்கடி இதுனால முட்டிக்குது. சோ எனக்கும் அதான் சரின்னு படுது.” 

“கரெக்ட் தான் மயூரி. அதுக்கு அண்ணா என்ன சொல்றான்?” 

“அவங்கிட்ட கேட்கவே இல்லை. அப்பா நானா சொல்ற போல பேச சொல்றாங்க.”

“எதுக்கு, அதெல்லாம் வேண்டாம். வீட்ட விட்டு அனுப்புறான்னு அண்ணி அதுக்கும் உங்களையே திட்டவா?அப்பாவையே பேச சொல்லுங்க மயூரி.” 

“நான் அண்ணி கூடயே பேசலாம்னு இருக்கேன்.”

“ஏதோ பண்ணுங்க. கண்டிப்பா நல்லது பண்ணி திட்டு வாங்கிக்க போறன்னு புரிது.” 

“அப்பா மேல் மாடிக்கு அவங்களை ஷிப்ட் பண்ணிக்க சொல்லலாம்னு சொன்னாங்க. நாந்தான் வேணாம்னு சொல்லிட்டேன். ஒரே வீட்டுக்குள்ள பார்க்குறவங்க கதகதையா சொல்வாங்க.

“ஆமாமா கண்டிப்பா அவங்க கதையெல்லாம் நீ கேட்பதான். அதானே இத்தனை நாள் இப்டி இருக்க.” 

“விஷ்வா…” 

“ஓகே ஓகே. ஒன்னும் சொல்லல.”

சரி, அவங்க ஓகே சொல்லிட்டாங்கன்னா, வீடு நீங்க வாங்கி கொடுக்கப் போறீங்களா?” 

“அப்பா அண்ணாக்கும் இவனுக்கும்னு ஒரு அமௌன்ட் வச்சிருக்காங்கலாம். சோ அதுக்குள்ள வீடு பாருன்னு சொல்லலாம் சொல்ராங்க.” 

இந்த வீடு அவங்களுக்கு இப்போதைக்கு பங்கு போட்டு கொடுக்கிப்போறதில்லை. அம்மா அப்பா இல்லன்னு ஆனதுக்கப்புறம் ரெண்டு பேருக்கும்னு சொல்வாங்கலாம்.” 

“ஹ்ம் அதுவும் கரெக்ட் தான். எதுவும் நம்பி செய்ய முடியாதுதான்.” 

“அப்போ சூப்பர் மார்க்கெட்? ” 

“அது எந்து.” சொல்லிச் சிரித்தாள். 

“ஹா ஹா ஹா…” அவனும் சேர்ந்துக்கொண்டான். கேடி நீ எப்டி மொத்தமா எடுத்துட்ட.” 

“ச்சே ச்சே அப்டில்லாம் இல்ல. இப்போ த்ரீ இயர்ஸ் தான் என்னோடது. அதுக்கு முன்ன இருந்தது அதோட லாபம் மொத்தம் ரெண்டா பிரிச்சுதான் அவங்களுக்கு கொடுத்திரு இருக்கது என் ஷேர்ல போட்ட திங்ஸ். அதோட அப்பாவோட ஒரு ஷேர்க்காங்க. இப்போ சூப்பர்மார்க்கெட். அதனோட வருமானம் மாசாமாசம் அவங்க அக்கௌன்ட்க்கு போய்டும்.” 

“ஹ்ம்… குட்.’

“சரி அண்ணிகூட பேசிட்டு என்ன சொல்றாங்க சொல்லு. அப்றம் சேர்ந்தே வீடு பார்க்கலாம்.” 

“ஹ்ம்’ புன்னகைத்தாள்.’சரி போலாம் டைமாச்சு.”

இருவருமாக இறங்கி அவர்கள் இருக்குமிடம் சென்றார்கள். 

அம்மாவும் மகளும் ஒன்றாய் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“நாம இருந்திருந்தா இப்டி பேசிருப்பாங்களா?” 

“அப்போ வா இன்னும் கொஞ்சம் லேட்டா போகலாம்.” 

“லூசு, இனி லேட் ஆனா கண்டுபிடிச்சிருவாங்க.” 

அவர்கள் அமரவும் உணவை கொண்டுவந்து பரிமாறவும் சரியாக இருந்தது.

“மயூரிக்கா எப்டி கரெக்டா டைமிங்ல வந்துட்டீங்க?” ஜனனி கேட்டாள்.

