ஆட்டம்-41
ஆட்டம்-41
ஆட்டம்-41
அரண்மனையின் ராஜ அறைக்குள், அந்த வீட்டின் மூத்த பேரின்ப இளவரசனை மணந்திருந்த மென்வதன இளவரசி நுழைய, அவள் காலடி எடுத்துவைத்த மறு விநாடி அந்த அறைக்கே பொலிவு வந்தது போன்றதொரு மாயை உருவாக, பொலிவாய்இத்தருணத்தில் பூரிப்புடன் இருக்க வேண்டியவளுக்கோ மனம் கோபம், ஆத்திரம், பயம், அச்சம் என அனைத்தையும் இணைத்து நெஞ்சத்தில் சுமந்திருத்தது.
அவளை அறையில் விட்டவர்கள் தங்களுக்குள்ஏதோ பேசி சிரித்தபடி செல்ல உள்ளுக்குள், ‘ஆமாஇங்க அப்படியே உருகி உருகி விடிய விடிய கதகளிஆட போறோம் பாரு‘ நினைத்தவள், கதவை சாற்றிவிட்டுத் திரும்ப, லேப்டாப்பில் மூழ்கியிருந்தஅபிமன்யு, அதை மூடி வைத்துவிட்டு எழுந்தான்.
அந்த மிகப்பெரிய அறையில் அபிமன்யுவை கண்டும்காணாதது போன்று ஒதுங்கி நடந்தவள், அங்கிருந்த சந்தன மரத்திலான மேசையின் அருகே சென்று, அச்சத்தை மறைக்க கரங்களில் இறுக பிடித்திருந்த தங்க டம்ளரை வைத்துவிட்டு மௌனமாய் நின்றவள், திரும்பக் கூட இல்லை.
முதல் இரவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அறை முழுதும் பன்னீர் ரோஜா இதழ்களின் மணம் கொட்டப்பட்டு, இருவரின் நாசியையும் நிரப்பிக்கொண்டிருக்க, பெண்ணவளோ அதை உணரவில்லை. பல்லைக் கடித்துக் கொண்டு அமைதி காத்தாள்.
அவன் அவளிடம் பேச காத்திருப்பது புரிந்தது. ஆனால், அவளுக்கு பிடிக்கவில்லை.
பெருமூச்சுடன் திரும்பியவளின் ஏறி இறங்கியஇடத்திற்கு அபிமன்யுவின் விழுங்கும் பார்வை செல்ல, திக் திக் என்று அடித்துக் கொண்டவளுக்குசில விநாடிகளுக்கு பிறகு தான் புரிந்தது, அவன் கட்டிய மாங்கல்யத்தை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று.
அங்கிருந்து நகர எத்தனித்தவள் பிறகு விநாடி தாமதித்து நின்று அபிமன்யுவை நிமிர்ந்து பார்த்து, “தாங்க்ஸ்” என்று கூறியவள், அறையின்பால்கனியில் சென்று விளக்கை அணைத்துவிட்டு, அங்கிருந்த நீண்ட ஆள் படுக்கும் அளவிற்கானதேக்கு மர ஊஞ்சலில், தனக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அபிமன்யுவிடம் அவளுக்கு அதற்கு மேல் பேச எதுவுமில்லை. அவள் கூறிய நன்றியே, அபிமன்யுவிஜய்யை அழைத்து வந்ததிற்கு மட்டுமே. அவளிடம் திருமணத்திற்கு முன்னமே உண்மையை கூறிவிட்டான் அவன். அதாவது நீரஜா மகளிடம் பேச போகும் முன், அபிமன்யு அறையில் இருந்து வந்தானே. அன்றுதான் உத்ராவிடம் அவன் உண்மையை உரைத்ததும் கூட.
விஜய் வருவதை மட்டும் கூறியவன், “அவரு நேராகல்யாணத்துக்கு வந்திடுவாரு உத்ரா… அத்தைக்குசர்ப்ரைஸா இருக்கட்டும்… யாருக்கும் சொல்ல வேணாம்” என்றிட, தலையை மட்டும் அவனுக்கு ஆட்டியிருந்தாள்.
