அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 13

மறுநாள் காலை.. ஜீவா, யுக்தா இருந்த அறையில் இருந்து வெளியே வந்தவன்..
“ஏய்… ஃபேமிலி மெம்பர்ஸ் எல்லாரும் வெப்பன்ஸ்சோட கெளம்புங்க.. அந்த எரும கண்ணு முழிச்சிடுச்சு.. அட்டாக் பண்ண ரெடி ஆகுங்க” என்று சொன்னது தான் தாமதம் மொத்த குடும்பமும் யுக்தா இருந்த அறைக்கு விரைந்தது..

யுக்தா கலைந்த ஒவியமாய்க் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க.. அவள் அடிபட்ட தோள்பட்டையின் கையைத் தொட்டில் கட்டி தொங்கவிட்டிருந்தான் ஜீவா..

யுக்தாவின் அம்மா, அப்பாவிற்கு ரெண்டு வருடம் கழித்து மகளைத் திரும்பப் பார்த்ததில் சந்தோஷப்படுவதா? இல்லை குண்டாடி பட்டு ஹாஸ்பிடலில் இருப்பதை நினைத்துக் கண்ணீர் விடுவதா என்று புரியவில்லை.. ராமின் அப்பா சுந்தரம் யுக்தா தலையைத் தடவிய படி அவள் அடிபட்ட தோளையே வேதனையோடு பார்த்துக்கொண்டிருந்தார்.. இவர்கள் இப்படி என்றால் ஜீவா அம்மா கோதையும், வினய் அம்மா சாருமதியும் அழுவதை நிறுத்தவே இல்லை.. “எந்தப் பாவிபய, ஏ புள்ளைய சுட்டானோ அவன் கையில கட்டமுளைக்க” என்று ஊரில் உள்ள சாமிகள் பேரை சொல்லி சொல்லி சாபமிட..

“அதுக்கு இவளை சுட்டவங்க உயிரோட இருந்தானா மாம்மீஸ்.. அவங்க எல்லார் சோலியையும் உங்க ஆச பொண்ணு எப்பவோ முடிச்சிட்ட.. முதல்ல நீங்க கெளம்புங்க.. இங்க இருந்த நீங்க எல்லாரும் அழுதுட்டே இருப்பீங்க, பெருசுங்களா எல்லாரும் கெளம்பி ஓடுங்க.. நல்லவேள மீதி பெருசுங்க பிஸ்னஸ் வேலையா ஃபரீன் போயிருக்குங்க இல்லாட்டி இங்க ஒரு அழுகாச்சி சீரியலையே ஓட்டிருவீங்க.. என்னோட ஹாஸ்பிடல் பொழச்சிது டா சாமி.. அந்த எருமைக்கு ஒன்னு இல்ல போங்க முதல்ல” என்று எல்லோரையும் விரட்டி விட்டான் ஜீவா..

ராம் மற்றும் அனைவரும் யுக்தாவையே பார்த்துக் கொண்டிருக்க.. வினய் மட்டும் அவள் முகத்தைப் பார்க்காமல் “டேய் ஜீவா… இவளுக்கு ஒன்னு இல்லயே..?? நல்லா தானா இருக்க.?? பிரச்சன ஒன்னு இல்லயே..??”

“இப்ப தானா சொன்னேன்.. அதெல்லாம் ஒரு ப்ராப்ளமும் இல்ல வினய்.. அவ நல்லா கல்லுகுண்டாட்டம் தான் இருக்க.. இன்னைக்கே கூட வீட்டுக்கு நடத்தியோ, இல்ல ரோட்ல உருட்டியோ கூட்டிபோலாம்.. போதுமா..!?”

யுக்தா வினய்யையே அடித்து பார்க்க?? அவன் யுக்தா பக்கம் திரும்புவதாக இல்லை..!?

யுக்தா இழுத்து பெருமூச்சு விட்டவள்.. “ஜீவா எனக்கு எந்த ஷ்யூவும் இல்ல இல்ல??”

“ஏய் எரும எத்தனை தடவ சொல்றது.. உனக்கு ஒரு கேடுமில்ல.. புல்லட் லைட்ட ஒரசிட்டுத் தா போயிருக்கு.. நீ நல்லா தா இருக்க..”

