இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 12

Screenshot_2021-06-21-17-30-01-1-972feaa0

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 12

Epi12

காலைக்கதிரவன்‌ உலகுக்கு ஒளிகொடுக்க அவ்வொளி விஜயின்‌ அறையை நிரப்பிய நேரம்,

 

நேற்று இரவு நேரம்‌ சென்று உறங்கினாலும்‌ இன்று செய்ய இருக்கும்‌ வேலைகளுக்கான லிஸ்ட்‌ நீண்டதாகவே இருக்க இன்று மாலை ஜெர்மனி செல்வதற்கான அவனது

பயணப்பொதிகளை பேக்‌ செய்தவன்‌ அதனை எடுத்து வைத்து விட்டு குளித்து வந்தவன்‌ இடுப்பில்‌ சுற்றி இருந்த டவலுடனேயே அவனது அறை மினி கிச்சேனில்‌ அவனுக்கான தேநீரை தயாரித்து பருகினான். அவனது மனமோ,

‘இன்றைய இந்த ஒருவனுக்கான தேநீர்‌ அடுத்த முறை தயாரிக்கும்‌ போதும்‌ ஸ்ரீ குட்டி உனக்காகவும்‌ இருக்கும்‌.’ மனதில்‌ கூறிய படி ஆபிஸ்‌ செல்ல தயாராகி

வந்தான்‌. எதோ மனதில்‌ ஓர்‌ பாரம்‌. ஒரு வார்த்தை வீட்டினருக்கு என்‌னோடு பேசுவவதற்கு என்ன. அவள்‌ உயிர்‌ பிரிந்திருந்தால்‌ இன்றைய இந்த வீட்டின்‌ நிலை. என்‌ நிலை. நினைக்கவே தாங்க முடியவில்லை அவனால்‌.வீட்டில்‌ இருப்பவர்களுக்கும்‌ அப்படித்தானே இருக்கும்‌. தன்‌ மனதை சமாதானப் படுத்தியவன்‌ படிகளில்‌ கீழிறங்கி வர அவனைவரும்‌ காலை உணவை உண்டுக்‌ கொண்டிருந்தனர்‌.

 

“ஸ்ரீப்பா…” என ஹரிணியின்‌ குரலில்‌ அவன்‌ வருவதை உணர்ந்தவர்கள்‌ எவரும்‌ நிமிர்ந்தும்‌ பார்க்கவில்லை. நேற்று ஹாஸ்பிடலில்‌ பார்த்தது இப்போது தான்‌ பார்க்கின்றனர்‌…

 

திவ்யா ஹரிணியை இரக்கி விட அவனிடம்‌ ஓடியவள்‌, அவனை தூக்குமாறு கை நீட்ட அவளை தூக்கி கன்னங்களை தன்‌ மீசைக்கொண்டு உரச, “குத்துது ஸ்ரீ ப்பா…” என அவன்‌ முகத்தை தன்‌ பிஞ்சு விரல்‌ கொண்டு தடவி “இது வேணாம்‌” எனக்கூற,

“ஓஹ்‌ வேணாமா? அப்போ கட்‌

பண்ணிரவா? ‘ எனக் கேட்க அவள்‌ வேகமாக தலையசைத்தாள்‌.

‘ஹனி பாப்பா போய்‌ அம்மாகூட

சாப்பிடுவீங்களாம்‌. ஸ்ரீ ப்பா ஆபிஸ்‌ போறேன்‌.” என அவள்‌ கன்னங்களில்‌ இதழ்‌ பதித்து இறக்கி விட,

“மம்மா சாப்பிடல? ஓஹ்‌ டூ விட்டுடீங்களா? ” நேற்று அவன் கூறியதை ஞாபகம்‌ வைத்து கேட்க, மெலிதாக அவளுடன்‌

சிரித்தவன்‌ “ஹ்ம்ம்‌…” என பாவமாக முகத்தை வைத்து கூற அதுவும்‌ உண்மை என நம்பி அவள்‌ அன்னையிடம்‌ சென்றாள்‌.