அறையின் விளக்கை அணைத்த அபிமன்யு, ஒரு மிகச் சிறிய விளக்கை மட்டும் உயிர்ப்பித்துவிட்டுஉத்ராவிடம் சென்று அவளருகே அமர, அவளோகண்ணிற்கு எட்டிய தூரம் வரை, அரண்மனையைசுற்றியிருந்த தோப்பினையும் அதன் அடர் இருட்டினையும் வெறித்துக் கொண்டிருந்தாள்.
மனம் முழுதும் யாரையடா கடித்துக் குதறலாம்என்று வெறி பிடித்தது போன்று காத்திருந்தது. காயம் பட்டு வெடித்துச் சிதறியிருந்த மனம், மருந்தைத் தாண்டி யாரையேனும் குத்த ஊசியாய்காத்திருந்தது.
நேரே வெறித்துக் கொண்டிருந்த உத்ராவையேபார்த்திருந்த அபிமன்யு, “உத்ரா!” என்றழைக்க, அவனை எரித்துவிடுவது போன்று திரும்பிப் பார்த்து பார்வையாலேயே சுட்டுப் பொசுக்கியவள்,
“என்ன பர்ஸ்ட் நைட் கொண்டாடனுமா?” நாவு என்ற உறுப்பை தேளாய் மாற்றி அவள் விஷத்தைகொட்டித் தெளிக்க, அசராது அவளை பார்த்த அபிமன்யுவின் விழிகள், அதுவரை இருந்த தீவிரமான பார்வையை சட்டென மாற்றி குறும்புடன்,
“ம்ம்… ம்கூம்” யோசித்து குரலை செருமியவன், “உனக்கு அவ்வளவு அவசரம் இருக்கலாம்… ஆனா, எனக்கு உன்கிட்ட பேசணுமே” என்றானேபார்க்கலாம், பெண்ணவளின் கோபம், வெளியே கோர்த்திருந்த கும்மிருட்டை கீறிக் கொண்டு செல்ல, அக்னிக் கங்குகளாய் எழுந்துவிட்டாள்.
“மண்ணாங்கட்டி” என்று சீறிக் கொண்டு எழுந்தவள்அபிமன்யுவின் வதனத்தின் முன் விரல் நீட்டி, “உங்களை பத்தி தெரியாது பாருங்க…” என்று வெறுப்புடன் கூறியவளின் விரலையும், அவளையும்மாற்றி மாற்றி விழியை மட்டும் உயர்த்தி அபிமன்யுஅழுத்தமாக பார்க்க, சட்டென உத்ராவின் இளம் நெஞ்சு பயத்தில் குலுங்க, விரலை அடுத்த நொடியே இறக்கிவிட்டாள்.
யாரும் தன்னை மீறி பேசவே கூடாது என்று நினைக்கும் ஏகாதிபதி அவன்!
சாதாரணமாக இருக்கும் ஆண்மகன்களே அதை எதிர்க்கும்போது, இது தி கிரேட் சித்தார்த் அபிமன்யுஆயிற்றே!
அவனிடம் இது செல்லுபடி ஆகுமா?
உத்ராவையே சுவாரஸ்யமாக பார்த்திருந்தஅபிமன்யு தன் முழு உயரத்திற்கும் எழ, அவனின்நெஞ்சுவரையே இருந்தவள் மெல்ல தலை உயர்த்தி அவனை வெறுமையாக பார்க்க, அபிமன்யு “என்ன பிரச்சனை உத்ரா உனக்கு?” என்று வினவ, இவளுக்கோ அருகில் இருந்த பூந்தொட்டியைஎடுத்து அடித்து மண்டையை உடைத்துவிடலாமாஎன்றிருந்தது.
ஆனால், செய்ய முடியாதே!
அமைதியாக கல் போன்று நின்றிருந்தாள்.
உத்ராவின் கரம் பற்றியவன், அவளை அழைத்துக்கொண்டு உள்ளே நுழைய, அவனுடன் உள்ளே நுழைந்தவுடன் கரத்தை உருவிக் கொண்டவள், “எனக்கு எதுவுமே பிடிக்கல” என்றாள் கோபமாக.
