அன்புடைய ஆதிக்கமே 23
அன்புடைய ஆதிக்கமே 23
அத்தியாயம் 23:
சுருதி அனைத்தையும் நினைத்தவாறு உறங்கிப்போக அவளது தலையை மென்மையாக வருடிய ஜெயக்குமார் அவளை உறக்கத்திலிருந்து எழுப்பி இரவுணவை அவனே ஊட்டிவிட்டான்.
“எதுவும் மனசைப் போட்டு குழப்பிக்காம நிம்மதியா தூங்கு. முடிஞ்ச எதையும் நம்மனால மாத்த முடியாது பேபிமா… நான் நீ இதான் இப்ப நிஜம். லவ் யூ என் வெல்லக்கட்டி..” என்று நெற்றியில் முத்தமிட்டவன் அவளது தோளைத்தட்டிக்கொடுக்க சுருதி நிம்மதியாக உறங்கினாள்.
ஜெயக்குமாரை நினைத்தவளது வதனம் புன்னகையைப் பூசிக்கொள்ள தனது கணவனை நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டாள் சுருதி. இவளது புன்னகைக்கு ஆயுள் இந்த செல்வா வந்து அவன் அறிந்து வைத்திருந்த அரைகுறை உண்மையை உளறும் வரை மட்டும் தான் என்று சுருதி அறிய வாய்ப்பில்லை.
(ஏம்மா சுருதி எந்திரிச்சு போ மா…இந்த செல்வா பேச்சை எல்லாம் கேட்காதே மா. அரைப்போதை நாய் அரைகுறையா கேட்டுட்டு வந்து உயிரை வாங்கிட்டு இருக்கு. நாம சொல்லி வாயை மூடலை இந்தா வந்துட்டான்ல)
அளப்பரிய சோகத்தை முகத்தில் தாங்கியவாறு தாடையில் ஒரு மாதத்திற்கான தாடி மண்டிப்போய்க்கிடக்க சுருதியை நெருங்கியவன், அவள் அவனை வரவேற்பதற்காக எந்திரித்து நிற்கவும் அப்படியே சுருதியை அணைத்துக்கொண்டான்.
‘பெரிய பிரச்சினையா இருக்குமோ. பையன் இவ்ளோ சொங்கி போய் இருக்கான்.’ என்று மனதிற்குள் நினைத்தவள் உனக்கு நான் துணையாக நிற்கிறேன் என்பதை புரியவைக்கும் பொருட்டு சுருதியும் செல்வாவை இறுக அணைத்திருந்தாள்.
“செல்வா… என்ன டா ஆச்சு?” என்று அவனை தனக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமரவைத்தவாறு கேட்க,
செல்வாவோ அவளது வாடிய முகத்தைப்பார்த்து ‘உனக்கு போய் அந்த வளர்ந்த மாடு நொண்டிக்குமார் துரோகம் பண்ண நினைக்குறானே. இது அடுக்குமா… நடக்குமா… நன்னாரி நாய்? ’ என்று மனதில் நொந்தவன்
“சுருதி நீ ரொம்ப நல்ல பொண்ணு…”
“ஆஹ்… அது உலகமறிந்த உண்மை டா”
“நீ எப்பயும் சிரிச்சுக்கிட்டே இருக்கனும்.”
“நான் என்ன பைத்தியமா டா? எப்ப பார்த்தாலும் சிரிச்சுக்கிட்டே இருக்க?” என்று சுருதி சிரித்தவாறே கேட்க,
“ச்ச்… சுருதி மா…”
“சொல்லு டா மாமா…”
“உங்கிட்ட இந்த உண்மையை எப்படி சொல்றதுன்னு தெரியலை?”
“முட்டாள் வாயால தான் டா… சொல்லி தொலை…”
“இப்படி லூசு மாதிரி இரு… அதான் உன்னை எல்லாரும் ஈஸியா ஏமாத்திட்டு போயிறாங்க. பைத்தியம்…”
“அடேய் விசயத்தை சொல்லு டான்னா… நான் உனக்கு லூசா? இரு என் ஆத்துக்கார் கிட்ட சொல்லி தரேன்.”
சுருதியின் வார்த்தைகளில் செல்வாவிற்கு ஐயோ என்றாகிவிட்டது. என் தங்கத்துக்கு அவன் மேல எம்புட்டு பாசம்..ச்சை போடா நொண்டிக்குமார்…என்று நினைத்துக்கொண்டான்.