“ம்ம்ம் ஓகே ஜீவா.. அப்ப பிரபுக்கு ஃபோன் போட்டு காரை அனுப்ப சொல்லு.. நானும் ப்ரணவ்வும் நாளைக்கே கூர்க் கெளம்புறோம்” என்று சொன்னது தான் தாமதம்.. வினய் கை மின்சாரமென யுக்தா கன்னத்தில் இறங்கியது.. அனைவரும் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் முழிக்க.. “டேய் ஜீவா இவளுக்குத் தா ஒன்னு இல்லையே நீ உடனே இவளா டிஸ்சார்ஜ் பண்ணு.. இன்னைக்குச் சாய்ந்திரமே இவளா வீட்டுக்கு கூட்டி போய்டுவோம்” என்று வினய் குதிக்க..

“நா எங்கயும் வரமாட்டேன்” என்று வீம்பாகச் சொன்ன யுக்தாவை முறைத்த வினய்.. “டேய் ராம் இவகிட்ட சொல்லு.. இவ வரலான்னு நா கேக்கல..!! வரணும்… வந்தே ஆகணும்னு சொல்றேன்.. டேய் ஜீவா இதுக்குமேல இவ எதாவது மறுத்து பேசுன இவ காலை ஓடச்சிடுவேன்னு சொல்லு.. அப்றம் இவ எங்க நகர்ரான்னு நானும் பாக்குறேன்.. மது நீ ப்ரணவ்வ கூட்டிட்டு வீட்டுக்கு போ.. நா இவளா இழுத்துட்டு வரேன்” என்றவன் அங்கிருந்த சேரை இழுத்து யுக்தா படுத்திருந்த கட்டில் அருகில் போட்டு உட்கார்ந்து கொண்டான்..

யுக்தா அவனை ஒரு முறைப்பு முறைத்தவள்.. “ம்க்கும்… இவரு இங்கயே உக்காந்துக்கிட்ட என்னால போக முடியாதக்கும்” என்று முகத்தைத் திருப்பிக்கொள்ள..

ஜானவியும், ராஷ்மியும் கூட யுக்தா கூர்க் போறேன் என்று சொன்ன கோவத்தில் அவளை முறைத்துக் கொண்டிருக்க.!? யுக்தா, “நீங்க எப்டி டி இருக்கீங்க.??” என்று கேட்டதுக்குக் கூடப் பதில் சொல்லாமல் வீம்பாக முகத்தைத் திரும்பிக் கொண்டனர்..

“ம்ம்ம் அதுசரி.. எல்லா நேரம் தான்” என்று அமைதியாக இருந்த யுக்தாவிற்கு நிஷா ஜூஸ் கொண்டு வந்து குடிப்பாட்டியவள்.. அவள் வாயை துடைத்துவிட்டு நகர..
“நீ எப்டி இருக்க நிஷா..??” என்ற யுக்தாவின் கேள்வியில் நின்று தோழியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்த நிஷா.. “அப்டியே தா இருக்கேன்” என்று வினய்யை பார்த்தவள்.. “நீ எங்க விட்டுட்டு போனீயோ இன்னமும் அங்கியே அப்டியே தான் நிக்குறேன்” என்றவள் திரும்பி அங்கிருந்த அனைவரையும் காட்டி..!! “அங்கயே தான் நிக்குறோம்.. எல்லாரும்” என்று அழுத்தி சொல்ல.. யுக்தாவிற்கு ஒரு நொடி உலகமே இருண்டு விட்டது.. “நீ…. நீ.. என்ன சொல்ற நிஷா.. நீயும் வினுவும், ஜானவி, ஜீவா, அண்ணா, அண்ணி” என்று நெற்றியில் கை வைத்தவள்.. சட்டென நிமிர்ந்து “அப்ப விஷ்ணு, ராஷ்மி கல்யாணம் என்னாச்சு” என்று அதிர..

