ஆட்டம்-46

ஆட்டம்-46

ஆட்டம்-46

வர வர ஸார் பார்வையே சரி இல்ல” என்று கௌதமின் அருகே காரில் அமர்ந்திருந்த திலோத்தமை இழுத்துக் கூறி கழுத்தை வெட்ட, ஒரு கரத்தால் காரை செலுத்திக் கொண்டிருந்தவன் ஒரு நளினப் புன்னகையை மட்டும் உதிர்த்தான்.

பின்ன இந்த மாதிரி மேடம் வர்றதே ஆடிக்கு ஒரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை… அதுவும் வந்தவுடனே சீக்கிரம் போகணும்னு உன் அண்ணனுக புராணம்… அதுவும் இப்படி நல்லா காரசாரமா ட்ரெஸ் பண்ணிட்டு வந்தா நான் என்னடி பண்ண?” என்று சாலையில் தன் பார்வையை பதித்தபடியே கூறியவனின் கன்னத்தில் செல்லமாய் அடித்தாள், அந்த சீறும் வேங்கைகளின் சகோதரி.

எது இந்த ட்ரெஸ் உங்களுக்கு அப்படி இருக்கா?” என்று கேட்டு வைக்க, தன்னருகில் இருப்பவளைஒரு விநாடி தலை திருப்பி பார்த்தான் கௌதம்.

ஒரு விநாடி ரசனையாய் தன்னவளின் மீது அவன் பார்வை பதிந்தது!

ஒரு விரல் அளவு கொண்ட பட்டை ஸ்லீவ்லெஸ்ப்ளூ குர்தா பெண்ணவளின் மேல் கால்கள் வரை மூடியிருக்க, அதற்கு கீழே டோன் (tone) ஜீன்ஸை அணிந்திருந்தவளின் கால்கள் ஆங்காங்கே இருந்த டோன் இருந்த இடங்களில் தெரிய, பெண்ணவளின்மேனியை கச்சிதமாக பிடித்திருந்த ஆடை, அவளறியாது அவளின் வனப்புகளை எடுத்துக் காட்ட, ரியர் வியூ மிரரை தன்னவளின் புறம் திரும்பிய கௌதம், “நீயே பாருடி” என்றான்.

தன்னைத் தானே மிரரில் கண்டவள், “எவ்வளவு க்யூட்டா இருக்கேன்ல” என்று தன்னைத் தானே ரசித்தபடி கேட்டவள், இடுப்பின் இரு புறமும் கை வைத்து, தலை சாய்த்து உதட்டை குவித்து தன் செப்பு இதழ்களை வைத்து போஸ் கொடுத்து தன்னைத் தானே கண்ணாடியில் பார்க்க,

தன்னவளின் கீழ் இதழ்களை இரு விரல்களால் பற்றியவன், இலேசாக இழுத்து தன் வாயில் போட்டு விழுங்குவது போல சைகை செய்ய, “ப்ராடு ப்ராடு” என்று கௌதமை அடிக்கத் தொடங்கிவிட்டாள் நம் சண்டைக்காரி.

பெண்ணவளின் அடியில் காரை ஓரமாக நிறுத்தியவன், தன்னவளை குறும்புச் சிரிப்புடன் பார்க்க, அவளோ மேலும் இரண்டு போடு போட்டாள்.

எப்படா சான்ஸ் கிடைக்கும்னு கழுகு மாதிரி அலைய வேண்டியது…” என்று தோளில் கிள்ளி வைத்தவளின் இரு கரங்களையும் சேர்த்து பிடித்த கௌதம், விநாடிப் பொழுதில், தன்னவளின் கன்னத்தில் முத்தமிட்டு இருந்தான்.

கௌதமின் செய்கையில் வாய் பிளந்தவள், பின் சிணுங்கியபடியே, “என்னது இது?” என்று நாணத்தில் ஒரு பக்கம் அமராது ஆடிக் கொண்டே கேட்க, திலோத்தமையின் கரங்களை மேலும் இறுகப் பற்றிய கௌதம், “திலோ!” என்று இதமாக அழைக்க, காதலனின் குரலில் அவனை பார்க்காமலேயே அதிலிருந்த மோகத்தையும், ஏக்கத்தையும் புரிந்து கொண்டவள், அதுவரை இருந்த பொரி பொரி பட்டாசு வெடித்து முடித்ததை போன்று அமைதியாகி போனாள்.

