ஆட்டம்-11
ஆட்டம்-11
ஆட்டம்-11
அபிமன்யுவின் அழைப்பில் மகள் நின்ற இடம்விட்டு அசையாது சிலை போல் நிற்பதைக் கண்ட நீரஜா, செய்தித்தாளை மடித்து தனக்கு முன்னே இருந்த டேபிளில் வைத்துவிட்டு, இருவரையும் சுவாரஸ்யமாக பார்க்கத் துவங்கினார்.
வழக்கமாக நடக்கும் ஒன்று!!!
எப்போதும் நறுமுகை செய்து வைக்கும் வேலைகளுக்கு யார் கண்டித்தாலும் அடங்காது ஆடுபவள், அபிமன்யுவின் ஒற்றை அழைப்பில் வாய் பேசாத பெண்ணாகி இருக்கும் இடம் தெரியாது மாயமாகி விடுவாள். யார் என்ன கூறினாலும் வாக்குவாதம் செய்யும் குணம் கொண்டவள், அபிமன்யு எது கூறினாலும் தஞ்சை தலையாட்டி அழகு பொம்மைதான்.
அதுவும் வளர வளர இவளின் சேட்டை அதிகரித்து போனதுபோல இருந்தது நீரஜாவிற்கு.
அபிமன்யுவுடன் இருந்ததாலோ என்னவோ, அல்லது அவனின் அறிவுரைகளை கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ, எதையும் தைரியமாக, ஆணுக்கு ஆண் போல சரிசமமாக நிற்க பழகிவிட்டாள்.
பழக்கிவிட்டிருந்தான் அவன்!
இப்போது பிசுனஸிலும் சரி!
அபிமன்யுவின் பெயரை எங்கும் உச்சரிக்கக் கூட தேவையில்லை. நறுமுகை என்று கூறினாலே காரியமாகிவிடும் அளவிற்கு அன்னையைப் போல தைரியமும், கர்ஜனையும், தன்னம்பிக்கையும் அதிகம் கொண்டு பெண் சிங்கமாய் வலம் வந்து கொண்டிருந்தாள் மங்கையவள்.
அப்படியிருப்பவள் இப்படி நிற்பதைப் பார்க்க நீரஜாவிற்கே ஆசையாகத் தான் இருக்கும். மகள் இங்கேயாவது அடங்கிச் செல்கிறாளே என்று. யாராக இருந்தாலும், ‘அவன் அப்பனுக்கு அப்பன் என்று இருப்பார்கள்’ என்ற பழமொழி நறுமுகை அபிமன்யுவிடம் நிற்கும் போதெல்லாம் நீரஜாவிற்கு ஞாபகம் வரும்.
எச்சிலை விழுங்கிய நறுமுகை, திரும்ப, அவளையே சல்லடை போட்டு சலிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் பார்வையில், உள்ளுக்குள் கதிகலங்கி போனாலும், தன் பலவீனத்தை யாருக்கும் எளிதில் காட்டிப் பழக்கப்படாதவள், தன்னை சமாளித்துக் கொண்டு படியில் இறங்க, அபிமன்யுவின் கருவிழிகள் பெண்ணவளின் ஹனி ப்ரவுன் விழிகளை ஊசி முனையாய் குத்திக் கிழிக்க, பெண்ணவளின் பேரழகு விழிகளோ நடனம் ஆடத் தயாராய் இருக்க, சிரமப்பட்டு நிதானமாக இருப்பது போல காட்டிக்கொண்டே அவன் முன் வந்தாள் நறுமுகை.
“எங்க போயிருந்த?” ஒரே ஒரு கேள்வி தான்.
ஆளுமை என்னும் சொல்லுக்கே சொந்தக்காரனாய் இருந்தவனின் குரல், அந்த மாளிகை வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பட்டுத் தெறித்து எதிரொலிக்க, பெண்ணவளுக்கோ உடல் விரைக்கும் உணர்வு ஆட்கொள்ளத் துவங்கியது.
அவள் பார்னுக்கு மட்டும் சென்று வந்திருந்தால் அவளுக்கு பயம் தோன்றியிருக்காது. சென்றுவிட்டு, பார்த்து வந்த மூச்சடைக்கும் வேலைகள் அப்படியல்லவா.
