அலை ஓசை 13

sea2-dd608c1c

அலை ஓசை 13

அலை ஓசை – 13

உன்னுடன் இருந்த 
அந்த இனிமையான 
பொற்காலங்களை
இந்த தனிமையான 
காலங்களோடு 
ஒப்பிடும் போது 
தான் தெரிகிறது 
வாழ்க்கையில் 
எதை இழந்தேன் என்று… 

கைகள் எழுதி கொண்டு இருந்தாலும், கண்கள் தன் மனதிற்கு இனியவளை ரசிக்கவே செய்தது. 
 
ஓயாமல் இதயம் 
லப்டப் என்று 
துடித்தாலும், 
ஓயாமல் கைகள்
தமிழ் கவிதைகளை 
எழுதினாலும், 
ஓயாமல் என் 
காதல் உன் 
தொடர்ந்தாலும், 
அதை நீ மட்டும் 
உணராமல் இருப்பது 
ஏனோ?

தன் டைரியில் தன் மனம் கவர்ந்தவளின் நினைப்பில் தனா, தன் மனதின் மொழியை கவிதையாக வடித்து கொண்டு இருந்தான்.

“இந்த கவிதையை யாராவது படித்தாலும் அவங்களுக்கு என் மனசோட வலி தெரியுமான்னு தெரியல குட்டி மா! ஆனா, உனக்கு நிச்சயமா புரியும். கண்டிப்பா புரியும், நா செத்துடேன் ன்னு எல்லாரும் சொல்லியும், நீ அதை நம்பலன்னு அப்பா சொன்னப்போ, நா எப்படி பீல் பண்ணினேன்னு எனக்கு தான் தெரியும்  குட்டி மா. நா சாகல, நா கண்டிப்பா உன்கிட்ட வருவேன்னு சொல்லி இருக்க. என் இதயம் உனக்காக தான் இன்னும் துடிச்சு கிட்டு இருக்கு டா குட்டி மா.

 நா உன்னை ரொம்ப வருசம் கழிச்சு பார்த்தேன். நாம ஒன்னா ஆடி இருக்கோம். உன்ன தூங்க வச்சேன். நம்ம குழந்தைய தூங்க வச்சேன். ஆனா, நா வந்ததை உன்னால முழுமையா உணர வைக்க முடியல. நீ இப்போ எவ்வளவு குழப்பத்தில இருக்கேன்னு என்னால உணர முடியுது குட்டி மா. அது உன் கற்பனை இல்லை. நான் நிஜமாகவே வந்துடேன்னு உனக்கு புரிய வைக்க முடியல. 

அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும் குட்டி மா. பொறுமையா எப்போதும் இருக்கும் அதே நம்பிக்கையோட இரு. நான் உன்கிட்ட தான் இருக்கேன்.  இன்னும் கொஞ்ச நாள் ல உன் கூடவே இருப்பேன் குட்டி மா. ஐ பிராமிஸ் ” தன் கண் எதிராக இருக்கும் தன் குட்டிமாவிடம், அவளுக்கு தெரியாமல் தனா டெலிபதி மூலம் பேசி கொண்டு இருந்தான்.

தனா, தன் வீட்டை தன் குட்டி மா வின் வீட்டிற்கு எதிராக மாற்றி இருந்தான். காலை எழுந்ததும் எதிர் வீட்டில், ஊஞ்சலில் அமர்ந்து பனியில் நனையும் ரோஜாவை ரசிக்கும் தன் குட்டி மாவிடம் இருந்தே அவனின் நாள் ஆரம்பமாகும்.

இரவில் நிலவை வெரித்து பார்க்கும் அவளிடமே அவன் நாள் முற்று பெறும். அவளுக்கு தெரியாமல் அவளை ரசிக்கும் ஒவ்வொரு நொடியையும் தனா, ஒரு விதமான வலியுடனே ரசிக்க தான் செய்தான். 

