அலை ஓசை – 15

அலை ஓசை – 15
அலை ஓசை – 15
வெயிலும், மழையும்
காதல் கொண்டது போல..
வெயில் தன் காதலை
கூற வரும் பொழுதுகளில்
நாணனத்தில் மேகங்களுக்குள்
மறைந்துகொள்கிறது மழை!
மழை தன் காதலை
கூற வரும் பொழுதுகளில்
காணாமல் போகிறது வெயில்!
மழையின் சுவடுகளை
பொக்கிஷமாக தன்னுள்
சேர்கிறது வெயில்…
கொள்ளும் துன்பத்திற்கு
மருந்திட்டு வைத்தியம்
பார்க்கிறது மழை!
வெயிலும் மழையும்
தங்கள் காதலை கூறும் போது
பூக்கிறது வானவில்!
அந்த காதல் பூவான வானவில்லை ரசித்து கொண்டே குட்டி மா தன் ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தாள். சிக்னலில் நிற்க, அருகே இருந்த காரில் ஓர் சிறுவன், தன் அருகில் இருந்த ஓர் சிறுமியை சமாதானம் செய்து கொண்டு இருக்க, பார்த்து கொண்டிருந்த குட்டி மா மனமோ, தன் தனாவின் நினைவை அசைப்போட்டது.
“தர்மா இங்க வா.. ” என்ற பாட்டியின் அதிகாரமான குரலில் முதலில் பயந்த தர்மா, ‘என்னாச்சு ‘ என்று தன் தாயிடம் கண்களாகவே கேட்க, ‘தெரியலையே.. நீ என்ன பண்ண’ என்று பார்கவியும் கண்ணிலே பதில் கூற, ‘குட்டி எங்க ? ‘ என்று இவன் அபிநயம் பிடிக்க, ” கூப்பிட்டது காதுல விழலையா ” என்ற பாட்டியின் குரலில் தாயை ஒரு அவசர பார்வை பார்த்து விட்டு, அவர் அறைக்கு சென்றான்.
“சொல்லூங்க பாட்டி. நான் என்ன பண்ணின்னேன்? நீங்க கோப படுற அளவுக்கு? ” என்று பவ்யமாக கேட்க,
“நீ என்ன பண்ணல னு கேளு? ” என்ற பாட்டியை அப்பாவியாக பார்த்தான்.
“குட்டி மா ஏதாச்சும் பண்ணினாளா பாட்டி? ” என்ற பேரனை மெச்சுதலாக பார்த்தார். அவரின் பார்வை புரிந்து கொண்ட பேரனும் “நான் இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வரேன் பாட்டி” என்று கூறி தன் குட்டி மாவை தேடி சென்றான்.
அங்கே அவனது குட்டி மாவோ அழுது வீங்கிய முகத்துடன் இருந்தாள். ‘என்னாச்சு? ‘ என்று கண்களிலேயே தன் நண்பனிடம் கேட்க,
“ரொம்ப நேரமா கேட்குறேன் மச்சான்.. பதிலும் சொல்லல.. அழுகையும் நிறுத்தல.. ” என்று பல விதமாக கேட்டும் பதில் சொல்லாததால், அலுத்து போன குரலில் சின்னா கூற,
அப்போது தான் தன் தனாவை கண்ட குட்டி மா, அவனை இறுக அணைக்க, தாயிடம் தஞ்சம் புகும் குட்டியை போலவே தர்மாவிற்கு தோன்றியது.
அழுகை ஊடே, “இன்னிக்கு ஸ்கூல்ல ஸ்கௌட்ஸ் அண்ட கைட்ஸ்க்கு நாங்க எல்லாரும் பேரு கொடுத்தோம். நீ சொல்லி தான நான் கொடுத்தேன் இப்போ கேம்க்கு டெல்லிக்கு கூட்டி கிட்டு போறாங்க. கண்டிப்பாக எல்லாரும் கேம்க்கு வரணும் என்று மேம் சொல்லிட்டாங்க. ஆண்டி அன்கிங் ஓகே சொல்லிட்டாங்க. பாட்டி தான்…” சொல்ல முடியாமல் அழுகை அருவியாக குட்டி மாவிற்கு பெருக,
“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடா. நீ பார்த்துக்கோ” என்று சின்னா இல்லாத வேலையை செய்ய சென்றான், தர்மாவை ஓர் அர்த்த பார்வை பார்த்து விட்டு.
