அழகிய தமிழ் மகள் 8

அழகிய தமிழ் மகள் 8

அழகிய தமிழ் மகள் 8

யுக்தாவும், நிஷாவும் நீயூஸ் சேனலில் வேலையில் சேர்ந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.. நரபலி கொடுத்தாக போலிஸ் பதிவு செய்த அந்தச் சிறுமிகளின் கேஸ்சை பற்றிய தகவல்களை யுக்தாவும், நிஷாவும் சேகரித்துக் கொண்டிருந்தனர்.. இதில் அவர்களின் கல்லூரி தோழிகள் ஜானவியும், ராஷ்மியும் அவர்களுக்கு உதவினார்..

லாப்டாபில் முழ்கி இருந்த யுக்தாவை கலைத்தது நிஷாவின் குரல்..

“யுகி நம்ம ப்ளான் சக்ஸஸ்.. ஜானு ஃபோன் பண்ணி இருந்த.. எலி வலைல சிக்கிடுச்சு..”

“ம்ம்ம் இது நம்ம எதிர்பார்த்து தானா நிஷா.. எவனெவன் சிக்கி இருக்கான்.. எவ்ளோ அமொன்ட்..??”

“அந்த நாலு நாதாரிங்களோட அப்பனுங்களும் சிக்கியாச்சு.. ஆளுக்கு இருவதுன்னு பேசி மொத்தம் என்பது லட்சம்.. அந்த நாதாரிங்ககிட்ட நம்ம ஒரு தரம் பேசிட்டா காசு நம்ம கைக்கு வந்திடும்…”

“குட்.!! நாள் தள்ள வேணாம். இன்னைக்கே பாத்து பேசிடுவோம்.. ஜானுகிட்டயும் ராஷ்மிகிட்டையும் சொல்லிடு..”

“ம்ம்ம் ஓகே.!! பாரு யுகி..!! சொசைட்டில இவனுங்க இமேஜை காப்பாத்திக்க, பணத்தை எப்டி கொட்டி கொடுக்குறனுங்க.. இதுக்குப் புள்ளைங்களை ஒழுங்க வளத்திருந்த அந்தச் சின்னப் பொண்ணுங்க உயிர் போயிருக்காது இல்ல யுகி??..”

“ம்ம்ம்.!? இவனுங்க பணத்து பின்னாடி ஓடி, புள்ளைகளைப் பொறுக்கிய வளத்து அடுத்தவங்க உயிரோட வெளயாடுறனுங்க.. இவன மாதிரி பெருமைக்கு எரும மேய்க்கிற ஜென்மங்களை ஒன்னு பண்ணமுடியாது நிஷா..!! நீ மத்த வேலைய பாரு..”

“ம்ம்ம் ஓகே யுகி” என்ற நிஷா சற்று தயங்கி.. “யுகி கொஞ்ச நாளல ராமண்ணா நம்ம வாட்ச் பண்ணிட்டு இருக்காரு உனக்குத் தெரியுமா..??”

“ம்ம்.. ம்ம் நல்லா தெரியும் அதனால தானா அடக்கிவாச்சிட்டு இருக்கோம்..”

“இல்ல யுகி..? அண்ணாக்கு நம்ம பத்தி தெரிஞ்சிட்டா என்ன பண்றது.?? ஏற்கனவே நம்ம நெறய விஷயத்த எல்லார்கிட்டயும் மறச்சிட்டு சுத்திட்டு இருக்கோம்…இதுல அண்ணா இந்தக் கேஸ்ச பெர்சனல்ல வேற கவன்சிட்டு இருக்காரு.. இதுல நம்ம இன்வால் ஆகி இருக்கோன்னு மட்டும் அவருக்கு தெரிஞ்ச அப்றம் என்ன டீ ஆகுறது??”

