ஆழியின் ஆதவன் 7

ஆழியின் ஆதவன் 7

ஒரு வருடத்திற்கு முன் ஆழினி, மீரா, சைத்ரா மூன்று பேரும்‌ ஒன்றாக இந்தியா மண்ணில், தங்கள் பழைய வாழ்க்கையின் மிச்ச மீதிகளை மொத்தமாகத் துடைத்தெறிந்து விட்டு புதிய‌ வாழ்க்கையைத் தேடி அடியெடுத்து வைத்தனர்.

 

“ஏன் ஆழி இப்டி சொல்ற?” என்ற சைத்ரா முகம் வாடி இருக்க, ஆழி அவள் தலையில் கை வைத்து மெதுவாக வருடினாள்.‌

 

“புரிஞ்சிக்கோ சைத்து. என்ன தான் நம்ம நம்மள பத்தின எல்லாத்தையும் அழிச்சிருந்தாலும், எங்கயாது ஒரு சின்ன விஷயத்தை நம்மையும் அறியாம மிஸ் பண்ணி இருந்தால் நாம மாட்டிக்க நெறய சான்ஸ் இருக்கு. நாம ஒன்னும் சமுகச் சேவை செஞ்சிட்டு இங்க வர்ல. நம்ம டார்கெட்ல வந்த யார் ஃபேமிலிலயாது, நம்ம‌ விடப் புத்திசாலி இருந்து நம்ம டார்க் பண்ண என்ன பண்றது சொல்லு? அதுலயும் நம்ம கொன்னது ஒன்னு சாதரணமான ஆளுங்கள இல்ல‌. அரசியல்வாதி, பெரிய பிஸ்னஸ்மேன், விஜபின்ற பேர்ல இருந்த நம்ம விடப் பெரிய பெரிய கிரிமினல்ஸை, அதுல ஐஞ்சு பேர் அண்டர்வேர்ல்ட் டான் வேற. நம்ம கை வச்சது எல்லாம் பெரிய இடம் மட்டுமில்ல மோசமான இடமும் கூட தான். சோ… எப்ப இருந்தாலும் நம்ம தலைக்கு மேல ஒரு கத்தி தொங்கிட்டு தான் இருக்கும். சோ வீ ஹவ் டு பி வெரி சேஃப். அதுக்குத் தான் சொல்றேன். கொஞ்ச நாள் நம்ம மூணு பேரும், வேற‌ வேற ஊர்ல இருக்கலாம். ஆல்ரெடி நம்ம மூணு பேர்க்கும் தனித்தனி ஐடென்டிட்டி இருக்கு, சோ அதை வச்சு புது லைஃப் ஸ்டார்ட் ‌பண்ணுவோம். அதுல நம்ம நல்லா ஸ்டண்ட் பண்ண பிறகு மூணு பேரும் கொஞ்ச நாள் ஒன்ன இருக்கலாம். எப்ப இருந்தாலும் எப்பவும், நம்ம மூணு பேரும் ஒன்னாவே இருக்க முடியாது சைத்து. அது நமக்கு நல்லதும் இல்ல. சோ இப்ப நம்ம மூணு பேரும் அவங்க அவங்க வழிய தேடி தனித்தனிய போறோம். சரியா இன்னைக்கு இருந்து சரிய ஆறு மாசம் கழிச்சு, ஒரு ஸ்பாட் பிக்ஸ் பண்ணி அங்க நம்ம மீட் பண்ணலாம். அதுக்கு இடையில் ரொம்ப முக்கியமான விஷயம் தவிர்த்து நமக்குள்ள எந்தக் கண்டாக்ட்டும் வேணாம் புரிஞ்சித?” என்று ஆழினி கேட்க,

 

“ம்ம்ம் ம்ம்ம்… எல்லாம் புரிந்து” என்று சைத்ரா முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டாள் சைத்ரா.

