இராவணனே இராமனாய் 03

406E6325-37BD-49A2-AC94-7FCBF38B2AE9

இராவணனே இராமனாய் 03

அத்தியாயம் 03

“யாரு? சொல்லு மிரு! யாரு அது? எப்படி இருந்தான்? உனக்கு எப்படி அவனைத் தெரியும்? வாயைத்திறந்து ஏதாச்சும்சொல்லு?” வெறிப்பிடித்தவரைப்போல கத்திக்கொண்டு இருந்த தந்தையை மிரட்சியாகவும் அதிர்ச்சியாகவும்நோக்கிக்கொண்டு இருந்த மிருணாளினுக்கு அனைத்துமே அவள் கட்டுப்பாட்டை மீறிப்போவதைப்போலத் தோன்றியது. நெற்றியை அழுந்தப்பற்றிக்கொண்டவள்

“சத்தியமா எனக்கு தெரியாது பா! நான் பேசுறதுக்குள்ள போய்ட்டார். யார்? என்ன? என்ற விபரம் கேட்கக் கூட எனக்குமுடியல”

“பொய்! பொய் சொல்லாத! உனக்குத் தெரியும் மிரு! நீ தானே அவனுக்கு உதவி பண்றது? என்னைக் கோவப்படுத்தாம யார்என்று சொல்லு” சலிப்பாக இருந்தது மிருணளினுக்கு. எத்தனை தடவைதான் சொல்வது. தான் பொய்சொல்வது இல்லைஎன்பது இவருக்குத் தெரியாதா?

ஒரு பெருமூச்சுடன் மீண்டும் நிமிர்ந்தவள் “ஸீ அப்பா! நான் கோவிலில இருந்து வீட்டுக்கு நடந்து வந்திட்டு இருந்தப்போ வந்தார்! இதைத் தந்தார்! போய்ட்டார்! உங்களைப் பார்க்கனும் என்று கேட்டார். அதற்கு முன் தினம் உங்களைமீட்பண்ணதாக் கூட சொன்னார். ஸோ உங்களுக்கு தெரிஞ்சவர் என்று நினைச்சுட்டேன். இது என்ன ஃபைல் என்று கூடஎனக்குத் தெரியல! அதோட எனக்கு விவரம் கேட்க ஆவகாசமே தரலையே பா”

“ம்ச்! அப்போ இந்த இரண்டு நாளும் ஏன் என்கிட்ட இதைப்பத்தி சொல்லல? சொல்லு?”

“நீங்க முதல் அதுக்கு வீட்டுக்கு வந்து இருக்கனும் பா! நாங்களா கால் பண்ணக்கூடாது என்று சொல்லி இருக்கிறீங்களே. சரிநேர்ல பார்த்து சொல்லுவோம் என்று வெய்ட் பண்ணேன். வெளியூரில இருக்கின்றேன் என்று சொல்லிட்டு இந்தஊருக்குள்ளேயே சுத்திட்டு இருப்பீங்க என்று எனக்குத் தெரியாதே!” நக்கலாக தோளைக்குலுக்கியவளின் கன்னத்தில் பளார்என்று ஓர் அறை விழுந்தது. 

அறைந்த வேகத்தில் சோஃபாவில் சுழன்று  சென்று வீழ்ந்தவளை “அய்யோ மிரு” என்று ஓடி வந்து தாங்கிக்கொண்ட மாதவி”என்னங்க இது? பைத்தியமா உங்களுக்கு? யாரோ ஒருத்தனுக்காக என்  பொண்ணை ஏன் அடிக்கிறீங்க?” என்றுகோவமாகக் கத்தவும்