“ப்ச்..!! இப்ப இதை பத்தியெல்லாம் யோசிக்க டைம் இல்ல நிஷா.. இப்ப நமக்கு வரப்போற அந்த என்பது லட்சம் தான் முக்கியம்.. அதுல மட்டும் போக்கஸ் பண்ணு.. ராம் அண்ணா மேட்டரா அப்றம் பாப்போம்.. நீயே பயந்து எதும் ஒலரிவச்சிடாத.. நம்ம பாக்குற வேலை மட்டும் அண்ணாக்கு தெரிஞ்சுது.. அடுத்த நிமிஷம் நம்ம நாலுபேரும் கம்பிதான் என்னனும்.. சோ ப்ளிஸ் கொஞ்சம் உஷாரா இரு.. ராஷ்மிக்கு ஃபோன் பண்ணி நா சொன்ன வேலையெல்லாம் முடிச்சிடாலன்னு கேளு.. இன்னைக்கு ஈவ்னிங் மொத்த பணமும் நம்ம கைக்கு வந்த காணும்..”

அந்த ஸ்டார் ஹோட்டலின் தனி அறையில் நாலு பணப்பெருச்சாளிகள் டென்ஷனில் கைகளைப் பிசைந்து கொண்டிருக்க.. கதவை தட்டும் ஓசை கேட்டு ஒரு பெருச்சாளி “எஸ் கம்மின்” என்று குரல் கொடுத்தது.

யுக்தாவும், நிஷாவும் அறைக்கு உள்ளே வந்தவர்கள்.. அங்கிருந்த நாலு பேரையும் அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்த சோஃபாவில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்தவர்கள், “ம்ம்ம் சொல்லுங்க ஏதோ எங்க ரெண்டு பேரையும் பாக்கணும்னு சொன்னிங்கலாம்.?? என்ன விஷயம்” என்று யுக்தா அலட்சியமாகக் கேட்ட..

மந்திரிகளே எழுந்து நின்று மரியாதை கொடுக்கும் இடத்தில் இருக்கும் தாங்கள் முன் ரெண்டு சின்னப் பொண்ணுங்க அதுவும் சாதரண ரிப்போர்ட்ஸ் நமக்கு எதிர்ல திமிராகக் கால்மேல் கால் போட்டு உக்காந்து இருப்பதைப் பார்த்து உள்ளுக்குள்ளே கடுப்பனாலும் இப்போது நம்ம குடுமி இவளுங்க கையில மாட்டியிருக்கு என்ற உண்மை உச்சந்தலையில் உறைக்க அந்த நாலு பேரும் பல்லைகடித்துப் பொறுமை காத்தனர்..

“லாயர் ஜானவி எல்லாம் சொல்லி இருப்பாங்க.. எங்க பசங்களுக்கு அகென்ஸ்டா உங்க கிட்ட இருக்க எல்லா எவிடென்ஸயும் எங்ககிட்ட தந்திடுங்க.. நீங்க கேட்ட பணத்தை நாங்க கொடுத்திடுறோம்.. ஆல்ரெடி இந்தக் கேஸ் சம்பந்தமான எல்லா எவிடென்ஸையும் நாங்க ஒன்னு இல்லாம பண்ணிட்டோம்… அது உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்.. ஆன நீங்க நாலு பேரும் தேவையில்லாம இதுக்குள்ள வந்து எங்களுக்குக் கொடச்சல் குடுக்குறீங்க.. பணத்துக்காகத் தானா இவ்வளவும் பண்ணீங்க.. ஓகே நீங்க கேட்ட பணம் ரெடி.. மொத்த எவிடென்ஸ்சையும் எங்ககிட்ட தந்திட்டு பணத்த வாங்கிட்டு போங்க.. இனி இந்தக் கேஸ் பத்தி நீங்க நாலுபேரும் எதாவது சின்ன ஸ்டெப் எடுத்தாலும் உங்க உயிர் உங்க உடம்புல இருக்காது” என்று மிரட்ட..

யுக்தா அலட்சியமாக இதழ் சுழித்துச் சிரித்தவள்.. “எங்களுக்குத் தேவை பணம்.. அது கெடச்சீடுச்சு.. நீங்க கேட்ட எல்லா எவிடென்ஸ்ம் இந்தப் பேக்ல இருக்கு.. குட் பை” என்றவள் பணத்தை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள்..

