ஆட்டம்-44

ஆட்டம்-44

ஆட்டம்-44

அபி! விக்ரம்! இதுதான் சோர்ஸ் ஃபோன்ஆனாமூவ்மென்ட்லையே இருக்கு… ஐ திங்க்ட்ரேவல்லிங்ல இருக்குனு நினைக்கறேன்… இப்ப இந்த ரோட்டுல வர்றதா தான் சொல்றாங்க” என்று கௌதம் கூறிக் கொண்டிருக்க, சகோதரர்கள் இருவரும் பதில் ஏதும் அளிக்கவில்லை.

அவன் கூறுவதை கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரச்சனை வேறாக இருந்தால் ஆளை வைத்து முடித்திருப்பார்கள். ஆனால், நடந்ததோ மிகவும் சென்சிட்டவ்வான ஒன்று. யார் கரத்திலும் நம்பி ஒப்படைக்க இயலாத விடயமும் கூட அல்லவா.

அதனால் அவர்களே நேராக களத்தில் இறங்கி இருந்தனர்.

இருவரின் அமைதியும் கௌதமிற்கு எதையோ உணர்த்த, அந்த நேரம் பார்த்து திலோத்தமை கௌதமிற்கு அழைக்க, ஃபோனை கட்செய்துவிட்டான்.

மீண்டும் அழைப்புகள் வந்து கொண்டிருக்க, ஃபோனை எடுத்தவன், கோபத்துடன், “அறிவில்ல? கட் பண்ணா புரிஞ்சுக்க மாட்டியா?” என்று பல்லைக் கடித்து சீறிவிட்டு வைக்க, அபிமன்யு ஒரு பார்வையை மட்டும் வீசிவிட்டு மீண்டும் விழிகளை வழியில் வைக்க, விக்ரமோ எது செவியில்விழுந்தாலும் வழியில் இருந்து பார்வையைஅகற்றவில்லை.

நடு சாலையில் இருந்து இறங்கி நின்றிருந்தனர். எப்போதும் எதற்காகவும், யாருக்காகவும் தன் தரநிலையை விட்டுக் கொடுக்காத அபிமன்யு கூட அங்கேயே நின்றிருந்தான்.

காரணம் நறுமுகை!

ஆனால், அவளைத் தாண்டி வேறொன்றுஅவனுக்குள்!

சொல்ல முடியாத உணர்வு அபிமன்யுவின்கடினமான நெஞ்சத்தை போட்டு அழுத்த, தன் உணர்வுகளை தானே கண்டறிய முடியாத வதனத்துடன் நின்றிருந்தான் அந்த ஏகாதிபதி.

கௌதமின் மற்றொரு அலைபேசிக்கு அழைப்பு வர, காதில் அணிந்திருந்த ஏர்பாட்ஸின் மூலம் ஆன்செய்தவன் செய்தியை வாங்கிக் கொண்டு, “ம்ம் சரி” என்றவன்,

“ஐ திங்க் இப்ப வர்ற ஷேட் ஆட்டோல தான் நாமதேடறவன் இருக்கணும்என்றிட, ஆட்டோ அருகே வரும் பொழுது நிறுத்தச் சென்ற இருவரையும் தடுத்த அபிமன்யு, தன்னுடைய கார் சாவியைகௌதமிடம் கொடுத்துவிட்டு அந்த ஆட்டோவினுள்ஏறினான்.

விக்ரம் தனது காரிலும், கௌதம் அபிமன்யுவின்காரிலும் ஆட்டோவை தொடர, சிறிது நேரத்தில் ஆட்டோவின் உள்ளிருந்த ஒருவன் பாய்ந்து வந்து ரோட்டில் விழுந்தான்.

அதி வேகத்தினில் வெளியே வந்து விழுந்தவனின்உடல் உருள, ஆட்டோவின் உள்ளிருந்து இறுகியமுகத்துடன் இறங்கிய அபிமன்யு, தனது சட்டையின்கைகளை ஏற்றிவிட்டபடி நிற்க, காரை அவர்களின் அருகே நிறுத்திய கௌதம், காரினுள் இருந்து மாஸ்கை அணிந்து கொண்டு இறங்கி, அபிமன்யுவின் அருகே விரைந்தான்.

