ஆட்டம்-45

ஆட்டம்-45

ஆட்டம்-45

நறு!”

அந்த மாளிகையின் வாயிலில் இருந்த படிகளில் அமர்ந்து மகளுக்காக கலக்கத்துடன் காத்திருந்து எழுந்த நீரஜா, காரிலிருந்து இறங்கிய மகளைக் கண்டதும் ஓடிச் சென்று அணைத்துக் கொள்ள, “ம்மா!” என்றவளும் அன்னையை இறுக அணைத்தாள்.

வீட்டில் ஆண்களுக்கு விஜய் விஷயத்தைக் கூறியிருக்க, அவரவர் அவர்கள் மனைவிகளிடம் விஷயத்தை மெதுவே கூறியிருந்தார்கள்.

திலோவுக்கு மட்டும் விஷயம் தெரியாது. கௌதமும் கூறவில்லை. கூறவும் தோன்றவில்லை அவனுக்கு. அவளின் செவிகளுக்கு தேவையில்லாத விடயம் என்று யாருமே அவளிடம் உரைக்கவில்லை.

உயிரே போயிடுச்சுடி” என்று பதட்டம் குறையாது கூறிய நீரஜாவிடம் இருந்து விலகிய நறுமுகை, அன்னையை நாணத்துடன் பார்த்து வைக்க, நீரஜாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

இதழ்கள் கடித்து, இமை தாழ்த்தி, மீண்டும் தன் ஹனி ப்ரவுன் விழிகளை கொண்டு அன்னையின் ஹனி ப்ரவுன் விழிகளை, செந்தலாய் மாறிப் போன மலர் வதனம் கொண்டு சந்தித்தவள், “அம்மா!” என்று வெட்கத்தில் எச்சிலை விழுங்கினாள்.

நறுமுகை வந்து அழுவாள், அது இதுவென்று அனைவரும் நினைத்திருக்க, யாரும் அவளின் இந்த நாணத்தை எதிர்பார்க்கவில்லை. சொல்லப்போனால் பதட்டத்தில் இருந்தவர்களுக்கு பெண்ணவளின் செய்கையில் குழப்பங்களே மிஞ்சியது.

அனைவரும் விக்ரமை பார்க்க, கோதையோமகனிடம், “விக்ரம் என்னாச்சு?” என்று பதட்டத்துடனே வினவ, விக்ரமும் மனைவியின் செயலில் தானும் புன்னகைக்க, அபிமன்யுவும், கௌதமும் அரங்கேறிக் கொண்டிருக்கும் காட்சியையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அழகியும், “என்னாச்சு விக்ரம்?” என்று சின்ன மகனிடம் கேட்டபடி நறுமுகையின் அருகே வந்து அவளின் கரத்தை பிடித்தார்.

அதியரன் பூபதியும், “விக்ரம் என்னாச்சு?” சற்று கடுமையாக கேட்க, நறுமுகையின் அருகே சென்று அவளின் தோளில் கை போட்டு அழுந்தப் பிடித்து, அருகில் இழுத்து வைத்துக் கொண்டவன், தன் முன்னிருந்த அனைவரையும் ஒரு முறை பார்த்துவிட்டு இறுதியாக நீரஜாவிற்கு வந்தவன், தன் வசீகரமும் ஆண்மையும் கலந்த புன்னகையைதுளியும் மாற்றவில்லை.

இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும் அத்தை… நாங்க எவ்வளவு பெரிய பசங்க ஆனாலும் உங்கமுன்னாடி அதே ஆறு வயசு பசங்க தான்னு…” என்று ஒற்றை கையால் அவர் கன்னம் பற்றியவன், அவரின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டு விலகி,

ஆனா, இப்ப ரொம்ப பெரிய பசங்க ஆகிட்டோம்னு தோணற மாதிரி இருக்கு” என்றிட,அப்போதும் நீரஜாவிற்கு புரியவில்லை.

பல் வரிசைகள் பிரகாசமாய் மின்ன, அவரின் கரத்தை பிடித்து குலுக்கியவன், “கங்கிராட்ஜுலேஷன் மாமியாரேபாட்டியா ப்ரமோட் ஆகியிருக்கீங்க” என்று கூற, நீரஜா மருமகன் கொடுத்த இன்ப அதிர்ச்சியில் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் மூழ்கி திளைக்க, மற்றவர்களை பற்றி கூறவா வேண்டும்!

அனைவரின் உள்ளமும் எல்லையில்லா ஆனந்தத் தாண்டவமாட, அடுத்த விநாடி விக்ரமை தள்ளி, அனைவரும் நறுமுகையை சுற்றிக் கொண்டனர்.

அனைவரும் அவளை விடாது கொஞ்ச, ‘ஹார்ட் வொர்க் பண்ண என்னை யாராவது பாராட்டறாங்களா பாருஎன்று உள்ளுக்குள் அடித்துக் கொண்டவனின் அருகே வந்தார் சிம்மவர்ம பூபதி.