ஒருவேளை தெரிந்துவிட்டதோ என்று கூட உள்ளுக்குள் சற்று தடுமாறினாள்.
கால் பெருவிரலை தரையில் அழுந்த ஊன்றி தன்னை சாதாரணமாக வைத்தவள், “பார்னுக்கு” என்றாள் அவனை நோக்கியபடியே.
அவளின் பதிலில், அபிமன்யு தனது வலது பெருவிரலால் அவன் தனது இடது புருவத்தை வருடுவதை பார்த்தவள், ‘போச்சு செத்தோம். தெரிஞ்சுடுச்சு போல’ நினைத்தவள், அடுத்து என்ன என்று காத்துக் கொண்டிருக்க, “அபி போதும்பா..” என்று சத்தமாக சிரித்தார் நீரஜா.
அன்னையின் சிரிப்பில் சற்று அடங்கிய பதட்டத்துடன் அவள் அபிமன்யுவை பார்க்க, அவனோ, இதழோரத்தில் கேலியான மெல்லிய புன்னகை உதிர்த்துவிட்டு, நீரஜாவின் அருகே சென்று அமர்ந்துகொள்ள, அன்னையின் அருகே அபிமன்யு அமர்ந்தவுடன் பொசசிவ்நஸ்ஸின் உச்சத்திற்கே சென்றவள், இருவருக்கும் இடையில் சென்று இருவரையும் விலக்கிவிட்டு அமர,
“உங்க இரண்டு பேருக்கும் நறுமுகையை பய படுத்தறதே வேலையா போச்சா?” என்றபடி மூவருக்கும் காலை அருந்தும் பானத்துடன் வந்தார் அழகி.
“நல்லா கேளுங்க அத்தை” என்றவளுக்கு தனது இதயத்துடிப்புகள் அப்போது தான் அடங்குவதைப் போல இருந்தது.
செம்பருத்தி டீயை அபிமன்யு எடுத்துக் கொள்ள, பில்டர் காபியை நீரஜா எடுத்துக் கொள்ள, நறுமுகைக்கோ அருகம்புல் சாறை நீட்டினார் அழகி.
அதைப் பார்த்தவுடனே அவளின் முகம் அஷ்டகோணலாகிவிட, “நான் ரூமுக்கு போய் குடிக்கறேன்” என்று இளித்து வைத்து சமாளித்து எழுந்தவளின் கரத்தை இறுகப் பற்றியிருந்தான் அபிமன்யு.
அவள் அவனைப் பார்க்க, அமர்ந்திருந்தபடியே தனது கூர் விழிகளை மட்டும் உயர்த்தி அவளை அதட்டும் பார்வை பார்த்தவன், “ஒழுங்கா இங்க இருந்து குடிச்சிட்டு போ” என்றான் கட்டளையான குரலில்.
அதை மீறிவிட யாராவதால் இயலுமா!
அவள் அவனை பாவமாகப் பார்க்க, “சிட் அன்ட் டூ வாட் ஐ சே!” என்றவன் டீயை அருந்த, அவளுக்கு டீயை அருந்த நா ஏங்கியது.
அவளின் பார்வையை கண்ட அழகி கூட, “அபி இன்னைக்கு ஒரு நாளைக்கு நறு டீ..” என்றவரின் சொற்கள் அபியின் சினம் சிதறும் பார்வையில் அப்படியே நின்றுபோக, அவரும் பாவமாக நறுமுகையைப் பார்த்தார்.
“அவளோட அல்சர் ப்ராப்ளம் அவளுக்கு மட்டும் இல்ல உங்களுக்கு மறந்து போயிடுதா?” அன்னையை பார்த்து திட்டியவன், “சரியா மெடிசன்ஸும் எடுக்கிறது இல்ல ஃபுட்டும் ஃபாலோ பண்றது இல்ல” என்றவனின் சொற்கள் நறுமுகையை பார்த்துக் கொண்டே விழ, அவளோ ஓரக்கண்ணால் பார்த்தாலே தவிர, எதுவும் பேசவில்லை.
