இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 1

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 1
தலைப்பு : ‘இரும்புக்கோர் பூ இதயம் ‘
இடம் :தமிழ் நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ந்து வரும் தொழிற்சாலை நகரான ஓசூர் நகர்.
இந்தியாவில் இன்று இயந்திர தொழிலில் நன்கு வளர்ச்சியடைந்த, சிறந்த முன்னேற்றம் காணும் நகர்.இன் நகரில் சிறந்து திறம்பட நடத்திவரும் RP INDUSTRIES இன்(வாகன உதிரிப்பாக உற்பத்தி நிறுவனம்) வாரிசான,
*ராஜ் பிரகாஷ்
*அருணா தம்பதியரின் ஒரே மகனான
விஜய் ஸ்ரீ நம் கதாநாயகனாக.
ஓசூர் இரும்புக்கு பிரசித்தம் போலவே பூவுக்கும் பழங்களுக்கும் பிரசித்தமானது. அதிக விளைச்சலும் மதிப்பும் உண்டு.இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.மாம்பழம் மற்றும் ரோஜாப்பூ ஏற்றுமதி தொழில் நடத்திவரும்,
*குமார்
* மாதவி ஆகியோரின்
மகன் – தருண்
மகள் -தாரா ஸ்ரீ நம் நாயகியாக
மகளும் பூவாக பிறக்க வேண்டியவளோ !
(வீட்டில் இருவரையும் ஸ்ரீ எனவும் நண்பர்களிடம் விஜய்,தாரா எனவும் அழைக்கப்படுவர் )
இரும்பினை உருக்கி உரு அமைக்கும் விஜய் ஸ்ரீக்கும்,பூந்தோட்டத்தில் பூவென வளரும் தாரா ஸ்ரீயையும் மையலிட்ட காதல் கதை இது. இடையே இவர்கள் இணைய இன்னும் இரு காதல் கதைக்களத்தில்.
ஏனைய முக்கிய பாத்திரங்களாக
மீனா (விஜயின் அத்தை மற்றும் அவர் கணவர் பிரசாத்.இவர்களின் பிள்ளைகளாக,
நிவிதா, ஹரி
வள்ளி- விஜயின் பாட்டி
பிரபாகர்- விஜய்யின் நண்பன்
அனிதா, புன்யா- தாராவின் நண்பர்கள்
ஏனைய கதை களத்தில் …
அத்தியாயம் 1
தாமரை தன் தலைவன் வர காத்திருந்து அவன் முகம் காணும் வேளை, பட்டுத்தெறிக்கும் கதிரவன் ஒளியில் மரத்தின் தளிர்களில் படிந்த பணி துளிகள் உருகிடும் கனப்பொழுதுகளில், நானே உலகை கூவி எழுப்புவேன் என தினமும் சபதம் எடுத்து சேவல் கூவும் அவ்வேளை சாலைகளுக்கு காவலனாக இருக்கும் பனி மூட்டத்தின் நடுவே ஓடி வரும் நம் நாயகனும் அவனது இரு நண்பர்கள் தருண் மற்றும் பிரபாகர்.
கல்லூரியில் மெகேனிகள் இன்ஜினியரிங் பிரவில் கற்கின்றனர்.
இவர்களது படிப்பு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன .
இறுதி வருடம் நண்பர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் என தங்களது வசதியையும் மீறி கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர்.
தருண், விஜய் இருவரும் பத்தாம் வகுப்பு முதல் இன்று வரை உன்னதமான நட்பினை உடையவர்கள்.இவர்களுடன் கல்லூரியில் இணைந்தவன் பிரபா.
“டேய் விஜய்,எங்கடா நம்ம ஜான்சி ராணி, எப்படித்தான் எந்தப் பக்கம் ரூட்ட மாத்தினாலும் கணக்கா வந்துருவாளே.”
“பிரபா வாயை வச்சுக்கிட்டு சும்மா இரு, அவ காதுல விழணும் உனக்கு இருக்கு.” என தருண் சொல்ல,
“ஹையோ பக்கீஸ் இன்னமும் அதை கண்டு பிடிக்கல்லையாடா?” எனக் கூறிக்கொண்டே அவர்களுடன் வந்து இணைந்து கொண்டாள் நிவிதா.
விஜய்யின் அத்தை மகள். கல்லூரி முதலாம் ஆண்டின் இறுதிப்பகுதியில். கட்டடக்கலை பிரிவு.
இவர்களது ஓட்டம் தொடங்கி ஒரு 15நிமிடம் செல்ல தினமும் வழி மாறி அவளை விட்டுச் சென்றாலும், இவர்களுடன் இணைந்து கொள்வாள்,
“ஹாய் அத்தான், குட் மோனிங்.”
“ஹாப்பி மோனிங் நிவி குட்டி.” என விஜயை அணைத்து விட்டே அவளது ஓட்டம் தொடரும்.