“ரெண்டு மாதங்களுக்குப் பிறகு”

இங்குத் தன் வீட்டில் கமிஷனர் பரதன் முன் ராம் கொதித்துக் கொட்டிக்கக் கொண்டிருந்தான்..

“என்ன சார் அந்த மூனு பொண்ணுங்க கேஸ் பத்தி நா சொல்லும்போது.. நீ கொஞ்சம் பொறுமைய இரு.. நா பாத்துக்குறேன்னு சொன்னீங்க.. இப்ப என்ன ஆச்சுன்னு பாத்தீங்களா..?? அந்த மூனு கொழந்தைங்களும் நரபலில தான் இறந்தாங்கன்னு அந்த லாயர் ஜானவி கோர்ட்ல புரூவ் பண்ணி கேஸையே ஒன்னு இல்லாம பண்ணிட்ட.. போலிஸ்ல இருந்து போஸ்ட்மார்டம் பண்ண டாக்டர் வரை எல்லார்க்கும் பணம் குடுத்து இந்தக் கேஸையே ஒன்னு இல்லாமல் பண்ணீட்டாங்க.. நீங்க அப்பவே இந்தக் கேஸ்சை என்னை டீல் பண்ண விட்டிருந்த” எனும்போதே போதும் என்று கை காட்டி நிறுத்திய பரதன்.

“ம்ம்ம் உன்கிட்ட விட்டிருந்த..!? போன கேஸ்ல எல்லா அக்யூஸ்ட்டையும் என்கவுன்டர் பண்ண மாதிரி., அந்த நாலு பேரையும் கொன்னுருப்ப..!! நீ ஒன்ன மறந்துட்ட ராம்.. போன கேஸ்லயே ஹுமன்ரைட்ஸ் கமிஷன் உன் மேல ஆக்ஷன் எடுத்திருக்கு… இந்த நேரத்துல நீ இந்தக் கேஸ்ல இன்வால்வ் ஆகுறது சரிபட்டுவராது… சோ பெட்டர் யூ ஸ்டே ஆவுட் ஆப் இட்..”

“அதுக்காகத் தப்பு பண்ண அந்த நாயுங்களை விடச் சொல்றீங்களா.?? நீங்களும் ஒன்னு பண்ணமாட்டீங்க, என்னையும் ஒன்னு பண்ணவிடமாட்டீங்க” என்று ராம் கோபமாகக் கத்த…

“ஸ்டாப் இட் ராம்.?? டோண்ட் பார்கெட் வூம் யுவர் டாக்கிங்.??
உன்னோட வயசு டா என்னோட அனுபவம் அத மறந்துடாத..! இதை எப்டி ஹான்டில் பண்ணும்னு எனக்குத் தெரியும்.. யூ ஜஸ்ட் வெய்ட் ஆன் வாட்ச்..”

“அன்னைக்கு கமிஷனர் சார் அப்டி சொல்லும்போது எனக்குச் செம்ம கோவம் வந்துச்சு ஆதி.. ஆன அவர் பேசுரதை வச்சு, அவரு ஏதோ பண்றருன்னு மட்டும் எனக்குப் புரிஞ்சுது.. சோ நா ரகசியம அவரா ஃபாலோ பண்ணேன்..”