இன்றும், அவ்வாறே தன் மனதில் தோன்றும் துயரத்தை அவளை பார்த்து கொண்டே தன் டைரியில் கவிதையாக வடித்து கொண்டு இருந்தான். மனம் அவளை பிரிந்த துயரத்தில் வாட, மூளை அந்த பிரிவுக்கான நிகழ்வை நினைவூட்ட, தனா தன் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள திட்டத்தை தீட்டினான். 

# # # # # 

தன் மயக்க நிலையில் இருந்து வெளியே வந்த ஆதி முதலில் உணர்ந்தது மண்டையை பிளக்கும் தலைவலியை தான். 

“என்னடா ஆதி, நேத்து ராத்திரி எந்த சரக்க டா குடிச்ச? லோக்கல் பிராண்ட் சரக்கா? இந்த வலி வலிக்குது. ஐயையோ! முடியலையே!
இதுக்கு தான் அம்மா சொல்லற மாதிரி ஒரு கல்யாணத்த பண்ணி இருந்தா, 

ஒன்னு, வரவ சரக்க அடிக்கவே விட்டு இருக்க மாட்டா. இல்லை, சரக்க அடிக்க விட்டானா, அடுத்த நாள் காலையில தலை வலி வரும்ன்னு தெரிஞ்சு லெமன் ஜூஸ் பண்ணி, இந்தாங்க மாமான்னு ஆசையா வந்து கொடுத்து இருப்பா.

அப்படியே ஜீஸ குடிச்சு, கொஞ்சம் இல்லை இல்லை நல்லாவே ரொமான்ஸ் பண்ணி இருக்கலாம். எங்க? போலீஸ் ஆகியே தீருவேன்னு அம்மா வாய அடச்சோம். இப்போ அனுபவிக்கறோம்! 

ஐயையோ! வலில பொலம்புறேனே! முடியலடா சாமி. இனிமே, நோ டிரிங்க்ஸ்டா ஆதி! குடிச்ச நீ செத்த…..” என்று தனக்கு தானே புலம்பி கொண்டு இருக்க, அவன் கண் விழித்ததை உணர்ந்த தர்மா அவனுக்கு லெமன் ஜீஸை கலந்து தர, 

” என்னது இது! ஐ!  லெமன் ஜூஸ்” என்று தன் தலை வலியை போக்கும் ஜீஸை குடித்த பின்னரே, 

“நாம,வீட்டுக்கு வரலையே. கமிஷனர தானே பாக்க போனோம். அப்புறம், சரக்குக்கு வழி இல்லையே. அப்புறம் எதுக்கு தலை இந்த வலி வலிக்கனும். ஒன்னும் புரியலயே.

ஆமா? நாம எங்கே இருக்கோம்? என்னது இது? தெலுங்கு டப்பிங் படம் ல சாவு வீடு மாதிரி வெள்ளை நிற பிளான்கெட் , வெள்ளை நிற ஸ்கிரீன்னு ஒரே வெள்ளை மயமா இருக்கு!

என்ன இடம் டா இது? ” என்று அந்த அறையை நோட்டமிட்டே வந்த ஆதி, தர்மாவை கண்டவுடன் நடந்த அனைத்து நிகழ்வுகளையும் நியாபகம் படுத்தி கொண்டான். 

“நீ கமிஷனர் பையன் ல?! ” என்று பரிதாபமாக ஆதி கேட்க, 

பல நாள் கழித்து மனதார சிரித்த தர்மா, “இப்பவாச்சும் இது நியாபகம் வந்துச்சே. சொப்பா,முடியலடா. சின்சியர் போலீஸ் ஆபிசர்ன்னு நினைச்சா. இப்படி ஒரு காமெடி பீஸா இருக்கியேடா ” என்று விழுந்து விழுந்து சிரித்தான். 