அவனையே அவர் பார்த்துக் கொண்டிருக்க,விக்ரமிற்கு தான் சங்கோஜமுமாக இருந்தது. பேரனின் தோளைத் தட்டியவர், “நீ இப்ப சொன்ன ஒரு செய்தியால மொத்த குடும்பமும் நடந்ததை மறந்து எப்படி இருக்கு பாரு… ரொம்ப பெரிய பையன் தான் விக்ரம் நீ” என்றவர் பேரனை அணைத்துக் கொள்ள, தந்தையான பூரிப்புடன் தாத்தாவின் பாராட்டை பெற்ற தேஜஸும் சேர்ந்துகொள்ள அழகாய் புன்னகைத்தவன், சிம்மவர்ம பூபதியை அணைத்துக் கொண்டான்.

சின்ன பேரனை அணைத்தபடியே, பெரிய பேரன் காரில் ஒரு கரம் வைத்து சாய்ந்து நிற்பதைக் கண்ட சிம்மவர்ம பூபதியின் மனம் சட்டென வாடிய மலர் போன்று சுணங்கியது.

அனைவரையும் வாழ்வில் இணைத்து வைத்தவன்அவன்!

அவன் இல்லையெனில் இந்த மொத்த இன்பமும் சாத்தியமா?

அவனால் தான் இப்போது அனைவரின் இதழ்களிலும் புன்னகை உறைந்திருக்கின்றது!

ஆனால்…

அனைவரின் மகிழ்ச்சிக்கும் விதை விதைத்தவன், இன்றும் புன்னகை மாறாது தள்ளி நின்று ரசிப்பதைக் கண்ட சிம்மவர்ம பூபதி, உத்ராவை தேட, அவளோ நறுமுகையின் கரம் பற்றி ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.

பேரனின் புன்னகைக்கு பின்னிருந்த மனநிலையும், மனதில் ஓடிக் கொண்டிருக்கும் நிலைகளும் பெரியவராக புரிந்து கொண்டவருக்கு தெரியும், வெளியே இறுக்கத்துடனும், அதிகாரத்துடனும், ஆளுமையுடனும் வலம்வரும் அபிமன்யுவின் ஆழ் மனம் எவ்வாறு என்று.

பேத்தியையும் பேரனையும் ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்ற இமையரசி, நறுமுகையை விடாது கொஞ்சிக் கொண்டிருக்க, புன்னகையும் மகிழ்ச்சியுமாக அதை கண்டு கொண்டிருந்த உத்ராவிற்கு, ஏதோ ஒன்று உறுத்த, நிமிர்ந்து பார்த்தவளுக்கு கணவனின் பார்வை தன் மேல் பதிந்திருப்பது புரிய, இருவரின் உணர்ச்சிகளற்ற பார்வைகளும் உரசிக்கொள்ள, நிதானமாக உத்ராவை அளந்த அபிமன்யுவின் விழிகள் மீண்டும் நறுமுகையிடம் செல்ல, உத்ராவின் மனம் சொல்ல இயலாத தவிப்பில் ஆட்கொண்டது.

இத்தனை நேரமும் அனைவரிடமும் ஒன்றி நின்றிருந்தவள், அப்போது தான் அனைவரும் நறுமுகையை விழுந்து விழுந்து கவனிப்பதை உணர்ந்தாள். அனைவரின் முகத்தையும் பார்த்தவளுக்கு, அப்போது தான் பதிந்தது சிம்மவர்ம பூபதி தன்னை கவனித்துக் கொண்டிருப்பதை.

தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தாத்தாவை பார்த்தவள், “தாத்தா” என்று சப்தம் வராது இதழை மட்டும் அசைக்க, முதல் முறை அவரின் குற்றம்சாட்டும் பார்வையை கண்டு மனம் கலங்கிப் போக, கைகளை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவரின் பார்வையில் தெறிந்த கோபத்தில், காட்ட முடியாத திருப்தியின்மையில், அவரிடம் இருந்து பெற்ற முதல் சினத்தில் சிறு பெண்ணவள் உள்ளம் சுணங்கிப் போனாள்.

வா அபி சாப்பிடலாம்” இமையரசி பேரனைஅழைக்க,

நாங்க சாப்பிட்டோம் பாட்டி… நீங்க பாருங்க” என்றவன் புன்னகையுடன் அறைக்கு செல்ல முயல, அபிமன்யு கடக்கும் முன் எழுந்த விக்ரம், அவனுக்கு எதிரே நிற்க, இருவரும் எதிரெதிராக நிற்பதைக் கண்ட அனைவருக்கும் மூளையில் மின்சாரம் தாக்கி, உள்ளத்தில் சுனாமியை உணர்ந்தஅதிர்வுகள் உண்டாகி மேனி எங்கும் பரவியது.