“நல்ல பிரண்ட் தான் போடா” என்று செல்லமாக தன் நண்பனை திட்டி விட்டு, தன்னை இறுக அணைத்த தன் குட்டியை தன்னிடம் இருந்து பிரித்து,
“குட்டி, பாட்டி சொன்னதுக்கு அழுகுறியா? ” என்று கேட்க, பதில் சொல்ல தயங்கியவளை, “உன் தனா தான கேட்குறேன், சொல்லுடா குட்டி” என்று உன் தனாவில் அழுத்தம் கொடுக்க, ‘ஆம்’ என்று தலையாட்ட,
“குட்டி மா, பாட்டி அப்படி சென்னா, நீ என்ன பண்ணி இருக்கணும்? இப்படிலாம் சொல்லாதீங்க, நான் டெல்லி போய், என் திறமையை காட்டணும், கேம்ல போட்டி நடக்கும். அதுக்கு ஜெய்க்க என்னை என்கரேஜ் பண்ணி அனுப்பி வைங்க என்று கோட்டுறுக்கலாம் ல. நமக்கு வேணும் னா நாம தான் அடம் பிடிச்சி கேட்கணும் குட்டி மா. யாருமே நம்ம வளர்ச்சிக்கு தடை பண்ணுறது இல்லை. நாம தான் பண்ணிகிறோம். மத்தவங்க மேல அந்த பழிய சுமத்திடுறோம். போடா, பாட்டி கிட்ட பேசு ” என்று தர்மா தைரியம் கொடுக்க, பாட்டியின் அறைக்கு அவன் குட்டி மா சென்றாள்.
அவளை தைரியமூட்டி அனுப்பி வைத்தானே ஒழிய, இவனது மனம் பதரத்தான் செய்தது. பாட்டியின் அறையில் இருந்து வந்த குட்டி மாவின் முகமே கூறியது, மிஷன் வெற்றி என்று.
“என்ன மச்சான், குட்டி மா முகத்த பூய்ஸ் போன பல்ப்ல இருந்து ஆயிரம் வாட்ஸ்க்கு மாத்திட்ட போல” என்று சின்னா கேலி செய்ய, தன் அக் மார்க் சிரிப்பையே பதிலாக தர்மா கொடுத்தான்.
தன் தனாவின் சிரிப்பை எண்ணி சிரித்த குட்டி மாவை, ‘சிக்னல் போட்டுட்டாங்க.கிளம்பல?’ என்ற தன் கோபத்தை ஹாரன் மூலம் மக்கள் வெளியிட, நினைவிற்கு வந்து கிளம்பினாள்.
# # # # #
இளஞ்சிவப்பு நிற ஒளிக்கதிர்கள் சுற்றிலும் இருந்த புகைமூட்டத்தை தாண்டி தரையைத் தொட, ஒவ்வொரு முறையும் முயன்று முயன்று தோற்றுக் கொண்டிருந்தது. மெல்லிய மேல்நாட்டு இசை கசிய, அந்த இடமே பூலோகத்திற்கு அப்பாற்பட்ட இடம் போல காட்சியளித்தது. அந்த இடத்திற்கே உரிய ஒரு வித மயக்கம், ஒரு வித போதை அங்குள்ளவர்களிடம் காணப்பட்டது.
ஆம். போதை தான். உலகில் பல் வேறு நாடுகளிலும் தடை செய்யப்பட்ட பல போதை பொருட்கள் சர்வசாதாரணமாக புழங்கும் இடம் அது. இத்தகைய இடம் பூமியில் உண்டு என்பது கூட பலருக்கு தெரியாது. பல கேடுகெட்ட திட்டங்களின் துவக்கப் புள்ளி இது. பலரது வாழ்வை நாசமாக்கும் போதை வஸ்துக்களின் பிறப்பிடம் இது.
