அன்புடைய ஆதிக்கமே 19

அன்புடைய ஆதிக்கமே 19

அத்தியாயம் 19

 

          Mercedes  பென்ஸ் c300  வெண்மை நிற கார் ஒன்று ஜெயக்குமார் பணிபுரியும் கல்லூரியின் முதல்வர் அறைக்கு முன் வழுக்கிக்கொண்டு வந்து நின்றது. அந்த காரிலிருந்து ஐம்பது வயது மதிக்கத்தக்க தமிழ் சினிமாக்களில் வருகிற ஹை ப்ரொபைல் வில்லன் போன்ற தோற்றத்துடன் வெண்மை நிற வேட்டி சட்டை அணிந்த ஒருவர் இறங்கினார்…

               விறுவிறுவென்று முதல்வர் அறையில் அந்த வில்லன் தோற்றமுடையவர்  நுழைந்த போது ப்ரின்சிபாலும் ஜெயக்குமார் பிடித்து கொடுத்த மாணவனும் அலெர்ட் ஆறுமுகம் மட்டுமே இருந்தனர். ஜெயக்குமாரை அந்த இடத்தை விட்டு காலி செய்து அரை மணி நேரத்துக்கும் மேல்  ஆகிருந்தது…

                அலெர்ட் ஆறுமுகத்துக்கு ஜெயக்குமார் அந்த மாணவனை அடித்ததில் இருந்தே உள்ளே ஒரே வெடவெடப்பு தான். அடிவாங்கிய பையன் பெரிய இடம் என்று தெரியுமாததால் தேவையில்லாத பிரச்சனையில் தன் நண்பனின் மருமகன் தலையிட்டு விட்டானே என்று படபடப்புடன் தான் இருந்தார். அதனால் தான் ப்ரின்சிபாலிடம் கண்ணை காட்டி அந்த மாணவனின் தந்தை வருவதற்குள் இந்த இடத்திலிருந்து ஜெயக்குமாரை அனுப்பி வைக்குமாறு குறிப்பால் உணர்த்தினார். அதை புரிந்துக்கொண்ட ப்ரின்சிபாலும் அவனை அனுப்பி வைத்துவிட்டார்…

             அந்த மாணவனின் தந்தை பெயர் கந்தசாமி. பெரும் பணமும் ஆள் பலமும் படைத்தவர். கிரானைட் தொழில்,ரியல் எஸ்டேட்,கட்டிட தொழில் என்று அனைத்திலும் கொடி கட்டி பறப்பவர். அது மட்டும் இல்லாமல் கல்லூரியின் மேனேஜ்மென்ட் உடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்.

   கந்தசாமி உள்ளே வந்தவுடன் எழுந்து நின்று வரவேற்ற பிரின்சிபால் நடந்த அனைத்து விஷயத்தையும் அவரிடம் சொல்லி முடிக்கும் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாக அவர் சொல்வது அனைத்தையும் கவனித்தவர்,தன் மகனை நோக்கி கொலைவெறியுடன் கூடிய ஒரு முறைப்பை செலுத்தினார்.

         “நீங்க தான் இவனை அடிச்சதா?”என்று அலெர்ட் ஆறுமுகத்தை பார்த்து கடினமான குரலில் கேட்டார்.

           “இல்லை சார்…வேற ஒரு ஸ்டாப் பேர் ஜெயக்குமார். புது ஸ்டாப் சார். பையன் பண்ணதும் தப்பு தானே சார். அதான் அந்த மாதிரி நடந்துக்குற மாதிரி ஆயிருச்சு.”என்று தேடி தேடி வார்த்தைகளை சரியாக கோர்த்து பேசினார் அலெர்ட் ஆறுமுகம்.

             “ஒஹ்!”என்று பின்பக்க கழுத்தை தடவியவாறு கேட்டவர்…”சரி…நீங்க போய் அவரை வர சொல்லுங்க.”என்று நிதானமாக கூறினார்.

             “நான்…அது”என்று அலெர்ட் ஆறுமுகம் ஏதோ கூறி சமாளிக்க முயலும் போதே “நீங்க தான் போய் கூப்பிட்டுட்டு வாங்க. போங்க சார். “என்று அழுத்தி கூறினார் கந்தசாமி.

