ஆட்டம்-43
ஆட்டம்-43
ஆட்டம்-43
“Fear is just an illusion. Courage above fear (அச்சம் என்பது வெறும் மாயை. பயத்திற்கு மேல் தைரியம் கொள்)”
அன்னை தன்னிடம் மந்திரமாய் கூறியது நினைவில் வர, தன் முன் நின்றிருந்தவனை வெட்டி போடும் அளவிற்கு ஆங்காரம் கொண்டு வெறித்தவள், “யெஸ். நான் என் புருஷன் கூட ரொம்ப ரொம்பசந்தோஷமா இருக்கேன்” என்று அவனைக் கடந்து நகர முயன்றாள்.
உத்ராவை செல்ல விடாது அவன் குறுக்கே கரம் விட, அக்கேவலமானவனின் கரம் தன் மேல் படாதுஅருவெறுப்புடன் முகச் சுளிப்பை முகத்தில் அப்பட்டமாய் காட்டி பின்னே நகர்ந்தாள் அபிமன்யுவின் மனையாள்.
தாடை இறுக அவனை நிமிர்வாய் விழியோடு விழி பார்த்தவள், “உன் சாவை நீ தேடிட்டு இருக்க” என்று காளி அவதாரம் எடுக்கக் காத்திருந்த முகத்துடன் வார்த்தைகளை வெட்டி எறிய,
அதில் வாய்விட்டுச் சத்தமாக சிரித்தவன், “அன்னைக்கு அழுதவளா நீ? உன் புருஷன் ட்ரெயினிங்கா இல்ல உங்கம்மா ட்ரெயினிங்கா?” என்று விழிகள் வெறியில் பளபளக்க பற்களைக்கடித்துக் கொண்டு கேட்டவனின் இதயம், மொத்த குடும்பத்தின் இரத்தத்தை குடிக்க எண்ணிக்காத்திருந்தது.
அவனின் விழிகளில் தெரிந்த பழிவெறியில்உத்ராவின் சப்த நாடியும் உள்ளுக்குள் அதிர்ந்து ஆட, ‘தன் குடும்பத்தின் மேல் அப்படி இவனுக்கு என்ன வன்மம்?‘ என்றே பேதை பெண்ணவளுக்குத்தோன்றியது.
‘யாரால் இவனுக்கு என்ன ஆனது? மொத்த குடும்பத்தையும் இப்படி வதைக்கத் துடிக்கிறான்என்றால், யாரால் என்ன ஆனது என்றே மனம் கேட்டுத் தவித்தது‘ அவனை நேராக பார்த்து, “உனக்கு எங்க மேல ஏன் இப்படி ஒரு வன்மம்?” என்று கேட்டே விட்டாள்.
அதற்கு பதிலாய் ஆட்களை அச்சம் காண வைக்கும் ஒரு ராட்சத புன்னகையை கொடுத்தவன், தன்னுடைய அலைபேசியை எடுத்தபடி, “அதை தெரிஞ்சுக்கிறதுக்கு முன்னாடி இதை பாரு” என்று அதில் ஒரு காணொளியை ஓட விட, மனம் முழுவதும் விவரிக்க இயலாத ஆரவாரத்தில் குமுற, விழிகள் இரண்டும் இரண்டு மடங்காக விரிந்து கொள்ள, அதிர்ச்சியில் இதழ்கள் பிரிந்து நடுங்கியது.
தன் எதிரில் சாவகாசமாக நின்று தன்னுடைய ஒவ்வொரு முக பாவங்களையும் ரசித்துக்கொண்டிருந்தவனை அதிர்ச்சி அலைகள் மேனியைதாக்கிய நிலையோடு பார்த்தவள், “ப்ளீஸ்! டெலிட்பண்ணு” என்றாள்.
ஓர் இளக்கார புன்னகையை கொடுத்தவன், “இவ்வளவு நேரம் இருந்த தைரியம் எங்கடிபோச்சு?” என்று கேட்டவனை கலக்கமும்தவிப்புமாக கண்டவள்,
“ரொம்ப ஈனமா இருக்க நீ” என்று அடிக்குரலில்பற்களைக் கடித்தபடி கர்ஜிக்க, விட்டால் அவனின்குரல்வளையில் பாயும் ஆத்திரத்தில் இருந்தாள்.
