ஆட்டம்-34

ஆட்டம்-34

ஆட்டம்-34

பொள்ளாச்சி!

சுற்றியும் இருந்த நூறு ஏக்கர் தென்னந் தோப்புகளுக்கு மத்தியில் சிம்மவர்ம பூபதியின் பெயர் பொறிக்கப்பட்ட, கம்பீரத்தை அளவுக்கு அதிகமாக ஏற்றிருந்த அரண்மனை, சுறுசுறுப்பான கல்யாண வேலைகளிலும், லட்சணமான கலைகளிலும் அளப்பரிய ஆவலுடனும் அழகுடனும் பார்த்து பார்த்து இயங்கிக் கொண்டிருக்க,

இமையரசியின் வதனம் முழுதும் எல்லையில்லா புன்னகையையும், உள்ளத்தின் மகிழ்ச்சி வதனத்தில் மின்மினியாய் பூசியிருந்த தேஜஸுடனும், ஆரத்தி தட்டுடன் வெளியே வர அரண்மனையின் வாயிலில் நுழைந்தது அந்த வெண்மை நிற மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் க்ளாஸ் (Mercedes Benz S class).

காரிலிருந்து முதலில் மித்ரா பர்ப்பிள் நிறத்திலான பாதம் வரை நீண்டிருந்த காக்டெயில் உடையில், பதின் வயதிற்கே உரிய மயிலாய், ஒயிலுடன் தங்களுக்காக காத்துக் கொண்டிருந்த மொத்த பேரையும் பார்த்தபடி, தனது திராட்சை விழிகள் வரை புன்னகை எட்ட இறங்க,

மறுபக்கம் தனக்கே உண்டான ஆளுமையும், இங்கு வந்தாலே தாமாக மேலும் வந்து ஒட்டிக் கொள்ளும் தோரணையோடு பட்டுப் புடவையில் நீரஜா இறங்க, ரஞ்சனியும் முன்னிருக்கையில் இருந்து பின்னே அமர்ந்திருந்த மூத்த புதல்வியை ஒரு முறை புன்னகையுடன் பார்த்துவிட்டு இறங்கினார்.

இமையரசி பின்னேயே மற்ற அனைவரும் வந்து வரவேற்க நிற்க, மற்றொரு காரும் உள்ளே நுழைந்தது. ரத்த சிவப்பு நிற ஆஸ்டன் மார்டின் வால்கன் (Aston Martin Vulcan) உள்ளே இராஜகரியமாக நுழைய, காரிலிருந்து சன்ஷைன் (Sunshine) நிறத்திலான அட்மைரல் முழு நீளத்துக்கான அனார்கலி உடையில் அஜந்தா ஓவியமாக நறுமுகை இறங்க, அதே நிற சட்டையும், வெண்மை நிற பாண்ட்டுமாக, கண்களில் ரேபான் கூலர்ஸுடன் வசீகரத்திற்கு பெயர் போனவனாய், ‘விக்ரம் அபிநந்தன்’ தன் மனையாளுடன் நிமிர்வுடன் இறங்கினான்.

கார்கள் வந்த சப்தத்தில், மாடிப்படிகளில் இருந்து இறங்கிய ஜாம்பவானின் கால்கள், இமையரசியின் பின் அடி மேல் அடி வைத்து வந்து தன்னவளை எதிர்பார்த்து உள்ளத்தில் ஆவலுடன் நிற்க, எப்போதுமே உறுமிக் கொண்டும் அல்லது சீறிக் கொண்டு நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் வேங்கையின் இந்த அமைதியான நிலை,

அனைவருக்கும் அவனின் மனதில் புதையுண்டு கிடைக்கும் கடலளவு காதலையும், அவனின் ராணியால் மட்டுமே வேங்கையின் வெறியை விநாடிப் பொழுதில் அடக்கி ஆள முடியும் என்ற எண்ணுகையிலேயே அனைவரின் வதனத்திலும் சிறு வெட்கம் பரவ, நீரஜா கரத்தை மகளிடம் நீட்ட, அன்னையின் கரத்தை பிடித்துக் கொண்டு இறங்கினாள் அபிமன்யுவிற்காகவே அந்த பிரம்மன் படைத்திருந்த உத்ரா.