பல ரகசிய பரிவர்த்தனைகளின் மையம் இது. ஆள் கடத்தல் முதல் ஆயுதக் கடத்தல் வரை, இங்கு எதுவாயினும் நடக்கும் பணமிருந்தால். அத்தகைய இடத்தில் தானும் ஒருவனாக அமர்ந்திருந்தான் அவன். அவன் கண்களில் போதையையும் தாண்டிய வெறி பல வருடங்கள் கழித்து, வெற்றிக் கனியை சுவைக்கப் போகும் ஆனந்தம், அவன் முகத்தில் தாண்டவமாடியது.
அவன் நினைத்தது நடந்தால், உலகின் அத்தனை மாஃபியாக்களையும் தன் கைக்குள் அடக்கி, அத்தனை இல்லுமினாட்டிக்களுக்கும் முடிசூடா சக்கரவர்த்தியாக மாறிவிடலாம்.
அங்கு அவன் கனவை கலைத்தது அருகில் கேட்ட “பாஸ்” என்ற சத்தம். தன் கனவைக் கலைத்தவனை ஓங்கி அடித்ததற்கு பின் தான் அவன் வந்த காரணத்தை வினவினான். அவனிடம் அடி வாங்கியவனோ, பயத்துடன் அவன் போனை கொடுத்தான்.
“பாஸ் . நான் ஜான்சியோட அப்பா சக்ரவர்த்தி. நாம நினைச்சது சரி தான் பாஸ். என் மகள் காணாம போய்ட்டா. நடக்கறத எல்லாம் பார்க்கும் போது, எனக்கு என்னவோ நம்மல, அந்த சேனா பழி வாங்கறானோனு தோணுது. நம்ம பார்ட்னர்ஸ் எல்லாம் ஒவ்வொரு தரா காணாமல் போகறாங்க. இப்போ, மிச்சம் இருக்குறது, நான் அப்புறம் நீங்க. எனக்கு என் பெண்ணை நினைச்சா ரொம்ப பயமாக இருக்கு. அவ நல்லது பக்கம் தான் நிப்பா. அதோட அவ உங்க அண்ணன் பையனோட லவ்வர் வேற” என்று நடுங்கும் குரலில் கூற, போனை அப்படியே தூக்கி எறிந்தான்.
அவனது அடியாள் நடுங்கிய படி சில போட்டோக்களை கொடுக்க,அந்த இடமே அதிரும் வண்ணம் இடியென சிரித்தான்.
“உன்னை நான் அப்போவே அழிஞ்சியா இல்லையான்னு ஒழுங்கா பார்த்து இருக்கனும். நீ செத்துட்டனு விட்டேன். தப்பா போயிடுச்சு. உன் அப்பன் புத்தி அதே போலீஸ் தனத்தோட உனக்கு ஊறி போய் இருக்கு. உன்னை அழிச்சு உன் நண்பனையும் உன் கிட்ட இருந்து பிரிச்சு, அவன் சொத்த என் கைவசம் வைக்கல, நான் சக்குபாய் இல்லடா. இனி என் கனவ யாரு நினைச்சாலும் தடுக்க முடியாது.. எப்படியும் நீ நினைத்த மாதிரி என் அண்ணன் பையன் அன்பே ஆருயிரேன்னு வருவான். அவன் கூடவே ஐம் கம்மிங் ஃபார் யூ” என்றான்.
ஆம் அவன் தான் கதையின் வில்லன். சற்று வயதான வில்லன். வயது ஏற ஏற மனதினின் மனதில் அமைதியும் அன்பும் வளருவது இயல்பு. இவனது மனதிலே வன்மமும் வன்முறையும் வளர்ந்து, ஆலமரமாக வளர்ந்திருந்தது.
யார் மடிந்தால் எனக்கென்ன… நான் மட்டும் சந்தோஷமாக, சுகபோகமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இவனைப் பார்க்கும் அனைவருக்குமே தொற்றிவிடுமளவிற்கு சுயநலத்தின் மறுஉருவம்.
