ஆழியின் ஆதவன்

ஆழியின் ஆதவன்

அத்தியாயம் 13

“ஆஷா கூட இருந்த பத்து நாளும் எங்க வாழ்க்கையில் நாங்க மறக்கமுடியாத நாட்கள்.

 

எங்களுக்கும் உணர்வு, உணர்ச்சி எல்லாம் இருக்குன்னு நாங்க உணர்ந்ததே ஆஷா வந்த பிறகு தான். எங்க மூணு பேர் தாண்டி எங்களைப் பத்தி தெரிஞ்ச ஒரே ஆள் அவங்க மட்டும் தான். நாங்க யார்னு தெரிஞ்ச பிறகு கூட ஆஷா‌ எங்களை ஒரு நிமிஷம் கூடக் கொலைகாரங்கன்ற கண்ணோட்டத்தோடு பாத்ததே இல்ல. அதுவே எங்களை அவங்க கிட்ட நெருங்க வச்சிது.”

 

“ஆழி சொல்றது உண்மைதான். எங்க லைஃப்ல வந்த, நாங்க மீட் பண்ண ஒரே நல்லா மனுஷின்னா அது ஆஷா மட்டும் தான். இன்ஃபேக்ட் நாங்க இப்ப இந்த இடத்தில் இருக்குறதுகக்கு ஒரே காரணம் ஆஷா தான். ஐ மீன் எங்க பழைய வாழ்க்கையை விட்டு நாங்க இப்ப இந்த இடத்தில் இருக்க, அவங்க தான் காரணம். ஆஷா சொன்ன சில விஷயங்கள் எங்களை எங்களைப் பாத்தியே யோசிக்க வச்சிச்சு” என்று கலங்கிய மீராவின் கையை ஆதரவாக அழுதினர் ஆழியும் சைத்துவும்.

 

ஆஷா ஆழி வீட்டுக்கு வந்து பத்து நாட்கள் ஓடி இருந்தது.

 

அன்று மாலை விமானத்தில் மாறுவேடத்தில் ஆஷாவை, ஒரு டான்ஸ் குரூப்புடன் சென்னை அனுப்ப எல்லாம் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர் மூவறும்.

 

ஆஷா கிளம்பி தயாராகி வந்து, “நான் உங்ககிட்ட ஒன்னு சொன்ன… இல்ல கேட்ட என்னைக் கோச்சிக்க மாட்டீங்களே?” என்று தயங்கி தயங்கி கேட்க, மூவரும் சிரித்த முகத்துடன்,

 

 

“அதெல்லாம் கோச்சிக்க மாட்டோம், நீங்க தாரளம என்ன கேக்கணுமோ கேளுங்க” என்றாள் மீரா.

 

“இல்ல நீங்களே உங்களைக் கில்லர்னு சொல்றீங்க… பட், நான் உங்க கூட இருந்த இந்தப் பத்து நாள்ல, எனக்கு அப்டி எதும் தோணவே இல்ல. முதல்ல கொஞ்சம் பயம் இருந்தது தான். பட், அது கிட்நாப் நடந்ததால் வந்த பயம் தான், உங்களைப் பாத்து இல்ல. அப்புறம் நீங்க உங்களைப் பாத்தி சொன்னது கேட்ட பிறகு மனசுக்குக் கஷ்டமா தான் இருந்ததுதே தவிர, உங்களைப் பத்தி தப்ப நினைக்கத் தோணல… நான் பாத்த வரை உங்க மூணு பேருக்கும் நல்ல குணம், நல்ல மனசு… ஆனா, உங்க தொழில் தான்” என்று இழுத்த ஆஷாவை கூர்மையாகப் பார்த்த ஆழி,

 

“ஆரம்பிச்சிட்ட இல்ல, சொல்ல வந்ததை முழுசா சொல்லி முடிச்சிடு”

 

