ஆதிரையன் -(final)அத்தியாயம்20

1653401117018-5ec1daec

ஆதிரையன் -(final)அத்தியாயம்20

Final epi

முடிவோடு தொடரும் கவிதையாய் அவர்கள் காதல்…

கடக்கும் அவர்களுக்கான துளிப் பொழுதையெல்லாம இனிதாய் இருவரும் ரசிக்க, தமிழாய்க் கொண்டு அனுபவித்து வாழ்ந்தனர்.

அதிதிக்காக அவர்கள் திருமணத்தின் போது வாங்கிய வீடு அதிதியின் விருப்பப்படி அவர்கள் சிறு வயதில் இருந்தது போல மாற்றியமைத்து கேட்டிருந்தாள். வீட்டின் நடுவே திறந்த வெளியாக மழையும் வெயிலும் வீட்டுக்குள் இருக்குமாறும் இரவில் நிலவும் அங்கேயே தங்குமாறும் இருந்தது.

வீட்டின் பின் பக்கம் கிணற்றடியும் குளிக்க ஏதுவாய் அமைக்கப்பட்டு ஒரு பக்கம் மலர்கள், மறக்கறிகள் என ரேவதி பாத்திகள் அமைத்து பராமரித்து வந்தார். பெரும்பாலும் இங்கேயே இருந்துக் கொள்வார்கள் மூவரும்.

 இன்று சனிக்கிழமை. அதிதிக்கு விடுமுறை நாளாக இருந்தது. அதிதியோடு எப்போதும் வீட்டில் இருப்பவன் இன்று ஆலைக்கு சென்றிருக்க,சமையல்  செய்துக்கொண்டே ஆதிரையனுக்கு அழைத்தாள்.

“கவிஞரே…

“கூறுங்கள் என் ரசிகையே…”

“ஏனோ இன்னும் வரவில்லை?

உண்ண மொத்தம் காத்திருக்க அருகாமை இங்கே ஏங்கிருக்க வரவில் ஏனோ இத்தனை தாமதம்…”

“என் தீயே… தீரா தேன் சுவையே…”

“வார்த்தையில் மட்டும் குறைவேதுமில்லை கவிக்கு.”

“அதி,கொஞ்சம் வேலை ஜாஸ்தி ஆகிடுச்சு ப்பா…”

“இருக்க இருக்க வேலை இருக்கச் சொல்லிக்கொண்டுதான் இருக்கும் கவியே… இருக்கும் நேரம் எனக்காயும் கொடுக்கலாம்… “

“தீ… மகி வந்ததும் வரேன் டா.”

“கவிஞரே. சாப்பிட்டு போகலாமே.”

“வரேன் சொல்லிட்டு போனவனை இன்னும் காணோம்டி. வந்ததும் வரேன்.”

“எனக்கொன்றும் இல்லை. நீங்க எப்ப வேணா வரலாம்.உங்க கூட சாப்பிடணும்னு அடம் பண்ணிட்டு இருக்கா உங்க பொண்ணு.நான் ஒன்னும் எனக்காக சொல்லல…”

“ஓஹ்! சரிதான். வந்தேன்னா அம்மாவும் பொண்ணும் இங்க திரும்ப வர விடுவீங்களா? அதான் வேலையை முடிச்சிட்டே வரலாம்னு இருக்கேன். மகி இப்போ வந்துருவான். வந்ததும் வரேன் டா.என் செல்லம்மால்ல.”

 “இல்லையே…”

“ம்மா நானும் பேசணும்.போன் குடு. “

சமையலறை வாயிலில் அலைபேசியை தருமாறு கால் பெருவிரலில் நின்றுக்கொண்டு கை நீட்டிக் கேட்டாள் அவர்களின் இரண்டு வயது நிரம்பி ஆறுமாதங்கள் கடந்திருந்த அவர்களின் கவிதைக்கு உயிர் கொடுத்த ஆதினி.

“கவிஞரே…”

“சொல்லுங்க என் செல்லப்பொண்ணே…”

” ப்பா, நான் பப்பு பேசுறேன் ப்பா.”

“ஓஹ்! என் பப்பு வா… என் பப்பு இன்னும் சாப்பிடலையா?”

“ஹ்ம் ஹ்ம்.பப்பு மம் மம் சாப்பிட அப்பா வேணும் ப்பா…”

“சமத்தா என் பப்பு அம்மாகிட்ட சாப்பிடுவீங்களாம். இதோ அப்பா கிளம்பிட்டே இருக்கேனாம்…”

“அம்மா வேணாம் ப்பா.”

“ஏன்டா அம்மா வேணாம். அம்மா என்ன பண்றாங்க?”