அவன் கையில் சிக்கிய பலர் நரக வேதனை அடைந்து இறந்திருக்கின்றனர். பலர் இவனிடம் மாட்டி கொள்ள கூடாது என்று தற்கொலை செய்தும் இறந்திருக்கின்றனர். ஆக மொத்தம் இவன் பார்வை படும் இடம் எல்லாம் சர்வநாசம் தான்.
இப்போது யாரைத் தேடிச் செல்லவிருக்கிறான்.. இல்லை இல்லை தன்னைத் தேடி வரச் செய்வான் அரக்கன் அவன். அகோரிகள் தங்களின் சுயநலத்திற்காக ஆயிரம் உயிர்களை பலியிடுவார்களாம், கதையில் கூறுவார்கள். அதே போல் தான் இவனும்.
அதற்காக இவன் பார்ப்பதற்கு அந்த அகோரிகளை போல , உடல் முழுவதும் ரத்தம் அப்பி, மண்டை ஓட்டை கழுத்தில் மாட்டி என்று காண சகிக்காத தோற்றத்தில் இருப்பான் என்றில்லை. டிப் டாப்பாக உடை அணிந்து, பழி சொல்ல முடியாத நல்லவனின் தோற்றத்தில் உலவும், கேடு கெட்டவர்களில் அவனும் ஒருவன்.
# # # # #
கானகத்தின் ராஜாவாம்
சிங்க கூட்டத்திற்கு,
தந்திரமே உருவான
ஓநாய் துணையாய் இருந்தால்,
கானகத்தின்
கதி என்னவோ?
சிங்கத்திடம் அறிவுரை
கூறும் மந்திரிகுரங்கின்
நேரமும் வீணோ?
யார் சொல்லி யார் கேக்க?
அனுபவமே பாடமோ?
# # # # #
சக்குபாய் எண்ணியது போலவே அந்த நெடியவனின் மனம் ஜான்சியை எண்ணியே கவலையில் கனன்று இருந்தது. முதலில் தன் தம்பியை இழந்தது போல், இப்போது தன் காதலியையும் இழக்க அவன் மனம் தயாராக இல்லை.
எப்போதும் தன் காதலை யாசித்து நிற்கும் ஜான்சி, அவனது இதய ராணி கண் முன்னே தெரிய, ஏன்டி என் மேல அத்தனை அன்பை வைச்ச. என் நேரம்டி என் மேல அன்ப பொழியரவங்களோட என்னால சேர்ந்து சந்தோஷமா வாழ முடியாத சாபத்தை வாங்கி தொலச்சிருக்கேன். உனக்கு எதுவும் ஆக நான் விடமாட்டேன் டி . நான் வந்துட்டே இருக்கேன் டி”.
டெலிபதி மூலம் பேச முடியுமா என்ற ஆராய்ச்சியில் இறங்கி இருந்தான் அந்த நெடியவன். தொடர்பு கிடைக்காது என்ற உண்மையை அவனுக்கு யார் சொல்வது?
# # # # #
ஜான்சிஅடைத்து வைத்த இடத்திற்கு சென்ற தர்மா, அவள் இருந்த எட்டாவது மாடியை அடைந்தனர். ஜான்சி,பார்ப்பவர்களை ஒரு நிமிடம் திரும்பி பார்க்க வைக்கும் அழகு கொண்டவள். நர்ஸ் வேலைக்காக தன் சொந்த வாழ்க்கையை கூட தியாகம் செய்தவள். சாந்தமான முகம். கோதுமை நிறம். வேட்டைக்கு செல்லும் சிங்கத்தின் வீரத்தை காண வேண்டும் என்றால் இவளை பார்த்தாலே போதுமானது. எனினும், குழந்தைகளிடம் அன்பு செலுத்துவதில் அவர்களின் தாய்மார்களுக்கு ஒப்பானவள்.
அவளை பார்த்து கொண்டே வந்த தர்மா ஒரு நிமிடம் ஆடித்தான் போனான். மயக்க மருந்து கொடுத்தும், நாற்காலியில் இறுக்கமாக கயிறு போட்டு கட்டியும், அவன் வந்தததை உணர்ந்த அவள், “வெல்கம்” என்று கூறியதை கேட்டு.
