அலை ஓசை 16

sea2-4592c131

அலை ஓசை 16

அலை ஓசை – 16

ஒரு வேகத்தில் அந்த இடத்திற்கு வந்து விட்டாள். தினமும் மலராய் மலர்ந்து வாசம் வீசும் மனதில் , அந்த நொடி, ஆயிரம் குழப்பங்கள் வண்டாய் சுற்றி , அவளை குழப்பியது.

‘தான் நினைப்பது சரி தானா? தான் இங்கு வந்தது, ஒருவேளை அதிகபடியோ? ‘ என்று பல கேள்விகள் மூளையில் முளைத்த போதும், மனதோரம் ‘கண்டிப்பாக இங்கே ஒரு தடயம் கிடைக்கும்’ என்ற குரல் சந்திராவிற்கு கேட்டு கொண்டே இருந்தது.

அவள் என்றுமே தன் மனக்குரலை உதாசீனம் படுத்தியதே இல்லை. ஒரு முறை, அவ்வாறு செய்ததே அவள் ஆயுள் இருக்கும் வரை மறக்கமாட்டாள். நிமிர்ந்து நோக்கினாள்.

கம்பீரமாய் பலகை அந்த பெயரை தாங்கி இருந்தது, ‘சேனா பிரைவேட் க்ரைம் பிரான்ச்’ என்று! எந்த இடத்திற்கு தான் வரவே கூடாது என்று கங்கனம் கட்டி கொண்டு இருந்தாளோ? எந்த இடத்தால் , தன் வாழ்வின் உயிர் நாடியையே தொலைத்து இருந்தாளோ? அதே இடத்திற்கு வந்திருந்தாள், சந்திரா!

அவள் மனதோடு போராடி கொண்டு இருந்த போதே, அவளை கவனித்து, அவளை வரவேற்க, அந்த பிரான்சின் அலுவலர் உக்கிரன் வந்தான்.ஆம் தர்மாவின் நண்பனே தான்.

“வராதவங்களாம் இங்க வந்துருக்காங்க? வாங்க சந்திரா மேடம்! ரொம்ப வருஷம் ஆச்சு பார்த்து! புயல் காற்றே எங்க பக்கம் வீசுது. உள்ள வாங்க, ப்ளீஸ்! ” நாக்கில் கிண்டல் இருந்தாலும், உடல் மொழியில் மரியாதையே தோன்றியது, அவனிடத்தில்!

“வர வேண்டிய சூழல் வந்தா, வந்து தானே ஆகனும் உக்கிரா. என்ன பண்ணுறது? நடக்குற தப்புக்கு எல்லாம் தண்டனை சட்டம் தருவதுக்கு படியா, நாங்க தான் தருவோம்ன்னு திரியுறீங்களே! என்ன பண்ணுறது? ” சந்திரா பேச்சில் விஷத்தை ஏற்றி பேச,

“சட்டம் சரியா இருந்தா, நாங்க ஏன் இந்த வேலை பார்க்க போறோம்? ” என்று உக்கிரனும் மறைமுக தாக்கலில் இறங்க,

உக்கிரனின் பெயரின் அர்த்தத்தை சந்திரா தன் கண்களில் கொண்டாளோ? அவள் கண்களில் அனல் பறக்க, “சட்டத்தை காக்கிறது எங்க கடமை… நாங்க நல்லவர்களை காக்குறோம் ஆக்குறோம்ன்னு, சட்டத்தை நீங்க கையில எடுத்து, பொதுசேவைங்கிற பேருல சட்டவிரோதமான செயல்களை செய்றீங்கன்னு தெரிஞ்சா, உங்க மேல நடவடிக்கை எடுக்க நான் கொஞ்சம் கூட பாவ புண்ணியம் பாக்க மாட்டேன்”

அங்கு இருந்தவர்கள் அனைவரும் அவளது கோபத்தின் காரணத்தை அறிந்தே இருந்தும், உக்கிரனின் கண் ஜாடையில் அடங்கி, தங்கள் வேலையில் ஈடுபட்டு இருந்தனர், ஒரு பெண்ணை தவிர!

