ஆதிரையன் -அத்தியாயம் 03

Screenshot_2021-07-27-16-11-56-1-b32f0d0e

ஆதிரையன் -அத்தியாயம் 03

மழை பெய்ந்து சற்றே தூறலாய் இருக்க அந்த அரிசி ஆலையின் பக்கவாட்டில் இருந்த திடலில் சில இளைஞர்கள் மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்தனார்.

“டேய் டேய்… ராம் அப்டித்தான் என்பக்கமா வா…” என கூச்சலிட்டப்படியே தன் பக்கமாய் நகர்த்திக்கொண்டு வரும் பந்தினையே குறிவைத்தப்படி ஓடிக்கொண்டிருந்தான் ஆதிரையன். அங்கிருந்த படைக்கு தலைவன் என அவன் கூச்சலும் கம்பீரமாகவே ஒலிக்க, அவன் உடற்கட்டமைப்பும் அவனை அப்படியே காட்டிக்கொடுக்க மடித்துக்கட்டிய லுங்கியோ அவன் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாது இருந்தான். அடி ஆறைத்தொட்ட உயரம், கேசம் அவன் சொல் கேளாது வியர்வையோடு மழையும் இணைந்துகொள்ள அவன் தலை ஆடும் ஆட்டத்திற்கு துளிகள் சிதறியவண்ணம்.

 

அவன் உடல் திடம் மதிப்பாயும், கம்பீரமாயும் இருக்க அவன் விளையாட்டை ரசிக்கவும் ஆசைக்கொள்ளும். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் விளையாடிக் கலைத்திட, இவன் அணியே எப்போதும் போல் வெற்றிப் பெற்றிருந்தது.

 

“தேங்க்ஸ்ண்ணே.” கலைப்பை மீறி நண்பர்கள் பட்டாலமாய் கூடி கழிந்த பொழுதை எண்ணி மகிழ்ந்தனர். எனவே, அனைவருமாய் அவனுக்கு நன்றி கூறினர். “எப்போதாவது தான் இப்படி விளையாட முடீதுண்ணா.”

 

“டேய் நான்தான் தேங்ஸ் சொல்லணும். நானும் ரொம்ப நாளைக்கப்றம் விளையாடுனேன். அடிக்கடி இப்டி விளையாடனும்டா. எதாவது ஏற்பாடு பண்ணுங்க. மைண்ட் ரிலாக்ஸாகுது. இல்லன்னா என்னால இதுக்காகவே நேரம் ஒதுக்க முடியாது. எல்லாருமா பேசி மகேஷ்ட்ட சொல்லுங்க பார்த்துக்கலாம்.”

 

“சரிடா… கோயில்ல இருந்து அப்படியே வந்தது நான் கிளம்புறேன்.’ என விடைப் பெற்றவன்,

‘மகேஷ் காலைல பார்க்கலாம்.” கூறிக்கொண்டு தன்னுடைய ஜீப் வண்டியில் கிளம்பினான்.

 

அன்றுதான் அறுவடை முடிய 

ஊர் பெரியவர்கள் கேட்டுக்கொள்ள கோயிலில் விஷேட புஜை ஏற்பாடு செய்திருந்தான்.அது முடிந்து வரவுமே இவர்கள் பிடித்துக்கொண்டனர்.

 

“டேய் மகி,அண்ணான்னா சூப்பர்டா. உனக்குன்னா செம சான்ஸ் தான், ஊருக்குள்ளயே இருக்க, வேலையும் சூப்பர், சம்பளமும் சூப்பர் அப்றம் பாஸ் செம. இப்டில்லாம் இருந்தா நல்லா நிம்மதியா சந்தோஷமா வேலைப் பார்க்கலாம்ல.”

அங்கிருந்த நண்பர்கள் கூட்டதில் ஒருவன் கூற,

“ஹ்ம்ம் ஆமாடா. முதல்ல காலேஜ் முடி, அண்ணாகிட்ட சொல்லி வேலைக்கு ஏற்பாடு பண்லாம், இங்க இல்லேன்னாலும் அண்ணாவே நல்லதா பார்த்து அமைச்சுக் கொடுப்பாங்க.”

அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டே அவ்விடம் விட்டு கலைந்தனர்.