யுக்தாவையும், நிஷாவையும் பார்க்க லாயர் ஜானவியும், யுக்தாயுடன் சேனலில் வேலை செய்யும் ராஷ்மியும் யுக்தா வீட்டிற்க்கு வர.. ராம் சொன்னதை வைத்து இறந்த அந்த மூன்று சிறுமிகள் கேஸ்சில் முகம் தெரியாத ஜானவி மேல் கடும் கோபத்தில் இருந்த ஜீவா.. தன் வீட்டில் அவளைப் பார்க்க பொறுமை இழந்தவன்.., “ஏய் நீ ஏன்டி இங்க வந்த..? நீயெல்லாம் பொண்ணாடி… ச்சே.. பாவம் டி அந்தச் சின்னப் பொண்ணுங்க.. அந்தச் சின்ன மொட்டுகளா கசக்கி கொன்னுருக்காங்க.. அவங்களுக்குப் போய்ச் சப்போர்ட் பண்ணி, நீ கேஸ் நடத்தி இருக்கீயே.. உனக்கு வெக்கமா இல்ல.. பணத்துக்காக எந்தக் கேஸா இருந்தாலும் எடுத்துப்பீயா டீ.. நீயும் ஒரு பொண்ணு தானா?? எப்டி டீ உன்னால முடிஞ்சுது.. அந்தப் பொண்ணுங்களுக்கு என்ன நடந்ததுன்னு உனக்குத் தெரியுமா.. அந்த வலியெல்லாம் அனுபவிச்ச தான் டி புரியும்.. ச்சே உன்னோட பேசுறதே எனக்கு அசிங்கம்.. எங்க வீட்ல உனக்கென்ன டீ வேலை.. முதல்ல வெளிய போடி” என்று ஜீவா கத்திக்கொண்டிருக்க.. “ஸ்டாப் இட் ஜீவா” என்று யுக்தா போட்ட சத்தத்தில் மொத்த வீடுமே அதிர்ந்தது.. இருவிழிகளிலும் ஜீவாவை தீயாக முறைத்துக்கொண்டே அவனிடம் வந்தவள்..

“நீயெல்லாம் என்ன டா டாக்டருக்கு படிச்சு கிழிச்ச.. அடுத்தவங்க மனசு புரியம காயப்படுத்துற உனக்கெல்லாம் எவன்டா டாக்டர் பட்டம் தந்தது.. முதல்ல நீ யாரு டா அவளா கேள்வி கேக்க..?? உனக்கென்ன உரிமை இருக்கு..??” என்றவள் திரும்பி ஜானவியைப் பார்க்க.. அவள் அங்கு இருந்தால் தானே.!! யுக்தா பேச ஆரம்பிக்கும்போதே அழுதுகொண்டே அங்கிருந்து ஓடிவிட்டிருந்தாள் ஜானவி..

“நிஷா நீ ஜானுவ போய்ப் பாரு.. அவ எதாவது ஏடாகூடமாகச் செஞ்சுக்கபோற.. ராஷ்மி நீயும் போ.. சீக்கிரம் போ” என்று இருவரையும் விரட்டியவள்.. திரும்பி ஜீவாவை தீயாய் முறைத்து.. “உனக்கெல்லாம் அறிவே இல்லய டா.. ஏன் டா?? ஏன் இப்டி பண்ண..? நாங்க எத்தனை வருஷம் கஷ்டப்பட்டு அவளை இந்த அளவுக்குக் கொண்டு வந்தோம்.. நீ ஒரு நிமிஷத்துல அதை எல்லா இல்லாம செஞ்சிட்டியே.. ஏன் டா?? அவள பத்தி என்ன தெரியும்னு நீ இப்டி பேசுன.?? அவகிட்ட என்ன கேட்ட நீ..?? அந்த வலியெல்லாம் அனுபவிச்ச தானா புரியும்னு தானா கேட்ட.? அவளை விட அந்த வலிய வேற யாரலையும் புரிஞ்சுக்க முடியாது தெரியும டா உனக்கு??” என்று யுக்தா சொல்ல.. அதுவரை யுக்தா ஜானவிக்குப் பரிந்து பேசுகிறாள் என்ற கோபத்தில் இருந்தவன்.. யுக்தா சொன்ன வார்த்தையில் திரும்பி கேள்வியாய் அவளைப் பார்க்க..??