எதுவும் களேபரம் ஆகிவிடக்கூடாது என்று அனைத்து பெண்களும் சிறு பயத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருக்கயாரும் எதிர்பாராத வண்ணம், தன் ஒட்டுமொத்த பிடிவாதம், வீம்பு, திமிர், ஆணவம் அனைத்தையும் கைவிட்ட விக்ரம் அபிநந்தன், தன் சகோதரன் சித்தார்த் அபிமன்யு தோளோடு தோள் இறுக அணைத்தான்.

உலகின் எட்டாவது அதிசயம்!

அனைவரின் இதழ்களும் நடந்து கொண்டிருந்த சம்பவத்தில் விரிந்துகொள்ள, அடுத்து அபிமன்யுஅதற்கு என்ன பதில் வேலை செய்யப் போகிறானோ என்று அனைவரும் எதிர்பார்ப்பும் அச்சமுமாய் காத்திருக்க, சரியாக பத்து விநாடிகள் கழித்து, சகோதரனை சித்தார்த் அபிமன்யுவும் இறுக அணைக்க, அங்கிருந்த அனைத்து பெண்களின் விழிகளும் கலங்கிவிட்டன.

உலகின் ஒன்பதாவது அதிசயம்!

இதுவரை இருவரின் பிடிவாதம் அறிந்து யாரும்,பேசுங்கள்என்று கேட்டுக் கொண்டது கூட இல்லை!

வீட்டிலும் சரி! நண்பர்கள் வட்டத்திலும் சரி!

இப்படி ஒரு நிகழ்வை யாரும் கனவில் கூட எதிர்பார்த்தது கிடையாது!

அனைவரின் மனதிலும் மெய்யாக சிறிய வயதில் பார்த்த சித்தார்த் அபிமன்யுவும், விக்ரம் அபிநந்தனும் நிழலாடத் தொடங்கினர்!

இருவரும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால், ஒற்றை அணைப்பு சகோதரர்கள் இழந்த இருபத்தி நான்கு வருடங்களை ஈடுகட்டிக் கொண்டிருந்தது.

இரு வேங்கைகளும் எதிரெதிரே நின்றதை கண்டு பழகியிருக்க, இப்போது ஒன்றாய் ஒற்றுமையாய் நிற்பதைக் கண்ட சீறும் பெண் சிங்கமான நீரஜாவின் விழிகளில் கும் கட்டிவிட, அணைத்திருந்தவர்கள் பிரிந்து அருகருகே நிற்க, இருவரின் அருகே சென்ற நீரஜா, “இப்பதான்இதெல்லாம் தோணுச்சா?” என்று இருவரையும் ஒன்றாய் அணைக்க,

இரட்டை வேங்கைகள், “இப்பதான் உங்களுக்கும் எங்ககிட்ட பேச தோணுச்சா? எங்களை விட பொண்ணுக மேல தான் பாசம் போல” ஒரே போல இருவரும் கேட்க,

இருவரையும் விட்டு விலகி நின்றவர், “நீங்க எவ்வளவு முக்கியமா இருந்தா உங்க இரண்டு பேருக்குமே அவங்களை கல்யாணம் பண்ணி தந்திருப்பேன்என்றாரே பார்க்கலாம். அனைவரும் வாய்விட்டு சிரித்துவிட்டனர்.

பேரன்களின் அருகே வந்த இமையரசியும், “இப்படியே இருங்கய்யா” என்று குரல் கமற கூற, அவரின் கரத்தை பிடித்தவர்கள் புன்னகைத்து விழி சிமிட்டினர்.

அனைவரும் ஒன்றாய் அமர்ந்து சிரித்துப் பேசிக்கொண்டிருக்க, கௌதமின் விழிகளும், திலோத்தமையின் கோப விழிகளும் சந்தித்து மீண்டன.

அவளுக்கு அவளுடைய அழைப்பை அவன் இன்று மதியம் ஏற்கவில்லை என்கின்ற கோபம். மேலும் திட்ட வேறு செய்திருந்தான் அல்லவா. அவன் விழிகளாலேயே அவ்வப்போது மன்னிப்பை வேண்ட, பெண்ணவளோ முன்னிருந்த முடிகள் பின்னே துள்ளி விழ கழுத்தைத் திருப்பிக் கொண்டிருந்தாள்.

இருடின்னை அப்புறம் பாத்துக்கறேன்என்று மனதுக்குள் நினைத்தவன் கிளம்ப, இமையரசி, “நீ எப்ப கல்யாணம் பண்ணிக்க போற கௌதம்உங்க நாலு பேர்ல மூணு பேருக்குமே கல்யாணம் ஆகிடுச்சு… இனி நீதான் பண்ணனும்” என்று நடந்து கொண்டிருப்பது அறியாமல், ‘ஹெஹெஹெஎன்று வேறு சிரிக்க, திலோத்தமைக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கூடிய சீக்கிரம்… உங்ககிட்ட சொல்லாமையா?” என்று கேட்டு வைத்து கிளம்ப, திலோத்தமைக்குசொல்லத் தேவையில்லை. கனவு வானில் மிதக்கத் தொடங்கிவிட்டாள்.