 

ஆதிரையன் வயது முப்பதை தொட்டு கடந்து கொண்டிருக்க இன்னும் தனி மனிதனாகவே இருக்கிறான். வீட்டில் திருமணத்திற்கு கேட்க, அதற்கும் சரியென்றானில்லை. தந்தையின் செல்வாக்கை வைத்து பெண் தர பலரும் முன்னே வர இவன் பிடிகொடுக்கவில்லை. யாரோடும் காதலா கேட்டால் அதுவும் இல்லை என்கிறான், இருந்தும் மனதிலோ காதல்காரனை மிஞ்சி மனம் இதமாய் இருப்பதாய் உணருவான். விருப்பமா; பிடித்தமா; பற்றா; காதலா இன்னுமே கண்டறியவில்லை அவனுமே.

 

 ‘ஓர் காகிதம், அதில் தொடுக்கப்பட்ட வரிகள் என்ன செய்திட முடியும்?’

‘ அதனால் முடியாதது தான் என்ன? ‘

அதையும் அவனேக் கேட்டும் கொள்வான்.

 

கல்லூரி முடித்தது முதல் தனியார் கம்பனி ஒன்றில் ஐந்து வருடங்களாக வேலை செய்தவன், அவனுக்கென்று தன் தந்தையின் ஊரில் அவன் ரசனைக்கேட்ப இயற்கையோடு காதல் கொண்டவன் அதை ரசிக்க சேர்த்து வீடொன்று கட்டியவன் அவ்வப்போது வந்து செல்லவிருந்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் வற்புறுத்தலின் பெயரில் இதே ஊரில் அமைக்கப்பப்பட்ட அவர்களது அரிசி ஆலையை பொறுப்பெடுத்து நடத்துமாறு கேட்டுக்கொள்ள இவனும் சரியென்று கூறினான். அன்றிலிருந்து இங்கேயே தங்கிக்கொள்பவன், அவ்வப்போது அன்னை தந்தையை பார்க்க சென்று வந்தான்.

குளித்து உடைமாற்றி வந்தவன்,மேசையில் வரும் போது வாங்கி வந்த உணவுப் பொட்டலம் இருக்க அதைப் பிரித்து உண்டுக்கொண்டே அன்னைக்கு அழைத்தான்.

“ம்மா, ரெண்டு மிஸ்கால் இருந்தது. நா இப்போதான் வீட்டுக்கு வந்து சாபிட்றேன். எதுக்கு கூப்ட?”

“மணி ஆறாகுது இப்போதான் மதியதுக்கு சாப்பிடறியா?”

“கோயில்ல இருந்து வார்ரப்ப பசங்க பிடிச்சுகிட்டாங்கம்மா, இப்போதான் வரேன். “

“ஆதி, சின்ன பையனா நீ, விளையாடிட்டு இருக்க. தனியா அங்க இருந்துட்டு கஷ்டம்டா. அம்மா வரவான்னா அதுவும் வேணாம்னு சொல்ற, கல்யாணம் பண்ணிக்கோன்னா சிரிச்சே மலுப்புற.”

“சரி சரி. திட்ட தான் கால் பண்ணியா?”

“இப்போ நா உன்ன திட்றனா?”

“பின்ன இல்லையா?”

“டேய் அப்பா கூட என்னடா சண்ட?”

“யாரு நானா? “

“பின்ன நானா? “

“சண்டைல்லாம் இல்லை. எனக்கு பிடிக்காததை செய்ய சொன்னாரு என்னால முடியாதுனு சொல்லிட்டேன். அவ்ளோதான்.”

“அப்பா தானே சொல்ராங்க, அவங்க சொல்ராங்கன்னா சரியாத்தானே இருக்கும், இவ்ளோ பெரிய பதவில இருந்துட்டு மக்களுக்காக எவ்ளோ பன்றாங்க,நாம வாழ்ந்த ஊரு அங்க ஒரு கெடுதல் பண்ணுவாங்களா?”

“என்னம்மா எப்பவும் போல அப்பாவோட பேச்சுல மயங்கிட்ட போல, இன்னும் தெளியவே இல்ல, இன்னும் அதே மிதப்புலதான் பேசிட்டு இருக்க.”