நிவாரன (Nivarana) க்ரீனில் காஞ்சி பட்டிலான பாவடையும், ரவிக்கையும், பர்ப்பிள் நிறத்திலான தாவணி அணிந்து, இடையை கட்டி அணைத்திருந்த லட்சுமி தேவி இருந்த ஒட்டியாணமும், நெஞ்சில் லட்சுமி தேவியை கொண்ட பெரிய ஆரமும், காதில் அவளவன் நெஞ்சம் அவளிடம் அசைவது போன்ற குண்டு ஜிமிக்கியும், கை நிறைய வளையல்களும் என தங்கக் கடலாய், சகல விதமான அழகுகள் இரைக்கப்பட்டு, கல்யாண கலை தாமரை மலர் போன்ற வதனத்தில் தாமாய் வந்து இறங்கியிருக்க, அன்னையை ஒரு கரத்தில் பிடித்துக் கொண்டும் பாவாடையை மற்றொரு கரத்தில் பிடித்துக் கொண்டு இறங்கிய காரிகையவளின் மெய்யான அழகு அங்கு இருப்பவர்களை விநாடி கனத்தில் வீழ்த்தியிருக்க, அபிமன்யுவின் தூய்மையான காதலை சுமந்திருந்த இதயம், தன்னவளின் பிரமிப்பு மிக்க அழகில், மனதிற்குள் பாகாய் உருக, இதழ்களில் தன்னவளுக்காக மனம் மண்டியிட்டதில் அழகிய மென்னகை சூழ்ந்தது.

மெல்ல மெல்ல அன்னைகளின் கரங்களை பிடித்து வந்த உத்ரா, இமையரசியின் முன் நிற்க, பேத்தியின் விவரிக்க இயலாத அழகில் லயித்திருந்தவரின் தோளில் சிம்மவர்ம பூபதி கரம் வைக்க, அதில் உயிர்ப் பெற்றவர்,

“உன் அழகுக்கு முன்னாடி.. உன் அம்மா எல்லாம் ஒண்ணுமே இல்ல தங்கம்” என்று மகளை ஓரவிழியால் பார்த்துக் கொண்டே கூற, அன்னையை தன் இரத்தத்தில் ஊறிக்கிடந்த கர்வத்துடன் கண்ட நீரஜா, “என் பொண்ணு.. அதுதான்” என்றார் சளைக்காது.

பேத்திக்கு ஆசையுடன் சுற்றி முடித்தவர் அவளின் நிலா நெற்றியில் பொட்டை வைக்க, ஜொலித்துக் கொண்டிருந்த பால் வதனத்தில் சிவப்பு நிறம் உறைந்து தான் போனது.

அழகியும், கோதையும் மருமகளை உள்ளே அழைக்க, மனையாளின் கரத்தை பிடித்துக் கொண்டே உள்ளே நுழைந்த விக்ரம், “எனக்கு நம்ம மொமன்ட்ஸ் எல்லாம் ஞாபகம் வருதுடி” என்று பழைய ஞாபகங்களிலும் தன்னவளின் பிம்பங்களை இன்னமும் மனதில் பதித்திருந்தவனாய் கூற,

கணவனை பக்கவாட்டாய் திரும்பிப் பார்த்த நறுமுகை, “இன்னொரு தடவை கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று ஆசையாய் கேட்க,

“அல்ரெடி இரண்டு தடவை தாலி கட்டிட்டேன்.. மறுபடியும் ஒரு தடவை கட்டமாட்டனா?” என்று தன்னவளிடம் ஆட்கொள்ளும் காதலுடன் கூறிவிட, பெண்ணவளின் வதனம் ரத்தினக் கல்லாய் சிவந்து போனது.

இருவரின் பின்னேயே வந்து கொண்டிருந்த திலோத்தமை சட்டென இருவருக்கும் இடையே புகுந்து, “எது இரண்டு தடவை கல்யாணம் பண்ணீங்களா?” என்று கேட்க, விக்ரம்,

“அதை எங்களுக்குள்ள வந்து நின்னுதான் கேப்பியா?” என்று தங்கையை அவன் மறுபக்கம் இழுக்க முயல,

“ம்கூம்.. சொல்லுங்க மிஸ் அண்ணியாரே.. இரண்டாவது தடவை எப்படி தாலி கட்டுனாங்க அண்ணா.. என்ன பண்ணாங்க” என்று வாய் வந்த போக்கில் கேட்டவளின் கேள்விகளில், ஏற்கனவே சிவந்திருந்த நறுமுகையின் வதனத்தில் இருந்த சிவப்பு அவளின் சங்கு கழுத்திறக்கு கீழ் பரவத் துவங்கி மொத்த மேனியையும் சூழ, தன்னவளின் துடிக்கும் நாணத்தை ரசித்தவாறே விக்ரம் நறுமுகையிடம், “கேக்கறா இல்ல? சொல்லு” என்று முன்னே சென்றுவிட,

திலோத்தமையை வெட்கத்துடன் முறைத்த நறுமுகை, “கல்யாணம் பண்ண நைட் என்ன பண்ணுவாங்களோ.. அதையே தான் இரண்டாவது தடவை தாலியை போட்டப்ப உங்க அண்ணன் பண்ணாங்க” என்றவளின் பேச்சில் திலோத்தமை வாய்பிளக்க, கணவனுடன் ஓடிச் சென்று அவனின் கரத்தை பிடித்துக் கொண்டு நடந்ந நறுமுகை, சிரிப்புடன் நாத்தனாரை திரும்பிப் பார்த்து கண்ணடித்தாள்.