“சரியா டைமுக்கு சாப்பிடாம அல்சரை வேற இழுத்து வச்சிட்டு..” என்று திட்டியவன், “நறுமுகை, நீ என்ன குழந்தையா? உனக்கு சப்போர்ட் உங்க அத்தையா?”என்றவனுக்கு அவள் மேலிருந்த அக்கறை கோபமாக உருமாறி கேட்க,
“பின்ன உங்க அத்தையா சப்போர்ட்டுக்கு வருவாங்க. நல்லா மாட்டிவிட்டு உக்காந்து வேடிக்கை தான் பாப்பாங்க” என்றவள் வாய்க்குள் பேசினாலும், அது அனைவருக்கும் நன்றாகவே கேட்க,
“பின்ன நீ காலைல சொல்லிட்டு போனியா?” நீரஜா மகளைத் திட்டினார்.
“காலைல போனா அங்கதானே போவேன்.. வேற எங்க போவேன்?” அவளும் எதிர்வாதம் புரிய,
“பின்ன காணோம்னா தேட மாட்டாங்களா? ஃபோன் பண்ணா கட் பண்ற?”
“நான் எங்க கட் பண்ணேன்?” என்று கேட்டாள்.
“அபி இவளை எல்லாம் எப்படி பிசுனஸ்ல வச்சிருக்க நீ” நீரஜா இம்முறை அபிமன்யுவிடம் திரும்ப, நறுமுகையின் வதனமோ கோபத்தில் சிவந்து சிவந்த வானமாய் ஜொலிக்கத் துவங்க அன்னையை முறைத்தாள்.
“முறைக்காதடி உண்மைதான்” என்றார்.
அப்போதுதான் நறுமுகைக்கு ஞாபகம் வந்தது. விக்ரம் முத்தமிடும் போது ஒரு அழைப்பு வந்ததும், அதை அவனே நிராகரித்ததும். இதைத் தொடர்ந்தால் மீண்டும் கேள்விகள் வரக்கூடும் என்று உஷாரானவள், “இப்ப என்ன நான் இதைக் குடிக்கணும். அவ்வளவு தானே?” என்று கண்ணாடிக் குவளையில் இருந்த ஜூஸ் கப்பை எடுத்தவள், ஒரே வாயில் அனைத்தையும் குடித்துவிட்டு, அடுத்த கேள்வி வரும்முன் அங்கிருந்து எழுந்து அறைக்குள் விறுவிறுவென்று சென்றாள்.
நீரஜா தலையில் அடித்துக் கொள்ள, செய்தித்தாளை எடுத்தான் அபிமன்யு.
“பிசுனஸ்ல எல்லாம் அவ பக்காவா தான் இருக்கா அத்தை. நான் பேசவே தேவையில்ல சில இடத்துக்கு” என்றவனின் குரலில் அவளைப் பற்றிய பெருமிதமும், கௌரவமும் தெறித்தாலும், சில விநாடிகள் இடைவெளி விட்டவன், “இங்கதான் இப்படி இருக்கா” என்றான்.
நீரஜா யோசனையில் ஆழ்ந்திருக்க, “நம்ம வீடுனா உரிமையா தான் இருப்பா. மாமியா வீட்டுக்கு எப்ப போறாளோ அப்ப சரியாகிடுவா” என்று இமையரசி தனது ராகி கூழுடன் வந்து அமர்ந்து கொண்டு பூடகமாய் சொல்ல,
“ம்கூம். எல்லாம் நீங்களும், அப்பாவும் கொடுக்கிற செல்லம் தான்” என்றார் நீரஜா, எதிரில் இருந்த அன்னையை சற்று குறையாய் சொன்னபடி.
“ஆமாமா நாங்க கொடுத்த செல்லம்தான். நாம செல்லம் கொடுக்கிற மாதிரி இருக்கும். ஆனா, யாரு தர்றாங்கனு அவங்க அவங்களுக்கே தெரியும்” என்றவர் கூழை ஸ்பூனால் கலந்தவாறே அபிமன்யுவை நைஸாக பார்க்க, செய்தித்தாளை படித்துக் கொண்டிருந்தவனின் செவிகளில் அது விழுந்தாலும் அவன் அதை கண்டுகொள்ளவில்லை.
நேராக பேசினால் நேரடியாகவும் அதிரடியாகவும் பதில் கூறுபவன் அவன்!