               அதற்கு பின்பும் ஏதாவது பேசினால் தனக்கு ஆபத்தாக முடியலாம் என்பதால் அமைதியாக ஜெயக்குமாரை அழைக்க சென்றார் அலெர்ட் ஆறுமுகம்.

             “சார் நீங்க உங்க பாஸ்க்கு போன் போட்டு குடுத்துட்டு இந்த தரித்திரத்தை கூப்பிட்டுட்டு போய் வெளிய நில்லுங்க.”என்று கந்தசாமி கூறியவுடன் அமைதியாக அழைப்பு எடுத்து கொடுத்த பிரின்சிபால் அந்த மாணவனை அழைத்து கொண்டு அருகில் இருக்கும் தனது இன்னொரு அறைக்கு சென்றார்.

                நான் இந்த கல்லூரியின் பிரின்சிபால் என்று இவர்களிடமெல்லாம் கெத்து காட்ட முடியாது. அப்படி செய்தால் மறுநாளே வேலை காலி.அதுகூட பரவாயில்லை இந்த வேலை இல்லையென்றால் ஆயிரம் வேலை…. ஆனால் எதிர்ப்பவர்களை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவார்களே.  இவர்களுடன் எல்லாம் தொடர்பில் இருப்பது  என்பது புலி வாலை பிடித்த கதை தான்…

    “ஹலோ…நான் கந்தசாமி பேசுறேன்”என்று தன் கட்டை குரலை இன்னும் கடினமாக்கி கொண்டு பேசினார்…

      “ஹான்…சொல்லுங்க சாமி.”என்று எதுவும் தெரியாதது போல் இக்கல்லூரியின் உரிமையாளரின் நண்பன் அரசியலில் பெரும் செல்வாக்கு படைத்த தந்தையை பெற்றவனின் நண்பன் வசந்த் என்பவன் கேட்டான்.

        “என் மகனை இந்த காலேஜ்ல இருக்க ஏதோ ஸ்டாப் *** அடிச்சுருக்கான். எவ்வளவு தைரியம் இருக்கும் அந்த **** மவனுக்கு?என் மகனை இப்படி ஏதோ ரோட்ல போற வர ***லாம் அடிக்குறதுக்கா உன் நண்பனுக்கும்…உங்க கட்சிக்கும்…உங்க காலேஜ்க்கும் வருஷம் வருஷம் கோடி கோடியா அழுறேன்.”என்று இவ்வளவு நேரம் போட்ட நல்லக்குடி நாணயம் வேஷம் கலைய பேசினார் அந்த கந்தசாமி…

          “சாமி நீங்க சும்மா எங்களுக்கு பணம் தரலை. நீங்க நோண்டி தின்னுருக்கிங்க பாருங்க அதுக்கு தான் எங்களுக்கு குடுத்துட்டு இருக்கீங்க…பல லட்ச கோடில நீங்க அடிக்குறதுல.சில கோடி அதை கண்டுக்காம இருக்க இங்குட்டு தரிங்க. அது குடுக்காட்டி உங்க பொழைப்பு சந்தி சிரிச்சுரும் சாமி சந்தி சிரிச்சுரும். அளந்து பேசுங்க. அப்புறம் உங்க மகன் ஒன்னும் நல்லது பண்ணல. அவன் மொபைலை எடுத்து பாருங்க…”என்று இவனும் எகிறினான்.

        வசந்த் கூறியதற்கு வெடி சிரிப்பு சிரித்தவர் “ஹா ஹா ஹா….வசந்த். நீயும் உன் கேடு கெட்ட கூட்டாளியும் பண்றத விட என் மகன் ஒன்னும் அவ்வளவு பெரிய தப்பு பண்ணிரல…நல்ல *** மாதிரி பேசுற….என் விஷயம் வெளிய தெரிஞ்சா கோர்ட் கேஸ்….அவ்வளவு தான்…நீ பண்ற கேடி தனம் மட்டும் கொஞ்சம் வெளிய தெரிஞ்சா போதும்… உனக்கும் பெபெ.உன் அப்பனுக்கும் பெபெ தான்….”