‘அடப்பாவிகளா!!!’ என்று உள்ளுக்குள் பகீரென்று இருந்தாலும் அவளின் வதனத்திலும் புன்னகை வந்து கேலியுடன் ஒட்டிக்கொள்ள, தனக்கு இப்போதைக்கு செட்டான மித்ராவை தேடிச் சென்றாள் அந்த எள்லளவும் அழகில் குறைவில்லாத அந்த வீட்டின் கடைசி இளவரசி.

உள்ளே உத்ராவை அழைத்து வந்தவர்கள் அவளையும் அபிமன்யுவையும் ஒன்றாக பூஜையறையில் நிற்க வைக்க, இருவரின் கரங்களும் ஒரே நேரம் கடவுளை கூப்பியது.

அபிமன்யுவிற்கு இதில் எல்லாம் அவ்வளவாக நம்பிக்கை இல்லையென்றாலும், அனைவருக்காகவும் கரத்தை கூப்பி கண்களை மூடி நின்றிருந்தான்

உத்ரா தான் கடவுளிடம் பல கோரிக்கைகளையும், தன் உணர்வுகளையும் கொட்டிக் கொண்டிருந்தாள். ‘நான் ஏன் இண்டியா வர்றதுக்கு இவ்வளவு ஆசைபட்டேன்.. ஏன் இவரை லவ் பண்ணேன் எல்லாமே எதுவுமே புரியல.. முக்கியமா நான் இத்தனை வருஷமா என் அம்மா அப்பான்னு நினைச்சவங்க என்னை வளர்த்தவங்கனு நினைச்சு அழுகறதா, இல்லை என்னை பெத்த அம்மாவுக்காக அழுகறதா..

இல்லை எல்லாரும் இப்ப எங்க கல்யாணத்தை நினைச்சு சந்தோஷமா இருக்கிறதை நினைச்சு என்ன நினைக்கறதுனே தெரியாம இருக்கேன்.. எனக்கு அடுத்தடுத்து நடந்ததுல எப்படி ரியாக்ட் பண்ணனும்னு கூட புரியல.. ஆனா, என்னால இவரை ஏத்துக்கவும் முடியல.. அதே சமயம் மனசு வெறுத்தாலும் ஒதுக்க முடியல.. எல்லாத்துக்கும் நீதான் ஒரு வழி காட்டணும்’ என்று மானசீகமாக வேண்டியவள் விழிகளை திறக்க, அவளையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு அவளின் கரம் ஆதரவாக பற்றி,

“நீ கேட்டது எல்லாமே நடக்கும்” என்று புன்னகையுடன் அழுத்தமாக கூற, கோபம் உள்ளுக்குள் துடித்தாலும், மற்றவர்கள் முன்பு அதை காட்ட நினைக்காதவள் வராத புன்னைகைய அனைவருக்காகவும் சிந்தினாள்.

இருவரையும் அழைத்து சாப்பிட அமரச் செய்த இமையரசி இருவருக்கும் தானே பரிமாற, அபிமன்யுவுக்கு இனிப்பை வைக்க போன இமையரசியை கண்ட உத்ரா அவளையும் மீறி, “அவருக்கு ஸ்வீட் பிடிக்காது” என்று உரைக்க, அந்த நாற்பது பேர் அமரக் கூடிய டைனிங் ஹாலில் இருந்த பகட்டான உணவு மேசையில் அமர்ந்திருந்த அனைவருக்கும் உத்ராவையே பார்க்க, இமையரசியை கெத்தாக திரும்பிப் பார்த்த அபிமன்யு ஒற்றை புருவத்தை அவரிடம் உயர்த்தி குறும்பாக, ‘எப்படி?’ என்று கேட்க,

“இதுக்காகவே நீ ஒரு தடவை ஸ்வீட் சாப்பிடலாம் அபி” என்றவர் பேரனின் இலையில் இனிப்பை வைத்துவிட்டு செல்ல, அனைவரின் பார்வையிலும் தலையை சட்டென தலையை கவிழ்த்துக் கொண்ட உத்ரா அதன் பின் நிமிரவே இல்லை.