மேசையின்‌ அருகே தன்‌ அப்பாவிடம்‌ வந்தவன்‌, “ப்பா உங்க கூட கம்பனி சம்பந்தமா கொஞ்சம்‌ பேசணும்‌, ஆபிசில்‌ வெய்ட்‌ பண்றேன்‌ ” என்றவன்‌ தனது தாயை பார்க்க அவன்‌ உணவுக்காக மேசையில்‌ அமருவான்‌ என எதிர்‌ பார்த்து இருக்க அப்படியே கிளம்பிவிட்டான்‌. கண்‌ கலங்க தன்‌ மாமியாரை பார்க்க அவரும்‌ அருணாவைதான்‌ பார்த்தார்‌. தினமும்‌ ஆபிஸ்‌ செல்ல முன்‌ ஹனி குட்டிக்கு வழங்கிய இதழ்‌ ஒற்றல்கள்‌ அவனது அன்னைக்கும்‌ பாட்டிக்கும்‌ தினம்‌ கிடைக்கும்‌.

 

‘யாரும்‌ பேசாதது வேறெவரோ ஒருவர்‌ வீட்டில்‌ இருக்கும்‌ நினைப்பு தோன்ற, இதுவே தொடர்ந்தால்‌ அனைவரையும்‌ வெறுத்திடுவேன்‌. கோபத்தால்‌ அவர்களை நோகச்‌ செய்திடுவேன்‌. நான்‌ எடுத்த முடிவே சரி. அவர்கள்‌ சகஜமாக மாறவும்‌ நான்‌ இதை விட்டு வரவும்‌ பிரிவு நல்ல வழியாக அமையும்‌’ என்று நினைத்தவன்‌ ஆபிஸ்‌ நோக்கி வண்டியை கிளப்பினான்…

 

ரமேஷுக்கு கால் செய்தவன்‌, மீட்டிங்‌ ஒன்று அரேன்ஜ்‌செய்யுமாறு கூறி அதற்கான வேளைகளையும்‌ கூறி அப்பா வந்ததும்‌ மீட்டிங்‌ ஆரம்பமாகும்‌ என்று கூறச்சொன்னான்‌.

 

அப்பாவிடம்‌ தனியாக பேசினால்‌ ஒரு போதும்‌ சம்மதிக்க மாட்டார்‌. பொறுப்புகளை மீண்டும்‌ அவருக்கு சுமையாக கொடுக்க கூடாது. இப்போது தான்‌ சற்று ரிலாக்ஸாக இருக்கிறார்‌. எனது பொறுப்பை நான்‌ வரும்‌ வரை இன்னொருவர்‌ பொறுப்பில்‌.

அவ்வளவே. அனைவர்‌ முன்னிலையில்‌ என்‌ முடிவுகளுக்கு அப்பாவினால்‌ மறுப்பு சொல்ல முடியாது. தந்தையை

நன்கு அறிந்தவனாக மீட்டிங்‌ அரேன்ஜ்‌ செய்தான்‌.

 

விஜய்‌ அவனது அறையில்‌ அமர்ந்திருக்க உள்ளே வந்த ரமேஷ்‌ “சார்‌ ! அப்பா வந்துட்டாங்க” எனவும்‌. ஓகே ரமேஷ்‌ இதோ வரேன்‌ என்றவன்‌, அவனை பார்க்க “என்ன ரமேஷ்‌ யோசனை?”

“ஒன்னும்‌ இல்ல சார்‌. ‘அப்டின்னா சரிதான்‌ வாங்க போகலாம்‌.” என விஜய்‌ முன்னே நடக்க அவனை ரமேஷ்‌ தொடர்ந்து மீட்டிங்‌ ஹாலுக்கு வந்தனர்‌. அவனது தந்‌தை, நிவியின்‌ அப்பா, ஹரி,மற்றும்‌ கம்பெனியின்‌ முக்கிய பதவியில்‌ இருப்போர்‌ என அனைவரும்‌

கூடியிருக்க அனைவருக்கும்‌ தன்‌ காலை வணக்கத்தினை கூறியவன்‌,

 

“அனைவரும்‌ இந்த திடீர்‌ மீட்டிங்‌ எதற்கு என்று யோசித்திருப்பீர்கள்‌. என்னுடைய பர்சனல்‌ காரணத்திற்க்காக சில காலம்‌ நான்‌ வெளிநாடு செல்லவிருப்பதனால்‌ நான்‌ இந்த கம்பனிக்கு வந்தது முதல்‌ செய்துகொண்டிருக்கும்‌ வேலைகள்‌ நான்‌ இங்கு இல்லாவிட்டாலும்‌ எவ்வித தடையும்‌ இன்றி செய்யப்பட வேண்டும்‌ என்பதற்க்காக என்னுடைய வேலையினை என்‌ தலைமையில்‌ ஒருவர்‌ பொறுப்பில்‌ விட்டுச்செல்ல முடிவெடுத்துள்ளேன்‌… “