அவளின் பிஞ்சுக் கரங்கள் ஆடவனின் ஒற்றைக் கரத்தினுள் அடக்கமாய் அடங்கியிருக்க, பெண்ணவளோ சற்று விநாடிகளுக்கு முன்அவனைப் பார்த்து அமர்ந்திருந்தவள் இப்போது சாலையின் பக்கம் பார்த்து அமர்ந்திருந்தாள்.

உள்ளுக்குள் வயிற்றில் துவங்கிய படபடப்பு, பெண்ணவளின் இதயத்தை துடிக்க வைத்து, தொண்டை குழியை அடைந்து, அதை சிணுங்கவிட்டு சென்று பெண்ணவளின் விழியை அடைய, என்ன தவம் செய்திருந்தானோ, அந்த எள் அளவும் அழகில் குறைவில்லாத திலோத்தமையை தன் மனதில் சேமித்து வைத்திருப்பவன்!

பெண்ணவளின் வலது பக்கம் அமர்ந்திருந்தவன், பெண்ணவளின் தாடையை பிடித்து, மெல்ல தன் கரத்தை மடவோளின் இடது பக்க கன்னத்திற்கு நகர்த்தி, மென்மையாய் பற்றி தன் புறம் தன்னவளின் வதனத்தை திருப்பியவன், “திலோ கிஸ் பண்ணட்டுமா டி?” என்று வினவியவனை, கருகருவென்று வளந்திருந்த அவனவளின் நீண்ட இமை முடிகள் சுண்டியிழுக்க, சற்று மேலும் நெருக்கமாக நகர்ந்து அமர்ந்தான்.

திலோத்தமையின் அருகே நெருங்கியவன், அவளின் இமைகளின் மீது மென்மையாய் முத்தமிட்டு விலக, நடுங்கும் குரலில், “இங்க கிஸ் பண்றதுக்கா பெர்மிஷன் கேட்டீங்க?” என்று வினவ, ‘இல்லைஎன்பது போல மௌனமாய் விழி கொண்டு தலையாட்டி புன்னகைத்தவனின் பார்வை திலோத்தமையின் இதழ்களைக் கொய்ய, திலோத்தமையின் கரத்தை பிடித்திருந்த கரங்களையும் விலக்கிய விக்ரம், அதையும் மற்றொரு கன்னத்தில் வைத்துத் தாங்கி தன்னவளைப் பார்த்தான்.

அமிர்த வதனம் பெண்ணவளின் மொத்த உணர்வுகளையும் உணர்த்த, திலோத்தமையின் இதழ் நோக்கி குனிந்தவன், “இத்தனை நாள் உன் பீலிங்ஸுக்காக கம்முனு இருந்தேன்டிஆனா இன்னைக்கு முடியல திலோஎன்றவனின் இதழ்கள் அடுத்த கம் பெண்ணவளின் இதழை தனக்குள் அடக்கி இருந்தது.

அடக்கி ஆண்டு கொண்டிருந்தது!

முதலில் தயங்கித் தயங்கி தன்னவன் கொடுத்த முத்தங்களை ஏற்றுக் கொண்டிருந்தவள், அடுத்தடுத்து அவளுக்குள் நடந்த இரசாயன ஜாலங்களில், கௌதமின் தோளில் ஒரு கரத்தையும் கழுத்தில் ஒரு கரத்தையும் போட்டவளாக முத்தங்களை பதிலாக கொடுக்க, இருவரின் இதயங்களும் தாங்கள் பரிமாறிக் கொள்ளும் முதல் முத்தத்தில் தாறுமாறாக லயித்து மூழ்க, குறும்புடன் தன்னவனின் இதழை கடித்து வைத்தவளிடம்இருந்து விலகியவன், “குரங்குடி நீ” என்று மீண்டும் அவளின் இதழில் மூழ்கினான்.