அபிமன்யுவை இப்படி பார்க்க பார்க்க அங்கிருந்த அனைவருக்கும் அனைவரையும் நடுங்க வைத்துக் கொண்டிருந்த அபிமன்யுவா இது என்றே இருந்தது.

உத்ராவோ அமைதியாக சாப்பிடத் தொடங்கிவிட்டாள்.

அப்போது தான் தன்னுடைய தாவணியின் நிறத்திலேயே அபிமன்யு பர்ப்பிள் நிறத்தில் சட்டை அணிந்திருப்பதை கண்டவள், ‘இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல’ என்று உள்ளுக்குள் நினைத்து, எதிரே பார்க்க, அங்கோ விக்ரமும் நறுமுகையும் வேறொரு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

விழியாலேயே நறுமுகை விக்ரமிடம் கெஞ்சிக் கொண்டிருக்க, அவனோ சுற்றியும் விழியை சுழலவிட, உத்ரா அவர்களை பார்க்காதது போல விழிகளை திருப்பிக் கொண்டாள். மீண்டும் அவள் பார்த்த சமயம் தன் இலையில் இருந்த இனிப்பை எடுத்து விக்ரம் நறுமுகைக்கு யாரும் பார்க்கும் முன் சட்டென ஊட்டிவிட, பெண்ணவளின் மனமும் மூளையும் ஒரே நேரத்தில் அபிமன்யு தனக்கு ஊட்டிவிட்டது என அனைத்தும் நினைவில் வர, மனம் கனத்துப் போக பாதியில் எழப் பார்த்தவளை, எழ விடாமல் தடை செய்தது அபிமன்யுவின் வெற்று பாதம். பெண்ணவளின் பாவாடையில் கால் வைத்தபடி.

‘போச்சு ஸ்டார்ட் பண்ணிட்டான்.. இனி விட மாட்டான்’ என்று மனதுக்குள் தன்னவனை பாரபட்சம் பார்க்காது திட்டியவள் சாப்பிட முயல, விக்ரமிற்கு எதிரில் அமர்ந்திருந்த மித்ரா,

“மாமா! நானும் நீங்களும் ஒரே கலர் ட்ரெஸ்” என்றிட, கடைக்கண்ணால் தன்னவளின் முகம் போகும் போக்கை கவனித்த அபிமன்யு,

“சேம் வைப் மித்ரா.. உனக்கும் எனக்கும்” என்று தங்கையோடு சேர்ந்து பேசிய அபிமன்யுவின் மீது கொலைவெறி எல்லையைக் கடக்க, உத்ராவாலும் எழவும் முடியவில்லை.

அபிமன்யுவின் காதருகே சென்றவள், “காலை எடுங்க” என்றாள் கடுப்புடன்.

“சாப்பிட்டு போ” என்றான் ஒற்றை வரியில்.

“பிடிக்கல” என்றவளை அவன் பார்க்க, இருவரின் முகங்களும் அருகருகே இருக்க, கோபத்தில் தக்காளி பழமாய் சிவந்திருந்த தன்னவளின் செவ்வதனத்தை அணுஅணுவாக ரசித்தவன்,

“யாரை?” என்று விழிகளில் சிரிப்பு எட்டியிருக்க, இதழின் ஓரங்கள் மெல்லிய கீற்றை மட்டும் உதிர்த்துக் கொண்டிருக்க கேட்க, அவனை பார்த்தவள்,

“உங்களுக்கே இதுக்கு பதில் தெரியும்” வெடுக்கென்று கூறியவள், அவனின் பாதத்திற்கு அடியில் இருந்த பாவாடையை வெடுக்கென உருவிக் கொண்டு எழுந்து செல்ல, அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் புன்னகையை மட்டுமே சிந்தியது.

சிறிது நேரத்தில் கைக்கு மெஹந்தி போட, மும்பையில் இருந்து விக்ரம் சொல்லியிருந்த பெண்கள் வந்துவிட, அரண்மனையின் வரவேற்பறையில் பெண்கள் அனைவரும் அமர, உத்ராவின் கரத்தில் கை வைத்து கண்களில் வைத்து கும்பிட்டார் அந்த துறையில் கை தேர்ந்த பெண்மணி.

செய்யும் தொழிலே தெய்வம் அல்லவா!