“இல்ல… எனக்கு உங்களைப் புரிஞ்ச வரை, நீங்க காசுக்காகக் கொலை பண்றீங்க தான். பட், நீங்க மூணு பேருமே காசை ஒரு பெரிய மேட்டராவே நினைக்கல. பணத்துக்கு உங்க லைஃப்ல பெரிய ரோல் எல்லாம் ஒன்னு இல்ல. நீங்க ரொம்ப நார்மலான லைஃப் தான் லிட் பண்றீங்க. பெரிய வீடு, ஆடம்பரமான லைஃப்ஸ்டைல், வண்டி, டிரஸ் அது இதுன்னனு இப்படி எதுக்குமே நீங்க செலவு பண்றது இல்ல. ரொம்பச் சிம்பிளான, நார்மலான லைஃப் தான் உங்களுது. இதுக்கு நீங்க நியாயம சம்பதிக்குறதே போதுமே, அப்றம் எதுக்கு இந்தத் தொழில்?.”

 

“நீங்க, ஆழி… பெஸ்ட் இன்டீரியர் டிசைனர், சைத்ரா சூப்பரான போட்டோகிராஃபர், மீரா சூப்பர் செஃப். இது இந்த உலகத்தில் உங்க மூணு பேரோட ஐடென்டிட்டி தான். பட், அதோட இது உங்க ஃபேஷனும் கூடனு எனக்குத் தோணுது. நீங்க உங்களுக்குப் புடிச்சி தான் இந்த வேலையைச் செய்றீங்க, ஆன்ட் இதுலயே நீங்க நல்லா சம்பதிக்குறீங்க. அப்றம் எதுக்காக நீங்க இன்னும் இந்த மாதிரி வேலை எல்லாம் பாக்கணும்… வேணாமே” என்ற ஆஷா மூவரையும் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு பார்த்தாள்.

 

“எனக்கு உங்க மூணு பேரையும் ரொம்பப் புடிக்குது. அதான் உரிமைய இதெல்லாம் கேட்டேன். தப்ப இருந்தால் சாரி.” என்ற ஆஷா தான் ஹேண்ட் பேக்கை கையில் எடுத்தாள்.

 

“ஆழி… நீங்க அப்ப சொன்னீங்க இல்ல, இனிமே நீ எங்களை எங்க பார்த்தாலும், எங்களைத் தெரிஞ்ச மாதிரி காட்டிக்காத, அது உனக்கு நல்லதில்லைனு. நான் இப்ப சொல்றேன். நான் உங்களை நெக்ஸ்ட் டைம்‌ பாக்கும் போது, நீங்க மூணு பேரும் என்னைத் தெரியாத மாதிரி போகாத இடத்தில் நீங்க இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்குறேன். நீங்களே என்னைத் தேடி வந்து, ஹாய் ஆஷா எங்களை ஞாபகம் இருக்கான்னு என்கிட்ட கேக்கணும். அதுக்கு நீங்க இது எல்லாத்தையும் விட்டுட்டு புது வாழ்க்கையை ஆரம்பிக்கணும்” என்ற அழுதபடியே சொல்லிவிட்டு, காரில் ஏறி, 

 

“நான் போய்ட்டு வரேன், என்னை மறந்துடாதீங்க. போற வழி சரிய இருந்தால் போய்ச் சேர்ர இடமும் கண்டிப்பா சரிய தான் இருக்கும். யோச்சி பாருங்க” என்று கையை அசைத்து ஆஷா விடை பெற, அது நிழல் படமாக மூவர் மனதிலும் பதிந்தது.