பத்திரிகை ஆட்களின் விழிகளில் பட்டுவிட்டால்அவ்வளவு தான் அல்லவா!

இதையே எத்தனை வீடியோ கேமிராக்கள் படம் பிடிக்கப் போகிறதோ!

கீழே கிடந்தவனை எடுத்து உள்ளே தள்ளியகௌதம், காரை எடுக்க, பின்னே அவனோடு எறிய அபிமன்யு, முன் இருக்கைக்கும் பின் இருக்கைக்கும் இடையே விழுந்து கிடந்தவனைபார்த்த பார்வையில், மரண பயத்தை அடைந்தவன், உடல் நடுங்க, வாங்கிய அறையில் இருந்து கன்னத்தைப் பொத்தி இருந்தவன் இன்னும் அதை எடுக்கவில்லை.

முன்னே சென்று கொண்டிருந்த விக்ரம் நேராக தங்களது பழைய பேக்டரியில் காரை விட, கௌதமும் காரை நிறுத்திவிட்டு இறங்க, அபிமன்யுகாரிலி இருந்து இறங்கி உடலை வெறியோடு முறுக்கிவிட்டு முன்னே செல்ல, அபிமன்யுவின்காரருகே வந்த விக்ரம், உள்ளே இருந்தவனை ஒரு நொடி பார்த்து கௌதமை பார்த்தவன், உள்ளே இருந்தவனின் காலை பிடித்து சடாரென வெளியே இழுத்துப் போட்டான்.

விக்ரமின் பலம் வாய்ந்த கரங்கள் இழுத்தவேகத்தினில், வெளியே வந்து தரையில் புழுதிபறக்க அலறலோடு விழுந்தவனை, அந்த வேங்கை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவனால் அசைய முடியவில்லை.

உள்ளே தரதரவென்று இரையை இழுத்து செல்வது போன்று இழுத்துச் சென்ற விக்ரமின் ஆத்திரமும், கோபமும் எப்போதோ எல்லையைக் கடந்திருக்க, உள்ளே வந்தவுடன் கீழே கிடந்தவனை ஒரு சேரில்தள்ளி அமர வைத்தவன், அவனிடம் இருந்த ஃபோனை பறித்தெடுத்தான்.

ருத்ரத்துடன் அதனை வெறித்தான்!

ஃபோனை அங்கிருந்த மெஷினில் போட்டு சுக்கு நூறாய் சிதறிப் போக விட்டவன், அங்கிருந்த இரும்புக் கம்பியை எடுத்துக் கொண்டு அவனருகேசென்று, அவனின் தாடையை இறும்புக் கம்பியால்நிமிர்த்தியவன், “நீ வெறும் அம்பு தான்னு தெரியும்… யாரு அவன்?” என்று மிரட்ட, பயத்திலும், ஆங்காங்கே இருந்த சிறு காயத்திலும் அரை மயக்கத்தில் இருந்தவன்,

“தெரியாது” என்று மூச்சு வாங்கியபடியே கூற, கம்பியின் கூர் முனையை அவனின் இடது பக்கமார்பில் வைத்த விக்ரம், அங்கு அழுத்தத்தை கூட்டி உள்ளே இறக்க, “ஆஆஅஅஅ!” என்று பெருங்குரலெடுத்து அலறியவன் துடிதுடித்து சேருடன்கீழே விழுந்தான்.