அவன் கைகளைக் கட்டி அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “நானும் எத்தனை நடந்தாலும் பொறுமையா இருக்க மாதிரியே நடந்துக்கிட்டுநடிச்சுட்டு இருக்கேன்… உங்க மேல வச்சநம்பிக்கை பொய் ஆச்சு, அடுத்து என்னை கடத்துனாங்க, அடுத்து நீரஜா அம்மா…” என்று குரல் கமற கூறியவள், நெஞ்சின் மீது கரம் வைத்து,
“எல்லாரும் சேந்து என்னை ரொம்ப பலவீனமானவளா ஆக்கிட்டீங்க” கூறியவளின்உடைந்து போன உள்ளத்தை இப்போது அல்ல அவன் எப்போதோ அறிவான் தான். மேலும் பேசி ரணத்தை கீறிவிட எத்தனிக்கவில்லை அவன். அதனாலேயே அமைதியாக இருக்கிறான்.
“கொஞ்சம் பேசனும் உத்ரா!” என்று நிதானமாக கூறிய அபிமன்யுவிடம் சமாதானம் ஆகாது, இடமும் வலமும் முடியாது என்பது போன்று தலையாட்டியஉத்ரா,
“என்ன பேசனும் உங்களுக்கு?” தன் சுய கௌரவத்தையே அன்று அவனால் பறிக்கப்பட்டஆங்காரத்தில் பூகம்பமாய் சீறியவள்,
“என் ட்ரெஸை கிழிச்சும்… நான் அவமானத்துலதரையில உக்காந்துட்டு இருக்கிறது தெரிஞ்சும்… அப்ப கூட பேப்பர்ஸை வச்சிட்டு போன ராட்சஷன்நீங்க… கல் நெஞ்சக்காரன்… யூ ஆர் ஹார்ட்லெஸ்(You’re heartless)… எந்தளவுக்கு லவ் பண்ணனோஅந்தளவுக்கு இப்ப பிடிக்கல” என்று அவனை நோக்கி சூடான பார்வையை வீசியவாறே தன் உள்ளத்தில் கொதித்துக் கொண்டிருந்த வார்த்தைகளை தன் கணவனின் மீது முள் சாட்டையாய் வீசியவள்,
“என்னை அவனுக…” அதரங்கள் நடுங்க கூறியவளின் அருகே வந்து அவளின் தாடையைபற்றி அழுத்தமாக நிமிர்த்தியவன், “உன்னை அப்படி பாக்க எனக்கு முழு உரிமை இருக்கு உத்ரா… ஆனா, அன்னைக்கு அந்த நேரத்துல உன் கண்ணுக்கு கீழ நான் பாக்கல” என்று அவளை விட்டவன், உடலில் எகிறிக் கொண்டிருந்த ஆத்திரங்களை மறுபக்கம் திரும்பி, தன்னவளுக்குத்தெரியாமல் தலையை அழுந்தக் கோதி கட்டுக்குள் கொண்டு வந்தவனுக்கு, அந்த முகம் தெரியாத மிருகத்தை வேட்டையாடும் வெறி தாண்டவமாடிக்கொண்டிருந்தது.
தன்னையே பார்த்தபடி (முறைத்தபடி) இருந்த உத்ராவை தலையை மட்டும் பக்கவாட்டாக திருப்பி, “அன்ட் உன்னை தூக்கிட்டு போன யாரும் உயிரோட இல்ல இப்ப… எல்லாரும் விக்ரமோடட்வெல்வ் காஜ் கன்னுக்கு (12 Gauge gun) இரைஆகிட்டாங்க” என்றிட, உத்ராவின் முதுகுத்தண்டில்மின்சாரம் பாய்ந்து ஓடி மூளையில் வெட்டியது.
உடல் நடுங்க, மேனியில் உள்ள ரோமங்கள் அனைத்தும் எழ, புல்லரித்துப் போய் நின்றவளைதிரும்பிப் பார்த்த அபிமன்யு, “டயர்டா இருந்தாபோய் தூங்கு” என்று பால்கனியை நோக்கி நடந்தவன், சற்று தாமதித்து நின்று உத்ராவைநோக்கி திரும்பியவன்,
“உங்க கேர்ள்ஸோட பிரச்சனையே என்ன தெரியுமா?” என்று உள்ளுக்குள் தன் இதயத்தை பிளந்து கொண்டிருக்கும் வலியும், கோபமும் இணைய கூர்மையான விழி கொண்டு தன் மனையாளை ஊடுருவியவனின் பார்வை மிதமிஞ்சியகாதலை உணர்த்த,
“இங்க எங்களோட தேவை வெறும் செக்ஸோடமுடியுதுன்னு நீங்க நினைக்கிறது… அதையும் தாண்டி எங்களுக்கு உங்ககிட்ட நிறைய இருக்கு” என்றவன் படீரென்று கதவை சாற்றிவிட்டு வெளியே செல்ல, கதவு அடித்த வேகத்தில் பயத்தில் கண் சிமிட்டியவள் ஸ்தம்பித்து போய் நின்றிருந்தாள்.