அன்றிரவு அவரவர் அறைக்குள் செல்ல, திலோவும் மித்துவும் இன்று நடந்தது அனைத்தையும் டிஸ்கஸ் செய்து கொண்டிருக்க, ‘இருந்தாலும் விக்ரம் மாமா ஜெட் வேகம்டிஎன்று மித்து சிரிக்கும் எமோஜியுடன் மெசேஜ் செய்ய, ‘ஆமா ஆமாஎன்று திலோ அனுப்ப, இருவரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அறைக்குள் நுழைந்ததும் கணவனை பின்னிருந்து அணைத்த நறுமுகை அவனின் முதுகில் முத்தம் பதித்து, “லவ் யூஉஉ!” என்று கிறங்க,

தலை குனிந்து தன் மார்பில் பதிந்திருந்த தன்னவளின் கரத்தை பற்றி மென்மையாய் ட்ரிம் செய்திருந்த மீசை குத்த முத்தமிட்டவன், “லவ் யூ டூ டி சில்க்” என்று கேலி செய்து முதுகில் கடி வாங்கினான்.

ஆஹ்! வலிக்குதுடி” என்று கூறியவனின் முன் வந்து அணைத்தவள்,

எனக்கு பிடிச்ச இரண்டு பேரும் பேசிட்டீங்க… எனக்கு இதை விட என்ன வேணும் சொல்லுங்க… அதுவும் நீங்க பேசுவீங்கனு எக்ஸ்பக்ட் பண்ணவே இல்ல நான்” என்றவள் கணவனை அண்ணார்ந்து பார்த்து பேசிக் கொண்டே அவனின் நெஞ்சில் இதழ் பதிக்க, தன்னவளின் தலையை மேலும் தன்னோடு அழுத்திக் கொண்டான் அவளின் விக்ரம்.

கணவனிடம் இருந்து விலகியவள், அவன் முன்னேயே உடையை மாற்றத் துவங்க, கட்டிலில் போய் தலைக்கு கை கொடுத்து தன்னவளை இன்ச்விடாது பார்த்துக் கொண்டிருந்த விக்ரமை புன்னகையோடு பார்த்தவள், உடைகளை கழற்றியபடியே, “ஸார் இந்த மாதிரி எல்லாம் சும்மா இருக்க மாட்டிங்களே… இந்நேரம் பக்கத்துல வந்திருக்கணுமே…” என்று கணவனை கேலி செய்ய,

நாளைக்கு டாக்டர் கிட்ட செக்கப் போயிட்டுவந்து… நீயும் பேபியும் எப்படி இருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்ட அப்புறம் தான் எல்லாமே” என்றவனின் அருகே இரவு உடையுடன் நான்கு கால்களில் தவழ்ந்து வந்து படுத்தவளை,

ஏய் இப்படி எல்லாம் வர்றாத நறு…” என்று வயிற்றை பிடித்தவனை முறைத்தாள் நறுமுகை.

அவனை முறைத்துக் கொண்டு திரும்பிப் படுத்தவளை பின்னிருந்து அணைத்தவன், “என்னடி?” என்று கேட்டபடி கன்னத்தில் இதழ் பதிக்க, அவன் முத்தம் கொடுத்த இடத்தை துடைத்தவள், “பேசாதீங்க… ஹும்” என்று தலையை வெட்டினாள்.

ஏய் என்னடி?” மீண்டும் கேட்டவனிடம்,

குழந்தை வந்தோன அப்படியே மொத்த அக்கறையும் அங்க போகுது?” என்று கேட்டவளை தன்னை நோக்கி திருப்பியவன்,

இரண்டு பேருமே எனக்கு முக்கியம் தான்… பிறக்க போறது பொண்ணா இருந்தா என்கிட்ட க்ளோஸாஇருக்கும்… பையனா இருந்தா நினைச்சு பாரு… நீ என்னையவே மறந்திடுவடிஆனா, எனக்கு உன் மேல இருக்க லவ், லஸ்ட், கேர் எல்லாமே அறுபது வயசானா கூட அப்படியே தான் இருக்கும்… கம்மி ஆகாது…” என்று தன்னவளின் கன்னத்தை பற்றியபடி பேசியவனின் கன்னத்தை கடித்து முத்தம் பதித்தவள், அவனின் மார்பில் தலை சாய்க்க, வஞ்சியவளின் தலையில் முத்தம் பதித்தவன், ஏதோ சாதித்தது போன்றதொரு உணர்வில் தத்தளித்துக் கொண்டிருந்தான்.