 

“ஏய் என்னடி இது? ஆழி தான் இவ்ளோ சொல்ற இல்ல, அவ சொல்றது கரெக்ட்னு உனக்கும் தெரியும். அப்பறம் ஏன் இப்டி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்ச வச்சிருக்க, காலையில செஞ்சு பாக்ஸ்ல அடச்சு இறுகிப் போன நூடுல்ஸ் மாதிரி இருக்கு மூஞ்சு” என்று மீரா சிரிக்க, கூடவே ஆழியும் சேர்ந்து சிரிக்க, மூவரும் அடுத்தவர் சிரித்த முகத்தைத் தங்கள் இதயப்பையில் சேமித்து வைத்துக்கொண்டு தங்கள் புதிய பாதையில் புதிய வாழ்க்கையைத் தேடி அமைத்துக்கொள்ளக் கிளம்பினர்.

 

ஏற்கனவே அவர்களுக்குத் தேவையான அனைத்தையும் ஏற்பாடு அந்தந்த ஊர்களில் செய்திருந்தனர் பெண்கள். அதன்படி மீரா ஹைதராபாத், சைத்ரா கேரளா, ஆழினி சென்னை என்று மூவரும் புறப்பட்டனர்.

 

ஆழினி சென்னையில் வந்து இறங்கியவள், நேராக அவளுக்காகச் சென்னையில் அவள் வாங்கியிருந்த வீட்டுக்கு சென்றாள். இப்போது மீராவும், சைத்ராவும் இருக்கும் ஃப்ளாட் தான் அது.

 

அங்குச் சென்றவள் பாதுகாப்பிற்காக அங்குச் சில ஏற்பாடுகளைச் செய்து முடித்து, அடுத்து என்னென்ன செய்யவேண்டும் என்று அனைத்தையும் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வைக்க, அவள் விதியோ வேறு மாதிரி அவள் வாழ்க்கையை வடிவமைத்து அதில் வலிக்க, வலிக்க ஆழியைத் தினித்து விடத் திட்டம் தீட்டி, அதைச் செயல்படுத்த நேரம் பார்த்துக் காத்திருந்தது.

 

ஆழி சென்னையில் தான் இன்டீரியர் டிசைனிங் வேலையைத் தொடங்கினாள். ஆன்லைன் மூலம் சின்னச் சின்ன வேலைகளை ஒத்துக்கொண்டு அதை நேர்த்தியாக, அழகாக, சொன்ன நேரத்தில் முடித்தும் கொடுத்தாள். அதற்காகவே கொஞ்ச நாளில் அவளுக்கு நிறையச் சின்னச் சின்னக் காண்ட்ராக்ட் கிடைத்தது.

அவளுக்கு ஏற்கனவே இந்தத் தொழில் பழக்கம் என்பதால் அதிகம் மெனக்கெடாமல் அந்த வேலையில் தன்னைப் புகுத்திக்‌ கொண்டாள்.

 

சைத்ரா, மீரா இருவரும் அவரவர் இடத்துக்குச் சென்ற பிறகு, அரைவ்டூ சேஃப் லீ, ஆல் செட் என்று மெசேஜ் செய்ய, ஆழி ஓகே என்று பதில் அனுப்பி வைத்தாள்.

 

அதன் பின்ன மூவருக்குள்ளும் வெளிப்படையாக எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அடிக்கடி அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவல்களை அவர்கள் மூவரும் பரிமாறிக் கொண்டனர். யாராவது ஏதாவது பிரச்சனையில் சிக்கினால் மற்றவருக்கு அது தெரிய வேண்டும் என்று இந்த ஏற்பாடு. ஆனால், எக்காரணம் கொண்டும் அழைக்காமல் யாரும் வந்து ஒருவரை ஒருவர் பாக்க கூடாது என்று ஆழி முடிவாகச் சொல்லிவிட, அந்த வார்த்தைகள், ஆழிக்கு ஒரு அவசர தேவை வரும்போது விதியின் சாதியால் அவள் தான் தோழிகளை அவளிடம் வரமுடியாமல் செய்துவிட்டது ‌தான் துரதிர்ஷ்டம்.

 

அன்று வழக்கம் போல் ஆழி தன் வேலைகளை முடித்து வீட்டுக்குக் கிளப்பிக் கொண்டிருந்தாள். மாலை ஏழு மணிபோல் கிளம்பி பஸ் ஸ்டாண்ட் வந்தவள், அவள் புக் செய்த கேப் வருகிறத என்று சாலையில் பார்வை பதிந்திருக்க, சற்று அருகில் கேட்ட பெரும் சத்ததில் சட்டெனத் திரும்பிப் பார்த்தாள்.