“டேய் என்ன தான் டா உனக்கு பிரச்சினை?”
“எனக்கு இல்லை… உனக்கு தான்…” என்று செல்வா கூற, அவனை கூர்மையாக பார்த்தவள் “எனக்கு என்ன டா பிரச்சினை?” என்று கேட்க,
இன்று கண்டிப்பாக சொல்லிவிட வேண்டும். இல்லாவிடில் தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்றுணர்ந்தவன் கூற ஆரம்பித்தான்.
“அது சுருதி… நம்ம குமார்… ச்சை.. இந்த அவந்தி… நோ…நோ… மண்டபத்துல…” என்று எதுவோ உளறிக்கொட்டி கிளறிக்கொண்டிருக்க,
“சுருதி…” என்ற உற்சாகமான குரலில் தான் கூறவந்ததை நிற்பாட்டி விட்டு திரும்பி பார்த்தான்.
அங்கு அவர்களுக்கு எதிரில் அவந்திகா அவளது மருத்துவப்படைகளுடன் நின்றுக்கொண்டிருந்தாள்.
“ஹே சுருதி அக்கா… எப்படி இருக்கீங்க? உங்களை பார்த்து எத்தனை நாள் ஆயிருச்சு…?” என்று வேகமாக ஒடிப்போய் சுருதியை கட்டியணைத்தாள் நிலா.
“உனக்கே இது கொஞ்சம் ஒவரா தெரியலை. போன வாரம் தானடி பார்த்தோம்.” என்று அவர்களின் தோழன் வேணு கூற,
“அட ஆமாம்ல” என்று இழுத்த நிலா அவளுக்கு அருகிலே அமர்ந்துக்கொண்டாள். அவந்திகாவுடன் வந்திருந்த ஐந்து பேரும் செல்வா மற்றும் சுருதியுடன் இணைந்துக்கொண்டனர்.
“டேய் செல்வா…. எப்ப டா சென்னைல இருந்து வந்த? ஒரு வார்த்தை சொல்லல?” என்று அவந்திகா செல்வாவிடம் கேட்க,
அவனோ அங்கு அவந்திகா என்று ஒருத்தி இருப்பதையே கண்டுக்கொள்ளாதவன் போன்று சுருதியிடம் திரும்பி “நான் ரெஸ்ட் ரூம் போய்ட்டு வரேன் ” என்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு அகல,
அவனின் நடவடிக்கையை புரியாமல் பார்த்த சகோதரிகள் ஒருவருக்கொருவர் “இவனுக்கு என்னவாயிற்று?” என்று கண்களாலே வினவிக்கொண்டனர். இருவரும் தெரியாது என்பதுப்போல் தோள்களையும் குலுக்கிகொண்டனர்.
“என்ன நிலா இந்த பக்கம்?” என்று சுருதி கேட்க,
“அதுவா அக்கா…” என்று நிலா ஆரம்பிப்பதற்குள் இடைபுகுந்த நிவாஸ் “நம்ம வேனு இருக்கான்ல… அவனோட இரண்டு வருட காவிய காதல் ஊத்திக்கிச்சு… அதுக்கு தான் எங்களுக்கு ட்ரீட் வைக்க வந்திருக்கான்.”
“அச்சோ பாவம்! டேய் வேணு எப்படி டா ஆச்சு? அந்த பொன்னுக்கு கல்யாணமா?” என்று கேட்க
அந்த மருத்துவபடையோ பொங்கி பொங்கி சிரித்துக்கொண்டிருந்தது. சிரிப்பா அது எந்த கடையில கிடைக்கும் என்று கேட்கும் அவந்திகா கூட நிலாவின் மீது விழுந்து எழுந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.
என்னவென்று புரியாவிடிலும் கூட அவர்களது சிரிப்பு சுருதிக்கும் சிரிப்பை உண்டாக்க சிரிப்புடனே மீண்டும் என்னவென்று கேட்க, வேணு இவர்கள் யாரையும் சொல்ல அனுமதிக்கவேயில்லை.
“யாராச்சும் சொல்லி பாருங்க? நான் இப்படியேஒடிப்போயிருவேன். நீங்க தான் பில் பே பண்ணனும்…” என்று அவன் மிரட்ட நண்பர் குலாம் அமைதியாகி விட்டனர்.