“அவ முன்னமே சர்வர்கிட்ட சொல்லிருப்பா.” 

“ஐயோ, இப்போதானே உங்களை பார்க்குறேன்.” 

“நீங்கதானே லேட்டா கொண்டு வரச் சொன்னீங்க மேம். அதான் நீங்க உள்ள வர்றதை பார்த்துட்டு எடுத்துட்டு வரேன்.”

“அடிப்பாவி”கீதா சொல்லிச் சிரிக்க, 

“பொய் சொல்றார் மை லார்ட்.’

‘யோ நான் எப்போச் சொன்னேன்.” 

“இவங்க உள்ள வந்து உட்காரவும் நான் இவங்ககிட்ட ஆர்டர் எடுக்க வந்தேனா, அப்போ ‘தம்பி இங்க வாப்பா’ அப்டின்னு நீங்க தானே கூப்பிட்டீங்க மேம்.” 

‘அடப்பாவி என்னம்மா புழுகுறான்.’

“ப்ரோமிஸ்ஸா நான் சொல்லல விஷ்.” அவனை பாவமாய் பார்த்துக் கொண்டு கூற,

“சாரிங்க, இவங்களுக்கு அப்பப்ப என்ன பேசுறாங்கன்னு மறந்துருவாங்க.” 

“யோ! இதெல்லாம் நல்லாவே இல்லை சொல்லிட்டேன்.”

“ஓகே ஓகே. நீ சொல்லல. சாப்பிடு முதல்ல. இதுக்குத் தானே இத்தன அலம்பல்.” 

கிண்டலும் கேலியுமாய் அந்நேரத்தினை இனிதாக்கி வைத்தனர் நண்பர்கள் இருவரும். சாப்பிட்டு முடிக்கவும்,பில் கொண்டுவந்து வைக்க, 

“விஷ்.” என அங்கிருந்த ஓரிடம் காட்டி “எனக்கும் ஜனனிக்கும் ஐஸ்கிரீம் ப்ளீஸ்.” எனக் கேட்க,எழுந்துச் சென்றான்.

அவன் போகவும் எழுந்துக் கொண்டவள்,”நாம வெளில வெய்ட் பண்ணலாம்க்கா விஷ்வா அங்க வரட்டும்.”

“சரிடா.” என கீதா காசை பில்லோடு வைத்துவிட்டு மூவருமாக சென்றார்கள்.

விஷ்வா ஐஸ்கிரீம் வாங்கி வர வண்டியில் சாப்பிட்டுக்கொண்டே வீட்டுக்கு கிளம்பினார்கள். 

***

நல்லிரவைத் தாண்டி நேரம் ஓடிக் கொண்டிருந்தது. நீள் இருக்கையில் கால் இரண்டையும் நீட்டி ஒன்றின் மேல் ஒன்று வைத்து ஒரு கை தலைக்கு தலையணையாய், மறு கை நெஞ்சோடு வைத்து சாய்ந்து அமர்ந்திருந்தான் அகில்.

வானில் லட்சங்களில் சிமிட்டிக் கொண்டு திரியும் தாரகைகளை பார்த்துக்கொண்டு எண்ண முற்பட்டானோ அவைகளாய் மனம் நிறைந்த அவள் எண்ணங்களை எண்ண முற்பட்டானோ அவனே அறிவான்.

‘எனக்கு நீன்னு கடவுள் சொல்லியிருந்தால் எனக்கு கிடைக்காமல் போய்விடுமா என்ன?’

‘இத்தனை வருடங்களின் பின்னும் எனக்கானதாய் இருந்திருந்தால் எனக்கு கிடைக்கும் தானே…’ 

தன் இன்பங்கள் எல்லாம் எதைச் சுற்றி? அவன் மகிழ்ந்திருந்த தருணங்களை நினைவு படுத்த, ‘மொத்தத்திலும் அவள் இன்றிய நிகழ்வுகளே இல்லை. இத்தனை உயிராய் இருப்பவள் ஏனோ மனம் புரியாது மூன்றாம் ஒருவராய் என் வாழ்வில் இன்னுமே இருக்கிறாள்?’ 

‘உனக்கே இப்போதான் தெரிது. அவளுக்கும் அப்படித்தானே.’ அவன் மனமே அவனைக் சாடியது .