 

அங்கு ஒரு லாரி ஒரு காரை கண் இமைக்கும் நேரத்தில் இடித்துத் தள்ளிவிட்டு, மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்றுவிட, லாரியில் மோதியதில், கார் தன் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே வேகமாகத் திரும்ப, அந்தக் கார் தன்னை நோக்கி தான் வருகிறது என்று உணர்ந்து ஆழி அங்கிருந்து நகரும் முன், அந்தக் கார் ஆழி மீது மோதி விட, ஆழி மேலே தூக்கி வீசப்பட்டு, அப்படியே தரையில் குப்புற வந்து விழுந்தாள்.

 

என்ன ஏதென்று யோசிக்கும் முன் அனைத்தும் நடந்து முடிந்துவிட, நடுரோட்டில் ஆழி இரத்த வெள்ளத்தில் கிடந்தாள்‌.

 

விபத்து நடந்து கிட்டத்தட்ட பத்து நாட்கள் கழித்துக் கண்விழித்தாள் ஆழினி‌.

 

கண்விழித்த ஆழினிக்கு உடல் முழுவதும் அப்படி ஒரு வலி. நூறு கிலோ இரும்பை தன் நெஞ்சின் மீது வைத்தது போல் அப்படி வலித்தது அவளுக்கு. தலையில் போடப்பட்டிருந்த பெரிய கட்டினால் அவளால் லேசாகக் கூடத் தலையை அசைக்க முடியாதபடி கனத்தது. கஷ்டப்பட்டுத் தலையை அசைத்து, பார்வையைச் சுழற்றி தன் இருந்த இடத்தைப் பார்க்க, அவள் கண்களுக்கு அனைத்தும் மங்கலாகத் தெரிந்தது. ஏதோதோ மருந்து நெடிகள் அவள் நாசியைத் தொட்டது. தன்னைச் சுற்றி பீப் பீப் என்ற ஓசை கேட்டு ஏதோ மிஷின்கள் ஓட்டுவதை உணர்ந்தவள், சுற்றி முற்றி பார்த்தாள்.

 

ஆழிக்கு தன் எங்கிறேன்? என்பதைவிட, முதலில் உயிரோடு தான் இருக்கிறேனா? என்ற சந்தேகம் தான் முதலில் வந்தது. மெல்ல கண்களை மூடி மூடி திறந்து, நடந்ததை அமைதியாக யோசிக்க, அவளுக்கு விபத்து நடந்தது அவள் ஞாபகத்தில் வந்தது‌. அதன் பின் தான் அவளுக்குத் தன் இப்போது ஹாஸ்பிடலில் இருக்கிறோம் என்பதைப் புரிந்தது கொண்டாள்.

 

அவள் கண்விழித்தபடி படுத்திருக்க, அவளைப் பரிசோத்திக்க வந்த நர்ஸ் அவள் கண்விழித்திருப்பதைப் பார்த்து டாக்டரை அழைத்தாள்.

 

அடுத்த ஐந்து நிமிடத்தில் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் டாக்டர் சிரித்த முகத்துடன் உள்ளே வந்தார்.

 

“இப்ப உடம்பு எப்டி இருக்குமா? பெயின் எதுவும் இருக்க?” என்று கேட்க, ஆழினி மெதுவாகக் கண்களை மூடித் திறந்து “ஆமாம்” என்று சைகை செய்தாள்.