இங்கே இருவர் பிணைந்திருக்க, நீரஜாவின் அறையில் அமர்ந்திருந்தாள் உத்ரா.

நீண்ட நேரமாக அனைவரும் கீழே இருந்தபோது பெரிய மகளையே கைகளில் தாங்கிக்கொண்டிருந்த நீரஜாவிற்கு, அப்போது தான் உத்ராவின் ஞாபகம் உதிக்க நிமிர்ந்து பார்த்தார்.

அபிமன்யுவின் பார்வையும், தந்தையின் பார்வையும் மகளை குற்றம் சாட்டியதை பார்த்தே அறிந்தவர், மகளின் வாடலையும், மருகலையும் எண்ணி இன்று மகளிடம் பேசிவிட எண்ணினார்.

அதற்கு தான் அவளை அறைக்கு அழைத்திருந்தார். ஏற்கனவே கணவனிடம் நீரஜா கூறியிருந்ததால், மகள் வந்ததும் சிறிது நேரம் பேசிய விஜய், பால்கனியில் சென்று புத்தகத்துடன்அமர்ந்துவிட்டார்.

முகத்தை கழுவிக்கொண்டு நைட்டிக்கு மாறி வெளியே வந்த நீரஜா, மகளின் எதிரே படுக்கையில் அமர்ந்து கொண்டு, “உத்ராஎன்றழைக்க, “ம்மா” என்றாள் சின்னவள்.

மகளின் கரத்தை பற்றியவர், “நீயும் அபியும் உங்க லைஃப் ஸ்டார்ட் பண்ணிட்டீங்களா?” என்று நேரடியாகவே கேட்க, அன்னையின் விழிகளை சந்திக்க இயலாது தவித்தவள், ‘இல்லைஎன்பது போல தலையாட்டினாள்.

என்னாச்சு உத்ரா? எனக்கு தெரிஞ்சு அபிக்கு பிரச்சனை இருக்க மாதிரி தெரியல” என்ற அன்னையை நிமிர்ந்து பார்த்தவள், உதடுகள் நடுங்க, “என்கிட்ட தான்மா பிரச்சனை” என்றாள்.

மகளின் பதிலில் ஒரு கணம் யோசித்த நீரஜா, “நீதான் உன் மனசை மாத்திக்கணும் உத்ரா… இப்ப நறு ப்ரெக்னென்ட் ஆனதுனால நான் இதெல்லாம் சொல்லல… குழந்தை எப்ப பெத்துக்கணும் அப்படிங்கிறதை நீங்கதான் முடிவு பண்ணனும்… ஆனா, நீங்க இரண்டு பேரும் நார்மலா பேசி கூட நான் இத்தனை நாள் பாக்கல…” என்ற அன்னையின் அருகே வந்து அமர்ந்தவள், அவரின் தோளில் சாய்ந்தாள்.

மகளின் கன்னத்தை தட்டிக் கொடுத்தவர், “பாப்பு!” என்றழைக்க, “ம்ம்என்றவளின் குரல் கரகரத்தது.

ச்சுஅழுத அடி பிச்சிடுவேன்… இந்த அழுகற பழக்கத்தை உனக்கு யாரு கத்துக் கொடுத்தது?” என்று அதட்ட,

உங்களுக்கென்ன அப்பாவை கல்யாணம் பண்ணிட்டீங்கலவ் பண்ண பையனையே கல்யாணம் பண்ணி ஜாலியா இருக்கீங்க” என்று வள்ளென்று எரிந்து விழ, நீரஜாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

சரி தான்” என்று சிரித்தவர், “நீங்க எப்படி அம்மணி… பிடிக்காத பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா? அபி வேற பொண்ணை கல்யாணம் பண்றேன்னு சொன்னப்பமித்து மேலஎடுத்து பொருளை வீசுனது எல்லாம் மறந்திடுச்சா?” என்று கிண்டல் புரிய,

ம்கூம்” என்று சிணுங்கியவள் மேலும் அன்னையின் தோளில் புதைந்தாள்.

அபி மேல உனக்கு என்ன கோபம் உத்ரா?” என்று வினவ, யாரிடமும் இதை சொல்ல முனையாதவள் அன்னையிடம் மட்டும் சொல்லிவிடவா போகிறாள்?

மகள் அமைதியாக இருப்பதை கண்டவர், “உன்கிட்ட தான் கேக்கறேன்” என்று இலேசாக அதட்ட

அதெல்லாம் எதுக்கு ம்மாமுடிஞ்சு போனதை தெரிஞ்சு என்ன பண்ண போறீங்க?” என்று அன்னையின் தோளில் இருந்து எழுந்தவள், அன்னையின் முகத்தை பார்த்து சற்று கோபத்துடன் கேட்டு வைக்க,

விழிகளாலேயே புன்னகைத்த நீரஜா, “புருஷனை என்கிட்ட கூட விட்டுத்தர முடியலஇதுல உனக்கு கோபமா?” என்று கேட்க, சற்று நாணமும் அதைவிட அதிக கோபமும் இணைந்து முகம் சிவக்க, அன்னையிடம் அதை மறைக்க முயன்றவள் எங்கோ பார்த்தாள்.