     “சரி சாமி.எங்களை பத்தி எல்லாம் தெரியும்னு ஒத்துகிறோம்.இப்ப என்ன பண்ணனும்னு சொல்ல வரீங்க. உங்க மகனை அடிச்சது ஒன்னும் தனியா கூப்பிட்டுட்டு போய் இல்லை.எல்லா ஸ்டுடென்ட்ஸ் முன்னாடியும் வைச்சு அடிச்சுருக்கான்.இப்ப ஏதாவது பண்ணா பெரிய பிரச்னை ஆயிரும் சாமி.ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் அப்புறம் போராட்டம் பண்றேன் அது பன்றேன்னு பெரிய பிரச்சனையாக்கி விட்ருவானுக…இந்த அகாடமிக் இயர் முடியட்டும் வேலையை விட்டு தூக்கிருவோம்….அவனை பத்தி பாக்குறேன்.இப்போதைக்கு நல்ல விதமா பேசி அனுப்பி விடு சாமி.”என்றுக்கூறிய வசந்த் அழைப்பை துண்டித்து விட்டான்…

      

         வசந்த் சொல்வதும் சரி தான் என்று முடிவு எடுத்தவர் பக்கத்து அறையில் இருந்த தன் மகனையும் ப்ரின்சிபாலையும் அழைத்தார்…

         அவர்கள் உள்ளே வரவும் ஜெயக்குமாரும்.அலெர்ட் ஆறுமுகமும் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது…

           ஜெயக்குமாரை பார்த்தவுடன் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்த கந்தசாமி ஜெயக்குமாரின் கையை பிடித்து குலுக்கி தன்னை முறையாக அறிமுக படுத்தி கொண்டார்…

             ஜெயக்குமாரோ இவரை பத்தி பயம் காட்டுற மாதிரி ஏதோ ஏதோ சொல்லி கூப்பிட்டு வந்தாரு அலெர்ட் ஆறுமுகம்.இவர் என்ன இப்படி பாசத்தை பொழியுறாரு என்பது போல் கந்த சாமியையும்.அந்த அறையில் இருந்த மற்ற இருவரையும் பார்த்தான்… அவர்களும் இவனை போல் புரியாமல் தான் கந்த சாமி செய்வதை பார்த்துக்கொண்டிருந்தனர்…

   “உட்காருங்க சார்.சூர்யா பண்ணது ரொம்ப தப்பு சார்.அவன் சார்பா நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் சார்.”என்று கூறிய கந்தசாமி தனது மகனை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தார்…

         “உனக்கு நாங்க இதையா சொல்லி கொடுத்து வளர்த்தோம்.சார் காலுல விழுந்து மன்னிப்பு கேளு டா.”என்று கூறியும் அவர் மகன் குனிந்த தலை நிமிராமல் இருக்கவும் மீண்டும் ஒரு அறை அறைந்து “கேளுடானு சொல்றேன்.கேளுடா.”என்றார்…

            அவனும் தந்தை சொல் கேட்டு அவரை லேசாக முறைத்து கொண்டே ஜெயக்குமாரின் காலில் விழுக வந்தான்.

 

             அவனை தடுத்து நிறுத்தியவன்…”என்கிட்டே எதுக்கு சார் மன்னிப்பு கேட்கணும்.இவன் என்ன என் தங்கைச்சியா இல்லை என் பொண்டாட்டிய போட்டோ எடுத்தான்னா என் காலுல விழ.பாவம் இவன் கூட படிக்குற பொண்ணுங்களையும்.பாடம் சொல்லி குடுக்குற குருவையும் எடுத்து வைச்சுருக்கான்.அவங்கிட்ட தான் மன்னிப்பு கேட்கணும்.ஆனாலும் வேண்டாம் அவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சா பாவம் என்ன மாதிரி மனஉளைச்சலுக்கு ஆளாவாங்க  தெரியுமா.இனிமேல் இப்படி நடந்துக்க கூடாதுனு உங்க மகனுக்கு புரிய வைங்க.”என்றவன் மற்றவர்களிடம் விடைபெற்று வெளியே சென்றான்…

                இரத்த தான முகாமில் அனைவரும் பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருக்க சுருதியும் வேலை பார்த்துக்கொண்டே தன் கணவனையும் ஒரு பார்வை பார்த்து கொண்டிருந்தாள்…

