அனல் பார்வை 14🔥

அனல் பார்வை 14🔥

“இஃப் யூ டோன்ட் மைன்ட், உங்க பின்கழுத்துல இருக்குற டாட்டூ சின்னத்தோட அர்த்தம் என்னன்னு நான் தெரிஞ்சிக்கலாமா?” என்று தாரக் கேட்க, முதலில் அதிர்ந்த அக்னி பின், “தெரியாது.” என்று சொல்ல, “ஓ…”  என்று முடித்துக் கொண்டவனின் பார்வை அங்கிருந்த ஒரு ஓவியத்தில் பதிந்தது.

“யூ க்னோ வட் ப்ரோ? நான் எல்-டேரேடோ பத்தின தேடல்ல தான் இருக்கேன். உங்க கழுத்துல இருக்குற சின்னமும், நீங்க வரைஞ்சிருக்க இந்த படங்களும் கூட அதோட சம்மந்தப்பட்டதா இருக்கு.” என்று சந்தேகமாக தாரக் சொல்ல, “புல்ஷீட்! இனாஃப் தாரக்! உன் புராணத்தை ஆரம்பிக்காத! எத்தனை நாளைக்கு இல்லாத ஒன்ன இருக்குற மாதிரியே பேசிக்கிட்டு இருக்க போற?” என்று சலித்துக்கொண்டாள் அருவி.

அக்னியோ ஏதோ சொல்ல வர, அவன் கையை பிடித்துக்கொண்ட ராகவ், “எக்ஸ்க்யூஸ் மீ…” என்றவாறு அவனை இழுத்துக்கொண்டு சமையலறைக்குள் நுழைந்தான். 

“ராகு, என்னை எதுக்கு இழுத்துட்டு வந்த?” என்று அக்னி தன் கையை அவன் பிடியிலிருந்து உருவியவாறு கேட்க, “ஆகு, இப்போ நீ என்ன சொல்ல போனேன்னு எனக்கு நல்லாவே தெரியும். பட், அதை விட முட்டாள்தனம் எதுவுமேயில்லை. அந்த பையன் எக்ஸ்ப்ளோரர் டா, அவங்க தேடுற ஒரு விஷயம் உன்கிட்ட இருக்குன்னு தெரிஞ்சாலே உன்னை விட மாட்டாங்க. உனக்கு அந்த நகரத்தை பத்தி தெரியும்னு எல்லோர்கிட்டேயும் சொல்றதை நிறுத்து! அது உனக்கு பாதுகாப்பு கிடையாது.” என்று காட்டமாக சொன்னான் ராகவ்.

ராகவ் சொல்ல வருவது புரிந்து தீவிர சிந்தனையில் புருவ முடிச்சுகளுடன் நின்றிருந்த அக்னி, “மஹி…” என்ற குரலில் அடித்து பிடித்து தன்னவளை நோக்கி ஓடினான்.

“மஹி, வெளில ஒரு முக்கியமான வேலை இருக்கு. என் கூட வா! சாகு நீயும் தான்.” என்று அவள் பாட்டிற்கு தொலைப்பேசியை நோண்டிக்கொண்டே பேசிவிட்டு வெளியே செல்ல எத்தனிக்க, “ஹேய் ராங்கி! என்னை எதுக்கு கூப்பிடுற? நம்ப முடியவில்லையே…” என்று சந்தேகமாக இழுத்தான் ராகவ்.

“சீக்கிரம் அரு, டைம் ஆச்சு…” என்று தாரக்கும் அவசரப்படுத்த, “எங்க போறோம் தீ?” என்று புரியாமல் கேட்டான் அக்னி.

“அதான் இப்போ பார்த்தோம்ல, காட்டை அழிக்கிறதை எதிர்த்து நடக்குற போராட்டத்துக்கு தான். சோஷியல் மீடியால டேக் பண்ணி போட்டாலோ, அதை பத்தி பேசி வீடியோ பண்ணி போட்டாலோ எதுவும் மாற போறதில்லை. களத்துல இறங்கி நாம போராடுனா மட்டும் தான் விடிவுகாலம் இருக்கு. போராட்டம் சாதகமா அமையுதோ, இல்லையோ? நெஞ்சை நிமிர்த்திகிட்டு எதிர்த்து நின்னு போராடனும். வளவளன்னு பேசாம சீக்கிரம் கிளம்புங்க. மஹி, நீ என் கூட வா!” என்றுவிட்டு அக்னியை இழுத்துக்கொண்டு அவள் செல்ல, ராகவ்வும், தாரக்கும் ஒருவரையொருவர் பாவமாக பார்த்துவிட்டு அவளின் பின்னாலே சென்றனர்.