வலியில் அலறித் துடித்து வாய்விட்டு கத்தியவனைஎந்த உணர்வும் இன்றி விக்ரம் பார்த்துக் கொண்டிருக்க, விக்ரமை சாவின் அதீத வலியுடன்கண்டவன், “சத்தியமா எனக்கு தெரியாது ஸார்… நாலு தடவ ஃபோன்ல பேசியிருக்கேன்… ஒரு தடவை தான் நேர்ல பாத்தேன்… அதுவும் முகத்தை மூடியிருந்தான்… காசு தந்து பண்ண சொன்னான் ஸார்… சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ஸார்” என்று அழுதவனின் அருகே வந்த அபிமன்யு, அவனையே பார்க்க விழிகளை மட்டும் உயர்த்தி அபிமன்யுவை பார்த்தவனுக்குத் திக்கென்றுஇருந்தது.

நா வறல அபிமன்யுவை பார்த்தவன், “ஸா… ஸார்…” என்று திக்கித் திணற, விக்ரமின் கரத்தில் இருந்த இரும்பு கம்பியை வாங்கிய அபிமன்யு அதன் கூர்மையை தன் விழிகளால் கண்டு கொண்டே, “ஸோ காசு கொடுத்தா என்ன வேணா பண்ணுவ?” என்று கூலாக கேட்டவன், அடுத்த விநாடி கூர்மையில் பளபளத்துக் கொண்டிருந்த கம்பியைகீழே கிடந்தவனின் உள் கரத்தில் இறக்கிவிட, அந்த பேக்டரியே அவனின் அழுகுரலில் அதிர்ந்தது.

“இந்த கை தானே வீடியோவை அனுப்புச்சு?” என்று கேட்ட அபிமன்யு கம்பியை திருப்ப, விக்ரம், “ஒழுங்கா யாருன்னு சொல்லு… இல்ல இங்கஇருந்து உயிரோட போக மாட்ட” ரௌத்திரத்துடன்மிரட்ட, மற்றொரு கரத்தை வலி தாங்காது தரையில் அடித்துக் கொண்டு படுத்திருந்தவன், “சத்தியமாதெரியாது ஸார்… அவன் வரும்போது மாஸ்க்போட்டு, கண்ணாடி, கேப் எல்லாம் போட்டுட்டுவந்தான்… அவன் கையில பாம்பு பச்சை குத்தியிருக்கும்அதோட கண்ணுக்கு சிவப்பு கலர் இன்க் ஸார்… அதை தவிர எனக்கு எதுவுமே தெரியாது… காசுக்கு ஆசைப்பட்டு பண்ணிட்டேன்… என்னை விட்ருங்க” என்று கதறியவனின்கதறலில்ல அங்கிருந்த பட்சிகள் கூட்டம் வானில்பறந்து சிறகடித்தது.

அவன் கரத்தில் இருந்த கம்பியை உருவியஅபிமன்யு அதை வீசிவிட, அவனின் சிகையைபிடித்து சேரில் அமர வைத்த விக்ரம், “அவனை எந்த எடத்துல மீட் பண்ண? என்ன கலர் ட்ரெஸ்” என்று அனைத்து விவரங்களையும் வாங்கியவன், அவனிடம் இருந்து எழ, அவனோ மேனி நடுங்கக்கீழே கதறிக் கொண்டிருந்தான்.

சற்று நேரத்திற்கு முன் அடி வாங்கியவன் கூறியதும்நினைவில் வந்தது. “அவன் ஒரு லேப்டாப் தந்துட்டுபோனான் ஸார். அதுல இருந்து என்னோடஃபோனுக்கு மாத்தி தான் உங்களுக்கு அனுப்பேன்” என்று கூறியது ஞாபகத்தில் வர, இவனை போலீஸிடம் விட்டுச் சென்றவர்கள், அவனின்வீட்டிற்குள் இருந்த லேப்டாப்பை எடுக்கச் சென்ற சமயம், அவனின் வீடு ஏற்கனவே பாதி எரிந்து போய் கரி கட்டையாக இருந்தது.

லேப்டாப்பை எடுத்திருந்தால், மொத்தத்தையும்அறிந்திருப்பார்கள்! அந்த ராட்சஷனின் அனைத்தும் விரல் நுனியில் வந்திருக்கும்!