“கதைக்கு கொஞ்சம் ஃபன் கொண்டு வரனும் ல, சீரியஸாவே போச்சு னா போர் அடிக்கும் ல. அதான் ” என்று தன்னை கடத்திய தர்மாவிடம் பல நாள் பழகிய நண்பணை போல கதை பேசி கொண்டு இருந்தான். 

முழுவதுமாக தன் நிலைக்கு வந்த ஆதி, தர்மாவிடம் பேசி கொண்டு இருந்த போதும், கண்கள் தன்னை சுற்றி உள்ள அனைத்தையும் கண்காணிக்க ஆரம்பித்திருந்தான். 

அவன் கண்களின் ஆராய்ச்சி உணர்வை உணர்ந்து கொண்ட தர்மா, “ரொம்ப ஆராய்ச்சி பண்ண வேண்டாம் ஆதி. உன்னால எதையும் கண்டு பிடிக்க முடியாது. ஏன்னா… “

“இட்ஸ் வெரி பிளான்ட். அதானே தர்ம சேனா” என்று முடிக்க, ” புரிஞ்சா சரி தான்” என்று தர்மாவும் முற்று புள்ளி வைக்க, “ஆனா, எதுக்கு சேனா?! இவ்வளவு பெரிய அளவில் risk எடுத்து பண்ணுறீங்க?! காரணம்…” ஆதி முடிக்க கூட இல்லை

“ஷட்அப் ஆதி. காரணம் சொன்னா புரிய அளவிற்கு உனக்கு அறிவும் இல்லை, சொல்றதுக்கு எனக்கு நேரமும் இல்லை” என்று தர்மா கத்தி விட்டு இருந்தான். “என்ன?! எனக்கு அறிவில்லையா?!  ” என்று ஆதியைத் தூண்டி விட்டு இருந்த தர்மாவிடம் கோபம் கொண்ட நேரம், தர்மா அவ்விடம் விட்டு சென்று இருந்தான். 

# # # # # 

உலகம் என்னும்
மேடை அமைத்து, 
அதில் உன்னையும்
என்னையும் படைத்து, 
மேல் இருப்பவன்
ஆட்டம் காட்டுகிறான், 
நினைத்த நொடியில்
காட்சியை மாற்றி, 
நம் வாழ்க்கை
சக்கரத்தை சுற்றிகிறான், 
இதில் நடிக்க வந்த
நமக்கு தான், 
எத்தனை ஆசைகள்
ஆணவங்கள்! 

# # # # # 

தர்மா தன் நண்பன் உக்கிரனை காண சென்ற அதே நேரத்தில், ருத்ரா கடற்கரையில் இருந்து நேராக தன் வீட்டிற்கு வந்தான்.  பூட்டிய வீட்டை பார்த்தவுடன் மனதில் பழைய நியாபகம் வர, அதே கதவில் தலை சாய்ந்து, 

“டேய் மச்சான், நீ ஏன்டா என்னை விட்டு போன? இங்க நீ இல்லாம நான் ரொம்ப கஷ்ட படுறேன் டா. நீ இல்லாத இந்த வீட்டுல இருக்குறது ரொம்ப கஷ்ட மா இருக்குடா. மனசு வலிக்குது மச்சான். என் கிட்ட நீ வராத தூரத்திற்கு போய்ட்டேன்னு தெரிஞ்சும் மனசு அதை ஏத்துக்க மறுக்குதுடா. உன் நினைவுகள் என் மனச கொத்தி கொத்தி தின்னுதுடா. 

யாரும் இல்லாம வளர்ந்தத ஏத்துகிட்ட என்னால நீயும் இல்லாம போய்ட்டத ஏத்துக்க முடியலடா மச்சான். இன்னும் எங்கயோ என் கண்ணுக்கு தெரியாம நீ மறஞ்சு இருக்கனு சொல்லுதுடா. ஆனா, நிஜம் அதில்லையே! நிஜத்துக்கும் நினைவுக்கும் நடுல மாட்டிட்டு எப்போதும் போல இப்போதும் குழப்பத்துல தவிக்கிறன்டா. வந்து என்னை ஆசுவாசபடுத்துடா. பிளீஸ்” என்று ருத்ரா, காதல் பிரிவு மட்டும் அல்ல, நண்பனின் பிரிவு கூட மனதை கூறும் போடும் என்ற எண்ணத்தில் கதறி அழ, 

‘யாரும் இல்லாம இல்லை. நான் இருக்கிறேன் உனக்கு’ என்னும் விதமாக, சந்திராவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.