அவள், அவர்களின் பேச்சில் , உக்கிரன் எங்காவது தனது தர்மாவை பற்றி பேசி வைப்பானா என்று ஆர்வத்தோடு காத்திருந்தாள். பலன் பூஜ்ஜியமாகி போனதால் வருத்தமடைந்த அத்தாய், அந்த அலுவலகத்தின், தன் தர்மாவின் அறைக்கு சென்றாள். அதை அங்குள்ளவர்கள் கவனித்த போதும், அவள் மனநிலையை அறிந்ததால், தடுக்கவில்லை.

தர்ம சேனா, பிரான்சு ஃபௌன்டர் ‘ என்ற பெயர்பலகையை கையில் தாங்கிய நொடி, தன் தனாவின் இரவு நேர ரகசிய பணியை தான் கண்டது அவளுக்கு நியாபகம் வந்தது.

தர்மா அறுவைச் சிகிச்சையை தனியே நடத்த பயிற்சி எடுத்த கொண்டிருந்த காலம் அது. ஒருநாள், குட்டிமா அவளது நண்பியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்து கொண்டு வீடு திரும்பும் வழியில், யாரோ ஒருவர் வீட்டின் முன், பலபேர் நின்று கொண்டு இருந்ததை கண்டு, ஆர்வத்தில் அருகே  செல்ல, வேறு ஒரு தோரணையில், தன் தனாவை அங்கு அவள் எதிர்பார்க்கவில்லை.

அருகில் இருந்தவரை என்ன நடந்தது என்று இவள் கேட்க, “நாலு அஞ்சு பசங்கமா. வேட்டைக்கு போன ஓநாயாட்டம். நடுல ஒரு ஆட்டுக்குட்டி சிக்கினா என்ன ஆகி இருக்கும். நல்ல வேலைமா, நம்ம தம்பி வந்து, சிங்க தோரணைல எல்லாரையும் வழக்கம் போல ஒரு காச்சு காச்சி எடுத்துட்டாரு” தர்மாவை தான் அவர் சுட்டிக்காட்டி பேசிய படி இருக்க, கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு தான், கத்தி தூக்கி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவன், கையில் துப்பாக்கி தூக்கி சுத்துறானே என்ற ஆதங்கம் மேலிட்டது.

அவனை அவள் பார்த்தது போல, அவனும் அவளை பார்த்து விட்டானோ, கண்ணால் அழைத்து, அவளை அந்த கிரைம் பிரான்ச் அழைத்து வந்து, அவன் கூறிய காரணங்கள் இன்னும் அவளுக்கு காதோரம் கேட்டதோ! “டாக்டர்ஸோட வேலையே உயிரை காப்பாத்துறது தான குட்டிமா! அதுவும் என்னோட வேலை , ஒரு உயிர் இல்ல, ரெண்டு உயிரை காப்பாத்துறது. அப்படி இருக்கும் போது கத்தி எடுத்தா என்ன?! துப்பாக்கி எடுத்தா என்ன! எல்லாம் ஒன்னு தான?”அவன் கூறிய வார்த்தைகள் இன்னும் மனதில் பசுமையாய்…

பேச்சு குரல் கேக்க, மீண்டும் வெளி வந்து வேடிக்கை பார்க்க, சந்திரா தான், ” கல்ப்ரிட் எல்லாம் கிரைம் பிரான்ச் வெச்சி நடத்தினா, நாங்க தான உக்கிரன் அத நிறுத்தணும், இல்லையா?” அவளின் பேச்சில் வீரியம் கூட. “எப்படி மேடம் நாங்க தான் கல்ப்ரிட் என்று அவளோ ஸ்ட்ரோங்கா சொல்லுறீங்க?” உக்கிரனும் விடாமல் குடைய,

” அதே பாணி, ஆளை கடத்தி வச்சி போலீஸ்கு க்ளு கொடுத்து , மொத்த கேஸையும், எங்களையே உங்க இஷ்டத்துக்கு பண்ண வைக்கிறது? அதோட போரென்சிக் ரிப்போர்ட்டர் சேகர் வேற, ஒரு டாக்டர் தான் நிழல் உருவம்னு சொல்லுறான். சோ ஆல் புட் டுகெதர், உங்க தர்மாவால தான இது எல்லாம் பண்ண முடியும்!”