“ஆம டா அவளோட பத்து வயசுல அவளோட சொந்த பெரியப்பா பசங்க அவகிட்ட.!? ச்சே பொறுக்கி நாய்ங்க.. பாவம் டா அவ.. அவளுக்கு என்ன நடந்ததுன்னு கூடப் புரிஞ்சிக்க முடியாத வயசு டா அப்ப அவளுக்கு.. அவ அப்பன் குடும்ப மானம் அது இதுன்னு பேசி போலிஸ்க்கு போகவேண்டான்னு சொல்லிட்டான் ராஸ்கல்.. ஆன ஜானுவோட அம்மா அவங்க பொண்ணுக்கு நடந்த கொடுமைக்கு அந்தப் பொறுக்கீங்களுக்குத் தண்டனை கெடச்சே ஆகணும்னு தைரியம போலிஸ்ல கம்பென்ட் பண்ணங்க.. ஆன அவங்க புருஷன் நொறுக்கி ராஸ்கல் அவங்களை அடிச்சு, உதச்சு கேஸ்ச வாபஸ் வாங்க சொல்லி டார்ச்சர் பண்ணான்.. ஆன ஆன்ட்டி அதெல்லாம் மதிக்கவே இல்ல.. அதனால அந்த ஆள் அவங்களையும் ஜானுவையும் விட்டுட்டு ஓடி போய்ட்டான் பொறுக்கி……. ஆன்ட்டி தனி ஆளாகப் போராடி அந்தப் பசங்களுக்குத் தண்டனை வாங்கித் தந்தாங்க.. ஆன ஜானுவோட மனசை நடந்த அந்த இன்சிடென்ல ரொம்பவே பதிச்சிடுச்சு.. ஆன்ட்டி ரொம்பக் கஷ்டப்பட்டு அவளை கொஞ்ச கொஞ்சம அதுல இருந்து வெளிய கொண்டு வந்தாங்க.. நானும் நிஷாவும் மும்பை காலேஜ் சேர்ந்த அன்னைக்கு ஒரு பையன் ஒரு பொண்ணுகிட்ட மிஸ்பிகேவ் பண்ணத பார்த்து நானும் நிஷாவும் அவனை நல்லா உதச்சிட்டு இருந்தோம்.. அப்ப தான் நாங்க ஜானுவ முதல் முதல்ல பாத்தோம்.. நாங்க அடிச்சத பார்த்தும் எங்ககிட்ட ஓடி வந்து எங்களைக் கட்டிபுடிச்சி கன்னத்துல கிஸ் பண்ண.. அந்த நிமிஷம் அவ மொகத்துல அப்படி ஒரு சந்தோஷம், அடிவாங்கி ஓடின பசங்களைப் பார்க்க அப்படி ஒரு எக்சைட்மென்ட்.. அப்ப எங்களுக்கு அங்க எங்க வயசு பொண்ண தெரியல ஜீவா.. ஒரு சின்னப் பொண்ணு தான் தெரிஞ்ச.. அவ மனசுல ஆண்களுக்கு எதிரான கோவமும், வெறுப்பும் தான் தெரிஞ்சுது.. அப்றம் அவ அம்மா மூலமா ஜானுவ பத்தி தெரிஞ்சிக்கிட்டோம்.. அதுக்குப் பிறகு நாங்க அவளை எங்க கூடவே வச்சிக்கிட்டோம்.. அவளுக்குத் தைரியம் கொடுத்து law படிக்கவச்சோம்.. நாங்களும்” என்று ஆரம்பித்தவள் பின் சுதாரித்து.. “ஜானுவும் நல்லா படிச்சி இப்ப பெரிய லாயர்ர இருக்க.. அவங்க அம்மா இறந்த பிறகு அவளுக்கு எல்லாமே ப்ரண்ஸ் நாங்க தான்.. அவளும் தைரியமா பல ரிஸ்க்கான கேஸ்சஸை எடுத்து ஜெயிச்சு காட்டினா.. ஆனாலும் இன்னமும் தூக்கத்துல அந்த இன்சிடென்ட் ஞாபகம் வந்த அப்படியே ஒடுங்கி போய்டுவ.. பயத்தில் அவ உடம்பு நடுங்க ஆரம்பிச்சிடும்.. ஆம்ளைங்களை கண்டாளே பத்தாடி தள்ளி தான் நிப்ப அவ்வளவு பயம், வெறுப்பு அவளுக்கு ஜென்ஸ் மேல..”

யுக்தா சொன்னதைக் கேட்ட ஜீவாவிற்கு அடுத்து என்ன சொல்வதென்று புரியவில்லை.. “அப்றம் ஏன் சாம் இந்தக் கேஸ்ல அவ இன்வால்வ் ஆன?? இது தப்புன்னு அவளுக்குத் தெரியலயா.??”