       அவளுக்கு தெரிந்த குமார் இவன் இல்லை.தன் சொல் படியெல்லாம் கேட்டு.தன்னிடம் அடி உதை வாங்கி.தன்னை கையில் வைத்து தாங்கும் குமார் இவன் இல்லை.எல்லாரிடமும் இருப்பது போல் அவன் தன்னிடம் இல்லை.என்ன ஒரு கம்பிரம்.நேர்ந்த பேச்சு.தன்னிடம் குலைந்து சேவை செய்யும் சிங்கம் இல்லை.தன் கம்பிரதால் தேர்ந்த நடையால் அனைவரையும் தன் பார்வையால் வேலை வாங்கும் இவன் வேறு.என்பது போல் அவனை பார்த்து.தனக்குள் நினைத்து கொண்டிருந்தாள்…

               இருந்தாலும் மனதின் இன்னொரு ஓரத்தில் மவனே நீ வீட்டுக்கு வாடா உனக்கு இருக்கு.என்று ஓடி கொண்டு தான் இருந்தது.

        கிட்டத்தட்ட ஜெயக்குமாரும் அதை தான் நினைத்து கொண்டிருந்தான்.தன்னிடம் எதுக்கு எடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டு.பொறுமையா கிலோ என்ன விலை என்று கேட்கும்.சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் சிணுங்கி அழுகும் குழந்தை சுருதி இவள் இல்லை.அனைவர்க்கும் வேலை குடுத்து.அனைவரையும் வேலை வாங்கி.எதிரில் இருப்பவருக்கு ஏற்றார் போல் வளைந்து கொடுத்து அவர்களையும் வளைத்து.எந்த பிரதிபலனும் இன்றி அடுத்தவருக்கு.பிறருக்கு சேவை செய்யும் பெண் இவள்…

                முன்னை விட இப்பொழுது சுருதியை இன்னும் பிடித்தது போல்.பிடிக்கும் போல் என்று ஜெயக்குமாரிற்கு தோன்றியது…

           இருந்தாலும் நேற்று அப்படி பேசி தன்னை காயப்படுத்திருக்க வேண்டாம்.என்று நினைத்துக்கொண்டான்.

    பாரதி.நவீனா.பவித்ரா மூவரும் இரத்தம் கொடுத்த பின்பும் வகுப்பறைக்கு செல்லாமல் வந்தவர்களுக்கு உதவி செய்கிறோம் என்று பெயர் பண்ணி கொண்டு கிளாசை கட் அடித்துவிட்டு அங்கையே இருந்தனர்.அவர்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரும் சென்றிருந்தனர்…

            கிளம்புவதற்காக ஓடி வேலை செய்து கொண்டிருந்த சுருதி அண்ட் கோவுடன் இவர்களும் இருந்தனர்…

              “ஏன் நவீ.நம்ம சந்துரு சொன்னது உண்மையா.ஜே கே சார் அவர் முறை பொண்ணு அந்த டாக்டரை தான் கல்யாணம் பண்ணிக்க போறாராமே.”என்று நாற்காலிகளை ஆளுக்கு ஒவ்வொன்றாக தூக்கி சென்றுகொண்டே நவீனாவிடம் கேட்டாள் பவித்ரா…

               “எனக்கு என்னமோ அப்படி தெரில.இது எதுவோ triangle  லவ் ஸ்டோரி மாதிரி இருக்கு மச்சி.”என்றாள் நவீனா…

                “என்ன மச்சி சொல்ற.”என்று அதிர்ச்சியாகிய பவித்ரா பாரதி காலில் நாற்காலியை லேசாக படுமாறு வைத்துவிட்டாள்…

                  “ஏய்.பரதேசி நாயே….எடு டி.”என்று பாரதி அலறவும் வேகமாக அதிர்ச்சியில் இருந்து வெளி வந்தவள் அவள் காலிலிருந்து எடுத்தாள்…

                  “இன்னொரு ஆளு யாரு டி.”

                   “அங்கே ஒருத்தவங்க நிக்குறாங்க பாரு….”

                   “யாரு டி.”

                    “அந்த க்ரீன் கலர் சாரீ டி.”

                    “லூசு.அவங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சு டி.தப்பா பேசாதே டி நாயே.”என்று பவித்ரா பதறினாள்…

                    “நான் சும்மாலாம் சொல்ல மாட்டேன்னு உனக்கு தெரியும்.நீ இப்ப நம்ம ஜே கே சாரை திரும்பி பாரேன்….அவரோட மொத்த போக்கசும் அந்த க்ரீன் கலர் சாரீ பொண்ணு மேல தான் இருக்கும்….”நவீனா…

                   “அடியே ஆமா டி.”என்று வாயை பிளந்தாள் பவி…

 இதுக்கே இப்படியா என்பது போல் பவியை பார்த்த நவீ “அப்டியே அந்த டாக்டர் பொண்ணை பாரு…..”என்றாள்.