உத்ராவை அவர்கள் டிசைனை தேர்ந்தெடுக்க கூற, அவளைத் தவிர அனைவரும் அவரவருக்கு டிசைனை தேர்வு செய்துவிட, நறுமுகை, திலோத்தமை, மித்ரா மூவருக்கும் அவருடன் வந்திருந்த பெண்கள் மெஹந்தியை போடத் தொடங்கிவிட, உத்ராவுக்கோ எதை தேர்வு செய்ய என்றே தெரியவில்லை.

நறுமுகை, திலோத்தமை, மித்ரா அது இது என்று காட்டி சலித்தது தான் மிச்சம்.

நீரஜாவும், “இது நல்லாருக்கே உத்ரா” என்று காட்ட, “ம்கூம்” என்றாள். அவளுக்கு எதுவுமே திருப்தியாக இல்லை. கிட்டத்தட்ட அவர் வைத்திருந்த ஆயிரம் டிசைனில் ஐநூறை கடந்துவிட்டார்கள்.

ரஞ்சனி மித்ராவை அழைத்து அபிமன்யுவை அழைத்து வர பணிக்க, குடுகுடுவென மாடிப் படிகளில் ஓடியவள், அபிமன்யுவை கையோடு அழைத்து வர, நீரஜாவிடமும் ரஞ்சனியிடமும் தலையை ஆட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்த உத்ரா, எதேச்சையாக சப்தம் கேட்டு படிகளில் இறங்கும் நீண்ட கால்களை பார்க்க,

அவளின் பார்வை கால்களில் இருந்து ஒவ்வொரு படியாக மேலே தழுவ, நீண்ட கால்கள், ஒட்டிய வயிறு, திண்ணென்ற மார்பு, அகன்ற தோள்கள் என்று ஒவ்வொன்றாக கண்களால் அளந்து கொண்டே சென்றவள், தன்னவனின் விழியோடு விழியை கலக்கவிட, பிரபஞ்சத்தையே அடக்கி ஆளும் நடையோடு படிகளில் இறங்கிக் கொண்டிருத்தவனின் அதிகாரத் தோரணை காரிகையவளை சுண்டி இழுக்க, மித்ராவுடன் பேசியபடியே இறங்கி வந்தவன் இலகுவாய் வந்து உத்ராவிற்கு அருகே அமர்ந்தான்.

உத்ராவின் மடியில் இருந்த நோட்டில் ஒவ்வொரு டிசைன்களாக பார்த்துக் கொண்டே வந்த அபிமன்யுவின் விழிகள் ஒரு டிசைனில் கூர்மையாக பதிய, அடுத்த நொடியே அந்தப் பெண்மணியிடம் அதைக் கொடுத்தவன், “இந்த டிசைன் போட்டிருங்க.. அவங்களுக்கு சேன்ஜஸ் வேணும்னாலும் பண்ணிடுங்க..” என்றிட, சற்று கழுத்தை உயர்த்தி உத்ரா டிசனை பார்த்தாள்.

உள்ளங்கைகளில் ராஜ தோரணையில் மயில் நிற்க, அதனைத் தொடர்ந்து அதன் தோகைகள் நீண்டு சென்று, யானை மேல் பல்லக்கில் ராணியை ஒரு பக்கம் தூக்கி வர, அதே போன்று மற்றொரு கரத்தில் ராஜா மாலையோடு மணப்பெண்ணுக்கு காத்திருப்பது போன்ற டிசைன். கால்களிலும் மாளிகைகளும், யானைப் படைகளும் இருப்பது போன்று இருக்க வேண்டும் என்று கூறிய அபிமன்யு, உத்ராவை பார்க்க, அவளோ அந்தப் பெண்மணியிடம், ‘சரி’ என்பது போல அமைதியாக தலையாட்ட, நீரஜாவும் ரஞ்சனியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, பெண்களோ தங்களுக்குள் ஏதோ பேசி சிரித்துக் கொண்டனர்.

மற்றவர்களுக்கு எல்லாம் மதியமே முடிந்துவிட, உத்ராவிற்கு காலை ஒன்பது மணிக்கு தொடங்கிய மெஹந்தி முடிய மணி மூன்றரை ஆகியிருந்தது. கரத்தில் முடித்திருந்தவர் காலில் துவங்க, பெண்ணவளுக்கோ தூக்கம் தூக்கமாக வந்தது.

பாவம் எத்தனை நேரம் சிலையாய் அவளும் அமர்ந்திருப்பாள்.