“அபி!!! உன்னை தான் சொல்றாங்க உன் பாட்டி” நீரஜா போட்டுக் கொடுத்துவிட்டு, சிரித்தபடியே படிகளில் ஏற, இமையரசி பேரன் என்ன சொல்லி குட்டப் போகிறானோ என்று குனிந்து கொண்டு அமரந்திருக்க, பாட்டியை ஒரு பார்வை பார்த்தவன், குரலை செருமிவிட்டு,
“போல்ட்னஸ், டிடர்மினேஷன், கான்பிடன்ஸ், ஆடசிட்டி, டெஷிசன் மேக்கிங் (Boldness, Determination, Confidence, Audacity, Decision making) இதெல்லாம் செல்லத்துல வரும்னு இன்னிக்கு தான் அத்தை கேள்வி படறேன்” அவளுக்கு தான் கற்றுக் கொடுத்ததை எல்லாம் வகைப்படுத்தி கூறி, நக்கலாய் முடித்தவனின் குரலில் இமையரசி, கப்சிப் என்று ஆகிவிட, மருமகனின் பேச்சில் பாதி படிகளில் நின்றிருந்த நீரஜாவும், அன்னையின செய்கையில் சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.
சிறிது நேரம் செய்தித்தாள்களை பார்த்திருந்தவனும், தனது அறைக்குச் செல்ல, மூன்றாவது தளத்திற்குள் நுழைந்தான்.
கருப்பு!
இராஜரீகமான கருப்பு நிற அறை!
கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், நான்கு பேர் நிற்கக் கூடிய அளவில் அவனின் அறைக்குச் செல்லப்படும் தடுப்புடன் மற்றொரு கதவு. அதைத் தாண்டித்தான் அவனின் அறைக்குச் செல்ல இயலும்.
அதைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தால் அவனது ஆடம்பரமான படுக்கையறை. சுவரில் தொடங்கி அவன் உள்ளே பயன்படுத்த வைத்திருக்கும் பென் வரையும் கருப்பு நிறம் தான்.
அனைத்திலும் பணத்தின் செழுமை அந்த அறையின் சொந்தகாரனைப் போன்றே பளபளத்தது!!!
அவனின் அறையும் அவனின் அறையில் உள்ள பொருள்களும் மட்டுமே கோடிகள் தேறும். கருப்புடன் ஆங்காங்கே தங்க நிற பட்டைகளாக வடிவங்கள்!
மெத்தை மட்டும் வெண்மை நிறம்!
ஆனால், அதையும் கருப்பு நிறத்தில் துபாயில் தயாரிக்கப்பட்ட விலையுரந்த ராயல் மெத்தை விரிப்பு மறைத்திருந்தது. இன்னும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்!
அவன் படுக்கைக்கு பின் இருக்கும் சுவற்றுக்கும், படுக்கைக்கும் இடையே கண்ணாடியானால் ஆன தடுப்பு இருக்க, கண்ணாடிக்கும் சுவற்றுக்கும் இடையே குட்டி நீர்வீழ்ச்சி புகையாய் புகைந்து வழிந்து கொண்டிருந்தது.
ஒரு பக்கம் மூன்றாவது மாடியில் இருந்து சிட்டியை பார்க்க பால்கனியும், மற்றொரு பக்கம் வெறுமையான சுவரும் இருக்க, படுக்கைக்கு எதிரே ஆப்பிள் ப்ரான்டின் ஐ டிவியும்.
உள்ளே நுழைந்தவன், கழுத்தை இருபக்கமும் விநாடியில் இடமும் வலமும் திருப்ப, அதிகாலையில் செய்த உடற்பயிற்சியின் காரணமாக சொடக்கு சத்தம் வந்தது.
வெறுமையாக இருந்த சுவர்பக்கம் சென்றவன் தன் கரத்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில், சுவரில் வைக்க, தன்னால் திறந்து கொண்டு உள்ளே வரவேற்றது மற்ற அறைகள்.