“அம்மா கிட்சேன்ல ஸ்வெட்டி என் டர்ட்டிப்பா. நான் பாட்டிகிட்டப் போறேன்…”

அலைபேசியில் அளவழாவிக்கொண்டே பாட்டியிடம் ஓடினாள் அவர்களின் சில்வண்டு. ஓடும் வேகத்திற்கு ஏற்பட கால் சலங்கை வீடு முழுதும் எதிரொலிக்க அவன் காதினில் இசையாய் இனித்தது.

“பாட்டி தூக்கு.”

“வாடா செல்லம்.” ரேவதி அவளை தூக்கிக் கொண்டார்.

சமையலறையில் இருந்துக்கொண்டே அதிதி,

“ரொம்ப ஓவரா பண்ற பப்பு. இங்கமட்டும் வர மாட்ட, ஆனா சாப்பிட மட்டும் அம்மா சமையல் வேணும்ல.ஏதாவது கேட்டு வா இருக்கு.”

“ப்பா, அம்மா திட்றா.நான் பாட்டிக்கூட இருக்கேன் ப்பா. அப்பா வந்து ஊட்டுப்பா…”

“அதி சமையல் பண்ணிட்டிருக்காடா. இவதான் கிட்சன்குள்ள போக மாட்டாளே.”

அலைபேசி ஸ்பீக்கர் மோடிலிருக்க அதன் வழியே கூறினார் ரேவதி.

“சரிம்மா இதோ வந்துர்றேன்.” அன்னையிடம் கூறியவன்,

“அய்யோ பப்பு… அப்போ அம்மா எனக்கும் வேணாம். நீங்க போய் பாட்டிக்கூட இருப்பீங்களாம். அப்பா இதோ வந்துட்டே இருக்கேனாம். வந்து ரெண்டு பேரும் சாப்பிடுவோம் ஓகேவா?”

“ஓகேப்பா… “

மகேஷ் வந்துவிட அவனிடம் கூறிவிட்டு அலைபேசியில் பேசிக்கொண்டே பாதி தூரம் வந்திருந்தான் ஆதிரையன்.

“இம்ச,வர்றதுக்கு முன்ன குளிச்சிரனும்.”

கணவனை மனதில் எண்ணிக்கொண்டே உணவை மேசையில் எடுத்துவைத்தவள் சமையலறையை சுத்தம் செய்ய, சத்தம் எழுப்பாது வீட்டின் உள்ளே வந்திருந்தான் ஆதிரையன்.

உயர்த்தி கொண்டையிட்டு இடையில் தூக்கிச் சொருகிய நைட்டியோடு சமையலறை கொடுத்த வெப்பதில் காதோடு வழிந்து கழுத்து மொத்தம் மின்ன வியர்த்திருக்க அவளையே பார்த்திருந்தான்.

ஏதோ உந்துதலில் இவள் திரும்பிப் பார்க்க,

“ஹேய் வந்துடீங்களா? அப்போ போன்ல பொய்தானே…”

“ஹேய் கத்தாதடி.’அவள் வாயை அவசரமாக தன் கையால் மூடியவன்,

‘பப்பு, ‘அம்மா டர்ட்டினு’ சொல்றப்பவே நாம கிளம்பிட்டோம்ல.”

 “கவிஞரே…”

“தீ…”

“ஹ்ம்…”

“தீன்னா சுடுமா என்ன?இப்டி ஹாட் அன்ட் ஸ்பைசியா இருக்கியே…”

“கவிஞரே… என்ன இது. டர்ட்டி அம்மா வேண்டாம் சொல்லிட்டு இப்போ என்னவாம்? “

“என் தீக்கு தெரியாதாமா கவிஞருக்கு டர்ட்டி அம்மாவதான் ரொம்ப இஷ்டம்னு.”

அவள் கழுத்தோடு மூச்சை மொத்தமாய் உள்ளிழுத்து அவள் தேகம் கொண்ட வெப்பம் மொத்தம் அவன் உடல் வேண்டி ஏற்றுக்கொண்டது.

“இம்ச பண்ணாம போறீங்களா. ரொம்ப நேரம் தேடிட்டு இருக்கா உங்களை. உங்கபப்பூ…”

“அப்போ நீ தேடலையா? “

“தேடாமதான் ஒன்னா சமைக்கலாம்னு காலையிலேயே கேட்டனா? “

“சாரிடி. டின்னெர் வேணும்னா ஒன்னா பண்ணலாமா? “

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.முதல்ல பப்புக்கு சாப்பிட குடுங்க. நான் குளிச்சிட்டு வரேன்.”

அவள் இடை வளைத்து தன்னோடு சேர்த்துக்கொண்டவன்,உளர்ந்த இதழ் நனைத்து அவள் களைப்புக்கு தாகம் தீர்த்து அவளை விட்டு விலகினான்.