பதினைந்து நிமிடங்களுக்கு மேல் மூச்சிற்காக இடைவெளியோடு தொடர்ந்த முத்தம் இறுதிக்குவர, தன்னவளை விட்ட கௌதம், “இந்த கிஸ்ஸுக்கே இவ்வளவு ஜிவ்வுன்னு இருக்கே” என்று புல்லரிக்க, கண்ணாடி பக்கம் முகம் திருப்பி நாணத்தோடு புன்னகைத்த திலோத்தமை, இருக்கையில் நன்றாக சாய்ந்து கொண்டு வேடிக்கை பார்ப்பது போல அமர, கௌதம் காரை எடுத்தான்.

இருவரும் இருந்தது ஆரஞ்சு வண்ண பென்ட்லி கான்டினென்டல் (Bentley continental) கார். சன்டின்ட் அடித்திருக்க, எவருக்கும் இவர்கள் உள்ளிருப்பது தெரியவே தெரியாது.

மற்றவர்களுக்கு உள்ளே இருப்பது சென்னை மாநகராட்சி கலெக்டர் மற்றும் ஏ.என்.ஏ நிறுவனத்தின் வாரிசு என்று தெரியாது இருக்கலாம். ஆனால் அவனின் நண்பர்களுக்கு அது தெரியாது இருக்குமா?

சிக்னலில் விக்ரமின் ஆஸ்டன் மார்டின் வால்கன் நின்றிருக்க, கார் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த அபிமன்யுவின் விழிகளில் பளிச்சென்று கண்களை பறிக்கும் ஆரஞ்சு பென்ட்லி விழ, காரின் நம்பரை பார்த்தவன், “விக்ரம்! இது கௌதமோட கார் தானே?” என்று வினவ, விக்ரமும் அவர்களுக்கு எதிரே இடது பக்கம் சிக்னலில் நின்றிருந்த காரை காணவும், திலோத்தமை காரின் கண்ணாடியை இறக்கி சாக்லேட் கவரை வெளியே போடவும் சரியாக இருந்தது.

தங்கையை கௌதமின் காரில் கண்ட இரட்டை வேங்கைகளின் நெஞ்சம் ஒரு விநாடி வெடுக்கென்று அசைய, எப்போதுமே விவேகம் எனும் சொல்லை கடைபிடிக்கும் விக்ரமின் கோபம் கூரையை பிய்த்துக் கொண்டு எகிறி பிரபஞ்சத்தை அடைந்து சிதறி, பூமியை ஓர் அசைவு அசைக்க, எப்போதும் வேகத்தை கடை பிடிக்கும் அபிமன்யு நிதானமாக ஸ்டியரீங்கில் விரல்களை அணைத்தபடி காரையே கூர்ந்து பார்த்திருந்தான்.

ஆனால், அபிமன்யுவின் விழிகள் ஊசி முனையை போன்று அங்கேயே ஊடுருவி நிற்க, “இவளை…” பல்லைக் கடித்துக் கொண்டு காரிலிருந்து இறங்க முனைந்த விக்ரமின் கரத்தைப் பற்றிய அபிமன்யு, “விக்ரம் வெயிட்” என்று இறுக்கமான குரலில் கூறினான்.

காரணமில்லாது அபிமன்யு கூற மாட்டான் என்று தெரிந்த விக்ரம், தன் ஒட்டுமொத்த ஆங்காரத்தையும் உள்ளடக்கிக் கொண்டு அமர, “விக்ரம்! திலோவுக்கு கால் பண்ணு” என்று கூற, எதற்கு என்று புரிந்து கொண்ட விக்ரம், தங்கைக்கு அழைத்தான்.

ஃபோன் அடிக்கவும் அலைபேசியை எடுத்துப் பார்த்த திலோத்தமை, வாயில் விரல் வைத்து கௌதமிடம் காட்டியவள், “சொல்லுங்க ண்ணா” என்று கேட்டாள்.