அவனை ஒதுக்கவும் முடியவில்லை! ஏற்கவும்முடியவில்லை!
மொத்தத்தில் அந்த வேங்கையை வேண்டாமெனஅவளால் வெறுக்கவே முடியவில்லை. சீறிப் பாய்ந்து கொண்டு அனைவரையும் வேட்டையாடும்வேங்கையாய் அனைவரும் அந்த அபிமன்யுவைபார்த்திருக்க, அவள், அவனது மனையாள் மட்டும் தான் அந்த வேங்கையின் மறுபக்கத்தைபார்த்தவள்.
அவனின் புன்னகை! அக்கறை! காதல்! தாபம்! என்ற அவனுக்குள் இருந்த ஈரமான மென்உணர்வுகளை கண்டவளுக்கு, அவன் அவளை ஏமாற்றி அவனுடனே வைத்திருந்ததை மட்டும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவும் இங்கு அனைவரும் நாயாய் பேயாய் அலைந்து திரிந்து கொண்டிருக்க, தான் அபிமன்யுவுடன் சமுத்திரத்தில்சுகமாய் காதலில் நனைந்து கொண்டிருந்ததைநினைத்தவளுக்கு குன்றலாய் இருந்தது.
இதுவே அபிமன்யு அவளை தூக்கிச் சென்ற அன்றே, அவளிடம் ஒவ்வொன்றாக நிதானமாய் எடுத்துக் கூறியிருந்தால், இப்படி இருந்திருக்க மாட்டாளோஎன்னவோ!
அவன் மறைத்த தவறு ஒன்று மட்டும்தான் பெண்ணவளை முழுவதுமாய் ஆக்கிரமித்துஇருந்தது. அதை நினைத்த மாத்திரத்தில் எல்லாம் யாரோ அவளை கதற கதற இந்த பிரபஞ்சத்தில்இருந்து இழுத்துக் கொண்டு செல்லும் உணர்வு.
குளியலறைக்குள் புகுந்து முகத்தை குளிர்ந்த நீரால்அடித்துக் கழுவியவள், மீண்டும் வந்து உறங்க முயல, நித்திரா தேவி அவளைத் தழுவினாள் தானே!திரும்பித் திரும்பி உச்சுக்கொட்டிக் கொண்டு படுத்தவள், தலையை மட்டும் உயர்த்தி தூர இருந்த பால்கனியில் அபிமன்யு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்தாள்.
‘குளிரலையா?’ என்று நினைத்தவள், ‘குளிரட்டும்… எதையும் தாங்கற பாடி தானே… நமக்கு என்ன? பாவம் பாத்தா நாம தான் கடைசில அழுதுட்டுஉக்காரனும்’ கோபத்தில் மேலும் ஆழப் புதைந்து படுத்துக் கொண்டவள், உர்ரென்ற முகத்துடனேதூங்கிப் போனாள்.
அதே நேரம் மாடியில் விஜய்யை சந்தித்த நீரஜா, அவரின் தோளில் சாய்ந்தபடி அருகே அமர்ந்து கொண்டு, “இந்த வயசுலையும் யாருக்கும் தெரியாமபதுங்கி பதுங்கி வர்றேன்…” என்று சலித்தவர், அவரின் தோளில் விழிகளை மூடி சாய்ந்திருக்க, நீரஜாவின் தலையை எடுத்து மடியில் சாய்த்துக்கொண்டவர் அவரின் தலையை மெதுவாக கோதிவிட, விஜய்யின் கரத்தை எடுத்து தன் கன்னங்களில் வைத்துக் கொண்டவர், எதையோ நினைத்து தயங்கிக் கொண்டே படுத்திருந்தார்.