அப்போது தான் வீட்டின் தீயைஅணைத்திருந்தார்கள் போல! ஆங்காங்கே புகைகள்!

வீட்டிற்குள் சென்றவர்கள் அவன் கூறிய இடத்தில் லேப்டாப்பை சோதிக்க, அவர்களின் விழிகளில்பாதி கருகி போய் கிடந்த லேப்டாப்பே பட, விக்ரமிற்கு புரிந்து போனது சற்று விநாடிகளுக்குமுன்புதான் அது எரிந்து முடித்திருக்கிறது என்றும், தங்களை ஒருவன் கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதும்.

லேப்டாப்பை எடுக்க வந்தவன், வீட்டை உடைக்க முயன்றுவிட்டு, முடியாத போனதால், வீட்டை கொளுத்திவிட்டு சென்றிருந்தான்.

அங்கு வந்திருந்த போலீஸை வைத்து, சிசிடிவிகேமிராக்களை கௌதம் பரிசோதிக்க, அவன் வருவதற்கு இருநூறு மீட்டருக்கு முன்பே சிசிடிவியை ப்ரீஸ் ஆக்க வைத்திருந்தான் நமது கதையின் ராட்சஷ வில்லன்.

மூவரும் காருக்கு வர, கௌதமிடம் அபிமன்யு, “கௌதம் அவன் ரொம்ப டேன்ஜர்… இப்ப கூட நம்மகையில இருக்கவனை நாம வெளிய விட்டா அவனையும் கொன்னுடுவான்ஸோ அவனை சேஃபா பாத்துக்கங்க… அவன் நமக்கு இருக்க ஒரே ஆதாரம்” என்று அபிமன்யு கூறிக் கொண்டிருக்கும்போதே, விக்ரம்,

“எனக்கு என்னமோ அவனை நம்ம கையிலவச்சிருக்கிறது கூட ரிஸ்க்குன்னு தோணுது” என்று கூறிக் கொண்டிருக்கும் போதே கௌதமின்அலைபேசி அடித்தது.

சரியாக கணித்திருந்தது விக்ரமின் மூளை!

கௌதமிற்கு அடுத்து அலைபேசியில் வந்த அழைப்பு அவனை அதிர்ச்சியின் விளிம்பிற்குகொண்டு செல்ல, ஃபோனை அணைத்தவன், “அவனே சூசைட் பண்ணிக்கிட்டானாம்” என்று கூறிவிட்டு,

“நான் இங்க இருந்தா அவன் என்னோடகுடும்பத்தை கொன்னுடுவான்னு கழுத்தை அறுத்துக்கிட்டான்” என்றவன் அப்போது தான் யோசித்தான் அவனின் வீட்டில் குடும்பம் யாரும் இல்லை என்பதை.

உடனே அங்கிருந்தவர்களை விசாரிக்க, அவர்களோ இரண்டு நாள் முன்பே அவனின்மனைவி ஊருக்கு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் உறுதியாகிஇருந்தது. லேப்டாப்பைத் தவிர அந்த காணொளிவேறெதிலும் இல்லை என்பது. அதனால் தான் லேப்டாப்பை எடுக்க வந்திருக்கிறான். அது கையில் சிக்கினால் தானும் சிக்குவோம் என்று அனைத்தையும் அழிக்க முயன்றிருக்கிறான் என்று.

விக்ரமிற்கும் அழைப்பு வந்தது. அவன் அனுப்பிய ஆள் நறுமுகையின் பாட்டி, தாத்தா இடத்தில் இருந்து அழைத்திருக்க, இறுகிய முகத்துடன் ஃபோனை எடுத்து காதில் வைத்தான்.