“இம்ச இம்ச…” அவனை சமயலறை விட்டு வெளியே தள்ளிக்கொண்டு வர,

“ப்பா.” என அவர்களிடம் ஓடி வந்தாள் ஆதினி.

“உங்கப்பா இப்போ கிட்சேன்ல தான் இருந்தாங்க. அப்போ அவங்க டர்ட்டி இல்லையா? “

“அப்பா ஸ்மெல் சூப்பர் ம்மா. அவன் கன்னம் முத்தமிட்டுக்கொண்டே அவன் செல்ல வண்டு கூற,

“ஓஹ்! பார்ப்போம் உங்க அப்பா ஸ்மெல்.”

ஆதிரையன் தோள் சுற்றி கையிட்டு அவள் உயரத்துக்கு இழுத்து அவள் வியர்வை நனைத்த கன்னத்தை அவன் கன்னத்தில் வைத்து தேய்த்தவள்,

“இப்போ அப்பாவும் டர்ட்டி தான் போ.”

என சின்னவளை வம்பிழுத்து கணவனையும் அதில் சீண்டி விட்டுச் சென்றாள். அவள் பின்னோடு இவனும் சென்று

“அடியே தீ… தீண்டித் தீண்டி தீயை மூட்டுகிறாயே…” பாட,

“ஆதி, என்ன இது. பப்பு வச்சுக்கிட்டு…”

“அதி, இந்த பாட்டு தான் வருது நானும் என்ன தான் பண்ணட்டும். நீயே சொல்லு.”

“ஹ்ம் போய் பப்புக்கு சாப்பிட கொடுங்க. எனக்கும் செம பசி வந்ததும் ஊட்டிவிடுங்க.”

“அதெல்லாம் கரெக்டா பண்ணுவேன். அப்றமா எனக்கும்… “

“அச்சோ கவிஞரே…”அதிதி  குளியலறைக்குள் இருந்து கத்த,

“பப்பு அம்மா குளிர்ல கத்துறா. வா நாம போய்டலாம்.” கூறிக்கொண்டே மகளை அழைத்துச் சென்று உணவூட்டினான்.

அதிதி வரவும் அன்னையோடு சேர்ந்து மூவருமாக உணவு உண்டனர். அதன் பின் அதிதிக்கு யாருடனோ அலுவலகத்தில் சந்திப்பொன்று இருக்க கிளம்பிச்சென்றாள்.அங்கு சென்று வர மாலை ஆகியிருந்தது. ரேவதி தேநீர் தயாரித்து எடுத்து வர, மூவரும் பேசிக்கொண்டே அருந்தினர்.

“நாளைக்கு தீபா,சுமன் அண்ணா, பாப்பாவும் காலையிலேயே வர்ராங்க அத்த. வந்ததும் அப்படியே வெளில எங்கேயாவது போகலாம்னு சொல்ராங்க.”

“நல்லது தானே அதி. வீட்லேயே இருக்க பசங்களுக்கும் கஷ்டம். உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் போய்ட்டு வாங்களேன்.”

“போய்ட்டு வாங்களேன் இல்லத்த. நீங்களும் தான் போலாம்.”

“என்னை கூப்பிட வேண்டாம் அதி. நான் இருக்கேனே.முன்ன போல முடில.நீங்க போய்ட்டு வாங்க.”

ஆதிரையனும் அழைக்க மறுத்து விட்டார் ரேவதி. பின் சிறிது நேரம் இருந்துவிட்டு உலர்ந்த துணிகளை எடுக்கப்போவதாக ரேவதி எழுந்து சென்றார்.

“அவங்களுக்கு இஷ்டமில்லன்னா இருக்கட்டும் அதி.”

“தனியா இருக்கணுமே கவிஞரே? “

“அதெல்லாம் இருந்துப்பாங்க.”

“என்ன இருந்துப்பாங்க, பொறுப்பே இல்லாம பேசுறீங்க.”

“சரிடி. அப்போ நான் போய்ட்டு வரேன். நீ இருந்து அவங்களை பார்த்துக்கோ. சரிதானே? “

அவன் தேநீரை கோப்பையை எடுத்துக்கொண்டு அவர்கள் அறையின் ஜன்னல் அருகே போட்டிருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டான்.

தந்தையோடு விளையாடிய களைப்பில் மணி ஆறு ஆகியும் நல்ல உறக்கத்தில் இருந்தாள் சின்னவள்.

“அதெல்லாம் முடியாது. நீங்க இருந்து அம்மாவை பார்த்துக்கோங்க. நான் போயிட்டு வறேன்.”