சட்டென உத்ராவின் விழிகள் எங்கோ பாய, அவளின் விழிகள் குத்தி நின்ற திசையை அவளை பார்த்தே உணர்ந்தவன், “அப்ப நான் கிளம்பறேன்…” என்று உத்ராவிடம் விஷமானுடனாய் கூறியவன், தன்னுடைய தொப்பியையும், கூலர்ஸையும், மாஸ்க்கையும்அணிந்து கொண்டு அங்கிருந்து அகன்று செல்ல, உத்ராவின் முன் கொதிக்கும் சினத்துடன்செவ்வண்ணம் பூசிய வதனத்துடன் நின்றான் அபிமன்யு.
முக்கியமான மீட்டிங்கில் இருந்து, பாதியில்வந்திருந்தான். நீரஜாவிற்கு அழைத்திருந்தவன்உத்ராவை பற்றி கேட்க, “அவ சர்ஜரி ப்ளாக்லஇருக்கா” தகவலாய் கூறிவிட்டு அவர் வைத்துவிட, அங்கிருந்தவர்களுக்கு அழைத்தவன் உத்ராஅங்கில்லை என்பதை அறிந்துகொள்ள, தனது அலைபேசியில் இருந்த ஆக்ஸஸ் மூலம் மருத்துவமனையின் கேமிராக்களைஆராய்ந்தவனுக்கு உத்ரா வெளியே செல்வது தெரிய, கடுங்கோபம் கொண்டவனின் விழிகள்எல்லாம் எரிமலையாய் கொழுந்துவிட்டு வெடித்துச்சிதறியது.
அடுத்து உத்ராவினை ட்ராக் செய்து வந்தவன், இப்போது அவள் முன் நின்றிருந்த தோரணையும்கட்டுக்குள் வைத்திருக்கும் ஆத்திரமும், பெண்ணவளின் உள்ளத்தில் திகிலை கிளப்ப, அவனை மெல்ல மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
அபிமன்யுவின் முகம் கடுமையை தத்தெடுத்திருக்க, அணிந்திருந்த கூலர்ஸை சர்வ சாதாரணமாக கழற்றியவன், “உன்கிட்ட என்ன சொல்லி இருக்கேன்?” என்று வெகு அழுத்தமாக கேட்க, அபிமன்யுவை பார்த்துக் கொண்டு நின்றவளுக்குகணவன் கேட்டது செவியில் விழுந்தாலும், சற்று விநாடிகளுக்கு முன் தன்முன் நின்றவன் காட்டிய காணொளியே மனதில் நிற்க, இரு யோசனையில்பதில் அளிக்காது நின்றிருந்தாள்.
பதில் பேசாது நின்றிருந்தவளின் மேல் அபிமன்யுவின் கோபமும், பொறுமையும் எல்லையைகடந்து கொண்டிருக்க, தனது இடது கை பெருவிரலால் தனது வலது புருவத்தை அழுந்த வருடி தன்னை அடக்கியவன், அவளின் கைகளை பிடித்து கார் பார்க்கிங்கிற்கு அழைத்துச் சென்றான்.
அவனின் பின்னேயே வந்தவளை கார் பார்க்கிங்கிற்குள் வந்தவுடன், தன்முன் இழுத்தவன்விட்டால் கரத்தை ஓங்கியிருப்பான்.
ஆனால், அவனின் ஆழ்மனமும் புத்தியும் ஒருசேர, ‘அவள் உன் அடியை தாங்க மாட்டாள்‘ என்றும், ‘கை உயர்த்துவது தவறென்றும்‘ அபிமன்யுவிடம்கூக்குரலில் உறும, தனது இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தை வருடியவன், “கெட்இன்சைட் (Get inside)” என்று உறும, அரண்டு போய் அபிமன்யுவுடன் அவனது ரேன்ஞ் ரோவரில்ஏறினாள்.
வீடு வந்து சேரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அபிமன்யு அதீத ஆங்காரத்துடன்அமர்ந்திருப்பது புரிந்த உத்ரா, அவன் புறம் திரும்பக் கூட இல்லை.