“ஸார் அந்த மேல் கூரைல சின்ன கேமிராவச்சிருக்காங்கலைக் ஹிட்டன் மாதிரி… வச்சஆளும் யாருன்னு பாத்தாச்சு ஸார்… இங்க நீங்க வச்சிருந்த பாடி காட்ஸ்ல ஒருத்தன் தான்… அந்த ஃபோன் வச்சிருந்த ஆள் மூலமா தான் கேமிராவச்சிருக்கான்என்றிட, அலைபேசியை இறுக்கிப் பிடித்தவன்,

“என் கண்ணு முன்னாடி அவனை கொண்டு வர்றாதீங்கபட் கேமிரா வச்ச கையை உடச்சுகூட்டிட்டு வாங்க” என்றவன், அலைபேசியைஅணைக்க, அடுத்த ஒரு மணி நேரத்தில் சகோதரர்களிடம் சின்னா பின்னமாகி இருந்தான் அந்த கேமிராவை வைத்திருந்தவன்.

எதிரிகளை கூட மன்னித்து விடலாம்! ஆனால், துரோகிகள்?

அவனை மற்றவர்கள் தூக்கிக் கொண்டு செல்ல, அலுவலகத்திற்கு அழைத்த விக்ரம் நறுமுகையைபற்றி அவனின் பி.ஏவிடம் கேட்டபடி வெளியே வந்தான்.

நறுமுகைக்காக நீ விக்ரம்கிட்ட இவ்வளவு அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு நினைச்சு பாக்கலஅபிமன்யு” என்று கௌதம் கூற, அவனை பார்த்து புன்னகைத்த அபிமன்யுவின் வதனத்தில் வந்து போன உணர்ச்சிகளை, பின் மாலை வேளையில், முக்கால்வாசி சூரிய அஸ்தமன ஒளியில் கண்ட விக்ரமின் ஆழ் உணர்வுகள் சீறிப் பாய்ந்து கொண்டு எழுந்தது.

என்ன புன்னகை அது!

என்ன உணர்த்துகிறான்!

கௌதமின் தோளில் கை வைத்த அபிமன்யு, “அதெல்லாம் செகன்டரி கௌதம்பர்ஸ்ட் அவன் என் தம்பி…” என்று கூறியவன் காரில் சென்று ஏற, கௌதம் மட்டுமல்ல, விக்ரமும் அபிமன்யுவின்பேச்சில் ஸ்தம்பித்தது போன்று உறைந்திருந்தான்.

இங்கு சகோதரர்கள் நடத்தி முடித்த களேபரத்திற்கும், இப்போது நிலவிக்கொண்டிருந்த நிசப்தத்திற்கும் துளியும் சம்மந்தம்இல்லை எனும் அளவிற்கு இருந்தது அங்கு இருந்த அமைதியான சூழ்நிலை.

அபிமன்யு அவனின் ரேன்ஞ் ரோவரில் ஏறிக்கொள்ள, விக்ரம் அவனின் ரேன்ஞ் ரோவரில் ஏறிக்கொள்ள, அவனுடன் கௌதம் ஏறிக்கொள்ள, கௌதமின்உள்ளத்தில் அளவுக்கு மீறிய உவகை பொங்கி வழிந்து கொண்டிருந்தது.

தலையை ஸ்டைலாக கோதியபடியே, “அப்புறம் விக்ரம்… அடுத்து என்ன?” என்று அடக்கப்பட்டசிரிப்புடன் வினவ,

கியரை போட்டபடியே நண்பனை பக்கவாட்டில் திரும்பி பார்த்து புன்னகைத்தவன், “என் பொண்டாட்டி எனக்காக வெயிட் பண்ணிட்டுஇருக்கா… அவளை போய் பிக் பண்ணனும்… நீங்க கொஞ்சம் அபிமன்யு கார்ல போறீங்களா?” என்று கேட்க, சட்டென அனைத்து பற்களும் தெரிய சிரித்துக் கொண்டிருந்தனின் வாய், விக்ரமின்எகத்தாளத்தில் மூடிக்கொள்ள, ‘அண்ணன் தங்கச்சியை எல்லாம் ஒரே மாதிரி செஞ்சிருக்காங்க போல… இல்லாத திமிர்உள்ளுக்குள் பொறுமியவன் அபிமன்யுவின்காருக்குச் சென்றான்.