எங்க இருக்க திலோ?தன்னுள் பற்றி எரிந்து கொண்டிருந்த கோபம் அனைத்தையும் ஒன்றுமில்லாது உள்ளடக்கி வைத்தவனின் குரலில் எதையும் உணராத திலோத்தமை,

லேப்ல ண்ணா… முக்கியமான லேப் க்ளாஸ்என்றவளிடம், “சரி. முடிச்சிட்டு கால் பண்ணு” என்றவன் வைத்துவிட்டான்.

லேப் ஆம் லேப்கௌதமோட லவ் லேபா இருக்கும்” ஆத்திரத்தில் பேசிய விக்ரமின் கரத்தை தட்டிக் கொடுத்த அபிமன்யு,

எப்படியும் இன்னும் ஒன் ஹார்ல காலேஜ் முடியும் விக்ரம்நம்ம ட்ரைவர் கூட்டிட்டு வர்ற போற டைமுக்குள்ள திலோ அங்க இருப்பாவீ வில் டாக்டூ கௌதம்” என்று கூறிய அபிமன்யுவுக்குள்ளும் சீற்றமாய் வெடித்துக் கொண்டிருந்தது கோபத்தணல்கள்.

அலுவலகத்தை அடைந்த இருவரும் கௌதமிற்கு அழைக்க, அப்போது தான் திலோத்தமையை கல்லூரியின் பின்புறம் இறக்கிவிட்டவன், அங்கிருந்த வாட்ச் மேன்களை அழைத்து, யாராவது வருகிறார்களா?” என்று கேட்டான்.

அவனின் கல்லூரி அல்லவா அது!

இல்ல ஸார்” என்று வாட்ச்மேன் கூற, திலோத்தமை அங்கிருந்த ஏணி போன்றதில் ஏறி உள்ளே குதித்தாள்.

அவனுடைய கல்லூரி தான். உள்ளே சென்று கூட இறக்கிவிடலாம். ஆனால், திலோத்தமைக்கு என்று தனியே வைத்திருந்த ட்ரைவர் கண்களில் இது பட்டால் கண்டிப்பாக செய்தி அபிமன்யுவையோஅல்லது விக்ரமையோ அடையும். அதனாலேயே இப்படி.

பயம் என்பதை தாண்டி, திலோத்தமையின் படிப்பு முடியும் வரை யார் விழிகளிலும் இவர்களின் காதல் பட்டு விடக்கூடாது என்று உறுதியாக இருந்தான் கௌதம்.

நண்பர்களிடம் பயம் என்றிருந்தால், அவன் திலோத்தமையை ஏன் பார்க்கப் போகிறான். அதுவும் இன்றி பயம் இருப்பவன் அபிமன்யு, விக்ரமிற்கு சரி சமமாக நண்பனாக இருக்க முடியாதே!

திலோத்தமை சென்ற பின்பு காரை எடுத்தவன், தன்னவளிடம் இருந்து கிடைத்த முதல் இதழ் முத்தத்தை நினைத்து, ரியர் வியூ மிரரை அட்ஜஸ்ட் செய்து தன் இதழை பார்க்க, இதழின் ஓரம் பெண்ணவள் கடித்து வைத்த தடம் பல்லைக் காட்டிக் கொண்டு தெரிந்தது.

சரியானவ… எதுவும் தெரியாத பூனை மாதிரி இருந்துட்டு கடிச்சு வேற வச்சிடுச்சு கோஸூ” என்று புன்னகைத்தபடியே திட்டியவனுக்கு, அப்போது தான் அவனின் ஃபோன் வைப்ரேட் ஆனது புரிந்தது.

இதழை இலேசாக குவித்து விசிலடித்தபடியே எடுத்துப் பார்த்தவனின் புருவம் சுருங்க, சிறு சிறு இடைவெளி விட்டு அடித்துக் கொண்டிருந்த விசில், திரையில் ஒளிர்ந்த எண்ணை கண்டதும் யோசனையில் அழுத்தமாய் நீள, அழைப்பை ஏற்றவன், “சொல்லு விக்ரம்” என்றான்.

எங்க இருக்க கௌதம்?” என்று விக்ரம் வினவ, கௌதமின் நெற்றியில் கோடுகள்.