அவள் சிரமப்பட்டு தூக்கத்தை அடக்கிக் கொண்டிருப்பதை புரிந்து கொண்ட கோதை, “உத்ரா.. மேல இருக்க ஹால்ல இருக்க பால்கனிக்கு போயிடுங்க பேசாம.. அங்க யாரும் வரவும் மாட்டாங்க.. நீ தூங்கறதுனாலும் தூங்கிக்கலாம்” என்றிட, சரியென்று தலையாட்டிவள், எழ, அங்கு வந்து மனையாளின் அருகே அமர்ந்த விக்ரமிடம் நறுமுகை தன் கரங்களை காட்ட, இரு புருவங்களையும் உயர்த்தி மனையாளிடம், ‘சூப்பர்’ என்று சைகை செய்து தன்னவளை தனக்குள் விட்டால் அமிழ்த்திவிடுவேன் என்பது போல புன்னகைத்தவனிடம்,

“மாமா இது வச்சா நல்லா ரெட் ஆகுமாம்” என்று மித்ரா எலுமிச்சை சாறை எடுத்து வர, திலோத்தமை, மித்ரா, நறுமுகை மூவரும் அவனைச் சுற்றி அமர்ந்து கொள்ள, சாறை பஞ்சில் நனைத்த விக்ரம், மூவருக்கும் வைத்துவிடத் துவங்க, அதைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த உத்ரா நறுமுகையின் விழிகளில் பட, தயக்கத்துடன் கணவனின் காதருகே சென்றவள்,

“மாமா! உத்ரா உங்களை தான் பாக்கறா” என்று கூற, சட்டென மனையாளை அழுத்தமாக பார்த்த விக்ரமின் அக்னி பார்வையில் நறுமுகை வாயை மூடிக்கொள்ள, உத்ரா அமைதியாக மெஹந்தி போடும் பெண்ணுடன் மேலே சென்றாள்.

மேலே வந்தவர் ஏதேதோ உத்ராவிடம் பேச, அவருடன் சிரித்துப் பேச முயன்று கொண்டிருந்தவளால் சற்று நேரத்திற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாமல், அந்த சாய்வு இருக்கையிலேயே நன்றாக சாய்ந்து இரு கரங்களையும் இரு பக்கங்களிலும் வைத்து உறங்கிவிட, உத்ராவின் பாவாடையை மேலே ஏற்றி பின்குத்தி விட்டவர், அவளுக்கு மெஹந்தியை போடத் துவங்க, பால்கனியில் சுற்றியும் வைத்திருந்த ரோஜா செடிகளுக்கும், வாசனை மிகும் மலர் கொடிகளுக்கும் நடுவே கோதையவளின் பூவுடல் சாய்ந்திருக்க, அன்று என்ன தவம் செய்திருந்ததோ அந்த பால்கனி!

நடுவே இருவருக்கும் தேனீரை எடுத்து வந்த ரஞ்சனி, தூங்கிக் கொண்டிருந்த மகளை தொந்திரவு செய்யாது அவருக்கு மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றிட, ஒருவழியாய் ஆறு மணிக்கு அருகே மெஹந்தியை போட்டு முடித்தவர், அனைத்தையும் சரி பார்த்துக் கொண்டிருந்த போதே அபிமன்யு அங்கு வந்தான்.

அபிமன்யு வந்தவுடன் அவர் எழ, தலையை அசைத்து அவரை அங்கிருந்து நகரச் சொன்னவன், இளந் தென்றலுக்கு நடுவே மலர் பொதியாய் உறங்கிக் கொண்டிருந்த தன்னவளை கண்ட நொடி, அபிமன்யுவின் காதலை ஏந்தியிருந்த உள்ளம் சிதற, காதலென்னும் உணர்வு அவனின் உடலில் உள்ள அனைத்து பாகங்களுக்கும் சென்று ஆடவனை கிளப்பிவிட, உத்ராவின் அருகே நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், தன்னவளையே இமைக்காது தாடைக்கு கீழ் பெருவிரலை வைத்து, ஆல்காட்டி விரலை கன்னத்தில் வைத்து பார்த்துக் கொண்டே இருக்க, மொத்தமாய் விழுந்துவிட்டான் இந்த சித்தார்த் அபிமன்யு.

இதை எதையும் அறியாத பாவையவள் உறங்கிக் கொண்டிருக்க, உத்ராவின் மெஹந்திக்கு எழுமிச்சை சாறை வைக்க கின்னத்துடன் வந்த நறுமுகையை கண்ட அபிமன்யு, அவளின் கையில் இருந்ததை பார்த்துவிட்டு புரிந்தவனாய் நகர்ந்து அமர்ந்து கொண்டு, மீண்டும் தன் மனையாளையே பார்த்துக் கொண்டிருக்க, உத்ராவின் கரத்தில் அவளின் தூக்கம் கலையாது மெல்ல மெல்ல சாறை பஞ்சால் வைத்துக் கொண்டிருத்த நறுமுகை மாமானை அவ்வப்போது ஓர விழியால் பார்த்துக் கொண்டுதான் இருந்தாள்.