மூவரும் அலுவலகம் அடைய, லிப்ட்டில் ஏறக் கூட காத்திருக்க முடியாத விக்ரம் இரண்டு இரண்டுபடிகளாகத் தாவி படிக்கட்டில் ஏற, அபிமன்யுவும், கௌதமும் தங்களுக்குள் புன்னகைத்தபடியேலிப்ட்டினுள் நுழைந்தனர்.

தனக்காக காத்திருந்த இத்தனை நொடிகள்தன்னவள் என்னென்ன பாடு பட்டிருப்பாளோ என்று உள்ளுக்குள் துடித்து கலங்கிய இதயத்தை அடக்கியபடி அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்த விக்ரம் பார்த்தது என்னவோ வயிற்றை பொத்தியபடி, டேபிளில் தலை சாய்த்து படுத்திருந்த தன் மனையாளை தான்.

கதவு திறந்து ஓசை கூட காதை அடையாது, சோர்ந்து போய் அமர்ந்திருந்தவளின் நிலை கண்டு மனம் இரண்டாய் பிளக்க, ஓடிச் சென்று நறுமுகையை தாங்கிய விக்ரம், “நறு!” என்றழைக்க,

விழிகளை திறந்தவளின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிய, “பசிக்குது மாமா” என்றவள் விக்ரமின் தோளிலேயே சாய, உள்ளே நுழைந்த அபிமன்யுவின் காதிலும், கௌதமின் காதிலும் அது விழுந்தது.

கௌதமை உள்ளே விட்ட அபிமன்யு, வெளியே வந்து ஆரவ்வை அழைத்து நால்வருக்கும் உணவை ஆர்டர் கொடுத்துவிட்டு உள்ளே வர, அப்போதும்விக்ரமின் மேல் அவள் சாய்ந்து கொண்டிருக்க, அவளுக்கு அருகே சுழற் நாற்காலியில் விக்ரம்அமர்ந்து நறுமுகையின் செவியில் எதையோ கூறிக்கொண்டிருக்க, அவளும் தலையசைப்புடன்எதையோ கேட்டுக் கொண்டிருந்தாள்.

கௌதம் அருகே அமர்ந்து ஃபோனில் யாருக்கோ(வேற யாரும் இல்லதிலோ தான்… அபிமன்யுவின்பார்வையில் யாரோ தான இப்போதைக்கு) மெசேஜில் மூழ்கி அருகில் இருந்தவர்களுக்குஅமைதியாக தன் வேலையில் மூழ்கியிருக்க, மூவரின் எதிரிலும் வந்து தன் இருக்கையில் அமர்ந்தான் அபிமன்யு.

காலையில் இருந்த அலைச்சலில் சட்டை கசங்கியிருக்க, மேலே ஒரு பட்டனை மட்டும் கழற்றி விட்டவன் கழுத்து இடமும் வலமும் திருப்பி நெட்டி முறித்துவிட்டு, பின்னங்கழுத்தை கரம் கொண்டு வருடிவிட்டு அமைதியாய் விழிகளை மூடி இருக்கையில் சாய்ந்து அமர, அபிமன்யுவின்அலைபேசி அடித்தது.

எடுத்துப் பார்த்தான்!

விஜய்!

அலைபேசியை ஏற்று விபரம் கூறியவன், “நத்திங் டூ வொர்ரி அங்கிள்… நாங்க இங்கையே சாப்பிட்டு வந்திடறோம்” என்று வைத்துவிடவும், ஆரவ் வரவும்நேரம் சரியாக இருந்தது.

நால்வரிடமும் உணவைக் கொடுத்தவன், வெளியசெல்ல எத்தனிக்க, “சாப்பிட்டியா ஆரவ்?” என்று விசாரித்தான் அபிமன்யு.