மகளின் தாடையை பிடித்து திருப்பிய நீரஜா, “உண்மையா அபி மேல கோபமா?” என்று வினவ,

அவர் உங்களுக்காக பண்ணது எல்லாம் ஓகே… ஆனா, என்னை அதுல கஷ்டப்படுத்தி இருக்க கூடாது… என்கிட்ட உண்மையை சொல்லி கேட்டிருந்தா நான் கண்டிப்பா சைன் பண்ணியிருப்பேன் ம்மாஆனா அவரு ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டாரு அன்னைக்கு… அதுக்கு முன்னாடி இருந்த நாலு நாளும் ஒருத்தரை பாத்துட்டு, மறுபடியும் அவரு அப்படியே மாறுனப்பஎப்படி ஃபீல் ஆச்சு தெரியுமா?

இவரு உண்மையாவே நம்மள லவ் பண்ணாராஇல்ல சைன் வாங்கிறதுக்காக தான் கூட்டிட்டுவந்தாரா… எவ்வளவு நம்புனேன் தெரியுமா அவரை… ம்மா நீங்க எப்படி எடுத்துப்பீங்க தெரியல… யாருக்கும் சொல்லாததை சொல்றேன்உங்ககிட்ட சொல்ல ஒரு மாதிரி இருந்தாலும், என்னால உங்ககிட்ட மட்டும் தான் இதை சொல்லவும் முடியும்” என்றவள் சிறு தயக்கத்துடன்,

நாங்க நாலு நாள் ஒரு பெட்ல தான் தூங்குனோம்என்கிட்ட லிமிட் க்ராஸ் பண்ணவே இல்ல அவரு… நிறைய அவர்கிட்ட பேசுனேன்இன்பாக்ட் அவரு அவ்வளவு பேசுவாரான்னு அந்த டேஸ்ல தான் தெரிஞ்சுது ம்மா… ரொம்ப நல்லாதான் பாத்துக்கிட்டாருஆனா, கடைசி நாள் தான்…” என்றவளுக்கு விழிகள் கலங்க, மகளின் கண்ணீரை கண்ட நீரஜா மகளை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக்கொள்ள,

என்னால அதை மறக்கவே முடியல ம்மா… நானே நினைச்சாலும் அதுதான் ஞாபகம் வருதுஆனாஅவரை வெறுக்கவும் முடியல, ஏத்துக்கவும் முடியலஎன்றவளின் தலையை தட்டிக் கொடுத்த நீரஜாதாயாய் மகளின் நிலையை நன்கு உணர்ந்தார்.

பாப்பு!” என்றவர், “அபிகிட்ட மனசு விட்டு பேசு. நீ எப்படி ஃபீல் பண்றனு சொல்லு… என்கிட்ட சொன்னதை அப்படியே சொல்லு… நீ நினைக்கிற மாதிரி இல்ல… அவன் நான் பாக்க வளந்த பையன்… ம்கூம்… நான் வளத்த பையன்… அவனோட மனசு ஒரு சிலருக்கு தான் புரியும்… இப்ப நடந்த பிரச்சனைல கூட நறுமுகைக்காக அபி அலைஞ்சான்னு சொன்னாலும், அதைவிட முக்கிய காரணம் விக்ரமா தான் இருக்கும்” என்று மருமகனை சரியாக கணித்துக் கூறியவர்,

விக்ரமா ஹக் பண்ணோன அவனும் பண்ணான்னாஅபி மனசுல இது ரொம்ப நாளா ஓடிட்டி இருந்திருக்குன்னு தான் அர்த்தம்… இல்லைனா அபி சத்தியமா ரெஸ்பான்ட் பண்ணியிருக்க மாட்டான்என்றவரை உத்ரா பார்த்துக் கொண்டே இருக்கபுன்னகைத்தபடி மகளின் தோளைத் தொட்டவர்,

அபி நீ சொன்னா அன்டர்ஸ்டான்ட் பண்ற பையன்” என்றிட, சரியென்று தலையாட்டியவள், தனது அறைக்கு எழுந்து செல்ல, மகள் சென்றவுடன் உள்ளே வந்தார் விஜய்.