ஏனெனில் விக்ரமும் சரி அபிமன்யுவும் சரி இதெல்லாம் கேட்க மாட்டார்கள். எடுத்தவுடன் எப்படியும் இந்த நேரத்தில் கலெக்டர் அலுவலகத்தில் தான் இருப்பான் என்று தெரிந்தவர்கள், அங்கு வருவதாக தகவல் தான் தெரிவிப்பார்கள்.

சட்டென திலோத்தமை சற்று நேரத்திற்கு முன் விக்ரமிடம் அளித்த பதில் நினைவு வந்தது.

இரண்டையும் சேர்த்துப் பார்த்தவனுக்கு என்னவென்று உறுதியாக புரிந்து போக, ஸ்டியரீங்கை இறுக்கி பிடித்தவன், “காலேஜ் வந்தேன் விக்ரம்… நானே வர்றேன்” என்று கூறி வைத்தவன், முதலில் திலோத்தமைக்கு சொல்லலாமா என்று எண்ணினான்.

சரி தேவையில்லாம அவளை பயபடுத்த வேணாம்என்று நினைத்தவன், ஆக்ஸிலரேட்டரை அழுத்தி தனது காரை உறும விட, அதுவோ தனது எஜமானின் வேகத்தினை புரிந்து கொண்டு சாலையில் உள்ள அனைவரையும் கலங்கடித்து கொண்டு சென்றது.

இங்கு விக்ரம், அபிமன்யுவிடம் அனைத்தையும் கூற, தனது இருக்கையில் இருந்து எழுந்த அபிமன்யு ஆரவ்வை அழைத்து, “ஆரவ்! நானும் விக்ரமும் மீட்டிங் ரூம்ல இருக்கோம்… நீ கௌதம் வந்தாஅங்க அனுப்பிடுஎன்றிட, சகோதரர்கள் இருவரும் மீட்டிங் அறையினுள் நுழைந்து கொள்ள, உள்ளே ஐந்து மாத வயிறுடன் வந்த மனையாளை கண்ட விக்ரம், அவளருகே எழுந்து சென்றான்.

ச்சு என்ன நறுகிளம்பாம என்ன பண்ற? உன்னை லன்ச்சுக்கே வீட்டுக்கு போக சொல்லி எத்தனை தடவை சொல்றது” என்று கூற,

சின்ன அத்தை எனக்கு சாப்பாடு தந்துவிட்டாங்க” என்று கூறிவிட்டு கணவனைத் தாண்டி அபிமன்யுவை எட்டிப் பார்த்த நறுமுகை,

மாமா சாப்பிட்டீங்களா?” என்று வினவ,

விக்ரம், “சாப்பிட்டாச்சு” என்று கூற, அபிமன்யு, “இன்னும் இல்லமா” என்று பதலளிக்க, இருவரையும் மாற்றி மாற்றி பார்த்து வைத்த நறுமுகை கணவனை முறைக்க, “ஹே இம்ப்பார்டன்ட் மீட்டிங் நறுட்ரை டூ அன்டர்ஸ்டான்ட் டி” என்று கூற,

எப்ப பாரு இதே டயலாக்” என்றவள், “நைட்டுக்கு ஆவது டைமுக்கு வாங்க” என்று இருவரிடமும் விடைபெற்று செல்ல முயல,

பாத்துடி…” என்று கூற, வெண்மை நிற மேட்டர்னிட்டி பேன்ட் அணிந்து, மேலே வைன் நிற லூஸ் டாப் அணிந்திருந்தவள் தனது ரேபான் கூலர்ஸை எடுத்து ஸ்டைலாக மாட்டியவாறே,

பதினாறு வயசுல இருந்து கார் ஓட்டிட்டு இருக்கேன்எனக்கேவா?” என்று தலையை சிலுப்பிவிட்டு செல்பவளையே பார்த்திருந்தவனின் மனம் எப்போதும் போல திகட்டாத காதலுடன் தன்னவளையே பார்க்க, நறுமுகை கதவை திறக்க, கௌதம் வரவும் சரியாக இருந்தது.