 

“ஆஷா சொன்னது உண்மை தான், பணத்துக்காகத் தான் நாங்க இந்த வேலைய பாத்தோம்ன்றது பாதி உண்மை தான். பட், அந்தப் பணம் பெருசா எங்களுக்கு எந்தச் சந்தோஷத்தை தந்தது இல்ல. ஆஷா சொன்ன அப்பறம் தான் ஒரு விஷயம் எங்களுக்குப் புரிஞ்சுது. எங்களோட தேவை ரொம்பக் கம்மி. அதுக்கு நாங்க வெளி உலகத்துக்காகப் பாக்கும் எங்க வேலையில் வரும் வருமானமே எங்களுக்குப் போது. அப்றம் எதுக்கு இனியும் இந்த மாதிரி வேலைய செய்யணும்னு தோணுச்சு… ஏன் நாங்களும் ஆஷா மாதிரி ஒரு சாதாரணமான பொண்ண இந்த உலகத்தில் வாழக்கூடாதுன்ற எண்ணம் வந்தது. நாங்க மூணு பேரும் ஒரு மனசா முடிவு பண்ணி, அந்தத் தொழிலை விட்டு வெளிய வர தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சோம். கொஞ்ச கொஞ்சம எங்க நெட்வொர்க்கை குறைச்சி, அப்பறம் அதை இல்லாமயே செஞ்சோம். எங்கள பத்தினா எல்லாத் தகவல்களையும் ஆழிச்சோம். ஒரு வருஷம் எங்களை யாருன்னே தெரியாத கன்ட்ரிக்கெல்லாம் போனோம். கடைசிய யூரோப்ல கொஞ்ச நாள்ல இருந்தோம். அங்க இருந்தபடியே எங்களுக்காகப் புது வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் ஏற்பாடு பண்ணிட்டு இந்தியா வந்தோம். நான் சென்னைக்கு வரும்போது எனக்குள்ள ஒரு சின்ன ஆசை, பை சான்ஸ் எங்கயாவது ஒரு தடவை ஆஷாவ பாக்க மாட்டோமான்னு. பட்” என்றவள் ஒரு நிமிடம் கண்களை இறுக்கி மூடித் திறந்து,

 

“ஆனா, நான் ஆஷாவை பாக்கும் நாள், அவங்க கடைசி நாளா இருக்கும்னு நான் எதிர்பாக்கல… நேத்து சைத்து ஃபோட்டோவை காட்டும் வரை, இறந்தது எங்களுக்குத் தெரிஞ்ச ஆஷானு எனக்குத் தெரியாது” என்றவள் குரல் உடைந்துவிட முகில், மெதுவாக ஆழி கையை அழுத்தினான்.

 

“ஆஷாவை யார் ஆழி கொன்னது? எதுக்காக? அப்படி அந்த மெமரி கார்டுல என்ன தான் இருந்தது?” என்ற முகிலை பார்த்து ஆழி வறண்டு சிரிக்க,

 

“எந்தக் கேஸ்காக மிஸ்டர், ஆதவ்வும் டெப்டியும், எவிடன்ஸ் தேடி ஊர் ஊரா அலஞ்சிட்டு இருந்தாங்களே, அந்தக் கேஸோட ஆணிவேரா இருந்தவனோட, உச்சி குடுமியையே ஆட்டி, அப்படியே புடிங்கி வீசும் எல்லாம் ஆதாரமும் அந்த மெமரி கார்டுல இருந்தது” என்று சைத்ரா சொல்ல, ஆண்கள் மூவருக்கும் தூக்கிவாரி போட்டது.

 

“ஏய் நீ என்ன சொல்ற? நீ சொல்றது உண்மைய? இந்தக் கேஸ்ல சம்பந்தப்பட்டது மூணு பேர். அந்தப் பையன் விமல், அவன் அப்பன், ஆன்ட் அந்தச் சைலேஷ். இதுல யார் பத்திய எவிடன்ஸ் ஆஷா கிட்ட இருந்தது? இதை ஏன் ஆஷா எங்ககிட்ட சொல்லல?, இப்ப அந்த மெமரி கார்டு எங்க?” என்று சிபிஐ யாக மாறிய‌‌ ஆதவ் கேள்வி மேல் கேள்வி கேட்க,