அவள் கூறிய விதத்தில் சிரித்தே விட்டான். “என்ன மேடம், அந்த ஸ்டைல் எல்லாம் எங்க பாஸ் ஓடது தான். அவரு தான் இறந்து போய்ட்டாரே. கேஸ உங்க கமிஷனர் தான மூடினார்!” உக்கிரனின் வார்த்தையில் வருத்தம் இருந்ததோ! அதையும் சந்திரா அறிந்தே தான் இருந்தாள்.

‘தர்மா தான் எல்லாவற்றையும் செய்து இருப்பானோ?’ என்ற அவளது நப்பாசையும் வடிந்து விட, ஆனாலும் அவள் உள்ளுணர்வு அவனே தான் என்று சத்தியம் செய்ய, “என்னவோ நீங்க சொல்லுறீங்க, நம்புறேன் ” என்று சொல்லி, சென்று விட்டாள், தன் அடுத்த கட்ட வேலைகளை மனதில் உறுபோட்டபடி! தாயும் தொய்வான நடையில் சென்று விட, செல்லும் அவ்விரு பெண்களையும் உக்கிரன் பார்த்து இருந்தான், இரு வேறு எண்ண ஓட்டங்களோடு!

# # # # #

இரவின்றி வாழ்ந்திருந்தேன்
வெண்ணிலவாய் வந்தாயே!!
இடமின்றி வாழ்ந்திருந்தேன்
உன் இதயத்தை தந்தாயே!!
என்னை தேடி அலைந்தேன்
உன்னில் என்னை கண்டேன்!!
காதலே காதலே
ஊஞ்சலாய் ஆனேனே!!
நான் அங்கும் இங்கும்
அலைந்திட தானா சொல்?!!

# # # # #

ஜான்சியின் நம்பருக்கு கால் செய்த வண்ணம் இருந்த நம் நெடியவன், ஒரு கட்டத்தில் நொந்து போக, அந்த ஹாஸ்பிடல் டீனுக்கு கால் செய்ய, அப்போ தான் அவனுக்கு தன் காதலி கடத்த பட்ட விவரமே தெரிய வந்தது. உடனே , சில பல கால் செய்து , சில பல உத்தரவுகளை செய்த நம் நெடியவன், தன் சொந்த ஹெலிகாப்டரில் மும்பை நோக்கி பயணம் செய்ய ஆயத்தமானான்.

ஏனோ சக்குபாயின் விடாத, “நானும் உன்கூடவே வரேன்” என்ற தொனப்பலில் என்ன நினைத்தானோ, அவரையும் சேர்த்து கொண்டான். “எல்லாம் அந்த தர்மாவோட வேலையா தான் இருக்கும். என்ன கண்டிப்பா மாட்ட வைக்க தான் அவன் இவ்ளோத்தையும் செய்யணும். கண்டிப்பா தர்மாவும் இவனும் பாத்தாங்கனா பழைய குப்பை எல்லாம் கிளறுவாங்க. அப்டி கிளறினா, அந்த நாற்றம் எல்லாம் என்னோடததா தான் இருக்கும். கூடவே போய் எல்லாத்தையும் கலைக்கும்”, சக்குபாயின் எண்ணமாக இருக்க ,

“ஜக்குபாய் அப்பாவோட வேலை எதுவும் சரியா இல்ல அண்ணா. நான் உன்கூட ரொம்ப அவசரமா பேசணும். நீ சீக்கிரம் இங்க வா அண்ணா. அர்ஜெண்ட் அண்ணா”, பதட்டமே வராத அவனது தம்பி ராக்கியின் குரலில், பதட்டத்தை பார்த்தவன், உடனே கிளம்ப எத்தனிக்க, தொடர்ச்சியா வந்த சம்பவங்கள் அவனது நேரத்தை கத்தியபடி இருக்க, நேரில் சென்று பார்த்தது என்னவோ தம்பியின் காணாமல்போன அறிக்கையை தான்.