“என்ன அம்மாடி?” என்று வினவ, “நறுமுகைசந்தோஷமா இருக்கா… விக்ரம் பிடிவாதமாஇருந்தாலும் நறுன்னு வந்தா அட்ஜஸ்ட் பண்ணி போவான் விஜய்… ஆனா, உத்ரா…” என்றவர் ஒரு கணம் நிறுத்த, விஜய்யிற்கு நீரஜா சொல்லாதே என்னவென்று புரிந்தது.
“உத்ரா ரொம்ப உள்ளுக்குள்ள வச்சுக்கறா… உங்கள மாதிரி அவ்வளவு சீக்கிரம் எதையும் வெளியசொல்றது இல்ல… அபியும் அட்ஜஸ்ட் பண்றகேரக்டர் இல்ல… ஹீ இஸ் ஸோ மச் ஸ்டபார்ன்(He’s so much stubborn)… ரொம்ப ஆல்பா மேல்லா(Alpha male) இருக்கான்…” என்றவரின் கன்னத்தைசெல்லமாய் தட்டிய விஜய்,
“அண்ணன் மகனா இருக்கும்போது இருந்த பெருமை… இப்ப மருமகனா வந்த அப்புறம் மகளை நினைச்சு ஃபீல் பண்ணுதா?” என்று கேலி செய்ய, கன்னத்தில் இருந்த அவரின் கரத்தை இழுத்து கடித்தவர், அவர் வலியில், “ஷ்ஷ்” என்று கத்தவும்தான் விட்டார்.
“உங்களை அவ்வளவு தான்” என்று எழுந்து அமர்ந்து மிரட்டியவரை விஜய் பார்வை மாற்றத்துடன் பார்க்க,
“ச்ச என்ன இது?” என்று அவரின் தோளில் அடித்தவர், “அப்ப இருக்க விஜய் எவ்வளவு ஜென்டில்மேன்னா இருந்தீங்க… இப்ப ரொம்ப மோசம்” என்றிட, மனையாளின் நாணம் கலந்த பொய் கோபத்தை, சந்திர ஒளியின் கீழ் கண்டவர் இந்த வயதிலும் மயங்கித் தான் போனார்.
“அம்மாடி! உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன்தெரியுமா?” என்று குரல் கமற கூறியவரை தலை நிமிர்த்தி பார்த்த நீரஜா, அவரின் இரு கன்னத்திலும்மென்மையாய் கை வைத்து, அருகே இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள, அன்னையிடம்சரணடைவது போன்று தன்னவளின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவர், அவரை இறுக அணைத்துக்கொள்ள,
“உன்னை லவ் பண்ணது நினைச்சா பெருமையாஇருக்கு அம்மாடி… எனக்காகவே என்னை நினைச்சிட்டு இத்தனை காலம் தனியா இருந்திருக்க… ஒரு பக்கம் எனக்காக நீ இழந்ததைஎல்லாம் நினைச்சு வருத்தமா இருந்தாலும், எனக்காகனு நினைக்கும்போது கர்வமா இருக்கு” என்றவர் அவரின் நெஞ்சத்தை மஞ்சமாக்கிநிம்மதியாய் உறங்க, அவரின் தலையை கோதியபடிஅமர்ந்திருந்த நீரஜாவின் மனம் நீண்ட நாட்களுக்கு பிறகு அத்தனை நிம்மதியாய், அமைதியாய், என அனைத்துமாய், அர்த்தமாய் இருந்தது வாழ்வு.
***
“ஐயோ விடுங்க மாமா…” என்று இரண்டாவது முறை தன்னை நாட வரும் கணவனை தள்ளிவிட்டநறுமுகை, “கல்யாணம் ஆனவங்க கூட தூங்கியிருப்பாங்க… நீங்க என்னனா எப்ப பாரு… “ என்று ஒருமுறை விக்ரமை ஏற இறங்க பார்த்தவள்,
“அவ்வளவு காஜியா நீங்க… ஐயைய!” என்றவளின்வெற்று தோளை பிடித்து தன்னிடம் இழுத்தவன், அவளின் கழுத்தில் முகம் புதைந்து,
“நீ நினைக்கிறத விட ரொம்ப ரொம்ப மோசமாயோசிப்பேன்டி நான்” என்றவன் காரிகையவளின்செவிகளில் சில கொச்சையான களியாட்டங்களைவிவரிக்க, அவன் கூறியதிலேயே மேனி எல்லாம் சிவக்க,
“ச்சீ போங்க… அதெல்லாம் கிடையாது” என்று நாணத்தில் துடிதுடித்து மறுத்தாள்.