 

ஆழி ஆதவை நிமிர்ந்து பார்த்து, “சொல்லி இருப்ப மிஸ்டர். ஆதவ். சொல்லி இருந்திருப்பா… அவ அண்ணா அந்த நேரம், அண்டர் கவர் ஆபரேஷன்னுக்குப் போகாமல், அவ பக்கத்துல இருந்திருந்தால் சொல்லி இருப்பா. அவ கட்டிக்கிட்ட புருஷன்… நீங்க பெரிய சிபிஐனு அவளுக்கு நீங்க சொல்லி இருந்தா, அவளும் சொல்லி இருப்பா. ஆனா, நீங்க பெத்த அம்மாகிட்டயும், கட்டன பொண்டாட்டிகிட்டயுமே உங்களைப் பத்தி சொல்லாம விட்டத்தின் விளைவு தான், ஒருவகையில் ஆஷா சாவுக்குக் காரணமா போச்சு. நாங்களும் ஆஷாகிட்ட இருந்த அந்த மெமரி கார்டை பார்த்திருந்தால், அதுல இருந்தவன் கதைய நாங்க அன்னைக்கே முடிச்சிருந்தால், ஆஷா இப்ப உயிரோட இருந்திருப்பா… அந்த வகையில் நாங்களும் ஆஷா சாவுக்கு ஒரு காரணம் தான்.”

 

“ரெண்டு உயிரா இருந்த ஆஷாக்கு, எங்க அவகிட்ட இருந்த எவிடன்ஸ் பத்தி வெளிய சொல்லப்போய், தன்னோட சேர்ந்து, அவ வயித்துல இருந்த குழந்தைக்கும், அவ குடும்பத்துக்கும் எதாவது ஆகிடுமோன்ற பயம் தான் அவங்களை எதையும் வெளிய சொல்ல விடல” என்று ஆழியின் குற்றச்சாட்டு ஆதவின் இதயத்தைச் சுட, முழுவதும் கலங்கிப் போனான்.

 

“இதுல ஆதவ் மேல எந்தத் தப்பும் இல்ல. இது எங்க புரோபஷனல் எதிக்ஸ். ஆன்டர்கவர்ல இருக்க நாங்க, எங்களைப் பத்தி சொந்த குடும்பத்துக்குக் கூடச் சொல்லக்கூடாது. அதைத் தான் ஆதவ் செஞ்சான். இதுல அவனைத் தப்பு சொல்ல ஒன்னும்” இல்லை என்று விஷ்ணு ஆதவ்காகப் பேச,

 

“நடந்ததை விடு ஆழி. இப்ப சொல்லு, யார் பத்தின எவிடன்ஸ் ஆஷாகிட்ட இருந்தது, யார் ஆஷாவ கொன்னது.” என்று கேட்டான் முகில்.

 

“நீங்க நினைக்குற மாதிரி அக்யூஸ்ட் மூணு பேர் இல்ல முகில், மொத்த ஐஞ்சு பேர்” என்று மீரா சொல்ல ஆதவும் விஷ்ணுவும் திகைத்தனர்.

 

“என்ன சொல்ற நீ? இதெப்படி? யார் அது?” என்ற ஆதவ்வை நேருக்கு நேராகப் பார்த்த ஆழி,

 

“இதுல நீங்க சொன்ன மூணு பேரும் வெறும் காசுக்காக வேலை பாக்குறவங்க… நாலாவது ஆள்… ம்ஹூம்… பாசத்துக்கும், மனத்துக்கும் பயந்து இதல சேர்ந்த ஆள். அந்தக் கடைசி ஆள். தீ மாஸ்டர் மைண்ட் ஆஃப் ஆல் தீஸ். நீங்க நெனச்சு கூடப் பாக்க முடியாத உயர்த்தில் இருக்க ஆள்‌. நீங்க என்ன… உங்க கவர்மெண்ட்டே அவன் இருக்கத் திசை பக்கம், சும்மா விரல் நீட்ட கூடப் பயப்படும். அப்டி பட்ட ஒருத்தன் மொத்த ஜாதகத்தையும் கையில வச்சிட்டு இருந்த ஆஷாவை மட்டும் இல்ல, அவ குடும்பத்தையே தூக்க தானா அவன் நினைப்பான்” என்ற ஆழியின் கண்கள் சிவக்க, அவள்‌ உடல் இறுகியது.