“என்னோட பாடிகாட் இல்லாம நா எப்டி கல்யாணம் செஞ்சுக்க முடியும்” என்ற விஷ்ணு, ராஷ்மியை பார்த்து “ஆமா தானா ரஷூ என்க.. “கண்டிப்பா விஷ்ணு.. இவ இல்லாம கல்யாணத்துல நாத்தனார் முடிச்சு யார் போடுவாங்கலாம்” என்று தோள்களைக் குலுக்கிய ராஷ்மி கண்கள் கலங்கி இருக்க..

யுக்தா தலையில் அடித்துக்கொண்டவள்.. “ஆர் யூ நாட்ஸ்?? உங்க எல்லாருக்கும் அறிவு இருக்க இல்ல மூளைய தொலச்சிட்டிங்களா” என்று பல்லை கடித்தவள்.. “எனக்குத் தெரியும்.. நீங்க இப்டி எதும் கேனாத்தனமா செய்வீங்கணு.. என்னை நெனச்சு, நீங்க யாரும் கஷ்டப்பட்டு உங்க வாழ்க்கைய கெடுத்துக்கக் கூடாது., உங்க தனிப்பட்ட லைஃப் நல்லா இருக்கணும்.. நீங்க செட்டில் ஆகனுன்னு நா நெனச்சா..!! இதுங்க கல்யாணத்த பண்ணிட்டுப் பிரிஞ்சிருக்கு, நீங்க கல்யாணத்தையே நிறுத்திட்டு…. ச்சே” என்று கட்டிலில் குத்தியவள்.. “ஏப்பா..?? ஏன் இப்டி பண்றீங்க.. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கணும்னு தானே நா அடம்புடிச்சு உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வச்சேன்.. ஏன் இப்டி செய்றீங்க.??”

ஜானவி மெதுவாக யுக்தா அருகில் வந்தவள்.. “நாங்க சந்தோஷமா இருக்கணும்னு நீ நெனைக்கிற மாதிரி, நீ சந்தோஷமா இருக்கணும்னு நாங்க நெனைக்க கூடாத யுகி.. இதுல என்ன தப்பு.??” என்ற ஜானவியை முறைத்த யுக்தா.. “உங்க விஷயம் வேற என்னோட நெலம வேற ஜானு.. அத ஒரு காரணமா சொல்லாத.. ரெண்டையும் கம்போர் பண்ணாத ப்ளீஸ்” என்று பொறிய..”

“மே பீ யுகி.. ஆன நீ எங்கமேல வச்சிருக்க, அதோ அன்பை தா நாங்களும் உன் மேல வச்சிருக்கோம்.. அது உண்மை தானா.. அந்த ஒரு காரணம் போதாத” என்ற நிஷாவின் வார்த்தைக்கு மறுமொழி சொல்லமுடியாது தவித்த யுக்தா திரும்பி ராமையும், வினய்யையும் பார்க்க.. இருவர் கண்களிலும் தெரிந்த குற்றவுணர்வு அவளை ரொம்பவே வாட்டியது.. “நீங்க ஏன் இப்டி இருக்கீங்கன்னு எனக்குப் புரியுதுடா அண்ணா.. அத சரியாக்காம, நா இங்கிருந்து போனது என்னோட தப்பு தான்.. இனி உங்க எல்லார் லைஃப்பையும் பழைய மாதிரி ஆக்காம நா இங்க இருந்து போகமாட்டேன் டா.. அதுக்காக நா எதுவும் செய்வேன்.. எனக்கு எப்பவும் என் குடும்பமும், ப்ரண்ஸ்சும் தா பாஸ்ட்” என்றவள் ராமின் மூன்று வயது மகள் சமீராவை அருகில் அழைத்தாள்.. ரெண்டு வருடங்களுக்கு முன் குழந்தையாக அவளைக் கடைசியாகப் பார்த்தது.. சம்யுக்தா பேரின் ஒரு பாதியை எடுத்து சமீரா என்று தன் மகளுக்குப் பெயர் வைத்திருந்தாள் மது.. குழந்தையின் கன்னத்தில் ஆசையாக முத்தம் வைத்தவள் அதை அனைத்துக்கொண்டு அமைதியாகப் படுத்துவிட. அவள் அமைதியே அனைவருக்கும் அவள் முடிவை உணர்த்தியது..