 

டாக்டர் அவளை முழுதாகப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “யூ ஆர் பெர்பெக்ட்லி அல்ரைட், சர்ஜரி நடந்து கொஞ்ச நாள் தானா ஆகுது. அதுதான் உனக்குப் பெயின் இருக்கு. உன்னோட வில் பவர் தான் நீ இவ்ளோ சீக்கிரம் ரெக்கவர் ஆனதுக்குக் காரணம், கெஞ்ச நாள்ல எல்லாம் சரியாகிடும்.” என்று அவள் தோளை தொட்டவர், “யூ ஆர் வெரி லக்கி, நடந்த ஆக்சிடென்ட்ல உன்னோட ஹார்ட் ரொம்பப் பாதிக்கப்பட்டுடுச்சு, ஹார்ட ட்ரான்ஸ் பிளான்ட் பண்ணா தான், நீ உயிர் பொழைக்க முடியுன்ற நிலைம, பட் காட்’ஸ் கிரேஸ் சரியான நேரத்துக்கு உனக்குப் பொருந்துற மாதிரி ஹார்ட் கெடச்சிது. அந்த ஆஷா சாகுற நேரத்துல, உனக்கு அவ உயிரை உனக்குக் குடுத்துட்டு போய்ட்டா, இல்லாட்டி இன்னேரம் ரெண்டு உயிர் போய் இருக்கும். ம்ம்ம் அவ சாவுல தான் உன்னோட மறு ஜென்மம் ஆரம்பிக்கனும்னு எழுதி இருக்குப்போல” என்றவர் கலங்கிய விழிகளுடன் வெளியே செல்ல, ஆழினி என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி இருந்தாள்.

 

மருந்து மயக்கத்தில் அரைகுறை தூக்கத்தில் இருந்து ஆழினியின் நெஞ்சில் யாரோ வருடுவது போல் இருக்க, ஆழினி மெல்ல கண்விழித்துப் பார்த்தாள்.

 

அவள் எதிரில் வயதான பெண் ஒருவர் கண்களில் நீர் வடிய அமர்ந்து, ஆழின் நெஞ்சில் கை வைத்தபடியே அழுது கொண்டிருந்தார்.

 

ஆழினி கஷ்டப்பட்டுட்டு மெதுவாகத் தன் இதழ்களைப் பிரித்து, “யாரும்மா நீங்க? ஏன் அழுதுட்டு இருக்கீங்க? அதுவும் என்னோட ரூம்ல இருக்கீங்க?” என்று மெதுவாகக் கேட்க,

 

“எம் பேரும் லட்சுமி, ஆஷாவோட அம்மா? என்று சொல்ல, முதலில் அவர் சொல்வது புரியாமல் குழம்பிய ஆழி, பின் காலையில் நர்ஸ் சொன்னது ஞாபகம் வர, தனக்குள் இப்போது துடித்துக்கொண்டிருக்கும் இதயம், தன் எதிரில் இருப்பவரின் மகளின் இதயம் என்று அவளுக்குப் புரிந்தது. அவரிடம் என்ன பேசுவதென்று ஆழினிக்கு ஒன்று புரியவில்லை. மெதுவாகத் தன் கையைத் தூக்கி அவருக்கு நன்றி சொல்ல நினைக்க, அது முடியாதபடி அவள் கைகளில் மருந்து ஏறிக்கொண்டிருந்த ஐ.வி தடுத்தது.

 

லட்சும் அவள் கையை அசைப்பதை பார்த்து பதறியவர், “அய்யோ கைய அசைக்காதம்மா. ஊசி பிச்சிட்டு வந்திடும்” என்று சொன்னவரின் அக்கறையாகக் குரலே சொன்னது அவர் மகளின் மீது எந்தளவு பாசம் வைத்திருந்திருப்பார் என்று. ஒரு நிமிடம் கண்மூடி திறந்த ஆழி, மெதுவாக, “நன்றிம்மா” என்று சொல்ல, லட்சுமி அவள் தோளை மெதுவாக அழுத்தினார்.

 

“ஏதோ ஒருவகையில் என் பொண்ணு இந்த உலகத்தில் உன் மூலமா வாழ்ந்துட்டு தான் இருக்கான்னு நினைக்கும்போது எனக்குக் கொஞ்சம் நிம்மதியா தான் இருக்கு. ஆனா, எம் பேத்தி பொறக்கும் போதே பெத்தவள பறிகொடுத்துட்டு அநாதைய நிக்கிறதை நெருங்கும்போது தாம்மா நெஞ்சு தாங்கள” என்றவர் வாய் பொத்தி அழுக, ஆழினிக்கும் உள்ளம் கலங்கியது.