“ஹா ஹா ஹா… அக்கா நான் வீட்டில வந்து சொல்றேன். இல்லாட்டி இதை ஷாக்கா வைச்சே இவன் ஒடிருவான். அப்புறம் நாம தான் பில் கட்டனும்… எல்லாருக்கும் என்ன வேண்டும்?” என்று அவந்திகா கேட்க, அந்த நேரம் பார்த்து செல்வாவும் வந்துவிட அனைவரும் தங்களுக்கு தேவையான உணவுவகைகளை ஆர்டர் செய்து சாப்பிட ஆரம்பித்திருந்தனர்.
வடிவேல் காமெடியில் வருவதுப்போன்று செல்வா சுருதியை தவிர அங்கிருந்த அனைவரையும் முறைத்துக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
பேச்சு சுவாரசியத்தில் யாரும் அதை கவனிக்கவில்லை ஒருத்தியை தவிர. அவள் நிலா. வந்த்திலிருந்து அவனின் மேல் ஒரு கண்ணும் சாப்பாட்டில் ஒரு கண்ணும் வைத்திருந்த நிலா அவனின் முறைப்பை கண்டுக்கொண்டாள்.
“ஹே அவந்தி… என் கருப்பு பிரபாஸ் ஏன் நம்ம எல்லாரையும் பார்த்து முறைச்சுக்கிட்டே இருக்காங்க? உனக்கும் அவருக்கும் எதாவது வாய்க்கால் தகராறா?”
அப்பொழுது தான் செல்வாவை கவனித்த அவந்திகா அவனின் முறைப்பான விருப்பமில்லா தன்மையை கண்டுக்கொண்டவள் “இல்லையே டி… இவனுக்கு என்ன ஆச்சு?” என்று அவளிடமே மீண்டும் கேட்டுவிட்டு சாப்பாட்டில் கவனமானாள். ஆனால் அவனது செய்கை மனதில் உறுத்திக்கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட சுருதி மற்றும் செல்வாவிற்கும் வேணுவே பணம் செலுத்துவிட்டு தனது மருத்துவப்படையை அவந்திகாவை தவிர அனைவரையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட மீதம் இருந்தது அவந்திகா, செல்வா, சுருதி மட்டும் தான்.
“செல்வா என்ன டா ஏதோ சொல்லனும் வர சொன்னியே சொல்லு?” என்று சுருதிக்கேட்க, செல்வாவோ சுருதியை இப்பொழுது பயங்கரமாக முறைத்தான்.
இந்த அவந்திகாவையே வைத்துக்கொண்டு தன்னிடம் என்னவென்று கேட்கிறாள் பார் தண்டம் என்று மனதிற்குள் திட்டியவாறு சுருதியை முறைத்துப்பார்க்க,
“டேய் நீ ஏன் டா கண்ணகியோட கசின் ப்ரதர் மாதிரி வந்ததுல இருந்து எல்லாத்தையும் முறைச்சுக்கிட்டே இருக்க? எதுவும் கண்ணால எறிக்குற பிளானா?” என்று அவந்திகா கேட்க,
“இங்கே நிறையப் பேர் மாதவி ஆகனும்னு நினைக்குறாங்க. எப்பயும் போல அது கண்ணகிக்கு புரியுறது இல்லை. அதான் உதவி பண்ண நானே எறிக்குறேன்” என்று ஒரு மாதிரியான குரலில் அவந்திகாவை நக்கலாக பார்த்துக்கொண்டு கூற அவளுக்கு சாமி சத்தியமாக என்ன சொல்ல வருகிறான் என்றே புரியவில்லை.
நாம என்ன கேட்டோம் இவன் என்ன பதில் சொல்றான் என்று ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு “செல்வா… ஆர் யூ ஒக்கே?” என்று அவந்திகா அவனின் தோளில் கைவைத்துக்கேட்க,
சட்டென்று எழுந்தவன் “வாங்க போவோம்… லேட் ஆச்சு…” என்று வாயிலை நோக்கி நடக்க, சுருதியும் அவந்திகாவும் ஒருத்தரையொருத்தர் புரியாத பார்வை பார்த்துக்கொண்டவர்கள் அவனின் பின்னே சென்றனர்.