“ஆதி… “

“ம்மா, என்னால முடியாது அதோட எப்போவும் அப்பாவை இத பண்ணவும் விட மாட்டேன். நா அப்பாகிட்ட பேசிக்குறேன் நீங்க இதுல தலையிட்டு சும்மா டென்ஷன் ஆக வேணாம்.”

“என்னவோ பண்ணு. இந்த வாரம் வரேன்னு வரல, அடுத்த வாரம் ஐயா ஊருக்கு வரீங்களா என்ன?”

“வரேன் ம்மா கண்டிப்பா. வச்சுர்றேன்.”

“சரிடா உடம்பு பார்த்துக்கோ, நேரத்துக்கு சாப்பிடு “கூறி அழைப்பை துண்டித்தார்.

ஆதிரையனுடைய அரிசி ஆலை ‘AA Mill’ எனும் பெரிய பெயர்ப்பலகைத்தாங்கி பிரமாண்டமாய் அமைக்கப்பட்டிருந்தது. இவனது வீட்டின் பக்கவாட்டுப்பகுதி ஆலையின் முகப்பை பார்க்கக் கூடியதாய் அமைந்திருந்தது. அந்த ‘ஆதிரியன் அழகன் ஆலை’.

அதற்கு நேரெதிரே தென்னந்தோட்டம். அங்கும் பல தொழிலாளர்கள் வேளையில் ஈடுப்பட்டிருக்க அங்கிருந்தும் கனிசமான வருமானம். இருந்தும் கொஞ்ச நாட்களாகவே தந்தை அவ்விடத்தில் தங்களுடைய மினரல் வாட்டர் தொழிட்சாலையின் விரிவாக கிளை ஒன்றை ஆரம்பிக்க போவதாகக் கூற, இவனோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறான்.

 

“அந்த இடத்துல கட்டிடம் எழுப்பணும்டா. உன்னால முடியாதுனா சொல்லு நான் வேற ஆளுங்க வச்சு பார்த்துக்கிறேன.” என்று கடைசியாய் அழகன் இவனோடு பேசும்போது கூறியிருக்க,

“என்னை மீறி இங்க ஒன்னும் பண்ண முடியாதுப்பா.அதோட நிலத்தை எப்போவும் வீட்டுக்கொடுக்கவும் முடியாது.”

“டேய் அந்த நிலம் விட்டுப்போய்டக் கூடாதுன்னுதான் அந்த இடத்துல பேக்டரி கட்டலாம்னு சொல்றேன்.”

“ப்பா நம்மளோட நிலம், அதோட எப்படியும் எனக்குத்தானே கொடுப்பீங்க அதை இப்படியே குடுத்துடுங்க.”

” ஆதி, அப்பா எதாவது சொல்றேன்னா அதுல அர்த்தம் இருக்கும்.”

“மன்னிச்சிருங்கப்பா. என்னாலன்னா அந்த இடத்தை நாசம் பண்ண பிடிக்கல.”

 

அன்றைய அழைப்புக்கு பின் தந்தையின் அழைப்புகளை தவிர்த்தான் ஆதிரையன். அதன் பொருட்டே இன்று அன்னை இதுப்பற்றி பேசக்காரணம்.

அரிசி ஆலையின் பொறுப்பை விருப்பமில்லாது ஏற்றுக்கொண்டாலும், இப்போது முழு ஈடுபாடுடன் நடத்தி வருகிறான். அரிசி மட்டுமன்றி அவ்வூரில் விளையும் பொருட்களை மொத்தமாய் கொள்வனவு செய்து மக்களுக்கு கனிசமான வருமானத்தை, லாபத்தை தனக்கும் நட்டம் ஏற்படதவாறு செய்து வருகிறான். இதனால் மக்களோடு நெருங்கிய உறவோடும் நட்போடும் இருந்து வருகின்றான்.

***

“மிஸ்டர்.ஆனந்தன் மினரல் பேக்டரியோட அப்ரூவல் எனக்கு முன்ன இருந்த கலெக்டர் தான் சைன் பண்ணாங்களா?”