மக்கள் ஒன்று சேர்ந்து கையில் பல பதாதைகளை தாங்கிய வண்ணம் அந்த நிறுவனத்தின் முன் அமர்ந்து போராட்டம் செய்துக் கொண்டிருக்க, அங்கு தன் வண்டியை நிறுத்திய அருவி, அக்னியை அழைத்துக்கொண்டு சென்று அந்த கூட்டத்தின் நடுவில் அமர்ந்துக் கொண்டாள்.

சுற்றி பல பேர் அந்த திட்டத்தை எதிர்த்து பதாதைகளை தாங்கிக்கொண்டு கத்தி கூச்சலிட்டவாறு அமர்ந்திருக்க, அருவியும் அவர்களுக்கு நிகராக கத்தி கூச்சலிட, அக்னியோ அடக்கப்பட்ட கோபத்துடன் அமர்ந்திருந்தான்.

ஒருபக்கம் வளங்களை அழித்து பணம் சம்பாதிக்கும் மக்களை நினைத்து கோபம் அதிகரித்தாலும், தன்னலம் பார்க்காது இதை எதிர்த்து போராடும் மக்களை நினைத்து அவனுக்கு சற்று பெருமையாகவே இருந்தது. இதில் ராகவ்வும், தாரக்கும் தான் பாவம் போல் முகத்தை வைத்து அமர்ந்திருந்தனர். அருவியின் வார்த்தையை மீறி அவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. பின் அவளின் விரிவுரையை யார் கேட்பது?

எப்போது போராட்டம் தீவிரமாகும்? எப்போது கலவரம் வெடிக்குமோ? என்ற ஒரு பீதியிலேயே அவர்கள் அமர்ந்திருக்க, அடுத்த சில நிமிடங்களிலே சமூகத்தில் உயர்புள்ளியான அந்நிறுவனத்தின் நிர்வாகியின் கட்டளைக்கிணங்க போலிஸ் அதிகாரிகள் வந்து மக்களை அப்புறப்படுத்த முயன்றனர். இதில் அந்நாட்டு அரசாங்கத்தின் துணை வேறு!

அதிகாரிகளின் நடவடிக்கையில் மக்களுக்கு கோபம் பெருக, அவர்களை தாண்டி அந்நிறுவனத்தினுள் மக்கள் நுழைய முற்பட்ட அடுத்தநொடி கலவரம் அதிகாரிகளின் தாக்குதலுடன் பெரிதாக வெடித்தது.

காவலர்களின் தாக்குதலில் மக்கள் அவர்களை தாண்டி நிறுவனத்திற்குள் செல்ல முற்பட்டாலும், சில பேர் அங்கிருந்து ஓட முயற்சிக்க, அக்னியின் கையை இறுக்கிப் பிடித்த அருவியும், “மஹி, வா நாம போயிரலாம்.” என்றவாறு அங்கிருந்து நகர அவனை பலம் கொண்டு இழுத்தாள்.

அதே இடத்தில் அசையாது நின்றவன், “தீ, அவங்க மக்களை தாக்குறாங்க. இது ரொம்ப தப்பு…” என்றவாறு அவர்களை நோக்கி செல்ல முற்பட, அவனை பிடித்து நிறுத்தியவள், “இது என்ன சினிமாவா? இங்க போலிஸ் அ அ எதிர்த்து ஏதாச்சும் பண்ணா, உன்னை சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பாங்க. இப்போ நாம கிளம்புறது தான் நமக்கு சேஃப்.” என்றுவிட்டு தன் வண்டியை அங்கேயே போட்டுவிட்டு, அக்னியை இழுத்துக் கொண்டு அங்கிருந்து ஓடினாள்.