இந்த உணவகம் அவர்களது வீட்டிலிருந்து பத்துநிமிட தொலைவினில் தான் உள்ளதால் மூவருமே நடந்துதான் வந்திருந்தனர். எனவே மூவருமே நடந்து சென்றனர்.
“அது என்ன கதை டி அவந்தி?” என்று அவந்திகாவின் தோழன் வேனுவின் காதல் தோல்வி கதையைக்கேட்க,
“ஹா ஹா ஹா… அதுவா… இந்த மீம்ல எல்லாம் போடுற மாதிரி ஒரு சீன். அவனோட லவ்வர் வாட்ஸாப்ல அவனுக்கு ஒரு மெசெஜ் அனுப்பிருக்கா… வீட்டில யாரும் இல்லை எல்லாரும் கோவிலுக்கு போயிருக்காங்க. ஆறுமணிப் போல வீட்டுக்கு வா அப்படின்னு…”
“சரி… இவன் போனப்ப அவங்க அப்பா இருந்துட்டாரா என்ன?”
“ஹா ஹா ஹா… அதான் இல்லை. என்னைக்கும் இல்லா திருநாளா முதல்முறையா கூப்பிடுறாளேன்னு பையனும் பயங்கர கனவோட போயிருக்கான். இவன் போனதும் அந்த பொண்ணு பயங்கர ஷாக்… நீ ஏன் டா இங்கே வந்திருக்க அப்படின்னு கேட்க அவன் நீ தானே டி வரசொன்னேன்னு சொல்ல அவள் இல்லையே அப்படின்னு சொல்ல பையன் உடனே பாய்ஞ்சு அவ லாஸ்ட்டா அனுப்புன மெசேஜை எடுத்துக்காட்ட…”
“அப்புறம்…”
“அவ அசால்ட்டா ச்சை எப்பயும் போல மாத்தி அனுப்பிட்டேன் போல டா… டாடா நீ போயிட்டு வான்னு கதவை சாத்திட்டாளாம்.”
“இதுல என்ன டி இருக்கு?”
“ஹே பைத்தியம். அவ அனுப்புன மெசெஜ் அப்படி…” என்று கூறியவள் தனது அலைப்பேசியில் இருந்த அந்த குறுஞ்செய்தியை எடுத்துக்காட்டினாள்.
‘டார்லிங்… இன்னைக்கு வீட்டில எல்லாரும் வெளிய போயிருக்காங்க. நான் மட்டும் தான். போன வாரம் மாதிரி நீயும் வந்தா நாம ஜாலியா இருக்கலாம். ஆறுமணிக்கு வீட்டுக்கு வந்துரு. லவ் யூ டா மாமா… மிஸ் யூ சோ மச்…’ என்று இருப்பதை படித்த சுருதி நெஞ்சைப் பிடித்துக்கொண்டாள்.
“என்ன டி அவ இப்படி இந்த வேனுவை ஏமாத்தி இருக்கா? அவன் பாவம்டி…”
“ஏதே? அவனா… பிளே பாய்க்கு எத்த பிளே கேர்ள்…” என்றுஅவந்திகாவும் சுருதியும் பின்பு எதுஎதுவோ பேசியவாறு நடந்துக்கொண்டிருக்க, செல்வாவோ யோசனையுடனே வந்துக்கொண்டிருந்தான்.
அன்று திருமண மண்டபத்தில் தான் கேட்ட உரையாடலை சுருதியிடம் சொல்லலாமா வேண்டாமா? சொன்னால் சுருதி எதுவும் மனமுடைந்து போய்விட்டால் என்ன செய்வது. அதனால் அவளிடம் இதை பற்றி பேசவேண்டாம். தன்னுடன் உடன் பிறந்த தரித்திரடமே பேசுவோம் என்று மனதினுள் நினைத்துகொண்டிருக்கையிலே ஒரு உருவம் வேகமாக ஒடி வந்து அவனின் மீது மோதி கீழே விழுந்தது.
அவர்கள் வந்த சந்து இருள் சூழ்ந்து ஆள்நடமாட்டமில்லாமல் இருந்தது. இந்த சந்தின் தெருவிளக்கு பழுதாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. எத்தனையோ புகார் கடிதம் போட்டும் இதை சரிசெய்த பாட்டை தான் காணோம் என்று சுருதியும் அவந்திகாவும் பேசிக்கொண்டிருந்த போது தான் செல்வாவின் மீது ஒரு உருவம் வந்து மோதி கீழே விழுந்தது.