“இல்லம்மா, அது ரொம்ப வருஷம் முன்னவே பண்ணிட்டாங்கலாம். அவங்களுக்கு நேரம் ஏதோ சரில்லை, அப்டின்னு அப்போ மினிஸ்டர் தள்ளிப் போட்டுட்டாங்கன்னுதான் இப்போ ஆரம்பிக்கப் போறதா சொல்ராங்க.”

“அதுக்காகத்தான் ஆரம்பிக்குறப்ப திரும்ப சிக்கல் வரக்கூடாதுன்னு உங்ககிட்ட அனுப்பிருக்காங்க.”

“ஹ்ம்ம் முதல்ல நான் போய் அந்த இடத்தை ஒரு தடவை பார்க்கணும், அப்றம் அப்ரூவ் பண்றதா சொல்லுங்க. ரொம்ப வருஷம் முன்ன பண்ணது இல்லையா? மினிஸ்டர் மூலமா தானே நமக்கு நேரடியா அப்ரூவ் கேட்டு வந்திருக்கு? சோ மெயில் இப்போவே லேட் பண்ணாம அனுப்பிடுங்க.”

“இல்லம்மா அந்த இடத்துல சிக்கல் எதுவும் இருக்காது…”

“அப்டி சொல்ல முடியாது அனந்தன். பத்து வருஷம் முன்ன அப்ரூவ் பண்ண இடம் இப்போ எப்படி இருக்கோ. பார்க்காம ஒன்னும் சொல்ல முடியாது.”

ஆனந்தனுக்கு அதிதியின் மனதில் வேரேதோ எண்ணம் இருப்பதை உணர முடிந்தது. எத்தனை பேரோடு வேலை செய்திருப்பார். சற்றே அனுபவம் மிக்கவர் அதோடு நேர்மையான மனிதரும் கூட.

“ம்மா பெரிய இடம்,நாம பகச்சுக்க வேணாமே. “

“ஆனந்தன் நா ஒன்னுமே பண்ணலையே.”

சிரித்துக்கொண்டே தன் இருக்கை விட்டு எழுந்தவள், “இன்னிக்கு புதன் கிழமைல, நாளைக்கு நாளன்னைக்கு நாம கொஞ்சம் பிஸில்ல சனிக்கிழமை போய் பார்க்கலாம்.”

‘ ஏது நாம பிஸியா?’ ஆனந்தன் தன்னிடமே கேட்டுக்கொள்ள,

 

“வண்டி ரெடின்னா நான் கிளம்பட்டுமா? “

“சரிம்மா.” என யோசனையோடு தலையாட்டிக்கொண்டே அதிதியின் பின்னோடு சென்றார்.

இவளது அலுவலகத்தின் மின்னஞ்சல் கிடைக்க அது அமைச்சர் அழகனின் காதுக்கு சென்றடையவுமே கொதி நிலைக்கு போய்விட்டார்.

“அங்க அவன் இதுக்கு தடை போட்டுட்டே இருக்கான். இப்போ இதென்ன கலெக்டருக்கு, சைன போட்டமா அனுப்புனமானு இல்லாம, இது தெரிஞ்சா இவனும் அவ கூட சேந்துக்குவானே.”

“ஐயா,அதோட அவங்களுக்கு நேரம் இல்லையாம். சனிக்கிழமை தான் போய் பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லிருக்காங்க. “

“இது வேறயா?”

“யாருடா புதுசா நம்மளுக்கு தெரிஞ்சவங்களா? விசாரிச்சு பாரு?”

“சின்ன பொண்ணு சார். நல்லா படிச்சு இந்த வேலைக்கு வந்திருக்கும் போல.

“படிக்காம எப்பிடிடா அவ்ளோ பெரிய பதவி கொடுப்பாங்க.?”

“இல்ல சார். சின்ன பொண்ணுனதுக்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆஃபீஸ்ர்னு சொல்லிக்கிறாங்க. “

“ஓ நீ அத சொல்றீயோ? டேய் தப்பு பண்றதுன்னாதான் பயப்படணும், இல்ல ஏதாச்சும் நீட்ட வேண்டி வரும், நான் என் நிலத்துல கட்டப்போறேன், அதோட அதுனால எந்தப் பாதிப்பும் வரப்போறது இல்லை. அதுக்கான எல்லாமே சரியா பண்ணித்தானே வச்சிருக்கேன்.