 

அவ்விடம்‌ பெரும்‌ அமைதி. வீட்டினருக்கு அதிர்ச்சி தகவல்‌…

 

“இனி இந்த கம்பெனியில்‌ என்‌ பொறுப்பில்‌ இருந்த வேலைகள்‌ என்‌ தலைமையின்‌ கீழ்‌ மிஸ்டர்.ரமேஷ்‌ பொறுப்பில்‌ நடைபெறும்‌…

நான்‌ திரும்பி வந்ததும்‌ பொறுப்புகள்‌ எனக்கு கீழ்‌ கொண்டு வரும்‌ வரையில்‌ அனைவரும்‌ ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்‌. ஒரு ஆறுமாதம்‌ சென்ற பிறகு ரமேஷ்க்கு துணையாக மேலதிக வேலைகள்‌ செய்வதற்கு அவருக்கு உதவியாக வேலையாட்கள்‌ அமர்த்தப்படும்‌. அதுவரையில்‌ அவ்வப்போது எனது உதவியுடன்‌ இதனை தனியாக கொண்டு செல்ல வேண்டும்‌. இது அவருக்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும்‌ என்று நினைக்கிறேன்‌ நன்றி. ”

 

அவனது உரை ஆங்கிலத்தில்‌ தெளிவாகவும்‌ இடையில்‌ எவரும்‌ கேள்வி கேட்க முடியாத வகையிலும்‌ பேசிவிட்டு அவனது இருக்கையில் அமர்ந்தான்‌…

 

“ப்ளீஸ்‌, இனி உங்கள்‌ வேளைகளில்‌ ஈடுபடலாம்‌.”  எனவும்‌ அவ்விடம்‌ வீட்டினர்‌ தவிர்த்து அனைவரும்‌ விடைப்பெற விஜயின்‌ தந்‌தை ராஜின்‌ பார்வை முழுதும்‌ அவன்‌ முகம்‌ நோக்கியே இருக்க, அமர்ந்தவன்‌ ஒரு முறை அவரை நிமிர்ந்துபார்த்தவன்‌ அதன்‌ பின்னர்‌ அவர்‌ பக்கம்‌ திரும்ப வில்லை…

யாரும்‌ கேட்கும்‌ கேள்விகளுக்கு விடை சொல்லும்‌ மனநிலை அவனிடம்‌ இருக்க வில்லை. அவனருகே வந்த ஹரி, “இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி யெல்லாம்‌ பண்ற ஸ்ரீ?

 

“நத்திங்‌. யாரும்‌ என்னால நோக வேணாம்னு இருக்கேன்ண்ணா.”

 

‘யாரும்‌ இப்போ உனக்கு என்ன சொல்லிட்டாங்க? “ஹரி அவனை வினவ

 

“யாரும்‌ ஒன்னும்‌ சொல்லல்ல. அது தான்‌ எனக்கு கஷ்டமா இருக்கு.’ என்றவன்,

 

‘சாரி. உன்‌ பொறுப்பில்‌ விடலாம்னு தான்‌ இருந்தேன்‌. ஷோ ரூம்‌ வேறு பார்த்துக்கணும்‌. உன்‌ மேல இன்னும்‌ வேலைகளை தரமுடியாதுன்னு தான்‌.”

விஜய்‌ கூற,

“அதுன்னா ஒகே தான்‌. என்னால எப்படியும்‌ தலைக்கு பாரமான விஷயங்களை ஹேண்டில்‌ பண்ண முடியாது டா.”

 

“அப்பப்ப கொஞ்சம்‌ பார்த்துக்க ண்ணா.” என விஜய்‌ கூற அவன்‌ தோள்களில்‌ தட்டியவன்‌, ” பார்த்துக்கலாம்‌ விடு.