காரை செலுத்திக் கொண்டே காரிலிருந்தப்ளூடூத்தின் மூலம் விஜய்யிற்கு அழைத்து, “எங்கஇருக்கீங்க மாமா?” என்று வினவ,
“ஹாஸ்பிடல் தான்… என்ன விஷயம்?” என்று கேட்டவரிடம் விவரத்தைக் கூறியவன், “அத்தைகிட்ட சொல்ல வேணாம்… நீங்க மட்டும் கிளம்பி வீட்டுக்கு வாங்க” என்றவன் ப்ளூடூத்தினைஅணைத்துவிட்டு, தனது அதிகாரத்தை மேலும் காரிடம் காட்டி வேகத்தைக் கூட்டினான்.
அவனருகே அமர்ந்திருந்த உத்ராவிற்கு அவனின்அனல் தன் மேல் அடிப்பதைப் போன்று இருக்க, உள்ளுக்குள் வியர்த்துக் கொண்டிருந்தவள், உதட்டை கடித்து உணர்வுகளை அடக்க, சிறிது நிமிடங்களில் கார் வீட்டை அடைய,
கார் வரும் சப்தத்திலேயே, உள்ளே கணவருடன்அமர்ந்திருந்த இமையரசி, “அபி கார் மாதிரி இல்ல? இந்த நேரத்துக்கு வர மாட்டானே” கணவரிடம் கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.
வெளியே வந்தவர் அபிமன்யுவின் முகத்தைப்பார்த்தவராய் கதி கலங்கிப் போக, அவனுடனே சின்ன மானாய் இறங்கிய பேத்தியை பார்த்தவருக்குஏதோ தவறாக நடந்திருப்பது புரிய, “வா அபி… என்ன இரண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கீங்க… சாப்பாடு எடுத்து வைக்கட்டா?” என்று உத்ராவைபேரனிடம் இருந்து தனியே அழைத்துக் கொண்டு செல்லும் நோக்கத்துடன் பேத்தியின் கரத்தைசாமர்த்தியமாக பிடித்தபடி கேட்டார்.
பாட்டியின் பேச்சையும், அவர் தன் மனையாளின்கரத்தை பிடித்திருந்த விதத்தையும் மாறி மாறிகண்டவனின் முகத்தில் தெரிந்த உணர்வுகளை யாராலும் கண்டறிய முடியவில்லை.
உத்ராவின் மறு கரத்தை பற்றியவன், “எனக்கு உங்கபேத்தி கூட கொஞ்சம் பேசணும்… அதுக்கு அப்புறம் வந்து சாப்பிடுவா… மறக்காம உங்கபேத்திக்கு வைக்கிற ப்ளேட்டுக்கு பக்கத்துல மட்டும் உப்பு ஜாடியை வைங்க” என்றவன்,
“விஜய் மாமா வந்தா… ஆபிஸ் ரூமுக்கு அனுப்புங்க” என்று உத்ராவை அறைக்குள் இழுத்துச் சென்றான்.
அறைக்குள் வந்ததும் அவளின் கரத்தை விட்டவன்அமைதியாக சென்று, அங்கிருந்த விண்டோவைதிறந்துவிட்டு டையை லூஸ் செய்தபடி நிற்க, உத்ராஅப்படியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள்.
உள்ளுக்குள் ஒவ்வொரு மணித்துளியும் அச்சமாகஇருந்தது.
சிறிது நேரத்திலேயே விஜய் வந்துவிட, மாமனாரிடம்மொத்தமாக நடந்ததைக் கூறிய அபிமன்யு, “இப்ப கூட உங்ககிட்ட கொண்டு வந்திருக்க மாட்டேன்… பட் நீங்க தான் ஹாஸ்பிடல் வரட்டும்னு கூட்டிட்டுபோனீங்க… ஏற்கனவே நடந்தது எல்லாம் சின்ன விஷயம் கிடையாது அங்கிள்… ஸோ இனிமேல் உத்ராவை நான் ஹாஸ்பிடல் அனுப்பறதா இல்ல… அத்தையையும் இதுல தலையிட வேணாம்னுசொல்லிடுங்க” என்று தன்னை மீறி உத்ரா சென்ற கோபத்தினில் திடமான குரலில் உறுதியான முடிவுடன் அபிமன்யு கூற, மகள் ஏதோ கூற வருவதை விஜய் கண்டார்.