“அப்ப எனக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்னுசொன்ன?” என்று எப்போதோ ஒன்றாய்இருந்தபோது அவள் சொன்னதைக் கூறி கேட்க,
“அதெல்லாம் ஏதோ மூட்ல சொன்னது மிஸ்டர் விக்ரம் அபிநந்தன். இப்ப எல்லாம் நோ தான்… அதுவும் இல்லாம இப்படியெல்லாமா யோசிப்பீங்க” என்றவள் போர்வையால் தன்னை சுற்றிக் கொண்டு எழப்போக, அவளை பிடித்து இழுத்த விக்ரம்வேட்கையுடன் அவளைத் தனக்கு கீழ் கொண்டு வந்தவன்,
“ஐயோ மாமா!” என்று கத்தியவளின் வாயை பொத்தியவன், “ஏன்டி கத்தற?” என்று யாருக்காவது கேட்டுவிடுமோ என்று அதட்ட,
“பின்ன ரேப் பண்ற மாதிரி பண்றீங்க?” என்றவள் அவனை தள்ளிவிட முயற்சிக்க, “எது ரேப்பா?” என்று அதிர்ந்தது என்னவோ இவனது முறையாயிற்று.
அவளை விட்டு விலகியவன், அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொள்ள, “மாமா” என்று ஒற்றை விரலால் அவனின் முதுகில் கோலம் போட்டவளின்கரத்தை தட்டிவிட்டவன், “போடி” என்றான் கோபமாக.
கணவனின் அருகே நகர்ந்து படுத்தவள், தன் முன்னங்கங்கள் அவனின் பின் மேனியில் படர அணைத்து, “மாமோய்!” என்று விக்ரமின் செவியில்அவளது சூடான காற்று பட அழைக்க, தன்னவளின்மோகக் குரலிலேயே உணர்வுகள் சீற்றமாய்மாறினாலும் துளியும் ஆடவனிடம் அசைவில்லை.
“பேசுங்க” என்றவள் அடுத்து முதுகை கடிக்க,
“ஆஹ்!” என்று வலியை வெளிப்படுத்தியவனுக்குமெய்யாலுமே வலித்தது. கோபக்காரி கடித்த இடத்தில் பற்தடம் பதிந்து, அதைச் சுற்றியும்சிவந்து போய்விட, நறுமுகையை திரும்பி பார்த்த விக்ரம், “ராட்சஷி” என்று திட்டினான்.
“நான் அப்படிதான் சீன் போடுவேன்… நீங்கதான்கெஞ்சி, கொஞ்சி சம்மதிக்க வைக்கணும்” என்று விழிகள் சிமிட்டி சிறு பிள்ளை போல் நாக்கைதுருத்தி கூறியவளை கூர்ந்து பார்த்தவனுக்குமெய்யாலுமே அவனவளின் வதனத்தில் இருந்த அயர்வு அப்பட்டமாய் தெரிய, நறுமுகையைபற்றியவன், அவளை இழுத்து தன் மார்பின் மீது படுக்க வைத்துக் கொண்டான்.
“என்ன? வேணாமா?” என்று ஆள்காட்டி விரலின்நகத்தில் அவன் மார்பு வருடி கேட்டவளின் தாடை பற்றி முரடனாய் கொஞ்சி முத்தமிட்டவன், “தூங்குடி” என்றிட,
“ஐயைய… அவ்வளவு தானா உங்க ஸ்டாமினா?” என்று கணவனை சீண்ட, “வேணாம்டி. ஏதாவது சென்சார் போடற மாதிரி சொல்லிடுவேன்” என்றவனிடம் மேலும் நெருங்கி சூடேற்றியவள், “ஆஹான்” என்றிட, அவள் இடை கன்ற பிடித்து அருகே இழுத்தவன்,
“டயர்டா இருக்க… தூங்கு… எனக்கு எப்பவேணுமோ அப்ப நீ இருப்ப… அது போதும்” என்றவன் அவளின் தலையை தன் நெஞ்சில் சாய்க்க, விக்ரமின் புரிதலில் அவனின் நெஞ்சில் முத்தமிட்டு இலேசாக கடித்தவள், விழிகளை மூடி உறங்க, தன்னவளின் சிகையோடு விளையாடிக்கொண்டிருந்த விக்ரமின் விழிகளையும் நித்திராதேவி தழுவிக் கொண்டாள்.