அதை கவனித்தவன், “சொல்லு சது மா” என்று அழு குரலில் பேச,அவன் குரலில் இருந்தே அவனின் மன நிலையை அறிந்த சந்திரா, “கேஸ் இருக்குடா ருத்ரா ” என்று மட்டும் கூற, அதிலே நிகழ் காலத்திற்கு வந்தான். 

“தெரியும்டா. இப்போ ஸ்டேஷனுக்கு கிளம்பிடுவேன் சது” என்று கூறி, தன் நண்பனின் நினைவுகளில் இருந்து தற்காலிகமாக வெளியே வந்தான். 

ஸ்டேஷனுக்கு வந்த சந்திரா, ருத்ராவிடம் பேசி விட்டு அவன் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை எண்ணி கவலை உற்றாள். மனமோ, ” உன் வாழ்க்கைல அப்படியே சந்தோஷம் கூத்தாடுது பாரு… ” என்று இடித்து கூற, “எனக்கு பழகிடுச்சு” என்று மனதிடம் பொய் கூறி, தந்தையிடம் சென்றாள். 

“டாட், எனக்கு நீங்கள் ஒரு ஹெப் பண்ணனும், எனக்கு தி பெஸ்ட் ஹேக்கிங் மெம்பர் ஒருத்தர் வேணும். நீங்க கொஞ்சம் அரேன்ஜ் பண்ணி தாங்க டாடி” என்று வினவ, 

“கண்டிப்பா சந்திரா, இன்னிக்கு ஈவினிங்குள்ள பண்றேன்” 

“தாங்க்ஸ் டாடி” என்று கூறி விட்ட சென்ற சந்திராவை, “தர்மாவுக்கு நீ யோசிக்க விதம் கூட எப்படி தான் தெரியுதோ?! உங்கள நினைச்சா எனக்கு பிரமிப்பா இருக்கு” தன் இரு பிள்ளைகளின் எண்ண ஒற்றுமையை வியந்த படி கமிஷனர் இருந்தார். 

தந்தையிடம் பேசி விட்டு வெளியே வந்த சந்திராவை பிடித்த ருத்ரா, “எனக்கு என்னவோ கமிஷனருக்கும் இந்த கேஸுக்குமே ஏதோ சம்பந்தம் இருக்கும் என்று சந்தேகம் இருக்கு. நீ ஏன் இப்போ அவர்கிட்ட ஹெப் கேக்குற” என்று அடி குரலில் சீறி, அன்று தான் லிப் ரீடிங்கில் கவனித்ததை கூறிய ருத்ராவை பார்த்த சந்திரா, 

“எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றேன் ருத்ரா. நீ கவலைப்படாம இரு” என்று கூறி விட்டு, ஒரு இடத்திற்கு செல்ல தன் ஜீப்பில் ஏறிய சந்திராவின் மனதில் ஆதி எங்கே என்ற கேள்வி மட்டுமே சுற்றி வந்தது. 

# # # # # 

துன்பமே எல்லை என்று
தேம்பினால் ஏது தீர்வு? 
யாவுமே இயல்பானது…
தேய்கின்ற பிறையை போலே
தீமைகள் அழிந்தே போக
நல்லது நடக்கட்டுமே! 
தேடாமல் ஏதுமில்லை
வாடாமல் பூவுமில்லை
நம்பிக்கை விதையாகுமே! 

#  # # # # 

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

#  # # # # 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!