 

“யாராது? யாரு ஆழி அது? அவன் யார்னு சொல்லு?” என்ற விஷ்ணு ஆழி சொன்ன பேரை கேட்டு உறைந்து நின்றான்.

 

“நீ… நீ… என்ன சொல்ற? அவரா?” என்ற ஆண்கள் மூவரும் ஆழி சொன்னதை நம்ப முடியாமல் ஸ்தம்பித்து நின்றனர்.

 

“எஸ்..‌. நாங்க சொன்னது உண்மை தான். ஆஷா சாவுக்கு மட்டும் இல்ல, ஆஷா ஃப்ரண்ட் பிரியங்கா, அவங்க சிஸ்டஸ் காவ்யானு இன்னும் நிறையப் பேரோட சாவுக்குக் காரணம், நீங்க சொன்ன அந்த அவர்… இந்தியா’ஸ் யங் பிஸ்னஸ் மேன்… ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவரோட புள்ளை, இன்னைக்குத் தேதியில் அந்த கட்சியின் அடுத்த தலைவர்னு சொல்ற அளவுக்குச் செல்வாக்கோடு இருக்க, ஒன்னா நம்பர் சைக்கோ… மிஸ்டர் யுவ்ராஜ் பிரதாப் தான் இதுக்கொல்லாம் காரணம்.”

 

ஆதவ், முகில், விஷ்ணுவால் ஆழி சொன்னதை நம்பமுடியவில்லை.

 

“இதெப்படி, அவனுக்குச் சொசைட்டில நல்லா பேர் இருக்கு, யாரா கேட்டாளும் அவன் ரொம்ப நல்லவன், ஒழுக்கமான ஆளுன்னு தான் சொல்வாங்க, அப்பா பெரிய அரசியல்வாதிய இருந்தாலும் ரொம்ப நேர்மையான மனுஷன், இவனும் அவங்க அப்பா பவரை எதையும் யூஸ் பண்ணாம தான் சொந்த முயற்சியில் நம்பர் ஒன் பிஸ்னஸ் மேன்ற இடத்தில் இருக்க ஆளு, அவன் போய்… ஏன்? எதுக்காக? என்ன காரணம்?” என்ற ஆதவ் மண்டையைப் பிய்த்துக் கொள்ள, ஆழி இமைகளை உயர்த்தி ஆதவ்வை பார்த்து, “ஹீ இஸ் ஏ சைக்கோ” என்றாள் ஒரே வார்த்தையில்.

 

“ஆமா ஆதவ்‌. அந்த யுவ்ராஜ் ஒரு சைக்கோ. இது வெளிய யாருக்கும், ஏன் அவனோட அப்பாக்கு கூடத் தெரியாது. அவனைப் பத்தி தெரிஞ்ச ஒரே ஆள், யுவ்ராஜோட பர்சனல் மாமா சைலேஷ் தான்” என்ற சைத்ரா கண்களில் அத்தனை கோவம்.