***
“ஹம்… நமக்கு எப்ப கல்யாணம் ஆகி பர்ஸ்ட் நைட்வந்து…” திலோவும் மித்ராவும் தங்களுக்கு என்று இருந்த அறையில் பேசிக் கொண்டு சிரித்துக்கொண்டிருக்க, திலோவின் அலைபேசி அடித்தது.
கௌதம் பிரணவ் தான்!
திலோவின் அலைபேசி திரையில் ஒளிர்ந்த பெயரை கண்ட மித்ரா கிண்டலாய் சிரிக்க, “கம்முன்னு இரு மித்து” என்று அவளிடம் சிணுங்கிய திலோபோர்வைக்குள் மறைய எத்தனிக்க,
“பாத்துடி… ஃபோன்லையே குழந்தை பெத்திடாத” என்று எச்சரித்த மித்ராவை அடித்த திலோ, “போடி” என்றுவிட்டு உள்ளே புகுந்துகொண்டாள்.
“ஹலோ சொல்லுங்க என்ன இந்த நேரத்துல?” என்று திலோத்தமை ஹஸ்கி குரலில் வினவ,
“அடேயப்பாஆ… இந்தம்மா என்கிட்ட இந்த நேரத்துல பேசுனதே இல்ல பாரு” எதிரில் இருந்தவன் கலாய்க்க, உள்ளுக்குள் சிணுங்கியவள், “ம்கூம்” என்று நெளிந்தாள்.
வெளியே இருந்த மித்ராவோ, ‘என்ன இந்த நெளி நெளியறா?’ என்று யோசனையுடனே, ‘சரி நாமஷாகித் கபூரோட டூயட் பாடுவோம்’ என்று உறங்க எத்தனித்தவளுக்கு சுற்றியும் என்ன நடக்கிறது என்று தெரியவா போகிறது.
“தூங்கிடுச்சா அந்த பொண்ணு?” கௌதம்விசாரிக்க,
“ம்ம்” என்று நாணத்துடன் கூறியவள், “இன்னிக்கு உத்ராக்கு பர்ஸ்ட் நைட்” என்று கிறக்கத்துடன்கூற, அது எதிரில் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு, அதுவும் அவளின் மந்தகாச குரலில், டன் கணக்கில்உஷ்ணம் சொல்ல இயலாத இடங்களில் எகிறியது.
“நீ இப்ப ஓகே சொல்லு… நான் ஏற்பாடு பண்றேன்” என்று கூறிவிட்டு அவன் குறுஞ்சிரிப்புடன்தன்னவளின் பதிலுக்காக காத்திருக்க, “செருப்பு… போங்க… அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் தான்” என்று நறுக்கென்று பேசியவளின் பேச்சில் சலிப்படைந்தவன்,
“நீ இதையே சொல்லிட்டு இரு” என்றான்.
“அண்ணாக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்…” எச்சரித்தவளிடம் சிங்கமாய் சிலிர்த்துக் கொண்டு நின்றவன், “ஏய் உன் அண்ணனுகளே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இத்தனை வருஷம் இரண்டு பேரும் லவ் பண்றோம்… ஸோ நான் எவ்வளவு பெரிய ஆளு” என்றவன் காலரை தூக்கிவிட,
“ம்கூம்… பேச்சு எல்லாம் சூப்பரா தான் இருக்கு குமாருஉ… ஆனா, இப்ப அபி அண்ணா கல்யாணம் முடிஞ்சிருச்சு… இனி எனக்கு தான் பாக்க ஸ்டார்ட்பண்ணுவாங்க…” என்று படபடவென்று பேசிக்கொண்டே வந்தவள், “பயமா இருக்கு” என்று கூறும்போதே குரல் கரகரத்தது.