“ஆத்தீ… என்ன டா துப்பாக்கிய நீட்டுறானுங்க. டேய் அக்னி! என்னை தனியா விட்டுட்டு பொண்ணு பின்னாடி போயிட்டியே டா பாவி!” என்று அவனை வறுத்தெடுத்தவாறு கால் போன போக்கில் ராகவ் ஓட, “அய்யய்யோ! ப்ரோ, என்னையும் கூட்டிட்டு போங்க.” என்று அவனின் பின்னாலே ஓடினான் தாரக்.

ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அக்னியை இழுத்துக்கொண்டு வந்த அருவி, அங்கிருந்த ஒரு பூங்காவிற்குள் இழுத்துச் சென்று மூச்சுவாங்கியவாறு நிற்க, அக்னியோ மக்கள் தன்முன் தாக்கப்படுவதை கையாலாகாத தனத்துடன் பார்த்து ஓடி வந்ததை நினைத்து உச்சகட்ட ஆத்திரத்தில் இருந்தான்.

“மஹி…” என்றவாறு முட்டியில் கைகுற்றி அருவி வேக மூச்சுக்களை இட, திடீரென தன் முன் வந்து நின்ற சில காலடிகளில் சட்டென நிமிர்ந்தாள். அவள் முன் சில வெள்ளைக்கார இளைஞர்கள் ஏளனச்சிரிப்புடன் நின்றிருக்க, அவர்களை உற்றுப்பார்த்தவளுக்கு அப்போது தான் அதிலிருந்த ஒருவன் யாரென்று புரிந்தது.

அக்னியோ அரவம் உணராது தான் கண்ட காட்சியில் உண்டான கோபத்தை அடக்கி தரையை முறைத்தவாறு நின்றிருக்க, ‘இவனா?’ என்று சலிப்பாக நினைத்தவள், அந்த இளைஞர்களை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்தாள்.

இரண்டு மாதத்திற்கு முன் பப்பில் மது அருந்தி உச்சகட்ட போதையில் அருவி இருந்தாலும், ஏதோ தவறான தொடுதலை உணர்ந்து தன்னை தொட்டவனை கையிலிருந்த மது போத்தலாலே ஓங்கி அடித்திருந்தாள். போதை தெளிந்ததும் தாரக்கே அவளிடம் அந்த கலவரத்தை பற்றி சொல்லியிருக்க, இப்போது தான் அடித்தவனை பார்த்ததும் அவளுக்கு அன்று நடந்தது நியாபகத்திற்கு வந்தது.

“ஓஹோ பேபி! யூ ரிமெம்பர் மீ? நான் கூட நடந்ததை மறந்திருப்பியோன்னு நினைச்சேன். ஏன்னா, என்னால உன்னை மறக்கவே முடியல.” என்று அருவியிடம் அன்று அடி வாங்கிய அந்த வெள்ளைக்காரன் சொல்ல,

“இன்னைக்கு நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன் டியூட். வாவ்! ஷெல் வீ ஹேவ் டூநைட் பேபி?” என்று கேட்டவாறு இன்னொருவன் அவளருகில் வர, அருவியோ அழுத்தமாக அவர்களை பார்த்திருந்தாலும் உள்ளுக்குள் உதறலெடுத்தது என்னவோ உண்மை தான்.

அவளுடைய கைகள் தானாகவே அக்னியின் இடது முழங்கையை இறுகப்பிடித்துக் கொள்ள, அவளின் தொடுதலில் சிந்தனையிலிருந்து விடுபட்ட அக்னி, அப்போது தான் அந்த இளைஞர்களை கேள்வியாக நோக்கினான். அவர்களோ அக்னியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

“லுக், மறுபடியும் என்கிட்ட வாங்கிக் கட்டிக்காத!  என் மேல உன் சுண்டுவிரல் பட்டாலும் உன்னை சும்மாவே விடமாட்டேன். யூ ப்ளடி ****…” என்று அவளும் ஆங்கிலத்தில் திட்ட, “ஹாஹாஹா… இஸ் இட்?” என்றவாறு அவளை நெருங்கினான் அந்த இளைஞன்.

அக்னிக்கோ அவர்கள் பேசும் ஆங்கில மொழி சுத்தமாக புரியவில்லை. அருவியோ, “மஹி… மஹி…” என்றவாறு அவனின் கையை மேலும் இறுகப்பற்றிக் கொண்டவாறு அவனின் முதுகுக்குப் பின்னாடி போக, தன்னவளை அவன் தொட வருவதை பார்த்த அக்னிக்கு கோபத்தில் நரம்புகள் புடைத்துக் கிளம்பியது.