நேரான பாதை கருப்பு கம்பளம் விரிக்கப்பட்டு செல்ல, இரு புறங்களும் கண்ணாடிகள். தங்க நிற விளக்குள் மேலே சின்னச் சின்னதாய் நேராக வட்ட வடிவத்தில் நேர் வழியில் அமைக்கப்பட்டிருக்க, கருப்பு நிறமும், தங்க நிறமும் கண்ணாடிகளில் பட்டு போட்டி போட்டுக்கொண்டு ஏதிரொலித்து. ஆனால், கண்ணாடிக் கதவு வைத்த அபிமன்யுவின் தனிப்பட்ட அறைகள். அலுவலக அறை, மற்றொரு படுக்கை அறை, அவனின் தனிமை அறை, அவனுக்கு என்று மது அருந்த தனியறை என்று நான்கு அறைகள் இடமும் வலமும் இருக்க, நேரே சென்றால் ட்ரெஸ்ஸிங் ரூம்.
அதுவும் கருப்பு நிறம்!!
உள்ளே நுழைந்தவன், தனது ஜிம் சர்ட்டை கழற்றி வீச, ட்ரெஸ்ஸிங் அறையில் இருந்த ஆளுயறக் கண்ணாடியில் அவனின் பிம்பம் தெரிய, அங்கிருந்த விளக்கின் ஒளிகளும் ஆடவணின் உடல் திமிரில் வெட்கிப் போக, கண்ணாடியும் நாணத்தில் சிவந்து போனது.
ஆறடி ஜாம்பவானின் உடலில் ஆங்காங்கே நரம்புகள் முறுக்கியிருக்க, அவனின் வெண்மையான கரங்களில் வரிவரியாக ஓடிக் கொண்டிருந்தது, அவனின் கொப்பளித்துக் கொண்டிருக்கும் குருதிகள். விடாத உடற்பயிற்சியினால் தன்னைத் தானே செதுக்கியிருந்தான் அனைவரையும் தன் அதிகாரத்திலும், ஆளுமையிலும் வைத்திருந்தவன்.
வலிமையான திண்ணிய மார்பும், அதற்கு கீழே சிக்ஸ் பேக் வைத்திருந்தவனின் தட்டை வயிறும், அகன்று இருந்த சக்திவாய்ந்த தோள்களும், அதிபலம் வாய்ந்த புஜத்தையும் பெற்றிருந்தவனுக்கு தலையில் தொடங்கி அவன் கால் வரை அகங்காரம், ஆளுமை, அதிகாரம், ஆணவம் அனைத்தும் நிற்காது ஓடிக் கொண்டிருந்தது.
கையை இறுக்கி தாடையைத் தூக்கி அவன் கண்ணாடியில் தன்னைப் பார்க்க, இதழோரத்தில், கர்வமான தீப்பிளம்புகள் பற்றி எரியத் துவங்கியது.
டவலை எடுத்துக் கொண்டு நுழைந்தவனின் குளியலறைக்குள் கருப்பு நிற க்ரானைட்டால் ஆன படிகள் சென்றது, பாத்டப்பிற்கு. மிதமான சுடு நீர் திறந்துவிடப் பட்டிருக்க, தண்ணீருக்குள் பாத்டப்பிற்கு பொருத்தப்பட்ட விளக்குகள் மயக்கமாய் அவனைப் பார்த்து விழிக்க, சுடும் நீர் கடுந்தீயால் பொங்குவது போல இருந்தது.
மூன்று படிகள் ஏறி பாத்டப்பிற்குள் இறங்கியவன், ரிமோட்டினால் லைட் மியூஸிக்கை உயிர்ப்பித்துவிட்டு தலையை சாயத்துக் கொள்ள, அவனின் மன அமைதி அறை முழுதும் நிலவிப் பரவத் துவங்கியது.