அபிமன்யுவும், விக்ரமும் எடுக்கும் முடிவு தானே இவர்களின் திருமணத்திற்கான முக்கிய அச்சாரம்!
“ஹே லூசு… தேவையில்லாம ஃபீல் பண்ணாத… பாத்துக்கலாம்” என்றவன், “எனக்கு இப்ப எல்லாம் உன்னை பாக்கும்போது ஃபீல் அதிகமா இருக்குடி… உன்னை கூடவே வச்சு பாத்துக்கனும்னு இருக்கு… நேர்ல சண்டை போடனும்… நிறைய” என்றவனின்பேச்சில் குறுக்கிட்டவள்,
“சமைச்சு தரணும் நீங்க” என்றிட, அவனோதலையில் அடித்துக் கொண்டான்.
“ஏன்டி எவ்வளவு ரொமான்டிக்கா பேசிட்டுஇருக்கேன்… நீ இருக்க பாரு… சாப்பாட்டு ராமி” என்று உள்ளுக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்வயிற்றெரிச்சலுடன் அவளை திட்டியவன், “என் விதி” என்றான்.
“ஆஹான்… சரிடி தங்கபையா… பாபா ஆல்வேஸ்லவ் யூ சரியா” என்று ஃபோனிலேயே முத்தம் கொடுக்க, அவனும் அவளுக்கு திருப்பி பாரி வள்ளலாய் வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.
“ஐயோ இவ வேற நாயை கூப்பிட்டு என் தூக்கத்தைகெடுக்கறாளே” என்று தூக்கத்தில் புலம்பிய மித்து, போர்வையை நன்கு இழுத்து போர்த்திவிட்டு தூங்க, இங்கு விடிய விடிய கதைகள் பேசிக்கொண்டிருந்தனர் இருவரும்.
இங்கு அனைவரின் மனமும் ஒவ்வொரு விதமான உணர்ச்சிகளில் இருந்தாலும், யாரும் வாழ்வைவெறுக்கவில்லை.
இவை அனைத்தையும் அறிந்த ஒருவனின் விழிகள்பளபளக்க, தன் முன் இருந்த டிவியில் அபிமன்யு-உத்ராவின் திருமண வைபவம் ஓடிக் கொண்டிருக்க, அருகில் இருந்த நாற்காலியை எடுத்து டிவியைஆக்ரோஷமாக உடைத்து தூள் தூளாக்கியவன், தன் ஆத்திரம் தீர்ந்த பின்னும், தன் வெறும் காலால் அனைத்தையும் மிதித்து தன் ஆத்திரத்தை காட்ட, அவனின் பாதங்களில் இருந்து இரத்தம் கசியத்தொடங்கியிருந்தது.
“உன்னை விடமாட்டேன்! உன்னை விடமாட்டேன்! உன்னை தனியா நிறுத்துன மாதிரி உன்னோட பொண்ணு ஒருத்தியை கொன்னு, இன்னொருத்தியை புருஷன் இல்லாம நிக்கவைக்கிறேன்டி” என்று நீரஜாவை திட்டி கத்தியவன், நீரஜாவை இத்தனை ஆண்டுகள் தனி மரமாய்நிறுத்தியது போலவே அவரின் இரு பெண்களையும்வாழவிடக் கூடாது என்று எண்ணினான்.
உத்ரா திருமணம் செய்யாது இருக்கத்தான் அவன் அவளது உடையை அகற்றி கதற கதறதுன்புறுத்தியது. ஆனால், அவள் சிரித்துக் கொண்டு திருமண வைபவத்தில் நிற்பதைப் பார்த்தவனுக்குதான் தப்பு கணக்கு போட்டுவிட்டதாகவேதோன்றியது.
“தப்பு பண்ணிட்டேன் நீரஜா… உன் பொண்ணுக்கு உன்னோட தைரியம் இருக்கும்னு நினைக்காமபோயிட்டேன்” என்று கொடூரமாக பற்களை கடித்துக் கொண்டு கூறியவன், தன் கரத்தில்இருந்ததை கண்டு அந்த வன்மமே முகம் சுளிக்கும்வண்ணம் கேவலமாக புன்னகைத்தான்.