சாயந்திரம் போல் ஆதித் யுக்தா இருந்த அறைக்குள் நுழைந்தவன்.. “தேங்ஸ் யூ யுக்தா.. ஒன்னுக்கு ரெண்டு தடவ என் உயிரை காப்பாத்தி இருக்கீங்க.. தேங்க் யூ சோ மச்..!!” என்றவனைக் கூர்ந்து பார்த்த யுக்தா..

“ரியாலி மிஸ்டர் ஆதித்..??” என்ற யுக்தாவை அவன் கேள்வியாகப் பார்க்க..

“ஐ நோ யூ வொரி வெல் மிஸ்டர் ஏசிபி சார்.. ஐபிஸ் முடிச்சு டியூட்டில ஜாய்ன் பண்ண இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட நீங்க குற்றவாளியை உயிரோட புடிச்சதே இல்ல.. எல்லாக் கேஸ்சும் என்கொண்டர் தான்.. யாருகிட்டையும் அடங்கிபோற டைப் இல்ல.. அடக்கி தான் பழக்கம்.. எல்லாரும் பயந்து ஒதுங்குற கேஸை எடுத்து முடிச்சி காட்டுறது உங்க பேஷன்.. வாய் பேசி பழக்கமில்ல, கைதான் அதிகமா பேசும்.. அதனாலயே பலதடவை ஹியூமன் ரைட்ஸ் கமிஷன் கிட்ட மாட்டி இருக்கீங்க.. ஆன??!! அதுல உங்க தப்பு ஏதும் இல்ல, உங்க ஒடம்புல ஓடுற ரத்தம் அப்டி.. கமிஷன் பரதன் அங்கிள் அண்ணன் பையனாச்சே, பரதன் அங்கிள் வம்சம் அப்டி தா இருப்பீங்க.. பரதன் அங்கிள் பையன் அவர் உயிர நா சேவ் பண்ணேன்னு சொல்றதை கேக்கும்போது எனக்கு சிரிப்பு வருது மிஸ்டர் ஆதித்.. ராமண்ணா மட்டும் உங்க கைய கட்டி போடாமல் இருந்திருந்தா அன்னைக்கு அந்தக் குடோன்ல எத்தனை டெட்பாடி விழுந்திருக்குமோ” என்றவள் புருவம் உயர்த்தி அவனைக் கூர்ந்து பார்க்க..

யுக்தா சொன்னதைக் கேட்டு ஆதித் அதிர்ந்து நின்றான்.. “ஏய்.. ஏய் அவரு என்னோட சித்தப்பான்னு உனக்கெப்டி தெரியும்.. இங்க சிலர் தவிர்த்து யாருக்குமே இந்த விஷயம் தெரியாது.. ராம் பாஸ்சுக்கு கூட ஒரு வருஷம் முந்தி தா தெரியும்.. எங்க அப்பாக்கும் சித்தப்பாக்கு ஆகவே ஆகாது.. ரெண்டு குடும்பத்துக்கு நடுவுல பேச்சு வார்த்தையே இல்ல.. இப்ப தா கொஞ்ச நாளா எதோ கொஞ்சம் சமாதானம் ஆகி இருக்காங்க.. அதுவும் கயல்விழி அக்காவை அப்பாக்கு புடிக்கும் அதனால..!! அப்டி இருக்க உனக்கு எப்டி இதெல்லாம்.?? அதுவும் நா இவ்ளோ நாள் அன்டர்கவர்ல இருந்தேன்.. என்னோட டீடெய்ஸ் உனக்கு எப்டி” என்று திகைத்தவன்.. யுக்தா முகத்தில் வந்து போன சின்ன இதழ் சுழிப்பை பார்த்து.. “ஏய்…!! இட் மீன்ஸ் நீ..!? நீ…!! ஓ மை காட்..” என்று இடுப்பில் ஒரு கையையும், தலையில் ஒரு கையையும் வைத்து அதிர்ந்து அவளைப் பார்க்க..

“மே பீ யூ டோன்ட் நோ அபௌட் மீ மிஸ்டர். ஆதித்.. ஐய் ஆம் ஏ குட் ஹேக்கர் (Hacker)” என்ற யுக்தாவை முறைத்த ஆதித்..