அவன் மனம் அமைதியாய் தண்ணீருக்குள் தணிந்து இருக்க, அவனின் இறுக்கமான முகம் இசை அன்னையினால் இளகியிருக்க, அவனவளோ, அவனின் மனதை அடியோடு வீழ்த்தி, அவனின் ஆழ் இதயத்தில் யாரும் கொடுத்திடாத சலனத்தை ஏற்படுத்தி, யாரும் நுழைய முடியாத அபிமன்யுவின் இதயத்திற்குள் காலடி எடுத்துவைத்து அவனை தன்னையறியாது தூண்டி தங்களது உயிர் காதலுக்கு அஸ்திவாரமிட காத்திருப்பவளோ, அவனின் மன அமைதிக்கு நேர் எதிர்மாறாக, மனம் என்னும் பெருங்கடல் கொந்தளிக்க, அவளின் நடனம் என்னும் ஆற்றலால், கடலுக்குள் இருக்கும் பூமி பிளந்து, பார்ப்போரின் மனதில் நிலநடுக்கம் வரும் அளவிற்கு, தனது சிந்தனையையும் மனதையும் ஒருங்கு இணைத்தவளின் ஆன்மா அனைவரின் உறைய வைத்திருக்க,
‘திம் தானா திம் திம் தானா
ஜாதுலதோ
பிராணமே நாட்டியம் செய்
கத்துலதோ
நா மாஷா தம்முல நாதுலதோ
நா பைனா நீ சுப்பு ஆபேலா
ஶரணந்திநே ஜனனி நாதா
வினோதினிவே புவன பாலினி வெ
அனாத ரக்ஷனா
நீ விதி கடாதே
மொரவினி சேரவதே
ஆ ஆ ஆ..’
என்ற தெலுங்கு பாடல் வரிகளுக்கு, மனவலிமையும், உடல் இயக்கமும் எங்கும் குறையாது, தனது யோசனைகளையும் முகபாவங்களையும் நளினமும், அபிநயமும் கலந்து, தனது எண்ணங்களை வார்த்தைகளின்றி வெளிக் கொணர்ந்தவள், பெண்மையே தோற்கும் வகையான பெண்மையில் தித்தித்து, அழகு என்னும் இலக்கியத்தின் மரபும் மீறலும் ஒன்றாய் குவித்த கவிதையாய், ஓவிமாய் உருமாறி, தன் பாதங்களை குறுக்காக வைத்து, அரை மண்டியில் இருந்து எழுந்தவள், கரங்கை மேலே உயர்த்தி நடனத்தை முடிக்க, அரங்கமே கரகோஷத்திலும், மாணவர்களின் கத்தலிலும், மாணவிகளின் சிறிதேயான பொறாமையிலும் பொங்கி வழியத் துவங்க, ஸ்டேஜின் முன்னே திறைகள் மூடப்பட்டது.
முழு வெண்மை சல்வார் கமீஸில் இருந்தவளின் ஆடையும் சுழன்று ஆடியதற்கு குடைபோல சுழன்று, மேலும் பெண்ணவளை அழகை எடுத்துரைத்திருக்க, ஸ்டேஜின் பின் நின்றிருந்த அவளின் ஆண் நண்பன் ஒருவனே, “தியா, பேசாம நான் உத்ராவை லவ் பண்ணியிருக்கலாமோ” அவன் வாயை பிளந்து கொண்டு கேட்க, அவளோ அவனை பார்வையாலேயே எரிக்கத் துவங்கினாள்.
ஆடி முடித்து வந்த உத்ராவின் மின்னிய வதனத்தைப் பார்த்த தியா, “ஔட் ஸ்டான்டிங் பெர்மாமன்ஸ் டி” என்று அணைக்க, உத்ராவும்,
“தாங்கஸ் தியா” என்று தோழியை அணைத்துக் கொள்ள, தியாவின் ஆள் தியாகுவோ, “எனக்கு இல்லியா உத்ரா” என்று வழிசலோடு கேட்டு வைக்க, அணைத்தபடி இருந்த பெண்களோ, ஒரே சமயம் அவனைப் பார்த்தபடி விலகி, ஒரே நேரத்தில் ஆளுக்கொரு கன்னத்தில் பட்டு பட்டென்று வைத்தனர்.
“உத்ராஆஆஅஅஅ” என்று ஓடி வந்த உத்ராவின் மற்றொரு தோழி,
“லைவ் எத்தனை பேர் பாத்தாங்க தெரியுமாடி?” என்று வினவினாள்.
இன்ஸ்டாகிராமிலும், யூ ட்யூபிலும் லைவ் போட்டிருந்தார்கள் உத்ராவின் நடனத்தை. அதைத்தான் கூறுகிறாள்.