 

“யுவ்ராஜ்கு ஒரு பெக்கீயூனியர் மனநோய். அவனோட அம்மா சின்ன வயசில் அவங்களை விட்டு வேற ஆள் கூடப் போய்ட்டாங்க, அதனால் சின்ன வயசிலயே அவனுக்கு லேடிஸ்ன ஒரு வெறுப்பு. அதை அவங்க அப்பா கவனிக்காமல் விட்டத்தின் விளைவு, பல பொண்ணுங்க சாவு. யுவ்ராஜ் லேடிஸ்சை கொடுமைப்படுத்தி, அவங்களை அடிச்சி சித்ரவதை பண்ணி அவங்க கதறி அழுகுறதை, இவன்கிட்ட அவங்க பயத்தில் உயிருக்காகக் கொஞ்சுறதை பாத்து ரசிக்கும் ஒரு சைக்கோ. அதுதான் அவனோட ப்ராப்ளம். இது சின்ன வயசில் இருந்து அவனோட பழகின சைலேஷ்கு மட்டும் தான் தெரியும். அத அவன் அவனுக்கு ஃபேவரா யூஸ் பண்ணி, அவன் பணம் பாக்க ஆரம்பிச்சிட்டான். யுவ்ராஜ்கு தன்னோட மனசோட வன்மத்தை தீர்க்க ஒரு பொண்ணு வேணும். ஆனா, இது மட்டும் அவன் அப்பாக்கு தெரிஞ்ச, மகன்னு கூடப் பாக்காம அவர் கண்டிப்பா இவனைப் போலீஸ்ல புடிச்சிக்குடுக்க, இல்ல கொல்லக்கூடத் தயங்க மாட்டாரு, சோ யுவ்ராஜ்கு சைலேஷை விட்ட வேற வழி இல்லை. அந்த நேரம் பணத்துக்காக எதை வேணும்னாலும் செய்ற, அந்த ***** விமல், அவனோட அப்பன் பிரண்ட்ஷிப் சைலேஷ்கு கிடைக்க… முடிவு… தே போர் பிகம் பார்ட்னரின் க்ரைம். பொண்ணுங்களைக் கடத்தியோ, இல்ல அவங்களை மயக்கியோ அசிங்கமாக ஃபோட்டோ எடுத்து அவங்களைக் ப்ளாக் மெயில் பண்ணி கெடுக்குறது, விமல் ஆன்ட் சைலேஷ். அதுக்குப் பிறகு அந்தப் பொண்ணுங்களை யுவ்ராஜ்கிட்ட அனுப்பிடுவானுங்க. அவன் அந்தப் பொண்ணுங்களை” என்ற சைத்ரா குரல் கமற, ஆண்கள் மூவரும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது‌.

 

இந்தியா முழுவதும் பல இடங்களில் இருந்து, நிறையப் பெண்கள் காணாமல் போய், பின் பல நாட்கள் கழித்துச் சிதைந்த உடலாகப் பல இடங்களில் அவர்கள் உடல் மட்டும் கிடைக்க, அதைப் பற்றி விசாரிக்கத் தான் விஷ்ணு மற்றும் ஆதவ் இன்வெஸ்டிகேஷன் செய்து கொண்டிருந்தனர். அந்தப் பெண்கள் சாவதற்கு முன் பலவிதமாகச் சித்திரவதை செய்து மிகவும் கொடுரமாகக் கொல்லப்பட்டிருப்பது, இவர்களுக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், சைத்ரா அதைச் சொல்லமுடியாமல் தவிக்கிறாள் என்று புரிந்து கொண்டனர்.

 

“இதெல்லாம் உங்களுக்கு எப்டி தெரிஞ்சிது. அப்ப அந்த மெமரி கார்டு உங்ககிட்ட தான் இருக்கா? என்ற விஷ்ணுவுக்கு இல்லை என்று தலையாட்டிய மீரா,

 

“அந்த மெமரி கார்டு எங்ககிட்ட இல்ல, அதை ஆஷா வேற ஒரு ஆள்கிட்ட குடுத்துட்டாங்க” என்று சொல்ல,

 

“யாரது” என்று ஆதவ் கேட்ட,

 

“உங்க கமிஷனர்” என்ற வந்த பதிலில் மீண்டும் மூவரும் ஆடிப்போயினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!