அவள் வைத்து முடிப்பதற்குள் காலில் போட்டிருந்த மெஹந்தியும் காய்ந்திருக்க, சரியான நேரம் பார்த்து காத்திருந்த அபிமன்யு, “கீழ போய் பாட்டிகிட்ட டீ கேட்டு வாங்கிட்டு வா நறு” என்று கேட்க,

“சரி மாமா” என்று ஒன்றும் தெரியாதவள் போன்று தலையாட்டியவள் அங்கிருந்து அகன்று செல்ல, நறுமுகை செல்லும் வரை பார்த்திருந்தவன், மெதுவாக கின்னத்தை கரத்தில் எடுத்துக் கொண்டு, தன் மடியில் தூக்கி பெண்ணவளின் ஒரு காலை வைத்தவன், எழுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து அந்த மென்மையான மலரே தோற்றுப் போகும் வண்ணம் உத்ராவின் கால்களில் ஒற்றி ஒற்றி எடுக்க, மாடிப்படியின் திருப்பத்தில் இருந்து ஒரு தலை எட்டிப் பார்க்க, அது மித்ரா!

அடுத்தது ஒரு தலை எட்டிப் பார்க்க, அது திலோத்தமை!

அடுத்தது அவர்கள் இருவரையும் அழைத்து வந்த நறுமுகையின் தலை!

திருமணமானவளுக்குத் தெரியாதா மாமன் தன்னை எதற்காக அனுப்புகிறான் என்று!

உத்ராவின் ஒரு காலை மெதுவாக, கீழே இறக்கி வைத்த அபிமன்யு, அடுத்த காலை எடுத்து தன் மடியில் வைத்து மீண்டும் சாறை வைக்க, “அச்சோ மாமா எவ்வளவு ஸ்வீட் இல்ல..” என்று பெருமூச்சை வெளியிட்ட மித்ரா, “பேசாம அத்தை இன்னொரு பையனை பெத்திருக்கலாம்” என்று அங்கலாய்க்க,

“நான் ஓகேவா?” என்ற விக்ரமின் குரலில் மூன்று பெண்களும் அதிர்ந்து போய் திரும்பி திருதிருவென்று முழிக்க, ஆறடி உயரத்தில் இருந்தவனும் அவர்களைத் தாண்டி பார்க்க, அங்கு இருந்த அபிமன்யுவும் உத்ராவும் கவிதையாய் இருந்த காட்சி தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது நறுமுகையின் கணவனுக்கு.

மூவரையும் தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக பார்த்து வைத்தவன், “இடியட்ஸ்” என்று திட்டி வைக்க,

“நீங்க தானா? நான் கூட வேற யாரோனு நினைச்சேன்” என்று மீண்டும் திரும்ப எத்தனித்த மித்ராவின் குதிரை வாலை பிடித்து இழுத்தவன், “வாலு வாலு” என்று திட்ட,

“ஓசில ஓடறது தானே” என்றவள், “அக்காதான் கூட்டிட்டு வந்தாங்க” என்று நறுமுகையை போட்டுக் கொடுக்க, ‘போச்சு’ என்று மனதுக்குள் நினைத்த நறுமுகை கணவனை அசடு வழிய பார்க்க, அதற்கும் முறைத்தே வைத்தான் அந்த சாணக்கியன்.

மீண்டும் மூவரும் அங்கேயே பார்க்கத் துவங்க, பால்கனி காற்றில் அங்கு பொன் சிலை போன்று படுத்திருந்த காரிகையவளின் தாவணி காற்றில் கலைந்து, ஆடவணின் எண்ணத்தையும் கலைக்க, தன்னவளின் பளீர் வயிறும், அதில் சுழிந்திருந்த நாபியும், அபிமன்யுவின் தாபத்தை ஏட்டிக்கு போட்டி தூண்டிவிட, அபிமன்யுவின் பார்வை சென்ற இடத்தைக் கண்ட விக்ரமிற்கு திக்கென்று இருக்க, பெண்களுக்கோ உயரம் கம்மியமாக இருந்ததாலும், அபிமன்யுவின் வதனத்தை பாதி செடி மறைத்திருந்ததாலும் தெரியாமல் போனது அங்கு தெளிவாக நடக்கவிருப்பது.