“இங்க நடக்குற எல்லாத்துக்குப் பின்னாடி ஒரு ரீசன் இருக்கு ஜீவா.. காரணம் இல்லாமல் காரியம் இல்ல.. அதயெல்லாம் இப்ப உன்கிட்ட வெளக்கி சொல்ல முடியாது.. பட் ஒன் திங் இனி ஒருத்தரை பத்தி தெரியாம அவங்களைத் தப்ப பேசாத..” என்றவள் ஜானுவை பார்க்க செல்ல..

கீழே கார் பார்கீங்கில் நிஷா தோளில் அழுதபடி முகம் புதைத்திருந்தாள் ஜானவி.. பக்கத்தில் ராஷ்மி அவள் முதுகை தடவி ஆறுதல் படுத்திக்கொண்டிருந்தாள்..

“ஜானு உனக்குப் பலதடவ சொல்லி இருக்கேன்.. நம்ம போற ரூட்ல இந்த மாதிரி நெறய ஏச்சுப் பேச்சை கேக்கவேண்டி இருக்கும்.. எத பத்தியும் கவலைப்படாம நம்ம போய்டே இருக்கணும்.. நமக்கு முன்னாடி நம்ம லட்சியம் பெருச இருக்கு இந்த மாதிரி அழுதுவடிய நமக்கு டைமில்ல.. சோ ப்ளீஸ் அழுகுறதை நிறுத்துறீய” என்று யுக்தா போட்டா சத்தத்தில் ஜானவி கண்ணைத் துடைத்துகொண்டு நிமிர்ந்தவள்.. யுக்தா பின்னாடி வந்து கொண்டிந்த ஜீவாவை பார்த்து மீண்டும் நிஷா பின்னாடி ஒளிந்து கொள்ள.. அவள் அருகில் வந்த ஜீவா.. “உன்ன பத்தி எதுவும் தெரியாம நா அப்டி பேசுனது தப்பு தான்.. சாரி” என்றுவிட்டு நகர்ந்தவன்.. திரும்பி ஜானுவை அழுத்தமாகப் பார்த்து.. “நான் சாரி கேட்டது ஜானவின்ற பொண்ணுகிட்ட தான்.. லாயர் ஜானவிகிட்ட இல்ல.. யார் என்ன சொன்னாலும் நீ அந்தக் கேஸ்ல ஆஜர் ஆனது தப்பு தான்.. நீ தப்பான லாயர் தான்” என்றவன் யுக்தாவை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றான்..

“அந்தக் கேஸ் முடிந்து ஒரு மாசம் கழிச்சு…ஊருக்கு வெளிய ஒரு இடத்துல நாலு ஆம்புளைங்க டெட்பாடி சிதைந்த நெலையில இருக்குன்னு எனக்கு ஃபோன் வந்தது ஆதி.. உடனே நானும் அங்குப் போனேன்” என்று அன்றைய நாளை பற்றிப் பேசத்தொடங்கினான் ராம்..

“அந்த நாலுபேர் டெட்பாடிய பாக்கும்போதே தெரிஞ்சுது.. யாரோ ரொம்ப கொடுரமா, ரொம்ப நாள் அடச்சு வச்சு, அனு அனுவ சித்ரவதை செஞ்சு தான் அவங்களைக் கொன்னுருகங்கன்னு.. அந்த டெட்பாடியோட போஸ்ட்மார்டம் ரிப்போர்ட் பார்தது ஒரு நிமிஷம் நானே அதிர்ந்துட்டேன்.. அவ்வளவு புருட்டல் மர்டர் ஆதி அது.. கிட்டத்தட்ட பத்து நாள் சோறு தண்ணி இல்லாம போட்டிருக்காங்க.. கொறஞ்சது ஒரு ஏழு எட்டு பேர் சேர்த்து கண்ணுமண்ணு தெரியாம அடிச்சிருக்காங்க.. உடம்புல காயமில்லாத எடமே இல்லன்னு சொல்ற அளவுக்கு அவ்வளவு காயம்.. அதோட அந்த நாலு பேரோட ஆணுறுப்பையும் வெட்டி எடுத்திருக்காங்க… கூடவே இனி பொண்ணுங்க மேல கை வச்ச இதுதான் கதின்னு அந்த டெட்பாடிங்க கையில டாட்டூ குத்தி இருந்துச்சு.. அந்தக் கேஸ் பைல் ஆன ரெண்டு நாள்ல இந்தக் கேஸ்சால ஊரே பரபரப்பச்சு ஆதி.. மூனு நாள் கழிச்சு தான் செத்தது யாருன்னு எங்களுக்குத் தெரிஞ்சுது..”