மகளின் அருகே சென்றவர், “என்னடா?” என்று உத்ராவின் கரத்தை பரிவாக பிடித்துக் கொண்டு அமர, அபிமன்யுவை பார்த்தவளின் விழிகள் அதே பரிவை அவனிடம் இருந்து அவளறியாதுஎதிர்பார்த்தது.
தன் தோளில் இருந்த தந்தையின் கரத்தின் மேல் கரம் வைத்தவள், “இன்னிக்கு நான் அவனை பாத்தேன் ப்பா” என்றாள் குரல் கமற.
அவள் யாரென்று கூறத் தேவையில்லை! அவள் முகமும் குரலுமே கூறியது அவள் யாரை கூறுகிறாள்என்று!
மகளின் கரத்தை தட்டிக் கொடுத்த விஜய், “ஓகே… எங்க பாத்த?” என்று கேட்க, நடந்ததை கூறியவள்,
“அவனுக்கு நம்ம மேல என்ன பழிப்பா?” என்று புலம்பியவளை கண்டு மனம் வெதும்பிய விஜய், அபிமன்யுவை பார்க்க, அவனோ, ‘இப்போது எதுவும் கூற வேண்டாம்‘ என்பது போல தலையாட்டினான்.
இரையை வெறியுடன் வேட்டையாட வேங்கை பதுங்கிக் காத்திருந்தது!
மேலும் அனைத்தையும் கூறிய உத்ரா, அவன் காட்டிய வீடியோவை மட்டும் கூறவில்லை.
தயக்கதுடன் தந்தையை பார்த்தவள், பின் அபிமன்யுவை பார்த்து, “அவன்…” என்று தொடங்க,அங்கிருந்த மூவரின் அலைபேசிகளுக்கும் வாட்ஸ்அப்பில் மெசேஜ் வந்ததிற்கான சத்தம் ஒரே நேரத்தில் வர, உத்ரா, “ஷிட்!” தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
அதே நேரம் நோயாளியை பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவிற்கும், தனது அலுவலக அறையில்வெளிநாட்டு ப்ராஜெக்ட்டில் மூழ்கியிருந்தவிக்ரமிற்கும், அபிமன்யு விட்டு வந்த மீட்டிங்கில்இருந்த நறுமுகைக்கும் மெசேஜ் சென்றிருந்தது.
மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வந்த நறுமுகை, அபிமன்யுவின் அறைக்குள் வந்தவள் ஆரவ்விடம் மேலே நடக்க வேண்டிய வேலைகளை கொடுத்து அனுப்பிவிட்டு, அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
அந்த காணொளியை பார்த்த விநாடி இந்த பிரபஞ்சம் இரண்டாக பிளந்து தன்னை சுழற்றியடித்து இழுத்துக் கொண்டு போவதைஉணர்ந்தவள், உடல் வெடவெடக்க அமர்ந்திருந்த கணம், படீரென்று கதவு திறக்கப்படும் சப்தத்தில்நாடி நரம்புகள் யாவும் நடுங்க அறையின் வாயிலில்நின்றிருந்தவனை கண்டாள்.
அவளது கணவன் தான்!
அவளுக்காக வந்திருந்தான்!
அவளுக்காக அபிமன்யுவின் அறையை முதல் முறை மிதித்திருந்தான்!
கணவனை பார்த்தவுடன் இயலாமையோடுசோர்வாக இருக்கையில் சாய்ந்தவள், கணவனையே இமை சிமிட்டாது பார்த்திருக்க, அறைக்குள் முதலில் வர யோசித்தவன், தன்னவளின்பற்பல உணர்ச்சிகள் கொந்தளிக்கும் வதனத்தைகண்டு தன் பிடிவாதங்களை தூரப்போட்டுவிட்டுதன்னவளிடம் விரைந்தான்.