“ஏன்?? உன்னை பத்தி தெரியாது.. எல்லாம் தெரியும்.. சம்யுக்தா இளம்பரிதி.. ஐபிஸ் டாப்பர்.. தீ பெஸ்ட் ஒன் இன் தீ போட்ச்.. கோல்ட் மெடலிஸ்ட் இன் கன் ஷூட்.. பெஸ்ட் ரன்னர்.. எல்லா ஸ்போட்ஸ்லயும் டாப்பர்.. அதோட குட் மைண்ட் ரீடர்.. செம்ம ஹைக்யூ பவர்.. ஃபேமிலி, ப்ரண்ஸ்னா உயிரு.. உன்னை பத்தி எல்லாமே தெரியும்.. பட்..!!? கவர்மென்ட் சர்வர்ரையே ஹேக் பண்ணி என்னோட பர்சனல் டீடெய்ஸ் எடுக்குற அளவு பெரிய ஹேக்கர் ரா இருப்பேன்னு நா நெனைக்கல..??” என்று சிரிக்க”

“நீ எதுக்கு வந்தேன்னு பிரபு சொன்ன அடுத்த நிமிஷம் உன்னோட முழு ஜாதகத்தையும் நா எடுத்துட்டேன்.. பிகாஸ் பிரபுவோட சேப்டி எனக்கு ரொம்ப முக்கியம்.. அதோட நீயும் முக்கியம்” என்ற யுக்தாவின் வார்த்தையில் ஆதித் மனது இளம் தென்றலில் சிறகடித்துப் பறக்க. அடுத்த நொடி பொத்தெனக் கீழே விழுந்தான் யுக்தா சொன்ன வார்த்தையில்.. “பிரபு உன்னை பாத்துக்கச் சொல்லி சொன்னான்.. அதோட உன்னைக் கூர்க் அனுப்பி வச்சது என்னோட அண்ணா.. சோ உன்னைப் பாத்துக்க வேண்டிய பொறுப்பு எனக்கிருந்துச்சு” என்ற யுக்தாவை முறைத்த ஆதித் “ரொம்பத் தேங்ஸ்.. என்னைப் பாத்துக்கிட்டதுக்கு” என்று கடுப்போடு சொல்லிவிட்டுப் போனான்..

அன்று மாலையே பரிதி எவ்வளவு சொல்லியும் கேட்காமல் யுக்தாவை தன் வீட்டிற்கு இழுத்து வந்துவிட்டான் வினய்..

ஆதித்தும், ராமும் கூர்க்கில் சேகரித்த எவிடென்ஸ், ரிப்போர்ட்ஸ் என்று எல்லாவற்றையும் வைத்து அந்தக் குற்றவாளியை அரஸ்ட் செய்தனர்.. யுக்தாவிற்கு குண்டாடிபட அவன் தான் காரணம் என்று அவன் மீது கொலைவெறியில் இருந்த ராம்.. அந்தக் கிரிமினல் ஜெயிலுக்குக் கொண்டுபோகும் வழியில் தப்பி ஓடிவிட்டான் என்று சொல்லி கேஸை முடித்து அவனைத் தன் கஸ்டடியில் வைத்துக்கொள்ள (கொல்ல) வினய் யுக்தாவை ஹாஸ்பிடலில் அந்த நிலையில் பார்த்த மொத்த தவிப்பையும் கோபமாக மற்றி அந்தக் கிரிமினலிடம் இறக்க.. ஜீவா அவனின் ஒவ்வொரு நரம்பையும் ஒன்றுவிடாமல் அறுத்துவிட்டான்.. ராம் அவனின் எல்லா எலும்புகளையும் அடித்து உடைக்க. கடைசியாக ஆதித் மிதித்த மிதியில் உயிர் துறந்தான் அந்தக் கிரிமினல்.. பல கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையைப் போதைமருந்து மூலம் நாசமக்கியவன் கடைசி மூச்சு, காற்றில் கலந்தது..

“க்ஷகேஸ் சம்பந்தப்பட்ட டீடெய்ல்சை கமிஷனர் ஆபீஸில் கொடுத்துவிட்டு ராம் வீட்டிற்கு வந்த ஆதித் முகம் மிகுந்த கோபத்தில் இருந்தது..