எனக்கு கொஞ்சம்‌ வேலை இருக்கு அப்புறம்‌ மீட்‌ பண்ணலாம்‌. வரேன்‌ என்றவன்‌ வெளியே செல்ல அதுவரையுமே ராஜோ. ஹரியின்‌ அப்பாவோ எதுவும்‌ பேசாது எழுந்துக்கொள்ள. தந்‌தை தன்னை பேசவாவது செய்வார்‌ என பார்த்தவனுக்கு மனதுக்கு கஷ்டமாகி போனது. ரஜோ அவன்‌ இன்றே செல்லவிருப்பது தெரியாமல்‌ மெதுவாக அவனுடன்‌ பேச நினைத்திருக்க,

 

தோள் மேல்‌ கைபோட்டு பேசும்‌ தந்தை இல்லை என்றாலும்‌ தூர நிறுத்தி பேசும்‌ தந்தையும்‌ இல்லை.

‘என்னடா! என இப்போதே அதட்டி பேசியிருந்தால்‌ அவன்‌ செல்லாது இங்கேயே இருப்பான். இருந்தும்,

 

விஜய்‌ தனது கெபினுக்கு வர நேரம்‌ பத்தை

தாண்டியிருந்தது…

 

நிவியின்‌ அன்னை மீனா மற்றும்‌ அருணா ஹாஸ்பிடல்‌வந்து நிவியை வீட்டிட்கு அழைத்து வந்திருந்தனர்‌. அவர்கள்‌ வீடு வரவும்‌ ராஜும்‌ நிவியின்‌ தந்தையும் வாசலில்‌ வண்டியை விட்டு இறங்கிக்‌ கொண்டிருந்தனர்‌.

நிவியை அழைத்து சென்று ஹாலில்‌ அனைவரும்‌ அமர, வள்ளிப்பாட்டி நிவி அருகே வந்து அவள்‌ தலை கோதி அவள்‌ நலம்‌ விசாரித்து விட்டு அவள்‌ அருகே அமர்ந்துக் கொண்டார்‌.

 

அருணா அனைவருக்கும்‌ பருக நீர்‌ கொடுத்து விட்டு கணவர்‌ முகம்‌ காண எதோ யோசனையில்‌ இருப்பதை கண்டு,

” என்னாச்சுங்க இந்த டைம்‌ வீட்டுக்கு வந்துடீங்க? “எனக் கேட்க,இன்று விஜய்‌ கூறியவைகளை கூற அருணாவுக்கு மனம்‌ தாங்க வில்லை. “ஈவினிங்‌ அவன்‌

வீட்டுக்கு வந்ததும்‌ இது பற்றி அவன்‌ கூட

பேசணும்‌.”

“ஆபிஸ்ல வச்சே அவன்கிட்ட கேட்டிருக்கலாம்‌ இல்ல?”

“எல்லோருக்கும்‌ முன்னே நான்‌ அவனை கேள்வி கேட்க மாட்டேன்னு தெரிஞ்சு தானே எல்லார்‌ முன்னாடியும்‌ சொன்னான்.”

 

உன்னை மாதரித்தானே உன்‌ பையனும்‌ இருக்க போறான்‌. அப்புறம்‌ என்னடா? ”  வள்ளிப்பாட்டி கூற,

 

“ஆமா எங்க அண்ணன்‌ செய்ற வேலையெல்லாம்‌ அவன்‌ பார்க்கப் போய்த்தான்‌ இன்னக்கி என்‌ பொண்ணோட நிலை இப்படி இருக்கு. அண்ணா குணம்‌ மட்டுமா அவனுக்கு இருக்கப்போவுது.” மீனாவின்‌ வாய்‌ இடக்காக கொஞ்சம்‌ அதிகமாகவே பேசி விட,

 

“மீனா என்ன பேசணும்னு இல்ல, என்ன எங்க எப்படி பேசணும்னு இன்னும்‌ நீ கத்துக்கல்ல, அதையே தான்‌ பொண்ணுக்கும்‌ படிப்பிச்சு வெச்சிருக்க.”  மீனாவின்‌ கணவர்‌ அவரை முறைத்தவாரே கூறிவிட்டு ‘நிவியை அழைச்சிட்டு அவள்‌ அறைக்கு கூட்டிப்போ. ‘

 

அருணாவோ ஏதும்‌ பேசாது அவ்விடம்‌ விட்டு அறைக்கு சென்று விட. அவர்‌ பின்னே வந்த ராஜ்‌,

“அவன்‌ ஈவினிங்‌ வந்ததும்‌ நான்‌ பேசுறேன்‌. அதனை பற்றி யோசிக்காதே என்ன. அவரிடம்‌ இருந்து,

” ஹ்ம்ம்‌,’ என்ற பதிலுடன்‌ ‘நான்‌ தான்‌ என்‌ பையனை என்னைப் போலவே வளத்துட்டேன்‌ போல”.என்று கூற,

 

“அருணா என்ன இப்படியெல்லாம்‌ பேசுற.”