விழுந்த உருவத்தின் “ஐயோ… அம்மா!” என்ற அலறலிலே அது பெண் என்று தெரிந்துவிட வேகமாக வந்த அவந்திகாவும் சுருதியும் அந்த பெண்ணை தூக்கிவிட்டனர்.
தனது கையிலிருந்த அலைப்பேசியின் டார்சை அந்த பெண்ணின் முகத்தில் செல்வா அடிக்க சுருதிக்கு இந்த பெண்ணை எங்கோ பார்த்ததுப் போல் இருந்தது.
“யாரு மா நீ? ஏன் இப்படி ஒடி வர?” என்று சுருதிகேட்க,
“அக்கா…அக்கா… ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க அக்கா… என்னை நிறைய பொறுக்கி பசங்க துரத்தி வராங்க…” என்று அங்கிருந்தோர் யார் முகத்தையும் பார்க்காமல் கெஞ்சிக்கொண்டிருக்க அவர்கள் நின்றுக்கொண்டிருந்த இடத்திலிருந்து நான்கடி தொலைவிலிருந்த சந்தினுள் இருந்து கிட்டதட்ட ஆறடி உயரத்தில் ஒல்லியான உடல்வாகு கொண்ட இருவர் வந்தனர். இருட்டில் முகம் தெரியவில்லை.
அவர்களை நோக்கி வெளிச்சத்தை திருப்பிய சுருதிக்கு சிரிப்பு வந்துவிட்டது. செல்வாவும் கூட அவர்களைப் பார்த்து சிரித்தவன் தன்னை மோதியப் பெண்ணிடம் “இவனுங்கள பார்த்தா மா பயந்துவர? இவங்க ரவுடிஸ் இல்லை மா… ஸ்கூல் பசங்க மா…” என்று மீண்டும் சிரிக்க,
அந்த பெண்ணிற்கு சுறுசுறுவென்று கோவம் வந்துவிட்டது. “யோவ் மலைமாடு… இவனுங்கள பார்த்தா நான் பயந்து வரேன். நிஜ ரவுடிங்க 20 பேர் என்னை துரத்துறாங்க. பைத்தியகாரா… உயிர் போயிருமோன்னு பயத்துல இருக்கேன்.” என்று கத்த, செல்வாவோ பே என்று பார்த்தவாறு நின்றிருந்தான்.
“ஹா ஹா ஹா ஹா,…”வென்று கோரசாக நால்வரும் சிரித்தனர்.
சுருதி “டேய் நீங்க ரெண்டுபேரும் என்ன டா பண்றீங்க இங்க?”
“ஜோதி அம்மா உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க…” என்று சுருதியின் சித்தப்பாவின் இரட்டை மகன்களில் ஒருவனான இராமகிருஷ்ணன் கூறினான். இராமகிருஷ்ணனும், ஹரிகிருஷ்ணனும் தான் வந்திருந்தனர்.
இவர்கள் யாருக்கும் ஏன் ரவுடிகளிலிருந்து தப்பித்த அந்தப் பெண்ணிற்கு கூட எவ்வளவு பெரிய கண்டத்திலிருக்கிறோம் என்று தெரியவில்லை.
வெட்டி பேச்சு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் காவல்துறைக்கு தகவல் கொடுத்திருக்கலாம்.
அந்தப்பெண் “அக்கா உங்க மொபைல் தாங்களேன் ப்ளீஸ்…” என்று கேட்க, சுருதி தனது கையிலிருந்த கைப்பேசியை லாக் எடுக்காமல் அவளிடம் கொடுத்துவிட, அதில் ஸ்கிரின் சேவரில் இருந்த ஜெயக்குமாரையும் சுருதியையும் பார்த்த அந்த பெண் சட்டென்று அலைப்பேசியில் வந்த வெளிச்சத்தை வைத்து சுருதியின் முகத்தை பார்த்தவள்,
“அக்கா நீங்க ஜெ.கே சாரோட வைப் தானே… வேகமா அவருக்கு கால் பண்ணுங்க அக்கா …” என்று அவசரப்படுத்த,
சுருதி “நீ யாரு மா? அவன் இப்ப மதுரையில இல்லையே…” என்று கைகள் லாக்கை எடுத்துக்கொண்டே அந்தப் பெண்ணிடம் கேட்க,
“என் பேர் பாரதி அக்கா… ஜெ.கே சார் ஸ்டூடன்ட் தான் நான். அவர் வெளியூர் போறேன்னு தான் சொல்லிருந்தார்.. அவனுங்க வர போறானுங்க அக்கா…”
“அவன் வெளியூர் போறதை உங்க்கிட்ட சொன்னானா?” என்று அலறியது செல்வாவே தான். அவந்திகா மற்றும் இரட்டையர்களுக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.