ஏற்கனவே நடந்த கலவரத்தின் விளைவாக கோபத்தின் உச்சியில் இருந்தவனுக்கு இப்போது இவர்களின் செயல் மேலும் எரிகின்ற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போலிருந்தது. அருவியை தொட குறுக்கே நின்றிருந்த அக்னியை நகர்த்துவதற்காக அந்த இளைஞன் அக்னியின் மார்பில் கை வைத்ததும் தான் தாமதம், கை எலும்புகள் உடையும் சத்தம் காதில் கேட்க, “ஆஆ…” என்று வலியில் அலறினான் அவன்.

அக்னி அருவியின் கையை உதறியதில் அவள் அவனை மிரட்சியாக பார்க்க, தன் வலது கையிலிருந்த தங்கக்காப்பை இறக்கி விட்டவன், அவர்களை அடி வெளுக்க ஆரம்பித்தான். அதுவும், கண்கள் சிவந்து தன் மொத்த கோபத்தையும் அவன் அவர்கள் மேல் காட்ட, அவனின்  ஆக்ரோஷத்தில் அருவியே ஒருநிமிடம் பதறிவிட்டாள்.

ஓடிச்சென்று அருவி அவனை பிடித்து இழுக்க, “தள்ளி போ!” என்று ஸ்பானியன் மொழியில் உச்ச தொனியில் கத்திய அக்னி, ஒருவனின் தலையை பிடித்து அங்கிருந்த மரத்தில் மோத, மற்றவர்களோ பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டனர்.

ஒருகட்டத்திற்கு மேல் முடியாமல், “மஹி போதும்!” என்று அருவி கத்தவுமே தன் செயலை நிறுத்தியவன் சிவந்த கண்களுடன் அடக்கப்பட்ட கோபத்துடன் அவளை ஏறிட்டு பார்க்க, அவனை தாவி அணைத்த அருவி, “பயமா இருக்கு மஹி, போதும் ப்ளீஸ்…” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.

அவளின் குரலிலே அவளின் பயம் அப்பட்டமாக தெரிய, ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவன், அவளை தன்னிடமிருந்து விலக்கி விறுவிறுவென முன்னே நடந்தான்.

ஏற்கனவே போராட்டம், கலவரம் என்று அந்த பிரதேசத்தை சுற்றி அதிக மக்கள் இல்லாமல் போனதில் நிம்மதி பெருமூச்சுவிட்டவளுக்கு இத்தனைநாள் மென்மையாக பார்த்துவிட்ட அவனை இந்த அவதாரத்தில் பார்த்ததும் சற்று உடல் நடுங்கத்தான் செய்தது.

அதன்பிறகு வந்த நாட்கள் அருவி ராகவ்வை தொடர்பு கொண்டு அக்னியுடன் பேச முயற்சிக்க, அவன் பேசினால் தானே! காட்டை அழித்து அந்த நிறுவனம் கட்டிடம் கட்டப்போகும் திட்டத்தில் அரசாங்கத்தின் பங்களிப்பு இருப்பதால் மக்களின் போராட்டங்கள், கலவரத்தை கட்டுப்படுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பித்துவிட, அருவியால் தன்னவனை நேரில் சென்றும் பார்க்க முடியவில்லை.

மூன்றுநாட்கள் கழித்து,

ஊரடங்கு சட்டத்தை நீக்கியதும் அவள் முதல் வேலையாக சென்று நின்றது என்னவோ ராகவ்வின் வீட்டின் முன் தான். கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள், சுற்றி யாரையும் கண்டுக்காது அவள் பாட்டிற்கு அக்னியின் அறைக்குள் நுழைய, சோஃபாவில் அமர்ந்திருந்த ராகவ்வின் மாமா ராகேஷ் தான், “மருமகனே! யாரு அந்த பொண்ணு? அது பாட்டுக்கு அந்த பையனோட ரூம்க்குள்ள போகுது.” என்று அதிர்ந்து போய் கேட்டார்.