“சாப்பிட்டேன் ஸார்” என்றவனை புன்னகையுடன் நிமிர்ந்து பார்த்தவன், “யாரு தீரா கூடவா?” என்று பட்டென்று கேட்டுவிட, திருதிருவென்றுவிழித்தவன், விக்ரமை பார்க்க, விக்ரமிற்கும்புரிந்தது.

ஆக மொத்தத்தில் இரு சதோதரர்களுக்கும் நடுவில் வேலை பார்த்து பார்த்து ஒரு இடத்தில் காதல் மலர்ந்திருந்தது!

ஆரவ் நிற்பதையே பார்த்த அபிமன்யு, “கிளம்பு ஆரவ்தீராவை பத்திரமா ட்ராப் பண்ணிட்டு நீயும் சேஃபா வீட்டுக்கு போ” என்றவனிடம் தாராளமாக புன்னகைத்து வெளியேறியவன், அபிமன்யுஇந்தளவிற்கு தன்னிடம் முதல்முறை பேசுவதில்உள்ளூர மகிழ்ச்சியில் தத்தளித்து, குஷியுடன் சென்றான்.

நறுமுகையின் முன் முதலில் பார்சலை வைத்த அபிமன்யு, “அழுகாத நறுநத்திங் டூ க்ரை திஸ்மச்” என்று சன்னமாய் புன்னகைக்க, கணவனின் நெஞ்சில் இருந்து இருந்தவள், தலையை ஆட்டியபடி எழ முயல, மீண்டும் தன்னவளை இழுத்து நெஞ்சில் சாய்த்துக் கொண்டான் அவளின் விடாக்கண்டனான் அவளது கணவன் விக்ரம்அபிநந்தன்.

கௌதமிடம் பார்சலை வைத்த அபிமன்யு, “யாருடாஅந்த பொண்ணு?” என்று வினவ, நண்பனின்கேள்வியில் முதல்முறை மனம் நடுங்க, உள்ளுக்குள் அதிர்ந்ததை வெளியே காட்டாது புன்னகைத்தவன், “டைம் வரும்போது சொல்றேன் அபி” என்று பேச்சை மாற்றியிருந்தான்.

நால்வரும் உண்ண, இட்லியை நீண்ட நேரம் சட்னியுடன் தழுவிக் கொண்டிருந்ந நறுமுகை, “மாமா!” என்றழைக்க தொணியே அபிமன்யுவைஅழைப்பதை உணர்த்த, அவளை பார்த்த அபிமன்யுவை நாணம் மேலிட பார்த்து வைத்தவள், விக்ரமை ஒரு முறை பார்த்தாள்.

“மாமா! ஐம் ப்ரெக்னென்ட்! யூ ஆர் கோயிங் டூ பீபெரியப்பா சூன் (I’m pregnant! You’re going to be Perippa soon)” என்றிட, சாப்பிட்டுக் கொண்டிருந்த கௌதமிற்கோ புரையேறிவிட, அவசரமாக தண்ணீரை குடித்துவிட்டு விக்ரமை அவன் சிரிப்புடன் பார்த்தான்.

ஏனெனில் இம்மாதிரி விடயங்களை பற்றி அதிகமாகவும், மாற்றியும் மாற்றியும் சிறிய வயதில் இருந்து பகிர்ந்து கொண்டது அவர்கள் தானே! பேசியதும், அவ்வயதில் நீலமும், மஞ்சளுமாகபகிர்ந்து கொண்டது மறந்தா போய்விடும்!

விக்ரம் இலேசாக தலை தாழ்த்தி உதட்டைஒருபக்கமாக கொண்டு சென்று சிரிப்பை அடக்க முயல, கௌதம் விக்ரமிற்கு தம்ப்ஸ் அப் காண்பிக்க, விக்ரம் வசீகர இளவரனாய் விழிகளை சிமிட்டினான்.

அப்போது தான் நிமிர்ந்த விக்ரம் அபிமன்யுவைகண்டான்.

எதையுமே கூறவில்லை!