சரி இவ்ளோ நாளைக்கு பொறுத்தாச்சு. இன்னும் ஐந்து நாள். விடு பார்த்துக்கலாம்.”

வீட்டுக்கு வந்து சேர்ந்த அதிதி தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு, அவள் சேகரித்த தங்கவல்கள் அடங்கிய நகல்கள் கொண்ட பைலை எடுத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்தவள் எப்போதும் சிறு துரும்பும் பிழையாகிட கூடாது என்பதற்காகவே அதனை எத்தனை தடவை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் நிதானமாய் கூர்ந்து தான் பார்ப்பாள்.

‘அமைச்சரே எனக்கு ஊர் வேலையை நிதானமா, நிம்மதியா செய்யவிட மாடீங்க போலயே. இவ்ளோ அவசரமா என்கிட்ட வரீங்கன்னா யாருக்கு நல்லது நடக்கப்போகுது?’

கன்னத்தில் பேனாவை ஊன்றியப் படி இதழில் சிறு நகை, ‘ஹ்ம்ம், நீங்களே என்னை பார்க்கணும்னா நான் ஒன்னும் பண்ண முடியாதே. பார்த்து எப்படியும் பதினைந்து வருஷத்துக்கு மேல இருக்குமா?’

அவள் நினைவுகள் எப்போதும் போல பின்னோக்கி செல்லப் போக இன்று அதற்கு தடை விதித்தாள். ‘இனி அது பற்றி வேணாம், இனிமேல் எனக்கானதை நா எடுத்துக்க போறேன். தடையா அது யாரா இருந்தாலும்? என்னால முடியுமான வரை எதிர்க்கத்தான் போறேன்.’

அந்த வார இறுதில் அதிதி சொன்னது போலவே அவளது அலுவலக வண்டியில் ஆனந்தனோடு செல்ல ராம் அவரது வண்டியிலும் வர சேர்ந்து சென்றனர்.

அவ்விடம் வண்டி விட்டிறங்கிய மூவரும் அவ்விடத்தை சற்று நேரம் பார்வையிட, ஆனந்தன் ஏற்கனவே இவ்வூர் காரர் என்பதால் அவ்விடம் வேலையில் இருப்பவர்கள் அவனிடம் என்னவென்று விசாரிக்க இவரும் என்னவென்று சொல்லலானார்.

“ஓ! அது தம்பி இங்க அப்படியெல்லாம் பண்ண விடமாட்டாரும்மா. எத்தன உசுரு இதெல்லாம் கொன்னுட்டு உசுரில்லாத கட்டடம் கட்டித்தான் நாம வேல பார்க்கணுமோ? இப்போவே பார்த்துட்டுதானே இருக்கோம். அம்மா நீங்க சைன் பண்ணிக் கொடுக்காதீங்க.”

அங்கிருந்த வேலை செய்துக்கொண்டிருந்த வேலையாள் ஒருவர் கூற சிரித்துக்கொண்டே அதிதி அவள் கைகளில் இருந்த தரவுகள் கொண்டு அவ்விடம் ஆராய்ந்துகொண்டிருந்தாள்.

“உங்க ஐயா இல்லையா?”

ஆனந்தன் கேட்க,

“ஐயா ஊருக்கு காலைல தான் போனாங்க. மகேஷ் தம்பி இருக்கு.”

“சரி,அவரை வரச்சொல்ல்லுங்க.”

மகேஷை ஆலைக்கு சென்று அழைத்து வர, அவ்விடம் வந்தவன் ஆதிரையனுக்கு அழைத்து விடையம் கூற, அழைப்பை துண்டிக்காது அவர்கள் பேசுவதை கேட்க வேண்டும் என அவனும் கூற, சரியென கூறிக்கொண்டே அவ்விடம் வந்தான்.

“இந்த இடத்தோட பத்திரம் வேணும் மிஸ்டர். மகேஷ்.”

அப்படி ஒரு காலெக்டரை எதிர் பார்க்கவில்லையே அவனும். சிறிது நேரம் அவளை பார்த்திருந்தவன்,

“அது சார்கிட்டத்தான் இருக்கும்.”