கௌதமை பார்த்தவுடன், “என்ன ண்ணா எப்படி இருக்கீங்க?” நறுமுகை வினவ, “நல்லாஇருக்கேன் ம்மா… நீ?” என்றவனின் பார்வை சகோதரர்களை அழுத்தமாய் கண்டு மீள, இரட்டை வேங்கைகளும் சொல்லி வைத்தாற் போன்று, தங்களது கரங்களை கட்டிக் கொண்டு தங்களின் கத்தி போன்று பளபளக்கும் பார்வையோடு, நண்பனை ஊடுருவி அவனின் ஆன்மாவை அசைத்தன.

நறுமுகையும் கிளம்ப, உள்ளே காலடி எடுத்து வைத்த கௌதம் அபிமன்யுவிற்கும், விக்ரமிற்கும் எதிரே அமர்ந்தவன் இருவரின் விழிகளையும் சந்திக்க, இருவருக்குள்ளும் திலோத்தமையின் சகோதரர்களாய் மின்சாரமாய் பாய்ந்து கொண்டிருந்த ஆத்திரமும், அதற்கு மேலாக நண்பனாய் இருந்தவனின் மேல் கொண்ட நம்பிக்கை உடைந்து போனதின் ஆதங்கமும், கோபமும் இணைந்து தன்னை பார்ப்பதை கௌதமால் உணர முடிந்தது.

தன் மேல் இருக்கும் தவறு அவனுக்கும் புரிந்தது. அவர்களின் நிலையில் இருந்து பார்த்தால் சகோதரர்களாய் அவர்களின் கோபம் நியாயமான உணர்வுகளே.

கோபப்படாது இருந்தால் தான் தவறே!

தன்னைத் தானே தயார்படுத்திக் கொண்டவன், “அபி! விக்ரம்! உங்களுக்கு கண்டிப்பா என் மேலகோப…” கௌதம் முடிப்பதற்குள் தனது இருக்கையில் இருந்து ஆவேசத்துடன் எழுந்த விக்ரம் ஆக்ரோஷத்தில், அங்கிருந்த பொருட்களின் இருதயங்கள் வெடித்துச் சிதற, சகோதரனின் கரத்தை சட்டென பிடித்தான் அபிமன்யு.

முகத்தில் எந்தவொரு உணர்வையும் காட்டாது அமரந்திருந்த அபிமன்யு சகோதரனின் ஆவேசம் புரிந்தவனாய், விக்ரமின் கரத்தை பற்றி சகோதரனை தனது தொடுகையாலேயே அமைதியையும் அழுத்தத்தையும் உணர்த்தியவனின் செய்கையில், தலையை அழுந்தக் கோதிய விக்ரம், இருக்கையில் அமர, அப்போதும் கௌதமின் வதனத்தில் எந்தவொரு சலனமும் இல்லை.

வெகு நிதானமும், அவனுக்கே உண்டான அழுத்தத்துடனும் அமர்ந்திருந்தான்.

பல மணித்துளிகளாக எதுவும் பேசாது அமைதியாக அமர்ந்திருந்த அபிமன்யு, கௌதமை பார்க்க, விக்ரம், “உன்னை நம்புனேன்டா…” என்று பல்லைக் கடிக்க, விக்ரமின் இரத்த நாளங்கள் எல்லாம் அனல் பறந்து அங்கிருந்த இருவரையும் உரசிச் சென்றதை அவர்களால் உணர முடிந்தது.

விக்ரமையே பார்த்த கௌதம், “தப்பு தான்டா… நான் திலோகிட்ட பேசியிருக்க கூடாது தான்… ஆனா என்னால முடியல விக்ரம்… ஒரு பக்கம் உங்கஇரண்டு பேரோட நம்பிக்கையை உடைக்கிற மாதிரி கில்டா இருந்தாலும், என் பிரண்டோடதங்கச்சி அவ அப்பிடிங்கிற உரிமை, என்னை நம்பி அவளை குடுப்பீங்கனு தான் லவ் பண்ணேன்…”

அபி! விக்ரம் கோபத்துல இருக்கான். அட்லீஸ்ட் உன்னால கூடவாடா என்னை புரிஞ்சுக்க முடியல… ஐ லவ் ஹெர்யூ போத் வில் நெவர் ரெக்ரட் யோர்டெஷிசன் ஆஃப் ட்ரஸ்டிங் மீ (I love her… You both will never regret your decision for trusting me)” என்று அமைதியாக தணிந்து பேசியவனின் குரலிலும், வார்த்தைகளிலும் இருந்த அர்த்தங்கள் விக்ரமை சிறிது சாந்தப்படுத்தினாலும் அவன் பேசாது அமர்ந்திருக்க, அப்போதும் அபிமன்யு தோரணை மாறாது அமர்ந்திருந்தான்.