 

“ஒன்னும்‌ இல்லங்க. “கூறியவர் அறை விட்டு வெளியே சென்று விட்டார்‌..

 

தனது அறைக்கு வந்த நிவி ஈவினிங்‌ அத்து வந்ததும்‌ பேசணும்‌.என்னால எவ்வளவு சிக்கல்‌. தருணுக்கு முதல்‌ முறையாக மெசேஜ்‌ செய்தவள்‌ ‘தரு,நான்‌ வீட்ட வந்துட்டேன்‌. வீட்ல கொஞ்சம்‌ ப்ரோப்லம்‌,ஆல்சோ ஐ பீல்‌ ஸ்லீப்பி. அத்து கூட கொஞ்சம்‌ பேசிரு. மிஸ்‌ யூ தரு. உன்‌ கூட நிறைய பேசணும்னு இருக்கு பட்‌ ஐ காண்ட்‌… “

 

விஜயுடன்‌ பேசு என்று சொன்னவள்‌ அவன்‌ வெளிநாடு செல்லப் போகிறானாம்‌, என்றாவது கூறியிருந்தால்‌ அவன்‌ உடனே அவனுடன்‌ கதைத்திருப்பான்‌. அனைவரும்‌ அவனுடன்‌ மாலை கதைக்க நினைத்திருக்க அவனோ மாலையே அவர்களை விட்டு செல்ல நினைத்திருந்தான்‌. தாராவை பார்த்து விட்டு வந்தவனுக்கு நேரம்‌ ரெக்கை

கட்டி பறக்க ட்ராபிக்கில்‌ மாட்டி வீடு வந்து சேரவே மணி இரண்டெனக்காட்டியது. வீட்டிலிருந்து ஒசூர்‌ விமான நிலையம்‌ செல்ல ஒரு மணி நேரம்‌ எடுக்கும்‌. 5.30க்கு பிலைட்‌. அங்கிருந்து 6.30க்கு சென்னைக்காணது.இரவு பத்து மணிக்கு சென்னையிலிருந்து ஜெர்மனிக்கான பிலைட்‌. வீட்டிலிருந்து எப்படியும்‌ நாலுமணிக்கேனும்‌ சென்றால்‌ தான்‌ சரியாக இருக்கும்‌ என கணித்தவன்‌, வீட்டுக்குள்‌ நுழைய. பகல்‌ உணவு உண்டு அனைவரும்‌ அவர்‌ அவர்‌ அறையில்‌ சிறு தூக்கம்‌ கொள்ளும்‌ நேரம்‌. ஹரிணியின்‌ சத்தம்‌ மட்டுமே அவர்களது அறையில்‌ கேட்டுக்கொண்டு

இருந்தது.

 

மாடியேறியவன்‌ கண்ணில்‌ அவனது அறைக்கு நேரெதிரே தெரிந்த அறை மூடியிருக்க, நிவி வந்து விட்டதை புரிந்துக்கொண்டவன்‌.அவளை பார்க்க துடித்த மனதை அடக்கி அவனது அறைக்கு சென்று அப்படியே

கட்டிலில்‌ விழுந்தான்‌…

 

கண்களில்‌ அவனது தேவதை பெண்ணின்‌ விம்பம்‌.ஒரு வார்த்தை பேசியிருக்கலாமோ? அவளருகே சென்றிருந்தால்‌ மனதில்‌ இருந்த வருத்தங்களை அவளைக்கொண்டு போக்கிவிட நினைத்து கட்டாயம்‌ அவளை இருக்க அனைத்திருப்பான்‌. தன்‌ தாய்‌ மடி சாய்ந்திருக்க நேற்று முதலே துடிக்கும்‌ அவன்‌ இதயம்‌, அவளிடம்‌ கட்டாயம்‌ அதை எதிர்‌ பார்க்கும்‌.‘சாரிடா ஸ்ரீ குட்டி உன்‌ கிட்ட பேசிட்டேன்னா அப்புறம்‌ என்னால ஒன்னுமே கண்ட்ரோல்‌ பண்ண முடியும்னு தோணல டா. முதல்ல உங்க அண்ணன்‌ லவ்வுக்கு கிறீன்‌ லைட்ட போட்டுட்டு நம்ம ரூட்டை சீக்கிரமே தொடங்கிருவேன்‌. அதுவரை எனக்காக வெய்ட்‌ பண்ணு