“இந்த இடத்துல எப்போல இருந்து வருமானம் வருது?”

மேடம் நான் வந்து ஒரு வருஷம் தான் ஆகுது. எப்படியும் ஒரு பத்து வருஷத்துக்கு மேல வருமானம் வருதுன்னு நினைக்குறேன். “

“அப்படின்னா இன்னும் பல வருஷங்களுக்கு இந்த மரங்கள் வருமானம் தரக்கூடியது.”

“ஆமாம்மா. இன்னும் ரொம்ப நாளைக்கு, அதோட இந்த மரங்கள் எல்லாமே நல்ல வகையானதாத்தான் ஐயா நட்டாங்க.”

“யாருங்க உங்க ஐயாவா?”

மகேஷின் அலைபேசி வழியே கேட்டிருந்த ஆதிரையனுக்கு அந்த கேள்வியில் ‘கொஞ்சம் கிண்டல் கலந்திருந்ததோ?’ நினைக்கத்தூண்டியது.

“அப்டிதானுங்க சொல்லிக்கிறாங்க. “

“ஓஹ்…நீங்க எவ்வளவு நாள் இங்க வேலை பார்க்குறீங்க?”

“ஒரு அஞ்சு வருஷம் இருக்கும்மா.”

“இங்க எத்தனைப் பேரு வேலை பார்க்குறாங்க மிஸ்டர்.மகேஷ்? “தோட்டத்துல 50பேர் இருக்காங்க, இன்னும் 25பேர் பேக்டரில வேல பார்க்குறாங்க. “

அந்த தோப்பின் எல்லையில் தேங்காய் பதனிடல் வேலையும் சிறிதாய் ஆரம்பித்திருந்தான் ஆதிரையன்.

“இதுவும் அமைச்சர் ஆரம்பிச்சதா? “

“இல்லங்க. சார் தான் இப்போ ஆறு மாதமாக பண்ணிட்டு இருக்கார்.

“தங்கமான புள்ளமா…”

“ஹ்ம்…”அந்த வயதான மனிதரை பார்த்து புன்னகைத்தாள்.

இவர்களின் உரையாடல் கேட்டவண்ணம் ஆதிரையன் வண்டி ஒட்டிக்கொண்டிருக்க, இன்னுமொரு பக்கம் ராமின் அலைபேசி வழியாக அமைச்சர் அழகனும் கேட்டுக்கொண்டிருந்தார்.

“சரி ஆனந்தன் கிளம்பலாம்.’

‘என்ன ராம் சார் உங்க வேலை முடிஞ்சதா கிளம்பலாமா?”

அவரோ திகைத்து விழிக்க,

“இல்லை இந்த தோப்பையே வாங்கப்போறதா சுத்தி பார்த்துட்டு இருந்தீங்க அதை கேட்டேன். “

“அப்டில்லாம் ஒன்னுமில்லம்மா, சும்மாதான்.”

மகேஷ் இவர்கள் வண்டி அருகே வரவும், பின் கதவைத் திறந்துக்கொண்டே அவனைப் பார்த்தவள்,

“சின்னதுல நான் இருந்த எங்க தெருவுல ஒரு பையன் மகேஷ்னு, நான் நாலாவது படிக்கிறப்ப எங்க அம்மாக்கூட சண்டை பிடிச்சிட்டே என்னை அவன்தான் கைபிடிச்சு பள்ளிக்கூடம் கூட்டி போவேன்னு அடம் பண்ணுவான். அவன்தான் நீங்களோன்னு நினச்சுட்டேன்.”

கூறியவள் வண்டியில் அமர, திகைத்து அவளை பார்திருந்தான் மகேஷ்.

வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தது அவன் மாமா என்பதால் சற்று மெதுவாகவே பேசினாள்.

 

“ஓகே மகேஷ், உங்க சார் வந்தா கண்டிப்பா இன்னொரு நாள் மீட் பண்ணலாம்.” இன்முகமாகவே விடைப்பெற்றாள்.

 

‘சீக்கிரமாகவே மீண்டும் சந்திப்போம்.’ எனும் செய்தி அதில் இருந்ததோ?

 

ஆதிரையனை சந்திக்கும் நாள் எப்படி இருக்கும் பார்க்கலாம்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!