“நீங்க தான் என்னை கடத்தி வைத்து இருக்கீங்க. எதுக்கு? ” என்று கேள்வி கேட்க,
“அவசியம் தெரியனுமா? ” என்று தர்மா எதிர் கேள்வி கேட்க,
“எனக்கு தெரிஞ்சி எந்த தப்பும் நான் செய்யலை. என் அப்பாவுக்காகவா இல்லை என் காதலனுக்காகவா, தர்மா ப்ரோ”, உன்னை எனக்கு தெரியும், கடத்தின காரணம் மட்டும் சொன்னால் போதும் என்ற ரீதியில் கேட்க,
” நான் தர்மான்னு எப்படி தெரியும்? ” யூகித்தபடியே கேட்க, “சிசிடிவில தான். எங்க ஹாஸ்பிடல் சீப் டாக்டரை எதுக்குற அளவு தைரியம் யாருக்கு என்று தெரிஞ்சிக்க பாத்தேன். ரொம்ப கஷ்டப்பட்டு தான் உங்களை கவனிக்க வந்துச்சு. நல்லது பண்ண தான் வந்துருக்கீங்கன்னு சிசிடிவி ரெகார்ட்ஸையும் அழிச்சாச்சு. அப்போ தான் உன் ஆள் என்னை கடத்தினான். நிச்சயம் என் காதலனோட பிரண்ட் தப்பானவனா இருக்க வாய்ப்பில்லை என்று நம்பறேன். போட்டோல மட்டுமே உங்களை பார்க்க முடிஞ்சது. இப்போ தான் உயிரோட நிக்குற உங்களை நேர்ல பார்க்க வாய்ப்பு கிடச்சி இருக்கு” உன் நடவடிக்கையால் அல்ல, என் காதலன் மேலுள்ள நம்பிக்கையடா என்ற ரீதியில் பேசிய ஜான்சியை,’ஜாடிக்கு ஏத்த மூடிதான்’ என்று தர்மா தனக்குள்ளேயே சிரித்து கொண்டான்.
“ம்ம்.உங்க அப்பனுக்கு அவன் பண்ணத நியாபக படுத்த வேண்டி இருக்கு. அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு. உங்களை வச்சி தான் அவன இங்க கொண்டு வர வேண்டி இருக்கு! ” என்று தர்மா பொறுமையா கூற,
“அப்படி நியாபக படுத்துற அளவுக்கு அப்பா என்ன பண்ணினாரு? ”
“நேரம் வரும்போது அதை நீங்க தெரிஞ்சுபீங்க” என்று சொல்லியபடியே மயக்க மருந்து ஸ்பிரேயை அடிக்க, அதன் தாக்கத்தில் ஜான்சி மயங்கினாள்.
மயிலை போல சிங்கத்தை போல அழகு தான் ஆண்மைக்கு, வீரம் பெண்மைக்கு தான் என்ற ஜான்சியின் எண்ணத்தை தர்மா அவனை அறியாமலே முறியடித்து விட்டான். பெண்களை தன் வசம் இழுப்பது மட்டுமே ஆண்களின் வேலை என்றும், பாதுகாப்பது ஒவ்வொரு பெண்ணின் வேலை என்றும் இருந்த ஜான்சி எண்ணத்தை தர்மா முறியடித்து விட்டான், அவனை அறியாமலே!
# # # # #
அழகின் போதை!
குணத்தை மறைக்க…
வேலை போதை!
வீட்டை மறைக்க…
சோகபோதை!
சிரிப்பை மறைக்க…
இறப்பின் போதை!
வாழ்வை மறைக்க…
பயத்தின் போதை!
நலத்தை மறைக்க…
எல்லாம் போதை!
பேதை உலகில்…
போதை போதை
போதை தேடி!
நிஜத்தை மறந்து
வீழும் வாழ்க்கை!
# # # # #
வெயிட் அண்ட் வாட்ச்…
அலைகளின் ஓசை அடங்குவதில்லை…
# # # # #