பேபி.மிஸ்யூ மை டக்லிங்‌…’

 

அவனது பயணப்பொதியில்‌ அனைத்தையும்‌ சரி பார்க்க தருண்‌ அவனுக்கு கால் எடுத்தான்‌.எடுத்தவன்‌, “எங்க இருக்க விஜய்‌, வீட்ல என்னாச்சு என்னப்ரோப்லம்‌ ?”என

 

“வீட்ல என்ன? இப்போதான்‌ நான்‌ வீட்டுக்கு வந்தேன்‌.”

“ஓஹ்‌.இல்ல… நிவி மெசேஜ்‌ பண்ணினா. எதோ பிரச்சினை உனக்கு கால் பண்ணுனு. அதான்‌. ‘

‘ஓஹ்‌’ (அப்பா வீட்டுக்கு வந்து காலைல ஆபிசில்‌ நடந்ததை சொல்லி இருப்பார்‌. என மனதில்‌ நினைத்தவன்‌,

“என்னாச்சுன்னு தெரியல டா. இதுக்கப்றம்‌ தான்‌ பார்க்கணும்‌ என்னன்னு. நீ எங்க இருக்க? ‘

 

“நான்‌ இப்போ தான்‌ வீட்டுக்கு போகலாம்னு கிளம்புறேன்‌.”

‘அப்போ நீ என்னை நாலு மணிபோல பிக்கப்‌ பண்ணிக்க வீட்டுக்கு வரமுடியுமா? ‘

 

“எங்க போகப்போற? ” தருண்‌ கேட்க,

 

“அதை வழியில்‌ பேசிக்கொள்வோம்‌, டைம்க்கு வந்துரு.” என்றான்‌.

 

“சரிடா ஓகே. வர்றேன்‌.”

 

போனை வைத்துவிட்டு குளித்து கிளம்பியவன்‌ நேரம்‌ பார்க்க 3.30.அவனது பைகளை அறைக்கு வெளியே வைத்தவன்‌ வேலையாளை அழைத்து கீழே ஹாலுக்கு கொண்டு செல்லுமாறு சொல்லவும்‌ வேலையாள்‌ கீழே கொண்டு வர அருணா அறை விட்டு வெளியில்‌ வந்தவர்‌, “யாருடையது?” எனவும்‌,

” ஸ்ரீ தம்பிதான்‌ கீழ வைக்கச் சொன்னாரும்மா.

 

மாடியை பார்க்க விஜய்‌ கிழே வந்துக்கொண்டிருந்தான்‌.அவரை பார்த்தவன்‌ அப்படியே வேலையாளிடம்‌,

“அண்ணா டீ வேணும்‌ ‘ என. சரி தம்பி இருங்க கொண்டு வரேன்‌ என்று உள்ளே சென்றார்‌.

 

தருண்‌ கால் செய்து “ரெடியாகிட்டியா?” எனவும்‌ “ஆம்‌ ரெடி.. நீ எங்க இருக்க?”

எனவும்‌ இன்னும்‌ 15 நிமிடங்களில்‌

வந்துவிடுவதாக கூறி போனை வைத்தான்‌ தருண்‌…

 

முன்‌வாசல்‌ சோபாவில்‌ அமர வேலையாள்‌ தந்த டீயைக் குடித்தான்‌. அருணா வேலையாளை கண்‌ காட்ட.

“தம்பி சாப்பிட எதாவது? ” அவரை நிமிர்ந்து பார்த்தவன்‌ அருணாவை பார்த்தவாறே,

” காலைல லேட்டாதான்‌ சாப்பிட்டேன்‌ணா அதனால பசியில்லை. ” என்றான்‌.

‘அப்போ மதியானம்‌ இன்னும்‌ சாப்பிடல்லையா தம்பி? ‘

“பசிக்கல…”

ஒவ்வருவராக ஹாலில்‌ வீட்டினர்‌ அனைவரும்‌ வந்திருக்க. நிவி மட்டுமே தூங்கியிருந்தாள்‌.