“ஒரு டென் கே இருக்குமா?” பத்தாயிரம் இருக்குமா என்று உத்ரா கேட்க, அவளின் தோழியோ, “நோ நோ..” தலையை ஆட்டிக் கூறியவள், “பர்ஸ்ட் ட்ரீட் வைப்பனு சொல்லு அப்பதான் உனக்கு சொல்லுவேன்” என்று கூற, அபிமன்யுவின் உத்ராவிற்கோ இருப்புகொள்ள இயலவில்லை.
“சரி சொல்லுஉஉஉ” என்றவளின் அழகை பார்க்க யாருக்கும் தித்திப்பு தெவிட்டாது. உடைகளுக்கு ஏற்ப ஆக்ஸிடைஸ்ட் சில்வர் ஜூவல்லரி அணிந்திருந்தாள்.
அவளின் அழகில் அதுவே சற்று குறைந்து தான் போயிருந்தது!
சாமுத்ரிகா சாஸ்திர லட்சனம்!
அவளவனுக்காக கடவுள் பார்த்து பார்த்து படைத்த பால் நிலா!
ஆங்காரம் தெறிக்க, தான்தான் என்ற மமதையில் இருப்பவனை சுழல வைக்க பிரம்மன் அமிர்தத்தினால் செய்த காரிகை அவள்!
“இட்ஸ் ஃபைவ் லாக்ஸ்” ஐந்து லட்சம் பேர் பார்த்ததாக அவள் கூற, “ஓவ் யேஏஏஏ” என்று நண்பர்கள் கூட்டம் கத்த, உள்ளுக்குள் மகிழ்ச்சியில் கூவியவள், நண்பர்களுடன் வெளியே சுற்றச் செல்ல, அந்த ஐந்து லட்சத்தில் ஒருவன் பார்த்ததை அறிந்திருந்தாலும் உத்ரா உறைந்த பனியாகிப் போயிருப்பாள்.
அபிமன்யு படித்த அதே யூனிவர்ஸிட்டியில் தான் உத்ரா படித்துக் கொண்டிருக்கிறாள். அடுத்த மாதம் அவள் படிப்பு முடிவடையப் போகிறது.
அந்த யூனிவர்ஸிட்டியின் லைவ் யூ ட்யூப்பிலும் ஓடிக் கொண்டிருக்க, குளித்து முடித்து வெளியே வந்த அபிமன்யு, தனது ரோலக்ஸ் வாட்சை அணிந்தபடியே அவளின் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தான். ஐந்து லட்சம் பேரில் அவனின் விழிகள் மட்டும் தான் அவளை ரசிக்கவில்லை.
என்ன நினைக்கிறான் என்று எவராலையும் கண்டுகொள்ள இயலாத பார்வை. லைவ் முடியவும் உத்ராவின் வதனத்தையும் அவளின் வதனத்தில் நிறைந்திருந்த புன்னகையையும், எழிலலையும் கண்டவன், அவளின் நடனம் முடிந்தவுடனும் தனது அலைபேசியையே வெறித்துக் கொண்டிருந்தான்.
ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த கண்ணாடியின் முன் நின்றிருந்தவனின், மூளையில் மின்னல் வெட்ட, தன் இரு கரங்களையும் தன் முன் இருந்த கருப்பு நிற க்ரானைட் மேஜையில் குற்றியபடி நின்று இதழோரத்தில் புன்னகையை விபரீதமாக உதிர்க்க, அவனின் மனதில் குடிகொண்டிருந்த வஞ்சினம், வெறி, பழியுணர்ச்சி அனைத்தும் வெளிப்பட்ட, கண்ணாடியில் ஆடவளின் பிம்பம் அவளின் ஆடவனுக்குத் தெரிந்தது.
விழிகள் சினத்தில் பளபளக்கத் துவங்க, அவனின் கழுத்தில் நீரஜா மாட்டியிருந்த ரோடியமும் பல்லாடியமும் கலந்தான சங்கிலியில் இருந்த வேங்கை, அவன் கண்ணாடியின் முன் சற்று கை குற்றி சாய்ந்து நின்றதில், அவனுக்கு முன் அவன் கழுத்தில் இருந்து ஆடத் துவங்கி, பாய்வதற்கு தயாராய் அவனவளை தாக்கக் காத்திருந்தது.