“வாயை மூடுடி! எல்லாம் நீ கொடுக்கிற இடம். ரோட்ல போறவன் ஃபைலைத் தந்தா யார்? எது? என்று கேட்காம,  சரி என்றுவாங்கி வைச்சுக்கிற அளவு மட்டும் அறிவு இருக்கிற பொண்ணைப் பெத்து வைச்சு இருக்கியே! முதல்ல உன்னைத்தான்அடிக்கனும்” கையை ஓங்கி வந்தவரைக் கண்டு கோபமாக நிமிர்ந்து அமர்ந்த மிருணாளினி

“போதும் பா! அம்மா மேல கை வைச்சா நான் சும்மாவே இருக்க மாட்டேன். உங்களுக்கு இப்போ என்ன? இந்த ஃபைலைத்தந்தவனைக் கண்டு பிடிக்கனும் அவ்வளவு தானே? சிசிடிவி ஃபுட்டேஜை போய் செக் பண்ணுங்க. இல்லனா போலிஸிலகம்ப்ளைன்ட் குடுங்க. ஏன் என் மேலையும் கம்ப்ளைன்ட்  குடுங்க. பட் நீங்க ஹராஸ் (Harass) பண்ணும் மட்டும் பார்த்துட்டுஇருப்பேன் என்று மட்டும் நினைக்காதீங்க. இல்லனா நீங்க வேற மிருணாளினியைப் பார்க்க வேண்டி இருக்கும்” ஓங்கி ஒலித்தஅவளது குரலில் அவ்விடமே ஒரு நிமிடம் நிஷப்தமாகிப் போனது.

தலையைக்குலுக்கி அதிர்ச்சியில் இருந்து தெளிந்தவர் “இருங்கடி! என் பிரச்சனையை முடிச்சுட்டு உங்க இரண்டு பேருக்கும்வைக்கிறேன் வேட்டு” தோளில் இருந்த துண்டை உதறிப்போட்டவாறே வேஷ்டி சட்டையில் வெளியேறிய தந்தையைஅருவருப்பாக நோக்கிய மிருணாளினியின் பார்வை தாயைக் கேள்வியாக நோக்கியது. 

‘இவ்வளவு நாள் நான் பார்த்த தந்தை பொய்யா?’ என்ற கேள்வியை அவள் விழிகளில் படித்த மாதவிக்கு உணர்ச்சி வேகத்தில்உதடும் துடித்தது. உதட்டை பற்களால் அழுந்தப்பற்றி அதன் துடிப்பை நிறுத்தியவர் விழிகளில் வழிந்த கண்ணீரை அழுந்தத்துடைத்துவிட்டு ஒரு முடிவுடன் மிருவின் கைகளைப் பற்றிக்கொண்டார். என்ன செய்வது தாமதமான முடிவு!

*****

“ஹலோ” சோர்ந்து போய் ஒலித்த உயிர் நண்பன் பிரகாசத்தின் குரலில் புருவம் சுருக்கிய அருணகிரியின் குரல் “என்னாச்சுபிரகாசம்?” என்ற கேள்வியுடன் கம்பீரமாக ஒலித்தது. வழமை போல நண்பனின் குரலிலேயே நிமிர்ந்து அமர்ந்த பிரகாசம்விடயத்தைக் கூறவும் நாடியைத் தடவிக்கொண்டவர் “ம்ம்ம்!” என்று மட்டும் அமர்த்தலாகப் பதிலளித்தார்.

“என்ன கிரி! எவ்வளவு பெரிய பிரச்சனையில மாட்டி இருக்கேன். ஃபூட்டேஜ் டேட்டா முழுக்க அழிச்சு இருக்கான் ராஸ்கல்! நீஎன்னடானா ம்ம்ம் என்று மட்டும் சொல்லிட்டு அமைதியா இருக்க?”

“புரியுது பிரகாசம்! ஆனா உன் வீட்டுல நீ பண்ணிட்டு வந்திருக்கியே. அதைத்தான் ஒத்துக்க முடியல”

“பின்ன என்ன கிரி! திமிர் பிடிச்சு போய் இருக்கு ரெண்டுக்கும். மனுஷனோட கஷ்டம் புரியுதா? அதோட அவன் தனக்கு யாரோஹெல்ப் பண்ற என்று சொன்னான். இவ ஃபைலை வைச்சு இருக்கா! எனக்கு என்ன தோணும் சொல்லு?”