‘தானாய் எடுக்கும் முடிவுகள் எப்போதும் அவளை வறுத்தக் கூடாது என்பதனால் தானே சிரமப்பட்டு மனதுக்குள் பூட்டிட்டு வாழ்ந்துக் கொண்டிருக்கிறேன். அவளாகவே வரவேண்டும் என்றுதானே காத்திருக்கிறேன்.’ 

‘இத்தனை மாதங்கள் பொறுத்தாகி விட்டது. இன்னும் ஒரு மாதம் தானே. ஆனாலும் ஐராவின் முடிவு என்ன கொண்டு சேர்க்குமோ?’

‘அவளுக்கான சந்தோஷத்தை அவளே தேர்ந்தெடுக்கட்டும். அவள் பாதை சரியாகிவிட்டால் எங்கள் வாழ்க்கை சரிப்படுத்திக் கொள்ளலாம்.’என்ற முடிவே அகிலின் மனதில். 

நியூயோர்க் போய்தான் பாடணுமா என்ன, இங்க சிங்கப்பூர்லயும் பாடலாம். 

ஏ, ஆர் ரஹ்மானின் பாடல் அன்று ‘ஊர் சுத்தப்போனமா என்ஜோய் பண்ணுனோமான்னு இல்லாம என்னாமா உருகுறான் சூர்யா.’ எனக் கிண்டல் செய்தது நினைவுக்கு வந்ததோடு இன்று அவ்வரிகள் தனக்குள் எத்தனை தாக்கத்தை ஏற்படுத்திகிறது என வியந்து போனான். அவள் நினைவுகள் இப்பொழுதெல்லாம் அவனுள் ஏதோ மாற்றம் கொண்டு சேர்க்கிறது. 

‘பிரிவுகள்தான் எமை பிணைக்கின்றது போல. அன்று வந்த அழைப்பில் அவள் எதிர்ப் பார்ப்பினை தெரிந்ததிலிருந்து இவனுள் குழப்பங்கள். சரியாக வருமா? இப்போதும் என்னுள் ஏனோ இதே எண்ணம்?’

ஏதோ நலமாய் யாவும் நடக்க வேண்டும்.’மனதில் வேண்டினான்.

திரையில் மெசேஜ் வந்ததற்கான ஒலி எழுப்ப எடுத்துப்பார்த்தான். 

ஐராதான் அனுப்பியிருந்தாள். அவளின் கட்டிலில் கெளதம் உறங்கியிருக்க அதை போட்டோ அனுப்பியிருந்தாள். 

உடனே கால் செய்தான்.”மேடம் நிம்மதியா தூங்கப்போறீங்க?”

“யெஸ்.”

“எழுந்து அங்கேப்போகனும் சொல்வான்.”

“இடியட் உன் வாயில நல்லா வார்த்தையே வராதா? நானே பாவம்.”

“ஹா ஹா ஹா…”

“இதுக்கு முன்ன அவன் எங்கூடத்தான் தூங்குனான்.”

“நான் இல்லன்னு சொல்லவே இல்லை.’

சரி அதவிடு. இப்போ எதுக்கு அப்செட்டா இருக்க? “

“அதெல்லாம் ஏதும் இல்ல.கொஞ்சமா அசந்து தூங்கிட்டேன்.”

“இன்னிக்கு மீட்டிங் பத்தி எதுமே சொல்லல நீ. “

“நீ கேக்கவே இல்லை.”

“சரி சொல்லுங்க மிஸ் ஐரா.”

“தேங்க்ஸ்.”

“எதுக்கு? “

“மீட்டிங் அரேஞ் பண்ணுனதுக்கு.”

“ஓஹ்!”

“பேசுனா எல்லாம் சரியாகும் நினைக்குறேன் அகி.”

“ஹ்ம் கண்டிப்பா.”

“ஹ்ம், ஹோப் போர் குட்.”

“எவெரிதிங் வில் பி ஓகே ஐரா. நோ வொரிஸ்.”

“ஆர் யூ ஹாப்பி வித் மை அன்செர்?”

“மச் தேன் யூ.”கூறினான் அகில்.

அவன் பதில் அவளுக்கு ஏதோ செய்ய,”ஓகே. குட் னைட்.”எனக்கூறி துண்டித்தாள் அழைப்பின் பின் மீண்டும் தலையணையில் தலை வைத்தவளுக்கு உறக்கம் ஏனோ அண்டவே இல்லை.

நேற்று அவன் வாசனை இன்றோ அவன் நேசத்தின் அணை அவள் உறக்கத்தினை களவாடியது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!