தங்கையின் தலையில் கொட்டிய விக்ரம், மித்ராவையும் திலோவையும் பார்த்து, “இரண்டு பேரும் கீழ போங்க” என்று அதட்டி அனுப்பியவன், படிகளில் இறங்கும் மித்ராவை அழைத்து,

“உன் அபிமன்யு மாமா மட்டும் தான் சூப்பரா? விக்ரம் மாமா இல்லையா?” என்று காலரைத் தூக்கிவிட்டு கேட்க, யோசிப்பது போல பாவனை செய்த சில்வண்டு,

“இரண்டு மாமாவும் இரண்டு பேருக்கும் சளைச்சவங்க இல்ல.. ஆனா, நீங்க எப்படி அக்காக்கு ஸ்பெஷலோ,, அபி மாமா எனக்கு ஸ்பெஷல்” என்று படிகளில் இறங்கி திலோவுடன் ஓடிவிட, அப்படியே நகர நினைத்த மனையாளின் கரத்தை இறுக பற்றி இழுத்தவனின் மேல் வாகாக சாய்ந்தவளின் இடையை அவன் பிடித்துக் கொண்டு,

“ஏன்டி சின்ன பொண்ணுகள இப்படி கூட்டிட்டு வர” என்று மெல்லமாய் திட்ட, வாயில் கை வைத்த நறுமுகை,

“எது அவங்களா சின்ன பொண்ணுக.. எனக்கே தெரியாத பல விஷயம் பேசறாங்க மாமா.. டபுள் மீனிங் கூட இல்ல.. திலோவும் மித்ராவும் சேந்தா எல்லாமே சிங்கிள் மீனிங்ல பேசறாங்க.. எனக்கு புரியறதுக்கே நேரம் ஆகுது தெரியுமா?” என்று இருவரையும் நன்றாக போட்டுக் கொடுக்க,

“நான் வேணா எல்லாம் சொல்லித் தரட்டுமா?” என்று கிசுகிசுப்பான குரலில், பெண்ணவளின் அழகுகில் கைகளை பயணித்தபடி கேட்டவனிடம் இருந்து விலகியவள், “நைட் பாத்துக்கலாம்” என்று ஓடிவிட, அப்போது தான் விக்ரம் பெருமூச்சை விட்டவனாக, அங்கு பால்கனியை தவறிப் போய்கூட பார்க்காதவனாய் கீழே இறக்கிவிட்டான்.

இங்கே அபிமன்யுவின் நிலை வேறாக இருந்தது.

தன்னவளின் வதனத்தில் இருந்து முதலில் விழிகளை எடுக்க முடியாதவனால், இப்போது இடையில் இருந்து திருப்ப முடியாது இருந்தது. நிதானத்தை இழந்து சித்தம் கலங்க வைக்கத் துவங்கியது.

முப்பது வயதை அடைந்திருந்தவனின் மோகம், தான் கண்டு கொண்டிருந்த பால்கோவா துண்டிலும் அதில் இருந்த சுழியிலும், தன்னவளின் மேல் உள்ள அனைத்து உணர்வுகளும் எல்லையை கடந்து கொண்டிருக்க, ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் தாறுமாறாக ஓட, இன்னமும் அடித்த பூங்காற்று, மேலும் தாவணியை கலைத்து பெண்ணவளின் இளமை அழகுகளை காட்ட, பிரம்மன் படைத்தது தான் படைத்தான், கீழே கஞ்சனாகவும், மேலே பாரி வள்ளலாகவும் படைத்திருக்க, அபிமன்யுவின் உள்ளம் வெடித்துச் சிதற, மெதுவாக குனிந்தவன் சட்டென தன்னவளின் வயிற்றில் முத்தத்தை பதித்துவிட, தூக்கிவாரிப் போட எழுந்தாள் அவனின் உத்ரா.

அபிமன்யுவின் இதழொற்றலை உணர்ந்த அவளின் வயிறு அதிர, மெஹந்தி இட்ட கரத்தால் அவளால் தாவணியை சரி செய்யக் கூட முடியவில்லை. தன்னவளின் தவிப்பையும், அவசரத்தையும் புரிந்த அபிமன்யு, அவளருகே வந்து தாவணியை தனக்கு தெரிந்தளவு சரி செய்துவிட, காலில் வேறு பாவாடையில் பின் குத்தப்பட்டு இருந்தது. அதையும் அபிமன்யு அகற்றிவிட, அவனிடம் இருந்து வேகவேகமாக ஓடிச் சென்று மறைந்தாள் அவனின் உத்ரா.

error: Content is protected !!