மனையாளின் அருகே வந்தவன் அவள் கரத்தில்இருந்த அலைபேசியில் ஓடிக் கொண்டிருந்த காணொளியை கண்டு, அலைபேசியை வாங்கி அணைத்து தனது பாக்கெட்டில் போட்டவன், “தைரியமா இரு நறு! ஐ வில் லுக் இன்டூ இட் (I will look into it)” தன்னவளின் கன்னங்களை பற்றி பேச, விழிகளை மூடி ‘சரி‘ என்பது போல தலையசைத்தவளுக்கு தலை சுற்றியது.
விழிகளை திறந்தவள் மீண்டும் கண் சொருகுவதைகவனித்த விக்ரம், “நறு!” என்று வஞ்சியவளின்கன்னம் தட்டியவனின் வயிற்றிலேயே சாய்ந்தவளை, தன்னோடு அழுத்திக் கொண்டவன், அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தன்னவளின்முகத்தில் வேகமாய் அடித்து, வாயில் சிறிது புகட்ட, சற்று தெளிந்தவள் விக்ரமை கண்ணீர் ரேகையுடன்பார்த்தாள்.
“மா… மா…” மெதுவாக அழைத்தவள், “ஏதாவது பண்ணுங்க” என்று அவனின் வயிற்றில் முகம் புதைக்க, தன்னோடு அவளை அழுத்திக்கொண்டவன்,
“நான் இருக்கேன் நறு… நீ இவ்வளவு பானிக்ஆகாத… நான் வேணா அத்தைக்கு கால் பண்ணட்டுமா?” என்ற கணவனின் வயிற்றில் நாடி குத்தி அவனை அண்ணாந்து பார்த்தவள், ‘இல்லை‘ என்று தலையசைத்தாள்.
“ரொம்ப வீக்கா தெரியற நறு” என்றவனிடம்இருந்து விலகயவளின் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவன், “பேசாம அத்தைகிட்டவிட்டுட்டு போகட்டா?” என்று வினவ, மீண்டும் தலையசைப்பே பதில்.
யோசனையிலேயே இருந்தவள், கணவனின் விழிகளோடு விழிகள் உரசி, அவனின் கரத்தைஎடுத்து தன் வயிற்றில் வைத்தவளின்செய்கையிலேயே விக்ரமின் இதயம் மார்கழி மாத பனி உடலில் ஊடுருவியது போன்று சில்லிட்டுப்போனது.
கணவனின் முக மாற்றங்களை கவனித்து சிறு கோடாய் புன்னகைத்தவள், “அப்பா ஆக போறீங்க” என்று அடுத்து கூறிய வார்த்தைகளில் பனி நீரை எடுத்து உள்ளத்தில் தெளித்தது போன்றுஆடவனுக்கு ஆக, மகிழ்ச்சியில் உள்ளுக்குள் துள்ளித் திமிறியவன், நறுமுகையின் நெற்றியில் இதமாக தன் முத்திரையை பதிக்க, தன்னவனின்உயிரை சுமந்திருந்தவளின் மேனி புல்லரித்தது.
அடுத்த நொடி நறுமுகையிடம் இருந்து விலகி எழுந்தவன், “நான் கிளம்பறேன் நறு… நீ கிளம்பு” என்று கூற, ‘இல்லை‘ என்பது போல தலையாட்டியவள்,
“நீங்க போயிட்டு வாங்க மாமா… நான் இங்கையேஇருக்கேன்” என்றவளுக்கு அங்கு பவுன்சர்ஸைபாதுகாப்பாக வைத்துவிட்டு சென்றவன், நேராக சென்றது கௌதம் பிரணவ்வை பார்க்க.
கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்த சிவப்பு நிற ரேன்ஞ் ரோவரில் இருந்த விக்ரமின் புருவங்கள், அங்கு ஏற்கனவே நின்றிருந்த அபிமன்யுவின் கருப்பு நிற ரேன்ஞ் ரோவரை கண்டு யோசனையுடன் நெருங்கியது.
சிந்தனைகளுடன் காரை நிறுத்தியவன், கௌதமின்அறையை நோக்கிச் செல்ல, அங்கு ஏற்கனவே அவனை நிறைய பேருக்கு நன்கு தெரியும் என்பதால் அவனை அங்கு தடுப்போர் யாரும் இல்லை.