 

“உங்க பொண்ணுக்கு என்னம்மா ஆச்சு?” என்று ஆழினி கேட்க,

 

“ம்ம்ம்… எல்லாம் விதிம்மா. அன்னைக்குக் காலையில தான் வாளகாப்பு முடிஞ்சு, எம் பொண்ணு என் வீட்டுக்கு வந்தா, சாயந்திரப் பக்கத்தில் இருக்க, கோயிலுக்குப் போய்ட்டு வீட்டுக்கு கார்ல திரும்பி வந்துட்டு இருக்கும்போது, அவ கார் மேல ஒரு லாரி வந்து மோதிடுச்சும்மா, புள்ளதாச்சு பொண்ணும்மா அவ, அவளுக்கு இது ஒன்பதாவது மாசம், இன்னும் கொஞ்ச நாள்ல பேரனோ, பேத்தியோ பொறக்கும்னு நாங்க எல்லாம் ஆசைய காத்திருக்கச் சமயம், அவளோ ஒரேயடியா எங்களை விட்டு போய்ட்டாளே” என்றவர் கதறி அழுக ஆரம்பிக்க, நர்ஸ் வந்து ஐசியூ வில் யாரும் கத்தக்கூடாது என்று சொல்லி லட்சுமியை வெளியே அனுப்பிவிட்டார்.

 

ஆழி அடிபட்டுச் சாலையில் விழுந்து அரை மயக்கத்தில் கிடக்கும் போது, அவள் மேல் மோதிய காரின் அருகில் ஒரு கர்ப்பிணி பெண் ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் மெதுவாக ஆழியை நோக்கி தவழ்ந்து வந்து அவள் கைகளை இறுக்கிப் பிடித்து, “பயப்படாத, உனக்கு ஒன்னும் ஆகாது” என்று தட்டு தடுமாறி சொல்ல, அந்தக் குரலை கேட்டபடி, அந்தப் பெண்ணின் கண்ணைப் பார்த்துக்கொண்டே மயங்கிப் போனாள் ஆழினி.

 

நடந்ததை நினைத்து பார்த்த ஆழினிக்கு, அந்தப் பெண் ஆஷா தான் என்று தெளிவாகப் புரிந்தது. இரண்டு உயிராக இருந்தும், உயிருக்கு போராடும் நிலையிலும், தனக்கு ஆறுதல் சொன்ன அந்த நல்ல ஆத்மா இப்போது உயிரோடு இல்லை என்று நினைக்கையில் ஆழினிக்கு மனது வலித்தது. அவள் எத்தனையே உயிர்களை எடுத்திருக்கிறாள் தான். ஆனால்‍, அவர்கள் எல்லாம் இந்த உலகில் வாழ தகுதி இல்லாத மனித மிருகங்கள். ஆனால, ஆஷா… அவள் இறந்து, தனக்கு மறு ஜென்மம் கொடுத்து சென்றிருக்கிறாள். ஆழினிக்கு ஆஷாவை பற்றி நினைக்க, நினைக்க உள்ளம் கலங்கியது, அதைவிடப் பிறந்தவுடன் தன் தாயை இழந்து அந்தப் பிஞ்சு குழந்தையின் நிலையை யோசித்த ஆழிக்கு வாழ்க்கையில் முதல் முறையாகக் கண்கள் கலங்கியது.

 

ஆழினி கண்விழித்த அடுத்த இரண்டு நாட்களில் ஒரளவு தேறியிருந்தாள். ஆஷாவின் குழந்தையைப் பார்த்தே ஆகவேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி டாக்டர் சொல்ல, நர்ஸ் அவளை ஸ்ட்ரெச்சரில் வைத்து குழந்தை இருந்த அறைக்கு அழைத்துச் சென்றாள்.

 

“நீ எங்கம்மா இங்க வந்த, இப்ப தானா உனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சிருக்கு” என்று லட்சுமி கேட்க,

 

“எனக்கு அந்தப் பாப்பாவை பாக்கணும், காட்டுங்க ப்ளீஸ்” என்று கெஞ்ச, லட்சுமி குழந்தையிடம் ஆழியை அழைத்துச் சென்றார்.