            அவந்திகா வேண்டும் என்றெல்லாம் ஜெயக்குமாரை பார்க்கவில்லை.கடந்த ஐந்து வருடங்களில் அவன் இருக்கும் இடத்தில இவள் இருக்க நேர்ந்தால் அவளின் பார்வை முழுவதும் ஜெயக்குமாரை சுற்றியே இருக்கும்.அதனால் தான் என்னவோ இப்பொழுதும் அப்டியே தன்போக்காக ஜெயக்குமாரை இரண்டு நிமிடத்துக்கு ஒரு முறை அவள் கண்கள் பார்த்து சென்றன.

   எவ்வளவோ முயற்சி செய்து அவளின் ஜெய்யின் நினைவில் இருந்து வெளி வந்து .அவனை சுருதியின் குமார் என தன் மனதிற்குள் பதிய வைத்திருக்கிறாள்.

      “ஆமா மச்சி.இந்த பொண்ணு நம்ம சாரை பார்க்குது.”என்று அடுத்த அதிர்ச்சியில் கூவினாள் பவி…

      ” இதை தான் நான் அப்பத்துல இருந்து வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்.ஒரே குழப்பமா இருக்கு மச்சி”என்று கூறிய நவீனா ஏதோ தீவிரமாக சிந்தித்தாள்.

     பாரதியோ பலவேறு குழப்பங்களில் இருந்தாலும் தன் உயிர்தோழியின் தீவிர சிந்தனையில் உஷாராகி திட்ட ஆரம்பித்தாள்.

                     “வேண்டாம் மச்சி.அவருக்கும் நமக்கும் பல பிரச்சனை போயிட்டு இருக்கு.இன்னைக்கு ஆக்ஷன் கிங் மாதிரி வேற புரட்டி எடுத்துருக்காரு.தேவை இல்லாம எதுவும் பண்ணாதே.”என்று பாரதி தோழி ஏதோ செய்ய காத்திருக்கிறாள் என்று உணர்ந்து எச்சரித்தாள்.

                பவியோ எதுவும் புரியாமல் இருவரையும் பார்த்திருந்தாள்.மையமாக சிரித்து வைத்த நவீ வேலையை பார்த்தாள்.

                   “மச்சி அவ சிரிப்பே ஒரு மார்க்கமா இருக்கு.இவ கூட சேராதே.”என்று கூறிய பாரதி அவளும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.கடைசியில் ஒன்னும் புரியாத பவி அவளும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

                   ஜெயக்குமார் தன் மனைவி செல்லும் இடம்லாம் அவனும் சென்று சுருதியை தன் கண் பார்வைக்குள்ளே வைத்துக்கொண்டான்.

          “ரொம்ப கோவமா இருக்காளோ.திரும்பி கூட பார்க்க மாற்றா.என்னை மாதிரி ஒருத்தன் கிடைக்க இவ தவம் பண்ணிருக்கணும்… ஆமாம்…”என்று சிறிது நேரம் விடைத்துக்கொண்டு அவள் பின்பே திரிந்தான்…

            “actual ஆஹ் நான் தானே கோவப்பட்டு இவளை கண்டுக்க கூடாது.”என்று சிறிது நேரம் நினைத்தான்…

             அடுத்த அரைமணி நேரத்தில் “இருந்தாலும் இவ அப்டி பேசியிருக்க வேணாம்.”என்று நினைத்தான்…

               அடுத்த அரைமணி நேரத்தில்”அவ தான் லூசுன்னு நமக்கு தெரியுமே.நான் அடிச்சிருக்க கூடாது.”

                 “பாவம்.என் தங்கத்துக்கு என்ன தெரியும்.விவரம் பத்தாதவ.லூசு பையன் நான்.”என்று ஒவ்வொரு அரைமணி நேரத்துக்கும் அவனின் பார்வையில் படுமாறு நின்ற சுருதியின் மேல் உள்ள குற்றங்கள் குறைந்து கொண்டே வந்தது ஜெயக்குமாரிற்கு…

                  “வீட்டுக்கு போய் மன்னிப்பு கேட்ரனும்.அப்டியே இனிமே அப்டி பேச கூடாதுனும் அழுத்தி சொல்லிரனும்.”என்று மனதில் நினைத்து கொண்டான்… (அடப்பாவி…என்ன டா இப்படி இறங்கிட்ட.)