அவன் பின்னால் வந்தவள், அவன் மடிமீதே வாகாய் அமர்ந்துக்கொண்டு கூறினாள்.

“அவங்களுக்கு விருப்பம் இல்லன்னா கம்பல் பண்ண வேணாம் அதி. அவங்க இருக்கட்டும். நாம் லேட் நைட் ஆனாலும் வீட்டுக்கே வந்துரலாம். தங்க வேணாம்.”

“ஹ்ம் சரிங்க. “

“கொஞ்சம் சிரிச்சிட்டே சொல்லலாமே… “

“ஓஹ் சொல்லலாமே…”

கூறிக்கொண்டே அவன் நெஞ்சோடு சாய்ந்துக்கொள்ள அவளை வயிற்றோடு கையிட்டு அணைத்துக்கொண்டான்.

“என்ன கவிஞரே…இப்போவே நிலா வந்திருக்கு? இன்னும் இருட்டக் கூட இல்லையே.”

ஜன்னல் வழியே கீற்றாய் தெரிந்த நிலவை பார்த்துக்கொண்டே அதிதி கேட்க,

“அதுவா… சூரியன் காலைல வர லேட் ஆகுமாம். அதான் இப்போவே சந்திச்சு பேசிக்கிறாங்க. “

“என்ன பேசிப்பாங்க கவிஞரே? “

“அதுவா,

பகலெல்லாம்…

என்னைக் கிரணங்களின்

மூலம் தளுவித் தளுவி

வெம்மை எனும் காதல் ஊட்டி…

 

இரவெல்லாம்

கடலுக்குள் மூழ்கி

எனை ஏங்க வைக்கும்

சூரியனே…!

 

இந்த மாலையில் மட்டும்

சில நொடிகள்…

எனைச் சந்தித்து 

காதல் சிந்த…

 

நீயும்

போகும் முன்னே

நானும்

தேடி வந்தேன்…

 

யாரும்

பார்க்கும் முன்னே

உனையே

ஒளியேற்றிக்கொள்வேன்…

 

தகிக்கும்

வெம்மை உனதே…

 

தனிக்க

தவிக்கும் குளிருக்கு

எனை ஏற்று

இதமாக்கிடு…

 

இருள் சூலும்

இரவிலும்

தனியே

வளம் வர நானும்…

 

துணைக்கு 

உன் ஒளியே

வேண்டுமென்பேன்…

 

நாளை

விடுமுறையாம்

 

செல்லமாய்

கொஞ்சம் காதல் கொள்ள

அவர்களும் 

 

காவலாய் நானும் 

நாளிகை

கூட்டிடச் செய்வேன்…

 

புலர்ந்தும்

புலரா காலை 

அதில்

 மேகத்தை

போர்த்தி நீயும் 

சோம்பல் கொள்வாய்…

 

போய்வா…

என் ஒளிரவனே… 

 

பனிப்பூவும்

கொஞ்சம் மலரோடு

இருந்து போகட்டும்…

 

அங்கே தூரமாய்

அவர்களும்

எமையே பார்த்தப்படி…”

 “ஹேய் நாம பார்க்குறோம்னு வேற  சொல்லிக்குமா? பொய்யும் சேர்க்க கவி அழகுதான். அதற்காக  பொய்யே கவிதையாய்… இதுவெல்லாம் ஞாயாமா கவிஞரே?

“காதலில் எல்லாம் செல்லும் என் தீரா தேன் சுவையே…”

“சரி… அதென்ன, சூரியன் ஒன்னுமே பேசல. நிலா பேசட்டும்னு சூரியன் கேட்டுக்கொண்டு மட்டுமே இருக்கிறது?”

“அதுவா… தீ, எப்போ நான் பேசினேன்? நீ பேச, நான் தானே கேட்பேன்.அங்கேயும் அதேதான் போல.”

அவள் எதுவோ கூறவர, தன் பக்கம் அவளை திருப்பியவன் அவள் இதழை கவியாக்கினான்.

கவிதையாய் மொத்தம் அவனும் கூறி முடிக்க கொடியாய் அவனோடு படர்ந்தவள் அவனுள் ஒட்டுண்ணியாய் ஒட்டிக்கொண்டாள்.

மொத்தமும் முழுதாய் சுமந்த உணர்வுகளுக்கு முதன்மை சொல்லும் வரிகளைக் கொண்ட இனிய கவிதையாய் அவர்கள் வாழ்வும் தொடர்ந்து பயணித்தது…

ஆதவனாய் ஆதிரையனும் அவன் ஒளியாய் அதிதியும் ஒளி வீச பிரகாசமாய் அவர்கள் வாழ்வும்

சுபமாய்.

முற்றும்.

Leave a Reply

error: Content is protected !!