 

மழலை குரலில் வீல் வீலென்று அழுதுகொண்டிருந்த குழந்தையைப் பார்க்க, பார்க்க ஆழினிக்கு நெஞ்சமெல்லாம் அடைத்தது. வெண்மதியும் குழந்தையைச் சமாதானம் செய்யப் பார்க்க, குழந்தை அழுகையை நிறுத்தவே இல்லை. குழந்தையையே ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்த ஆழினி, 

 

“பாப்பாவை நான் தொட்டு பாக்கலாமா?” என்று பாவமாகக் கேட்க, ஆழினி யாரென்று புரிந்து கொண்ட வெண்மதி, குழந்தையை அவள் அருகில் அவள் தொடுட்டு பார்க்க, வசதியாகப் படுக்க வைத்தார். 

 

ஆழினி மெதுவாகத் திரும்பி படுத்தபடி குழந்தை கன்னத்தை மெதுவாகத் தடவிவிட, அவள் ஸ்பரிசத்தில் குழந்தை தன் தாயை உணர்ந்ததோ என்னவோ சட்டென அழுகையை நிறுத்தியது.

 

பத்து நாட்களுக்கு மேல் ஓயாமல் அழுதுகொண்டிருந்த குழந்தை ஆழி தொட்டவுடன் அழுகையை நிறுத்தியதை பார்த்து லட்சுமியும் வெண்மதி வாயடைத்து நின்றனர்.

 

அன்றில் இருந்து பதினைந்து நாட்கள் வேகமாக ஓடியது.

 

“புரிஞ்சிக்க ஆதவ். குழந்தை ஆழிகிட்ட மட்டும் தான் அழுகாம இருக்க, ஆழி நம்ம கூட வரட்டும். பாப்பாகாக ஒத்துக்கடா” என்று வெண்மதி கெஞ்ச,

ஆதவ் முடியாவே முடியாது என்று கத்திக்கொண்டிருந்தான்.

 

லட்சுமியும் வெண்மதியும் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டு நின்றக,

 

ஆத்வ முன் நேருக்கு நேர் வந்து நின்ற ஆழினி, “லிசன் மிஸ்டர் ஆதவ். எப்படியும் நீங்க பாப்பாவை பாத்துக்க ஒரு கேர்டேக்கர் வைக்கத்தான் போறீங்க அது ஏன் நானா இருக்கக் கூடாது?” என்றவளை முறைத்த ஆதவ்,

 

“இங்க பாருங்க மேடம். என் லைஃப் உங்களுக்குப் பண்ணது பெரிய உதவி தான். அதுக்காக நீங்க என் பொண்ணைப் பாத்துக்கணும்னு எந்த அவசியமும் இல்ல, என்னால ஆள் வச்சு குழந்தையைப் பாத்துக்க முடியும்” என்று கட்டமாகப் பதில் சொல்ல,

 

“சாரி மிஸ்டர். ஆதவ், எனக்கும் யார்கிட்டயும் ஓசில உதவி வாங்க பழக்கம் இல்ல, சோ இப்ப சொன்னீங்களே ஆள் வச்சு பாப்பேன்னு, அந்த ஆளுக்கு என்ன சேலரி குடுப்பீங்ளே அதை எனக்குக் குடுங்க நான் பாப்பாவ பாத்துக்குறேன். ஆன்ட் அதுவும் ரொம்ப நாளெல்லாம் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். குட்டி பாப்பா கொஞ்சம் பெருசானதும், நீங்க சொல்லவே வேணாம். நானே என் வழிய பாத்துட்டு போய்டுவேன். இதுல என்னோட டீடைல்ஸ் இருக்கு” என்று ஒரு பைல்லை நீட்டியவள், “நீங்க நல்லா என்னைப் பத்தி வெரிஃபை பண்ணி பாத்துக்கோங்க” என்றவள் லட்சுமி அருகில் வந்து, அவரிடம் இருந்த குழந்தையைத் தன் கைகளில் வாங்கிக்கொண்டு, “நான் இவ கூட இருக்க வரை, உங்க பேத்திக்கிட்ட ஒரு துரும்பை கூட நெருக்கவிட மாட்டேன். இது இவ அம்மா ஆஷா மேல சத்தியம்”

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!