என்ன சொன்னா?” என்று கேட்க, விஜய்யை திரும்பி பார்த்து புன்னகைத்தவர்,

எல்லாம் சரியாகும்என்றவர் படுக்கையில் சோர்வுடன் படுக்க, மனையாளின் பாதங்களை எடுத்து தன் மீது வைத்து பிடித்துவிட்டவர், “நீயும் மனசை போட்டு அலட்டிக்காத அம்மாடி” என்று ஆறுதலாய் கூற, கால்களை பிடித்து விட்டுக் கொண்டிருக்கும் கணவரையே இமைக்காது பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவின் விழிகள் தூக்கத்தில் சில நிமிடங்களிலேயே சொக்கி சொருக, நீரஜா உறங்கிய பின் போர்வையால் அவரை மூடிய விஜய் மனையாளை அணைத்தபடியே அன்றிரவு தூங்க, அபிமன்யுவின் அறைக்குள் நுழைந்த உத்ராவிற்கு கணவன் அங்கிருக்கும் சுடவே தெரியவில்லை.

இவரு வேற… ஒரு வீடு சைஸுக்கு ரூமை வச்சிட்டு எப்ப எங்க இருக்காருன்னே தெரியறது இல்லஎன்று தேடியவள், பால்கனி பக்கம் சென்று பார்த்துவிட்டு, மீண்டும் வெற்று சுவர் இருந்த பக்கம் வந்து அபிமன்யு அவளுக்கும் சேர்த்து செய்திருந்த ஏற்பாட்டினை உபயோகித்தாள்.

உத்ரா தனது கரத்தை சுவற்றில் ஒரு இடத்தில் வைக்க, சுவரைப் போலவே இருந்த கதவுகள் இரு பக்கங்களிலும் இராஜரீகமான திறந்து காரிகையவளை வரவேற்க, இரண்டு பக்கங்களிலும் கண்ணாடிக் கதவுகளால் மூடியிருந்த இரண்டு அறைகள் இருக்க, நடுவே சென்ற பாதையில் சிறிது அடிகள் வைத்தவளுக்கு, ட்ரெஸ்ஸிங் ரூமில் லைட் எரிவது தெரிந்தது.

ட்ரெஸ் மாத்திட்டு இருக்காரோஎன்று யோசித்தவள், முதலில் அங்கிருந்த தனது அறைக்குள் புகுந்து குளித்து முடித்து, இரவு உடைக்கு மாறியவள் வெளியே வர, ட்ரெஸ்ஸிங் அறையில் இருந்து கசிந்து கொண்டிருந்த மெல்லிய மஞ்சள் வெளிச்சம் இல்லாது இருக்க, ஒவ்வொரு அறையாக பார்க்கத் துவங்கினாள்.

திருமணம் முடிந்து சென்னை வந்ததில் இருந்து, உத்ரா தன்னுடன் இருக்க விருப்பப்பட மாட்டாள் என்று நன்கு உணர்ந்திருந்த அபிமன்யு, அவளுக்காகவே உள்ளே தனக்கென இருந்த மற்றொரு படுக்கை அறையை தயார் செய்திருந்தான்.

முழு கருப்பு நிறத்தை சுமந்திருந்த அபிமன்யுவின் பகட்டான அறைகளில், முதல் முறை பீச் நிறம் பூசப்பட, அங்கு சூழ்ந்திருந்த விழிகளுக்கு தெரிந்திடாத ஆட்டம்ஸிற்கோ மனம் கொள்ளாதுணை தான் அது.

அவளுக்கு பிடித்த நிறத்தில் உள்ளுக்குள் இருந்த தனக்கென்று இருந்த மற்றொரு படுக்கை அறையை மாற்றிக் கொடுத்தவன், அன்றே அவளிடம் கூறி இருந்தான்.

என் பொறுமைக்கும் அளவு இருக்கு உத்ராஇன்பாக்ட் நான் இந்த மாதிரி எல்லாம் அட்ஜஸ்ட் பண்ணதே கிடையாது…” என்று கூறி அன்று அவளின் அறையை விட்டு சென்றிருக்க, அன்று இந்த அறைக்குள் புகுந்திருந்தாள் அபிமன்யுவின் மனைவி.

அன்னை அல்லது தந்தையுடன் மருத்துவமனை செல்வது, வருவது, உடை மாற்றி கீழே வந்து இமையரசியுடன் அல்லது திலோத்தமையுடன் இரவு பதினொரு மணி வரை இருப்பது, வீட்டிற்கு அழைத்து கதைப்பது என்றே நேரத்தை கழிப்பவள், அதன் பிறகு வந்து அறையை தாழிட்டுவிட்டு தூங்கிவிடுவாள்.

இதுதான் அவளின் தினசரி வாழ்க்கையாக இருந்தது கடந்த ஒரு மாதமாக. அபிமன்யு ஏதாவது கேட்டால் பதில் கூறுவாள். அதிகமாக ஒரு வார்த்தை கூட பேச மாட்டாள். அபிமன்யு சீண்ட முயன்றால் கூட கடந்து சென்று விடுவாள்.