   அடுத்து பார்த்தது எல்லாம் ரொமான்ஸ் லுக் தான்…

      சுருதி வழியும் வேர்வை தாங்காமல் இடுப்பில் செருகியிருந்த கைக்குட்டையை எடுக்கையில் இவன் வேர்த்து ஒழுகினான்…

         உதடு காய்ந்துவிட்டது என்று அவள் ஒவ்வொரு முறை நாவால் தன் உதட்டை ஈரப்படுத்தும் போது இவனின் உள் இருக்கும் ஹார்மோன்கள் என்னென்னமோ செய்தது…

         ஹீல்ஸ் அணிந்து ரொம்ப நேரம் நின்றதால் வலித்த பாதங்களை அவள் சிறிதாக காலை தூக்கி பார்த்த போது சிணுங்கிய கொலுசின் சத்தம் இவனின் காதினுள் கேட்டது.

            யாரோ சொன்ன மொக்கை நகைச்சுவைக்கு சுருதி தெத்து பல் தெரிய தனது வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஜெயக்குமார்க்கு அவளை பின்னோடு சேர்த்து அணைத்தே தீரவேண்டும் என்று அவனது உள்ளம் சிணுங்கியது….  

   இறுதியில் பேச்சுவாக்கில் சுருதி தன்னுடைய சிவப்பு நிற மூக்குத்தியை திருகி விட்ட போது சுற்றுபுறம் எதையும் கணக்கில் கொள்ளாமல் அவளது கேள்விக்குறி நாசியை கடித்தே ஆகவேண்டும் போல் ஒரு உணர்ச்சி பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது…

          அதில் பயந்தவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.இந்த மாதிரி பார்வை ஜெயக்குமார் சுருதியை நோக்கி வீசும் போது தான் இவனின் மாணவிகள் மூவரும் இவர்களை பற்றி பேசியது…

               ஜெயக்குமார் சுருதி இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்ததும் செய்த வேலையை விட்டு விட்டு வேகமாக சுருதியை நோக்கி சென்றாள் நவீனா…

               “போகாதே டி.போகாதே.”என்று பாரதி தடுக்கும் போதே அவள் சுருதியை அடைந்திருந்தாள்…

                 சுருதியிடம் சென்று தன்னை அறிமுகம் படுத்திக்கொண்டவள்.அவர்களின் அன்புடை கரங்களை பற்றி விசாரித்தாள்.பின்பு தானும் இதில் சேவை செய்ய விரும்புவதாக கூறவும் ஏககுஷியான சுருதி மடை திறந்த வெள்ளம் போல் அவர்கள் செய்த அனைத்தையும் கூறி அவளையும் அவர்களுக்கு தெரிந்தவர்களையும் தங்களுடன் இணைக்க கட்சி காரர்களை விட அதிகமாக பேசினாள்…

         அதில் நொந்த நவீ எப்படியோ அதில் இருந்து சுருதியின் பர்சனல் விஷயங்களை கேட்டாள்…

         “உங்க பேரு சீஸ்.”

          “சுருதி.”

           “ஒஹ்.நல்ல பேரு சீஸ்.எப்படி குடும்பத்தையும் பார்த்துகிட்டு இந்த மாதிரி வேலையும் பாக்குறீங்க.”என்று மெதுவாக தூண்டிலை போட்டாள்…

            “ஹா ஹா ஹா…நான் ஒன்னும் பெரிய அப்பாடக்கர் எல்லாம் இல்லை.இந்த மாதிரி வேலை எப்பயாச்சும் தான் வரும்.”என்று சுருதி எப்போதும் போல் கிறுக்கு தனமாக கூறினாள்…

             “ஆமாம்.ஆமாம்.உங்க வீட்டுக்காரர் என்ன வேலை பாக்குறாரு.”