“நான் உன்னோட சேனாடா … என் ராஜா எப்போதும் நீ தான்! ராஜா எந்த தப்பான வழிக்கும் போகாம பாத்துக்கறது இந்த சேனாவோடபொறுப்பா இருக்கும். உனக்கு தெரிய வேண்டிய உண்மைகள் எவ்வளவோ இருக்குடா. அது எல்லாம் சொல்ல விடாம என்னை நீ இப்டி அடிக்கற” , தன்னோட அடிகளை வாங்கிய போது கடைசியாக தன் நண்பன் சொன்ன வார்த்தைகள் ஏனோ தன் மனதோடு தோன்ற, ‘உங்க ரெண்டு பேரையும் நான் அன்னிக்கே பேச விட்டுருக்கணுமோ ? இன்னிக்கு வர சந்தேகமும் பொறுமையும் அன்றைக்கு வந்து இருந்தா ஒரு வேல உங்க ரெண்டு பேரையும் நான் இழந்து இருக்க மாட்டேனோ?’ என்று காலம் கடந்து யோசித்தான் நம் நெடியவன்!

# # # # #

ஆயிரம் கோடி
ஆசைகள் உண்டு
கை அளவு இதயத்திலே…
தீர்மானம் எல்லாம்
செயலில் காட்ட மனிதன்
இறைவனாகவும் முடியலையே…
எவரின் செயல்கள்
தர்மமோ அதுவே
வெற்றி பெறுமே …
அவரின் ஆசைகள்
நிறைவேற ஆண்டவனும்
உதவி புரிவாரே!!!

# # # # #

ருத்ரா , அவன் ஒரு வகையில் கேசின் முக்கிய புள்ளி நோக்கி சென்று கொண்டு இருந்தான். முதலில் அவன் மனதில் தோன்றிய சந்தேகத்தை தீர்த்து கொள்ள, ஆதி மெயில் அனுப்பிய வாட்ஸாப் குரூப் மெம்பெர் லிஸ்டும், கமிஷனர் ஆதி கொடுத்ததாக கொடுத்த லிஸ்டும், ஒன்னு தானா என்று கம்பர் செய்தான் ! இரண்டும் ஒன்று என்று அறிந்த பின் , அவன் செய்கைகள் துரிதமாகின.

மகேஷ், ரக்ஷன், தீரஜ், தீரஜின் மேனேஜர், சக்குபாயின் வலதுகை சக்ரவர்த்தியும் , இன்னும் ஐந்து அவனது அடியாட்கள் என இருந்த குரூப்பில், யார் இன்னும் நிழல் உருவத்தால் கடத்த படவில்லை என்று அறியமுற்பட்டான். இவர்களின் நோக்கம் உடல் உறுப்புகளை திருடுவதே என்று ஓர் அளவுக்கு யூகித்த ருத்ரா, அது மட்டும் தானா , இல்லை வேறெதுவும் உள்ளதா என்றும் கண்டறிய முற்பட்டான்.

அதோடு , இந்த நிழல் உருவம் எங்கு இருந்து எப்படி முளைத்தான் என்றும் அவனுக்கு தெரிய வேண்டி இருந்தது. அவனுக்கும் இவர்களுக்கும் என்ன விரோதம் என்றும் தெரிய வேண்டி இருந்தது.

அதோடு , அவனது மண்டையை குழப்பும் , மிக பெரிய குழப்பம், எதுக்கு கமிஷனர் விஷ்ணு உதவுகிறார் என்பதே! விஷ்ணுவை தவறான விதத்தில் கற்பனை கூட செய்ய முடியாத அவனால், கண்டிப்பா அந்த நிழல் உருவம் ஏதோ பெரிய உண்மையை கொண்டு வருவது போலவே மனதில் தோன்ற, தன்னால் முடிந்த அளவிற்கு உதவலாமே என்ற முடிவிற்கு வந்து இருந்தான், வந்துவிடப்பட்டான் என்று சொல்ல வேண்டுமோ?

# # # # #

கண்ணாமூச்சி ஆட்டம்
எவனோ ஆடுகிறான்!
என்னையும் அதனுள்ளே
அவனாகவே சேர்க்கிறான்!
யாரென்று நானும்
அலைந்து தேடினேன்!
விடை தான் ஏனோ
தெரியவில்லை!
விடை அறியும் சமயம்
என் நிலை என்னவோ?
அதையும் அவனே
கனகிடுவானோ?
அதையும் அறியேனே!!

# # # # #

வெயிட் அண்ட் வாட்ச்…

அலைகளின் ஓசை அடங்குவதில்லை…

# # # # #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!