விடுவிடுவென தன் வேகமும், தோரணையும்குறையாது உள்ளே நுழைந்தவனை கௌதம்பார்க்க, கௌதமை பார்த்தபடி அமர்ந்திருந்த அபிமன்யுவின் முதுகுப்புறம் விக்ரமினைவரவேற்றது.
கௌதமிற்கு எதிரே அபிமன்யுவிற்கு அருகே சென்று அமர்ந்த விக்ரம் அபிநந்தன், எப்படி தொடங்குவது என்று வாழ்வில் இரண்டாவது முறை தயங்கினான். அதுவும் அவனின் அருகே அவனின்சகோதரன் அமர்ந்திருக்க அவனால் இதை பற்றி பேச இயலவில்லை.
சங்கடம்! தன்னுடயை அந்தரங்கத்தை ஒருவரின் முன் பேச யாரால் இயலும்!
அதுவும் வெளிவந்த வீடியோ விக்ரமும், நறுமுகையும்முதல் முறை ஒன்றாய் இருந்தது!
பேசாது அமர்ந்திருக்கும் விக்ரமையே பார்த்த கௌதம், “விக்ரம்! நீ என்ன விஷயமா பேச வந்திருக்கியோ அதுக்கு தான் அபிமன்யுவும்…” என்று அவன் முடிக்கும் முன், கோடி மதிப்புள்ள மின்சாரம் தன் உடலில் விழுந்த அதிர்ச்சியில் எழுந்த விக்ரமின் பலத்தில் அவன் அமர்ந்திருந்த நாற்காலி பின்னே நகர்ந்து அதிர்வுடன் படீரென்றுவிழுந்தது.
தலையை அழுந்தக் கோதி விழிகளை இறுக மூடி, கேட்டதை ஜீரணிக்க முயன்று கொண்டிருந்தவன், சற்று ஆசுவாசப்படுத்த அருகில் இருந்த அறைக்குள் சென்று கைகளை கட்டிக் கொண்டு நின்றுவிட, கௌதமை பார்த்த அபிமன்யு, “போய் பேசு” என்றான்.
தலையசைப்புடன் எழுந்த கௌதம், விக்ரமிடம்செல்ல, அவனோ வெளியே தெரிந்த எதையோ வெறித்துக் கொண்டு நின்றிருந்தான்.
“விக்ரம்” என்றழைத்த நண்பனை திரும்பிப்பார்த்தவன்,
“ஏதாவது பண்ணு கௌதம்… என்னால நறு ஹர்ட்ஆகறதை பாக்க முடியாது” என்று இறுக்கமான குரலில் கூறியவனின் அலைபேசி அடிக்க, அதை எடுத்துப் பார்த்தவன், அழைப்பை கட் செய்துவிட்டுகௌதமை பார்த்தான்.
“பேசு விக்ரம்” என்று அதட்டிய கௌதமிடம்மறுப்பாக தலையசைத்தவன், “அத்தை தான் கௌதம்… ஐ திங்க் அவங்களுக்கும்…” என்றவன் வார்த்தைகளை விழுங்கிக் கொண்டு இறுக்கமாய்நிற்க, உள்ளே வந்த அபிமன்யு,
“கௌதம் இமிடியட்டா சோர்ஸ் ஃபோன் (source phone) எதுன்னு கண்டுபிடிச்சு ப்ளாக் பண்ணுங்க… அன்ட் லோகேஷன் (location) ஷேர் பண்ணுங்க” என்ற அபிமன்யு முன்னே செல்ல, செல்லும் அபிமன்யுவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் அவனின் சகோதரன்.
விக்ரமும் கிளம்ப எத்தனிக்க, “விக்ரம்… நீ முன்னாடி போய் வெயிட் பண்ணு… நான் வர்றேன்” என்று அனுப்பிய கௌதம், முக்கியமான நபருக்குஅழைத்து பேசியவன், “இங்க பாரு கிஷோர்… விஷயம் வெளிய போக கூடாது… என்னோடபேமிலிக்கு பண்ற மாதிரி நினைச்சு பண்ணு” என்றவன் அவனுக்கென்று வைத்திருந்த காரில் சென்று விக்ரமின் காருக்கு மாறிக்கொள்ள, அங்கு நீரஜா வீடு வந்து சேர்ந்திருந்தார்.