“அதுக்காக உன்னோட மகளையே சந்தேகப்படுவியா நீ?”

“கிரி! மிருணாளிணி அப்படியே மாதவியைப் போல! நேர்மை நியாயம் வெங்காயம் என்று பேசுற பொண்ணு! உனக்கும் இப்படிஒரு அனுபவம் இருக்கு என்றதை மறந்துடாத! எனக்கு இப்போவும் அவள் மேல சந்தேகம் தான். அதை விடு இதுல இருந்துஎப்படி வெளில வரலாம் சொல்லு”

“நான் ஒரு டீலிங்க் சொல்றேன். கேளு! பிடிச்சா பண்ணிக்கலாம். இல்ல வேற யோசிப்போம்”

“நீ எது சொன்னாலும் சரியாத் தான் இருக்கும். என்ன என்று சொல்லு”

“என்னோட பையன் கைலாஷிற்கு பொண்ணு தேடிட்டு இருக்கேன்!”

“ம்ச்! நான் என் பிரச்சனைக்கு தீர்வு சொல்லு என்றால் நீ என்ன பேசுற கிரி”

“ஹாஹா! அவசரப்படாத பிரகாசம்! அக்கவுன்ட் ஹேக் பண்ணி இருக்காங்க பிரகாசம். யாரோ முகம் தெரியாத ஒரு புது எதிரிமுளைக்கிறான் போல இருக்கு! இதைக் யார் என்று கண்டு பிடிக்க டைம் வேணும். பிகாஸ் எல்லாமே கறுப்புப் பணம். அந்தப்பணத்தை நான் உனக்குத் தந்துடுறேன்”

“எ..என்ன..என்னடா சொல்ற? உன்கிட்ட இவ்வளவு?”

“ஹா.ஹா.. நான் உனக்குக் குரு பிரகாசம் அடிக்கடி மறந்து போய்டுறியே?”

“ச்சே! உன்னை எனக்குத் தெரியாதா? பட் இவ்வளவு பணத்துக்கு கைம்மாறு நான் என்ன செய்வேன் கிரி?”

“அது தான் சொன்னேனே! என்னோட பையனுக்குப் பொண்ணு தேடுறேன் என்று”

“கி..கிரி?!”

“என்னடா யோசிக்கிற?”

“யோசிக்கிறேனா! ஆனந்த அதிர்ச்சியில என்ன பேசுறது என்று தெரியாம இருக்கேன்”

“அப்போ டீலிங்க் உனக்கு பிடிச்சு இருக்கு ஹா..ஹா!!”

இவர்கள் பேசிக்கொண்டு இருந்த அதே நேரம் போதையில் கண்கள் மேலே செறுக உயர்தர பார் ஒன்றில் மல்லாந்து வீழ்ந்துகிடந்த கைலாஷினைக் கேவலமாகப் பார்த்தபடி அமர்ந்து இருந்தன ஒரு சோடிக்கபில நிறக்கண்கள்!

*****

“பாஸ்! பிரகாசம் அவரோட பொண்ணுக்கு அருணகிரியோட மகனைப் பேசி இருக்கிறார்” பத்ராவின் குரலிற்கு எதையுமேகூறாமல் அமைதியாக அமர்ந்து இருந்தான் விஷ்வஜித்.

“என்ன பாஸ்! எதுவுமே சொல்லாம இருக்கீங்க”

“பேசட்டும் பத்ரா!”

“என்னது! பாஸ் நான் சொல்றது என்ன என்று புரிஞ்சு தான் பேசுறியா?” பத்ரா அதிர்ச்சியாகும் வேளைகளில் விஷ்வாவைஒருமையில் அழைப்பான். அவன் பேச்சில் புன்னகைத்த  விஷ்வா

“என்னடா! இப்போ என்ன சொல்லிட்டேன். திருமணம் பேசட்டும் என்று தானே சொன்னேன்?”