               “வாத்தியார்….”என்றாள் சுருதி

              “ஸ்கூலா சீஸ்.”இந்த அம்மா புருசனும் வாத்தியார் தான் போல  என்று நினைத்த நவீ கேட்டாள்

              “இல்லை காலேஜ்….”என்று புருவம் மத்தியில் முடிச்சு விழ கூறினாள் சுருதி…

      “என்னது காலேஜ் ஆஹ்.ஒரு வேலை இவங்க வீட்டுக்காரரும் நம்ம ஜே கே சாரும் பிரண்ட்ஸா இருப்பாங்களோ.”என்று நினைத்தவள் எந்த காலேஜ் என்றாள்…

        “இந்த காலேஜ் தான்.நான் சுருதி ஜெயக்குமார்….”என்று சுருதி கூறவும் ஒட்டு மொத்த அதிர்ச்சியும் மொத்தமாக வாங்கிய நவீ துண்டை காணோம்.துணியை காணோம் என்று சுருதியிடம் இருந்து எஸ் ஆகினாள்…

         ஓடி வந்த நவீ தன் தோழிகளிடம் புலம்ப ஆரம்பித்தாள்…”ஆத்தாடி.அந்த க்ரீன் கலர் சாரீ தான் நம்ம ஜேகே சார் ஓட பொண்டாட்டியாம்.இந்த மனுசனுக்கு கல்யாணம் ஆயிருச்சு மச்சி.செத்த நேரத்துல சிக்கி சின்னாபின்னம் ஆக தெரிச்சேன்.ச்சை.”என்று கூறியவள் யாரு யாரை பார்த்தா உனக்கு என்ன டி என்று தன் முகத்துக்கு நேராக கை நீட்டி திட்டியவள் மடமடவென்று அருகில் இருந்த கேனில் இருந்து தண்ணீரை எடுத்து அருந்த ஆரம்பித்தாள்…

     பாரதியும்.பவித்ராவும் அவள் சொன்ன தினுசில் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்…

      சுருதியோ என்ன அவளா வந்தா.அவளா ஓடிட்டா என்று நினைத்தவாறு வீட்டுக்கு கிளம்ப அனைத்து பொருள்களையும் எடுத்து கிளம்பினாள்…

      அப்பொழுது அங்கு வந்த ஜெயக்குமார் சுருதியை கண்டுகொள்ளாமல் அருகிலிருந்த அவந்திகாவிடம் பேசினான்…

          “அவந்தி.வீட்டுக்கு போயிருவியா.நான் இறக்கி விடட்டுமா.”என்று சுருதி இருக்கும் பக்கம் கூட திரும்பாமல் கேட்டான்…

           “இல்லை அத்தான்.காலேஜ்க்கு போயிட்டு போனும்.என் பிரென்ட் கூட கிளம்பிட்டேன் அத்தான்….”என்றவள் சுருதியிடம் திரும்பி போயிட்டு வரேன் என்றவள் ஜெயக்குமாரிடமும் கூறிவிட்டு தனது தோழி நிலாவுடன் கிளம்பினாள்…

               ஜெயக்குமாரும் அவந்திகா சென்றவுடன் பின்னாடியே சென்று விட்டான்.சுருதி தன் கணவனுடன் வருவாள் என்று நினைத்துக்கொண்டு அனைவரும் சுருதி பிரின்சிபால் அறைக்கு சென்ற நேரம் பார்த்து அவளுக்கு ஒரு மெசேஜ் போட்டு விட்டு சென்று விட்டனர்.

         சுருதி அடக்க முடியா கோபத்துடன் செல்லும் ஜெயக்குமாரையே பார்த்து கொண்டிருந்தாள்.சரியாக அந்த நேரம் பார்த்து அந்த புறம் இருந்து  ரெஸ்ட் ரூம் முன்னாடி நின்று ஜெயக்குமார்க்கு சூப்பர் டூப்பர் காதல் கதை ரெடி செய்த கும்பல் வந்து தொலைத்தது…

         “பார்த்தியா டி.எவ்வளவு கேரிங்.நம்ம சார்.அவரு வருங்கால பொண்டாட்டி வீட்டுல விடவான்னு கேட்டு.அவங்க வேணாம்னு சொல்லியும் அவங்க பின்னாடியே போறாரு பாரு.செம ல.”என்று சுருதியை கொட்டும் இல்லாமல் குலவையும் இல்லாமல் ஆட தயார் செய்து விட்டார்கள் மகராசிகள்…

   “omg இவளுக வேற என்னை ரொம்ப டார்ச்சர் பன்றாளுக.இவளுகள சொல்லி என்ன பிரயோசனம்.நான் கட்டுனது ஒழுங்கா இருந்தா இந்த பேச்செல்லாம் கேட்க வேண்டிய நிலைமை எனக்கு வருமா.” என்று மனதிற்குள் ஜெயக்குமாரை தாளிக்க ஆரம்பித்தாள்.