“அந்த நாலு டெட்பாடியும் வேற யாருமில்ல ஆதி.. எந்த நாலு நாய்ங்க அந்த மூனு கொழந்தைங்களை வெறிபுடிச்சு கடிச்சு கொன்னுச்சோ அந்த நாலு பசங்க தான் அது.. ஆமா ஆதி அந்த மூனு கொழந்தைஙகளைக் கடத்தி.. ஒரு வாரம் அடச்சிவச்சிருந்து, நாலுபேரும் சேர்த்து அந்தப் பிஞ்சுகளா” என்று ஆரம்பிக்கும் போதே ராம் கண்கள் கோபத்தில் சிவக்க. ஆதிக்கும் ராம் சொன்னதைக் கேட்டு ரத்தம் கொதித்தது.. ஆனால் அந்த நேரம் ராமிடம் அதைக் காட்டக்கூடாது என்று நினைத்தவன்.. அவன் தோளை பிடித்து ஆறுதல் படுத்தினான்..

“நெஞ்சு கொதிக்குது ஆதி.. சின்னப் பொண்ணுங்க தெரியுமா.. பரதேசி நாய்ங்க இரக்கமே இல்லாம… ச்சே இவங்க எல்லாம் ஒரு பொம்பள வயித்துல முறைய தா பொறந்தானுங்களான்னு சந்தேகமா இருக்கு.. இதுல இவனுங்க அப்பனுங்க புள்ளைங்க செஞ்ச தப்ப மறைக்கவும், சொசைட்டியில அவனுங்க இமேஜை காப்பாத்திக்கவும் கோடி கோடிய காச கொட்டி போலிஸ், டாக்டர்ஸ், வக்கீல், கோர்ட் எல்லாத்து வாயையும் அடச்சிட்டனுங்க.. ஆன கடைசியில அவனுங்களுக்குச் சரியான தண்டனை கெடச்சிடுச்சு.. அதோட மட்டுமில்ல ஆதி இந்தக் கேஸ் சம்பந்தப்பட்ட ஒரிஜினல் எவிடென்ஸ், போஸ்ட்மார்டம் பண்ண டாக்டர் அந்தக் கொழந்தைங்க சாவுக்கு நரபலின்னு ரிப்போர்ட்ஸ் கொடுத்தது பொயின்றதுக்கான எவிடென்ஸ், அந்தக் கேஸ்ல பணம் வாங்குன எல்லாரோட டீடெய்ஸ், அந்த நாதாரி நாய்களோட அப்பனுங்க யாருக்கு எவ்ளோ பணம் கொடுத்து இந்தக் கேஸ்ச மூடி மறச்சனுங்கன்ற வீடியோவை ஆதாரம் உட்பட எல்லாத்தோட காப்பியும் எனக்கும், கமிஷனர், ஐஜீ, ஐ கோர்ட் ஜர்ஜ், டிவி சேனல்ஸ்னு எல்லா இடத்துக்கு வந்துச்சு அதை வச்சே, அந்தப் பசங்களோட அப்பனுங்களையும் இந்தக் கேஸ்ல சம்மந்தப்பட்ட எல்லாரையும் அரஸ்ட் பண்ணிட்டோம்.. ஆன இதயெல்லாம் செஞ்சது யாருன்னு தான் யாருக்கும் தெரியல… கண்டுபுடிக்கவும் முடியல” என்ற ராம் ஒரு சின்ன சிரிப்போடு ஆதியை பார்த்தான்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!