 

“ஸ்ரீப்பா…”  என ஹரிணி அவனருகே அமர்ந்தவள்‌ எங்க போக போறீங்க என அனைவருக்கும்‌ தெரிய வேண்டிய

விடைக்காண கேள்வியை கேட்டாள்‌.

“ஸ்ரீப்பா…” கைக்கொண்டு செய்கையால்‌ பிளைட்டில்‌ செல்வதாக

காட்டினான்‌.

” ஹைய்‌ நானும்‌ நானும்‌… ” என துள்ள, அருணா அவனை பார்க்க, அவளை பார்த்தவன்‌ வீட்டினரையும்‌ பார்த்து பொதுவாக, “நான்‌ ஜேர்மன்‌ போகிறேன்‌.என்னால யாரும்‌ மனம்‌ நோகக்கூடாது. இவ்வளவு நாளும்‌ நான்‌ என்‌ மனதறிந்து அப்படி நடந்ததில்லை. இனியும்‌ அப்படித்தான்‌ நடப்பேன்‌. அதற்காகத்தான்‌ இந்த பயணம்‌. என்னால அங்க தனியா இருக்க முடியுமான்னு தோணல்ல. ட்ரை பண்றேன்‌. திரும்ப இங்கயே தான்‌ வரணும்‌. அப்படி வர்றப்ப நேற்றிலிந்து நீங்கெல்லாம்‌ என்கூட இருக்கிறதை போல இருப்பிங்கன்னா சொல்லுங்க நான்‌ வரல்ல. இந்த ஒரு நாளைக்கே எனக்கு மூச்சு முட்டுது…”

அவன்‌ கண்கள்‌ கலங்கி இருந்தது.அதனை கட்டிக்கொள்ளாதவன்‌ கீழே குனிந்தவாறு

 

“சாரிப்பா ஆபிசில்‌ தப்பா பேசிருந்தேன்னா. ரமேஷுடைய வேலை பிடிக்கலைன்னா உங்க விருப்பப்படி வேறு யாரையும்‌ அந்த இடத்துக்கு போட்டுக்கோங்க. ஆனா திரும்ப நான்‌ என்‌ இடத்துக்கு வர்றப்ப என்‌ இடம்‌ அப்படியே இருக்கணும்‌. நிவிக்கு என்னை விட பெட்டரா அவள்‌ விரும்புறது போல அவளுடைய வாழ்க்கை அமையும்‌.”

 

வெளியே தருண்‌ ஹார்ன்‌ அடிக்கும்‌ சத்தம்‌ கேட்டவன்‌எழுந்து பாட்டி காலில்‌ விழுந்து ஆசிர்வாதம்‌ வாங்கியவன்‌ அவர்‌ கன்னத்தில்‌ முத்தமிட்டவாறே,

” ஒரு செக்கன்ல.. ‘எதோ சொல்லவந்தவன்‌,

 

‘இப்போ என்ன பேசினாலும்‌ தப்பாகிவிடும்‌ என்று நினைத்தவன்‌ ‘வரேன்‌ பாட்டி” என்று விட்டு மற்றவர்களிடமும்‌ விடைபெற்று அன்னையிடம்‌ வந்தவன்‌ கண்களில்‌ நீர்‌ வடிய அவர்‌ கண்களை துடைத்தவன்‌,

“உங்க இடத்துல நான்‌ இருந்தாலுமே

உங்களை போலத்தான்‌ இருந்திருப்பேன்‌ மா..

குடும்பத்துக்காக பெத்த பையன்னாலும்‌ தப்புன்னா அவனையே ஒதுக்கி வெச்சுடீங்க.’ என்றவன்‌,

‘ என்னை நீங்க உங்களை மாதரியேதான்‌ வளர்த்திருக்கீங்க.குடும்பத்துக்காக நானுமே அப்படிதான்‌ மா.”

 

காலை மீனா அருணாவுக்கு குத்திக் காட்டிய வார்த்தைக்கு நல்ல பதில்‌ தந்தான்‌.

‘நான்‌ வரேன்‌… ” என்றவன்‌ பைகளை வேலையாள்‌ வண்டிக்கு கொண்டு செல்ல, தருண்‌ வண்டியை விட்டு இறங்கப்பார்க்க ‘வேண்டாம்‌’ என்றவன்‌ வண்டியில்‌ ஏறிட 

வண்டி கிளம்பியது…

Leave a Reply

error: Content is protected !!