இவ்வாறு அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே கைகளில் கத்தி கம்பு அரிவாள் உடன் மோதுமோதுவென்று குறைந்தது இருபது பேர்க்கிட்ட அவர்களை சுற்றிவந்திருந்தனர்.
செல்வா,அவந்திகா,சுருதி அவர்கள் வந்த வழியிலும் பாரதி ஒடிவந்திருந்த வழியிலும், இரட்டையர்கள் வந்திருந்த வழி என்று அவர்களை சுற்றி வளைத்திருந்தனர்; தப்பிக்கவே முடியாதளவுக்கு அவர்களை வளைத்திருந்தனர்.
தங்களை சுற்றி வளைத்திருந்தவர்களைப்பார்த்து சுருதிக்கும் மற்ற அனைவருக்கும் இதயம் தொண்டைக்குள் வந்து துடிப்பது போல் இருந்தது.
அப்பொழுது தான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பிக்க சுருதி தனது கைப்பேசியில் காவல் துறைக்கு அழைக்க நினைக்க அதை அறிந்ததைப் போன்று சட்டென்று அவளை நெருங்கிய ஒரு பீம் பாய் அதை அவளிடமிருந்து பறித்து தூக்கி எறிந்திருந்தான்.
“டேய் பீம்பாய்… போன வாரம் தான் இருபதாயிரத்துக்கு வாங்குன போன் டா காட்டெருமை அதை இப்படி சல்லிசல்லியா நொறுக்கிட்டியே டா…ஐயோ… ஐயோ… போனை கொடுன்னு கேட்டு இருந்தா நானே கொடுத்திருப்பேனே டா… முண்டம்… ஆளு வளர்ந்திருக்கியே உனக்கு அறிவு வளர்ந்திருக்கா?” என்று திட்டிக்கொண்டே இருக்க ,
“ஒழுங்கா இவளை விட்டுட்டு நீங்க ஒடினீங்கனா உங்க உயிருக்கு நான் உத்திரவாதம். இல்லாட்டி…” என்று கூற, அந்த பீம்பாய் தான் அவர்களின் தலைவன் போல்.
பாரதியோ இவர்கள் தன்னை தவிக்கவிட்டு சென்று விடுவார்களோ என்று பயந்தவள் செல்வாவின் கையை இறுக்கமாக பற்றிக்கொண்டவள் சுருதியை நோக்கி,
“அக்கா…ப்ளீஸ்… என்னை விட்டுட்டு போயீராதீங்க அக்கா… ஜெ.கே சார் சொல்லித்தான் நான் அங்கே போனேன்.” என்று கெஞ்ச, சுருதியோ தனது கைப்பேசி உடைந்ததில் கோவமாக இருந்தவள் யாரும் யோசிக்கும் முன்னே தனக்கு முன்னிருந்த அந்த ஆறடி மாமிசமலையை குனியுமாறு சைகை செய்து கன்னத்திலே சப்பென்று ஒரு அறை அறைந்திருந்தாள்.
அதில் கோவம் வரப்பெற்றவன் சுருதியை அவளைப்போன்றே கன்னத்தில் ஒரு அடி அடிக்க கையை ஒங்க அதை நொடி நேரத்தில் புரிந்துக்கொண்ட செல்வா அவனது கைகளை பிடித்திருந்தான்.
தங்களது தலை மேலேயே கைவைத்து விட்டதால் இருபது பேரும் களத்தில் இறங்க, அந்த ஆறு பேரினால் இவர்களை சமாளிக்க முடியாமல் போய்விட அனைவருக்கும் மயக்கமருந்தை அடித்து தாங்கள் வந்த காரில் தூக்கி போட்டுவிட்டு சென்றனர்
ஆதிக்கம் தொடரும்…