 

  

  ஜெயக்குமார் வீட்டுக்கு வந்த பொழுது அவனுக்கு முன்னாடியே வந்து வீட்டுக்குள் அமர்ந்திருந்தாள் சுருதி.

        இவள் எப்படி உள்ளே வந்தாள்..தான் தானே சாவி வைத்திருக்கிறோம் என்பது போல் தன் கையில் இருந்த சாவியையும் சுருதியையும் பார்த்தான்.

             சுருதியோ கால் மேல் கால் போட்டு ஒரு அரசியின் தோரணையோடு ஜெயக்குமாரை திமிராக பார்த்தாள்.

                  ஆபத்து நேரங்களில் எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பைடர் மேனின் spidy sense ஐ விட வேகமாக ஜெயக்குமாரிற்கு மனதிற்குள் எச்சரிக்கை மணி அடிக்க ஆரம்பித்தது…

      “வேணாம் குமார்.எதுவும் பேசாதே.வாயை திறந்தா சிக்கி சின்னாபின்னம் ஆக்கிருவா…”என்று நேற்று அடித்ததற்கு தான் ஏதோ ஏழரையை கூட்ட போறாள் என்று நினைத்தவன் அமைதியாக தன் உடை களைவதற்காக சட்டை பட்டனை அவிழ்த்தான்…

         “நான் உனக்கு யாரு…”என்று அமைதியாக இருந்த வீட்டில் அவளின் சத்தம் சிறிது அதிகரித்து கேட்டது…

            “பேசாதே.ஏதோ பிளான் பண்ணிருக்கா….”

           “உனக்கு நான் யாருனு கேட்டேன்….”

           “வேணாம்.ஏதோ பெருசா இன்னைக்கு இருக்கு.பேசாம மன்னிப்பு கேப்போமா.”

            “ஒஹ்….என் கூட பேச கூட உனக்கு பிடிக்கல.இங்கே ஒருத்தி கரடி மாதிரி கத்திட்டு கிடக்கேன்.நீ உன் பாட்டுக்கு இருக்க…”என்று வீறுகொண்டு கத்தவும்

              “ஆத்தாடி….இன்னைக்கு நம்மளை காலுல விழுக வைக்காம இவ அமைதியாக மாட்டா போலயே….”என்று ஒவ்வொரு சட்டை பட்டனாக கலட்டிக்கொண்டே தனக்குள் புலம்பி கொண்டான்….

               “அவந்திகா உனக்கு என்ன வேணும்….”

    அவந்திகா பேரை கேட்டதும் சர்வ நாடியும் ஒடுங்க இவளுக்கு தெரிந்து விட்டதா என்று சட்டை பட்டனை கழட்டிய கைகள் தற்போது அந்தரத்தில் இருக்க.அவனுக்கு வேர்க்க ஆரம்பித்திருந்தது…

        சுருதியை நோக்கி திரும்பியவன் வழிந்த வேர்வையை துடைத்துக்கொண்டு சுருதியை பாவமாக நோக்கினான்…

           சுருதியோ ரெண்டு கைகளையும் கட்டிக்கொண்டு.ஒரு புருவம் மேலோங்க அவனை கூர்மையாக பார்த்தாள்…

           “இவளா ஏதாவது தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறதுக்குள்ள நாமளே சொல்லிருவோம்..”என்று நினைத்துக்கொண்டு

          “அது பேபி மா….”என்று ஜெயக்குமார் ஆரம்பித்தான்…

 எப்பொழுதும் சுருதி நம் கதாநாயகனை பார்த்து கேட்கும் கேள்வியான “நீ நிஜமாவே ஐஐடில படிச்சு தான் பாஸ் ஆன.இல்லாட்டி பிட்.”என்ற கேள்வியுடன் ஆதிக்கத்தை தொடருவோம்…

 

ஆதிக்கம் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!