அப்படி இருந்தவள் இத்தனை நாட்களில் முதல் முறை அபிமன்யுவை தேடினாள். அன்னையின் வார்த்தைகள் என்பதை விட, அன்னையின் வார்த்தைகளில் இருந்த உண்மைகளுக்காக.

தனது அறையில் இருந்து வெளியே வந்தவள், அதற்கு எதிரில் இருந்த கண்ணாடிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள்.

அபிமன்யுவின் அலுவலக அறை!

அங்கில்லை அவளின் கணவன்.

சிறிது முன்னே சென்றவள் அங்கிருந்த கண்ணாடிக் கதவை திறந்து கொண்டு உள்ளே பார்த்தாள்.

அபிமன்யுவின் தனிமை அறை!

உள்நாட்டு, வெளிநாட்டு புத்தகங்கள், மியூஸிக் சிஸ்டம் என்று அடங்கிய இதம் குறையாத அறை!

அங்கும் அவன் இல்லை!

அடுத்து அதற்கு எதிரில் இருந்த கண்ணாடிக் கதவை வெறித்தாள் உத்ரா.

அபிமன்யுவின் மினி பார் அது!

இங்கே இருக்கிறாரோஎன்று யோசித்தவளுக்கு மனம் பிசைய, கண்ணாடி கதவை திறந்தவள், உள்ளே எட்டிப் பார்க்க, மிதமான வெளிநாட்டு பாடல் ஓடிக் கொண்டிருக்க, பொன் நிற டிம் லைட்கசிந்து கொண்டிருக்க, அங்கிருந்த சூழலை உத்ராவிற்கு உணர்த்த, மெதுவே உள்ளே காலை வைத்தாள் அந்த பூம்பாவை.

உள்ளே மெய்யாலுமே மினி பார் தான்!

இப்படி ஒரு அறை இருப்பது சொல்லப் போனால் யாருக்கும் தெரியாது கூட வீட்டில்!

உத்ராவை தவிர!

உள்ளே என்ன அறை என்று அபிமன்யு வந்த தினம் கூறியிருந்தாலும், இத்தனை நாட்களில் அவன் இதை உபயோகித்து அவள் கண்டதே இல்லை.

சினிமாக்களில் வருவது போல முன்னால் கருப்பு கிரானைட்டினால் செய்யப்பட்ட நீள் மேஜை இருக்க, அதற்கு முன்னே நான்கு பார் ஸ்டூல் தரையோடு பொருத்தப்பட்டு வைத்திருக்க, அட்டகாசமாக அதுவும் கிரானைட்.

அதில் ஒன்றின் மேல் அபிமன்யு அமர்ந்திருக்க, மேஜையை தாண்டி நிறைய நிறைய பாட்டில்கள் பேக் பாரில் (Back bar) அடுக்கி வைக்கப்பட்டு இருக்க, அதில் ப்ளூவும் இளம் மஞ்சளுமாக வெளிச்சம் கசிந்து கொண்டிருந்தது.

தரை முழுதும் மரத்தாலான டிசைனால் செய்யப்பட்டிருக்க, அதில் பாதங்கள் அழுந்த நின்றிருந்த உத்ராவிற்கு ஏசியின் குளிர் அதிகமாகத் தெரிய, மெதுவே நடந்து அபிமன்யுவின் அருகே சென்றவளுக்கு, அந்த உடலை நடுங்க வைக்கும் ஏசியின் கடுங்குளிரிலும் அபிமன்யு வியர்த்து அமர்ந்திருப்பது புரிந்தது.

இப்படி ஸ்வெட் ஆகற அளவுக்கு குடிச்சிருக்காரா?’ என்று நினைத்தவள் உள்ளுக்குள் கலங்கிப்போனவளாய், தன்னுடைய அனைத்து கோபங்களையும் விடுத்து அபிமன்யுவின்அருகிலிருந்த பார் ஸ்டூலில் சென்று அமர்ந்தவள், கணவனையே பார்த்திருந்த தளிர் மேனியவளின் பதட்டம் அதிகரிக்க, கணவனின் கரத்தை பற்றினாள் அபிமன்யுவின் அருமை மனைவி.

நீள் கிரானைட் மேஜையில் கரம் ஊன்றி அமர்ந்திருந்தவன், ஒரு கரத்தில் கண்ணாடி குவளையை அழுந்தப் பிடித்திருக்க, மறு கரத்தை நெற்றிக்கு கொடுத்து விழிகளை மூடி அமர்ந்திருக்க, அசையாது அமர்ந்திருந்தாலும்உத்ரா கதவைத் திறந்ததில் இருந்து, உள்ளே வந்து அருகில் அமர்ந்தது வரை உணர்ந்தவன், அவள் தன் கரம் பற்றி கூட அவளை என்னவென்றும் பார்க்கவில்லை.

அதீத காதல் அதீத கோபத்தை விளைவித்து இருந்தது!

 

error: Content is protected !!