“ஹிஹிஹி… மாமா, அது அவனோட ஃப்ரென்ட்.” என்று ராகவ் அசடுவழிந்தவாறு சொல்ல, “ஃப்ரென்டா? கேர்ள் ஃப்ரென்டா?” என்று கேட்டவர், “நீயும் இந்த ஊருல இத்தனை வருஷமா இருக்க. பட், வந்த கொஞ்ச நாள்லயே அந்த பையனுக்கு கேர்ள் ஃப்ரென்டா?” என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார் அவர்.

“மாமா…” என்று அவன் முறைத்ததில், இப்போது “ஹிஹிஹி…” என்று அசடுவழிவது அவருடைய முறையாயிற்று.

உள்ளே நுழைந்த அருவி, அறைக்குள் தனக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றிருந்தவனை ஓடிச்சென்று பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள, தான் வரைந்த ஓவியத்திற்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தவனின் கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

தனது மார்போடு அழுத்தி பிடித்திருந்த கைகளை குனிந்து பார்த்தவனுக்கு தன்னவளின் ஸ்பரிசம் நன்றாக புரிய, அவளின் கையை பிடித்து தன் முன்னால் இழுத்து நிறுத்தினான்.

அவள் அவனின் முன் வந்ததும் தான் தாமதம் அடுத்தநொடி அவன் கன்னத்தில் அருவி அறைந்திருக்க, இதை சற்றும் எதிர்ப்பார்க்காதவன் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு அவளை புரியாது நோக்கினான்.

“என்ன டா நினைச்சிக்கிட்டு இருக்க உன் மனசுல? எதுக்கு என் கூட பேசாம இருந்த? எத்தனை தடவை அந்த சாகுக்கு கோல் பண்ணி உன்கிட்ட கொடுக்க சொன்னேன். பேச முடியாதுன்னு சொன்னியாமே… ஏன்னு சொல்லுடா.” என்று அவள் கத்த, அவனோ எதுவும் பேசாது இத்தனை நேரம் தான் வர்ணம் தீட்டிக் கொண்டிருந்த தன் ஓவியத்தை பார்த்தான்.

தான் பேசுவதை கண்டுக்காது அவன் பார்வையை திருப்பியதில் கடுப்பானவள், “இப்போ கூட ஒரு வார்த்தை பேசாத! ரொம்ப திமிர்டா உன…” என்று திட்டியவாறு அவனின் பார்வை சென்ற திசையை பார்த்தவளது பேச்சு தடைப்பட்டு, கண்கள் சாரசர் போல் விரிந்தது. அது அவளுடைய முகம் தான்.

கண்களில் சந்தோஷம் மின்ன, முத்துப்பற்கள் தெரிய அருவி உற்சாகமாக சிரிப்பது போலான அவன் வரைந்திருந்த ஓவியத்தை பார்த்தவளுக்கு ‘அது தான் தானா?’ என்ற சந்தேகம் எழ, வாய்விட்டே கேட்டு விட்டாள்.

அந்த ஓவியத்தை நெருங்கியவள், அதை லேசாக வருடியவாறு, “நிஜமாவே நான் இவ்வளவு அழகா?” என்று ஆச்சரியமாக கேட்க, அதில் மெல்லிதாக சிரித்துக் கொண்டான் அவன். 

அடுத்தநொடி ஓடிவந்து அவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவனை தாவி அணைத்த அருவி, “உன்கூட பேசாம என்னால இருக்க முடியல மஹி. ரொம்ப மிஸ் பண்ணேன். அன்னைக்கு என்னால தான் நீ அவங்க கூட சண்டை போட வேண்டியதா போச்சின்னு கோபமா இருக்கியா? அவன் என்னை தப்பா தொட்டதால தான் நான் அவனை அடிச்சேன். அந்த கோபத்துல தான் ஆளுங்கள கூட்டிட்டு வந்து பிரச்சினை பண்ணான். ஆனா, நீ ஏன் டா என் கூட பேசாம இருந்த? இப்படி இருக்காத மஹி, இட்ஸ் ஹர்ட்டிங்.”

என்று அவனின் கழுத்துவளைவில் முகத்தை புதைத்து குரல் கமர பேசிக்கொண்டே போக, அக்னி தான் உறைந்து போய் நின்றிருந்தான்.

ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!