“ஹாய் பக்கீஸ் என்னப்பா இன்னுமா அதை கண்டுபிடிக்கல்ல?” என நிவி கூற,
“ஆமா எப்படித்தான் உனக்கு நாம வர ரூட் தெரியுது.காலங்காத்தால ஜோகிங் வர பிகருகள பாக்கலாம்னா நீ நம்ம கூட வந்தத பார்த்ததும் பார்க்குறதுகளும் திருப்பிகிட்டு போறாளுக.”
“ஹையோ அத்தூ, நீ சொல்லவே
இல்லையா? “
விஜய் முழிக்க,
“நீங்க ரனிங் ஸ்டாட் பண்ணதுமே அத்தான் மெசேஜ் பண்ணிருவாகங்ளே.”
“டேய்,நீ நல்லா வருவடா…” பிரபா விஜய்க்கு அடிக்க வர தருண், “விட்ரா விட்ரா அவ தனியா போ பயம்னு தானே நம்ம கூட வரா.” என சமாளித்து வைத்தான்.
“யாரு எனக்கு பயமா, ஆமாண்டா பக்கீஸ் பயம் தான், ஏன்டா.எனக்கு என் அத்தானை பார்த்து கொஞ்ச நேரம் அவங்க கூட இருந்ததாதான் அந்த நாளே புத்துணர்வா இருக்கும்.
சின்னதுல இருந்து அப்பிடியே பழகிட்டேன்.சோ நா இந்த நேரத்தை அதுக்காக யூஸ் பண்ணிக்குறேன்.” என கூற, விஜய் அவளை தோளோடு அணைத்துக் கொண்டு,
” விடுடா அவன் உன்ன கலாய்கிறான்.”
“அப்போ கல்யாணத்துக்கு அப்புறம்
என்ன பண்ணுவ? உன் புருஷன் தினமும் இவனுடைய முகத்த்தில் முழிக்க அனுமதிப்பானோ என்னவோ.” பிரபா கேட்க,
“ஆமால்ல… அப்போ என்ன பண்ணலாம் அத்து…?’
என விஜயிடம் கேட்டு விட்டு அவளே,
‘அப்போ நா அத்துவையே கல்யாணம் பண்ணிப்பேன்.” என கூறிக்கொண்டு அவள் முன்னாள் ஓடி விட விஜயோ ‘ என்னடா இவள் இப்டி சொல்றான்னு ‘ பார்க்க, நிவிதாவை மூன்று வருடங்களாக கண்களால் மட்டுமே காதல் கொண்ட தருணது மனமோ ஒரு நிமிடம் நின்று துடித்தது. நண்பனாக பழக விட்டதற்கு தன் காதல், நட்புக்கு செய்யும் துரோகமாக நினைத்து விஜய்க்கு விளங்காதவாறு நடந்து கொள்வான். இன்று மனம் கொஞ்சம் ஆட்டம் கண்டு விட கவலைக் கொண்டான்.
“அதானே பார்தேன் …” என பிரபா எதுவோ சொல்ல வர,
“டேய் அவ சின்ன பொண்ணுடா, வாயாடி ஏதோ வாய்க்கு வந்தத உளறிட்டு போரா.” என்று விஜய் அப்பேச்சை அத்தோடு நிறுத்தியவன்,
“தருண் அடுத்த வாரம் நம்ம பிளான் படி ரெண்டு நாள் தங்க அப்பா ஒத்துப்பாங்களாடா?” என விஜய் கேட்க,
“ஆமாடா வீட்ல எல்லாரும் தோட்டத்துக்கு போறாங்களாம் அதோட நமக்கும் தங்க ஏற்பாடு பண்றதா சொன்னாரு அங்கேயே நம்மளையும் கூப்புட்றாங்க டா, நீங்கெல்லாம் விரும்புவீங்களோன்னு தெரிலயே.கேட்டு சொல்றதா அப்பாகிட்ட சொன்னேன்டா.”
” ஹ்ம் ஊருக்கு போன கொஞ்சம் சேன்ஜா இருக்கும்டா போலாம், அவர்களுக்கு நாம போறது தொந்தரவா இருக்குமோ தெரியலையே டா? “
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா அப்பா சந்தோசமா வரசொன்னாங்க.”
“ஓகே.அப்ப இந்த வார இறுதி நம்ம தருண் ஊருல… “
“டேய் போன வாரம் நம்ம ஊருக்கு வந்து என்னை நம்ம மாமா குடும்பத்தோட பகைச்சு விட்ட இந்த வாரம் தருணா … நீ பாவம்டா.”
இப்படி இவர்களது காலை ஓட்டம் முடிய கல்லூரிக்கு கிளம்பினார்கள்.