“அவனுங்க ரெண்டு பேரையும் இன்னும் இன்னும் நெருங்க விடுறது நமக்கு ஆபத்து பாஸ்”

“ஹ்ம்ம்ம்! நான் இதை யோசிக்க மாட்டேனா? நெருங்குனா ஒரே நேரத்தில இருவரையும் குறிபார்க்கிறது ஈஸி பத்ரா”என்றவனை வினாவாகப் பார்த்தவன் விஷ்வா ஏதோ ஆழமாக யோசிக்கத் தொடங்குவது தெரிந்து அவனைப் புரிந்தவனாகஅங்கிருந்து மெல்ல நழுவிச்சென்றான்.

அதேநேரம் உணவு மேசையில் தன்னை தனது நண்பனின் மகன் கைலாஷிற்குப் பேசவேண்டும் என்று கூறிய தந்தையைவெறித்துப்பார்த்த மிருணாளினுக்குப் பேச்சே வரவில்லை. அவளுக்கு அருணகிரியையும் தெரியும் கைலாஷையும் தெரியும். தந்தை நேர்மையானவர் என்று எண்ணும் பொழுதே அவர்கள் இருவரின் மீதும் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை.

இப்பொழுது தந்தையின் மீதே வெறுப்பில் இருப்பவளுக்கு அதுவும் தாய் இலேசாக சில விடயங்களைக் கோடிட்டுக்காட்டியபின்னர் அவர்களின் குடும்பத்தில் திருமணமாகிச்செல்வது என்பது வேம்பைக் கடித்தது போல தொண்டைவரை கசந்தது. பார்வையை அன்னை நோக்கித்திருப்பியவளுக்கு அன்னையின் கண்கள் ஏதோ செய்தி சொல்வது தெரிந்து அப்படியேஅமைதியானாள்.  

அவர்களின் அமைதியை சம்மதமாகக் கருதி திருப்தியாக பார்த்தவாறே எழுந்து மாடியை நோக்கிப் பிரகாசம் சென்றது தான்தாமதம் அன்னையை நோக்கித் திரும்பியவள்

“என்னம்மா இது? கைலேஷைப் போய்! ச்சே” சலிப்புடன் எடுத்த உணவைத்தட்டில் போட்டவளின் முகத்தைப்பற்றித் திருப்பியமாதவியின் நெஞ்சில் மகளின் வேதனை கண்டு பாரமேறிக்கொண்டது. அதை இலாவகமாக மறைத்தவர்

“இந்த அம்மா மேல நம்பிக்கை இருக்கு ல உனக்கு?” என்று கேட்கவும் மிருணாளினியின் உதடுகளில் விரக்திச்சிரிப்பு.

“இப்போதைக்கு உன்னைத் தவிர யார் மேலையும் நம்பிக்கை இல்லமா! என்னைச் சுத்தி என்ன நடக்குது என்றே தெரியல. அப்பாவா இப்படி என்று இருக்கு. ஏன் இப்படித் திடீரென்று எல்லாம் மாறிப்போகுது?” தவித்தவளின் முகம் மெல்ல மெல்லதமயந்தியின் முகமாக மாறுவதைப்போல பிரம்மை தோன்ற அவளை இழுத்து அணைத்துக் கொண்டவரின் உதடுகள் “இந்ததடவை எதையும் என் கைமீறிப் போக விட மாட்டேன்” என்று  முணுமுணுத்துக் கொண்டது.

அதேநேரம் அதே வசனத்தை விஷ்வஜித்தின் உதடுகளும் வன்மத்துடன் முணுமுணுத்துக் கொண்டதை பாவம் மாதவிஅறியவில்லை!

error: Content is protected !!