யுக்தா அடிபட்டு, சென்னை வந்ததைக் கேட்டவுடன் வெற்றியும், கயல்விழியும் உடனே சென்னை கிளம்பி வந்துவிட்டனர்..

சோஃபாவில் கோதைமடியில் படுத்து உறங்கிய யுக்தாவை நிஷா குழந்தை போல் இரு கைகளில் தூக்கி செல்ல வினய் இமைக்காமல் நிஷாவையே பார்த்துக்கொண்டிருந்தான்.. நிஷா, யுக்தாவை அவள் ரூம் பெட்டில் படுக்க வைக்க.. கயல் அவள் அடிபட்ட கைக்கு வலிக்காதபடி பீல்லேவை வைத்துவிட்டு ரூமைவிட்டு வெளியே வந்தவள்.. ஆதித்தை அங்குப் பார்த்து.. “டேய் ஆதி நீ எப்ப டா வந்த..?? பெரியப்பா, பெரியம்மா எல்லா எப்டி இருக்காங்க..?? நானும் அவங்களைப் பாக்கனுன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. ஆன யுகிய பாத்த பிறகு எனக்கு வேற எதுவும் நெனப்புல வரால” என்றவளை முறைத்த ஆதித்..

“ஆமா பெரிய யுகி.. எல்லாரும் அவளா பத்தி ஆஹா ஓஹேன்னு சொல்றதை கேட்டு நா கூட என்னமோன்னு நெனச்சேன்.. ஆன….?? ம்ஹீம் நீங்க எல்லாரும் அவளைத் தைரியசாலி, ஸ்ராங், பெரிய சிபிஐ ஆஃபிசர். பெரிய இவன்ற ரேஞ்சுக்கு பில்டப் தந்தீங்க.. ஆன இன்னைக்குக் கமிஷனர் ஆபீஸ் போன பிறகு தானா தெரியுது.. இவ எவ்ளோ பெரிய பயந்தாங்கோலின்னு.. இவ நா நெனச்ச மாதிரி இல்ல கயல்.. ஷீ இஸ் நாட் லைக் தட்.. ஷீ இஸ் ஏ செல்பீஷ், பெரிய சுயநலவாதி.. புருஷன் இறந்த உடனே வேலையும் வேணா ஒன்னு வேணான்னு ரிசைன் பண்ணிட்டு ஊரவிட்டு, சொந்த குடும்பத்தை விட்டு ஓடிப்போன கோழை.. ஷீ இஸ் நாட்” என்று ஆரம்பிக்கும் முன கயலின் கை ஆதித் கன்னத்தைச் சிவக்க வைத்திருந்தது..

ஆதித், “நீயா கயல் என்ன அடிச்ச” என்று வியந்து பார்க்க.. கயல் அவனைச் சட்டை கலரைபிடித்து உலுக்கியவள்.. “யாரா பத்தி என்ன டா பேசுற.. உனக்கென்ன டா தெரியும் அவளை பத்தி.. யாரா கோழைன்னு சொன்ன.. அவளா டா.?? அவளா டா கோழா..?? அவ இடத்துல மட்டும் நீ இருந்திருந்த இன்னேரம் பைத்தியம் புடிச்சிருக்கும் இல்லாட்டி தற்கொலை பண்ணிட்டு செத்திருப்ப.. என்ன டா தெரியும் உனக்கு.. நல்லா இருந்த அவ வாழ்க்கையில கிரகணம் மாதிரி வந்துச்சு டா அந்தக் கேஸ்.. அந்தக் கேஸ் மட்டும் வராம இருந்திருந்தால்..?? நாங்க மட்டும் இன்னு கொஞ்சம் நல்லா” என்று சொல்லும்போதே அவள் குரல் உடைந்துவிட.. கயல்விழி ஆதித்திடம் சத்தம் போடும்போதே மொத்த குடும்பமும் என்னமே ஏதோ என்று வெளியே வந்தவர்கள் கடைசியாகக் கயல் சொன்ன வார்த்தையில் கலங்கி நிற்க.. ராமும், வினய்யும் மனமுடைந்து கால் மடக்கி உட்கார்ந்து விட்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!