*******
“மாதவி, ஸ்ரீ எங்கம்மா? என குமார் சாய்வு நாட்காலியில் அமர்ந்த வாரே கேட்க,
“ஊஞ்சல்ல உட்கார்ந்து எதையோ படிச்சிட்டு இருந்தா,இந்த வாரம் தோட்டத்துக்கு போகும் சந்தோஷத்தில் இருக்காள். “
ஹம் தனியா இருப்பதனால் அவளுக்கு யாருமில்லை. என மாதவி வருந்த,
” அதுதான் மாதவிம்மா நம்ம ஸ்ரீ கூட விளையாட தங்கச்சி கொண்டு வரலாம்னு சொன்னேன். நீ தான் கேட்கவே இல்ல. பாரு இப்போ ஸ்ரீ தனியா இருக்கா.”
ஹய்ய ஆசைதான் இருபத்துமூன்று வயசுல பைய்யன வெச்சுகிட்டு பேசுற பேச்சப்பாரு.பையனுக்கு இருபத்துமூன்று தான் பொண்ணுக்கும் பதினெழு வயசுதான் ஆகுது, வயதெல்லாம் ஒரு பிரச்சினையா மாதவிம்மா ஸ்ரீக்கு தங்கை தானே முக்கியம்.”
“ஹையோ ஆசைதான் என அவரது தோளில் தட்டி விட்டு கணவனுக்காக தேநீரை கொடுத்தாள்.
நானே உயர்தவன் என வீராய்ப்பாய் மலைகள் எழுந்து நிற்க, அதன் பின்னே ஒழிந்து விளையாடும் கதிரவன் அந்தி மாலை கதிர்களை பரப்பிக்கொண்டிருக்க அதன் ஒளி நிறத்திற்கு நிகரான மஞ்சள் வண்ண பாவாடைக்கு பச்சை வண்ண தாவணி அணிந்து வரும் தன் மகளின் அழகை பார்த்த இருவருக்குமே இள வண்ண மஞ்சள் ரோஜாவே ஓடி வருவது போல இருந்தாள்.
“ப்பா, ‘என கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்ட ஸ்ரீ அப்படியே அவர் அருகில் அமர்ந்து அப்பாவின் தேநீரை வாங்கிக்கொண்டாள்.
‘ம்மா அண்ணாவும் ஊருக்கு வராங்களா? அண்ணாவை நம்ம கூட தங்க சொல்லலாம் மா.”
“அண்ணா அவங்க பிரன்ஸ் கூட வருவாங்கடா குட்டி. அவங்க பிரன்ஸ்களோட இருப்பாங்க. நம்ம கூட வீட்ல தானே தங்க போறாங்க. உன்கூட தங்க அனிதாவையும் நம்ம கூட கூட்டி போகலாம்.அவகூட உனக்கு தோட்டத்தில் இருக்கலாம்டா சரியா? ” என அவள் தலையை வருடி விட்டார்.
(அனிதாவின் பெற்றோர் அரசாங்க தொழில் புரிவோர், அவர்கள் தினமும் மாலை வரும் வரையில் பாடசாலை விட்டு வந்தவள் ஸ்ரீ உடன் அவளது வீட்டிலேயே இருப்பாள்)
இருவரும் நல்ல தோழிகள்
“ஹ்ம்..” என தலையை ஆட்டியவள் தந்தையின் தோளிலே சாய்ந்து கொண்டாள்.
ப்ளஸ் டூ வகுப்பில் படிக்கும் தாரா ஸ்ரீ, அமைதியானவள் தந்தையுடன் அதிகம் ஒன்றி இருந்தாலும் தாயுடனே அனைத்தும் பகிர்வாள். அவருடன் அமர்ந்து இருப்பதே அவளுடைய மனதிற்கு இதம் தரும். அவள் பேசும் பொழுது குரலும் முகமும சிறு குழந்தையின் சாயலை கொண்டிருக்கும்,தந்தை தோள் சாய்ந்து தாயிடம் கதை கூறுவாள். தந்தை அவள் முகம் கண்டு அகம் உணர்வார்.தருண் பிறந்து ஆறு வருடங்களின் பின் பிறந்தவள்.பிறந்த முதல் 3 மாதங்களாக சுவாசிக்க முடியாமல் வைத்தியசாலை வாசம் காத்து மாதவி பல உடல் கஷ்டங்கள் அனுபவித்து பெற்றெடுத்தவள். பிறந்தது முதல் பூ என வாடாது வளர்க்கும் அன்பு பெற்றோர். தருணும் தந்தைக்கு நிகராக தங்கை மீது பாசமாக இருப்பவன். தினம் தூங்கும் போது ஸ்ரீ புராணம் கேட்டு விட்டே தூங்குவான்.
ஆனால் பேசும் சத்தமும் வார்த்தைக்கு வலிக்குமோ எனும் வகையில் வரும். எனவே தருண் பேசும் போது ஸ்பீக்கர் ஒன் பண்ணி தான் பேசுவான், அதனால் அவள் குரலுக்கு ரசிகர்களும் உண்டு.