வந்தவுடன் தனது அறைக்கு ஓடியவர், கணவரைஇறுக அணைத்துக்கொள்ள, மனையாளின் பதட்டம் புரிந்தவர், “ரிலாக்ஸ் அம்மாடி… அபிமன்யுவும், விக்ரமும் போயிருக்காங்க… எதுவும் பதட்டப்படாத” என்று சமாதானம் செய்தவர் பொறுமையாக உத்ராவிற்கு காலையில் நடந்ததை கூற, ஆடிப்போனது தாய் உள்ளம்.
“யாருக்கு எல்லாம் இது போயிருக்கு?” என்று அவர் தவிப்புடன் வினவ,
“நாம, அபிமன்யு, விக்ரம், உத்ரா, நறுமுகை” என்று கூற, “நறு எங்க?” என்று கேட்ட நீரஜாவைசமாதானம் செய்தவர்,
“நீரஜா! எதுக்கு இவ்வளவு பதட்டம்… இல்லாத பீபியை வர வச்சுக்காத… நறு பத்திரமா இருக்கா… நான் விக்ரம்கிட்ட பேசிட்டேன்…” என்றவர்மனைவியின் முதுகை ஆறுதலாய் வருடிக்கொடுக்க, நீரஜாவிற்கே புரிந்தது.
தனக்கு பிரச்சனை வந்தபோது கூட அழுதிருக்கிறார். ஆனால், என்றும் அவர் பயந்து பதட்டம் கொண்டு எல்லாம் நடுங்கியது இல்லை. மகள் என்று வந்ததும் உள்ளுக்குள் மீண்டும் தசைகள் எல்லாம் அச்சம் கண்டு ஆடத்துவங்கிவிட்டது.
விஜய்யின் மடியில் தலை சாய்த்து படுத்திருந்தநீரஜாவின் விழிகள் மூடியிருந்தாலும், நிற்காமல்அசைந்து கொண்டிருந்த கருமணிகள் கூறியது அவரின் உணர்வை.
விஜய் மனைவியை சமாதானம் செய்திருந்தாலும், தந்தையாக எழுந்த இரத்தக் கொதிப்பை அவரால் அடக்க முடியவில்லை. தன் மனைவியையும், மகள்களையும் விடாது துரத்தும் அவனை உயிருடன் எரித்து கொன்று சாம்பலைக் கூட இல்லாது ஆக்கிவிடும் வெறி அவருக்குள்.
மென்மையான மனிதனையே அப்படி சிந்திக்க வைத்துவிட்டான் அந்த ராட்சஷன்.
நேரம் ஏறிக் கொண்டே போக, அனைவருக்குள்ளும்ஒவ்வொரு பதட்டம். உத்ராவோ கடவுளின் முன் அமர்ந்து, மனதில் வந்து கொண்டிருந்த அனைத்து கடவுள்களையும் வேண்டிக் கொண்டிருக்க, இந்த நேரத்தில் தைரியமாய் இருந்தது என்னவோ நறுமுகை தான்.
தன் சாணக்கிய கணவனின் மேல் கொண்ட நம்பிக்கையில் தைரிய லஷ்மியாய், அபிமன்யுவின்அறையில் அமர்ந்திருந்த படி, கடிகாரத்தைவெறித்திருந்தாள்.
மணி முன் மாலை மூன்றை தொட்டிருக்க, கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, மீண்டும் விழிகள் சொருகுவது போன்று இருக்க, கை விரல்களை இறுக மூடி தலை குனிந்து அமர்ந்தவள், கணவன் வராது சாப்பிட மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருக்க, அவளின் பொன் வயிற்றில் உருவாகியிருந்த மகவிற்கு பசிக்காதுபோகுமா?
வயிற்றை அழுத்திப் பொத்தியவள், தன்னவனின்உயிரை சிறிது நேரம் பொறுக்க கூற, அன்னையின்சொல்லை தட்டாது கேட்ட விக்ரமின் நீரில், நறுமுகையின் உதிரத்தில் உருவான மகவு அன்னையை படுத்தாது அமைதியாய் உறங்கத்துவங்க, டேபிளின் மேல் தலை சாய்த்து படுத்தாள் விக்ரமின் காதல் மனைவி.