இருவரும் அமர்ந்திருப்பதையே பார்த்திருந்த கௌதம், “இப்ப உங்க ப்ரண்ட்ஷிப்புக்காக திலோவை விடணுமா?” இருதயம் அதிர இருவரிடமும் இறுகிய குரலில் கேட்டவன்,

உங்களை தாண்டி அவளை கல்யாணம் பண்ற ஐடியா எனக்கும் இல்ல உங்க தங்கச்சிக்கும் இல்ல… அவளுக்கு வேணா பயமா இருக்கலாம்… ஆனா, எனக்கு நீங்க முக்கியம்… நம்ம பிரண்ட்ஷிப்” என்றவன் பேச்சு முடிந்தது போன்று எழுந்துகொள்ள, சட்டென எழுந்து கௌதமின் கரத்தை பற்றி நிறுத்திய விக்ரம், அபிமன்யுவைபார்த்தான்.

நிதானமாய் எழுந்த அபிமன்யு, “திலோவை உன் கார்ல இன்னைக்கு பாத்த செகன்ட் உன் சட்டையை பிடிக்கற அளவுக்கு இரண்டு பேருக்கும் கோபம் இருந்துச்சு கௌதம்…” என்று அவனருகேசென்றவன்,

உன்னோட லவ் எங்களுக்கு புரியலாம்ஆனா, என்னதான் நாங்க பிசினஸ் டைகூன்ஸா இருந்து, எங்க லைபை நாங்களே சூஸ் பண்ணாலும்திலோவோட கல்யாணம் நாங்க சம்மந்தப்பட்டது இல்லஎங்க சித்தப்பாவும் சித்தியும் சரின்னு சொல்லணும்முக்கியமா பில்லர் ஆஃப் அவர் பேமிலி தாத்தா ஓகே சொல்லணும்… நீ பர்ஸ்ட்உங்கப்பா கிட்ட பேசிட்டு, தாத்தாகிட்டையும், சித்தப்பாகிட்டையும் பேசு” என்றான் திடமான குரலில்.

விக்ரமின் மனதிலும் அதே ஓடிக் கொண்டிருக்க, சட்டென விக்ரமின் விழிகளில் கௌதமின் இழரோத்தில் இருந்த காயம் பட, அந்த விஷயத்தில் விட்டால் தனி புத்தகமே எழுதும் அளவிற்கு பி.எச்.டி முடித்தவனுக்குத் தெரியாதா அது என்னவென்று.

விக்ரம் கவனிப்பதை கௌதமும் பார்த்துவிட, இருவருக்கும் தர்ம சங்கடமான நிலை உருவாக, அது அபிமன்யு விழிகளில் கௌதம் உள்ளே வந்து அமர்ந்த விநாடியே பதிந்திருந்தது.

அபிமன்யுவின் பார்வையுமே தன்னை துளைப்பதை உணர்ந்த கௌதம் வேறு பக்கம் பார்த்து நிற்க, இனி தாமதிப்பதில் அர்த்தமில்லை என்பதை உணர்ந்த அபிமன்யுவின் பார்வையும் விக்ரமின் பார்வையும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள, அபிமன்யுவும் விக்ரமும், “நாளைக்கு பொண்ணு பாக்க வந்திடுங்க கௌதம்” என்று ஒரே போல கூற, நெற்றியை சொரிந்தான் அந்த அழகியின் வருங்கால கணவன்.

அ… பி…! வி… க்…!” என்று தடுமாறியவன், “ஸாரி” என்று கூறி ஒன்றாய் இருவரையும் அணைக்க, மூவருக்குமே புன்னகை மலர்ந்தது.

error: Content is protected !!