உணவில் வைத்திருந்த கை காய்ந்து கொண்டிருக்க, நறுமுகையையேபார்த்திருவனுக்குள் உள்ளுக்குள் வெளிப்படுத்த முடியாத பாயும் உணர்வு.

சிறிய வயதில் இருந்து அதாவது குழந்தையாய்இருக்கும்போது அவளை கையில் வாங்கி விளையாடிய தினம் எல்லாம் நினைவில் வர, அந்த நறுமுகையும் இப்போது கண்ணெதிரே இருப்பவளையும் பார்த்தவனுக்கு சொற்களில்அடங்கிடாத உணர்வுகள்.

நறுமுகைக்கும் நீரஜாவும், அபிமன்யுவும் வேறு வேறல்ல. சிறு வயதில் அவன் தூக்கி வளர்த்துகொஞ்சியது மட்டுமல்ல, அவன் ஊட்டிவிட்டது, செய்த பணிவிடைகள் அனைத்தும் நினைவில் வர, நறுமுகைக்கும் அபிமன்யுவின் மனதிலும் ஓடிக்கொண்டிருந்தது அனைத்தும் ஒன்றுதான்.

அபிமன்யுவின் கரம் மீது கரம் வைத்தவள், “ரொம்ப தாங்க்ஸ் மாமா… எல்லாத்துக்கும்” என்று விழிகள்கலங்க கூறியவளின் கரத்தை இறுக பற்றியவன், “இப்ப தான் உன்னை பர்ஸ்ட் டைம் பாத்த மாதிரி இருக்கு நறு” என்றவன்,

கங்கிராட்ஸ் அன்ட் தாங்க்ஸ் ஃபார் தி பெரியப்பா போஸ்ட் (Congrats and thanks for the Perippa post)” என்று பற்கள் தெரிய கம்பீரமாய் சிரித்தவனிடம்,

“சீக்கிரம் எனக்கும் சித்தி போஸ்ட் தாங்க” என்று கூறி கண் சிமிட்டினாள்.

முகத்தில் எந்தவொரு உணர்வையும் தராது, “ம்ம்” என்று புன்னகையுடன் ஒற்றை புருவத்தைஉயர்த்திக் கூறியவன், எழுந்து கைகளை கழுவச்செல்ல, அப்போது தான் விக்ரம் கவனித்தான், சகோதரன் பாதி உணவில் எழுந்து சென்றதை.

மீதியிருந்த மூவரும் சாப்பிட்டு முடிக்கும் வரை, மேலிருந்து கீழ் செல்லும் புள்ளி வாகனங்களை வெறித்துக் கொண்டிருந்த அபிமன்யுவின்உள்ளத்தில் உத்ராவின் சந்திர செவ்வதனம் உலா வந்து கொண்டிருக்க, தனது வல்லமை வாய்ந்த மதியை வைத்து தொழில் சாம்ராஜ்யத்தில்அனைத்தையும், அனைவரையும் ஆட்டிப் படைத்து வென்றவனால், தன் நிலாப் பெண்ணின் உள்ளத்தையும் சமநிலை செய்ய முடியவில்லையேஎன்ற ஆத்திரம் உள்ளுக்குள் சீற்றங்களாய் எழுந்து கொண்டு இருந்தது.

யார் மேல் வந்த கோபம் என்றுதான் தெரியவில்லை அவனுக்கு!

இடது கை பெரு விரலால் தனது வலது புருவத்தைஅழுந்த வருடியவன் ஒரு முடிவை எடுத்தவனாகதிரும்ப, நறுமுகை புன்னகையோடு நின்றிருந்தவள், “போலாமா மாமா?” என்று வினவ, நறுமுகையின்முகத்தில் இருந்த பூரிப்பைக் கண்டவனின்இதழ்களும் அதைவிட பன்மடங்கு மகிழ்ச்சியை தத்தெடுத்துக் கொள்ள, விக்ரமும் நறுமுகையும் ஒரு காரில் கிளம்ப, அபிமன்யுவும், கௌதமும் ஒரு காரில் கிளம்பினர்.

error: Content is protected !!